Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

71 பயணிகளுடன் கிழக்குக் கடற்பரப்பில் சென்ற இழுவைப் படகு சிறீலங்கா கடற்படையினரால் தடுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

71 பயணிகளுடன் கிழக்குக் கடற்பரப்பில் சென்ற இழுவைப் படகு சிறீலங்கா கடற்படையினரால் தடுப்பு

இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் 71 பயணிகளுடன் இழுவைப் படகு ஒன்றை சிறீலங்கா கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர்.

150 கடல்மைல் தொலைவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்றுகொண்டிருந்த இவ் இழுவைப் படகை சிறீலங்காப் கடற்படையினர் விரைந்து சென்று தடுத்துள்ளனா.

இழுவைப் படகும் 71 பயணிகளும் கடற்படையினரால் கரைக்குக் கொண்டுவந்துள்ளனர். இதனையடுத்து ஆரம்ப கட்ட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் முடிவில் இப்படகில் 91 பேர் இப்படகில் வந்ததாகவும், இவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இப் பயணிகள் பர்மா அல்லது பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா கடற்படை இன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் ஒரு அநாமதேயக் கப்பலை அவதானித்துவிட்டு.. அது புலிகளின் கப்பல்.. புலிகளுக்கு ஆயுதம் கடத்தும் கப்பல் என்று கதைவிட்டுக் கொண்டிருந்தது.

தற்போது அக்கப்பலைக் கைப்பற்றி திருமலைத்துறைமுகத்துக்கு கொண்டு சென்றுள்ள சிறீலங்காக் கடற்படை, அது பர்மிய, வங்காள தேச அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கப்பல் என்று அறிவித்திருப்பதுடன் 71 அகதிகளையும் மீட்டுள்ளது. அக்கப்பலில் இருந்த சுமார் 20 பேர் பசியால் இறந்துவிட்டதாகவும் அவர்களின் உடல் கடலில் தூக்கி வீசப்பட்டுள்ளது என்றும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Edited by nedukkalapoovan

மியான்மாரில் இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற சிறிய கப்பல் ஒன்று இயந்திரக் கோளாறால் முல்லைத்தீவு கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த போது சிறிலங்கா கடற்படையினர் அக்கப்பலை மீட்டு திருகோணமலை கடற்படைத் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் 71 குடியேற்றவாசிகளுடன் இழுவைப் படகு ஒன்று மீட்பு

(இணைப்பு 2)

இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் 71 சட்ட விரோத குடியேற்றவாசிகளுடன் இழுவைப் படகு ஒன்றை சிறீலங்கா கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர்.

மீனவர்கள் வழங்கிய தகவல்களை அடுத்து, இன்று காலை முல்லைத்தீவிலிருந்து 150 கடல்மைல் தொலைவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த இக்கப்பலை சிறீலங்காக் கடற்படையினர் தடுத்ததோடு, இழுவைப் படககையும், குடியேற்ற வாசிகளையும் திருமலைத் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 9ம் நாள் மியான்மார் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக ஆட்களை ஏற்றிச் சென்ற இழுவைப் படகு கடந்த பெப்ரவரி 20ம் நாள் முதல் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக கடலில் தத்தளித்துள்ளது.

சிறீலங்கா கடற்படையினரர் 71 பயணிகளிடம் மேற்கொண்ட ஆரம்ப கட்ச விசாரணைகளின் போது, இழுவைப் படகில் 91 பேர் வந்ததாகவும், இவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 20 பேரின் சடலங்களும் கடலில் வீசப்பட்டுள்ளன. 91 பேரில் 24 பேர் மியான்மார் (பர்மா) நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் 67 பேர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

அப்ப இலங்கையிலையும் கொஞ்ச சனம் அசைலம் அடிச்சு இருக்குது எண்டுறீயள்...!!

இல்லை மலேசியா போன சனத்தை வலுக்கட்டாயமா அசைலம் குடுக்கினமோ...?? சர்வதேசத்துக்கு காட்டலாம் இல்லையா சனம் எல்லாம் இலங்கையிலை அசைலம் அடிக்குது எண்டு...! இலங்கை எவ்வளவு நல்ல நாடு...

இந்த கொலைகாறரிட்ட பிடிபட்ட அப்பாவி வெளிநாட்டு சனத்தை விடுவிக்க குரல் குடுக்க மாட்டீங்களா...??

