Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று காலை 10.30க்கு சுவிஸ் ABC திரையரங்கில் கனேடியன்

Featured Replies

ajeevancanedianbern2as4.jpg

சுவிஸில்

எதிர்வரும்

2008 பெ்பரவரி 9ம் தகதி

சனிக்கிழமை

காலை 10.30க்கு

பேர்ண் ABC திரையரங்கில்..........

கனேடியன்

சுவிஸ் வருகிறார் நம்ம கனேடியன் கணபதி................

ajeevanposter2rm0.jpg

புலம் பெயர் தமிழர்களான

கனேடிய தமிழர்களால் உருவாக்கப்பட்டுள்ள

கனேடியன்

திரையிடலோடு கூடிய கலந்துரையாடல் ஒன்றும்

இடம் பெற இருக்கிறது.

அத் திரைப்பட

தயாரிப்பாளரும்

நடிகருமான

கணபதி ரவீந்திரன் அவர்கள்

கலந்து சிறப்பிக்க உள்ளார்.

எமது கலைஞர்களை ஊக்குவிக்க

உங்களை

அன்போடு அழைக்கிறோம்.

ajeevanolijs8.jpg

அதுவரை படத்தில் இடம் பெற்ற

பாடல் காட்சி ஒன்றை காண இங்கே அழுத்துங்கள்

சுவிஸ் தொடர்புகளுக்கு: +41 79 209 12 49 அல்லது +41 78 621 19 13

தற்போதைய தொடர்புகளுக்கு

கணபதி ரவீந்திரன் : +33 609924967 (பிரான்ஸ்)

கணபதி ரவீந்திரனின் வானோலி பேட்டியை கேட்பதற்கு அழுத்துங்கள்

ajeevan3da6.jpg

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

அறியத்தந்தமைக்கு நன்றி

  • தொடங்கியவர்

சிறப்புக்கு காட்சியாக சுவிஸில் கனேடியன் திரைப்படம்..........

அனுமதி இலவசம்!

ajeevancanedianbern2as4.jpg

http://www.quinnie.ch/

சுவிஸில்

எதிர்வரும்

2008 பெ்பரவரி 9ம் தகதி

சனிக்கிழமை

காலை 10.30க்கு

பேர்ண் ABC திரையரங்கில்..........

கனேடியன்

சுவிஸ் வருகிறார் நம்ம கனேடியன் கணபதி................

ajeevanposter2rm0.jpg

புலம் பெயர் தமிழர்களான

கனேடிய தமிழர்களால் உருவாக்கப்பட்டுள்ள

கனேடியன்

திரையிடலோடு கூடிய கலந்துரையாடல் ஒன்றும்

இடம் பெற இருக்கிறது.

அத் திரைப்பட

தயாரிப்பாளரும்

நடிகருமான

கணபதி ரவீந்திரன் அவர்கள்

கலந்து சிறப்பிக்க உள்ளார்.

எமது கலைஞர்களை ஊக்குவிக்க

உங்களை

அன்போடு அழைக்கிறோம்.

ajeevanolijs8.jpg

அதுவரை படத்தில் இடம் பெற்ற

பாடல் காட்சி ஒன்றை காண இங்கே அழுத்துங்கள்

சுவிஸ் தொடர்புகளுக்கு: +41 79 209 12 49 அல்லது +41 78 621 19 13

தற்போதைய தொடர்புகளுக்கு

கணபதி ரவீந்திரன் : +33 609924967 (பிரான்ஸ்)

கணபதி ரவீந்திரனின் வானோலி பேட்டியை கேட்பதற்கு அழுத்துங்கள்

ajeevan3da6.jpg

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் இசையமைப்பு எல்லாம் நல்லா இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் காட்சி, இசை அமைப்பு, கலைஞர்களின் நடிப்பு எல்லாம் நன்றாக உள்ளது.

  • தொடங்கியவர்

நம் பாராட்டுகளும்

கரம் கொடுத்தல்களுமே

நம் கலைஞர்களை வாழ வைக்கும்!

