Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜயோ சித்திரா என்னை கொல்லாதே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ சித்திரா என்னை கொல்லாதே

ஜயோசித்திரா கொல்லாதே கொல்லாதே ... என்ன சாத்திரி ஏதும் கனவு கண்டு கத்துறாரோ எண்டு நினைக்காதையுங்கோ நான் சொல்லுறது உந்த தீபம் தொ.கா . விலையும் பத்தாதுக்கு தரிசனத்திலையும் போகிற சித்திரா எண்டிற தொடரைப்பற்றித்தான். தமிழன் என்றொரு இனமுண்டு அவனிற்கோர் தனிக்குணமுண்டு . அதுவும் ஈழத் தமிழனிற்கோர் ஒருதனிச் சிறப்புண்டு. படைப்பக்களில் ஈழத் தமிழருக்கென்று தனிப் பாணியும் தனி நடையும் தனிச் சிறப்பும் எப்பொழுதுமே இருந்திருக்கின்றது இருக்கின்றது. ஆனால் சித்திரா என்கிற தொடரை ஈழத் தமிழ் நிறுவனங்களின் அனுசரனையுன் தயாரித்து பெரும்பாலும் ஈழத்தமிழர்களே நடித்து ஆனால் இந்திய தமிழ் சினிமா குரல் செருகப்பட்டு ஏன் இந்தக் குரல் செருகலை அதை விட மோசமாகவும் சொல்லலாம். கொடுமை கொடுமை கோயிலுக்கும் போக முடியாத கொடுமை. அதுக்கு முதலே அவித்து போட்டிட்டு ஆடுது கொடுமை . அந்தத் தொடரில் நல்ல திறைமையுள்ள ஈழத்தமிழ் கலைஞர்கள் நடித்திருந்தும். சே ..... ஒரே வரியில் விமர்சனம் எழுதிறதை விட ஒரே சொல்லில் விமர்சனம் தூ...........................................;

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி நீங்கள் சொல்வதை நான் நூற்றுக்கு நூறு விதம் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆரம்பத்தில் ஆர்வத்துடன் பார்த்தேன் ஆனால் இப்போது அந்தத்தொடர் ஆரம்பமாகப்போகின்றது என்று அறிந்தவுடன் தொலைக்காட்சியையே நிறுத்திவிடுவேன். பார்க்கச் சகிக்கவில்லை. முக்கியமாக அவர்கள் பேசும் இந்தியத் தமிழ் கேட்கச் சகிக்கவில்லை. இலங்கைத்தமிழர்கள் எத்தனை ஆண்டுகள் இங்கிலாந்திலே வாழ்ந்தாலும் இந்தியத் தமிழைப் பேசமாட்டார்கள். அதுவும் இந்தக் காலத்தில் இலங்கையிலிருந்து வந்த ஒருவர் சில மாதங்களுக்குள்ளேயே அப்படி மாறியது நம்ப முடியாத ஒன்று.

அடுத்தது இலங்கையில் இருப்பவர்களுக்கு இலண்டனில் இருப்பவர்களைவிட அதிகமாக இலண்டனைப் பற்றித் தெரியும். அப்படியிருக்கையில், குளியலறையில் வெளியே நின்று அள்ளிக் குளிப்பதும், மலசலகூடத்தில் ஒரு நாளும் அதனைக் காணாதவர்போல மேலே எறி அமர்வதும், வீட்டுத்தோட்டத்திலே புல்லை வெட்டத் தெரியாமல் தடுமாறுவதும் புளிச்சுப்போன நிகழ்வுகள். 25, 30 வருடங்களுக்கு முன்னால் இவற்றில் ஒருசில உண்மையாகவே நடந்தவை. ஆனால் இப்போதும் அப்படி நடப்பதாகக் காட்டுவது வேடிக்கையாகவேயுள்ளது.

