Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லிங்காஷ்டகம்

Featured Replies

  • தொடங்கியவர்

Sivalingam: The Sivalingam is the symbolic of the Supreme Self. It is verily Maheswara Himself, the Highest Self and the Lord of the universe. In this aspect it has three parts. The lower part represents Brahma. The middle part, which is octagonal in shape, represents Vishnu. The upper part, which is cylindrical in shape, represents Rudra and is also called Pujabhaga.

Sivalingam literally means the body of Siva. Next to the symbol of AUM, it is perhaps the most potent, powerful and popular symbol in entire Hinduism. In almost all the Siva temples, worship is generally made to Sivalingas only. A Sivalingam is usually a round or cylindrical and protruding object. The cylindrical part is held firmly by a circular base.

Legend of Shiva Linga: http://www.mahashivratri.org/legend-of-shiva-linga.html

  • Replies 67
  • Views 26.5k
  • Created
  • Last Reply

sivalingam.jpg

சிவ சிவா

இந்தப் படத்தில் லிங்கத்தின் அமைப்பு வெகுவாக தெரிகிறது. கருமம்.. கருமம்... :lol:

இப்படி நீங்களாகவே சொல்லிக் கொள்கிறீர்களே தவிர.. உட்பொருளை அறிந்த அறிவு வெளிப்படவில்லையே...! நீங்கள் பேசிக் கொள்வதெல்லாம்.. அறியாமைகளின் பிரதிபலிப்புக்கள். அவைதான் இங்கு பகுத்தறிவாகக் காட்டப்படுகின்றன. அவ்வளவும் தான். :lol:

விக்கிபீடியா என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால் உங்கள் பகுத்தறிவு அம்பேல் தான் போலிருக்கே? :lol::D

விக்கிப்பீடியா ஒரு திறவுமென்பொருள். யார் வேண்டுமானாலும் தங்களுக்கு வாகாக அதில் கருத்துக்களை திரித்துக் கொள்ளலாம். *** :lol:

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

சரி, இப்பொழுது சீரியசான ஒரு கேள்வி!

ஆண்குறியை குறிக்கின்ற லிங்கத்தை பெண்கள் தொட்டு வணங்குவதைப் பற்றி 21ஆம் நூற்றாண்டில் வாழும் யாழ் கள உறவுகள் என்ன நினைக்கிறார்கள்?

21ம் நூற்றாண்டில் வாழும் ஆண்களுக்கு ஆண்குறியே இல்லாது இருக்குமாக இருந்தால் எப்படி இருக்கும்? இதுபற்றி யாழ் கள உறவுகள் என்ன நினைக்கிறார்கள்?

பெண்களின் முளையை தாய்மையின் அடையாளமாக போற்றி வணங்கும்போது - தாய்மையின் அடையாளமாக பார்க்கும்போது, ஆண்களின் ஆண்குறியை தந்தையின் அடையாளமாக போற்றி வணங்குவதில் என்ன தவறு இருக்கின்றது?

ஒரு பெண்ணுக்கு அவளது அப்பா, தாத்தா, சகோதரம் எல்லாம் இல்லையா? ஒரு தந்தையின் அடையாளத்தை ஒரு பெண் வணங்குவது தவறா? வெறும் உடலுறவை மட்டும் வைத்து வக்கிர பார்வையுயுடன் பார்த்தால் எல்லாமே கோமாளித்தனமாகத் தான் தெரியும். அதுதான் நாங்கள் பார்த்தமே... வெறும் அறிவுபூர்வமான் விஞ்ஞான உலகத்தில அப்பன் ஒருத்தன் மகளோட உடலுறவு கொண்டு ஏழு பிள்ளைகள பெத்துப் போட்டது. மதங்கள் இந்த விஞ்ஞான, அறிவியல் உலகத்துக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கிது எண்டுறதையும் கொஞ்சம் நினைவில வச்சு இருங்கோ. மதங்களும், விஞ்ஞானம்/ அறிவியலும் மனிதனுக்கு இரண்டு கண்கள். இரண்டிலும் ஒரு சமநிலை இருக்க வேணும். ஒரு பக்கம் பாரம் கூடினால் ஆபத்து. எல்லாருக்கும் இது விளங்கினால் சரி.

நாத விந்து கலாதி நமோ நம

வேத மந்திர சொரூபா நமோ நம

ஞான பண்டித சுவாமி நமோ நம - வெகுகோடி

நாம சம்பு குமாரா நமோ நம

போக அந்தரி பாலா நமோ நம

நாக பந்த மயூர நமோ நம - பரசூரர்

சேத தண்ட வினோதா நமோ நம

கீத கிண்கிணி பாதா நமோ நம

தீர சம்பிரம வீரா நமோ நம - கிரிராஜ

தீப மங்கள ஜோதி நமோ நம

தூய அம்பல லீலா நமோ நம

தேவ குஞ்சரி பாகா நமோ நம - அருள்தாராய்

உலகத்திண்ட அடிப்படையே நாதவிந்து எண்டு சொல்லப்படுகிது. உலகம் சிவசக்தி மயம்..

பாடலைக் கேட்க: http://www.musicindiaonline.com/p/x/B4b2iUEKPS.As1NMvHdW/

வாத்தியத்தில் பாடல்: http://www.musicindiaonline.com/p/x/14b0dVHAc9.As1NMvHdW/

என்ன கொஞ்சம் விட்டால் உங்கட உடுப்புகள நீங்களே உறிஞ்சுபோட்டு தெருவில நிர்வாணமா ஓடுவீங்கள் போல இருக்கிது? இந்துசயமத்தில மாத்திரம் இல்ல எல்லாச் சமயங்களிலையுமே நல்ல விசயங்கள் இருக்கிது. இப்படி கோணல் பார்வையில் பகுத்தறிவு பற்றி பேசுறதன் மூலம் பிரயோசனம் இல்ல.

பெண்ணின் முலை தாய்மையின் அடையாளமாக போற்றி வணங்கப்படுகிறதா? எங்கே? நான் கேள்விப்படவே இல்லையே?

முரளி எழுதியதைப் படித்த பின்பு எனக்கு சில சந்தேகங்கள் வருகின்றன.

ஆண்குறியை தந்தைத் தன்மையின் அடையாளம் என்று அந்த அவுஸ்திரய அப்பன் நினைத்ததால்தான் அதை வைத்து மகளிடம் விளையாட்டு காட்டியிருப்பானோ? அவனுக்கும் இந்த லிங்கம் பற்றி ஏதாவது தெரிந்திருக்குமோ? கடவுளின் அடையாளத்தை தன்னோடு வைத்திருப்பதால், அனைத்துப் பெண்களும் தனக்கு ஒன்றுதான் என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்ந்திருப்பானோ?