கலைஞர்கள் சார்பில் நன்றி!

திரையிடல்

பெப்ரவரி 9ம் திகதி சனிக்கிழமை

அல்லது

பெப்ரவரி 10ம் திகதி ஞாயிறாக இருக்கலாம்.

நேரம் கூட காலை 10.00 மணிக்கும் பி.ப. 2.00 மணிக்கும் இடையே இருக்கலாம்?

இடம்:

பேர்ண்

ABC திரையரங்கு?

முறையான அறிவித்தல் அடுத்த வார ஆரம்பத்தில்............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா குப்பைகளை ஐரோப்பாவுக்குள் கொண்டு வருகிறாரா அஜீவன்.

கனடியன் நல்ல படமென்று எந்த அடிப்படிடையில் இப்படி விளம்பரங்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.

குப்பைக்கும் நல்லதுக்கும் அஜீவன் வைத்திருக்கும் அளவுகோல் என்ன?

இங்கு ஏற்கனவே குப்பைகள் மலிந்துள்ளதாக அஜீவன் அடிக்கடி குமுறுவதுண்டு. இப்ப கனடியன் குப்பையாக இருந்தால் தலைறைவாக தயாராக இருக்கிறரா? சுயநலத்தால் நல்லதும் கெட்டதும் தீர்மானமாவதில்லை. கருத்துகளை கவனமாக வெளியிடுவது நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

கனடா குப்பைகளை ஐரோப்பாவுக்குள் கொண்டு வருகிறாரா அஜீவன்.

கனடியன் நல்ல படமென்று எந்த அடிப்படிடையில் இப்படி விளம்பரங்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.

குப்பைக்கும் நல்லதுக்கும் அஜீவன் வைத்திருக்கும் அளவுகோல் என்ன?

இங்கு ஏற்கனவே குப்பைகள் மலிந்துள்ளதாக அஜீவன் அடிக்கடி குமுறுவதுண்டு. இப்ப கனடியன் குப்பையாக இருந்தால் தலைறைவாக தயாராக இருக்கிறரா? சுயநலத்தால் நல்லதும் கெட்டதும் தீர்மானமாவதில்லை. கருத்துகளை கவனமாக வெளியிடுவது நல்லது

அது சரி நீங்கள் எந்த அடிப்படையில் "கனேடியனை" குப்பை என்று கூறுவீர்கள்.உங்களுக்கு குப்பையாக தென்படலாம்.அதற்காக எப்படி குப்பை என்று முடிவாக சொல்கிறீர்கள்?.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனேடியன் திரைப்படம் கனேடிய தமிழ் இளைஞர் சமூகத்துக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கான அடிப்படையையும் அதற்கான தீர்வையும் சொல்லி செல்வதாகவே எனக்கு தோன்றுகின்றது. மற்றும் இளைஞர்களின் தாயகம் நோக்கிய பணிகள் மற்றும், நகைச்சுவை என்று சாதாரணமாக மற்றைய படங்கள் போல இதுகும் நல்ல படைப்பாகவே உள்ளது.

கபிலேஸ்வரின் இசை படத்துக்கு மேலும் மெருகூட்டியிருக்கின்றது. கபிலேஸ்வர் கனடாவில் பலரும் அறிந்த இசையமைப்பார் என்பதை விட தென்னிந்திய திரைப்படங்கள் சிலவற்றுக்கும் இசையமைத்துள்ளார்.

அது போல ரவி அச்சுதனும் ஒரு சிறந்த ஒளிபதிவாளர். இதில் நடித்த கலைஞர்களட தங்களால் முடிந்த அளவு நன்றாகவே நடித்துள்ளனர். ஈழத்தமிழ் சினிமாவுக்கு கனேடியன் சற்று மாறுதல் என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய தேவை இருக்கிறது.

இங்கு பலர் தனிப்பட்ட நபர்களை ஒதுக்குவதாய் நினைத்த எம்மவர்களின் படைப்புக்களை புறக்கணிப்பது முட்டாள்த்தனம் என்பதை நினைவுபடுத்தி கொள்ள பறவைகள் கடமைப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

கனடா குப்பைகளை ஐரோப்பாவுக்குள் கொண்டு வருகிறாரா அஜீவன்.

