Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடலாம் அரசு உத்தரவு

Featured Replies

சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடலாம் அரசு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2, 2008

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருச்சிற்றம்பல மேடை உள்ளது. இந்த மேடையில் இருந்தபடி பக்தர்கள் தேவராம், திருமறை ஆகியவற்றைப் பாடுவார்கள். ஆனால் இதற்கு கோவில் தீக்ஷிதர்கள் தடை போட்டு விட்டனர்.

சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் ஓத வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை எதி்ர்த்து போராட்டங்கள் நடந்ததையடுத்து தமிழில் பாடலாம் ஆனால், மேடையில் இருந்து பாடக் கூடாது, கீழே உள் மண்டபத்தில் இருந்தபடிதான் பாட வேண்டும் என்றனர்.

இந் நிலையில் திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி உத்தரவிட்டார்.

இதையடுத்து தீக்ஷிதர்கள் சார்பில் அரசு உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவு எடுத்து அறிவிக்கலாம் என தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்து அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, கால பூஜை முடிந்த பின்னர், அடுத்த பூஜைக்கு இடையே உள்ள நேரத்தில் திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி 30 நிமிடங்களுக்கு தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம். யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் இவற்றைப் பாடலாம் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடப் போவது குறித்து முன்கூட்டியே கோவில் நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவு தெரிவிக்கிறது.

இதன் மூலம் இதுவரை தேவாரம், திருமறை ஆகிய தமிழ்ப் பாடல்களைப் பாட முடியாமல் தவித்த வந்த பக்தர்களுக்கு பெரும் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தீக்ஷிதர்கள் அடாவடியாக நடந்து கொள்வதாக கூறி பல்வேறு சிவாச்சாரியார்கள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்டவை பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன என்பது நினைவிருக்கலாம்.

நன்றி தற்ஸ்தமிழ்

  • தொடங்கியவர்

தீக்ஷிதர்கள் அடாவடி சிதம்பரத்தில் பரபரப்பு!

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2, 2008

சிதம்பரம்: தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பலமேடையில் இருந்து தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடியவர்களை தடுத்த தீக்ஷிதர்களை போலீஸார் குண்டுக் கட்டாக தூக்கி வந்து வெளியே விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருச்சிற்றம்பல மேடை உள்ளது. இந்த மேடையில் இருந்தபடி பக்தர்கள் தேவராம், திருமறை ஆகியவற்றைப் பாடுவார்கள். ஆனால் இதற்கு கோவில் தீக்சிதர்கள் தடை போட்டனர்.

இதையடுத்து உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுத்து அறிவிக்கலாம் என தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருமறை பாடலாம் என அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்ந்து போராடி வரும் சிதம்பரத்தைச் சேர்ந்த ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட பலரும் கோவிலுக்கு திரண்டு வந்தனர்.

கோவிலில் மாவட்ட எஸ்.பி. பிரதீப் குமார் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆறுமுகச்சாமி தலைமையில் உள்ளே சென்ற ஓதுவார்கள், திருச்சிற்றம்பல மேடையில் நின்றபடி தேவாரம் பாட முயன்றனர். ஆனால் அவர்களை தீக்சிதர்கள் கும்பலாக வந்து தடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து எஸ்.பி. பிரதீப் குமார் உள்ளிட்ட காவல்துறையினர் உள்ளே நுழைந்தனர். அவர்களையும் தீக்சிதர்கள் தடுத்தனர். மேல் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் போக வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து மேல் சட்டையைக் கழற்றி விட்டு உள்ளே புகுந்த போலீஸார், அங்கு தகராறு செய்த தீக்சிதர்களை குண்டுக் கட்டாக தூக்கி வந்து கோவிலுக்கு வெளியே விட்டனர்.

இதைத் தொடர்ந்து ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் மகிழ்ச்சியும், பக்திப் பரவசமுமாக தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடி மகிழ்ந்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

நன்றி தற்ஸ்தமிழ்

நல்ல தீர்ப்பு. ஒரு மொழியில் இறைவணக்கம் செய்ய முடியாது என்று சொல்ல தீட்சிதர்களுக்கு என்ன, இறைவனுக்கு கூட உரிமையில்லை.