நண்பர்களே! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!

ஆதிகாலத்தில் வாழ்ந்த காட்டுமிராண்டி மனிதன் தனக்கு விளங்காத அனைத்தையும் கடவுள் என்றான். நெருப்பை கடவுள் என்றான். காற்றை கடவுள் என்றான். பெண்ணுக்கு மாதவிடாய் வந்த போது பெண்ணை கடவுள் என்றான். பெண் குழந்தையைப் பெற்ற போதே பெண்ணே முழு முதற் கடவுள் என்றான். பெண்குறியை கடவுள் என்றான். ஆண்குறிக்கும் அதில் பங்கிருப்பதை அறிந்த போது அதையும் கடவுள் என்றான்.

இப்படி காட்டுமிராண்டிக் காலத்தில் அறிவு வளராத போது உருவான வழிபாடுகளை இன்றைக்கும் செய்து கொண்டு அதற்கு விளக்கம் வேறு!

ஓகோ உங்களுக்கு தெரியாதோ? இராமகிருஷ்ணர் தனது மனைவியை கடவுளாக பூசை செய்பவராம். பெரிய பெரிய தமிழ் சித்தர்கள் பெண்களை சக்தியின் மூலமாக வழிபாடு செய்து இருப்பதாய் நான் புத்தகங்களில் படிச்சு இருக்கிறன்.

காட்டுமிராண்டித் தனத்துக்கும் பகுத்தறிவுக்கும் பெரிய தொடர்புகள் இருப்பதாக தெரியவில்ல சபேசன். இன்னும் தெளிவாகச் சொன்னால் பகுத்தறிவாளர்கள் பலர் பகுத்தறிவு குறைந்தவர்களை விட காட்டுமிராண்டித்தனமாக நடக்கின்றார்கள்.

சமயங்கள் அன்பினை போதிக்கின்றன. அன்பினால் உலகை ஆள்கின்றன. அன்பே சிவம் எண்டு சைவசமயம் சொல்லிது. ஆனா... பகுத்தறிவு எதன் அடிப்படையில இயங்கிது? பகுத்தறிவை கட்டி ஆள்வது என்ன? சுயநலமும் காட்டுமிராண்டித்தனமுமே பகுத்தறிவை கட்டி ஆள்கின்றது. இதற்கு நாசிச ஜேர்மனி தொடக்கம் சனநாயக அமெரிக்கா வரை உதாரணமாகச் சொல்லலாம்.

வெறும் பகுத்தறிவு காசு தரலாம், வசதிகள் தரலாம். ஆனால் நிம்மதியை ஒருபோதும் தராது. சமயங்கள் அன்பு - இனிமை - அமைதி இவை கிடைப்பதற்கு உதவுகின்றன.

சமயங்கள் இல்லாத அறிவியலும், அறிவியல் இல்லாத சமயங்களும் எல்லாமே ஆபத்தானது.

----------------------------

சரி இன்னொரு விசயம், நான் வீட்டில அம்மா, அப்பாவுக்கு இப்பிடி யாழில சிவலிங்கம் எண்டுறது ஆண்குறியாம்... மற்றது அந்த முனிவர் சிவபெருமானுக்கு போட்ட சாபக் கதை ஆக்கள் இஞ்ச எழுதினதுகள் பற்றி எல்லாம் சொன்னன். சனம் விழுந்து விழுந்து சிரிக்கிதுகள்.

அங்காள ஒருபக்கம் தமிழ வளர்க்கிறம் பாதுகாக்கிறம் எண்டு ஒருபக்கத்தால பிரச்சனை போகிது. இஞ்சால பகுத்தறிவுடன் இருங்கோ எண்டு சொல்லி அறிவுரைகள்...

எல்லாம் எங்க போய் முடியுது எண்டு பார்ப்பம்.

Edited by முரளி

பெண்ணை வழிபடுவது என்பது சரி! ஆனால் பெண்ணின் முலையை தாய்மையின் அடையாளம் என்று எங்கே வழிபாடுவார்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி

நீங்கள்தான் பெண்ணின் முலையை வழிபடுவது பற்றிச் சொல்லி அப்படித்தான் ஆண்குறியை வழிபடுவதும் என்று சொன்னீர்கள். அதனால்தான் கேட்கிறேன்.

பகுத்தறிவு என்பது நீங்கள் என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. சம்பந்தமில்லாமல் நாசிச ஜேர்மனி, அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றி பேசுகிறீர்கள். இவர்கள் பகுத்தறிவாளர்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது?

அத்துடன் எந்த நாட்டில் மதம் என்பது அன்பு இனிமை அமைதி போன்றவைகளை தந்தது என்று அறிந்து கொள்ளவும் ஆவாலாக இருக்கிறேன்

உங்கள் வீட்டில் சிரிக்கத்தான் செய்வார்கள். என் வீட்டிலும் சிரிக்கத்தான் செய்வார்கள். தாம் வணங்குவது ஆண்குறி என்று பகுத்து அறிய முடியாதபடி மதம் மூளையை மழுங்கடித்து இருக்கின்ற போது சிரிக்காமல் வேறு என்ன செய்வார்கள்?

பிள்ளையார் மாம்பழத்திற்கு அப்பா அம்மாவை சுத்தினார் என்று புராணக் கதை சொன்னால் நம்புவார்கள். இந்தப் புராணத்தில் இப்படி இருக்கிறது என்று ஆதாரத்தோடு நாம் சொன்னால் சிரிக்கிறார்களா?

இப்படி சிரிப்பதால்தான் தமிழர்களை "இளிச்ச வாயர்கள்" என்று சொல்வார்கள்.

ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

மனிதர்களை வணங்குவது முட்டாள்தனம். அதை விட மனித உறுப்புக்களை வணங்குவது முட்டாள்தனம். அதிலும் அந்தரங்க உறுப்புகளை வணங்குவது காட்டுமிராண்டித்தனம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்குறி பெண்குறி வழிபாடு சரியானதா??அப்ப மோட்சம் ஏதாவது கிடைக்குமா அப்ப இனி என்ரை வீட்டிலை இனி ஒரே வழிபாடுதான் எடியேய்.... முனியம்மா குளிச்சு ஆயத்தமாய் இரு நான் பூ பழம் எல்லாம் வாங்கிக் கொண்டு வாறன். இனி விடிய விடிய பூசைதான் ..அதுசரி கற்பூரத்தை எங்கை வைச்சு கொழுத்துறது????