கனடியன் நல்ல படமென்று எந்த அடிப்படிடையில் இப்படி விளம்பரங்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.

குப்பைக்கும் நல்லதுக்கும் அஜீவன் வைத்திருக்கும் அளவுகோல் என்ன?

இங்கு ஏற்கனவே குப்பைகள் மலிந்துள்ளதாக அஜீவன் அடிக்கடி குமுறுவதுண்டு. இப்ப கனடியன் குப்பையாக இருந்தால் தலைறைவாக தயாராக இருக்கிறரா? சுயநலத்தால் நல்லதும் கெட்டதும் தீர்மானமாவதில்லை. கருத்துகளை கவனமாக வெளியிடுவது நல்லது

ஆபிரகாம்

நீங்கள் எந்த நோக்கில் கனேடியனை குப்பை என்று சொல்கிறீர்கள்?

அதற்கான ஆதாரங்களை முன் வையுங்கள்!

அது குப்பையாக இருந்தாலும்

எம்மவர் படைப்புகள் தொடர்ந்து வர வேண்டும்.

எம்மவர்

எமது படைப்புகளை

புலத்திலாவது வரவேற்க பழக வேண்டும்!

குழந்தைகள் எழுந்ததும் நடப்பதில்லை...........

நடக்க எத்தனையோ முறை முயற்சித்து

விழும் எழும்

மீண்டும் முயற்சித்து விழும்.

நம் குழந்தைகள் விழுவதை பார்த்து

அக் குழந்தைகளது கால்களை தறிக்க

எந்த பெற்றோரும் முயல்வதில்லை.

அதை செய்யாதீர்கள்.

விமர்சனம் என்பது வேறு

கொச்சைப்படுத்துவது

அல்லது

மலினப்படுத்துவது என்பது வேறு.

ஒன்றை பார்க்காமல்

பேசுவதை தவிருங்கள்.

படைத்தவர்கள் முகம் தெரியாதவர்கள்.

இருந்தாலும்

நமது படைப்புகள் வர வேண்டும் என்று விரும்புவோர்

ஆதரவு தரலாம்.

உங்களைப் போன்றவர்கள் ஒதுங்கலாம்.

உங்களுக்கான சினிமா ஒன்று இருந்தால்

அதை பாருங்கள்.

உங்கள் இதயத்தில் உள்ள குப்பைகளை

இங்கே கொட்டாதீர்கள்?

நான் முகவரியோடு வாழ்பவன்.

தலை மறைய வேண்டிய அவசியமில்லை.

அதுக்கு வேறு ஆளை பாருங்க ஆபிரகாம்?

முடிந்தால்

இங்கே தளத்தில்

ஆபிரகாம் எனும்

உங்கள் பெயர் முகவரியோடு

தொலைபேசி தொடர்பு இலக்கத்தையும் தாருங்கள்.

அடுத்து எல்லாமே

எல்லோருக்கும் தெளிவாகும்!

அதுவே தேவை.

கருத்துகளை கவனமாக எழுத நீங்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதை முதலில் நீங்கள் கற்றுக் கொண்டு

அடுத்தவருக்கு உபதேசிக்க வாருங்கள்!

குப்பைகளை கிளறினால்

மணக்காது

நாறத்தான் செய்யும்.............

வருந்துகிறேன்.

நன்றி!

கனேடியன் திரைப்படம் கனேடிய தமிழ் இளைஞர் சமூகத்துக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கான அடிப்படையையும் அதற்கான தீர்வையும் சொல்லி செல்வதாகவே எனக்கு தோன்றுகின்றது. மற்றும் இளைஞர்களின் தாயகம் நோக்கிய பணிகள் மற்றும், நகைச்சுவை என்று சாதாரணமாக மற்றைய படங்கள் போல இதுகும் நல்ல படைப்பாகவே உள்ளது.