வேதங்களில் சொல்லப்பட்ட விதிகளுக்கு முரணாக செயற்படும் இதுபோன்ற தீட்சிதர்களும் மதவாதிகளும் இந்து மதத்தின் சாபக்கேடு.

அப்ப அந்த கோயில்ல இவ்வளவு நாளும் என்ன செய்தவை?

ம்ம்ம்ம்ம்...அது சரி வசபண்ணா "தேவாரம்" என்றா என்ன :unsure: ...சினிமா பாட்டை சொல்லுறியளோ... :lol: (ஒரு மணி அடித்தா கண்ணே சிதம்பர சிவபெருமான் ஞாபகம் தூங்க முன்பும் தூங்க பின்பும் உன் ஞாபகமே... :D )எப்படின்னா இருந்தது தேவார பதிகம்... :D (சம்பந்தர் மாதிரி நானும் அப்ப ஞானகுழந்தையா வசபண்ணா :D )...பட் என்ன என்ட வாயில இருந்து மில்க் வரவில்லை அது தான் மாட்டரே... :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"தேவாரத்தை கோயிலில தான் பாட வேண்டும் என்று இல்லை மனதிற்குள்ளையும் பாடலாம் அது தான் தேவாரம்" :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தீர்ப்பு. அனைத்தும் தமிழ் வழிபாடாக மாறவேண்டும். அதற்கான முதற்படியாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் தான் உப்படியான பிரச்சினை. பள்ளிக்கூடத்தில் தமிழ் என்றால் பிரச்சினை கொடுப்பார்கள் கோவிலில் தமிழ் என்றால் பிரச்சினை கொடுப்பார்கள் தடையாக உள்ள இரண்டு பேரை பிடித்து மின் கம்பத்தில் தூக்கி விட்டால் மற்றவர்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள்.மற்ற மொழி ஆட்கள் தாய் மொழியை எவ்வளவு நேசிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தீர்ப்பு

நல்ல தீர்ப்பு

நாட்டாமை தீர்பை மாற்றி சொல்லுங்கோ :lol: ...(நேக்கு பிடிகல தீர்ப்பு :lol: )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டாண்மை ஒரு முறை தீர்ப்பு சொன்னால் சொன்னது தான் மாற்றி சொல்வதில்லை.

எங்கே அந்த செம்பு.

நாட்டாண்மை ஒரு முறை தீர்ப்பு சொன்னால் சொன்னது தான் மாற்றி சொல்வதில்லை.

எங்கே அந்த செம்பு.

நோ...நோ எனக்காக மாற்றி சொல்ல வேண்டும் தீர்ப்பை சொல்லி போட்டேன் :lol: அது சரி நாட்டாமை தீர்ப்பை மரதிற்கு கீழே இருந்து தானே வழங்கினவர்.. :( (பின்னால ஒருத்தர் குடை பிடித்தவர் தானே :wub: அது தானே பார்தேன் மரதிற்கு கீழே இருந்து கொண்டு குடை பிடிக்க பின்னால ஒருத்தர் என்றா என்னால முடியல ரொம்ப கொடுமை :lol: )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஐமுனா:

நோ...நோ எனக்காக மாற்றி சொல்ல வேண்டும் தீர்ப்பை சொல்லி போட்டேன் அது சரி நாட்டாமை தீர்ப்பை மரதிற்கு கீழே இருந்து தானே வழங்கினவர்.. (பின்னால ஒருத்தர் குடை பிடித்தவர் தானே அது தானே பார்தேன் மரதிற்கு கீழே இருந்து கொண்டு குடை பிடிக்க பின்னால ஒருத்தர் என்றா என்னால முடியல ரொம்ப கொடுமை )...

அவர் ஏன் குடை பிடிப்பது என்று தெரியுமா. நாட்டாண்மையின் மேல் காகம் எச்சம் போட்டு அசிங்கப் படுத்தாமல் இருக்க ஒரு முன்னேற்பாடுதான்.