Edited by தயா

சிறீலங்கா கடற்படையின் blue water capabilites கடந்த 2 வருடத்தினுள் வளர்ச்சியக்கண்டிருக்கிறது எண்டது மீண்டு நிரூபிக்கப்பட்டிருக்கு.

பொருளாதாரச் சுமைகள் மத்தியிலும் அது தொடர்ந்தும் பேணப் படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா கடற்படையின் blue water capabilites கடந்த 2 வருடத்தினுள் வழர்ச்சியக்கண்டிருக்கிறது எண்டது மீண்டு நிரூபிக்கப்பட்டிருக்கு.

பொருளாதாரச் சுமைகள் மத்தியிலும் அது தொடர்ந்தும் பேணப் படுகிறது.

so what..

ஓஓஓ.. எனவே புலிகளால உந்தக் கேப்பபிலிற்றிகளை மீறி ஆயுதமோ என்னமுமோ தருவிக்க முடியாது. எனவே போராட்டம் மிகவும் கடுமையான சவாலை எதிர்கொண்டு நிற்கிறது. இதை உணராம புலம்பெயர்ந்துள்ள புண்ணாக்குகள்.. தமிழீழக் கனவில இருக்கினம். நாங்கள் உதுகளை உன்னிப்பா அவதானிச்சு.. போராட்டத்தின்ர தன்மையை விளங்கிக் கொள்ளுறது எங்கட அறிவு என்றியளோ..??!

உந்தக் கேப்பபிலிற்றிகள் இன்றல்ல.. குமரப்பா புலேந்திரன் காலத்துக்கு முன்னமிருந்தே இருக்குது. அப்பவும் அமெரிக்க உளவுத் தகவல்கள்.. இந்திய உளவுத்தகவல்கள்.. இஸ்ரேலிய உளவுத்தகவல்கள்.. பாகிஸ்தானிய உளவுத் தகவல்கள் சிறீலங்காவுக்குக் கிடைச்சதுதான். இப்பவும் கிடைக்குதான். தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இத்திறனை அதிகரிச்சிருக்கும். அதற்காக புலிகள் எப்பவும் கப்பலைக் கொண்டு வந்து நடக்கடலில விட்டிட்டு.. விடுப்புக் காட்டுவாங்க என்று எதிர்பார்க்கப்படாது.

உதையே வைச்சு சனத்துக்கு விளங்காத மாதிரிக்கு நாலு இங்கிலீசுப் பதங்களை எடுத்துவிடுறது.. புத்திசாலித்தனம் என்றது அல்ல. உது கள நிலவரத்தை அறியாத போராட்ட வளர்ச்சிக்கட்டம் சந்தித்த சவால்களை அறியாத ஒரு அறியாமையின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேணும். புலிகளைப் பற்றி.. ஆக அடிமட்டமாவும் எடைபோடக் கூடாது. ஆக அதிகமாகவும் தோற்றப்பாடு காட்டக் கூடாது..! :wub::rolleyes:

Edited by nedukkalapoovan

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது. :rolleyes::wub::lol:

புலிகளுக்கேவா :lol::lol::D

சிறீலங்கா கடற்படையின் blue water capabilites கடந்த 2 வருடத்தினுள் வழர்ச்சியக்கண்டிருக்கிறது எண்டது மீண்டு நிரூபிக்கப்பட்டிருக்கு.

பொருளாதாரச் சுமைகள் மத்தியிலும் அது தொடர்ந்தும் பேணப் படுகிறது.

கடற்படையின் பலம் அதிகரிச்சுதோ இல்லையோ ஆனா இந்த கப்பல் முல்லைக் கடற்பரப்பிலை தத்தளிக்கிறதை கடற்படை கண்டு பிடிக்கவில்லையாம். முல்லைத்தீவிலை இருந்துதானாம் இந்த விடயம் சொல்லப்பட்டது. அதுக்குப் பிறகுதான் கடற்படையினர் கப்பலை மீட்கிற நடவடிக்கையில் இறக்கினவை.

மின்னல் அண்ணை அவிக்கிறதையும் கொஞ்சம் அளவாக அவியுங்கோ. 150 கடல் மைல்கள் எண்டா கிட்டத்தட்ட 270 கிலோ மீற்றர். உதை என்னண்டண்ணை முல்லைத் தீவு கடல் எண்ணுவியள்?