:lol::lol::lol:

பி.கு. சத்தியமாய் இது பக்தி சம்பத்தப்பட்ட விடயம் நீங்களாய் ஏதாவது கற்பனை பண்ணி என்ரை கருத்தை வெட்டிப்போடாதையுங்கோ :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவின் பால் சிவனே இல்லை எங்கிறார்கள்.. அப்புறம் சிவனுக்கு லிங்கம் இருக்கு இது சிவனின் ஆண்குறிதான் என்றார்கள். தாங்களே தங்களுக்குள் முரண்படுகிறார்களே..??!

சைவமோ அது பதி பசு பாசத்தைக் குறித்து நிற்கும் அடையாளம் எங்கிறது. இது அதனைக் குறிக்கப்பயன்படும் ஒரு logo. ஆணும் பெண்ணும் இணைத்தது உயிரின் உலகு என்பதையும் அடையாளப்படுத்த இக்குறியீட்டை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால்.. சைவத்தின் ஆன்மீகக் கருத்தியலின் படி.. அது சாதாரண மனிதனின் ஆண்குறியல்ல..!

மனிதனை மனிதன் வணங்குவதை வெறுக்கும் சைவம்.. உயிர்கள் இடத்தில் அன்பு செய்யச் சொல்கிறது. அதுதான் தேவை.

முரளியின் தம்மைத் தாமே பகுத்தறிவாளர்கள் என்பவர்கள் பற்றிய கருத்தில் பலவற்றில் எனக்கும் உடன்பாடுண்டு.

சாத்திரி.. அரைகுறையா விளங்கிட்டு முனியம்மாவுக்கு பூசை வைக்கப் போய் முனியம்மாட்ட வாங்கிக் கட்டப் போறார் என்றது மட்டும் விளங்குது..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயற்கையோடு ஒன்றி பின்னிப்பிணைந்திருப்பது தான் சைவசமயம்.அவர்களின் வழிபாட்டு முறைகளை உற்று நோக்கினால் சகலதும் புரியும்.

- - - :lol:

Edited by வலைஞன்
நீக்கப்பட்டுள்ளது.

பெண்ணை வழிபடுவது என்பது சரி! ஆனால் பெண்ணின் முலையை தாய்மையின் அடையாளம் என்று எங்கே வழிபாடுவார்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி

நீங்கள்தான் பெண்ணின் முலையை வழிபடுவது பற்றிச் சொல்லி அப்படித்தான் ஆண்குறியை வழிபடுவதும் என்று சொன்னீர்கள். அதனால்தான் கேட்கிறேன்.

பகுத்தறிவு என்பது நீங்கள் என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. சம்பந்தமில்லாமல் நாசிச ஜேர்மனி, அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றி பேசுகிறீர்கள். இவர்கள் பகுத்தறிவாளர்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது?

அத்துடன் எந்த நாட்டில் மதம் என்பது அன்பு இனிமை அமைதி போன்றவைகளை தந்தது என்று அறிந்து கொள்ளவும் ஆவாலாக இருக்கிறேன்

உங்கள் வீட்டில் சிரிக்கத்தான் செய்வார்கள். என் வீட்டிலும் சிரிக்கத்தான் செய்வார்கள். தாம் வணங்குவது ஆண்குறி என்று பகுத்து அறிய முடியாதபடி மதம் மூளையை மழுங்கடித்து இருக்கின்ற போது சிரிக்காமல் வேறு என்ன செய்வார்கள்?

பிள்ளையார் மாம்பழத்திற்கு அப்பா அம்மாவை சுத்தினார் என்று புராணக் கதை சொன்னால் நம்புவார்கள். இந்தப் புராணத்தில் இப்படி இருக்கிறது என்று ஆதாரத்தோடு நாம் சொன்னால் சிரிக்கிறார்களா?

இப்படி சிரிப்பதால்தான் தமிழர்களை "இளிச்ச வாயர்கள்" என்று சொல்வார்கள்.

ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

மனிதர்களை வணங்குவது முட்டாள்தனம். அதை விட மனித உறுப்புக்களை வணங்குவது முட்டாள்தனம். அதிலும் அந்தரங்க உறுப்புகளை வணங்குவது காட்டுமிராண்டித்தனம்

என்ன சபேசன் அண்ணை, பகுத்தறிவு உள்ள ஆக்கள் முழுப்பூசணிக்காயை சோற்றுக்க மறைப்பீனமோ? :lol:

நாசிச ஜேர்மனியின் தலைவன் ஹிட்லர் - ஆறு தொடக்கம் ஒன்பது மில்லியன் வரையிலான யூதர்களை கொன்று ஒழித்தது சார்ஸ் டார்வினின் வழிவந்த சோசல் இவோலியூசன் என்ற கொள்கையின் அடிப்படையில் என்பது உங்களுக்கு தெரியாதா? டார்வினிசம் என்பது பகுத்தறிவு தானே?

இப்ப சார்ஸ் டார்வினுக்கு பகுத்தறிவு இருக்கிது எண்டுறத ஏற்றுக்கொள்ளுறீங்களா? டார்வின் கொள்கைகளை பின்பற்றுபவன் அந்த டார்வினின் பகுத்தறிவை விளங்கியபடியால் தானே பிரயோகம் செய்யுறான்?

ஹிட்டர் ஒரு காட்டுமிராண்டி - அவன் பகுத்தறிவை மிக நன்கு பெற்று இருந்தமையால்தான் அவ்வளவு திறமையாக ஐரோப்பா கண்டத்தில இருந்து யூதர்களை முற்று முழுதாக அழித்து ஒழிக்கும் நடவடிக்கையில் காட்டுமிராண்டித் தனத்துடன் ஈடுபட்டான்.

மற்றது... ஜோர்ஜ் புச்சுக்கு பகுத்தறிவு இல்லை எண்டு சொன்னால் கெளதமாலா சிறையுக்க கொண்டு போய் போட்டாலும் போடுவாங்கள். அமெரிக்க வல்லாதிக்கம் பகுத்தறிவை எப்படி எப்படி எல்லாம் காட்டுமிராண்டித்தனமாக மனித இனத்துக்கு எதிராக பிரயோகித்து இருக்கின்றது இருக்கின்றது எண்டு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.

எத்தனையோ விஞ்ஞானிகள், அறிவாளிகள்.. எத்தனை எத்தனை காட்டுமிராண்டித்தனமான வேலைகள் செய்து இருக்கிறார்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள் எண்டு உங்களுக்கு தெரியாதா?

