Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் இணையம் அகவை பத்து கொண்டாடலாமோ?

25 members have voted

  1. 1. யாழ் இணையம் அகவை பத்து கொண்டாடலாமோ?

    • ஆம்!
      17
    • இல்லை!
      0
    • உங்களுக்கு வேற வேலை இல்லையோ?
      7
    • தெரியாது!
      1
    • வேறு பதில்!
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

வணக்கம்...

இந்த வருடம் மார்ச் 30, 2008 உடன் யாழ் இணையத்துக்கு அகவை பத்து ஆகின்றது. சென்ற வருடம் அகவை ஒன்பதை மிகவும் சிறப்பாக கொண்டாடி இருந்தோம்.

இது சம்மந்தமாக யாரோ ஏதோ புத்தகம் எல்லாம் வெளிவிடப்போவதாய் சென்ற வருடம் சொன்னார்கள். பிறகு ஆக்களின் சத்தத்தையே காண இல்லை.

அடியேன் முன்பு புதுசு புதுசாக பல கருத்தாடல்கள் யாழில் துவங்கி யாழ் கள கல்விமான்கள், பகுத்தறிவாளர்கள், தேசியவாதிகளிடமிருந்து கல்லெறிகளும், துரோகி என்ற பட்டங்களும் வாங்கி நன்றாக அனுபவப்பட்டு விட்டதால் இந்தத்தடவையும் ஏதாவது வித்தியாசமாக செய்யத்தொடங்கி கடைசியில் பலகோடி உலகத்தமிழ் மக்கள் முன்னிலையில் எனது கோவணத்தை பறிகொடுக்கும் முட்டாள்தனமான வேலையை செய்யாமல் கொஞ்சம் கவனமாக இருக்கலாம் என்று பார்க்கின்றேன்.

யாழ் களத்தில் உள்ள அறிவாளிகள், புத்திஜீவிகள் இது விடயத்தில் கவனம் செலுத்தி இந்தமாதம் முழுவதும் யாழ் இணையம் அகவை பத்தை கொண்டாடுமாறு பணிவன்புடன் கேட்டு விடைபெறுகின்றேன்.

தடங்கலுக்கு வருந்துகின்றோம்! மீண்டும் சந்திப்போம்..

நன்றி! வணக்கம்!

பி/கு: எனக்கு பரீட்சையில் குதிரை ஓடுவதற்கு யாராவது தயாராக இருந்தால் தொடர்ந்து யாழுக்கு முன்புபோல் வந்து இந்த விசயங்களை பற்றி மேலதிகமாக ஆராய்ச்சிகள் செய்யமுடியும்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

பிளீஸ் கொண்டாட்டம் என்றிட்டு யாழ் பூரா.. எதையும் பண்ணிடாதேங்க.. அண்மையில சிறீலங்கா சுதந்திர தினத்தை இட்டு நோர்வேயில கண்காட்சி நடத்தினாங்க.. சிறீலங்கா 60 ஆண்டுகளா செய்த கொடூரத்தை சொல்லி. அப்படி ஏதாச்சும் கருமங்களைப் பண்ணித் தொலையுங்கப்பா...!

சும்மா.. யுரியூப்பும்.. கட்டூணுமே கதி என்று கிடக்காம. தெவிட்டிப் போச்சுது.. ஏதாச்சும் புதிசா செய்யுங்க.. மக்களுக்கும் புதிசா...??! :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டாடலாம்.... கொண்டாடலாம். :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டாடலாமே :unsure:

கலோ குருவே கவ் ஆர் யூ... :D (உங்களை பிரிந்து இருக்கும் ஒவ்வொரு விநாடிகளும் மரணபடுக்கையில் படுத்த விநாடிகள் கொஞ்சம் ஓவரா போயிட்டனோ :lol: )...இந்த டயலக்கை நாளைக்கு ஒரு பிகருக்கு சொல்லி பார்போம் என்ன...அட யாழ்களம் 10 அகவையை கொண்டாட போகுதா...(பாவம் யாழ்களம்)...எத்தனை பேரை சந்தித்து இருக்கும்..சரி மாட்டருக்கு வருவோம்... :D