சரி உங்கடை முல்லைத் தீவு கடற்பரப்பு கதையையே எடுப்பம். முந்தி யோர்தானிய கப்பலை தங்கடை கட்டுப்பாட்டு கடற்பரப்பில ஆபத்தில மாட்டுப்பட்டதால் காப்பாற்றினார்கள். இப்ப என்ன கட்டுப்பாட்டை இழந்தாச்சு எண்டு சொல்லுறியளளோ?

சா... உந்த கப்பலை எங்கட பெடியள் பிடிச்சு இருந்தா, நாங்கள் அனுப்பி கிளிக்கிற காசிலை 71 பேருக்கும் அசைலமும் குடுத்து இலவசமா சாப்பாடும் குடுத்து இருக்கலாம்....!

மின்னல் அண்ணை அவிக்கிறதையும் கொஞ்சம் அளவாக அவியுங்கோ. 150 கடல் மைல்கள் எண்டா கிட்டத்தட்ட 270 கிலோ மீற்றர். உதை என்னண்டண்ணை முல்லைத் தீவு கடல் எண்ணுவியள்?

சரி உங்கடை முல்லைத் தீவு கடற்பரப்பு கதையையே எடுப்பம். முந்தி யோர்தானிய கப்பலை தங்கடை கட்டுப்பாட்டு கடற்பரப்பில ஆபத்தில மாட்டுப்பட்டதால் காப்பாற்றினார்கள். இப்ப என்ன கட்டுப்பாட்டை இழந்தாச்சு எண்டு சொல்லுறியளளோ?

அண்ணை நான் ஒண்டும் அவிக்கேல்லை லங்காஈநியூஸிலை வந்த செய்தி இது.

Navy saves the lives of 71 illegal migrants

(Lanka-e-News, 2008 March 03, 11.10 AM) Sri Lanka Navy recued 71 illegal migrants in a wrecked ship off the Eastern coast today (03).

Twenty passengers were already dead when Navy came for their rescue following information from the residents of Mullaithivu shore who observed the suspicious vessel. The Navy launched the rescue mission with two vessels last night.

The ill-fated vessel had left the shores of Mianmar with 67 Burmese and 24 Bangladesh nationals on board on February 09. The passengers were the job seekers in Malaysia and Thailand.

It has been floating in the sea since February 20 following a technical failure.

Navy completed the rescue mission around 8.00 AM today.

Amongst the twenty persons died in starvation and dehydration, 17 are Burmese nationals and three are Bangladeshi.

The Navy is now planning to tow the vessel to Trincomalee harbor.

குறுக்காலபோவானின் ஒரே நோக்கம் புலிகள் பலவீனமாயிருக்கின்றார்கள் நீங்கள் பேசாம உங்கள் வேலையைப் பார்த்திட்டு இருங்கோ என்பதுதான். இடைக்கிடை தான் தமிழீழத்திற்கு சார்பானவர் என்று காட்டுறதுக்காக அப்பப்ப புலிகளுக்கு சார்பா கொஞ்சம் எடுத்துவிடுவார். இவரின் கதையால் பல தமிழீழ ஆதரவாளர்களை இழந்ததைவிட இவர் இதுவரைக்கும் சாதித்தது ஒன்று இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரப் படகில் சட்டவிரோதக் குடியேற்ற முயற்சியில் ஈடுபட்டோருக்கு நேர்ந்த அவலம்:

நடுக்கடலில் 13 நாட்களாகக் குடிதண்ணீர், உணவின்றித் தத்தளித்த

பங்களாதேஷ், மியான்மார் பிரஜைகள் 71 பேர் மீட்பு; 20 பேர் சாவு!

முல்லைத்தீவு ஆழ்கடலில் இலங்கைக் கடற்படை காப்பாற்றியது

நடுக்கடலில் 13 நாட்களாகக் குடிதண்ணீர், உணவு வசதியின்றி மரப் படகு ஒன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 71 பங்களாதேஷ், மியான்மார் பிரஜைகளை இலங்கைக் கடற்படை மீட்டுள்ளது.

இதேவேளை, இவர்களுடன் பயணம்செய்த 20 பேர் பட்டினி மற்றும் தாகம், நீரிழப்பு ஆகியவை காரணமாக நடுக்கடலில் மரணித்ததுடன் அவர்களின் உடல்களும் கடலிற்குள் வீசியெறியப்பட்டுள்ளன.

