Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூர் தயாரிப்பு இராட்சத ஷெல் "சமாதானம் 2005' புலிகள் பாவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர் தயாரிப்பு இராட்சத ஷெல்

"சமாதானம் 2005' புலிகள் பாவிப்பு

பேரழிவு தரக்கூடிய ஷெல் அல்லது பீரங்கி வகையைச் சேர்ந்த இராட்சத ஏவு வெடி கருவி ஒன்றை மன்னார் களமுனையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்று இராணுவப் புலனாய்வு வட்டாரங்கள் அரசுத் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றன எனக் கூறப்படுகின்றது.

"சமாதானம் 2005' என நாமம் சூட்டப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் கருவி முன்னர் புலிகள் தாங்களே தயாரித்துப் பயன்படுத்திய "பஸிலன்' ஷெல் வகையை ஒத்ததாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது.

"சமாதானம் 2005' என்ற இந்தப் பெயர் இதற்கு புலிகள் சூட்டியதா அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவு அந்தப் பெயரில் அக்கருவியை இனங்கண்டு குறிப்பிடுகின்றதா என்பதை அறியமுடியவில்லை.

இந்தக் குண்டு சுமார் முந்நூறு கிலோ வெடிப் பொருளுடன் சுமார் ஐந்நூறு கிலோ எடையுடையதாக இருக்கும் என மதிப்பிட்டுள்ள புலனாய்வு வட்டாரங்கள் அது வந்து விழுந்து வெடிக்கும் பிரதேசத்தில் 50 மீற்றர் முதல் நூறு மீற்றர் வரையுள்ள சுற்றுப் பகுதியில் பேரழிவையும் பெரு நாசத்தையும் ஏற்படுத்தும் என்றும் கருதுகின்றனர் எனத் தெரிகின்றது.

இந்த மோட்டார் அல்லது ஷெல்லின் ஏவு வீச்சு எவ்வாறு என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அத்துடன், ஏவுகணைப் பொறிமுறையை அல்லது பீரங்கிப் பொறிமுறையை அல்லது இந்த இரண்டையும் ஒரே சமயத்தில் பயன்படுத்தி இதனை ஏவுவதற்கான ஓர் உத்தியை தொழில்நுட்ப ரீதியில் புலிகள் உருவாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

90 களில் "பஸிலன்' என்ற உள்ளூர் தயாரிப்பு பாரிய ஷெல் மூலம் யுத்த முனைகளில் புலிகள் பெரும் சேதத்தையும் படையினருக்குப் பீதியையும் விளைவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கடத்திவர முடியாத முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் புலிகள், தாமே தங்களுக்குரிய இத்தகைய ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று இராணுவப் புலனாய்வுப் பிரிவு அரச உயர்மட்டத்துக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

http://www.sudaroli.com/pages/news/today/04.htm

வயிற்றக் கலக்கிக்கொண்டு வரப்போகுது. முகாம் அழகாக அமைத்த பின் 50 மீற்றர்க்கங்கால போய் இருக்கப் போறாங்கள்.

இனி சமாதானம் விழுந்து இத்தனைபேர் பலி. சமாதானம் பாரிய அழிவுகளை ஏற்படுத்துகிறது. சமாதானம் 500 கிலோ நிறையுடையது. இப்படி சமாதானச் செய்திகளாக வரப்போகுது.

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம் 2005' ஐ கேட்டாலே இராணுவத்துக்கு வயித்தாலே போக மருந்து கொடுக்க தேவையில்லை :lol::)

நாங்கள் எப்பவுமே சமாதானத்துக்கு ரெடி :lol::)

ஏதோ ஆமியுன்ட மல்ரி பெரலுக்கு ஈடுகொடுக்கக்கூடியதா இருந்தால் சரி :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இனி சமாதானத்தை இராணுவம் விரும்பாது எண்டு சொல்லுங்கோ..............

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடம் 152 மி.மீ, 130 மி.மீ, 122 மி.மீ 120 மி.மீ என்று பல்வேறு அளவுகளில் எறிகணை வீச்சிகள் இருக்கும்போது , புலிகளால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சமாதானம் 2005 பற்றி ராணுவப் புலனாய்வுத் துறை ஏன் பெரிதாக அலட்டிக் கொள்ளுதோ தெரியவில்லை. தாக்குதல் தூரமும், தாக்குதலின் துல்லியம் பற்றிய சரியான தகவலும் இல்லாமல் கதை விடுகினம் எண்டு நினைக்கிறன்.