கபிலேஸ்வரின் இசை படத்துக்கு மேலும் மெருகூட்டியிருக்கின்றது. கபிலேஸ்வர் கனடாவில் பலரும் அறிந்த இசையமைப்பார் என்பதை விட தென்னிந்திய திரைப்படங்கள் சிலவற்றுக்கும் இசையமைத்துள்ளார்.

அது போல ரவி அச்சுதனும் ஒரு சிறந்த ஒளிபதிவாளர். இதில் நடித்த கலைஞர்களட தங்களால் முடிந்த அளவு நன்றாகவே நடித்துள்ளனர். ஈழத்தமிழ் சினிமாவுக்கு கனேடியன் சற்று மாறுதல் என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய தேவை இருக்கிறது.

இங்கு பலர் தனிப்பட்ட நபர்களை ஒதுக்குவதாய் நினைத்த எம்மவர்களின் படைப்புக்களை புறக்கணிப்பது முட்டாள்த்தனம் என்பதை நினைவுபடுத்தி கொள்ள பறவைகள் கடமைப்பட்டுள்ளன.

நன்றி பறவைகள்!

ஆபிரகாம் போன்றவர்கள்

எம்மோடு இருக்கும் வரை

எமக்கான சினிமாக்கள் உருவாகாது.

சுவிஸ் திரையிடலுக்கு பிறகு

மக்கள் கருத்துகளை

ஒளிப்பதிவில் தருகிறோம்.

அது சரி நீங்கள் எந்த அடிப்படையில் "கனேடியனை" குப்பை என்று கூறுவீர்கள்.

உங்களுக்கு குப்பையாக தென்படலாம்.

அதற்காக எப்படி குப்பை என்று முடிவாக சொல்கிறீர்கள்?.

நன்றி நுன்நிலவன்!

கேள்விக்கு பதில் தேவை!

  • தொடங்கியவர்

ஒரு இந்திய தளத்தில் எழுதினேன்

நாலு பேர் நன்றியாவது

சொல்லிட்டு போறாங்க............

http://muthamilmantram.com/viewtopic.php?f...=418959#p418959

இங்கே நம்வர் தளத்தில் எழுதினேன்

நாத்தி விட்டு போறாங்க..........?

தலைவிதி!

  • தொடங்கியவர்

சுவிஸில்

எதிர்வரும்

2008 பெ்பரவரி 9ம் தகதி

சனிக்கிழமை

காலை 10.30க்கு

பேர்ண் ABC திரையரங்கில்..........

கனேடியன்

ajeevanposter2rm0.jpg

சுவிஸ் வருகிறார் நம்ம கனேடியன் கணபதி................

புலம் பெயர் தமிழர்களான

கனேடிய தமிழர்களால் உருவாக்கப்பட்டுள்ள

கனேடியன்

திரைப்படத்தை காணவும்

திரையிடலோடு கூடிய கலந்துரையாடல் ஒன்றில்

கலந்து கொள்ளவும்

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அத் திரைப்பட

தயாரிப்பாளரும்

நடிகருமான

கணபதி ரவீந்திரன் அவர்கள்

கலந்து சிறப்பிக்க உள்ளார்.

எமது கலைஞர்களை ஊக்குவிக்க ஒத்துழையுங்கள்!

ajeevanolijs8.jpg

அதுவரை படத்தில் இடம் பெற்ற

பாடல் காட்சி ஒன்றை காண இங்கே அழுத்துங்கள்

சுவிஸ் தொடர்புகளுக்கு: +41 79 209 12 49 அல்லது +41 78 621 19 13

தற்போதைய தொடர்புகளுக்கு

கணபதி ரவீந்திரன் : +33 609924967 (லியோன் - பிரான்ஸ்)

அது குறித்த பேட்டியை கேட்பதற்கு அழுத்துங்கள்

நன்றி!