முல்லைத்தீவுக் கடற் பகுதியிலிருந்து தொலைவில் வைத்து இலங்கைக் கடற்படை குறிப்பிட்ட படகைக் கைப்பற்றிய வேளையே இந்தத் துயரம் பற்றித் தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகச் சந்தேகித்த கடற்படையினர் மரப்படகொன்றைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். மீனவர்களே இந்தப் படகு குறித்து கடற்படைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

பெப்ரவரி 9ஆம் திகதி மியன்மாரிலிருந்து குறிப்பிட்ட படகில் 67 சட்டவிரோத குடியேற்றவாசிகள் புறப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் மேலும் 24 பேரை ஏற்றிக்கொண்டு மலேசியா அல்லது தாய்லாந்திற்குப் பயணித்துக் கொண்டிருந்த படகு பெப்ரவரி 20 ஆம் திகதி இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து படகில் உணவு மறறும் குடிதண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் 17 மியன்மார் பிரஜைகளும், 13 பங்களாதேஷ் பிரஜைகளும் பட்டினி மற்றும் தாகம் காரணமாக மரணித்தனர் என்று உயிர்தப்பியவர்கள் தெரிவித்தனர் என இராணுவப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர்களின் சடலங்களைத் தாங்கள் கடலில் வீசியெறிந்துவிட்டனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மியன்மாருக்கும் பங்களாதேஷ் எல்லைக்கும் இடையில் உள்ள கொக்ஸபஜார் பகுதியிலிருந்தே இப்படகு புறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட படகு தற்போது திருகோணமலைத் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் மீட்கப்பட்டவர்களுக்கு உணவும் மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து பங்களாதேஷ் மற்றும் மியன்மார் தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

http://www.sudaroli.com/pages/news/today/02.htm

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் அண்ணை அவிக்கிறதையும் கொஞ்சம் அளவாக அவியுங்கோ. 150 கடல் மைல்கள் எண்டா கிட்டத்தட்ட 270 கிலோ மீற்றர். உதை என்னண்டண்ணை முல்லைத் தீவு கடல் எண்ணுவியள்?

சரி உங்கடை முல்லைத் தீவு கடற்பரப்பு கதையையே எடுப்பம். முந்தி யோர்தானிய கப்பலை தங்கடை கட்டுப்பாட்டு கடற்பரப்பில ஆபத்தில மாட்டுப்பட்டதால் காப்பாற்றினார்கள். இப்ப என்ன கட்டுப்பாட்டை இழந்தாச்சு எண்டு சொல்லுறியளளோ?

ஆமாம் கட்டுப்பாட்டை இழந்திட்டினம். கடற்புலிகளின் செயற்பாடுகளை blue water capabilite 110% முடக்கிவிட்டன. அதாலதான் புலிகள் இப்படகை மீட்கப் போகவில்லை. அவர்களிடம் ஒரு மீன்பிடிப்படகு கூட இப்போ இல்லை. புலிகளின் படகுகள் கப்பல்கள் எல்லாம் நேவியாலும் விமானப்படையாலும் அழிக்கப்பட்டுவிட்டன. நேவி வன்னியை நாலு பக்கத்தாலும் சூழ்ந்திட்டுது. ஆமி 16 திக்குகளாலும் சூழ்ந்திட்டுது. மகிந்த தலைமையில் சரத் பொன்சேகாவின் வழிகாட்டலின் கீழ் சிங்களவன் ஓர்மமாப் புறப்பட்டு வாறான். இவை இன்னும் தமிழீழம் பிறக்கும் என்று அவிக்கினம். சர்வதேச ஆதரவும் இல்ல. புலம்பெயர்ந்த புண்ணாக்குகள்.. பன்னாடைகள்.. கு*டி கழுவீ பிழைக்கிறதுகள்.. மந்தைகள் உதை விளங்கிக்காம இருக்கினம். தினமும் விமானத்தாக்குதலின் அகோர அச்சொட்டு மற்றும் அதி உயர் தொழில்நுட்பத்துக்கு புலிகள் நூறு நூறா இறக்கினம். பிரபாகரனால எனி இயங்க முடியாது என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டாயிற்று. போராட்டம் கைவிடப்பட்டு 9 மாதமாச்சுது. மிக விரைவில் நடேசன் இதை அறிவிக்கிறதோட புலிகள் அனைவரும் சிறீலங்கா அரசிடம் சரணடைவதை கண் குளிரப் பார்க்கத்தான் போறியள்.

