Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமணத்திற்கு முன்பு...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளனர், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒத்த கருத்துக்களைக் கொண்டுள்ளனர், இவர்கள் நண்பர்களாகவோ அல்லது காதலர்களாகவோ இருக்கலாம்... ஒருவருக்கொருவர் பிடித்துள்ள காரணத்தினாலேயே இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

கூடாது. ஏன் தெரியுமா காதல் வேண்டுமானால் இந்த இருவரை மட்டுமே சம்பந்தப்படுத்தலாம். ஆனால் திருமணம் என்பது இவர்களது குடும்பத்தையும், இரண்டு பேரின் சமுதாயத்தையுமே தொடர்புபடுத்துகிறது.

ஒருவரது பாரம்பரியமும், மற்றவரது பாரம்பரியமும் வெவ்வேறாக இருக்கும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்கள் எழலாம். எனவே அவற்றை காதலர்கள் நன்கு சிந்தித்து திருமண முடிவை எடுக்க வேண்டும்.

காதலிக்கும்போது காதலரிடம் இருக்கும் நல்ல குணங்கள் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அவரது கோபம், ஆளுமைத் தன்மையைக் கூட நாம் அப்போது ரசித்திருப்போம். ஆனால், திருமணத்திற்குப் பின்னர் தீய குணங்களை மட்டுமே பார்க்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதனால் தான் பல காதல் திருமணங்கள் விவாகரத்தில் போய் முடிகிறது. காதலர்கள் நன்கு பக்குவப்பட்டு, தங்களது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு திருமண முடிவை எடுக்க வேண்டும்.

காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் பல சமயங்களில் திருமணம் முடிந்ததும் மனம் மாறி தங்களது பிள்ளைகளை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் அதுவரை இல்லாத பிரச்சினைகள் அப்போதுதான் விஸ்வரூபம் எடுக்கும் என்பது நமக்குத் தெரியாதல்லவா. ஆம், தங்களது திருமணத்தை ஏற்றுக் கொண்ட பெற்றோர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மகனோ, மகளோ தள்ளப்படுகிறார்கள். அதனால் தம்பதிகளுக்குள்ளேக் கூட பல மனக்கசப்புகள் உருவாகின்றன.

எனவே எந்த நேரத்திலும் தான் கைப்பிடித்தவரை எந்த காரணத்திற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத மனவலிமையை காதலர்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

அப்படியே தம்பதிகளுக்குள் எந்த பிரச்சினை எழுந்தாலும் அவர்கள் அதை தனது பெற்றோர்களிடம் சொல்லிக்கூட குறைபட்டுக் கொள்ள இயலாது. ஏனெனில் 'நீ தானேத் தேடிக் கொண்டதுதானே' என்று அவர்கள் நம்மைத்தான் கைகாட்டுவர்.

காதலிக்கும்போதே அவர்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், காதலித்துவிட்டோம், கண்டிப்பாக அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமல் காதலர்களாகவே பிரிந்து விடுவதும் நல்ல முடிவுதான், ஏனெனில் திருமணத்திற்குப் பின் மன வருத்தம் வந்து நீதிமன்றத்தின் வாயிலில் கணவன் - மனைவியாக பிரியும் நிலைக்குத் தள்ளப்பட வேண்டியதில்லை.

அதனால் காதலிக்கும்போது நல்ல காதலர்களாக இருப்பவர்கள் ஊரே மெச்சும் தம்பதிகளாகவும் இருக்க வேண்டும் என்றால் திருமணத்திற்கு முன்பு குடும்பத்தாருடன் அமர்ந்து பேசி, சிந்தித்து முடிவெடுங்கள். இல்லையேல் பாழாவது வேறு எதுவுமல்ல... உங்கள் வாழ்க்கை.

இதுபற்றி ஒரு நகைச்சுவையும் உண்டு,

அதாவது, திருமணத்திற்குப் பின் காதலன் மாறி விடுவான் என்ற நம்பிக்கையில் இருந்தாள் காதலி.

இப்போது போல் எப்போதும் தனது காதலி இருப்பாள் என்று நம்பினான் காதலன்.