எப்படி சமயம் பற்றிய ஒழுங்கான அடிப்படை அறிவை பெறாத சமயவாதிகள் - வெறியர்கள் வெறி கொண்டு அலைகின்றார்களோ அதுபோலவே பகுத்தறிவை - அறிவை மட்டும் நம்பி தமது வாழ்க்கையை அமைத்து இருப்பவர்கள் காட்டுமிராண்டித் தனத்துடன் நடந்துகொள்கின்றார்கள்.

சமயங்களில இருக்கிற பூசைகள், வழிபாடுகள், தியானம், கிரியைகள், சடங்குகள் பல மனிதர்களிண்ட மனம் அமைதி அடைவதற்கு உதவுகின்றன எண்டு உங்களுக்கு தெரியாதா?

இனி உங்களுக்கு விளக்கம் சொல்லிறது எண்டால் அ ஆ இல இருந்து போகவேணும்..

அந்தக் காலத்தில கோயில்கள் என்பது வெறும் வழிபாட்டு தலங்களாக மட்டும் இருக்கவில்லை. பல்வேறு கலைகளை சொல்லிக்கொடுக்கும் இடமாக, பிரச்சனைகளை தீர்க்கும் இடமாக, பாடசாலையாக, சாப்பாடு போடும் இடமாக, ஒதுங்கிக்கொள்ளும் மடமாக இப்படி பல ரூபங்களில இருந்து இருக்கிது.

இண்டைக்கும் கூட பகுத்தறிவு பற்றி பேசுற ஆக்கள் அன்னதானம் எண்டால் கோயிலுக்கு போறதுக்கு பின்னிற்கிறதில்ல..

அன்னதானம் எண்டுறது ஒரு பகுத்தறிவான செயலா?

முளையை தாய்மையின் அடையாளம் எண்டு ஞானிகள், யோகிகள் வழிபட்டு இருக்கிறார்கள் வழிபடுகின்றார்கள் எண்டு நான் புத்தகத்தில படிச்சு இருக்கிறன். அதுசரி முளை தாய்மையின் அடையாளம் என்பதையாவது பகுத்தறிவாளர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா?

இறுதியாக நான் வரலாற்றையும், இதிகாசங்களையும், புராணங்களையும் உதாரணம் காட்ட இல்லை. என்னையே உதாரணமாகக் காட்டுகின்றேன். இண்டைக்கு நான் அமைதியாக இருக்கிறன், ஓரளவாவது சந்தோசமாக திருப்தியாக இருக்கிறன் எண்டால் இவை எனக்கு பகுத்தறிவு மூலம் மட்டும் கிடைக்கவில்லை. சமயங்கள் எனக்கு இவை பெறுவதற்கு உதவி இருக்கின்றன.

குழந்தைப் பிள்ளைகள் அடம்பிடிக்கிற மாதிரி சமயங்களில கூறப்படுகின்ற நல்ல விசயங்களக்கூட பகுத்தறிவாளர்கள் பின்பற்ற மறுப்பது பகுத்தறிவான ஒரு செயலே அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அது சாதாரண மனிதனின் ஆண்குறியல்ல..!

அதுதான் மேல உள்ள படத்தைப் பாக்கேக்கையே தெரியுதே..! நீங்கள் வேற சொல்ல வேணுமே..!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் மேல உள்ள படத்தைப் பாக்கேக்கையே தெரியுதே..! நீங்கள் வேற சொல்ல வேணுமே..!! :lol:

உங்கள் பார்வையில் அப்படித் தெரிகிறது. ஆனால் எனக்கு..

உதாரணத்துக்கு ஒருவன் முருகனின் வேலை ஒத்த ஒரு உருவத்தை வரைந்துவிட்டு ஒரு பாமர பகுத்தறிவாளனிடம் கேட்டானாம் இது என்ன என்று அதற்கு அவன் சொன்னானாம் இது என்னைக் கொல்லப் போகும் ஆயுதம் என்று. வரைந்தவன் கேட்டானாம் ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று. அதற்கு அந்தப் பாமர பகுத்தறிவாளன் சொன்னானாம்.. புராணத்தில் இதைக் கொண்டு தானே சூரனை அழித்ததாய் சொல்கிறார்களே என்று.

வரைந்தவன் சொன்னானாம்.. இது உன்னைக் கொல்லும் ஆயுதமல்ல.. உனது பகுத்தறிவின்மையை காட்டும் வரைபடம் என்று..! அதெப்படி என்று கேட்டானாம் பாமர பகுத்தறிவாளன்.. இதோ இந்த வேலின் நீண்ட பாகம் உன்னறிவு ஆழமானதல்ல என்பதைச் சொல்கிறது. அதன் அகண்ட பாதம் உன்னறிவு விரிந்ததல்ல எங்கிறது. அதன் கூர்மை.. உன்னறிவு கூர்மையானதல்ல எங்கிறது...! இது உன்னை உனக்கு அடையாளமிட நான் வரைந்தது என்றானாம்...!

அப்போதுதான் விளங்கியதாம் அந்தப் பகுத்தறிவாளனுக்கு தான் கட்டுண்டு விழுந்து கிடக்கும் சாக்கடையின் தன்மை.

அதுபோலத்தான் இருக்கிறது டங்குவார் உங்களின் பார்வையும் எனக்கு..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் நடுகற்களைக் கும்பிட்டவன், ஆரியக்கடவுளை அல்ல என வாதம் செய்யு;ம சுகனைத் தான் இது பற்றிக் கேட்க வேண்டும்.

தவிரவும் மாவீரர்கள் பூரண விதைகுழிக்குள் விதைக்கப்பட்டனர் என்றால், விதை என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டு பகுத்தறிவாளர்கள் அதற்கு அஞ்சலி செய்வார்களோ? கொடுமை...

நாத விந்து கலாதி நமோ நம

அப்படிப் போடுங்கோ அருவாளை! :wub:

இந்த கருமத்தையும் வணங்கித் தொலைக்கணுமா? :lol:

Edited by லக்கிலுக்

  • கருத்துக்கள உறவுகள்

முட்டையும் விந்துவும் (பெண்ணும் ஆணும்) தான் புதிய உயிர்களுக்கான அடிப்படை. அவை கறுமங்கள் அல்ல. அவற்றை கறுமம் என்பவர்கள் உயிரின விரோதிகள். உயிரின் உற்பத்தி பற்றிய அடிப்படை அறிவற்றவர்கள்.

