Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் இரு முனை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 15 படையினர் பலி! 30 படையினர் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் இரு முனை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 15 படையினர் பலி! 30 படையினர் படுகாயம்

மன்னார் பெரியபண்டிவிரிச்சான் ஊடாக சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட இந்த முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் 5 மணி நேர எதிர்ச் சமரின் பின்னர் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 15 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 30 படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

சிறீலங்காப் படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புக்கள் காரணமாக படையினர் தமது பழைய நிலைகளுக்குத் தப்பியோடியுள்ளனர்.

இதேநேரம் மன்னார் அடம்பன் பகுதி ஊடாக சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சியும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் இப்பகுதி ஊடாக முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட படையினரை விடுதலைப் புலிகள் வழிமறித்து களமாடி விரட்டியடித்துள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று ஒரு சிங்கள சாட்டில் இது பற்றி கதைக்கும் போது ஒரு சிங்கள இராணுவ ஆய்வாளர் தந்த பதில் ஆமி ஏன் இப்படி சண்டை போடுது என்றால் புலிகளின் பகுதிகளில் இருக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற தானாம்.

இப்படி சண்டை போட்டால் புலிகள் இருப்பில் இருக்கும் ஆயுதங்கள் விரைவில் தீர்ந்து போகுமாம். அப்போ புலிகளின் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களுக்கு சேதாரமில்லாமல் இடத்தை பிடிக்கலாமாம். சர்வதேசமும் கண்டபடி குறை சொல்லாதாம்

இந்தளவுக்கு சிங்களம் முன்னேறி இருக்கு :mellow:

Edited by tamillinux

மன்னார் அடம்பன் நோக்கி சிறிலங்காப் படையினர் நேற்று மேற்கொண்ட இரு முன்நகர்வுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

அகதி முகாமுக்கே ஸெல் அடிக்கின்றது சிங்கள இராணுவம் இயலா கடைசியில். பிறகு எப்படி வன்னி மக்களை சிங்கள இராணுவம் காப்பாற்ற போகுதாம்??

மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் முன்நகர முற்பட்ட சிறிலங்காப் படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

4 ஆம் கட்ட ஈழப் போரின் புதிய நுணுக்கம். இழப்புக்களின்றி எதிரிகளை அழித்தல். தமிழர் தரப்பு இழப்புக்களைக் குறைத்தல். இனி ஓடி விழிக்கும் சிங்களம்.

இன்று ஒரு சிங்கள சாட்டில் இது பற்றி கதைக்கும் போது ஒரு சிங்கள இராணுவ ஆய்வாளர் தந்த பதில் ஆமி ஏன் இப்படி சண்டை போடுது என்றால் புலிகளின் பகுதிகளில் இருக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற தானாம்.

இப்படி சண்டை போட்டால் புலிகள் இருப்பில் இருக்கும் ஆயுதங்கள் விரைவில் தீர்ந்து போகுமாம். அப்போ புலிகளின் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களுக்கு சேதாரமில்லாமல் இடத்தை பிடிக்கலாமாம். சர்வதேசமும் கண்டபடி குறை சொல்லாதாம்

இந்தளவுக்கு சிங்களம் முன்னேறி இருக்கு :mellow:

சிங்கள இராணுவ ஆய்வாளரின் அறிக்கை அவ்வளவு புத்திசாலித்தனமானதென நினைத்து அதற்குத் துதி பாடுகின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன். புலிகளுக்கு இழப்பின்றி எதிரியை விரட்டியடிப்பது நல்ல விஷயம்தான். ஆனாலும் எதிரியோடு ஒப்பிடும்போது ஆள்வளத்தில் குறைவான நாங்கள் கொடுக்கும் சிறு விலையும் எமக்கு இழப்புத்தான். அநேகமான இந்த முன்னகர்வுகளில் புலிகளுக்கு உடனடி இழப்பு இல்லை என்றாலும் பின்னர், ஓரிரு காயப்பட்ட போராளிகள் வீரமரணம் அடைவதும், ராணுவம் சில போராளிகளின் உடல்களைக் கையளிப்பதும் அவ்வப்போது நடந்துதான் வருகிறது. சில இணையத் தளங்களினூடாகவும், வானொலிகளினூடாகவும் புலிகள் தமது இழப்புகளை பின்னர் ஒரு நாளில் உரிமை கோருவதைப் பார்க்கிறோம்.

ஆக இந்தச் சமர்களில் எதிரியின் அளவுக்கு இல்லை என்றாலும் சிறு இழப்பாவது எமக்கு ஏற்படத்தான் செய்யுது. நீண்டகால அடிப்படையில் இது எமது போராட்டத்துக்கு குறிப்பிடத்தக்களவு பாதிப்பைச் செய்யக் கூடியது. பல முனைகளினூடாக முன்னேறுவதாகக் காட்டும் எதிரியின் நோக்கமும் அதுதான். முடிந்தளவு புலிகளை போருக்கிழுத்து அவர்களை அழிப்பது.