இது இரண்டுமே நடக்கவில்லை என்பதுதான் உ‌ண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் காதலிக்கும்போது நல்ல காதலர்களாக இருப்பவர்கள் ஊரே மெச்சும் தம்பதிகளாகவும் இருக்க வேண்டும் என்றால் திருமணத்திற்கு முன்பு குடும்பத்தாருடன் அமர்ந்து பேசி, சிந்தித்து முடிவெடுங்கள். இல்லையேல் பாழாவது வேறு எதுவுமல்ல... உங்கள் வாழ்க்கை.

குடும்பத்தாருடன் அமர்ந்து பேசி சிந்தித்து முடிவெடுத்த கலியாணங்கள் கூட பிரிந்திருக்கிறதே.

இது நல்ல ஆலோசனை

காதலிக்கும்போதே அவர்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், காதலித்துவிட்டோம், கண்டிப்பாக அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமல் காதலர்களாகவே பிரிந்து விடுவதும் நல்ல முடிவுதான், ஏனெனில் திருமணத்திற்குப் பின் மன வருத்தம் வந்து நீதிமன்றத்தின் வாயிலில் கணவன் - மனைவியாக பிரியும் நிலைக்குத் தள்ளப்பட வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தனி மனிதனுக்கே நேரத்துக்கு நேரம் சந்தர்ப்பத்துக்கு சந்தர்ப்பம் கருத்து மாறுபடுகுது. இரண்டு மனிதருக்க கருத்து வேறுபாடே வராது என்று கண்டால் மட்டும் காதலிக்கட்டாம் கலியாணம் முடிக்கட்டாம். நடக்கிற காரியமா சொல்லுங்க.

கருத்து வேறுபடுறதில பிரச்சனையே இல்ல. ஆனால் ஒரு தரப்பு விட்டுக் கொடுத்துப் போனா ஒரு பிரச்சனையும் இல்ல. விட்டுக்கொடுக்காமல் இருந்தால் தான் பிரச்சனையே..!

உங்கள் கருத்துப்படி..நீங்கள் என்ன மனிதர்கள் காதலிக்கிறதைச் சொல்லுறீங்களா.. இல்ல மரம் செடி கொடி காதலிக்கிறது பற்றிக் கதைக்கிறியளா..! :lol:

இப்படித்தான் சாத்தியப்பாடில்லாததுகளை எல்லாம் சொல்லி மனிசரின் மனசுகளைக் குழப்பி.. அதில நூல் விடுறத்துக்கு என்றே ஒரு கூட்டம் இருக்குதப்பா...! :D:)

எதுஎப்படியோ.. சும்மா காதல் கலியாணம் என்று உங்க சுதந்திரத்தை இழக்காம.. பிரம்மச்சாரியாளவே இருந்திடுங்க. ஒரு கரைச்சலும் இல்ல..!

பரீட்சையில் பெயிலானா தேறலாம்.. பாவையிடம் பெயிலானா தேறவே முடியாது. எனவே பார்த்து நடந்துக்குங்க.

என்ன தான் கவனமா இருந்தாலும் காதல் சைக்கிள் கப்பில் ஆளையே கவுத்திடும்..! :lol::)

-நெடுக்ஸ்

தலைவர்

கா.ஒ.ச (காதல் ஒழிப்பு சங்கம்- சர்வதேசக் கிளை) :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நெடுக்குசாமி தொடங்கியாச்சா :(:(:(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்குசாமி தொடங்கியாச்சா :(:(:(:(:(

தலைவர் பதவியை துஸ்பிரயோகம் தான் செய்யக் கூடாது. சந்தர்ப்பத்துக்கு பயன்படுத்தாட்டி தலைவர் பதவியில இருக்கப்படாது..! :D:(

"காதல் என்பது இருமனங்கள் தங்களுக்குள் செய்யும் திருமணம்."

"திருமணம் என்பது பலமனங்கள் செய்யும் தீர்மானம்"

இரண்டும் தவறல்ல. இரண்டிலும் வெற்றி தோல்வி ஏற்ப்படலாம்.

பொய்யா வாழ்வதிலும் பிரிந்து விடுவது நல்லது.

அதை விட இருவரும் இணைந்து பேசி இணைந்து வாழ்வது நல்லது.

