Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடேசன் அவர்களின் அறைகூவலை ஏற்போம் - புலம்பெயர் இளைஞர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட் பண்ணிடாங்க மறுபடியும் :D சபேசன் சொல்வது விடுதலைப் புலிகள் இந்து மதத்திற்கு ஏதிரானவர்கள் என்று தான் :D விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாழ்களம் மிக திறமையாக இயங்குகின்றது போல உள்ளது <_< படிப்படியாக விஷத்தை செலுத்துவது போல.

Edited by tamillinux

  • Replies 65
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இந்து மதம் என்ற பெயரில் ஆரியம் புகுத்தியுள்ள விடயங்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கருத்து வெளியிட்டுள்ளது குறித்து மதவாதிகள் கவலை கொள்ளத் தேவையில்லை.

விடுதலைப் புலிகள் சாதியத்திற்கும்தான் எதிரானவர்கள். அதற்காக நீங்கள் எல்லோரும் சாதியத்தை கைவிட்டு விட்டீர்களா?

அதே போன்று ஆரிய இந்துத்துவத்தையும் பொத்தி வைத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்

சாதியை காப்பாற்றிக் கொண்டே போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாக சொல்வது போன்று, ஆரியத்தையும் காப்பாற்றி வைத்துக் கொண்டு புலிகளை ஆதரிப்பதாக நீங்கள் சொல்லிக் கொள்ளலாம்

ஆகவே பதறவேண்டாம்!

  • கருத்துக்கள உறவுகள்

நடேசன் இந்துமதத்தை எதிர்க்கச் சொல்லவில்லை. ஆரியவாதத்தை இனங்கண்டு ஒதுக்கச் சொல்லி உள்ளார். இது நடேசன் உட்பட விடுதலைப்புலிகளில் உள்ள சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள்.

இராமாயணமே பொய் என்பவர்கள்.. இராவணனை தமிழனாக்க எங்கிருந்து ஆதாரங்களைப் பெற்றார்கள் இது குறித்து நடேசன் விளக்கமளிப்பாரா..??!

ஆனால் ஒன்றைச் சொல்லி இருக்கிறார்கள் தமிழர்களின் வரலாறு இதிசாகங்களூடு நோக்கப்படாது தொல்பொருளியல் ஆய்வுகளூடு நோக்கப்பட வேண்டும் என்று. இதைத்தான் நாமும் இங்கு வலியுறுத்துகின்றோம்..!

ஆனால் இதைத் திரித்து தமது இந்துத் துவேசிய பாசிச நிலைப்பாட்டுக்கு விடுதலைப்புலிகளைப் பகடைக் காயாக்கி அதில குளிர்காய நினைக்கின்றனர் சிலர்..! <_<

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் சபேசன் என்ன நக்கலா?

அங்க ஒரு மதமும் தமிழினத்த திரிவுபடுத்தேல்ல

எவன் ஒருவன் இந்து சமயத்த மக்கள் நம்பிக்கைகள எதிர்கிறானோ அவனால மக்கள மனச வெல்லவே முடியாது சோ சபேசன் நீங்கள் என்ன தான் கத்தினாலும் குழறினாலும் இந்து சமயம் அதன் நம்பிக்கை இன்னும் பல நூற்றான்டுகள் நிலைத்து நிற்க்கும்...

நீங்க யாரும் மதத்தில் காட்டும் அக்கறையை மனித தன்மையில் காட்டுவதிலேயே ..!

மதமானது மனிதர்களை இணைக்கவேண்டும். பிரிக்கக்கூடாது.

  • தொடங்கியவர்

"நடேசன் அவர்கள் இந்து மதத்ததை எதிர்க்கச் சொல்லவில்லை, ஆரியவாதத்தையே எதிர்க்கச் சொல்கிறார்" என்ற நெடுக்காலபோவானின் பார்வை ஓரளவு சரியானது.

ஆரியவாதத்தை தன்னிடம் இருந்து இந்து மதம் நீக்கி விடுகின்ற போது, அதை எதிர்ப்பதற்கான காரணங்கள் இல்லாது போகும் என்றும் நாமும் இங்கு பல முறை சொல்லியிருக்கிறோம்.

ஆனால் தமிழீழத்தின் தேசியத் தலைவரும், தமிழீழத்தின் அரசியற்துறைப் பொறுப்பாளரும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களை வெறுமனே தனிப்பட்ட கருத்துக்கள் என்று சொல்வது சரியா என்பது விவாதத்திற்கு உரியது.

சுண்டல்!

இராவணன் ஒரு அசுரன் என்பது இந்துக்களின் நம்பிக்கை, ஆனால் அதற்கு எதிராக கருத்துச் சொல்லியிள்ள விடுதலைப் புலிகளால் மக்களின் மனதை நன்றாகவே வெல்ல முடியும். அவர்கள் மக்களின் மனதை வென்றிருக்கிறார்கள்.

உலகில் மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துச் சொன்ன பல தலைவர்கள் மக்களின் மனதை வென்றிருக்கிறார்கள்.

காரணம் அவர்கள் சொல்கின்ற கருத்து மக்களுக்கானதாக இருக்கிறது. விடுதலைப் புலிகள் சொல்லியுள்ள கருத்தும் தமிழ்தேசியத்திற்கானதாக இருக்கிறது. தமிழ் தேசியத்தை பலப்படுத்தும் நோக்கோடு கருத்துச் சொல்லும் விடுதலைப் புலிகளை தமிழர்கள் புறம்தள்ளுவதற்கு எக் காரணமும் இல்லை.

மதவெறியர்களுக்கு சில வேளைகளில் ஏதாவது காரணம் இருக்கக் கூடும்.