என்ன புத்தகம் அடிக்க போகிறார்களோ..(செம பகிடி அது)...பேசாம குருவே நீங்க உங்க பள்ளி புத்தகத்தை எடுத்து படிக்கிறது உத்தமம் சொல்லிட்டேன்.. :D (பிறகு என்னை ஏசுறதில்லை) ..அட அப்ப குருவும் கோமணமா கட்டுறனீங்க சொல்லவே இல்லை..(இது என்ன கொடுமை) போங்கோ குருவே பல கோடி மக்களின் முன் கோமணத்தை பறி கொடுத்தா தான்..(சிம்பத்தி வோர்ட்ஸ் கிடைக்கும் :D )...அதை வைத்து அரசியலில நிலைத்து நிற்கலாம்..(சோ இந்த முறையும் உங்க கோமணத்தை பறி கொடுக்கிறது தான் நல்லது என்று நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறியள்).. :D .

குருவே கோமணம் போனா இன்னொரு கோமணம் வாங்கி கொள்ளளாம் அதை பற்றி எல்லாம் பீல் பண்ணாதையுங்கோ என்ன..(அரசியலில இது எல்லாம் சகஜம் குருவே)..இப்ப பாருங்கோ அரசியலில நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை அதை மாதிரி இதையும் டேக் கீட் ஈசியா எடுங்கோ என்ன... :D

ஆனாலும் நீங்க யாழ்கள மெம்பர்ஸை இப்பை நக்கல் படுத்தி இருக்க கூடாது என்ன..(பின்னே யாழ்கள அறிவாளிகள்,புத்திஜீவிகள் கவனம் எடுக்கும் படி சொன்னா நன்னாவா இருக்கு)...மோகண் அண்ணா எனி எங்கே போய் அறிவாளிகளையும்,புத்திஜீவிகள??யும் தேடுறது.(ரொம்ப கொடுமை பாருங்கோ).. :( .

தடங்கலுக்கு நாங்கள் வருந்தவில்லை நீங்க கவனமா போய் சோதனையை செய்து போட்டு வாங்கோ என்ன..(பெஸ்ட் ஒவ் லக்)...அக்சுவலா குதிரை ஓடாம கார் ஓட கேட்டு இருந்தா நான் வந்திருப்பேன் பட் நேக்கு குதிரை ஓட தெரியாது வெறி சாறி குருவே... :D

ம்ம்...நேக்கும் நாளைக்கு மொண்டசூரி ஸ்டார்ட் பண்ணுவதால்..நேரம் கிடைக்கும் போது கட்டாயம் உங்களோட ஜோயின் பண்ணி கொள்கிறேன் என்ன ஒகேயா..(அப்ப செலிபிரேட் பண்ணிட்டா போச்சு)...இப்ப நெடுக்ஸ் தாத்தா கூட புதிசா என்னவும் பண்ணட்டாம் என்று சொல்லுறார் அப்ப வித்தியாசமா கொண்டாடுவோம் யாழின் 10 அகவையை...(கொஞ்ச ஜடியாக்களை இப்ப தாரேன் மிச்சம் பிறகு என்ன)..

1)பத்து பேருக்கு இலவச திருமணம் (குருவின் தலைமையில்)

2)பத்து பேருக்கு வேட்டி,சால்வை கொடுத்தல் (நெடுக்ஸ் தாத்தாவின் தலைமையில்)

3)பத்து பேருக்கு சேலை கொடுத்தல் (கறுப்பி அக்காவின் தலைமையில்)

4)பத்து பேருக்கு கோமணம் கொடுத்தல் (கு.சா தாத்தாவின் தலைமையில்)

5) சிறிலங்கா 60 வருசமா செய்த கொடுமையை யாழில இருக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு 10 பேருக்கு சொல்லுங்கோ..(சொல்லாம சொல்லிட்டேன் என்று பொய் சொல்லுறதில்லை சொல்லிட்டேன்)

6)பத்து பேருக்கு தொலைகாச்சி பெட்டி கொடுத்தல் (சுவி பெரியப்பாவின் தலைமையில்)

7)ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பத்து பேரை யாழிற்கு புதிசா அறிமுகபடுத்துங்கோ...