புலிகள் ஒன்றும் ரோபோக்களோ அல்லது சுப்பெர்மான்களோ இல்லையே. நிச்சயம் அவர்கள் எதிரியுடன் ஒப்பிடும்போது வீரர்கள், இலட்சியப் பற்றும் தியாகத் தன்மையும் கொண்டவர்கள். ஆனால் இழப்பென்பது அவர்களுக்கும் வந்து சேரும்.

நாங்கள் சொல்லி தேசியத் தலமை இவற்றுக்கு எற்ப ராணுவ வியூகங்களை வகுக்க வேண்டியதில்லை. அவர்களுக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டுமென்பது. விரைவில் ஒரு அழித்தொழிப்புச் சமர் நடைபெறும் என்று நம்புவோம். அதுதான் இவ்வகையான சிறு சிறு சீண்டல்களுக்கு முடிவுகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
:mellow: சிங்களச் சட்டில் இப்படி அவர்கள் கதைத்தாலும் உண்மையில் நடப்பது என்னவென்று அவர்களுக்கும் தெரியும் எமக்கும் தெரியும். இதைச் சிங்களச் சட்டைப் பார்த்துத்தான் அறிந்து கொள்வதற்கு நாங்கள் ஒன்றும் உலகம் தெரியாதவர்கள் இல்லையே ?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:mellow: சிங்களச் சட்டில் இப்படி அவர்கள் கதைத்தாலும் உண்மையில் நடப்பது என்னவென்று அவர்களுக்கும் தெரியும் எமக்கும் தெரியும். இதைச் சிங்களச் சட்டைப் பார்த்துத்தான் அறிந்து கொள்வதற்கு நாங்கள் ஒன்றும் உலகம் தெரியாதவர்கள் இல்லையே ?

நீங்கள் சொல்வது + அல்லது - ஆ? விளங்கவில்லை

சிங்கள இராணுவ ஆய்வாளரின் அறிக்கை அவ்வளவு புத்திசாலித்தனமானதென நினைத்து அதற்குத் துதி பாடுகின்றீர்களா?

நீங்கள் எப்படியென்றாலும் கருதலாம்

இறைவன் - ரகுநாதன்

நீங்கள் சிங்கள இராணுவத் தளபதியின் பேட்டியை பார்த்தீர்களா?

எங்கேயோ எதையோ பாத்துட்டு இங்கேவந்து உழத்துரானுகள்.. தொடர்ந்து நடக்கும் வலிந்த படை நடவடிக்கை சிறிது சிறிதாக இழப்பை ஏற்படுத்தும் என்பது எங்களுக்கும் தெரியும்... சிங்களவன் உப்படியெல்லம் செய்வானென்று புலிகளுக்கும் தெரியும்.. உந்த சிறிய சிறிய படை நடவடிக்கை எல்லம் சேர்ந்து விரைவில் பெருசா ஒன்றும் நடக்கப்போகுதென்றும் தெரியும்...

உதெல்லாம் எதிர்பாராமலே புலிகள் இருப்பினம்... உலக தரத்திலானா புலனாய்வு த்துறையையும், முப்படைகளையும், கொண்டுளதோடு.. ஆராய்ச்சி அபிவிருத்து, அரசியல் ஆய்வு, போர்காள ஆய்வு, ராணுவ புலனாய்வு என்று முளு நேரமா புலி உறுப்பினர் களும் அவர்களின் தலைமையும் வேலை செயேக்குள்ள இங்க உதுகள் வந்து இதைப்பாருங்கோ அதைபாருங்கோ எண்டு மிலாங்குதுகள்.

சிங்கள மொழியிலே வானொலி மற்றும் தொலைக்காட்சி நடாத்தி வருபவர்கள் புலிகள்... அதுமாத்திரமில்லை இன்று கணணி துறையில்... ஆருக்கும் சளைகாத அறிவையும் பெறுள்ளார்கள்... அப்பிடியிருக்க சிங்கள தளாங்களில வந்துட்டுது... அவங்கள் முனெறிட்டாங்கள்.. எண்டு ஏன் பிதட்டுறியள்?

சிங்களவங்கள் தமிழரை விட அதிகமான வளங்களை பாவிக்கிறாங்கள் உன்மைதான்... ஆனா அதுக்காக தமிழரெல்லாம் ஒன்றும் செய்யாமில்லை..

ஏதோ தனக்கு மாத்திரம் தான் மூளை இருக்கு.. மத்தவவங்களேலாம் எதோ விசுக்கோத்துகள் என்று எணப்படாது.

