Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முத்தம் என்ன செய்யும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் என்ன செய்யும்?

என்னதான் பொறுமை, நிதானம், மற்றவர்கள் பேசுவதற்குக் காது கொடுப்பது, பொறுப்பாக நடந்து கொள்வது, சின்சியாரிடி என்று பல்வேறு குணாம்சங்கள் ஒரு தம்பதிக்கு இருந்தாலும் அந்தத் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு தாம்பத்திய உறவுக்கு உண்டு.

அதனால்தான் அந்த உறவுக்கு இருவரில் யாராவது ஒருவர் தகுதியில்லாதவராக இருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டால் உடனே வேறு எந்தக் கேள்விக்கும் இடமின்றி டைவர்ஸ் கூட சுலபமாகக் கிடைத்துவிடுகிறது.

ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அந்த உறவுக்கு தகுதியில்லாத நிலை எதனால் ஏற்படுகிறது? அதைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம். ஆனால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தகுதியும் திறனும் இருந்தும்கூட சிலரது வாழ்க்கையில், தாம்பத்திய உறவு என்பது ஈர்ப்பும் ஆர்வமும் அற்ற ஒரு விஷயமாக, ஏதோ குளிப்பது போல் ஒரு கடமையாக அல்லது கோடைமழை போல் சட்டென்று கொட்டி அடங்கிவிடும் ஒரு விஷயமாக இருக்கிறது.

ஆர்வமற்ற இதுபோன்ற தாம்பத்திய உறவு இருக்கும் தம்பதியர்களுக்குள், மற்ற எந்த விஷயத்திலும்கூட பெரிய நெருக்கம் இருப்பதில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

சரி.. சிலருக்கு தாம்பத்திய உறவில் ஈர்ப்பும் ஆர்வமும் ஏன் குறைகிறது?

கணவனோ அல்லது மனைவியோ, குறிப்பிட்ட தன் துறையில் தான் வேகமாக முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் ‘வேலை வேலை’ என்று கவனம் முழுக்க வேலை பற்றியே சிந்திக்கும்போது, தாம்பத்திய உறவில் பெரிய ஈர்ப்பு இல்லாமல் போகலாம்.

அதிக வேலை அல்லது சரியான நேரத்தில் முடியாத வேலையால் ஏற்படும் உடல் அசதியும்கூட இதுபோன்ற ஆர்வமின்மைக்கு இட்டுச் சொல்லலாம். கணவருக்கோ மனைவிக்கோ ஒருவரைப் பார்த்தவுடன் மற்றவருக்கு கிளர்வான உணர்வை ஏற்படுத்தும் டோப்பாமைன், நைட்ரிக் ஆக்ஸைடு, ஆக்ஸிடோஸின், டெஸ்டோஸ்டிரான் போன்ற சமாச்சாரங்கள் உடலில் போதுமான அளவில் இல்லாமல் குறைவாக சுரக்கும் நிலையும் காரணமாகலாம்.

சில வீடுகளில் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ சில குண நலன்களால் ஒருவர் மேல் மற்றவருக்கு மனசில் மரியாதை இல்லா ஒட்டாத நிலை ஏற்படுவதும் காரணமாகலாம்.

தாம்பத்தியத்தைத் தவிர வெளியே வேறு யாருடனாவது இருக்கும் ஆர்வத்தாலும் இப்படி தம்பதிகளுக்குள் ஈர்ப்பு குறையலாம்.. இதுபோல் இன்னும் ஏகப்பட்ட காரணங்கள்!

ஆனால், இந்த எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. சொல்லப் போனால் இந்தக் காரணம் பெண்களில் பலருக்கு மிகவும் பொருந்தும்.

அது.. தாம்பத்திய உறவு என்பது முறையாக, அதன் சுவாரஸ்யத்துடன் இதமாக அறிமுகம் ஆகாமல் போவதால், அதன் பேரில் சில பெண்களுக்கு ஏற்படும் பயமும் எரிச்சலும் கலந்த கஷ்ட உணர்வு!

எடுத்த எடுப்பில் ஒரு பெரிய பாத்திரம் நிறைய சாதத்தை அள்ளிப் போட்டால் சாப்பிடத் தோன்றுமா? அந்தப் பாத்திரத்தைப் பார்த்தவுடனே இருக்கும் பசியும் அல்லவா பறந்து போகும்!