8)அடுத்து உங்களின்ட என்வைரமன்டை கிளீன் பண்ணுங்கோ,ஒழுங்கா குளியுங்கோ...(இது ரொம்ப இம்போட்டன்ட்)

9)பத்து பேருக்கு அன்னதானம் வழங்கல்..(சுண்டல் அண்ணா தலைமையில் ஆனா கடலை தான் வழங்குவார்)

10)என்னை மாதிரி புலம்புற ஆட்களிற்கு தமிழச்சி அக்கா டீரிட்மன் பண்ணுவா...(ரொம்ப கொடுமை)

இப்படி வித்தியாசமான முறையில கொண்டாடுவோம் குருவே...(இன்னும் பல ஜடியாக்கள் இருக்கிறது அப்பப்ப வந்து சொல்லுறேன் என்ன)..நீங்க எக்சாமில பிட் அடிக்காம வடிவா செய்யுங்கோ என்ன..

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சோங்-(இந்தா பாட்டை கேட்டு கொண்டு வடிவா படியுங்கோ குருவே சரியா)...நேக்கும் உந்த பாட்டு நன்னா பிடித்து போச்சு அது தான்... :unsure:

யாமிருக்க பயமேன் ஜம்மு பேபி இருக்க பயமேன்..(இது எப்படி இருக்கு)...!!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வணக்கம் :lol: இப்ப நான் வரும் போது 6க்கு 6 என்று இருந்த நிலைமையை எனது பொன்னான வாக்கை குத்தியதன் மூலம் கொண்டாடலாம் என்ற கருத்து 1 வாக்கு வித்தியாசத்தில் முன்னனியில் நிக்குது.என்ன பாக்கிறயள் ஒரு வாக்கு என்ன பெரிய வித்தியாசம் என்று.அது தானப்பா சனனாயகம் :unsure: அது சரி வாக்கு குத்தியவர்கள் கருத்து ஒன்றும் எழுதவில்லை போலஇருக்கு.மாப்பு இந்தக்கல்லெறிகளுக்ககெல்லாம

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஆம் என வாக்களித்துள்ளேன். கொண்டாடலாமே மிகவும் எளிமையாக.

முதல்ல முகப்பை மாத்துங்க. ஒவ்வொரு முறையும் யாராவது சொன்னாத்தான் மாத்துவினம் போல. பத்தாவது ஆண்டு என்றபடியாலை இப்பவே முகப்பை மாற்றலாம் என நினைக்கிறேன். சிறிலங்கா சுதந்திரதினத்திற்கு அவசரமாகச் செய்தது போலச் செய்யமால், நன்றாக ஏதாவது செய்து போடுங்க.

யம்மு, பத்துப் பேருக்குக் காதல் அறிமுகம் செய்யிறதை விட்டிட்டீங்களே. காதலர் தினத்திற்குப் பிறகு கூடக் காதலன், காதலியைப் பெறமுடியாதவர்கள் யாராவது இருப்பார்கள். அப்பிடியானவர்களுக்கு உதவி செய்வது பெரிய புண்ணியம் அல்லவா? காதல் வளர்ப்புச் சங்கம் என்றுமே தூங்கக் கூடாது. :lol::lol::lol:

முதல்ல முகப்பை மாத்துங்க. ஒவ்வொரு முறையும் யாராவது சொன்னாத்தான் மாத்துவினம் போல. பத்தாவது ஆண்டு என்றபடியாலை இப்பவே முகப்பை மாற்றலாம் என நினைக்கிறேன். சிறிலங்கா சுதந்திரதினத்திற்கு அவசரமாகச் செய்தது போலச் செய்யமால், நன்றாக ஏதாவது செய்து போடுங்க.