ஒரு சில நடிகர்கள் தரமானவர்கள்தான் ஆனால் கதையமைப்பும், காட்சிகளும் மனத்தில் வெறுப்பையும், ஒருவித கவலையையுமே உண்டாக்குகின்றன.

நான் நினைச்சன் இது இந்திய நாடகம் என்று.. இதில நடிக்கிறவர்கள் இலங்கை நடிகர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைச்சன் இது இந்திய நாடகம் என்று.. இதில நடிக்கிறவர்கள் இலங்கை நடிகர்களா?

வசி இந்த நக்கலதானே கூடாது எந்த இந்திய தமிழ்தொடர்களிலாவது இப்பிடி மோசமாய் இந்திய தமிழ் அதுவும் சென்னைத் தமிழை கதைத்து பாத்திருக்கிறீங்களா??? :unsure::wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ சித்திரா என்னை கொல்லாதே எண்ட தலைப்பைப் பார்த்துவிட்டு சாத்திரியை யாரோ கொல்ல வருகிறார்களோ எண்டு நினைச்சி பொல்லுத்தடியோடு வர இருந்தன்.

புலம்பெயர் நாட்டில் சித்திரா தொலைக்காட்சித்தொடர் வெளிவந்தது பாராட்டத்தக்க விசயம்.

ஈழத்தமிழர்களின் குரல்களிலும் பார்க்க இந்தியத்தமிழ் குரல்களின் பின்னனியில் ஒலித்தால் பலரின் வரவேற்பைப் பெறலாம் என்ற தொனிப்பில் அவ்விதம் நிகழ்ந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீரை காணாத வேர்கள் எண்டு ஒரு படம்

இதே மாதிரிதான்

பம்பலோ பம்பல்

அட சாத்திரி நானும் என்னவோ ஏதோ என்டு பயந்து போட்டன்.

சரி அதை விடுங்கோ. நான் இங்கிலந்தில் நிற்கும் போது அந்தத்

தொடரை சில நாட்கள் பார்க்க முடிந்தது. ஈழத்தமிழர்கள்

இந்திய சினிமா நாடகத்துறைக்கு ஏற்ற மாதிரி சளைக்காமல்

எடுப்பது வரவேற்கத்தக்கது இருந்தாலும் அவர்கள் போல் எல்லாமே

தழுவி வர வேண்டும் என்று இல்லை. எங்கள் தனுத்துவத்தை

பிரதிபலிப்பாதாக இருந்தால் இன்னும் நல்லா இருந்து இருக்கும்.

ஆனாலும் அவர்களின் அந்த முயற்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

எனக்கு அவர்கள் நாடகத்தில் பிடிக்காத இரண்டு விடயம் அதில் ஒன்று

இந்தியத்தமிழ் கதைப்பது மற்றது நாடகத்தில் தேவை இல்லாத

சந்தர்ப்பத்தை கூட நேரம் ஒளிப்பதிவு செய்வது மற்றபடி நிச்சயமாக

அவர்களின் கன்னி முயற்சியை வரவேற்கிறேன். இது ஆரம்பம்தானே போகப்போக

இன்னும் கூடுதல் கவனம் எடுத்து சிறப்பாக செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

அத்துடன் எனக்கு அந்த நாடகத்தில் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தை

சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது அப்போது நான் கேட்ட முதல் கேள்வி ஏன்

நீங்கள் இந்தியத்தமிழில் கதைக்கிறீர்கள் என்டு அதற்கு அவர் சொன்ன பதில்

எங்க பேச்சு வழக்கு தமிழ் சும்மா கூடி இருந்து கதைக்கேக்கை கேட்க நல்லா

இருக்கும் அதையே தொடர் நாடகமா செய்யும் போது பார்க்கிறவைக்கு அது நாடகம்

என்ற ஒரு உணர்வு வராது யாரோ இரண்டு பேர் கதைக்கும் உணர்வுதான் ஏற்படும்

என்டு அதோடு இந்தியத்தமிழ் வாசகர்களையும் ஈர்க்கும் பொருட்டு என்டு அவ்வாறு கதைப்பதாக.