என்னதான் பசிக்கு சாப்பிடவேண்டி இருந்தாலும் சாப்பிடத் தூண்டும் வகையில், அதை அழகாகப் பார்வையாக வைத்தால்தான் சாப்பிடும் ஆர்வம் வருகிறது. என்னதான் தேர்வுக்கு மார்க் எடுப்பதற்காக படிக்க வேண்டி வந்தாலும், ஆசிரியர் சுவாரஸ்யமாக சொல்லிக் கொடுத்தால்தான் அதைப் படிக்கவே ஆர்வம் வருகிறது.

அதேபோல்தான்.. என்னதான் மனதை மயக்கும் விஷயமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக, இதமாக அதை அறிமுகப்படுத்தும் போதுதான் தாம்பத்திய உறவும்கூட பல பெண்களை விரும்பி ஆர்வம் கொள்ள வைக்கிறது.

பெண்களுக்கு தாம்பத்திய உறவை சுவாரஸ்யம் மிக்கதாக அறிமுகப்படுத்துவதில் முதல் முக்கிய பங்கு வகிக்கிறது முத்தம்....

இளம் மனைவியை எடுத்த எடுப்பிலேயே முரட்டுத்தனமாக அணைத்து, தங்கள் தேவைகளை ஆண்கள் நிறைவேற்ற முயலும்போது சில பெண்கள் பயந்து போகிறார்கள். அதனால் அவளைப் பொறுத்தவரை அந்த விஷயம் சுகமான ஒரு அனுபவிப்பாக இல்லாமல், டென்ஷனையும் பயத்தையும் ஏற்படுத்துவதாக மாறிப்போகிறது.

அதே இளம் மனைவியை கணவன் இதமாகப் பேசியபடியே மென்மையாக அவளை ஸ்பரிசித்து, மெதுவாக அவள் நெற்றியில் முத்தமிட ஆரம்பித்து கன்னம், கழுத்து என்று ஒவ்வொரு இடமாக அவன் முன்னேறி வரும்போது அவளுக்குள் மனமெழுகு உருகத் தொடங்கிவிடும். அந்த விஷயத்தையே அப்புறம் அவள் ஆவலுடன் எதிர்கொள்ள ஆரம்பித்துவிடுகிறாள்.

முத்தம், உங்கள் தாம்பத்தியத்தை திருப்திகரமாகக் கொண்டு செல்வதற்கு மட்டும் பயன்படுவதில்லை... ஆச்சர்யப்படுத்தும் பல விஷயங்களையும் செய்கிறது.

முதலில் கணவன் _ மனைவிக்கான மன நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. ரொமான்டிக்காக தரப்படும் முத்தம், பிரியங்களை அதிகப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட ஆக்ஸிடோஸின் கெமிக்கலை நிறைய சுரக்கத் தூண்டுகிறது.

ஆசையுடனும் ஆர்வத்துடனும் முத்தமிடுபவர்கள் நீண்டநாள் வாழ்கிறார்கள் என்று பல ஆய்வுகளுக்குப் பின் கண்டு பிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பல்வேறு காரணங்களால் நம் தினசரி வாழ்க்கையில் ஏற்படும் கவலை, மன அழுத்தம், டென்ஷன் என்று பல பிரச்னைகள் தீர மெடிக்கல் ஸ்டோர் போகாமலே நீங்கள் வாங்க முடியும் ஒரே மருந்து முத்தம்தான்! அதனால் நோயற்ற ஹெல்தியான வாழ்க்கை வாழ முடிகிறது!

சோர்ந்த உடலுக்கும் மனசுக்கும் ஒரு மெகா பூஸ்ட் சாப்பிட்ட புத்துணர்ச்சி முத்தத்தால் கிடைக்கிறது. அதாவது இயல்பாக, ஒரு பெண்ணின் சராசரி இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 84 ஆகவும், ஆண்களுக்கு 72 ஆகவும் இருக்கிறது. முத்தமிடும் சமயத்தில் பெண்களின் துடிப்பில் 24_ம் ஆண்களின் துடிப்பில் 38_ம் அதிகரித்து, அதன் காரணமாக ரத்தம் வேகமாக பாய்ந்து தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறது. ரத்தம் சுத்தமாவதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது!

குறிப்பாக அடிக்கடி முத்தமிடுபவர்களின் முகம் இளமை குறையாமல் இருக்கிறது. ஒரு முறை முத்தம் தர சாதாரணமாக 12 முதல் 30 தசைகள் வரை இயங்க வேண்டியுள்ளது. அவற்றின் இயக்கம் முகத்தின் இளமையைக் காப்பாற்றித் தருகிறது. தவிர ஜப்பான் டாக்டர் டோமா என்பவர், தம்பதிகளின் வாயில் சுரக்கும் உமிழ்நீரை ஆராய்ந்துப் பார்த்துவிட்டு, முத்தமிடும்போது சுரக்கிற உமிழ்நீரில் ஏராளமான ஹார்மோன்கள் வெளிப்பட்டு அது மற்றவருடைய ரத்த ஓட்டத்தில் கலந்து, மனிதர்களுக்கு முதிர்ச்சி ஏற்படுவதைத் தடுக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்.