அதை விட குழந்தைகள் இருந்தால் எப்பாடுபட்டாவது இணைந்து வாழ்வது நல்லது.

அதை விட ஒவ்வொரு நாளும் சண்டை பிடித்து "குழந்தைகளுக்கு" மன அழுத்தம் கொடுப்போர் இன்றே பிரிதல் நல்லது.

Edited by வாசகன்

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா சைக்கிள் கப்பில நெடுக்ஸ் தன் இருப்பை லெட்டர்பேட்டுடன் தக்கவைத்துக் கொண்டார். இனி கலைஞன் வரவேண்டும் என நினைக்கிறேன்!!! :(:(

  • கருத்துக்கள உறவுகள்

காதலில்லாமல் வாழ்க்கையில்லை

-கறுப்பி-

தலைவி

கா.எ.ச (காதல் எழுச்சி சங்கம்- சர்வதேசக் கிளை) :(:(

  • கருத்துக்கள உறவுகள்

காதலில்லாமல் வாழ்க்கையில்லை

-கறுப்பி-

தலைவி

கா.எ.ச (காதல் எழுச்சி சங்கம்- சர்வதேசக் கிளை) :(:(

இதுதான் நெடுக்ஸ் சொன்ன சைக்கிள் கப்பில கவுக்கிற விசயமோ? :(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உள்ள டவுட் ஒண்டுதான்.. காதலிக்காமல் அப்பா அம்மா பார்த்து நடத்தி வைக்கிற கல்யாணங்களில் முதலிரவு சராசரியாக எத்தனை நாள் கழித்து நடக்கும்? இப்போதெல்லாம் மாப்பிளையோட பெண் போனில மட்டுமே பேசியிருப்பார். அவர் யார் எப்படி எண்டு ஒரு மண்ணும் தெரிய வாய்ப்பில்லை. மாப்பிளை வந்தவுடனே கலியாணம் நடக்கும். பிறகு .. :(

மாப்பிளைமாரைப் பற்றிப் பிரச்சினையில்லை. அவையள் உடனையே பூந்து விளையாடுவினம். ஆனால் அச்சம் மடம் நாணம் மிக்க பெண்கள் என்ன செய்வினம்.? :(

எனக்குத் தெரிந்த ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை இந்தியா போய் இப்படி ஒரு அப்பா அம்மா பார்த்து வைச்ச கல்யாணத்தை கட்டிப்போட்டு அடுத்த நாள் அவரிண்ட அக்காவிட்ட அது சரியில்லை இது சரியில்லை எண்டு புலம்பிக்கொண்டு இருந்தவர். :(

பி.கு.: இங்கே நான் குறிக்கிற மாப்பிளை நம்ம கலைஞன் இல்லை. :(

காதலில்லாமல் வாழ்க்கையில்லை

-கறுப்பி-

தலைவி

கா.எ.ச (காதல் எழுச்சி சங்கம்- சர்வதேசக் கிளை) :(:D

கறுப்பி அக்கா என்னையும் உங்க சங்கத்தில நீண்டகால உறுப்பினரா சேர்த்து கொள்ளுங்கோ...உங்க பொலிசி சூப்பர் கறுப்பி அக்கா... :(

அட கல்யாணம் என்றா இவ்வளவு மாட்டர் இருக்கோ எனக்கு இன்றைக்கு தான் தெரியும் :( ...பட் இதை எல்லாம் பார்த்து காதலிக்க ஏலாது காதலித்தா பிறகு கருத்து வேறுபாடு வந்தா சரி நாங்க இரண்டு பேரும் இரண்டு பக்கம் பிரிவோம் என்று இரண்டு பக்கத்தில போறதும் காதல் இல்லை. :( ...சண்டை வந்தா நல்லா சண்டை பிடியுங்கோ அப்ப தான் காதல் என்னும் கூடுமாம் இதை சொன்னது வேற யாரும் இல்லை நானே தான்... :(