  • கருத்துக்கள உறவுகள்

தரிசனம் தொலைக்காட்சி கழிவுகளையும் குப்பைகளையும் கொட்ட அதை நாங்கள் பார்க்கவேண்டும் என்பது எங்கள் தலைவிதியா போயிட்டுது. தரிசனம் தன்னைத் திருத்திக்கோள்ளாவிட்டால் இந்த வருடத்துக்குப்பின் வேறு தொலைக்காட்சிக்கு நான் மாறிவிட எண்ணியிருக்கிறேன். இதையேதான் எனது நண்பர்களும் வேறு பலரும் சொல்கிறார்கள். ஒளிபரப்பின்போது ஒலி-ஒளி நிர்வாகம் படு மோசம். இரவில் நீண்ட நிகழ்ச்சிகளை உதாரணமாக திரைப்படத்தை ஓடவிட்டபின் எங்கோ போய்விடுகிறார்கள். இடையில் ஏதாவது தடை ஏற்பட்டால் மணிக்கணக்காகிவிடுகிறது அவர்கள் மீண்டும் வந்து சரிசெய்வதற்கு. சீரற்ற கால நிலை ஏற்படும்போது மற்றைய தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்க நீண்ட நேரத்துக்கு முன்பாகவே தரிசனம் திரையிலிருந்து மறைந்துவிடுகிறது. செய்தி விவரணங்களின்போது பின்னணி இசை அதிக சத்தத்துடன் பதிவுசெய்யப்பட்டு நிகழ்ச்சியில் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெளிவாக கேட்கமுடியவில்லை. மொத்தத்தில் தரிசனம் தொலைக்காட்சி ஒரு குடிசைக்கைத்தொழில் போல சிறந்த தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்படாமல்தான் ஒளிபரப்பப்படுகிறது. நிகழ்ச்சி நேரத்தை சரிசெய்வதற்காக நிகழ்ச்சிகளின் இடையே முன்னறிவித்தல் எதுவுமின்றி காட்சியை றிவைண்ட் பண்ணி பார்த்த நிழ்ச்சியின் பகுதியையே மீண்டும் பார்க்கவைக்கிறார்கள் அல்லது நிகழ்ச்சியை வெட்டி முன்னுக்கு சென்றுவிடுகிறார்கள். இதுமட்டுமல்ல தரிசனம் தொலைக்காட்சியில் தொழில்புரியும் பலர் குறிப்பாக ரெக்னிசியன்கள் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் முன் அனுபவம் ஏதுமில்லா சாதாரண தொழிலாளிகள்.

அது சரி நாடகம் இவ்வளவு நாளும் போகுதாம் என்ன கதை

என்றே அம்மாக்கு விளங்கேல்லையாம். மேடை நாடகத்தில

கதைக்கிறது மாதிரி கதைக்கினமாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒளிபரப்பின்போது ஒலி-ஒளி நிர்வாகம் படு மோசம்.

உண்மைதான் ஆனால் பத்துவருசத்துக்கு பிறகு இதை சொன்னாலும் இப்பதானே வளர்ந்து வருகிறோம். குறை சொல்லக் கூடாதென்பார்கள்.

குடிசை கைத்தொழில்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தமிழ்க் கலைஞர்கள் முதன் முதலாக ரெலி நாடகம் எடுத்த போது என்ன பாஷையில் கதை வசனம் வைத்தார்களாம்? இலங்கைத் தமிழ் கதைத்தால் நாடகம் பார்த்த மாதிரி இருக்காது என்றால் எப்போது தான் அதைப் பழக்கமாக மாற்ற முடியும்? எப்படி நாம் இந்தியத் தமிழ் ஆக்கங்களிலிருந்து தனித்துவமாக நிற்க முடியும்? நல்ல சாட்டுகள் தான் போங்கோ! :lol:

ஈழத்துத் தமிழைக் கதைத்து ஈழத்துப் பிரச்சினைகளைக் கதைக்கும் படலைக்குப் படலை பிடிக்கலை பிடிக்கலை போன்ற நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்ற போது இது ஒரு நொண்டிச் சாட்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் எனக்கு அந்த நாடகத்தில் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தை

சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது அப்போது நான் கேட்ட முதல் கேள்வி ஏன்

நீங்கள் இந்தியத்தமிழில் கதைக்கிறீர்கள் என்டு அதற்கு அவர் சொன்ன பதில்

எங்க பேச்சு வழக்கு தமிழ் சும்மா கூடி இருந்து கதைக்கேக்கை கேட்க நல்லா

இருக்கும் அதையே தொடர் நாடகமா செய்யும் போது பார்க்கிறவைக்கு அது நாடகம்

என்ற ஒரு உணர்வு வராது யாரோ இரண்டு பேர் கதைக்கும் உணர்வுதான் ஏற்படும்

என்டு அதோடு இந்தியத்தமிழ் வாசகர்களையும் ஈர்க்கும் பொருட்டு என்டு அவ்வாறு கதைப்பதாக

எங்கடை பேச்சு வழக்கு கூடியிருந்து கதைக்கேக்கை நல்லாயிருந்தால் இதிலை நடிக்கிறவை என்ன தனித்தனியா கமறாக்கு முன்னாலை வந்துநிண்டு இந்தியத் தமிழிலையா கதைச்சு போட்டு போகினம்.அடுத்ததாய் இந்தியத் தமிழ் வாசகர்களை ஈர்க்க திபமும் தரிசனமும் இந்தியாவிலையா ஒலிபரப்பாகுது அல்லது சித்ரா தொடர் இந்தியத் தொலைக்காட்சிகளிலை ஒலிபரப்பாகுதா??????? ரசிகா உங்களோடை கதைச்ச அந்தப் பாத்திரத்தின்ரை தொ .பே இலக்கம் இருந்தால் ஒருக்கால் தாங்கோ நான் புளி போட்டு மினுக்கி விடுறன். :lol::D

Rasikai' date='Mar 21 2008, 02:55 AM' post='393759']

அட சாத்திரி நானும் என்னவோ ஏதோ என்டு பயந்து போட்டன்.

சரி அதை விடுங்கோ. நான் இங்கிலந்தில் நிற்கும் போது அந்தத்

தொடரை சில நாட்கள் பார்க்க முடிந்தது.

கனடாவிலையிருந்து மினக்கெட்டு லண்டனுக்கு போயும் தொடர் நாடகம் பாத்திருக்கிறியள் உங்களைத்திருத்தவே முடியாது பாவம் மணி. டிங் டிங்....... :lol::lol::lol:

Edited by sathiri

எங்கடை பேச்சு வழக்கு கூடியிருந்து கதைக்கேக்கை நல்லாயிருந்தால் இதிலை நடிக்கிறவை என்ன தனித்தனியா கமறாக்கு முன்னாலை வந்துநிண்டு இந்தியத் தமிழிலையா கதைச்சு போட்டு போகினம்.அடுத்ததாய் இந்தியத் தமிழ் வாசகர்களை ஈர்க்க திபமும் தரிசனமும் இந்தியாவிலையா ஒலிபரப்பாகுது அல்லது சித்ரா தொடர் இந்தியத் தொலைக்காட்சிகளிலை ஒலிபரப்பாகுதா??????? ரசிகா உங்களோடை கதைச்ச அந்தப் பாத்திரத்தின்ரை தொ .பே இலக்கம் இருந்தால் ஒருக்கால் தாங்கோ நான் புளி போட்டு மினுக்கி விடுறன். :lol::( கனடாவிலையிருந்து மினக்கெட்டு லண்டனுக்கு போயும் தொடர் நாடகம் பாத்திருக்கிறியள் உங்களைத்திருத்தவே முடியாது பாவம் மணி. டிங் டிங்....... :wub::):D