  • தொடங்கியவர்
ajeevancanedianbern2as4.jpg
  • கருத்துக்கள உறவுகள்

தி. ஏபிரகாம் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்.அது தான் ஏதோ குப்பை கூழம் என்றீர்கள். விளக்கம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்! கனேடியனுக்கும், கலைஞர்களுக்கும், அன்பு அஜீவனுக்கும். நன்றி. :rolleyes::huh:

  • தொடங்கியவர்

நன்றி SUVY

கனேடியன்

நம்மவர் படைப்பொன்றை

யாழ் களத்தின் முற்றத்தில்

கோலம் போட்டு வரவேற்றிருப்பதற்கு

யாழ் களத்துக்கும்

அதற்காக உழைக்கும்

அனைவருக்கும் எமது நன்றிகள்!

யாரும் கேட்காமலே

தேவையறிந்து செய்யும்

இது போன்ற நிகழ்வுகள்

யாழ் களத்தை பின்பற்றி

ஏனைய ஊடகங்களும்

முன்னெடுக்க வேண்டுகிறேன்.

ajeevancanedianbern2as4.jpg

http://www.quinnie.ch/

அனுமதி இலவசம்!

இருந்தாலும்

வருவோர் தரும் அன்பளிப்புகள்

ஏற்றுக் கொள்ளப்பட்டு

அப் படைப்பாளிகளுக்கு உங்கள் முன்னிலையில் வழங்கப்படும்.

படைப்பாளிகள் வெறும் கையோடு வாழும் நிலை ஒழிய வேண்டும்.

Edited by AJeevan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மவர் படங்களை ஆதரிக்கத் தான் வேண்டும்.

அதற்காக இந்தியன் சினிமாவின் பிற்போக்குத் தனமான டூயட் பாடல் காட்சிகளும் லொஜிக்கே இல்லாத சண்டை காட்சிகளும் யாருக்கு தேவை.

நமது கலைப்படைப்புகள் கோபுரத்தை பார்த்து வளர்ச்சியடைய வேண்டுமே தவிர குப்பை மேட்டை பார்த்தல்ல.

நான் குறிப்பிட்ட திரைப் படத்தைப் பற்றி சொல்லவில்லை. போதுவான நம்மவர் படைப்புக்களைப் பற்றித்தான் சொல்கிறேன்.

அதற்காக இந்தியன் சினிமாவின் பிற்போக்குத் தனமான டூயட் பாடல் காட்சிகளும் லொஜிக்கே இல்லாத சண்டை காட்சிகளும் யாருக்கு தேவை.

அங்கும் வெயில் பருத்திவீரன் மொழி போன்ற அருமையான

படங்கள் வருகின்றனவே... சில வேளை கனடியன் படமும்

அவ்வாறான ஒன்றாக இருக்கலாம்..

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தயாரித்த சில படங்களை நான் பார்த்திருக்கிறேன். அதில் தமிழச்சி என்ற படம் சிட்னியில் திரையிடப்பட்டது. மிகவும் நன்றாக இருந்தது. தரிசனம் அவுச்திரெலியாவின் ஊடாக சில படங்களையும் ( உ+ம்-' மெதுவாக என்னைத் தொட்டு') பார்த்திருக்கிறேன். இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட 'கனவுகள் நியமானால்' என்ற படமும் அவுச்திரெலியாவில் திரையிடப்பட்டது. இப்படமும் நன்றாக இருந்தது. எமது படங்களை ஊக்குவிக்க வேண்டும்.

இணைப்புக்கு நன்றிகள் அஜீவன்.

  • தொடங்கியவர்

இலங்கையில் ஒரு சில தமிழ் திரைப்படங்கள்

இலங்கை தமிழ் நாவல்களைத் தழுவி வந்தன.

அவை வந்ததும் தெரியாது

போனதும் தெரியாது பலருக்கு...................

அவற்றில்

சமுதாயம்

தோட்டக்காரி

பொன்மணி

கடமையின் எல்லை

வாடைக் காற்று

குத்துவிளக்கு

ஆகிவற்றைச் சொல்லலாம்.

பல குறைகள் இருந்தாலும்

இவற்றை விரல் விட்டு எண்ணக் கூடியோரே பார்த்திருப்பர்.