வேகமான ரத்த ஓட்டம் உடல் திசுக்களுக்கு அதிக ஆக்ஸிஜனை அளிப்பதால், திசுக்கள் இளமையாகவும் உற்சாகத்துடன் இருக்கின்றன என்கிறார் மற்றொரு இத்தாலி நாட்டு நிபுணர்.

‘அடிக்கடி முத்தமிடுங்கள். உங்கள் வாய் நாற்றமில்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்’ என்கிறார்கள் பல் மருத்துவர்கள்.

வயதாக ஆக எச்சில் சுரப்பது குறைவதால்தான், பல்லிலும் வாயிலும் உற்பத்தியாகும் பாக்டீரியாக்கள் சுத்தப்படுத்தப்படாமல் அங்கேயே தங்கி வாயை நாற்றம் ஏற்படுத்துகின்றன. ஆனால் முத்தமிடும்போது அதிக அளவில் எச்சில் சுரப்பதால், பாக்டீரியாக்கள் அவ்வப்போது சுத்தப்படுத்தப்பட்டு வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.

முத்தத்தால் உடல்ரீதியில் ஒரு கிளர்வான மகிழ்ச்சியும் கிடைக்கிறது. நாம் ஏற்கெனவே பேசிய டோப்பாமைன், எண்டார்பின் போன்ற விஷயங்களை முத்தம் தூண்டுவதால் இந்த கிளர்வும், திருப்தியும் ஒரு த்ரில்லான மகிழ்வும் கிடைக்கிறது.

தியானம் செய்தது போன்ற பலனையும் முத்தம் கொடுக்கிறது. மன அமைதியும், புத்துணர்ச்சியும் தந்து அடுத்தடுத்து செய்யும் வேலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ள வைக்கிறது. எனவே முத்தமிடுங்கள்!

லோகநாயகி

நன்றி - குமுதம்

குறிப்பாக அடிக்கடி முத்தமிடுபவர்களின் முகம் இளமை குறையாமல் இருக்கிறது

உண்மையாவோ நுணாவிலன் அண்ணா தாங்ஸ் இன்வோர்மேசனிற்கு :) ...முத்தத்தில உவ்வளவு மாட்டர் இருக்கு என்று நேக்கு இன்றைக்கு தானே தெரியும் :wub: ...நேக்கு இன்னொரு டவுட் பெரியவா தான் கிளியர் பண்ணி வைக்க வேண்டும் அதாவது முத்தம் கொடுக்கும் போது நல்லா இருக்குமா அல்லது வாங்கும் போது நல்லா இருக்குமா :) (என்ன பார்க்கிறியள் டவுட்டை கேட்க தானே வேண்டும் :) )...முத்தமிட சொல்லுறீங்க நான் யாருக்கும் முத்தத்தை கொடுத்து அடி வாங்கிறதே நேக்கு கூட உதை வாசித்தா பிறகு யாருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் போல இருக்கு :wub: ம்ம்ம் பக்கத்துவீட்டு குட்டி பாப்பாவிற்கு தான் கொடுப்பேன் பிறகு தப்பா நினைத்து போடாதையுங்கோ... :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"நீங்களா போய் கொடுத்தா அது முத்தம் இல்லை தானா தேடி வாறது தான் முத்தம்"

"நீங்களா போய் கொடுத்தா அது முத்தம் இல்லை தானா தேடி வாறது தான் முத்தம்"

இனிமேல் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கணும் :wub::wub:

இனிமேல் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கணும் :wub::wub:

ஏன் உங்களின்ட ஆளிற்கு நீங்களோ கொடுக்கிறனியள் பாவம் நிலா அக்கா... :):):lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம்.. சுத்தம் பார்த்துக் கொடுக்கப்படனும். இல்ல அசுத்தமாகிடுவியள்..! :wub::wub:

ஏன் உங்களின்ட ஆளிற்கு நீங்களோ கொடுக்கிறனியள் பாவம் நிலா அக்கா... :wub::wub::)

அப்ப நான் வரட்டா!!