சபேசன் இலங்கை மண் நாடகத்தை நீங்கள் படித்து இருக்கிறீர்களா..?? என்னால் படிக்க படவில்லை ஆனால் நாடகத்தின் ஒலி வடிவத்தை 90 களில் புலிகளின் குரலில் பெரும் பகுதியானவைகளை தொடராக கேட்டு இருக்கிறேன்...

இராணவனையும் இராமனையும் பற்றிய கதை தான் இலங்கை மண்.. ஆனால் மயில்ராவணன் , கும்பகர்ணன், வாலி , சடாயு எல்லாருமே சூள்ச்சியால் கொல்லப்படுகிறார்கள் . நாடகத்தில் இறுதிபாகத்தை என்னால் கேட்க்க முடியவில்லை...! ஆனால் நாடகத்தின் போக்கு இராவணனும் கொல்லப்படுவான் போலதான் இருந்தது...

இதிகாசம் ஒண்று எழுதப்படும் போது அதில் எல்லாருமே நோக்குவது அந்த கதையில் சொல்லப்படும் நீதிகள் பற்றித்தான்... அப்படி நீதி எண்று ஒண்று இல்லை எண்றால் அது வெறும் கதை அல்லது கொஞ்சம் மேலேபோய் காவியம் எனும் பட்டம் மட்டும்தான் கிடைக்கும்... ஒரு இதிகாசத்துக்கு சமாந்தரமாக எழுதப்படும் கதையில் நீதி செத்து போய் விட்டு இருக்க கூடாது...!

இலங்கை மண் இதிகாசத்தில் காமுகன் இராமன் இராவணனால் வெல்லப்பட்டு, இராவணன் மகள் சீதையால் நிராகரிக்கப்பட்டு இராவணன் கொடுத்த உயிர் பிச்சையால் அயோத்தி திரும்பினான் எண்று சொல்லப்பட்டு இருக்குமானால் ஒரு தமிழனாக பெருமை பட்டு இருப்பேன்...! இந்த கதை மீண்டும் திருத்தி எழுதப்பட வேண்டும்... அதுவும் சிவபத்தனான ( இலங்கை மண் சொல்வதுபோல) இராவணன் தம்பிகள் தாயாதிகள் எல்லாரையும் காத்து அநீதியை வெண்றான் எனும் நீதியோடு ...

அதுதான் தமிழனுக்கு பெருமை சேர்க்கும்... உண்மையும் கூட..

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடேசண்ணயின்ர அறைகூவலும்......ராமாயணமும்.....இலங

்கை மண்ணும் வலு முக்கியம்தானே??????

சிவாசி அய்யா இந்தியாவில நிண்டு எங்கட பிரச்சினயில தலயிட்டு இந்தியாவ தீர்வு தர சொல்லி கேட்டிருக்கார், பிரேமசந்திரன் அய்யா தன்ர பாணியில பிரிஐ யுக்கு செய்தி குடுத்திருக்கார், நடேசண்ணை சொன்னதா சமாதான பேச்சுவாத்தக்கு றெடியாம் எண்டும் றீல் விட்டிருக்கார், கிழக்கு லண்டன் பல்கலைகழகத்தில சமாதான விரும்பியள் ஒண்டுசேந்து சமாதானம்பற்றி பேச போரதா இங்க களத்தில கதை வந்திருக்கி, இங்க கடசி உயிருள்ளவர போராடுவோம் எண்டு வெளிநாட்டுக்கு அகதியா வந்த நாங்கள் சொல்லுரம், வெள்ளைக்கொடிய பிடிச்சுகொண்டு வாங்கோ உங்களுக்கு பாதுகாப்பு தாரமெண்டு சிங்களவன் வன்னி மக்களுக்கு சொன்னதா கருப்பியக்கா செய்தி சுட்டு போட்டிருக்கா, பிள்ளையான் 13 ஆவது திருத்தசட்டம் அமுல் படுத்திறத பற்றியும் மாகாணசபை தேர்தல் பற்றியும் வரவேற்பு அறிக்கைவிட்டதா உங்கனக்க எங்கயோ வாசிச்சன். உதுகள வாசிக்க பெட்டிய கட்டுரது நல்லதா படுது, குஞ்சம் போட்ட பட்டு வேட்டிக்கு ஆசைபட்டு கந்தல் வேட்டியும் போட்டுது, கச்சைதான் மிஞ்சிகிடக்கு. அதயும் உருவிட போறாங்கள் அதுதான் மண்ணவிட்டு பெட்டிய கட்டுரது நல்லது எண்டு நெக்கிரன். நீங்கள் என்ன நெக்கிரியள்?????????

  • கருத்துக்கள உறவுகள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'நெனரமமயடயிழழஎயn' pழளவஸ்ரீ'392442' னயவநஸ்ரீ'ஆயச 17 2008இ 02:46 Pஆ'ஸநடேசன் இந்துமதத்தை எதிர்க்கச் சொல்லவில்லை. ஆரியவாதத்தை இனங்கண்டு ஒதுக்கச் சொல்லி உள்ளார். இது நடேசன் உட்பட விடுதலைப்புலிகளில் உள்ள சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள்.

ஜஉழடழசஸ்ரீ"சூகுகு0000"ஸஇராமாயணமே பொய் என்பவர்கள்.. இராவணனை தமிழனாக்க எங்கிருந்து ஆதாரங்களைப் பெற்றார்கள் இது குறித்து நடேசன் விளக்கமளிப்பாரா..??! ஜஃஉழடழசஸ

ஆனால் ஒன்றைச் சொல்லி இருக்கிறார்கள் தமிழர்களின் வரலாறு இதிசாகங்களூடு நோக்கப்படாது தொல்பொருளியல் ஆய்வுகளூடு நோக்கப்பட வேண்டும் என்று. இதைத்தான் நாமும் இங்கு வலியுறுத்துகின்றோம்..!