ஒருவேளை புலிகள் தங்களிட்ட வந்து கலந்தாலோசிக்கேல்ல எண்டு நினைக்கினமோதெரியாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sooravali முஸ்லிம் அல்லது சிங்களவர் போல இருக்கு எழுதும் போது. ஏன் என்றால் ழ ள ல எழுதும் போது எப்போதும் பிழை தான். (முளு நேரமா) பல இடங்களில் இதை கவனித்து உள்ளேன்

மத்தவவங்களேலாம் எதோ விசுக்கோத்துகள் என்று எணப்படாது.

ஆட்சிமா றேக்க கோத மல்லி எங்கே போபுராறு?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33871

Edited by tamillinux

நீங்கள் எப்படியென்றாலும் கருதலாம்

இறைவன் - ரகுநாதன்

நீங்கள் சிங்கள இராணுவத் தளபதியின் பேட்டியை பார்த்தீர்களா?

அப்படியல்ல, சிங்களத் தளபதிகள் தங்களது எதிர்பார்ப்புக்களை, அதுவும் அவர்களின் யுத்த மூலோபாயங்களை இவ்வளவு வெளிச்சம் போட்டுக்காட்டி புலிகளை மேலும் பலமுற வைப்பார்களா? சரி ஒரு உளவு பார்க்கும் முறையென்று கொண்டாலும், அவரது செய்கைக்குப் பதில் எங்கிருந்து கிடைக்கும். தமிழப் போராளிகள் முன்பொரு காலத்தில் தோட்டாக்களை எண்ணிச் சுடும் காலமிருந்தது உண்மை. அப்படியான காலத்திலேயே இலங்கை இராணுவம் கொண்டிருந்த பலத்தினடிப்படையில், காட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் போராளிகளின் கைகளுக்குள மாறியிருந்தது. பெரும் போருக்குத் தயாரான நிலையில் மூதூரில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களே இராணுவத்தை திருப்பித்தாக்குவதற்குப் போதுமானவை. இன்னமும் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படும். இன்னமும் ஆயுதங்கள் இராணுவத்திடமிருந்தும் கைப்பற்றப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது மூல உபாயம் என்றாலும் அதை அவர்கள் எதையோ நம்பி வெளியிடுகின்றார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்தல் வேண்டும்.

ஆனால் இப்போ யுத்தத்தில் கைப்பற்றப்படும் ஆயுதங்களை இதில் நாம் சேர்க்க முடியாது.(Cycl rate of fire அதிகம்). முகாமை கைப்பற்றி ஆயுதம் எடுப்பது வேறு.

இறைவன். புலிகளுக்கு இழப்பின்றி எதிரியை விரட்டியடிப்பது நல்ல விஷயம்தான். ஆனாலும் எதிரியோடு ஒப்பிடும்போது ஆள்வளத்தில் குறைவான நாங்கள் கொடுக்கும் சிறு விலையும் எமக்கு இழப்புத்தான். .

புலிகள் ஒன்றும் ரோபோக்களோ அல்லது சுப்பெர்மான்களோ இல்லையே. நிச்சயம் அவர்கள் எதிரியுடன் ஒப்பிடும்போது வீரர்கள், இலட்சியப் பற்றும் தியாகத் தன்மையும் கொண்டவர்கள். ஆனால் இழப்பென்பது அவர்களுக்கும் வந்து சேரும்.

.விரைவில் ஒரு அழித்தொழிப்புச் சமர் நடைபெறும் என்று நம்புவோம். அதுதான் இவ்வகையான சிறு சிறு சீண்டல்களுக்கு முடிவுகட்டும்.

உண்மைதான் என்றாலும் இழப்புக்களில் காயப்பட்டவர்களை தொரிவிக்கவில்லை. வீரமரணமும் இல்லை. இப்போது நடந்திருக்கின்ற தாக்குதல்கள், ஒரு புது வியூகத்தினுள் வழிப்படுத்தப்பட்டுள்ளது. இது போர்க்களம் இழப்பின் உண்மையை மறைக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது நடந்திருக்கின்ற தாக்குதல்கள், ஒரு புது வியூகத்தினுள் வழிப்படுத்தப்பட்டுள்ளது. இது போர்க்களம் இழப்பின் உண்மையை மறைக்க முடியாது.

இது போர்க்களம் இழப்பின் உண்மையை மறைக்க முடியாது

எதை வைத்து சொல்கின்றீர்கள்??

தமிழ்த்தரப்பின் மீது திணிக்கப்பட்ட போருக்குப் புலிகள் தயார். அதில் புலிகளின் பலத்தினையும் ஆயுத வளங்களையும் இங்கு கணிப்பிட்டுக் கூற முடியுமா? புலிகளின் பலத்தை புலிகளே அறிவார்கள். இராணுவ பலமும் புலிகளால் அறியப்பட்டிருக்கின்றது.

