Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுததாரி கருணா மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு வெந்நீரும் ஊற்றப்பட்டது

Featured Replies

போலியான கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்கு தப்பி ஓடிய சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுக்களின் முன்னாள் தலைவரான கருணாவுக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுததாரி கருணா மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு வெந்நீரும் ஊற்றப்பட்டது

பிரித்தானியாச் சிறையில் வைத்து ஆயுததாரி கருணா தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 9 மாதம் சிறைத் தண்டனை பெற்றிருக்கும் கருணா தமிழ்க் கைதிகள் சிலரால் நையப்புடைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவர் மீது வெந்நீர் ஊற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெந்நீர் ஊற்றப்பட்டதை அடுத்து அவர் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிற்சை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலிக்காமல் வாழ்க்கையில்லை

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியச் சிறையில் கருணா மீது தாக்குதல்.

27.01.2008 / நிருபர் எல்லாளன்

கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டின்பேரில் பிரித்தானியாவில் 9 மாத சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் கருணா மீது சிறையில் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பலத்த பாதுகாப்புடன் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுடன் சேர்த்தே கருணாவும் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். இதன்போதே ஏனைய தமிழ்க் கைதிகள் கருணா மீது கொதி நீரினை ஊற்றி தாக்கியுள்ளதாகவும், அதனையடுத்து அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அந்த ஊடகம் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், கருணா சிறைத்தண்டனை அனுபவித்துவரும் காலப்பகுதியில் அவர் மீதான போர்குற்றச்சாட்டுக்களைப் பிரித்தானிய அரசாங்கம் சுமத்த முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 9 மாத சிறைத்தண்டனை முடிவுற்றதும் கருணா மீண்டும் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்படுவார்.

எனவே, அதற்கிடையில் சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், கருணா மீது போர்க்குற்றம் உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும், இதன்பொருட்டு பிரித்தானிய அரசாங்கத்துக்கு இந்த அமைப்புக்கள் அழுத்தங்களை வழங்கக்கூடும் என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவரை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கருணா, ஆட்கடத்தல், கப்பம்கோரல், சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்ற பல்வேறு மனித விழுமியங்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டால் அவர் விடுதலை செய்யப்பட்டாலும் மீண்டும் சிறையிலடைக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகவும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருணாவின் சிறைத்தண்டனைக்காலம் முடிவுற்றதும் அவருக்கு அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கவுள்ளதாக கருணா தரப்பு சட்டத்தரணி டேவிட் பிலிப்ஸ் பி.பி.சி செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

http://www.sankathi.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

--------------------

kaRuppi

வலிக்காமல் வாழ்க்கையில்லை

வலிக்காமல் வாழ்க்கையில்லை

இதைத்தானே நம்ம கறுப்பாத்தாவும் சொல்லுறாக :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தானே நம்ம கறுப்பாத்தாவும் சொல்லுறாக :lol:

அப்படி என்றால் யாழ்களத்தில் ஒரு ஆவி பல வடிவங்களில் உலாவருகின்றதா :icon_mrgreen: .

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் யாழ்களத்தில் ஒரு ஆவி பல வடிவங்களில் உலாவருகின்றதா :lol: .

ஆஆஆஆஆஆஆ.............ஆவிவிவிவிவிவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்வம் நின்று கொல்லும்.......

  • கருத்துக்கள உறவுகள்

அது அந்தக்காலம்

இப்போ கண்முன்னால் எல்லாம்????

துரோகத்தனத்திற்கான தண்டனைகள் எல்லா இடங்களிலும் கிடைக்கும்.

கொதிநீரில்ல,கொதி தாருக்குள்ள பொடவேணும் இந்த துரோகியை

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: ஊத்தினாலும் ஊத்தினாங்க, சிறிது ஆசிட்டா ஊத்தக்கூடாது ? செத்துத் துளையட்டும் இந்தச்...............? எல்லோருக்கும் நிம்மதி !

அதுசரி, பிரபாகரனுக்கே ராணுவப் பாடம் சொல்லிக் குடுக்கப் புறப்பட்டவர் இன்று கண்டவன், நிண்டவன், போறவன், வாறவன் எல்லாருட்டையும் அடிவாங்குகிறார் ? எங்கே போச்சு உன்ர வாய்ச் சவடல் எல்லாம்? கெதியாய்ச் செத்துப்போ !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளசுக்கும் இதே கதி ஒரு நாள் வர வேண்டும்.

கருணாவிற்கு உலகத்தில எங்கையும் பாதுகாப்பு இல்லை... எனக்கு என்னகவலையென்றா கருனாவின் அனுதாபிகள் வந்து எதாச்சும் எளுதப்பூராங் எண்டான்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்கிளசுக்கும் இதே கதி ஒரு நாள் வர வேண்டும்.

கோத்தபாய இனி வரும் காலங்களில் போட்டுத் தான் தள்ளுவார்.

வெளிநாடுகளுக்கு எல்லாம் போக விட மாட்டார். ஏன் என்றால் கருணா கோத்தபாயாவை காட்டி கொடுத்துவிட்டார் :mellow:

ஆட்சிமா றேக்க கோத மல்லி எங்கே போபுராறு?

உவன் துரோகி டக்கிளசுவையும் மஹிந்தன்ட வாலப் பிடிச்சுக்கொண்டு வெளிநாடு போகேக்க எந்த நாடாவது பிடிச்சு உள்ள போட மாட்டங்களா?