ஆனால் இதைத் திரித்து தமது இந்துத் துவேசிய பாசிச நிலைப்பாட்டுக்கு விடுதலைப்புலிகளைப் பகடைக் காயாக்கி அதில குளிர்காய நினைக்கின்றனர் சிலர்..! :னுஜஃஙரழவநஸ

கலோ நெடுக்ஸ்!

நீங்கள் புதிதாய் எதையும் சொல்லவில்லையே...... சபேசன் அவர்கள் சொல்லிதைத்தான் வேறு விதமாக சொல்லுகின்றீர்கள். இந்து மதத்தை யாரும் எதிர்க்கவில்லை எதிர்க்க போவதுமில்லை.............. ஆனால் இந்து மதமூடாக செருகபடும் ஆரிய பார்ப்பாணிய கொடிய அழுக்கான அசிங்கமான சிந்தனைகளை புறம்தள்ளி பழங்கால தமிழனிடமிருந்த ஆரோக்கியத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள் என்றுதான் சொல்கின்றார்கள். அதை சொல் முனையும் போதெல்லாம் நீங்கள் கொண்டுவந்து முன்னிறுத்துவது பெரியாரின் தனிபட்ட வாழ்கையை. பெரியாரின் தனிபட்ட வாழ்கையை வைத்து அவருடைய சிந்தனைகளையும் புறந்தள்ள எத்தணிப்பவர்கள். தோமாஸ் எடிசனின் தனிபட்ட வாழ்வை முன்னிறுத்தி மின்சார பாவனையை முற்றாகவும் நிறுத்த தாயாராக உள்ளனரா?????

நடேசன் அவர்களின் கருத்தை நீங்கள் வாசிக்கவில்லை அல்லது போனால் உங்களுக்கு அந்த கருத்து வடிவாக விளங்கவில்லையென நினைக்கிறேன். இராமாயணத்தில் இராவணன் தமிழனாக புனையபட்டு அவனை அரக்கனாகவும் காட்ட நடந்த முயற்சியே வாதத்திற்குரியது தவிர உங்களின் இராமயணமும் இராவணனுமல்ல. பத்து தலையுடன் ஒரு தழிழ் அரசன் வாழ்ந்தான் என்று எந்த தமிழனும் இதுவரை சொல்வில்லை.

முதல் முதல் வான்படை கண்ட தமிழ் அரசனாக. மேதகு. பிரபாகரன் அவர்களே தமிழர்களால் ஏற்றுகொள்ளப்பட்டிருக்கின்ற

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் சபேசன் என்ன நக்கலா?

அங்க ஒரு மதமும் தமிழினத்த திரிவுபடுத்தேல்ல

எவன் ஒருவன் இந்து சமயத்த மக்கள் நம்பிக்கைகள எதிர்கிறானோ அவனால மக்கள மனச வெல்லவே முடியாது சோ சபேசன் நீங்கள் என்ன தான் கத்தினாலும் குழறினாலும் இந்து சமயம் அதன் நம்பிக்கை இன்னும் பல நூற்றான்டுகள் நிலைத்து நிற்க்கும்...

சூரியன் எவ்வாறு தோன்றியது? இந்த வினாவுக்கான விடை கிடைக்க பெறும் வரை இந்து மதமென்ன எல்லா மதங்களுமே வாழும் அதில் யாருக்கும் சந்தேகமில்லை. உடலுறவின் போதுதான் உண்மையான தெய்வீக நிலையடைந்து கடவுளுடைய கிருபையை உணரலாம் என்ற போக்கினாலனா மதத்தை பொலிஸ் கட்டாயத்தின் பேரில் வன்முறையை கையாண்டே அமெரிக்காவில் தடைசெய்தார்களே தவிர அந்த பக்த்த அடியார் கூட்டம் தமது மதத்தின் தத்துவத்தில் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.

ஆகாவே சுண்டல் அவர்களே நானும் நீங்களும் சேர்ந்து ஓரு மதத்தை உருவாக்கினாலும் பின்தொடர நிறையபேர் உள்ளார்கள்.

இங்கு எல்லோருக்கும் புலிகள் தேவைபடுகின்றனர் சபேசன் மீதான எதிர்கருத்துகள் முதல் கொண்டு சபேசனின் செய்திவரை புலிகளை மையபடுத்தியே இருகின்றன ஆகவே சபேசன் திராவிடத்தை பலப்படுத்த புலிகளை பயன்படுத்திவிட்டார் என சொல்லுவது எடுபடாது.

இங்கு பெரியாரை பற்றி எங்கும் சபேசன் குறிப்பிடவில்லை ஆகவே எங்கோ இருந்த பெரியார் எப்படி இங்கு வந்தார்.பெரியார் கன்னடராக இருக்கட்டும் அதுக்கு என்ன அதற்காக கன்னடர்களிடம் அடகு வைத்துவிட்டோம் என சொல்லுவது ஏற்புடையதல்ல பெரியாரை மதிக்கும் பின்பற்றும் கூட்டம் இன்னும் நிறையவே உண்டு இந்தியாவில் இன்று ஈழப்போராட்டத்துக்கு ஆதரவு தருபவர்கள் திராவிட இயக்கங்களே அடிக்கடி ஈழப்போராட்டம் சம்பாந்தமாக எழுதுவது விடுதலை பத்திரிகை இது தந்தை பெரியாரால் தொற்றுவிக்கப்பட்டதே போராட்டங்களை நடத்துவதும் திராவிட இயக்கங்களே.எந்த இந்துமத கட்சிகளும் அல்ல புலிகளை சண்டாளர் என சாதியத்தை புகுத்தி விமர்சித்தவர் பாரதீக ஜனதா கட்சியை சார்ந்தவர்.ஆகவே வீணாக இந்த பிரச்சினைக்குள் விடுதலைபுலிகளை இழுத்து இரு தரப்பும் வாதிடுவது ஏற்புடையதல்ல விடுதலை புலிகள் ஒன்றும் கறிவேப்பிலை அல்ல ஒரு தமிழ் தேசியத்தின் இன்றைய அடையாளம் ஆகவே அவர்களின் பரப்புரைக்கு ஆதரவு அளிகின்றோமோ இல்லையோ உபத்திரம் செய்யாமல் இருப்போம்