சாத்திரி எனக்கு அவர்களின் தொலைபேசி இலக்கம் எல்லாம் தெரியாது. என்ன செய்வம் கிடைச்சால் தாறன்

அது சரி என்ன கனடால இருந்து போய் தொடர் நாடகம் பார்க்குறன் என்டு நக்கல் அடிக்கிறியள். நான் கனடாவுல இருக்கும் போது நாடகமே பார்க்குற இல்லை. லண்டனில் வேலை வெட்டி இல்லமல் இருந்ததால் ஒரு சில பகுதிகளை பார்க்க முடிந்த்து என்டு கூறியிருந்தேன்.

சித்திரா..சின்னத் தொடர் புதிய சாதனை..

/ஈழத் தமிழ் படைப்பாளிகளினால் உருவாக்கப்பட்டு

அதிக வரவேற்பை பெற்று மிக விறு விறுப்பாய் 3 ஜரோப்பிய

தொலைகாட்சிகளில் வெற்றி நடை போடும் இந்த

சின்னத் திரை சித்திரா பற்றி அலசுவது சிறப்பேயாகும்.

வித்தியாசமான கோணத்தில் வித்தியாசமான பரிமானத்தில்

புதிய வேகத்துடன் ஈழத் தமிழ் சினிமாவை முன்நோக்கி நகாத்தியிருக்கிறது

இந்த தொடர்.

வழமையாக நமது தாயக உரை நடை மொழிகளை

உரைத்து இத்து ஈடறுந்து போன திரைகளிற்கு வழிகாட்டியாக

இந்த புலம் பெயா் படைப்பாளிகளினால் மிகவும் சிறப்பாக

இரசிக்க தக்க வகையில் இந்த படைப்பு வௌிவந்திருக்கிறது.

இதனை உருவாக்கிய நிர்வாகத்திற்கும் நடித்த கலைஞா்களிற்கும்

நாம் மனமார பாராட்டுகிறோம். புதிய உலக நாகரீக

சுழற்சிக்கு ஏற்றவாறு யாவரையும் கவரும் விதத்தில்

அந்த கதை நகாந்து செல்கிறது. ஈழ. இந்திய புலம்பெயா்

கலைஞா்களின் நடிப்பு திறன் பிரமிப்பை ஊட்டுகிறது.

இதுவரை வெவ்வேறான நடிப்பு திறன் இது போன்ற கதாபாத்திரத்தில்

வௌி வரவில்லையென்றே கூறலாம்.அதற்குக வழங்கிய குரல்

வடிவமே இந்த தொடரை மேலும் சிறப்பிக்க வியாபிக்க

வைக்கிறது.

அது மட்டுமல்லாது அதில் நடித்தவர்களின் நடிப்பு திறன்

என்பது அவா்களினது வயதையும் கருத்தில் கொண்டு

பார்த்தால் உண்மையில் ஈழத் தமிழ் சினிமா

உயிர் பெற்று எழுந்து விருட்சமாகிறதே என்றே

கூற வேண்டும்.

இசை. ஒளிப்பதிவு. வௌிப்புற காட்சிகள். ஆடைகள்

என்பன சிறந்த தெரிவாக மிக சிறப்பாக அமையப்

பெற்றிருக்கின்றன.

உண்மையில் யதர்த்த நிலை காட்சிகள். புலம் பெயர்

நாடுகளில் இளையோர்கள் செய்யும் அடாவடிகள்

என்பவற்றை மிக தத்தரூபமாக காட்சி படுத்தியிருப்பது

பல மக்களின் உள குமுறலை இது வௌி கொணா்ந்துள்ளது.

கனடா. பிரித்தானிய.பிரான்ஸ் யோ்மனி.

போன்ற நாடுகளில் தமிழ் ரவுடிகளின் அராயகம்

என்பது கட்டு கடங்கமால் போயுள்ளது.

