Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெப்பிட்டிக்கொலாவையில் 16 சடலங்கள் கண்டெடுப்பு- சிறீலங்கா பொலீஸ் தகவல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கெப்பிட்டிக்கொலாவ எனும் சிங்களப் பிரதேசத்தில் 16 சடலங்களை தாங்கள் கண்டுள்ளதாக சிறீலங்கா பொலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

தகவல் ஆதாரம்:- ரெயிலி மிரர்.

---------

16 bodies found from Kebithigollewa

Sixteen bodies were found from two garbage dumps in Kebithigollewa short while ago, Kebithigollewa police said.

-dailymirror.lk

நல்லாத்தான் நடக்குது போல கிடக்கு...

சிறிலங்காவில் உள்ள அனுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவ கொரவப்பொத்தான பகுதியில் கிரிகித்கொட என்ற இடத்தில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

இரு மனிதப் புதைகுழியினுள் இருந்து 16 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பிரேதங்கள் பரிசோதனைக்காக கெப்படிக்கொல்லாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒன்றினுள் பத்து சடலங்களும் மற்றையதில் 6 சடலங்களும் கண்டெடுக்கப்ட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஜானா

17 dead bodies located in Kebitigollewa!!

Sri Lankan Police has located 17 dead bodies in Kiriketuwewa GS area of Kebitigollewa division in Anuradhapura district Thursday evening, initial reports said. The victims, all civilians, with gunshot injuries had their hands tied behind their back, according to the Police. The bodies were located in two graves, 10 in one and 7 in the other, Police said. The bodies are still lying at the crime scene. :)

Kiriketuwewa is located 6 km east of Kebitigollewa which is situated 22 km southeast of Vavuniyaa town. :lol:

kepitigollewahh8.jpg

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24398

தாங்களே கொல்வினமாம்...

தாங்களே தோண்டி எடுப்பினமாம்...

என்ன கொடும சார் இது..

போக்கு வரத்து வேளைகளில் கைது காணாமல் போதலில் சிக்கிய தமிழர்களாகவும் இருக்கலாம். அடையாளம் கண்டபின்னரே விபரம் தெரியும்.

போக்கு வரத்து வேளைகளில் கைது காணாமல் போதலில் சிக்கிய தமிழர்களாகவும் இருக்கலாம். அடையாளம் கண்டபின்னரே விபரம் தெரியும்.

may be this is true but I don't like to hear this about tamils.

thanks

  • கருத்துக்கள உறவுகள்

இது பெரும்பாலும் வடக்குக் கிழக்கிலோ அல்லது கொழும்பிலோ கடத்தப்பட்ட தமிழர்களாக இருக்கலாம். கைகளைக் கட்டி சுட்டுக் கொன்றுவிட்டு பின் புதைத்தல் என்பது சிறிலங்கா புலனாய்வுத்துறையின் கைவந்த கலை. துணை ராணுவக் குழுக்களுடன் சேர்ந்து இதைத்தான் நீண்டகாலமாக செய்து வருகிறார்கள்.

16 சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து வடக்கில் காணாமல் போனோரின் உறவினர்கள் அநுராதபுர வைத்தியசாலைக்கு படையெடுப்பு

கெப்பிட்டிக்கொல்லாவ கிரிக்கெட்டுவாவ பிரதேசத்திலிந்து 16 சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து வடக்கில் அண்மைக்காலமாக காணமல் போனவர்களின் உறவினர்கள் அநுராதபுர வைத்தியசாலைக்கு வருகைதந்து சடலங்களை பார்வையிட்டுள்ளனர்.

வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளில் அண்மைகாலமாக காணமல் போனவர்களின் உறவினர்களே இவ்வாறு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.கிரிக்கெட்டுவா

  • கருத்துக்கள உறவுகள்

16 சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து வடக்கில் காணாமல் போனோரின் உறவினர்கள் அநுராதபுர வைத்தியசாலைக்கு படையெடுப்பு

[sunday January 27 2008 07:45:22 PM GMT] [pathma]

கெப்பிட்டிக்கொல்லாவ கிரிக்கெட்டுவாவ பிரதேசத்திலிந்து 16 சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து வடக்கில் அண்மைக்காலமாக காணமல் போனவர்களின் உறவினர்கள் அநுராதபுர வைத்தியசாலைக்கு வருகைதந்து சடலங்களை பார்வையிட்டுள்ளனர்.

வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளில் அண்மைகாலமாக காணமல் போனவர்களின் உறவினர்களே இவ்வாறு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.கிரிக்கெட்டுவா

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே சி என் என், பி பி சி காரர். ஒரு சொல்கூட கதைக்கவில்லை.இவர்கள் எல்லாம் ஒரு ஊடகம்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியண்ணனுக்கு இந்த விசயம் தெரியாமல் இருக்கலாம்.அல்லது உன்னிப்பாக கவனித்து கொண்டு இருப்பினம். ஒரு சிங்களவனை யாரவது தடியால் அடித்தால் கூட மனித உரிமைகள் பற்றி கதைக்க ஓடி வருவார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

16 சடலங்களையும் அடையாளம் காண வவுனியா, மன்னாரிலிருந்து பலர் விரைவு

[28 - January - 2008] [Font Size - A - A - A]

ஹெப்பிட்டிகொலாவ கிரிஹெட்டுவெவ பகுதியில் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் முயற்சியில் வவுனியா மற்றும் மன்னார் பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிரிஹெட்டுவெவ பகுதியில் இரு புதைகுழிகளினுள்ளிலிருந்து கடந்த வியாழக்கிழமை மாலை 16 ஆண்களின் சடலங்கள் பழுதடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. எனினும், இன்று வரை அவை அடையாளம் காணப்படவில்லை.

இந்தச் சடலங்கள் அந்தப் பகுதிக்குரியவர்களுடையதல்ல என்பது அப் பகுதி மக்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால

சிறிலங்காவின் அனுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவ கிரிகித்கொட என்ற இடத்தில் இருந்து மீட்கப்பட்ட 16 சடலங்களையும் விசாரணைகளுக்காக மீண்டும் தோண்டி எடுக்கத்தக்க வகையில் புதைக்குமாறு அனுராதபுர மாவட்ட நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட்டுவாவில் மீட்கப்பட்ட 16 சடலங்களின் தலைகளிலும் துப்பாக்கி சூட்டு காயங்கள்

1/29/2008 12:01:22 AM

வீரகேசரி இணையம் - தலைகளிலும் துப்பாக்கி சூட்டு காயங்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு அநுராதபுர மாவட்டத்திலுள்ள கெப்பிட்டிகொல்லாவ கிரிக்கெட்டுவாவ பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 16 சடலங்களின் தலைகளிலும் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்பட்டன. துப்பாக்கி சூட்டினாலேயே இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டுவாவ பகுதியில் மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டதுடன் மரண பரிசோதனை அறிக்கை கெபிட்டிகொல்லாவ மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட 16 சடலங்களையும் பாதுகாப்பான முறையில் மீண்டும் தோண்ட கூடிய வகையில் கெப்பிட்டிக்கொல்லாவ பொது மயானத்தில் புதைக்குமாறு கெப்பிட்டிக்கொல்லாவ மாவட்ட நீதிவான் சிவந்த மஞ்சநாயக பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

கிரிக்கெட்டுவாவ பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 16 சடலங்களின் தலையிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுகின்றன. துப்பாக்கிச் சூடு காரணமாகவே இவர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெப்பிட்டிகொல்லாவ நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அநுராதபுர வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி அஜித் ஜயசேனவினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு உதவியாக கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட விசேட பல் வைத்தியரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை கெப்பிட்டிகொல்லாவ பொலிஸாரினால் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. சடலங்களை அடையாளம் காண்பதற்றகாக நேற்று யாருமே வருகைதரவில்லை என்றும் நேற்று முன்தினம் வருகைதந்திருந்தவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அடையாளங்கள் சடலங்களில் காணப்படவில்லை என்றும் பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை நிறைவடைந்த 16 சடலங்களில் காணப்பட்ட சில அடையாளங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் புகைப்படம் எடுக்கப்பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கிரிக்கெட்டுவாவ பகுதியை சார்ந்த பலரிடமிருந்து வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.