யம்மு, பத்துப் பேருக்குக் காதல் அறிமுகம் செய்யிறதை விட்டிட்டீங்களே. காதலர் தினத்திற்குப் பிறகு கூடக் காதலன், காதலியைப் பெறமுடியாதவர்கள் யாராவது இருப்பார்கள். அப்பிடியானவர்களுக்கு உதவி செய்வது பெரிய புண்ணியம் அல்லவா? காதல் வளர்ப்புச் சங்கம் என்றுமே தூங்கக் கூடாது.

முகப்பை மாற்றுறது நன்னா ஜடியாவா இருக்கு..(எப்படி தமிழச்சி அக்கா இப்படி எல்லாம் உங்களாள முடியுது :lol: )....அட பத்து பேருக்கு காதல் அறிமுகம் நன்னா இருக்கே..(இதற்கு யார் தலைமை ஏற்கிறது :lol: )...அட அப்படி பார்க்க போனா நேக்கு கூட தான் "காதலி" கிடைக்கவில்லை என்ட குருவிற்கு கூட கிடைக்கவில்லை :) சோ முதலில எங்கள் இரண்டு பேருக்கு நல்ல காதலியா செலக்ட் பண்ணி தாங்கோ.. :lol: (மிச்ச எட்டு பேரை நான் பரிந்துரை செய்யிறேன் யாரென்று :lol: )...ம்ம் காதல் வளர்ப்பு சங்கம் தூங்க கூடாது தான் ஆகவே எனக்கு நீங்க நல்லதொரு காதலியை பாருங்கோவேன்.. :lol: (இது எப்படி இருக்கு)...குருவிற்கு பிறகு பார்க்கலாம்..(அவர் சோதனைக்கு படிகட்டும் :D )..குருவே என்னை மன்னித்து கொள்ளுங்கள்.. :)

அப்ப நான் வரட்டா!!

யம்மு உங்களுக்கு எத்தினை பேர்தான் காதலி செலக்ட் பண்ணுறது? சிறந்த காதல் இளவரசனுக்கே இந்தக் கதியென்றால், எங்கடை கதி? நினைச்சுப் பார்க்கவே முடியேல்லை. :lol:

இதுகூடப் பரவாயில்லை. உங்கட குருவிண்ட நிலைமைதான் மோசம் போல இருக்கு. :lol::D எனக்கு பீலிங் பீலிங்கா வருது. :wub::lol: முதல்ல உங்கள் இரண்டு பேருக்கும் காதலிகளைக் கண்டுபிடிப்பதுதான் என்ர இலட்சியம். சரி, உங்களுக்கு எப்பிடிப்பட்ட காதலி வேணுமெண்டு முதல்ல சொல்லுங்க. :rolleyes:

:rolleyes: ஜம்முவோட பிகரு சும்மா ஜம்முன்னு இருக்கோணும்...பார்த்தா சும்மா அதிரோணும்...

பழகினா சும்மா குளிரோணும்..(ஜம்மு மாம்ஸ்ட அக்கறை ஓகேவா..) :wub:

அடியேன் முன்பு புதுசு புதுசாக பல கருத்தாடல்கள் யாழில் துவங்கி யாழ் கள கல்விமான்கள், பகுத்தறிவாளர்கள், தேசியவாதிகளிடமிருந்து கல்லெறிகளும், துரோகி என்ற பட்டங்களும் வாங்கி நன்றாக அனுபவப்பட்டு விட்டதால் இந்தத்தடவையும் ஏதாவது வித்தியாசமாக செய்யத்தொடங்கி கடைசியில் பலகோடி உலகத்தமிழ் மக்கள் முன்னிலையில் எனது கோவணத்தை பறிகொடுக்கும் முட்டாள்தனமான வேலையை செய்யாமல் கொஞ்சம் கவனமாக இருக்கலாம் என்று பார்க்கின்றேன்.

உங்கள் கோவணத்தை பறிக்கும் விச பரீச்சையில் எவரும் ஈடுபட மாட்டார்கள் என நம்புறன்.