வடக்கை டக்கிளஸ் ஆள.. கிழக்கை கருணா ஆள.. வடக்கு கிழக்கை எங்கட சங்கரி அம்மான் ஆள.. என்ன ஒரு அற்புதமான ஜனநாயக தமிழீழம் பிறக்கும். அப்ப சர்வதேசம் அதை அங்கீகரிக்க... நாங்க வெற்றி முரசம் கொட்டுறமோ இல்லையோ என்று பாருங்கோவன்... புலம்பெயர்ந்த புண்ணாக்குகள். அப்ப தெரியும் நாங்க எப்படி புறக்கணி சிறீலங்கா பனர் மூலம் சிறீலங்காப் பொருளாதாரத்தை நசுக்கி.. டக்கிளஸ், கருணா, சங்கரி அம்மானுக்கு ஆட்சி அமைக்க உதவினம் என்று..! :lol::wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:wub: நெடுக்கு,

கருத்தெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இது உங்கட கருத்துமாதிரித் தெரியவில்லையே ? மன உளைச்சளில இங்கு ஒருவர் எழுதித் திரியும் கருத்துப்போல அல்லவா இருக்கு ?!

நீங்கள் வேற, சிங்களவன் இன்னும் ஓர்மத்தோட சண்டை பிடிக்கத் தொடங்கவில்லை. எங்கட சரத் அண்ணாவும், ராஜபக்ஷ அண்ணாவும் எழும்பி நிண்டிச்சனம் எண்டால் நாலு சறம் கட்டின பயங்கரவாதிகளும் ஒண்டிக்கிருப்பினம். உது தெரியாமல் உந்த மோட்டுப் பனங்கொட்டையளும், புலத்தில இருக்கிற மந்தைக் கூட்டமும் சும்மா அள்ளுப்பட்டுத் திரியுது.

எங்களுக்குத் தேவையெல்லாம் உந்தப் புலிப் பயங்கரவாதிகள் தோக்க வேணும், ஓர்மத்தோட சண்டை பிடிக்கப்போகும் எங்கட ராணுவம் வெல்ல வேணும், உந்த மோட்டுப் பனக்கொட்டையளின்ர முகத்தில கரி பூச வேணும். எல்லாம் முடிந்த பிறகு உவையள் என்னத்தை வைச்சுப் புளுகிவினம் எண்டு பாக்க வேணும்.

உவைக்கு ஒரு போராட்டம், அதுக்கு ஒரு தேசியம் !

மின்னல் அண்ணை நான் நினைச்சன் நீங்கள றேடாராலை 270 கிலோமீற்றருக்கு அப்பால இருக்கிறதுகளையும் பார்க்க முடியும் தானே எண்டு நியாயப்படுத்துவியள் எண்டு.

ஆனால் நீங்களை கவுத்துப் போட்டியளே. சரி உங்கடை முல்லைத்தீவு கரையேரத்தில இருந்த குடிமக்கள் நேவிக்கு தகவல் சொன்ன கதைக்கே வருவம். 270 கிலேமீற்றர் தூரத்தில இருக்கிறதை குடிமக்கள் கரையில நிண்டு பைனர்குலோஸ் ஆல பாத்தவையோ இல்லாட்டி ஏதாலும் கெலோகிராம் பூட்டின பைனர்குலோஸ்க்காலை பனை மரத்தில ஏறி இருந்து பாத்தா தெரியுமாமோ? இல்லாட்டி மீனவர் சங்கங்கள் றேடார்களை இயக்கத் தொடங்கிவிட்டினமோ?

அடுத்த கிழமை நம்மடை புவிறிஸ் எழுதுவராக்கு வாட்டஜெற்றில றேடாரை பூட்டினால் எல்லாத்தையும் பார்க்கலாம் அதையும் கொலகிராமுக்காலை பாத்தா சொல்லி வேலையில்லை எண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறம் எண்டு.