தமிழை தார்பூசி வளர்கவேண்டியதில்லை என்பது உண்மைதான் ஆனால் அப்படி தார்பூசுபவர்கள் பிள்ளைகளை ஆங்ல பள்ளியில் படிக்க வைகின்ரார்கள் என சொல்லுவது யாரை குறிக்கும் என்பது சின்னக்குழந்தைக்கும் புரியும் அந்த நபர்கள் எதிர்நோக்கும் எம் போராட்டம் சார்ந்த பிரச்சினைகளை சற்று கவனியுங்கள் கவனத்தில் எடுங்கள் நாம் யாரும் தமிழீழத்தில் இருந்து செந்தமிழ் பேசி கொண்டு தமிழ் தேசியம் பேசவில்லை என்பதனையும் நினைவில் வைப்பது நல்லது

திராவிடம் இந்துமதம் பற்றி எமது போராட்டம் சார்ந்து விமர்சிப்பது கத்திமேல் நடப்பது போல அது எமது போராட்டத்துக்கும் பரப்புரைக்கும் பங்கம் விளைவிக்க கூடியது ஆகவே சற்று பின்விளைவுகளை நினைத்து சற்று புத்திசாலித்தனமாக நடப்பது நல்லது

இந்தியாவில் இன்று ஈழப்போராட்டத்துக்கு ஆதரவு தருபவர்கள் திராவிட இயக்கங்களே

திமுக, மதிமுக, அதிமுக, தேதிமுக எல்லாரையும் திராவிட இயக்கங்கள் எண்டு நீங்கள் சொல்ல இல்லை எண்டுதான்நான் நினைக்கிறேன்...

தவிரவும் தீவிர தமிழ் உணர்வாளர்கள் பமக, விடுதலைச் சிறுத்தைகள் (தமிழர் பாதுகாப்பு இயக்கம்), கம்யூனிஸ்ருகள் , நெடுமாறன் அண்ணா போண்றோரும் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல...!

என்னை பொறுத்த அளவில் கம்யூனிச அனைத்து விடயங்களையும் (தோற்றுபோன) திராவிட இயக்கம் எண்கிற பெயரால் கொண்டுவருவது ஒருவகை திருட்டுத்தான்... எங்களுக்கு எண்று ஒரு தானித்துவம் இருக்கிறது... வெற்றி பாதையிலை செல்லும் ஈழ தமிழர் தேசியம் இருக்கிறது... எப்போது எல்லாம் தமிழர் தேசம் பற்றி எரிந்தாலும் அப்போ எல்லாம் நீர் அள்ளி ஊற்றி அணைக்கும் தீரம் இருக்கும் தலைவர் இருக்கிறார்.. அவரை மட்டும்தான் நான் நம்புகிறேன்... வேறு யாரையும் பின் தொடர வேண்டிய அவசியம் எமக்கு இல்லை

திராவிட கொள்கைகளில் இருக்கும் பொதுவான சில அடிப்படைகளை ஈழத்தமிழர் தேசியம் கொண்டு இருந்தால் ஈழத்தமிழ் தேசியத்து சிந்தனை முழுமையான திராவிட கொள்கைகளை அடிப்படையாக கொண்டது எண்று அர்த்தம் இல்லை... ஈழத்தமிழர் தேசியம் எப்போதும் தனித்துவமானது....!!!

மதம் கொடுக்கும் ஏற்றத்தாள்வுகள் ஏற்புடையது அல்ல எண்றாலும், கிறிஸ்தவ பாதிரியார்கள் போண்ற தீவிர சோசலீச வாதிகள் வேறு இடத்தில் கிடையாது என்பதையும் ஏற்க வேண்டும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் புதிதாய் எதையும் சொல்லவில்லையே...... சபேசன் அவர்கள் சொல்லிதைத்தான் வேறு விதமாக சொல்லுகின்றீர்கள். இந்து மதத்தை யாரும் எதிர்க்கவில்லை எதிர்க்க போவதுமில்லை.............. ஆனால் இந்து மதமூடாக செருகபடும் ஆரிய பார்ப்பாணிய கொடிய அழுக்கான அசிங்கமான சிந்தனைகளை புறம்தள்ளி பழங்கால தமிழனிடமிருந்த ஆரோக்கியத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள் என்றுதான் சொல்கின்றார்கள். அதை சொல் முனையும் போதெல்லாம் நீங்கள் கொண்டுவந்து முன்னிறுத்துவது பெரியாரின் தனிபட்ட வாழ்கையை. பெரியாரின் தனிபட்ட வாழ்கையை வைத்து அவருடைய சிந்தனைகளையும் புறந்தள்ள எத்தணிப்பவர்கள். தோமாஸ் எடிசனின் தனிபட்ட வாழ்வை முன்னிறுத்தி மின்சார பாவனையை முற்றாகவும் நிறுத்த தாயாராக உள்ளனரா?????

மருதங்கேணி அம்மணியாரே... நான் புகுத்தாத ஈ வெ ராமிசாமியை நீங்களே புகுத்திட்டு எனக்கு விளக்கம் சொல்லுறாப் போல சொல்லுறது.. முடியல்ல...!

ஆரியவாதம்.. இந்துமதத்தின் ஊடு மட்டும் தான் தமிழர்களை அடைகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா..??! வேறேதும் வடிவங்களில் ஆரியவாதம் வரவில்லையா..?!