நல்ல தீர்ப்பு. ஒரு மொழியில் இறைவணக்கம் செய்ய முடியாது என்று சொல்ல தீட்சிதர்களுக்கு என்ன, இறைவனுக்கு கூட உரிமையில்லை.

வேதங்களில் சொல்லப்பட்ட விதிகளுக்கு முரணாக செயற்படும் இதுபோன்ற தீட்சிதர்களும் மதவாதிகளும் இந்து மதத்தின் சாபக்கேடு.

ம்.. மதம் என்றாலே சாபக்கேடுதான். அதில இந்து மதம் என்றால் என்ன, அந்த மதம் என்றால் என்ன. :rolleyes::wub:

(Garbage in, Garbage out அவ்வளவுதான்)

(Garbage in, Garbage out அவ்வளவுதான்)

Garbage In Garbage Out (GIGO). In computer science, yes! (Garbage data in garbage data out)

But not in some other science. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்போது garbage in electricity out

டென்சன் ஆகாதீர் ஈழா!!! :wub::lol: :lol:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் உண்ணாவிரதம்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2008

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவராம் பாடச் சென்றபோது கைது செய்யப்பட்ட ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட 33 சிவனடியார்கள் கடலூர் மத்திய சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்தக் கோவில் தீக்சிதர்கள் எனப்படும் கோவில் பரம்பரை அர்ச்சகர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்குள்ள கனகசபை எனப்படும் திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருமறை ஆகியவை முன்பு பாடப்பட்டு வந்தது. ஆனால் தீக்சிதர்கள் இதற்கு கடந்த சில ஆண்டுகளாக தடை போட்டு வந்தனர்.

அவர்களை மீறி யாராவது பாட முயன்றால் அடி, உதை கிடைக்கும். திருச்சிற்றம்பல மேடை என்றில்லாமல் கோவிலுக்குள் எங்குமே தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாட முடியாத நிலை ஏற்பட்டது.

இதை எதிர்த்து சிவாச்சாரியார்கள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்டோர் போராடி வந்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுத்து அறிவிக்கலாம் என சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி அரை மணி நேரத்திற்கு தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என்று ஏற்கனவே அறிவித்த தனது உத்தரவை இந்து அறநிலையத்துறை மீண்டும் உறுதி செய்து அறிவித்தது.

இதையடுத்து நேற்று முன்தினம், ஆறுமுகச்சாமி ஓதுவார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் தேவாரம் பாடச் சென்றனர். ஆனால் அவர்களை பாட அனுமதிக்காமல் தீக்சிதர்கள் தாக்குதலில் இறங்கினர். இதில் ஆறுமுகச்சாமி தாக்கப்பட்டார்.

இதையடுத்து போலீஸார் உள்ளே புகுந்தனர். அவர்களையும் தீக்சிதர்கள் தாக்கினர். கடலூர் மாவட்ட எஸ்.பிக்கும் அடி விழுந்தது. இதையடுத்து தாக்குதல் நடத்திய தீக்சிதர்களை போலீஸார் குண்டுக் கட்டாக தூக்கி வந்து வெளியே போட்டனர்.

மேலும் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 12 தீக்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 11 பேர் வளைத்துப் பிடித்துக் கைது செய்யப்பட்டனர். ஒருவர் மட்டும் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் அன்று மாலை ஆறுமுகச்சாமி தலைமையில் மீண்டும் சிவனடியார்கள் தேவாரம் பாட வந்தனர். ஆனால் அவர்களை அனுமதிக்க போலீஸார் மறுத்தனர். அதையும் மீறி அவர்கள் செல்ல முயன்றபோது ஆறுமுகச்சாமி உள்ளிட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 2 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்களை புதுக்கோட்டையில் உள்ள சிறார் பள்ளிக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மற்ற 33 பேரையும் கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு போய் அடைத்தனர்.

இன்று காலை முதல் 33 பேரும் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் சிறையில் பரபரப்பு நிலவுகிறது.