இந்திய மாமா INSAT 4B வேவு செய்மதியை வங்க கடலிலை நிரந்தரமாக நிப்பாட்டி வச்சு இருக்கேக்கை எங்களுக்கு ஏன் ராடர்கள் வேணும்...??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடற்படையினரால் மீட்கப்பட்ட வெளிநாட்டவாகளை சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

3/4/2008 2:51:23 PM

வீரகேசரி இணையம் - முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் மரப் படகு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 71 பங்களாதேஷ் மற்றும் மியன்மார் பிரஜைகளை சொந்த நாடுகளுக்கு அனுப்புவதற்காக அந்த நாடுகளின் தூதரகங்களிடம் கையளிக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டரீதியான செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர் இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் தூதரகங்களுக்கு இவர்கள் கையளிக்கப்படவுள்ளனர்.

மலேசியாவிலும் தாய்லாந்திலும் சட்டவிரோதமாக் குடியேறும் நோக்கில் 15 மீட்டர் நீளமான மரப் படகொன்றில் பிரயாணம் செய்த 50 மியன்மார் வாசிகளும் பங்களாதேஷ் பிரஜைகள் 21 பேரும் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த வேளை கடற்படையினரால் நேற்று காப்பாற்றப்பட்டனர்.

திருகோணமலைத் துறைமுகத்தில் இவர்களுக்கு உணவும் மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுவருகின்றமை குறிபபிடத்தக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கே படகிலிருந்து மீட்கப்பட்ட 71 வெளிநாட்டவர்களையும் கொழும்பிற்கு கொண்டுவர நடவடிக்கை

3/5/2008 12:41:35 PM

வீரகேசரி இணையம் - கடந்த திங்கட்கிழமை கிழக்கே முல்லைத்தீவு கடற்கரையில் படகொன்றிலிருந்து மீட்கப்பட்ட 71 வெளிநாட்டவர்களையும் இன்று கொழும்பிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிற்கு கொண்டு வரப்படும் இவர்கள் விசாரணைகளின் பின் தூதரங்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி தஸாநாயக்க தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை கிழக்கு கடற்படையில் கடற்படையினர் படகொன்றிலிருந்து 71 வெளிநாட்டவர்களை மீட்டிள்ளனர் . 91 பேர் இப்படகில் பயணித்துள்ளனர் . எனினும் இவர்களுள் 20 பேர் பட்டினி காரணமாக உயிரிழந்துள்ளனர்.

படகிலிருந்து மீட்கப்பட்டவர்கள் பங்களாதேஷ் மற்றும் மியன்மார் நாட்டைச் சேர்ந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்பது குறிப்பிடத்கது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடற்படையினரின் மனிதாபிமான நடவடிக்கையினை ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் பாராட்டியுள்ளது-கெஹெலிய

3/5/2008 2:27:35 PM

வீரகேசரி இணையம் - முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் உயிருக்காகப் போராடிய 71 வெளிநாட்டவர்களை மீட்டு உபசரித்த கடற்படையினரின் மனித நேய நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இலங்கைக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

மலேசியாவிலும் தாய்லாந்திலும் சட்டவிரோதமாக் குடியேறும் நோக்கில் மரப்படகொன்றில் பிரயாணம் செய்த 50 மியன்மார் வாசிகளும் பங்களாதேஷ் பிரஜைகள் 21 பேரும் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த வேளை மார்ச் மாதம் 3 ஆம் திகதி கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.

இயந்திரம் செயலிழந்ததன் காரணமாக 12 தினங்களாக கடலில் மிதந்த இந்தப் படகு இந்திய கடல் எல்லையைத் தாண்டியே இலங்கைக் கடல் பரப்புக்குள் வந்துள்ளது. இந்திய கடற்படையினரால் கண்டுகொள்ள முடியாமல் போன இப்படகை விழிப்புடன் இருக்கும் இலங்கை கடற்படையினர் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

திருகோணமலைத் துறைமுகத்தில் இவர்கள் உணவும் மருத்துவ சிகிச்சைகளும் அளி;க்கப்பட்டு நன்கு உபசரிக்கப்பட்டனர். இதற்காகவே ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளது என்றார்.

இது தொடர்பாக கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், படகைக் கைப்பற்றிய படையினர் படகில் தீவிர தேடுதல் நடத்தினர். எனினும் மனிதர்களைத் தவிர எந்தப் பொருளும் அங்கு காணப்படவில்லை. சிறிதளவு உணவு கூட அப்படகில் இருக்கவில்லை. எனவேதான் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை திருகோணமலைத் துறைமுகத்துக்கு அழைத்துவந்து உபசரித்தோம் என்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.