இல்லை பக்கத்துல பேபிகளுக்கு தான் கொடுக்கிறது அடிகக்டி. பேபிகள் எல்லாம் இப்ப அறிவாளீகள் எல்லோ அதுகளும் உங்களைப் போலவே நினைச்சுட்டா :)

"நீங்களா போய் கொடுத்தா அது முத்தம் இல்லை தானா தேடி வாறது தான் முத்தம்"
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி நுணாவில்! அருமையான தகவலுக்கு ரொம்ப தாங்ஸ் பா :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கு.மா அண்ணா you are most welcome :lol::o .

முத்தம்.. சுத்தம் பார்த்துக் கொடுக்கப்படனும். இல்ல அசுத்தமாகிடுவியள்..! :o:lol:

தாத்தா கிடைக்கிற நேரம் உது எல்லாம் பார்த்து கொடுக்க ஏலுமோ அங்கால இங்கால பார்க்காம வாங்கி கொள்ள வேண்டும் என்ன நான் சொல்லுறது சரி தானே.. :o:(

அப்ப நான் வரட்டா!!

இல்லை பக்கத்துல பேபிகளுக்கு தான் கொடுக்கிறது அடிகக்டி. பேபிகள் எல்லாம் இப்ப அறிவாளீகள் எல்லோ அதுகளும் உங்களைப் போலவே நினைச்சுட்டா :huh:

ம்ம்..நிலா அக்காவும் பக்கத்துவீட்டு பேபிகளிற்கோ கொடுக்கிறனீங்க பாவம் நிலா அக்கா :lol: ..ம்ம் பேபிகள் எல்லாம் ஜம்மு பேபி மாதிரி அறிவாளிகளா இருக்க முடியாது நிலா அக்கா உது தெரியாதே... :(

அப்ப நான் வரட்டா!!

ம்ம்..நிலா அக்காவும் பக்கத்துவீட்டு பேபிகளிற்கோ கொடுக்கிறனீங்க பாவம் நிலா அக்கா :huh: ..ம்ம் பேபிகள் எல்லாம் ஜம்மு பேபி மாதிரி அறிவாளிகளா இருக்க முடியாது நிலா அக்கா உது தெரியாதே... :lol:

அப்ப நான் வரட்டா!!

:o

நீங்கள் சொன்னா சரியாகத்தான் இருக்கும். காதல் இளவரசன் ஆச்சுதே சும்மாவா என்ன :(

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ இவளவு விசயம் இருக்கா இதுல?சரி சரி ஒரு கை பார்த்தால் போச்சு :lol:

முத்தமானது நாட்டுக்கு நாடு , மனிதருக்கு மனிதர், நேரத்திற்கு நேரம், சூழலுக்கு ஏற்ப வேறுபடும். :lol:

முத்தமானது நாட்டுக்கு நாடு , மனிதருக்கு மனிதர், நேரத்திற்கு நேரம், சூழலுக்கு ஏற்ப வேறுபடும். :)

அருமையான கருத்து வாழ்த்துக்கள் :lol::D:wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்தமானது நாட்டுக்கு நாடு , மனிதருக்கு மனிதர், நேரத்திற்கு நேரம், சூழலுக்கு ஏற்ப வேறுபடும். :lol:

அப்படியா நிலா. உங்களிடம் இருந்து நிறைய கற்க வேண்டியுள்ளது. :):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்தமானது நாட்டுக்கு நாடு , மனிதருக்கு மனிதர், நேரத்திற்கு நேரம், சூழலுக்கு ஏற்ப வேறுபடும். :D

அருமையான கருத்து வாழ்த்துக்கள் :lol::wub::lol:

எடியே சின்னப்பு!வெண்ணிலவு சொன்ன வசனத்திலை ஒரு இழவும் விளங்கேல்லையப்பா :)

ரைம் இருந்தால் எனக்கு ஒருக்கால் விளங்கப்படுத்தேலுமோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முத்தங்கள் பல விதம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

ஓகோ இவளவு விசயம் இருக்கா இதுல?சரி சரி ஒரு கை பார்த்தால் போச்சு :lol:

சகிவன் தாத்தா உது என்ன சின்னபுள்ளதனமா இருக்கு கை பார்க்க கூடாது வாய் தான் பார்க்க வேண்டும் சரியே :lol: ...ஜம்மு பேபிக்கு தெரிந்தது கூட சகிவன் தாத்தாவிற்கு தெரியவில்லை சேம்..சேம் பப்பி சேம்... :wub:

அப்ப நான் வரட்டா!!