ஜானா

எவ்வளவுக்கு எவ்வளவு கேவலப்படமுடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு கறுணா கேவலப்பட்டு, அசிங்கப்பட்டு வருகிறது.

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியாக கருணா இருந்தவேளை மட்டக்களப்பு சனம் தலைவருக்குப் பக்கத்திலை வைச்சுத்தான் கருணாவைப் பார்த்தது. அப்படி இருந்த கருணாவின் மதிப்பு இப்ப சூடுதண்ணியாலை ஊத்து வாங்கிற அளவிற்கு வந்திட்டுது.

கருணா தனது பழைய நிலையையும் நினைச்சு தற்போதைய நிலையையும் நினைச்சு அடிக்கடி இப்படிப் புலம்புறாராம்.

"எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டனே"

  • கருத்துக்கள உறவுகள்

கருணா துரோகி தான் தண்டிக்கபட வேண்டியவன் தான் அதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை ஆனாலும் அவன் துரோகதனதிற்கு முதல் அதாவது 2002 முதல் செய்த பல இராணுவ வெற்றிகளும் உண்டு என்பதனை மறக்கமுடியாது அன்று எம்மால் கருணாஅம்மான் என்றும் கேணல் கருணா என்று புகழ்பாடி கட்டுரைகள் வரைந்தோம்,அவன் துரோகதனம் செய்த பிறகு அவனை ஒதுக்கிவிடுவது தான் நியாயம் அதை புலிகள் தகுந்த நேரத்தில் கொடுப்பார்கள் ஆனால் "ஆயுதத்தையே பார்க்கவே பயந்து ஏன் அரசிற்கு எதிராக நோட்டிஸ் ஒட்டவே பயந்து புலதிற்கு ஓடி வந்த எமக்கு ஏதாவது தகுதி இருக்கிறதோ இந்த துரோகிக்கு வசைபாடுவதிற்கு" :mellow:

இதை தான் சொல்லுறதோ இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமோ என்று. :huh:

நோக்கம் அது சார்ந்த செயல், இவைகளுக்குக் குந்தகம் விளைவித்தல் துரோகமே. அதுவும் ஒரு இனத்தின் உரிமை வென்றெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போதுகருணாவினால் போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டது. இதைத் தெரிந்து வைத்துக்கொண்டும் நமக்குத் தகமையுண்டா எனக் கேள்வியெழுப்புவது முள்ளாய்த் தைக்கிறது. இந்தத் துரோகியினால் நடத்தப்பட்ட இந்தச் செயலினால் கிழக்கு மாகாண மக்கள் புலத்தில் ஒதுக்கப்பட்டதை நான் அறிவேன். அத்தகைய ஒருவனுக்காகப் பரிந்து பேசுவது, பயத்தினால் புலத்திற்கு ஓடிவந்தவர்களுக்குக்கூட இருக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

அத்தகைய ஒருவனுக்காகப் பரிந்து பேசுவது, பயத்தினால் புலத்திற்கு ஓடிவந்தவர்களுக்குக்கூட இருக்கக் கூடாது.

உண்மை தான் ஆனாலும் அவனை நாம் தூக்கி வைத்ததும் பிழை அவனை நாம் துரோகி என்று சொல்வதும் பிழை எம்மை பொறுத்தவரை புகழாரம் சூட்டுவதும் துரோகி பட்டம் கொடுப்பதும் எமது பொழுதுபோக்கே .... :mellow:

Edited by putthan

எட்டப்பன் ஈழத்தமிழருக்கு என்ன தீங்கு செய்தான், ஈழத்தமிழர் கட்டப்பொம்மனின் விடுதலை போராட்டத்துக்கு என்ன உதவி செய்தார்கள்? எதற்க்காக ஈழதமிழரின் பரம்பரையே எட்டப்பனை துற்றவேண்டும், துரோகியை தூற்ற, தகுதி தேவையில்லை. தமிழினத்துக்கு துரோகம் செய்பவனைவிட ஒதுங்கி இருக்கும் ஈழத்தமிழன் மேலானவன் அல்லவா? :mellow::huh::huh:

Edited by Birundan

ஊத்தினாங்க, சிறிது ஆசிட்டா ஊத்தக்கூடாது ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"லண்டனில் கருணா மீது கொதிநீரை ஊர்றி தமிழர்கள் தாக்குதல். கருணா படுகாயம்."

கெளசல்யன் அண்ணா இதை விட பெரிதாக எதிபார்த்திருப்பார். நடந்த மட்டும் சந்தோசம்.

Edited by me_tamilan

நாம் போராட்ட காலங்களில் சந்தித்த உயிர் இழப்புக்களை விட இவர்பண்ணிய துரோகத்தின் பின் சந்தித்த இழப்புக்கள் அதிகம்.தமிழனை வைத்தே கொள்ளை, கொலை, ஆள்கடத்தல் இன்னும் பல மனித உரிமை மீறல்களை சிங்களம் தமிழருகெதிராக செய்தது அதற்க்கு இவர் ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டார்.இவரை எல்லோரும் நம்பியிருந்தார்கள், புகழ்ந்தார்கள். அப்படியெல்லாம் மக்கள் நம்பிக்கை வைத்தபோது குழி பறித்தார் அந்தக்குழிக்குள் தானே விழுந்தார் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோபேர்.தினை விதைத்தவன் தினையறுத்துதான் ஆகவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.