உயிர்கள் பற்றியும் உடல் பற்றியும் பேசுகின்ற போது உயிர்க்கான காரணிகள் பற்றிப் பேசுவது அவசியம். அவ்வகையில் ஒரு அறிவியல் உண்மையை எவ்வளவு இலகுவாக இந்த வரிகள் சொல்லிவிடுகின்றன..!

விந்தை வணங்கச் சொல்லவில்லை. மாறாக விந்தின் முட்டையையும் தந்த இயற்கையே உன்னை போற்றுகின்றேன் என்பதுதான் இவ்வரிகளின் பொருள்.

" லிங்கம், பீடம் (சிவ, சக்தி) ஆகிய தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி,"

இயற்கையைக் கடவுளாக காண்பவன் தான் சைவன். சிவன் மனித உருவினன் அல்ல. இயற்கையின் பிதா என்பதுதான் சைவர்களின் எடுகோள்...! :wub:

முட்டையும் விந்துவும் (பெண்ணும் ஆணும்) தான் புதிய உயிர்களுக்கான அடிப்படை. அவை கறுமங்கள் அல்ல. அவற்றை கறுமம் என்பவர்கள் உயிரின விரோதிகள். உயிரின் உற்பத்தி பற்றிய அடிப்படை அறிவற்றவர்கள்.

அதுக்காக?

கோயிலில் அம்பிகையின் யோனிப்பிரசாதம் என்று குங்குமம் கொடுக்கிறார்கள். அதுபோல இனிமேல் விந்துப்பிரசாதமும் தரவேண்டும் என்கிறீர்களா? :wub::):lol:

என்ன சபேசன் அண்ணை, பகுத்தறிவு உள்ள ஆக்கள் முழுப்பூசணிக்காயை சோற்றுக்க மறைப்பீனமோ? :wub:

நாசிச ஜேர்மனியின் தலைவன் ஹிட்லர் - ஆறு தொடக்கம் ஒன்பது மில்லியன் வரையிலான யூதர்களை கொன்று ஒழித்தது சார்ஸ் டார்வினின் வழிவந்த சோசல் இவோலியூசன் என்ற கொள்கையின் அடிப்படையில் என்பது உங்களுக்கு தெரியாதா? டார்வினிசம் என்பது பகுத்தறிவு தானே?

முரளி,

டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுக்கும், நாசிய இனவாதக் கருத்துக்கும் என்ன சம்பந்த்தம்? கொன்சம் விளக்குங்கள்.

உங்களுக்கு இவை இரண்டையும் பற்றிய பிழையான புரிதலை ஏற்படுத்திய மூலம் எது? அதனைத் தாருங்கள் அல்லது இரண்டும் எவ்வாறு தொடர்பு படுகிறது என்று எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக?

கோயிலில் அம்பிகையின் யோனிப்பிரசாதம் என்று குங்குமம் கொடுக்கிறார்கள். அதுபோல இனிமேல் விந்துப்பிரசாதமும் தரவேண்டும் என்கிறீர்களா? :lol::):)

மீண்டும் மீண்டும்.. உங்கள் கருத்தோட்டம் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புக்களுக்குள் நிற்பதுடன்.. ஏதோ அவற்றைப் பற்றி சொல்லாடல் செய்வது வீரப்பிரதாபம் அல்லது கறுமம் என்று சொல்ல நினைக்கிறீர்கள் போல எல்லோ இருக்கிறது.

யோனி ஒரு உறுப்பு. இயற்கையின் ஒரு அம்சம். இயற்கையை மதிக்கும் மனிதன் யோனிக்கும் சம மதிப்பளிப்பது தவறல்லவே.. அதுதானே பகுத்தறிவுள்ள மனிதனின் நிலை. அதைவிடுத்து யோனி என்பதை ஏதோ அசிங்கப்பொருளாகச் சித்தரிக்க நினைப்பது தான்.. பகுத்தறிவா...???!

இயற்கையின் படைப்பில் தான் யோனி.. அமைந்திருக்கிறது. இறைவனின் படைப்பு இயற்கை எனும் போது.. யோனியையும் குறிப்பிடுதல் தவறல்ல. அதில் அசிங்கப்பட எதுவும் இல்லை. மாறாக யோனி என்பது உடலின் இதர பாகங்களை விட சுத்தமாக இருக்க வேண்டிய உறுப்பு. காரணம் அங்கு நுண்ணங்கிகள் பெருக அதிக வாய்ப்பிருப்பதால்.. இவ்வாறான கருத்துக்கள் மூலம் அதன் தூய்மையை அவசியமாக்கிக் கொண்டிருக்கின்றனர் நம் முன்னோர்.

இன்றைய நவீன மருத்துவ உலகில் கூட யோனி தொடர்பான நோய்களால் பிறக்கும் புதிய குழந்தைகள் பல நோய்களை சந்திக்கின்றன என்பதை அறிவுறுத்தி... அதற்கான முற்காப்புக்கள் எப்படி என்றும் போதிக்கின்றனர்.

மனித இன இருப்பில் யோனிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உண்டு. அதைத்தான் இவ்வாறான கருத்துக்கள் மூலம் புனிதம் என்பதன் ஊடு தூய்மைப்படுத்தல் என்பதை நிறுவி வைத்துள்ளனர். இதை உணராமல்.. வெறும் குருட்டுத்தனமாக பாலியல் வக்கிரத்தனத்தோடு யோனியைக் காட்ட விளைவது ஒரு அறிவார்ந்த சமூகத்துக்குரிய பண்பல்ல..! _ _ _ :wub:

Edited by வலைஞன்
நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் மீண்டும்.. உங்கள் கருத்தோட்டம் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புக்களுக்குள் நிற்பதுடன்.. ஏதோ அவற்றைப் பற்றி சொல்லாடல் செய்வது வீரப்பிரதாபம் அல்லது கறுமம் என்று சொல்ல நினைக்கிறீர்கள் போல எல்லோ இருக்கிறது.

யோனி ஒரு உறுப்பு. இயற்கையின் ஒரு அம்சம். இயற்கையை மதிக்கும் மனிதன் யோனிக்கும் சம மதிப்பளிப்பது தவறல்லவே.. அதுதானே பகுத்தறிவுள்ள மனிதனின் நிலை. அதைவிடுத்து யோனி என்பதை ஏதோ அசிங்கப்பொருளாகச் சித்தரிக்க நினைப்பது தான்.. பகுத்தறிவா...???!