சிலவேளை புலிகளின் ஆயுதக்கப்பல்கள் எல்லாம் காழியாக்கி விட்ட பிறகு புலிகளுக்கு ஆயுதத் தட்டுப்பாடு வந்துட்டுது எண்டு சிங்களச் சனத்துக்குக் காட்ட இதைச் சொல்லியிருக்கலாம்.

செய்தி நல்லது ஆனால் உத்தியோக பூர்வமாக வராததாலும் அதனை உண்மை என்று கருத வேண்டி உள்ளதாலும் இறுதிவரை நாம் உண்மை வரும் வரை அமைதியாக இருப்பது நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதன் 13-02-2008 19:53 மணி தமிழீழம் [தாயகன்]

விடுதலைப் புலிகளின் எறிகணைகள் - படைத் தரப்பு அச்சம்

விடுதலைப் புலிகள் கள முனைகளில் மிகப்பெரிய எறிகணைகளைப் பாவித்து வருவதாக, படைப் புலனாய்வுப் பிரிவினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எறிகணைகளைப் பரிசோதனை செய்த படைப் புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவலைத் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளின் இந்த எறிகணைகளுக்கு "சமாதானம் 2005" என அவர்கள் பெயர் சூட்டியிருப்பதாகவும் படைத் தரப்பு தெரிவிக்கின்றது.

இதேவேளை, விடுதலைப் புலிகள் கள முனைகளில் பல்குழல் எறிகணைகளைப் பாவித்து வருவதாக தென்னிலங்கையின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

புலிகள் குறித்த ஏவுகணையை களமுனையில் பயன்படுத்துவதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஏறிகணையின் தாக்குதலுக்குள்ளாகும் படையினரே புதியவகை எறிகணை ஒன்றின் தாக்குதலுக்குள் தாம் சிக்குவதாக அரசுக்குத் தெரியப்படுத்த வேணும். இதையும் சிறிலங்காவின் படைய புலனாய்வுப்பிரிவா கண்டுபிடிக்கவேணும்?

தயவுசெய்து கீழ்வரும் வரியை விளங்கியவர்கள் அதனைத் தெளிவு படுத்துங்கள்

இந்தக் குண்டு சுமார் முந்நூறு கிலோ வெடிப் பொருளுடன் சுமார் ஐந்நூறு கிலோ எடையுடையதாக இருக்கும் என மதிப்பிட்டுள்ள புலனாய்வு வட்டாரங்கள்

முடியல மின்னல் அண்ணை :huh:

edit//....

எதுக்கு வம்பு..... :lol:

Edited by Panangkai

edit//....

எதுக்கு வம்பு..... :)

சம்பந்த பட்ட வீடியோ எதையாவது இணைச்சு இருப்பியள் எண்டு வந்தா ஏமாத்தி போட்டியளே... :D:o:o

:lol:

தயவுசெய்து கீழ்வரும் வரியை விளங்கியவர்கள் அதனைத் தெளிவு படுத்துங்கள்

குண்டின் சிதறு துண்டுகளை எடுத்து பகுப்பாய்வு செய்தா எவ்வளவு வெடிப்பதிர்வு மூலம் சிதறியது என்பதை கண்டு பிடிக்கலாம்... ஃஅதோடு என்ன வெடிபொருள் பாவிக்க பட்டது என்பதையும் காணலாம்..

அந்த அளவான வெடிப்பதிர்வுக்கு எவ்வளவு வெடிபொருள் தேவை என்பதையும், சிதறு துண்டுக்கான கவசம் எவ்வளவு பாரமானதாக இருக்கும் என்பதையும் சொல்ல முடியும்...!

இதை சாதாரண சிப்பாயால் செய்ய முடியுமா என்ன..?

Edited by தயா

.... பூதங்கள் கிளம்பேக்கை பாப்பமன்!! இப்ப ஏன்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கெண்டா சந்தேகமாயிருக்கு...................500 கிலோவெண்டா இது பிளேனிலருந்து கொட்டுற வகையாயிருக்குமோ.....................