ஐரோப்பிய கொள்கைகளுக்குள்ளும்... ஆரியவாதம் என்பதை ஏற்றுக் கொள்ளுறவையின்ர வடிவத்தில வைச்சுப் பார்க்கேக்க.. அங்கும் ஆரியவாதம் இருக்குது. வெறுமனவே ஆரியவாதம் என்பது வட இந்தியா சார்ந்து இந்துசமயம், பார்பர்ணியம் (பிராமண சமூகம்) சார்ந்து மட்டும் தான் இருக்கு என்ற சிந்தனை வரையறையை மாற்றிக் கொள்ளுங்க..!

ஆரியவாதத்தை தமிழர்களின் வரலாற்றுத் திரிவுக்காகப் பயன்படுத்தியதை.. இன்னொரு போலிவாதத்தால சரிக்கட்ட முடியாது. ஆதாரமுள்ள வகையில அதைத் திருத்த முயல வேண்டும். அதற்கு தமிழர்களின் தொன்மையை தனித்துவத்தோட நிரூபிக்கக் கூடியவற்றுக்கான சான்று தேடல் அவசியம். அதைச் செய்யாம.. வெறும் வாயால வெட்டி வீழ்த்த நினைப்பது.. இந்த ஆரியவாதம் தமிழர்களின் வரலாற்றுத் திரிபைச் செய்ததாகச் சொல்வதற்கு ( உச்சரிக்க) மட்டும் உதவுமே தவிர.. நிரந்தரத் தீர்வைத் தேடித்தராது. :huh:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஆரியவாதத்தை இன்னொரு போலிவாதத்தால் சரிக்கட்ட முடியாது என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் முற்று முழுதான உண்மை கண்டுபிடிக்கப்படும் வரை மதத்தின் பெயரில் திணிக்கப்படும் ஆரியத்தை தமிழர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுக கருத்து இதற்குள் இருக்கிறது. அதை ஏற்க முடியாது.

இது ஒரு சூழ்ச்சி நிறைந்த தந்திரம்.

மதத்தின் பெயரில் திணிக்கப்படும் ஆரியவாதம் தமிழ் தேசியத்தை இழிவுபடுத்துகிறது என்பதை அனைவரும் உணர்கிறோம். ஆகவே முதலில் அதை நிராகரிக்கப் பழகுவோம். அதுதான் முக்கியமானது.

நாம் இன்றைக்கு எமது வரலாறு பற்றிச் செய்கின்ற ஆய்வுகள் முற்றுமுழுதாக உண்மையானவையா என்பவை இதற்கு அப்பால்பட்ட விடயங்கள்.

உண்மை சில வேளைகளில் பல நூறு வருடங்கள் கழித்தும் கண்டுபிடிக்கப்படலாம். ஆனால் இன்றே பொய்மையை உதறுவோம். தமிழர்களை முட்டாள்கள் ஆக்கி இழிவுபடுத்தும், ஆரியத்தை உடனடியாக நிராகரிப்போம்.

திமுக, மதிமுக, அதிமுக, தேதிமுக எல்லாரையும் திராவிட இயக்கங்கள் எண்டு நீங்கள் சொல்ல இல்லை எண்டுதான்நான் நினைக்கிறேன்...

தவிரவும் தீவிர தமிழ் உணர்வாளர்கள் பமக, விடுதலைச் சிறுத்தைகள் (தமிழர் பாதுகாப்பு இயக்கம்), கம்யூனிஸ்ருகள் , நெடுமாறன் அண்ணா போண்றோரும் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல...!

என்னை பொறுத்த அளவில் கம்யூனிச அனைத்து விடயங்களையும் (தோற்றுபோன) திராவிட இயக்கம் எண்கிற பெயரால் கொண்டுவருவது ஒருவகை திருட்டுத்தான்... எங்களுக்கு எண்று ஒரு தானித்துவம் இருக்கிறது... வெற்றி பாதையிலை செல்லும் ஈழ தமிழர் தேசியம் இருக்கிறது... எப்போது எல்லாம் தமிழர் தேசம் பற்றி எரிந்தாலும் அப்போ எல்லாம் நீர் அள்ளி ஊற்றி அணைக்கும் தீரம் இருக்கும் தலைவர் இருக்கிறார்.. அவரை மட்டும்தான் நான் நம்புகிறேன்... வேறு யாரையும் பின் தொடர வேண்டிய அவசியம் எமக்கு இல்லை

திராவிட கொள்கைகளில் இருக்கும் பொதுவான சில அடிப்படைகளை ஈழத்தமிழர் தேசியம் கொண்டு இருந்தால் ஈழத்தமிழ் தேசியத்து சிந்தனை முழுமையான திராவிட கொள்கைகளை அடிப்படையாக கொண்டது எண்று அர்த்தம் இல்லை... ஈழத்தமிழர் தேசியம் எப்போதும் தனித்துவமானது....!!!

மதம் கொடுக்கும் ஏற்றத்தாள்வுகள் ஏற்புடையது அல்ல எண்றாலும், கிறிஸ்தவ பாதிரியார்கள் போண்ற தீவிர சோசலீச வாதிகள் வேறு இடத்தில் கிடையாது என்பதையும் ஏற்க வேண்டும்...

நீங்கள் மட்டுமல்ல நானும் தேசியத்தலைவர் மேல் அதீத நம்பிக்கை வைத்திருகின்றேன் ஆனால் அண்மைக்கால நடவடிக்கைகளில் தமிழக சக்திகளை அரவணைத்து போகும் நிகழ்வுகளை அடிக்கடி நீங்கள் காண முடியும் அந்த நகர்வுகளுக்கு நாம் எந்த விதத்திலும் முட்டுகட்டையாக இருக்க வேண்டாம் எனவே நான் சொல்கின்ரேன்

திராவிட இந்துமத ஆரிய கோட்பாடுகளை விமர்சிக்கலாம் வதிடலாம் ஏன் சன்டை கூட பிடிக்கலாம் ஆனால் அதனை புலிகளோடு சம்பந்தப்படுத்தி அவர்களையும் அதற்குள் இழுத்து வாதிடுவது இந்த காலத்துக்கு நல்லதில்லை என்பதே என் கருத்து.நான் சொல்ல வந்ததை புரிந்து கொண்டு இருபீர்கள் என நம்புகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை பத்திரிகையும் வீரமணியும் தமிழர்களை ஈழப்போராட்டத்தை ஆதரிக்கின்றார்கள் எனபதற்க்காக நாங்கள் அவர்களின் கடவுள் இல்லை அல்லது இந்து மதத்தை கொச்சைபடுதத்துகின்ற கருத்துக்களை முற்று முழதாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன.