ஜம்மு பேபி பஞ்-

"காதல் என்பது ஓட்ட போட்டி மாதிரி அதில கடைசி வரை ஓடி கொண்டிருக்க வேண்டும்" :(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உள்ள டவுட் ஒண்டுதான்.. காதலிக்காமல் அப்பா அம்மா பார்த்து நடத்தி வைக்கிற கல்யாணங்களில் முதலிரவு சராசரியாக எத்தனை நாள் கழித்து நடக்கும்? இப்போதெல்லாம் மாப்பிளையோட பெண் போனில மட்டுமே பேசியிருப்பார். அவர் யார் எப்படி எண்டு ஒரு மண்ணும் தெரிய வாய்ப்பில்லை. மாப்பிளை வந்தவுடனே கலியாணம் நடக்கும். பிறகு .. :)

மாப்பிளைமாரைப் பற்றிப் பிரச்சினையில்லை. அவையள் உடனையே பூந்து விளையாடுவினம். ஆனால் அச்சம் மடம் நாணம் மிக்க பெண்கள் என்ன செய்வினம்.? :(

எனக்குத் தெரிந்த ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை இந்தியா போய் இப்படி ஒரு அப்பா அம்மா பார்த்து வைச்ச கல்யாணத்தை கட்டிப்போட்டு அடுத்த நாள் அவரிண்ட அக்காவிட்ட அது சரியில்லை இது சரியில்லை எண்டு புலம்பிக்கொண்டு இருந்தவர். :lol:

பி.கு.: இங்கே நான் குறிக்கிற மாப்பிளை நம்ம கலைஞன் இல்லை. :D

அப்ப காதலிக்கிறது என்றால்.. ஒரு பெண்ணை அக்குவேறு ஆணி வேறா பிரிச்சுப் பாக்கிறது என்று அர்த்தமா...??! :lol::o

இப்படி ஒரு காதல் தேவைதானா.. பெண்களே சிந்தியுங்க..! :):(

"காதல் என்பது ஓட்ட போட்டி மாதிரி அதில கடைசி வரை ஓடி கொண்டிருக்க வேண்டும்" :lol:

ஓடிட்டே இருந்தா களைக்காதா..??! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப பொம்மனாட்டிகளும் ஆம்படையாங்களும் வாக்குவாதப்படுறதைப் பாக்கேக்கை நேக்கு புல்லரிக்குது பாத்தேளா.

ஓடிட்டே இருந்தா களைக்காதா..??! :)

நெடுக்ஸ் தாத்தா என்ன இப்படி கேட்டுபோட்டியள்...ஓடாம விட்ட அவா என்னோருவா கூட ஓடிடுவா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தாத்தா என்ன இப்படி கேட்டுபோட்டியள்...ஓடாம விட்ட அவா என்னோருவா கூட ஓடிடுவா!! :)

அப்ப நான் வரட்டா!!

போலியா அன்பு வைச்சு நடிச்சிட்டு வாழுறதிலும்.. ஓடிப்போற நினைப்பில உள்ளவை ஓடட்டன். அவையைக் கட்டி வைச்சாலும் ஓடத்தான் செய்வினம். கட்டாமல் விடிறதே நல்லம்..! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு பதில் இதுதான். நகைச்சுவை கலந்த உண்மை. ஆங்கிலத்தில் தந்ததற்கு மன்னிக்கவும், மின்அஞ்சலில் வந்தது. :unsure:

Dear Tech Support Team:

Last year I upgraded from Girlfriend 5.0 to Wife 1.0 .

I soon noticed that the new program, Wife 1.0 installed itself into all other programs and now monitors all other system activities.

Applications such as BachelorNights 10.3, Cricket 5.0, BeerWithBuddies 7.5, and Outings 3.6 no longer runs, crashing the system whenever selected.

I can't seem to keep Wife 1.0 in the background while attempting to run my favorite applications.

I'm thinking about going back to Girlfriend 5.0 , but the 'uninstall' doesn't work on Wife 1.0.

Please help!

Thanks,

'A Troubled User'

REPLY:

Dear Troubled User:

This is a very common problem that people complain about.

Many people upgrade from Girlfriend 5.0 to Wife 1.0 , thinking that it is just a Utilities and Entertainment program.

Wife 1.0 is an OPERATING SYSTEM and is designed by its Creator to run EVERYTHING!!!

It is also impossible to delete Wife 1.0 and to return to Girlfriend 5.0.

It is impossible to uninstall, or purge the program files from the system once installed.

You cannot go back to Girlfriend 5.0 because Wife 1.0 is designed not to allow this.