அவா்களால் எத்தனை குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளது

எனபது அந்த நாடுகளில் வசிப்பவாகளிற்கு புரியும்.

அந்த காட்சிகளை துணிந்து காட்சியாக்கி வௌியீடு செய்து

அந்த இளைஞா்களிடை இருக்கின்ற அந்த தீயவற்றை

களைய எடுத்த இந்த படைப்பு என்பது உண்மையில்

வரவேற்க தக்கது.

அது மட்டுமல்ல சமூக சிந்தையுடன் தாயக வாழ்வியலையும்

உள்ளடக்கி ஒரு இளைய சமுகத்தை நெறிப்படுத்துகின்ற

நேரிய வழியில் வழிநடத்துகின்ற ஒர் சமுக சிந்தை

கருப் பொருளை இயல்பு நடைமுறைகளை பிரதிபலித்து

இந்த நாடகம் திரை வந்துள்ளது.

பல்வேறு பட்ட தரப்பினரிடம் இருந்தும் பெரும்

ஆதரவை புகழை தன் பக்கம் இந்த தொடர் ஈர்த்திருக்கின்றது

என்றால் அது மிகையாகது.

தாயகத்தில் உள்ள இளைஞன் கனடாவை எப்படி பாத்தான் அவனது

எண்ண கருவோட்டத்தில் கனடா வாழ் தமிழ் உறவுகள் வாழ்வியல்

எவ்வாறு இருந்தது என்பதும் அதே வேளை கனடா வாழ் புலம்பெயா் நாடுகளில் எம் தமிழ் இளையோர்கள் மக்களின் வாழ்வு முறை

எவ்வாறு இருந்தது என்பதும் அந்த தொடரை பார்ப்பவா்கள்

புரிந்து கொள்வார்கள்.

ஆக மொத்தம் இந்த சித்திரா என்ற தொடா் பெரும்பாலான பகுத்தறிவாளிகளிடத்தும் இளைய தலைமுறையிடத்தும்

பெரும் தாக்கத்தையும் ஆதரவையும் பெற்றிருப்பது

அதற்கு கிடைத்த வெற்றியே ஆகும்./

http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1058

எமது தாயக உரையாடல்களை நாங்களே மதிக்காவிட்டால் யார் தான் மதிப்பது?

எமது தாயக உரையாடலுடன் உருவாக்கப்பட்ட படலைக்குப் படலை நாடகத் தொடர் பிடிக்கலை பிடிக்கலை நாடகத் தொடர்களும் இத்து ஈடறுந்து போய் விட்டனவா?

பாஸ்(boss) சாரி (sorry) கால்(call) இது போன்ற ஆங்கில உச்சரிப்புடன் கூடிய உரையாடல் தான் நயமிக்க உரையாடலா? எனக்குப் புரியவில்லை

Edited by kaviya

  • கருத்துக்கள உறவுகள்

அவரகளும் தம்மால் முடிந்தளவு திறமையாக செய்ய முனைகின்றறர். இது போன்ற தரமான விமர்சனங்கள் அவர்களை இன்னும் மொருகூட்டும்!!! :mellow::(

ஒரு பேப்பரின் நெஞ்சு பொறுக்குதில்லையே பகுதியில் வந்திருந்த ஆக்கம்

இதுதானா நம்மவர் கைவண்ணம்

‘நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்' எண்டு கவிஞர் ஒருவர் பாடி வைச்சிருக்கிறார்.

ஆனால் உண்மையா எங்கடை கலைகளும் படைப்புகளும் திறமானவையோ எண்டு சந்தேகம் வாற மாதிரியான காரியங்கள் நடந்து கொண்டிருக்குது.

எதுக்கெடுத்தாலும் தென்னிந்தியப் படைப்புகளுக்கு இணையான எம்மவர் படைப்பு எண்டு விளம்பரப் படுத்திறது வாடிக்கையாப் போச்சுது.