பிறவு உந்த செய்தி முன்னுக்கு நிக்கிரது?????????????????????? இண்டக்கு சரியா போகாதது மாரிருக்கே?????????????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுபொய் நானள வா

யார் எப்படி எழுதினாலெனமன? கொழும்பு ஊடகங்கள்தான் இராணுவத்திற்கு பயத்தையூட்டியிருக்கிறது. இராணுவத்தின் பயத்தைத்தான் கொழும்பு ஊடகங்கள் எழுதியிருக்கிறது. எதிரி தனக்குத் தானே பயவுணர்வை ஏற்படுத்தியிருக்கிறான். இனிமேல் இராணுவ உயர்மட்ட மாநாடு என்று யாரும் அந்தப்பக்கம் போகமாட்டார்கள். இராணுவமும் கவனிப்பாரற்று இழப்புக்களைச் சந்திக்கப்போகிறது.

எனக்கு என்னவோ இந்தச் செய்தியில 500 கிலோ குண்டு இருக்கிற மாதிரி தெரியுது. இத்க்காட்டி அவங்கள் வேற புது விதமான ஆயுதம் ஏதோ வேண்டப்போறங்கள்போல இருக்கு.

எனக்கு என்னவோ இந்தச் செய்தியில 500 கிலோ குண்டு இருக்கிற மாதிரி தெரியுது. இத்க்காட்டி அவங்கள் வேற புது விதமான ஆயுதம் ஏதோ வேண்டப்போறங்கள்போல இருக்கு.

இராணுவத்திடம் எல்லாமே புதியவைதான். அதுவும் மிகத் தூரத்தில் கொள்வனவு செய்வதுமில்லை. எல்லாம் பக்கத்திலிருந்துதான். 500 கிலோ என்பதெல்லாம் சும்மா அபத்தம். இந்த நிறையுடையதை லோட்பண்ணுவதற்கே மிகப் பெரிய பலம் தேவை. 50 கிலோவாக இருக்கலாம்.

பசிலன் 2000 உந்துகணை செலுத்தியின் படம்

04.jpg

normal_untitleddd.jpg

பசிலன் 2000 உந்துகணை

normal_www.jpg

படம்

விடுதலைபுலிகள் ஆவணி-புரட்டாதி 1991

ஈழம் வெப்

குண்டின் சிதறு துண்டுகளை எடுத்து பகுப்பாய்வு செய்தா எவ்வளவு வெடிப்பதிர்வு மூலம் சிதறியது என்பதை கண்டு பிடிக்கலாம்... ஃஅதோடு என்ன வெடிபொருள் பாவிக்க பட்டது என்பதையும் காணலாம்..

அந்த அளவான வெடிப்பதிர்வுக்கு எவ்வளவு வெடிபொருள் தேவை என்பதையும், சிதறு துண்டுக்கான கவசம் எவ்வளவு பாரமானதாக இருக்கும் என்பதையும் சொல்ல முடியும்...!

இதை சாதாரண சிப்பாயால் செய்ய முடியுமா என்ன..?

தயா அண்ணை,

இதை விட இலகுவான வழி ஒன்று இருக்கு, சேத்துக்குள்ளை விழுந்து வெடிக்காததை எடுத்துப்பாத்தா சிரிக்கிற புலிச்சின்னத்தோட "சமாதானம் 2005" பெயரும் தெரியும், அதை அப்படியே கட்டி நிறுத்தா எடையும், செயலிளக்கச் செய்தபின் நிறுத்தா வெற்று ஏடையும் தெரியவரும்!

பி.கு: இதற்காக "சமாதானம் 2005" ஒன்றை வெடிக்காம பண்னினதற்காக மன்னிக்கவும்! :lol:

Edited by சாணக்கியன்

தயா அண்ணை,

இதை விட இலகுவான வழி ஒன்று இருக்கு, சேத்துக்குள்ளை விழுந்து வெடிக்காததை எடுத்துப்பாத்தா சிரிக்கிற புலிச்சின்னத்தோட "சமாதானம் 2005" பெயரும் தெரியும், அதை அப்படியே கட்டி நிறுத்தா எடையும், செயலிளக்கச் செய்தபின் நிறுத்தா வெற்று ஏடையும் தெரியவரும்!

பி.கு: இதற்காக "சமாதானம் 2005" ஒன்றை வெடிக்காம பண்னினதற்காக மன்னிக்கவும்! :)

இண்டைக்கு உங்களிட்ட மாட்டுபட்ட ஆள் நானா..?? :lol:

உந்த சாமான் விழுந்தாலே காணும் வெடிக்க தேவையில்லை....

விழுந்தாலும் விழலாம் எண்ட பயம் இருந்தாலே காணும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.