ஆனால்

நான் உங்கள் தோழன்

(இது மனோ கணேசனின் அப்பா வீபீ.கணேசனின் படம்

தந்தை செல்வாவின் இறுதி ஊர்வலம் காங்கேசன்துறை முதல் யாழ்நகர் வரை வந்ததை

பலவந்தமாக இதில் இடம் பெற வைத்தார்கள்.

அதற்காக நானும் போனேன்.

திரைப்பட படப்பிடிப்புகள் முடிவுற்றிருந்த நிலையில்

அதை இடம் பெற வைப்பதற்காக

டொக்டராக நடித்த வீபீ கணேசனைத் தேடி

ஒரு பெண் வந்து டொக்டரை கேட்கும் போது

ஒருவர் டாக்டர் தந்தை செல்வா ஐயா செத்த வீட்டுக்கு போயிருக்கார் எனச் சொல்லும்

காட்சி படமாக்கப்பட்டு

தந்தை செல்வாவின் இறுதி ஊர்வலம் திணிக்கப்பட்டது.)

மற்றும்

கோமாளிகள்

போன்ற படங்களே அங்கு வந்து வெற்றி பெற்றன.

நான் உங்கள் தோழன்

முற்று முழுவதும் MGR பாணி படமாகவும்

கோமாளிகள்

கோமாளிகள் வானோலி தொடராக

இலங்கை வானோலியில் கலக்கியிருந்ததாலும்

வெற்றியளித்தன.

கோமாளிகள்

வானோலியில் இருந்தது போல்

திரையில் வரவில்லை.

அதன் பின்னர் எதுவுமே உருப்படியாக போணியாகவில்லை.

இங்கு வரும் படங்களில்

பல தவறுகள் இருப்பதை மறுக்க முடியாது.

அதற்காக வளர்ச்சியிலேயே

அவற்றை கிள்ளி எறியத் தேவையில்லை.

பல திரைப்படங்கள்

மேடை நாடகங்கள் போலவும்

தென் இந்தியப்பாணியிலும்

இருப்பது கண்கூடு..........

புலம் பெயர்ந்தோர்

இத் திரைப்படங்களை பார்த்து

அவற்றை விமர்சிக்க வேண்டும்.

அவை அவர்களை அழிப்பவையாக இல்லாமல்

ஆக்கப்படுபவையாக இருக்க வேண்டும்.

அதைவிடுத்து முளையிலே கிள்ளி எறிவதால்

அவை ஒருபோதும் வளர்ச்சி அடையாது.

கனேடியனை திரையிட்ட பின்னர்

அதற்கான விமர்சனத்தை இங்கு வைப்போம்?

வாருங்கள்

வந்து ஒத்துழைப்பு நல்குங்கள்!

நன்றி!

நம்மவர்களில் பலர் திரைப்படம் சம்மந்தமான துறையில் போதிய அனுபவமில்லாமல் அதில் ஈடுபடுவதாலேயே பல குறைகள் வருகின்றன. ஒவ்வொரு துறைக்கும் அது சம்பந்தமான படிப்புக்கள் உள்ளன. அவற்றை முறையாக கற்று பின் நல்ல தேர்ச்சி பெற்றவர்களிடம் உதவியாளராகப் பணியாற்றி பின் தனியாக நுழைந்தால் முறையாக சாதிக்கலாம். ஆனால் புலம் பெயர்ந்தவர்கள் கைகளில் காசு இருந்தால் போதும் தானும் ஒரு கமெரா வாங்கியவுடன் தம்மையும் ஒரு கமெராக்கவிஞனாக கற்பனை பண்ணுபவர்கள் ஏராளம். சிலரது பேட்டிகளைப் படித்த போது சிரிப்பதா அழுவதா என்று நினைத்திருக்கின்றேன். காரணம் அவர்கள் தங்களை ஏதோ சுயம்பு போல் காட்டியிருப்பார்கள். சமீபத்தில் இசையமைத்த நம்மவர் ஒருவரின் பேட்டியைப் இணையத்தில் பார்த்தேன். அதில் அவர் தான் இசையமைத்தாக ஒரு பாடலைப் போட்டுக் காட்டினார்; ஆனால் அப்பாடல் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய ஒரு பாடலை அப்பட்டமாக காப்பியடிக்கப் பட்டிருந்தது. பேட்டி கண்டவர் அது புரியாமல் ஆகோ ஓகோ என்று புகழ்ந்து தள்ளினார். நம்மவர்களான பாலுமகேந்திரா, குகநாதன் போன்றவர்களால் இந்தியாவில் சாதிக்க முடிந்தது என்றால் ஏன் ஏனைய நம்மவர்களாலும் முடியாது?? நிச்சயம் முடியும் எதையும் முறையாக கற்று அதனைச் செயல்படுத்த முடிந்தால்.