சிதம்பரத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவுவதால், நடராஜர் கோவில் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2008/03...ore-prison.html

சைவர்களின் பிரதான தலமாக கருதப்படுவது சிதம்பரம். ஆனால் அங்கு தீட்சிதர்களின் அட்டகாசம். இப்படி இருந்தால் ஒரு காலத்தில் சிதம்பரத்தை பீரங்கி கொண்டு இடிக்கத்தான் வேண்டும் ..!

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஆக்கிரமித்தார்கள். நீங்கள் இருக்கின்றதையே அழிக்க வேண்டும் என்கின்றீர்கள். இந்த நிலையை எங்கே போய் முட்டுவது

  • கருத்துக்கள உறவுகள்

தீட்சிதர்கள் திடீர் பல்டி-தேவாரம் பாடியவர்களுக்கு மாலை மரியாதை!

புதன்கிழமை, மார்ச் 5, 2008

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேவாரம், திருவாசகம் பாட வந்த சிவனடியார்களுக்கு கோவில் தீட்சிதர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தமிழில் பாட வருபவர்களைத் தடுத்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்ததையடுத்து தீட்சிதர்கள் இந்த பல்டி அடித்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேவராம், திருவாசகம் மற்றும் பிற திருமறைகள் பாடப்பட்டன. ஆனால் தீட்சிதர்கள் போட்ட தடையால் அன்று முதல் இன்று வரை தேவாரம் பாட வழியில்லாமல் இருந்து வந்தது.

சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் ஓத வேண்டும் என இவர்கள் கூறி வந்தனர்.

இந் நிலையில், தேவராம் மற்றும் பிற திருமறைகளைப் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து ஆறுமுகச்சாமி ஓதுவார் தலைமையில் சிவனடியார்கள் தேவாரம் பாடச் சென்றபோது அவர்களை தீட்சிதர்கள் தடுத்து தாக்கினர். அமைதி ஏற்படுத்த முயன்ற போலீஸாரையும் தீட்சிதர்கள் தாக்கினர்.

இதையடுத்து அதிரடியாக உள்ளே புகுந்த போலீஸார் தீட்சிதர்களைக் குண்டுக் கட்டாக தூக்கி வந்து வெளியே போட்டனர். மேலும் போலீஸாரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி 11 தீட்சிதர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந் நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மீண்டும் தேவாரம் பாட ஆறுமுகச்சாமி தலைமையில் சென்ற சிவனடியார்கள் தடுத்துக் கைது செய்யப்பட்டனர்.

மக்கள் கலை இலக்கிய கழகம்:

ஓதுவார்களுக்கு ஆதரவாக மனித உரிமை பாதுகாப்பு மையம், பா.ம.க. விடுதலை சிறுத்தைகள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகியவை களமிறங்கின.

இன்று தமிழில் தேவாரம், திருவாசகம் பாட கோவிலுக்குள் செல்லப் போவதாக மக்கள் கலை இலக்கியக் கழகம் அறிவித்தது. இதனால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெரும் பதற்றம் நிலவியது.

சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சிதம்பரத்துக்கு வந்து கொண்டுள்ள நிலையில் நடராஜர் கோவிலை சுற்றியுள்ள 4 வீதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். கோவிலுக்குள்ளும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

'பல்டி'- மாலையிட்டு வரவேற்ற தீட்சிதர்கள்:

இந்த நிலையில் இன்று சிவனடியார்கள் சிலர் குழுவாக தேவாரம் பாட நடராஜர் கோவிலுக்குச் சென்றனர்.

அவர்களை தீட்சிதர்கள் மாலை அணிவித்து மரியாதையுடன் திருச்சிற்றம்பலத்திற்குக் கூட்டிச்சென்றனர். இதனால் மகிழ்ந்த சிவனடியார்கள், தேவராம் மற்றும் திருவாசகத்தை பக்திப் பிரவாகத்துடன் பாடி வணங்கினர்.

விடுவிக்க முதல்வர் உத்தரவு:

இதற்கிடையே, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவனடியார்கள் நேற்று காலை முதல் உண்ணாவிதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதையடுத்து சிவனடியார்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2008/03...ple-police.html

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.