இதுக்கும் ஒரு இரகசிய குழு அமைத்து (protected forum) சரியான முறையில் திட்டமிட்டு சரியான முறையில் யாழ்களத்தின் 10 வருட நிறைவை கொண்டாட வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொண்டாடலாம் :rolleyes:

யம்மு உங்களுக்கு எத்தினை பேர்தான் காதலி செலக்ட் பண்ணுறது? சிறந்த காதல் இளவரசனுக்கே இந்தக் கதியென்றால், எங்கடை கதி? நினைச்சுப் பார்க்கவே முடியேல்லை.

இதுகூடப் பரவாயில்லை. உங்கட குருவிண்ட நிலைமைதான் மோசம் போல இருக்கு. எனக்கு பீலிங் பீலிங்கா வருது. முதல்ல உங்கள் இரண்டு பேருக்கும் காதலிகளைக் கண்டுபிடிப்பதுதான் என்ர இலட்சியம். சரி, உங்களுக்கு எப்பிடிப்பட்ட காதலி வேணுமெண்டு முதல்ல சொல்லுங்க.

அட ஒருவாவை செலக்ட் பண்ணிணாலே காணுமப்பா :( ...ம்ம் காதல் இளவரசன்களுக்கு எல்லாம் இப்ப இது தான் கதி பாருங்கோ.. :lol: (அட நீங்களும் அப்படியா நினைக்கவே பாவமா இருக்கு சரி உங்களுக்கு நான் தேடுறேன் பட் எனக்கு நீங்க தேட வேண்டும் சொல்லிட்டன் :wub: )...

ம்ம்ம்...குருவை நினைக்க நினைக்க எனக்கு அழுகை அழுகையா வருது பட் அழவில்லை ஏனேன்றா எனக்கு ஒன்று கிடைத்தா குரு ரொம்பவே சந்தோசபடுவார் பாருங்கோ.. :lol: (என்ன குருவே நான் சொல்லுறது சரி தானே :D )...அட...அட என்ன ஒரு இலட்சியம் தமிழச்சி அக்கா என்றா தமிழச்சி அக்கா தான்..(ரொம்ப தாங்ஸ் மா :lol: )..

அக்சுவலா நேக்கு வந்து காதலி நேக்கு ஒரு பேபியா இருந்தா காணும் நான் அவாவிற்கு பேபியாக இருக்க வேண்டும் இது காணும்... :lol: (என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்கிறியள் அப்படி தான் பாருங்கோ :lol: )...

இப்ப நான் ஒரு பாட்டு பாடுறேன் அதற்கு எசை பாட்டு யார் பாடீனம் என்று பார்போமே.... :rolleyes:

"பூங்காற்று திரும்புமா என் பாராட்ட விரும்புமா

தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட

எனக்கொரு தாய் மடி கெடைக்குமா" :lol:

அப்ப நான் வரட்டா!!

:D ஜம்முவோட பிகரு சும்மா ஜம்முன்னு இருக்கோணும்...பார்த்தா சும்மா அதிரோணும்...

பழகினா சும்மா குளிரோணும்..(ஜம்மு மாம்ஸ்ட அக்கறை ஓகேவா..) :D

அதே...அதே...அதே...(மாம்ஸ் :wub: )...எப்படி மாமா இப்படி எல்லாம், எங்கே உங்கன்ட காலை காட்டுங்கோ மாமா.. :lol: (மாமா என் மேல வைத்திருக்கிற அக்கறைக்கு நான் என்ன தான் செய்ய போறனோ தெரியலையே :( ) மொத்தத்தில ஜம்முன்ட பிகர் சிங்கிளா சிங்கமாட்டம் வர வேண்டும் என்று சொல்லுங்கோ என்ன மாமோய்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

கொண்டாடலாமே.

அத்தோடு யாழின் முகவடிவமைப்பை மாற்றலாமே. நிர்வாகத்தினரையும் மாற்றலாமே. அதாவது ஒவ்வொரு பகுதிக்கும் என மட்டுறுத்தினரை நியமிக்கலாமே.

நன்று ...! கொண்டாடுவோம் ..! :wub:

  • தொடங்கியவர்

நிறைய்ய ஐடியாக்கள் சொல்லி இருக்கிறீங்கள்.