I recommend that you keep Wife1.0 and work on improving the environment.

I suggest installing the background application 'Yes Dear' to alleviate software augmentation.

The best course of action is to enter the command C:\APOLOGIZE because ultimately you will have to give the APOLOGIZE command before the system will return to normal anyway.

Wife 1.0 is a great program, but it tends to be very high maintenance.

Wife 1.0 comes with several support programs, such as Clean 2.5, Sweep 3.0, Cook 1.5 and DoLaundry 4.2. However, be very careful how you use these programs.

Improper use will cause the system to launch the program NagNag 9.5 .

Once this happens, the only way to improve the performance of Wife 1.0 is to purchase additional software.

I recommend S hoes 2.1 and Jewellery 5.0

STATUTORY WARNING : DO NOT, under any circumstances, install SecretaryWithShortSkirt 3.3.

This application is not supported by Wife 1.0 and will cause irreversible damage to the operating system.

Best of luck,

Tech Support ...

போலியா அன்பு வைச்சு நடிச்சிட்டு வாழுறதிலும்.. ஓடிப்போற நினைப்பில உள்ளவை ஓடட்டன். அவையைக் கட்டி வைச்சாலும் ஓடத்தான் செய்வினம். கட்டாமல் விடிறதே நல்லம்..! :blink::o

ம்ம்ம்..சரியா சொன்னீங்க தாத்தா இவைய மாதிரி ஆட்களை என்ன செய்யலாம் என்று ஒருக்கா சொல்லுங்கோ பார்போம் தாத்தா...!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

தங்களைத் தாங்களே அறியாதவர்கள்தான் இவ்வாறான சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். தங்களது வாழ்க்கை எப்படி அமையவேண்டுமென அவர்கள் சிந்திக்காதபடியால்தான் அவர்களுக்கு ஏமாற்றங்கள் வருகிறது. திருமண வாழ்க்கை என்பது இருவர் சம்பந்தப்பட்ட விடயம். எமக்கு எவ்வாறு எதிர்பார்ப்புகள், ஆசைகள் இருக்கிறதோ அவ்வாறே மற்றவருக்கும் இருக்கும் என்பதை முதலில் உணரவேண்டும். ஆனால் பெரும்பாலானோர், தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். அவ்வாறு சிந்திப்பவர்களின் வாழ்க்கைதான் கேள்விக்குறியாகி விடுகிறது. தமது வாழ்க்கை எப்படி அமையவேண்டுமென உணர்ந்தவர்களுக்கு தங்கள் துணையைத் தேர்ந்தெடுப்பதில் எந்தச் சிக்கலும் இருப்பதில்லை. இந்த வகையில், இளவயதில் முடிவெடுப்பதும் தவறு. காதல் என்பது ஒருவரையொருவர் நேசிப்பதே. ஒருவரை உண்மையாக நேசிக்கும்போது, சில சில விடயங்களில் விட்டுக்கொடுப்பது பெரிய விடயமாகத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை, ஒருவரையொருவர் அறிந்து திருமணம் செய்வதே சிறந்தது. அதற்காகப் பத்துப் பேரை அறிந்து விட்டுத் திருமணம் செய்வதில்லை. எம்மை நாமே அறிந்திருந்தால், முதற்சில சந்திப்புகளிலேயே அவர் எமக்கு ஏற்றவரா இல்லையா என்பதை அறிந்து விடலாம். எம்மை நாம் அறிந்திராவிட்டால், எந்தக் காலத்திலும் எமக்கு ஏற்றவரா இல்லையா என்பதை அறிய முடியாது. அதேபோல், ஒருவரைத்தான் திருமணம் முடிக்கவேண்டும். விவாகரத்துப் பெறுவது தவறில்லை. ஆனால் இன்னொருவரைத் திருமணம் செய்யும்போது, அவருடனான வாழ்வு மட்டும் எந்தவிதத்தில் வித்தியாசமாக இருக்க முடியும்? இது இனிவரப்போகும் சந்ததியினருக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, திருமணங்கள் செய்ய இருப்பவர்கள், முதலில் உங்களுக்கு எப்படியான வாழ்க்கை வேண்டுமென்பதை முதலில் முடிவெடுங்கள். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.