  • தொடங்கியவர்

யாரும் யாருடைய கருத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

நான்தான் ஏற்கனவே சொன்னேனே. பெரும்பாலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் இன்னமும் சாதியைக் கைவிடவில்லை. பெரும்பாலான தமிழ் மக்கள் சீதனத்தை கைவிடவில்லை. பெரும்பாலான தமிழ் மக்கள் ஆரியப் பற்றை கைவிடவில்லை. இப்படி நிறைய உண்டு.

எமக்காக உயிரைக் கொடுத்து போராடுகின்ற விடுதலைப் புலிகளின் கொள்கைகளையே எம்மில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்ளாத போது, ஆதரவுக் குரல் மட்டும் கொடுக்கின்ற திராவிடக் கட்சிகளின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.

இங்கே ஈழவன் போன்றவர்கள் சொல்வது என்னவென்றால், எமது தலைவரைப் பற்றி எதிரிகள் பிரச்சாரம் செய்வது போன்று, எமக்கு ஆதராவாக உள்ள திராவிடக் கட்சிகளின் தலைவர் குறித்து பொய்யான அவதூறுகளை மேற்கொள்ள வேண்டாம் என்பதுதூன்.

உண்மையில் இங்கே தற்பொழுது நடக்கும் விவாதத்தில் திராவிடக் கட்சிகளையோ தந்தை பெரியாரையோ இழுப்பது அனாவசியமானது.

உண்மைதான் எங்களுக்கு தெரிஞ்சளாவுக்கு வீரமணிக்கு தெரியாது...

எங்களுக்கு உதவி செய்தால் நாங்கள் அவரின் கொள்கயை பின்பற்றுவேமெண்டு அவர் நினச்சா... பெப்பே தான்.

நல்லதை யார் சொன்னாலும் நாம் எதிர்ப்போம்... நாம் சொல்வதே நல்லதென்போம்.

இந்து மதமும் சாதியமும் இரட்டை பிள்ளைகள் இதுகள் பெற்ற பிள்ளை தான் மூட நம்பிக்கை.

எல்லாத்துக்குமா சேர்த்து ஓனம் பண்டிகை கோண்டாடினாத்தான் சமத்துவமும் ஊண்மையும் நீதியும் மிஞ்சும்...

விடுதலை பத்திரிகையும் வீரமணியும் தமிழர்களை ஈழப்போராட்டத்தை ஆதரிக்கின்றார்கள் எனபதற்க்காக நாங்கள் அவர்களின் கடவுள் இல்லை அல்லது இந்து மதத்தை கொச்சைபடுதத்துகின்ற கருத்துக்களை முற்று முழதாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன.

சுண்டல் அது அவரவரர் விருப்பம் கடவுள் இருக்கு என யாரும் உங்களை கட்டாயப்படுத்த முடியாது கடவுள் இல்லை எனவும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது.அது அவரவரர் விருப்பம் மட்டுமே.நான் சொல்லவந்தது புலிகளை இந்த பிரச்சினைக்குள் இழுக்காதீர்கள் என்பது மட்டுமே

நான் இந்து மதத்தவன் அல்ல நான் சைவ சமயத்தவன்.எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் மூட நம்பிக்கை அல்ல அதில் இருக்கும் குப்பைகளை நான் எதிர்கின்றேன்.

இதுவே என் நிலைபாடு.

எனக்கேதோ புலிகள் திசைமாறிப் போய்விட்டார்கள் போல்தான் இருக்கு. போராட்டம் தொடங்கினது சிங்களவங்கள் எங்கடை தேர்களை எரிக்கிறாங்கள் ஐய்யர்மாரை கொதிக்கும் தார்ப் பீப்பாவுக்குள்ளை போடுறாங்கள் எண்டு.

இப்ப என்னடா எண்டா எங்கடை திருகோணஸ்வரம் திருக்கேதீஸ்வரம் போன்ற படல் பெற்ற தலங்கள் எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டு மடுவை மாத்திரம் பாதுகாக்கினமாம். இதுவே இந்துக்களான பழந்தமிழருக்கு பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

அதுக்குள் இராமாயணம் பிழை அதுவும் கம்பராமாயணம் பிழை என்றது ஆரியர் திராவிடர் என்று இல்லாத ஒரு புழித்துப் போன மாயைத் தூக்கி வைச்சு கூட்டம் நடத்தி புத்தகம் வெளியிட்டு கொளரவிப்பு செய்யினம். இந்த நேரத்துக்கு 10 ஆமியை சுட்டு விழுத்தியிருந்தால் ஆகுதல் நாங்கள் இடைவேளை பொழுது போக்குக்கு இணையத்திற்கு வரும் போது வாசிக்கச் சந்தோசமாக இருந்திருக்கும். இறுதி யுத்தம் எண்டு வேண்டின காசுக்கு கிபிரைச் சுடவேண்டாம் (நாங்கள் யுரியூப்பில சுடத் தொடங்கிவிட்டம்) வேலியளுக்காலை பாஞ்சு கொடி ஏத்த வேண்டாம் கடசி 10...15 ஆமி எண்டு போட்டுத்தள்ளி முடிஞ்சா படம் எடுத்துப் போட்டியள் எண்டா அதை வாசிச்சுக்கு கொண்டு அந்தப்படங்களைப் பாத்துக் கொண்டு தேத்தண்ணி கோப்பி குடிக்க என்ன இதமாக இருக்கும்.