இயற்கையின் படைப்பில் தான் யோனி.. அமைந்திருக்கிறது. இறைவனின் படைப்பு இயற்கை எனும் போது.. யோனியையும் குறிப்பிடுதல் தவறல்ல. அதில் அசிங்கப்பட எதுவும் இல்லை. மாறாக யோனி என்பது உடலின் இதர பாகங்களை விட சுத்தமாக இருக்க வேண்டிய உறுப்பு. காரணம் அங்கு நுண்ணங்கிகள் பெருக அதிக வாய்ப்பிருப்பதால்.. இவ்வாறான கருத்துக்கள் மூலம் அதன் தூய்மையை அவசியமாக்கிக் கொண்டிருக்கின்றனர் நம் முன்னோர்.

இன்றைய நவீன மருத்துவ உலகில் கூட யோனி தொடர்பான நோய்களால் பிறக்கும் புதிய குழந்தைகள் பல நோய்களை சந்திக்கின்றன என்பதை அறிவுறுத்தி... அதற்கான முற்காப்புக்கள் எப்படி என்றும் போதிக்கின்றனர்.

மனித இன இருப்பில் யோனிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உண்டு. அதைத்தான் இவ்வாறான கருத்துக்கள் மூலம் புனிதம் என்பதன் ஊடு தூய்மைப்படுத்தல் என்பதை நிறுவி வைத்துள்ளனர். இதை உணராமல்.. வெறும் குருட்டுத்தனமாக பாலியல் வக்கிரத்தனத்தோடு யோனியைக் காட்ட விளைவது ஒரு அறிவார்ந்த சமூகத்துக்குரிய பண்பல்ல..! ஆனால் இவ்வாறனவர்கள் தம்மைப் பகுத்தறிவு வாதிகள் என்பதுதான் வேடிக்கையாக உள்ளது..! :wub:

நீங்கள் சொல்ல வருவது போல யோனியோ ஆண்குறியோ கும்பிடக்கூடியதாக இருந்தாலும் அடுத்தவன் பொண்டாட்டி யோனியையும் அடுத்தவனின் ஆண்குறியையும் கும்பிடுவது சரிதானா தோழரே. பேசாமல் அவரவர் வீட்டில் அவரவருடையதை கும்பிடலாமே. அதுவும் சிவலிங்கத்தை பெண்கள் சுற்றி நின்று ... இதெல்லாம் காட்டுமிராண்டித்தனமாகத் தெரியாமல் பக்தி பரவசத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்கிறீர்களா. அல்லது கல் என்பதால் அது ஒரு பிரச்சனை இல்லை என அனுமதிக்கிறீர்களா? அப்படி ஒருவேளை அதை அனுமதிக்கும் பட்சத்தில் மாற்றான் ஆண்குறிக்கு மரியாதை செய்யச் சொல்லலாமா? என்ன கொடுமையா இருக்கே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்ல வருவது போல யோனியோ ஆண்குறியோ கும்பிடக்கூடியதாக இருந்தாலும் அடுத்தவன் பொண்டாட்டி யோனியையும் அடுத்தவனின் ஆண்குறியையும் கும்பிடுவது சரிதானா தோழரே. பேசாமல் அவரவர் வீட்டில் அவரவருடையதை கும்பிடலாமே. அதுவும் சிவலிங்கத்தை பெண்கள் சுற்றி நின்று ... இதெல்லாம் காட்டுமிராண்டித்தனமாகத் தெரியாமல் பக்தி பரவசத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்கிறீர்களா. அல்லது கல் என்பதால் அது ஒரு பிரச்சனை இல்லை என அனுமதிக்கிறீர்களா? அப்படி ஒருவேளை அதை அனுமதிக்கும் பட்சத்தில் மாற்றான் ஆண்குறிக்கு மரியாதை செய்யச் சொல்லலாமா? என்ன கொடுமையா இருக்கே :wub:

சிவலிங்கம் என்பதற்குரிய ஆன்மீகப் பார்வை என்பது ஏலவே தெளிவுறத்தரப்பட்டுள்ளது. மனித யோனியை.. மனித லிங்கத்தைப் பற்றி மனிதன் அறிந்திருப்பது தவறல்ல. தனிமனிதன் தானே அறியாத விடயங்களை சமூகமாக அறிவிக்கின்ற போது மனிதன் உணரா நிலைகளை உணர்வான்.

வைத்தியசாலைக்குப் போகும் உங்களுக்கு நோய் இப்பதை உங்களில் பரிசோதித்து அறிவர். ஆனால் உங்களையே மாதிரியாக்கி உங்களை வெட்டிக் கிழித்து படிக்க அனுமதிப்பீர்களா..???! இல்லை. அதேபோல் தான் சைவமும்.. அது ஆன்மீகப் பார்வையை மட்டும் அன்றி மக்களுக்கு அவசியமான வாழ்வியல் கருத்துக்களையும் இனங்காட்டி நிற்கிறது.

யோனியை கல்லால் மாதிரியாக்கி அதனைப் பற்றிய அறிவூட்டலை மக்களுக்கு வழங்குகின்றனர். யோனியை பூஜிக்கின்றனர் என்றால் மக்களின் மனதில் யோனி புனிதமானது தூய்மையானது என்ற சிந்தனை இயல்பாக எழுகிறது. அது அவர்கள் தங்கள் உடலையும் தூய்மையாக்க சிந்திக்கத் தூண்டும். அதனால்.. பல ஆபத்துக்கள் நீங்கும்.

அதேவேளை யோனி என்பது லிங்கம் என்பது இயற்கையின் கூறு. இயற்கையை மதிக்கும் நாம் இவற்றைப் புறக்கணிக்க வேண்டியதில்லை. புறக்கணிப்பின் மக்களின் எண்ணத்தில் அவை ஏதோ கழிவுப் பொருட்கள் என்ற சிந்தனைதான் எழும். அது வளமான இன விருத்திக்குத் தடையாகும்..!

சைவமோ உலக மதங்களோ சமூக வழிகாட்டல் நெறிகள் என்பதன் கீழ் அவற்றுக்கான கடமை என்பது வெறும் ஆன்மீகப் பரப்புரை மட்டுமல்ல.. மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் வழிகாட்டவும் விளக்கம் சொல்லவும் வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் அமைந்தவைதான் இவை.

இவை மிகுந்த ஆழமான சமூகவியல் பார்வையின் பால் பிறந்தவை. இவற்றை பகுத்தறிவுவாதிகள் என்போர் விளங்கிக் கொள்ளும் அறிவைக் கூடக் கொண்டிருக்கவில்லை என்பதையே அவர்களின் கருத்துக்கள் காட்டுகின்றன.