முத்தமானது நாட்டுக்கு நாடு , மனிதருக்கு மனிதர், நேரத்திற்கு நேரம், சூழலுக்கு ஏற்ப வேறுபடும். :)

எப்படி நிலா அக்கா இப்படியெல்லாம் என்னால முடியல :lol: ...ஆனாலும் முத்தம் வாயால கொடுக்கிறது மாறுபடாது என்று சொல்லுறியள்.... :):D

அப்ப நான் வரட்டா!!

அப்படியா நிலா. உங்களிடம் இருந்து நிறைய கற்க வேண்டியுள்ளது. :wub::lol:

கொஞ்சம் கராத்தே தெரியும் வாறியளா கத்துக்கொடுக்கிறேன். :huh:

எப்படி நிலா அக்கா இப்படியெல்லாம் என்னால முடியல :( ...ஆனாலும் முத்தம் வாயால கொடுக்கிறது மாறுபடாது என்று சொல்லுறியள்.... :D:lol:

அப்ப நான் வரட்டா!!

:lol::lol: வாயால தான் கொடுக்கிறது ஆனால் வாயால் வாய்க்கு தான் கொடுக்கணும் என்றில்லை ஜம்மு அதை தான் சொல்ல வந்தேன் :lol:

:lol::lol: வாயால தான் கொடுக்கிறது ஆனால் வாயால் வாய்க்கு தான் கொடுக்கணும் என்றில்லை ஜம்மு அதை தான் சொல்ல வந்தேன் :lol:

ம்ம்..உப்படி வேற மாட்டர் இருக்கோ :lol: நேக்கு தெரியாம போச்சு ம்ம்ம் ரொம்ப தாங்ஸ் நிலா அக்கா :wub: ...அது சரி கராட்டி எல்லாம் தெரியுமோ உங்களிற்கு எனக்கு கொஞ்சம் சொல்லி தாறியளோ... :huh:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆருக்கும் செருப்பாலை முத்தம் வாங்கின அனுபவம் இருக்கோ? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

முத்தமானது நாட்டுக்கு நாடு , மனிதருக்கு மனிதர், நேரத்திற்கு நேரம், சூழலுக்கு ஏற்ப வேறுபடும். :huh:

முத்தங்கள் பல விதம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

முத்த விசயத்தில பெண்களின் கருத்துக்கள் என்ன ஒரு திணிசா இருக்குது.

எல்லாம் பெரிய அனுபவப் பாட்டிகள் போல.. நமக்கேன்.. ஆராய்ச்சி... சொல்லிறதக் கேட்பம்..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முத்தத்தில் முத்து முத்தான விடயங்கள் தெறிக்குது. :huh::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன முத்தம் கொடுத்தாலும், மற்றவரும் சரி, நீங்களும் சரி வாய் மணக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். முதல் நாள் கொடுத்த முத்ததிற்குப் பிறகு முத்தமே தரக்கூடாது விதி போட்டு வைத்திருக்கின்ற பல குடும்பங்களின் கதையை அறிவேன்.

ஏன் குழந்தைகள் கூட முகத்தைத் திரு;பபி வைத்துக் கொண்டிருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு உந்த சொண்டு உரஞ்சுற வேலையெல்லாம் சரிவராது :)

வைச்சால் குடுமி எடுத்தால் மொட்டை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன முத்தம் கொடுத்தாலும், மற்றவரும் சரி, நீங்களும் சரி வாய் மணக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். முதல் நாள் கொடுத்த முத்ததிற்குப் பிறகு முத்தமே தரக்கூடாது விதி போட்டு வைத்திருக்கின்ற பல குடும்பங்களின் கதையை அறிவேன்.

ஏன் குழந்தைகள் கூட முகத்தைத் திரு;பபி வைத்துக் கொண்டிருக்கின்றன.

மேல இப்பிடி சொல்லி இருக்கு நீங்கள் சரியா பாக்க இல்லையோ?

‘அடிக்கடி முத்தமிடுங்கள். உங்கள் வாய் நாற்றமில்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்’ என்கிறார்கள் பல் மருத்துவர்கள்.

வயதாக ஆக எச்சில் சுரப்பது குறைவதால்தான், பல்லிலும் வாயிலும் உற்பத்தியாகும் பாக்டீரியாக்கள் சுத்தப்படுத்தப்படாமல் அங்கேயே தங்கி வாயை நாற்றம் ஏற்படுத்துகின்றன. ஆனால் முத்தமிடும்போது அதிக அளவில் எச்சில் சுரப்பதால், பாக்டீரியாக்கள் அவ்வப்போது சுத்தப்படுத்தப்பட்டு வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.