Edited by Vasampu

  • தொடங்கியவர்

வசம்பு சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை.

ஆனாலும்

எமக்கென்று ஒரு சினிமா கல்லூரி இல்லை.

புலத்தில் உண்டு

இதில் அக்கறை கொண்டோருக்கு மொழி இல்லை.

மொழி தெரிந்தவர்கள்

இதைவிட சம்பாதிக்க வேறு தொழில்களுக்கு போகிறார்கள்.

சினிமா தொழில் நுட்பம் தெரியாமல் இறங்குவோர்

ஆர்வத்தில் இறங்குகிறார்கள்.

அதன் பின்னர் ஆர்வமே ஆத்திரமாகிவிடுகிறது.

தொலைக் காட்சிகள் கூட

டெக்கில் படம் பார்த்தவர்கள் கைக்கு போய் விட்டது?

இதெல்லாம் வேதனையான உண்மை!

நான் ஒருமுறை

ஒரு தொலைக் காட்சி உரிமையாளருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

"அஜீவன்

இந்தியாவில இருந்து கெசட் வருது.

அதை தொடர்ந்து போட 1-2 பேர் போதும்.

செய்தி வாசிக்க ஒரு சிலர் வேணும்

நெட்டில இருந்து எடுக்க எழுத

ஒருவர் வேணும்............................." என்றார்.

நான் அதற்கு பின்னர் பேசவே இல்லை.

" நீங்க வாழுற நாட்டில உள்ள

ஒரு தொலைக் காட்சிக்கு

ஒருக்கா போய் வாங்கோ " என்று

இழுத்துக் கொண்டு போகவா முடியும்?

எம்மவர் படைப்புகள் தொடர்ந்து வர வேண்டும்.

எம்மவர் எமது படைப்புகளை

புலத்தில் வரவேற்க வேண்டும்! வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் முயற்சிகளிற்கு ஆதரவு வழங்குவோம். தொடர்ச்சியான முயற்சிகள் தான் ஒரு தரமான படைப்பை உருவாக்க அனுபவங்களை கொடுக்கும்.ஆனால் திரைப்படம் எடுப்பவர்கள் வியாபார ரீதியாக தென்னிந்திய பாணியில் 5 பாட்டு 3 சண்டை இடைக்கிடை ஏதாவது முத்திரை வசனம். என்று எடுத்தாலும் காலப்போக்கில் எங்களது தனித்தன்மை அதாவது நாடகத்துறையில் எப்படி ஈழத்தமிழருக்கென்று ஒரு தனித்தன்மை உள்ளதோ அதேபோல முழுநீளத் திரையிலும் ஒரு தனித் தன்மையை உருவாக்கவேண்டும். உதாரணமாக ஈழத்தமிழர்களின் குறும் படங்களில் அந்தத் தன்மை உள்ளது. அதே போல திரைப்படங்களிலும் அது பேணப்பட்டால்தான் அது எமதுவெற்றியாகும். மற்றபடி எடுத்த எடுப்பிலேயே குப்பை என்று எறியாமல் அது குப்பையாக இருந்தாலும் அதில் ஏதாவது பிரயோசனமாக இருக்கிறதா என்று தேடி ஊக்கம் கொடுப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.