ஆளுக்கு ஒரு தலைப்பில ஒரு கருத்தாடல் துவங்கினாவே காணும். இப்ப வசி பழைய யாழ் இணையம் எண்ட தலைப்பில ஒரு கருத்தாடல் துவங்கின மாதிரி..

மற்றது... யார் யாருக்கு யாழ் இணையத்தில மட்டறுத்துனராக வரவிருப்பம் எண்டு வெக்கப்படாமல் சொன்னால் உங்கள் ஆசையை பூர்த்தி செய்துவைக்க ஒரு பகிரங்க விவாதம் வைக்கலாம். மேலும் மட்டறுத்துனர் பதவிக்கு யாழில ஒரு எலக்ஷனும் வைக்கலாம்.

இதவிட மோகன் அண்ணாவிடம் இருந்து யாராவது நிருவாகி பதவியை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டால் இதுபற்றியும் ஒரு பகிரங்கவிவாதம் செய்யலாம்.

யார் யாருக்கு யாழில என்னென்ன பதவிகள் வேணுமெண்டு ஒருக்கால் சொல்லுங்கோ.

மற்றது... யார் யாருக்கு யாழ் இணையத்தில மட்டறுத்துனராக வரவிருப்பம் எண்டு வெக்கப்படாமல் சொன்னால் உங்கள் ஆசையை பூர்த்தி செய்துவைக்க ஒரு பகிரங்க விவாதம் வைக்கலாம். மேலும் மட்டறுத்துனர் பதவிக்கு யாழில ஒரு எலக்ஷனும் வைக்கலாம்.

இதவிட மோகன் அண்ணாவிடம் இருந்து யாராவது நிருவாகி பதவியை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டால் இதுபற்றியும் ஒரு பகிரங்கவிவாதம் செய்யலாம்.

யார் யாருக்கு யாழில என்னென்ன பதவிகள் வேணுமெண்டு ஒருக்கால் சொல்லுங்கோ.

அட..குருவே மட்டுஸிற்கே ஆப்பா...(பாவம் வேண்டாம் விட்டிடுங்கோ :D )...மட்டுஸ் பதவிக்கு எலக்சன் வைத்தா நன்னா கள்ள வோர்ட்ஸ் விழும் பாருங்கோ.. :( (அது சரி குருவிற்கு அந்த ஆசை இருக்கோ அது தான் மட்டுஸா வர வேண்டும் என்று அப்ப வைத்திட்ட போச்சு <_< )...ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியா மோகண் அண்ணாவிற்கே ஆப்பா... :D (நாம எப்பவும் மோகண் அண்ணவை மீறி ஒன்றுக்கும் வரமாட்டேன் :( )..மிச்ச மட்டுஸை வேண்டும் என்றா மீறுவேன் குருவே வெறி சாறி வோ டாட். :D

அக்சுவலா எனக்கு ஒரு பதவியும் வேண்டாம் :( ...பேபியா இருக்கிறது தனிசுகம் பாருங்கோ தாங்ஸ் குருவே... :D (பதவி இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் ஆனா என்ன ஆனா எனக்கு அங்கால தெரியாது :) )...

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

ஹிஹி.. எனக்கு மட்டறுத்துனர் பதவி ஒன்றும் தேவை இல்லை. என்னை ஏற்கனவே பலர் உதவி மட்டறுத்துனர் என்று கூறி வருகின்றார்கள்.

எல்லாரும் மட்டறுத்துனரா வந்தால் பிறகு எப்பிடி மட்டறுத்தல் செய்யுறது? எழுதுறதுக்கு யாராவது வேணுமே? இல்லாட்டி நாங்கள் எழுதினத நாங்களே வெட்டலாமா?

அப்பிடி எண்டால்...

கருத்துக்களில் மாற்றம் பகுதியில் பிறகு இப்பிடி போடலாம்..

உறவோசை பகுதியில் நேற்று என்னால் ஆரம்பிக்கப்பட்ட கருத்தாடல் ஒன்று இன்று நிருவாகம் பகுதியிற்கு நகர்த்தப்பட்டுள்ளது. தவறுக்கு வருந்துகின்றேன்:

இது எப்பிடி இருக்கிது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.