சரி நல்ல விசயங்கள் எங்கை நடந்தாலும் அதைப் பாத்துப் பின்பற்றிறது தப்பில்லைத்தான். ஆனால் எங்கடையாக்கள் என்னென்னத்தைப் பாத்துப் பின்பற்றுகினம் எண்டு பாத்தால் தலை சுத்துது.

இப்பிடித்தான் கிட்டடியிலை தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு இணையான எம்மவர் தயாரிப்பில் வெளிவருகிறது எண்டு விளம்பரப்படுத்தி எங்கடை ஆக்கள் ஒரு தொலைக்காட்சித் தொடரைத் தயாரிச்சு ஒளிபரப்பிக் கொண்டிருக்கினம்.

இவையளின்ரை தொ(ல்)லைக் காட்சித் தொடரைப் பற்றிச் சொல்ல முதல் தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் எப்படியிருக்குது எண்டதையும் கொஞ்சம் சொல்ல வேணும்.

இந்தத் தொடர் நாடகங்களின்ரை பேர்களைப் பாத்தால் `குங்குமம்', `குத்துவிளக்கு', `கோலங்கள்' எண்டு மங்களகரமா இருக்கும். ஆனால் அந்த நாடகங்களைப் பாத்தா அதுக்குள்ளை ஊரிலை இல்லாத கழிசடைக் கதையெல்லாம் புகுத்தப்பட்டிருக்கும்.

ஒருவனுக்கு ஒருத்தி எண்டது தான் தமிழ்ப் பண்பாடு எண்டு ஒரு பக்கம் தமிழ் பெருமை பேசிக் கொண்டிருக்கிறம். ஆனால் இந்தத் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் ஒருவனுக்கு ஒருத்தி எண்ட விசயத்துக்கும் எட்டாம் பொருத்தம் பாருங்கோ.

மனிசியைத் துன்பப்படுத்தி கேவலமாப் பேசி விவாகரத்து வாங்கிப் போட்டு திரும்ப அந்த மனிசியைத் துரத்திக் கொண்டு திரியிறது தன்ரை தங்கச்சியோடை புருசன் கள்ளத் தொடர்பு வைச்சிருக்க புருசன்ரை தம்பியோடை மனிசி கள்ளத் தொடர்பு வைச்சிருக்கிறது, இப்படி இதிலை எμத முடியாத எத்தனையோ நுÖதனமான தொடர்புகளை உறவுகளை எல்லாம் உருவாக்கி கேவலமான படைப்புகளா வந்து ொண்டிருக்கிறது தான் இந்தத் தொடர்கள்.

என்ரை சினேகிதன் ஒருத்தன் " மச்சான் நான் காலமை வேலைக்குக் கிளம்ப மனிசி விடீயோக் கடையிலை கொப்பிகளை வாங்கிக் கொண்டு வந்த இந்தத் கண்றாவித் தொடர்களைப் பாக்கத் தொடங்கிடும். இதிலை காட்டுற எல்லாத் `தொடுசல்களையும்' பாத்துப் பாத்து மூளைச் சலவையாகி நான் வீட்டுக்கு அஞ்சு நிமிசம் பிந்திப் போனாலும் ஐயோ நான் மோசம் போய்ட்டன் இந்தாள் ஆரோடையோ போய்ட்டு வருகுது எண்டு மனிசி ஒப்பாரி வைக்குது'' எண்டு சொல்லி முறைப்பட்டான்.

இந்தக் கண்றாவிகளைத் பின்பற்றித்தான் எங்கடை ஆக்களும் கோதாவிலை குதிச்சிருக்கினம்.