இதுவரை புலிகள் நடந்து கொண்ட முறையினை வைத்து.

நான் முஸ்லீமுமில்லை சிங்களவனுமில்லை, தூய்மையான தமிழ் இரத்தம் தான் என்னுள் ஓடுவது... தமிழில் உங்களை மாதிரி நானொன்றும் பண்டிதனில்லை... ஆங்கிலதட்டில் தமிழ் எழுதுபோது வரும் பிழை தானது.

ஆங்கில மொழி மூலமான கல்வியின் தாக்கமின் காரணமா கக்கூடைருக்கலாம்... இருந்தும் தமிழ் ஈழ விடுதலையிலும் த்மிழ் மக்களின் அவலம் நீங்கவும் எந்த இடத்திலும் தடையாகவோ இடைஞ்சலாகவோ இருந்ததில்லை.

உங்களின் பிதற்றல் களில் உள்ள பிறழ்வுகளை சொன்னவுடன் சிங்களவன் முஸ்லீம் என்று பிரதேசவாத குரோதங்களை வீச முல்வது அருவருக்கத்தக்கது..

இதிலிருந்து தெரியுது உங்களின் நிஜம்.... எனது இணைப்புக்களை ஆராய்ந்து எழுத்துப்பிழை களை கணடறிந்த உங்களுக்கு என் நண்றிகள்... மீண்டும் இருந்து எனது இணைப்புக்களையும் உமது இணைப்புக்களையும் வாசித்து பொருளறிந்து திருந்த முயற்சிக்கவும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை புலிகள் நடந்து கொண்ட முறையினை வைத்து.

வரும் காலத்தில் வெளியிடுவார்கள் என்றா

வரும் காலத்தில் வெளியிடுவார்கள் என்றா

வருங்காலமென்பதை எங்கென்று எல்லை வைப்பது. இதுவரை காலமும் போராளிகளின் இழப்புக்கள் மறைக்கப்படவில்லை. இனியும் அப்படித்தானிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முஸ்லீமுமில்லை சிங்களவனுமில்லை, தூய்மையான தமிழ் இரத்தம் தான் என்னுள் ஓடுவது... தமிழில் உங்களை மாதிரி நானொன்றும் பண்டிதனில்லை... ஆங்கிலதட்டில் தமிழ் எழுதுபோது வரும் பிழை தானது.

ஆங்கில மொழி மூலமான கல்வியின் தாக்கமின் காரணமா கக்கூடைருக்கலாம்... இருந்தும் தமிழ் ஈழ விடுதலையிலும் த்மிழ் மக்களின் அவலம் நீங்கவும் எந்த இடத்திலும் தடையாகவோ இடைஞ்சலாகவோ இருந்ததில்லை.

ஜயோ இங்கே எழுதுபவர்கள் எல்லாம் என்ன தமிழ் தட்டிலா எழுதுறாங்க :mellow: . ஆங்கில தட்டில் எழுதினால் என்ன ல ழ ள எல்லாம் வேறு படுமா தமிழில் :huh::huh:

அதைவிட பகிடி ஆங்கில மொழி மூலமான கல்வியின் தாக்கம் என்று வேறு :wub:

இங்கே அவன் அவன் நாலு ஜந்து மொழிகள் என்று சரளமாக கையாளுவாங்க

இருந்தும் தமிழ் ஈழ விடுதலையிலும் த்மிழ் மக்களின் அவலம் நீங்கவும் எந்த இடத்திலும் தடையாகவோ இடைஞ்சலாகவோ இருந்ததில்லை.

அது தான் 16 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றவுடன்...... நல்லா நடக்குது என்று மகிழ்ச்சி அடைந்தனிங்களோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருங்காலமென்பதை எங்கென்று எல்லை வைப்பது. இதுவரை காலமும் போராளிகளின் இழப்புக்கள் மறைக்கப்படவில்லை. இனியும் அப்படித்தானிருக்கும்.

இருக்கலாம்...........

இதை பாருங்கள் பொன்சேகா சொல்வது 100 வீதம் உண்மை என்று நான் சொல்ல வரவில்லை

http://eelamtube.com/e926456240b2ff0100bd....?Sarath-Fonseka

Edited by tamillinux

இருக்கலாம்...........

நன்றி.

மன்னாரில என்ன கொஞ்ச காலமா ஒரே அடிபாடா இருக்கிது? ஆமி நிறைய சாகிது. ஆனா திரும்பவும் திரும்பவூம் வந்து சாகிது? என்னவாம் பிரச்சன? மன்னாரில் வைத்தியராக இருக்கும் நண்பன் ஒருவனுடன் கதைத்தபோது தினமும் உடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படுவதாக சொல்லி இருந்தார். மன்னாரில எண்ணை வளம் இருக்கிது எண்டு சொல்லிறாங்கள். இதாலதான் பிரச்சனையோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.