நான் நினைக்கிறன் எப்படி தமிழ்நாட்டில சில தோத்துப் போன அரசியல் கட்சிகளிற்கு வேறு வழியின்றி உழுத்துப் போன பகுத்தரிவு திராவிடம் ஆரியம் என்ற மாயை வைத்து காலத்தை ஓட்டப் பாக்கிறார்களே அதே போல் கிழக்கில் நடந்த தேர்தலோடு ஐனநாயகம் நிலை நிறுத்தப்பட்டு ஒளிமயமான எதிர்காலம் பரவத் தொடங்க புலிகளும் காலத்தைக் கடத்த ஆரியம் திராவிடம் பகுத்தரிவு எண்டு எங்கடை மணிகளை அரிய வெளிக்கிடீனம் போல கிடக்கு.

முப்பதிற்கும் மேற்பட்ட இயக்கங்கள், ஒரே குறிக்கோளைக் காட்டி, தமிழ் இளையோரை தமது தானைகளிற் பிரித்து வைத்திருந்த ஒரு காலம் இருந்தது. ப

ேச்சுத் திறன், கவர்ச்சியான வாதங்கள், பிம்ப உருவாக்கங்கள் போன்ற இன்னோரன்ன முயற்சிகள் வாயிலாக மட்டுப்படுத்தப்பட்ட 'தமிழ் ஈழ இளையோர் மனிதவளம்' நோக்கிய போட்டி இயக்கங்களிற்கிடையே இருந்தது. இளையோரும் தத்தமது முடிவெடுக்கும் ஆற்றலிற்கேற்பவும், நண்பர்களின் தாக்கம் முதலியனவற்றாலும், சிலர் தவறான துவிச்சக்கர வண்டியில் தெரியாது ஏறியதாலும் ஒவ்வொரு பாசறைகளில் கரைசேர்ந்தனர்.

சிங்களம் என்ற ஒரு நிஜமான ஆபத்தின் நாளாந்த வளர்ச்சியும் அதனிடமிருந்து தமிழர் இருப்பை காப்பற்றவேண்டிய அவசியமும், முப்பது வருடமாய் முயன்று தோற்றுப் போன அனைத்து அரசியல் முயற்சிகளின் வரலாறும் தான் தமிழீழ ஆயுதப் போராட்டத்தினை அவசியப் படுத்தியது என்பதனை அனைவரும் அன்றும் அறிந்திருந்தனர். சித்தாந்தங்கள், பழம் பெருமைகள் என்பனவெல்லாற்றிற்கும் அப்பால் தமிழ் மக்களின் இருப்பைதத் தக்க வைப்பதற்கான வாழ்வாதாரப் போரட்டமே தமிழீழப் போராட்டம் என்பதும் அனைவரும் அறிந்ததே. இதற்காகத் தான் இயக்கங்கள் தோன்றின என்றும் தமிழீழம் தான் ஒரே தீர்வென்றும் போராடச் சென்ற இளைஞர்களில் மிகப் பெரும்பாலானார் ஏற்றுக் கொண்டனர்.

எனினும் கமூனிசம் போன்ற உலகளாவிய கவர்ச்சி அரசியலும் அக்காலத்தில் முனைப்புற்று இருந்தது. தென்னிந்திய திரைப்படங்கள் முதலியனவும், ஊர்களிற்குள் நடந்த கூட்டங்கள், சஞ்சிகைள் என்றும் “கமூனிஸ்ட்" என்பது ஒரு கவர்ச்சியான அடையாளமாக இளைஞர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பல போராடப் புறப்பட்ட தலைமைகள் செயலிற்கும் பினாத்தலிற்குமிடையேயான வித்தியாசத்தை உணரத் தொடங்கினர். சிங்களம் என்ற உடனடி எதிரி நோக்கிய செயற்பாடுகளின் வர்ணனைக்கப்பாற்பட்ட சிரமங்களோடு ஒப்பிடுகையில் எங்கோ முனைவுறும் கமூனிசம் பற்றி கூட்டம்போட்டுப் பேசுவதும் விடிய விடிய உப்புச்சப்பின்றி விவாதிப்பதும் பலரிற்கு இலகுவாகப் பட்டது. செயலற்ற பேச்சு மலிந்து போனது. "பாட்டாளிகளின் கண்டங்கள் கடந்த வெற்றி ஊர்வலம்" முதலான வார்த்தைஜாலங்களுடாகக் கனவு காணத் தொடங்கினார்கள் பலர். இளைஞர்களைக் குத்தகைக்கு எடுக்கவும் பல சக்திகள் தோன்றின. எனினும் இத்தனை கூச்சல்கள் போட்டிகள் மத்தியிலும், மற்றைய இயக்கங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் சொற்ப எண்ணிக்கையான போராளிகளை வைத்துக் கொண்டு, அதிகம் பேசாது அலட்டாது எந்த நோக்கிற்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கில் இருந்து அணுவும் பிசகாது முன்னேறிக்கொண்டிருந்த ஒரே தலைமை நமது தேசியத் தலைவரும் அவர் வளர்த்த இயக்கமும்.