எம்மவர் தயாரிப்பும் ஏதோ ஈழத்துக் குடும்பத்தைப் பற்றித் தான் தொடங்கிச்சுது. நடிக்கிற ஆக்களும் எங்கடை ஆக்கள் தான். ஆனால் கதைக்கிறது என்னண்டால் தென்னிந்தியத் தமிழ். அதுவும் கமலஹாசன் தென்னாலி படத்திலை எங்கடை தமிழ் எண்டு சொல்லிக் கொண்டு ஏதோ ஒரு தமிழைக் கதைச்சு எங்களை வெறுப்பேத்தின மாதிரித் தான் உவையளின்ரை இந்தியத் தமிμம்.

ஆபிஸ், காபி, பாஸ் (boss) எண்டு நாங்கள் சீவியத்திலையும் பாவிக்காத உச்சரிப்போடை இங்கிலீஸ் கதைக்கிறதும் அட தாங்க முடியலைப்பா.

அது மட்டுமில்லாமல் அதே தென்னிந்தியத்தொடர்களைப் போலவே கள்ளத் தொடர்புகளும் தாராளமாப் புழங்கும் எண்டதுக்கான அறிகுறிகளும் தெரியத் தொடங்கீட்டுது.

இவையளின்ரை இந்தத் தயாரிப்புப் பற்றியும் இவையள் வலுக்கட்டாயமாக் கதைக்கிற தமிழைப் பற்றியும் இந்த நாடகத்திலை முக்கிய பங்கு வகிக்கிற ஒராளோடை கதைக்கேக்குள்ளை அவர் நல்ல விளக்கம் தந்தார்.

தம்பி உந்தத் தமிழிலை கதைச்சால் தான் அது நாடகம் மாதிரி இருக்கும். சனத்திட்டையும் எடுபடும். எங்கடை தமிழிலை கதைச்சால் அது சும்மா நாங்கள் எங்களுக்குள்ளை கதைக்கிற மாதிரித் தான் இருக்கும். எடுபடாது எண்டு விளக்கம் தந்தார்.

எங்கடை அன்றாடப் பிரச்சினைகளை மையமா வைச்சு எங்கடை தமிழிலேயே கதைக்

கிற ‘படலைக்குப் படலை', ‘பிடிக்கலை பிடிக்கலை' மாதிரியான நாடகங்கள் எங்கடை சனத்திட்டை எவ்வளவு துÖரம் வரவேற்பை எடுத்திருக்குது எண்டது கூடத் தெரியாமல் மக்கள் மனங்களை அறியாமல் ஒரு பெருந் தொடரைத் தொடங்கியிருக்கினமே எண்டு கவலையாவும் போச்சுது.

எத்தனையோ கஸ்டங்களுக்குள்ளை தங்கடை சொந்த வாழ்க்கையையும் கவனிச்சுக் கொண்டு வேறை ஆக்களின்ரை உதவி ஒண்டுமில்லாமல் தங்கடை காசைப் போட்டு தாயக அவலங்களை, வெளிநாட்டு வாழ்க்கையிலை எதிர் கொள்ளுற பிரச்சினைகளை மையப்படுத்தி அருமையான குறும்படங்கள் இசைப் படைப்புகள் எண்டு உருவாக்கி தங்கடை கலைத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டிருக்க ஊடக அனுசரணை விளம்பர அனுசரணை எண்டு எல்லா வசதிகளையும் வச்சுக் கொண்டு ஈழத்தவர் கலைப் படைப்பை இப்பிடி மலினப் படுத்திற ஆக்களை என்ன செய்யிறது.

உவையளுக்கு தங்கடை ஊடகங்களிலை இடம் குடுக்கிறதுக்குப் பதிலா களமில்லையே எண்டு ஏங்கிற ஆக்கபூர்வமான இளம் படைபபாளிகளுக்கு இடம் கொடுத்தால் நல்ல படைப்பாளிகளும் படைப்புகளும் உருவாகும் இல்லையா?

எங்கடை ஊடகங்களும் அனுசரணையாளர்களும் இந்த விசயத்தைக் கவனத்திலை எடுத்தீங்களெண்டால் உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்

Edited by kaviya

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.