இன்று மருத்துவ ஆய்வுசாலையில் மாதிரி என்று பிளாஸ்ரிக்கில் செய்த உறுப்புக்களை வைத்து ஆய்வு செய்கின்றோம். ஏன் உங்களைக் கூப்பிட்டு.. எல்லாவற்றையும் கழட்ட வைச்சு ஆய்வு செய்யல்ல..???! காரணம்.. உங்களின் தனி உரிமைக்கு மதிப்பளிக்கிறது உலகம்.

அதேதான் சைவத்திலும். அவர்கள் சமூக அறிவூட்டலை வளர்க்க இவற்றை கல்லால் ஆன மாதிரிகளாக்கிக் கொண்டனர். ஆட்களை ஆட்களை கழற்றிட்டு நின்று நிர்வாண நடனம் ஆடச் சொல்லவில்லை. காரணம் சைவம் உணர்ந்திருத்தது.. தனது கருத்தோட்டம் தனி மனித உரிமைக்குள் செல்வாக்குச் செய்யும் தகுதியற்றது என்பதை. ஆனால் பகுத்தறிவுவாதிகள் உணரவில்லையே அதை.. என்பது வேடிக்கையானது..!

சைவம் துறவைச் சொல்லும் அதேவேளை இல்லறத்தினூடு துறவறம் என்பதையும் சொல்கிறது..! அவ்வகையில் அது மக்களை நோக்கி எவ்வாறு பரந்து சிந்தித்து இயற்கையை இறைவனாகக் காட்டி அதன் அம்சங்களை மக்களுக்கு ஊட்டியுள்ளது என்பது வியத்தகு ஒன்றே..! :lol:

  • தொடங்கியவர்

அப்படிப் போடுங்கோ அருவாளை! :wub:

இந்த கருமத்தையும் வணங்கித் தொலைக்கணுமா? :lol:

வேற்று நாட்டவர்கள் கூட இந்து சமயத்தை ஏற்று கொள்ளும் போது, நாங்கள் பகுத்தறிவு என்று கூறி இப்படி தப்பான நோக்கத்தில் பார்ப்பது தான் ஏனோ???

நாத விந்து தத்துவம்:

நாத விந்து இரண்டுமே எதிரெதிர்கள். நாதத்தில் ஓசையுண்டு. விந்துவிற்கு அமைதிதான். விந்துவிற்கு உருவம் உண்டு. நாதத்திற்கு உருவம் கிடையாது. இப்படி எதையெடுத்தாலும் எதிரெதிர் பண்புகள். இந்த இரண்டும் சேர்ந்த பொழுது ஓங்காரம் பிறக்கும். ஒரு சின்ன பரிசோதனை. காதருகில் கையைக் குவித்து வைத்து மூடுங்கள். லேசான ஓங்காரம் கேட்கும். கைக்கு வெளியே ஓசை. உள்ளே அமைதி. ஆனால் முழுமையான ஓசையும் அமைதியும் இல்லாமையால் முறையான ஓங்காரம் கிடைக்கவில்லை.

இந்த ஓங்காரம்தான் அனைத்திற்கும் தொடக்கம். குடிலை என்று தமிழில் பெயர். இந்தக் குடிலைதான் இறைவனுக்கே

அடித்தளம். அதனால்தான் சைவர்கள் சிவனும் முருகனும் கொற்றவையும் ஓங்காரத்தைப் பீடமாக (ஆதாரமாக) கொண்டவர்கள் என்று சொல்வார்கள்.

இப்படி ஒலியும் ஒளியும் காட்டி உலகைப் படைத்துக் காத்து அழிக்கும் கலையைத்தான் அருணகிரியார் "நாதவிந்து கலாதி நமோ நம" என்று புகழ்கிறார்.

http://kaalangkal.blogspot.com/2006/10/blog-post_07.html

நீங்கள் சொல்ல வருவது போல யோனியோ ஆண்குறியோ கும்பிடக்கூடியதாக இருந்தாலும் அடுத்தவன் பொண்டாட்டி யோனியையும் அடுத்தவனின் ஆண்குறியையும் கும்பிடுவது சரிதானா தோழரே. பேசாமல் அவரவர் வீட்டில் அவரவருடையதை கும்பிடலாமே. அதுவும் சிவலிங்கத்தை பெண்கள் சுற்றி நின்று ... இதெல்லாம் காட்டுமிராண்டித்தனமாகத் தெரியாமல் பக்தி பரவசத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்கிறீர்களா. அல்லது கல் என்பதால் அது ஒரு பிரச்சனை இல்லை என அனுமதிக்கிறீர்களா? அப்படி ஒருவேளை அதை அனுமதிக்கும் பட்சத்தில் மாற்றான் ஆண்குறிக்கு மரியாதை செய்யச் சொல்லலாமா? என்ன கொடுமையா இருக்கே :lol:

அருமையான விவாதம் தோழர்! வாய்ப்பே இல்லை.... :):wub::D:D

வேற்று நாட்டவர்கள் கூட இந்து சமயத்தை ஏற்று கொள்ளும் போது, நாங்கள் பகுத்தறிவு என்று கூறி இப்படி தப்பான நோக்கத்தில் பார்ப்பது தான் ஏனோ???

நான் எனக்கு இருப்பது பகுத்தறிவு என்றெல்லாம் சொல்லிக் கொள்வதில்லை. இந்து மதம் நமக்களித்த பொய்யையும், புரட்டையும் உணர்ந்துகொள்ள சாதாரண அறிவிருந்தாலே போதும் :):D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவலிங்கம் என்பதற்குரிய ஆன்மீகப் பார்வை என்பது ஏலவே தெளிவுறத்தரப்பட்டுள்ளது. மனித யோனியை.. மனித லிங்கத்தைப் பற்றி மனிதன் அறிந்திருப்பது தவறல்ல. தனிமனிதன் தானே அறியாத விடயங்களை சமூகமாக அறிவிக்கின்ற போது மனிதன் உணரா நிலைகளை உணர்வான்.

வைத்தியசாலைக்குப் போகும் உங்களுக்கு நோய் இப்பதை உங்களில் பரிசோதித்து அறிவர். ஆனால் உங்களையே மாதிரியாக்கி உங்களை வெட்டிக் கிழித்து படிக்க அனுமதிப்பீர்களா..???! இல்லை. அதேபோல் தான் சைவமும்.. அது ஆன்மீகப் பார்வையை மட்டும் அன்றி மக்களுக்கு அவசியமான வாழ்வியல் கருத்துக்களையும் இனங்காட்டி நிற்கிறது.