எமது பிரச்சினை என்ன, எமது இலக்கு என்ன, நாம் எதற்காகப் போராடுகின்றோம் என்ற விடயத்தில் பிசகாத தெளிவோடு செயற்படுவதனாலே விடுதலைப் புலிகள் மக்கள் இயக்கமாக உள்ளனர். காலத்திற்குக் காலம் ஒட்டுண்ணிக் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் எமது போராட்டம் ஊடாகத் தம்மைத் தக்கவைக்க முயன்றமை நடந்த போதிலும் நேரிய பார்வை மிகு இலட்சியப் போராட்டத்தில் ஒட்டுண்ணிகள் ஒட்டுமுன்பே கருகிப் போயின. எமது இலக்கு இன்னமும் அடையப்படவில்லை எமது தேவை மாறவில்லை எமது தலைமையும் மாறாது என்ற ரீதியில் தமிழீழப் போராட்டம் என்றும் குத்தகை போகாது. எனினும் புதிய குத்தகைக் காரர்கள் முயன்று கொண்டே தான் இருப்பார்கள் என்பதற்கு "ஒரு இலக்கிய வாதியின் இறப்பில் அவ்விலக்கிய வாதியின் படைப்பு என்ற contextல் ஆற்றப்பட்ட ஒரு உரை" இங்கு எவ்வாறு அரசியலாக்கப்படுகின்றது என்பது உதாரணம்.

தமிழீழத் தேசியத் தலைவரதும் அரிசியற் துறைப் பொறுப்பாளரதும் பேச்சுப் பற்றிக் கதைப்பது புலிகள் பற்றிக் கதைப்பது தான்…ஏற்றுக் கொள்கின்றேன். எனினும் இப்பேச்சு எவ்வாறு அரசியலாக்கப்பட்டுள்ளது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கின்றது. இது பற்றி முடிவின்றி விவாதிப்பதால் எவரிற்கும் எப்பயனும் இல்லை என்ற காரணத்தால் இக்கருத்தை மட்டும் எனது கருத்தாக இத்தலைப்பில் வைத்து எனது ஆதங்கத்தைப் பதிவு செய்கின்றேன்

பி.கு: இங்கு கடவுளின் காவலனாக வாதிடுவது அறவே எனது நோக்கமல்ல. எனது ஆதங்கம் எமது விடுதலைப் போராட்டம் எத்தனை இலகுவில் குத்தகை எடுக்க முயலப்படுகின்றது என்பது மட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை இதுக்குள் இழுத்து வந்தது சபேசன் தான்

எங்கோ முகவரி இல்லாத ஒரு அமைப்பை இடையில் புகுத்தி வழமையாக எப்பொழுதுமே இந்து மதத்தையும் அதன் நம்பிக்கைகளையும் விமர்சிக்கும் கருத்தை சொல்லுவார்கள் அதணுடாக இந்து மதத்தை கேவலப்படுத்டதலாம் என்று இதை ஆரம்பித்ததே அவர் தான்

***

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

புலிகளை இதுக்குள் இழுத்து வந்தது சபேசன் தான்

எங்கோ முகவரி இல்லாத ஒரு அமைப்பை இடையில் புகுத்தி வழமையாக எப்பொழுதுமே இந்து மதத்தையும் அதன் நம்பிக்கைகளையும் விமர்சிக்கும் கருத்தை சொல்லுவார்கள் அதணுடாக இந்து மதத்தை கேவலப்படுத்டதலாம் என்று இதை ஆரம்பித்ததே அவர் தான்

***

அட...ஜோரா கருத்தை சொல்லிட்டியள் போய் உட்காருங்கோ... :lol: (ஏதாச்சும் குடிக்க தாறதே :D )...பின்னே களைத்து போயிருப்பியள் அது தான்... :D (அது சரி இந்து மதம் என்றா என்ன சுண்டல் அண்ணா)....கோவிலில சுண்டல் தருவீனம் அதுவே இந்து மதம்... :rolleyes: (நிசமா இன்னைக்கு தான் நேக்கு தெரியும் பாருங்கோ :D )...

அப்ப நான் வரட்டா!!

மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • தொடங்கியவர்

நடேசன் அவர்களுடைய உரை ஒரு இலக்கியவாதிக்கான பாராட்டு உரையாக மட்டும் அமையவில்லை. மறைந்த இலக்கியவாதியின் படைப்பிற்கான உரையை எப்படி நிகழ்த்த வேண்டும் என்பதை புலிகள் அறியாதவர்களும் அல்ல.

பா. நடேசன் அவர்களுடைய உரையில் பல செய்திகள் அடங்கியிருக்கின்றன.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றவர்கள் பேசிய கருத்துக்களையும் இணைத்துப் பார்த்தால் பல விடயங்கள் புரியும்.

விடுதலைப் புலிகள் வெறுமனே பேச்சோடு நிற்கவில்லை. வன்னியில் தைப்பொங்கலை புத்தாண்டாக நல்லளிப்பு வழங்கி கொண்டாடிய போதே செயற்பாட்டிலும் ஆரியத்தை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டதை அவர்கள் உணர்த்தினார்கள்.

இன்றைக்கு பேச்சிலும் வெளிப்படையாக சொல்லிவிட்டார்கள்.

மாற்றங்களுக்கு மக்களை தயார்படுத்துவதுதான் இன்று எம்முன் உள்ள கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

தைப்பொங்கல புத்தான்டா இன்னும் முற்று முழுதாக மக்களால் ஏற்றுக்கொள்ள படேல்லேயே?

இது பேச்சளவில் வேண்டுமானால் சாத்தியமாகலாம் பட் செயலளவில் மக்கள் சித்திரையில் தான் புத்தாண்டாக கொண்டாட போகின்றார்கள்...

கருணாணிதி தைப்பொங்களை புத்தாண்டாக அறிவித்த பொழுது அது மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெறவில்லையே...

மாற்றஙிகள் மக்கள் முன் திணிக்கப்படுகின்ற போது அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள

காலம் காலமாக கடைபிடிக்கும் கலை கலாச்சார நிகழவுகளில் கை வைக்கின்ற பொழது அரச மட்டங்களில் வேண்டுமானால் செயல் படுத்தக் கூடியதாக இருக்கும் மக்கள் மத்தியில் முடியாது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.