யோனியை கல்லால் மாதிரியாக்கி அதனைப் பற்றிய அறிவூட்டலை மக்களுக்கு வழங்குகின்றனர். யோனியை பூஜிக்கின்றனர் என்றால் மக்களின் மனதில் யோனி புனிதமானது தூய்மையானது என்ற சிந்தனை இயல்பாக எழுகிறது. அது அவர்கள் தங்கள் உடலையும் தூய்மையாக்க சிந்திக்கத் தூண்டும். அதனால்.. பல ஆபத்துக்கள் நீங்கும்.

அதேவேளை யோனி என்பது லிங்கம் என்பது இயற்கையின் கூறு. இயற்கையை மதிக்கும் நாம் இவற்றைப் புறக்கணிக்க வேண்டியதில்லை. புறக்கணிப்பின் மக்களின் எண்ணத்தில் அவை ஏதோ கழிவுப் பொருட்கள் என்ற சிந்தனைதான் எழும். அது வளமான இன விருத்திக்குத் தடையாகும்..!

சைவமோ உலக மதங்களோ சமூக வழிகாட்டல் நெறிகள் என்பதன் கீழ் அவற்றுக்கான கடமை என்பது வெறும் ஆன்மீகப் பரப்புரை மட்டுமல்ல.. மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் வழிகாட்டவும் விளக்கம் சொல்லவும் வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் அமைந்தவைதான் இவை.

இவை மிகுந்த ஆழமான சமூகவியல் பார்வையின் பால் பிறந்தவை. இவற்றை பகுத்தறிவுவாதிகள் என்போர் விளங்கிக் கொள்ளும் அறிவைக் கூடக் கொண்டிருக்கவில்லை என்பதையே அவர்களின் கருத்துக்கள் காட்டுகின்றன.

இன்று மருத்துவ ஆய்வுசாலையில் மாதிரி என்று பிளாஸ்ரிக்கில் செய்த உறுப்புக்களை வைத்து ஆய்வு செய்கின்றோம். ஏன் உங்களைக் கூப்பிட்டு.. எல்லாவற்றையும் கழட்ட வைச்சு ஆய்வு செய்யல்ல..???! காரணம்.. உங்களின் தனி உரிமைக்கு மதிப்பளிக்கிறது உலகம்.

அதேதான் சைவத்திலும். அவர்கள் சமூக அறிவூட்டலை வளர்க்க இவற்றை கல்லால் ஆன மாதிரிகளாக்கிக் கொண்டனர். ஆட்களை ஆட்களை கழற்றிட்டு நின்று நிர்வாண நடனம் ஆடச் சொல்லவில்லை. காரணம் சைவம் உணர்ந்திருத்தது.. தனது கருத்தோட்டம் தனி மனித உரிமைக்குள் செல்வாக்குச் செய்யும் தகுதியற்றது என்பதை. ஆனால் பகுத்தறிவுவாதிகள் உணரவில்லையே அதை.. என்பது வேடிக்கையானது..!

சைவம் துறவைச் சொல்லும் அதேவேளை இல்லறத்தினூடு துறவறம் என்பதையும் சொல்கிறது..! அவ்வகையில் அது மக்களை நோக்கி எவ்வாறு பரந்து சிந்தித்து இயற்கையை இறைவனாகக் காட்டி அதன் அம்சங்களை மக்களுக்கு ஊட்டியுள்ளது என்பது வியத்தகு ஒன்றே..! :wub:

தோழரே நீங்கள் சொல்வது போல சிவன் ஆண்குறியை பக்திக்காக மக்கள் அறிவு பெறவேண்டும் என உபயோகப்படுத்தியது போலத் தோன்றவில்லையே. லிங்கம் தோன்றிய வரலாறே ஒரு கட்டுப்பாடற்ற கலவி தானே. அதில் எப்படி மக்களுக்கு அறிவு போதிக்கும். மேலும் இந்த பூஜை எல்லாம் நாம் உருவாக்கி வைத்தது தானே.

சிவலிங்கம் என்பது சிவனின் ஆண்குறியல்ல. சிவன் என்பது மனிதன் அல்ல. முதலில் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். சைவம் சிவன் எனும் இயற்கையை.. சக்தி எனும் அதனை இயக்கும் சக்தியை.. அடிப்படையாகக் கொண்டது. அதற்கான தனித்துவமான ஆன்மீகக் கருத்தோட்டம் எல்லாவற்றுக்கும் உண்டும்.

ஆனால் சைவத்துக்கு மனித சமூகத்தின் வாழ்வியலுக்கு வழிகாட்ட வேண்டிய தேவை ஒன்றிருக்கிறது. ஒரு மனிதனின் ஆன்மீகச் சிந்தனை என்பது இலகுவாக புகுத்தப்பட முடியாதது. மும்மலங்களால் (ஆணவம் கன்மம் மாயை)கட்டப்பட்டுள்ள மனிதனுள் ஆன்மீகத் தெளிவு என்பது இலகுவாகப் பிறக்காது. அதேநேரம் மனிதன் இயற்கையின் படைப்பு என்பதால் இயற்கையின் விதிக்கமைய வாழ ஆசைப்படுவான். அப்படி இருக்கும் மனிதனிடம் வாழ்வியல் வழிகாட்டலை வழங்கி அதன் வழி அவன் ஒழுகும் போது அவனுக்கு ஆன்மீகத்தை ஊட்டலாம் என்பதுதான் சைவத்தின் நோக்கமே.

அதனால் தான் சைவம் இரண்டு பரப்புக்களைக் கொண்டிருப்பதைக் காணலாம். ஒன்று ஆன்மீகப் பரப்பு. இன்னொன்று சாதாரண மனித வாழ்வியலுக்கான பரப்பு.

ஆன்மீகப் பரப்பின் கீழ் சிவலிங்கத்துக்கு பதி பசு பாசம் என்ற ஆன்மீக அடிப்படைகள் கொண்டு விளக்கமளித்திருக்கிறேன். ஆனால் மனிதனுக்கான சாதாரண வாழ்வியல் வழிகாட்டலுக்காக மனித லிங்கமாகக் கருதின் (சிவன் லிங்கம் அல்ல.. என்பதைக் கவனியுங்கள்) அதற்கான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

மக்களுக்கு இந்த இரண்டு நிலை அறிவும் ஒரு சேரும் என்று நினைக்க முடியாது. அதனாலும் சில நாத்திகப் போக்குள்ளவர்களின் செயல்களாலும் சில சைவ வழிமுறைகள் பரிகாசப்படுத்தப்பட்டுள்ளனவ

  • கருத்துக்கள உறவுகள்
atgaaabvgdmonbh903yewiudz0.th.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.