Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயலும் வைரவரும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வயலும் வைரவரும்.

இந்தவார ஒரு பேப்பரில்

வயலும் வாழ்வும் எண்டு கேள்விப்பட்டிருப்பம். அதே போலத்தான் இது எங்கடை ஊர் வயலும் வயற்கரையிலை இருந்த வைரவர் பற்றினதும்.யாழ் குடாவிலை அதிகமான கோயில் எந்தகடவுளிற்கு எண்டு ஒரு புள்ளி விபரம் எடுத்தால் அதிலை முதலாமிடம் வைரவருக்குத்தான். இடண்டாமிடம்தான் பிள்ளையாருக்கு.ஏனெண்டால் வைரவர் செவில்லாத சாமி் ஒரு இரும்புக்கம்பி இருந்தால் போதும் வைரவர் றெடி.அதுமட்டுமில்லை பெரிய கோயிலும் கட்டத்தேவையில்லை எங்கையாவது ஒரு மரம் முக்கியமாய் புளியமரம் இல்லாட்டி ஒரு சின்னக் கொட்டில் போட்டால் காணும். கொஞ்சம் வசதிஇருந்தால் சின்னாய் ஒரு கோயில் கட்டியிருக்கும் அவ்வளவுதான். யாழ் குடாவிலேயே பெரிய கோயில் வீதி வசதியோடை கொடியேறி திருவிழா நடக்கிற ஒரேயொரு வைரவர் கோயில் எனக்குத் தெரிந்து சண்டிலிப்பாய் பக்கம் இரட்டையர்புலம் வைரவர் எண்டிற கோயில்தான்.

மற்றப்படி வைரவரை காவல்தெய்வமாய் கும்புடுறதாலை ஊருக்கு நாலைஞ்சு வைரவர் இருப்பினம்.வைரவர் ஏழைகளின் கடவுள் அவரின்ரை பொரும்பாலான கோயில்களிலை உண்டியலே இருக்காது அதாலைதான் எங்கடை மக்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலை எந்த நாட்டிலையும் யாரும் வைரவருக்குகோயில் கட்டவேயில்லை என்று நினைக்கிறன். எங்கடை ஊர் வயற்கரையிலை இருந்த ஒரு புளிய மரத்துக்குக் கீழை யாரோ எங்கடை முன்னோர் வயலை காவல் காக்கவெண்டு ஒரு வைரவர் சூலத்தை நட்டுவிட்டிருந்தவை.பிறகு யாரோ அதுக்கு நாலு கம்பத்தை நட்டு கொட்டிலும் ஒண்டு போட்டிருந்தது. ஊரிலை நெல்லு விதைக்கிற காலத்திலை வயற்காரர் இந்த வைரவருக்கு தேங்காயுடைச்சு கற்பூரத்தை கொழுத்தி விதைக்க ஆரம்பிப்பினம்.பிறகு அறுவடை காலத்திலைதான் அதே மாதிரி தேங்காய் கற்பூரத்தை வைரவர் பாப்பார்.அறுவடை காலத்திலை மேலதிகமாய் வெட்டின நெல்லிலை அரிசியாக்கி வைரவருக்கு பொங்கலும் கிடைக்கும்.பிறகு பாவம் வைரவரை யாரும் கவனிக்கிறேல்லை அதக்குப் பிறகு அவரோடை பொழுது போக்கிறது நானும் இருள்அழகனும்தான்.ஆனால் ஊரிலை அந்தகாலத்திலை யாராவது ஒரு வாகனம் வைச்சிருந்தாலே அவர்தான் ஊரிலை பெரியாள் பணக்காரர் அவருக்கெண்டு ஒரு தனி மரியாதையும் இருக்கும். பாவம் இருக்க ஒழுங்காய் ஒரு கொட்டிலே இல்லாத வைரவர் மட்டும் நாலைஞ்சு வாகனம் வைச்சிருந்தவர்.நாய் தானே அவரின்ரை வாகனம்.

எங்களோடை சேர்த்து ஊர் நாய்கள் நாலைஞ்சும் தான் வைரவருக்கு துணை.யாராவது எப்பவாவது தேங்காய் உடைச்சால் கல்லிலை வடிஞ்ச இளனியை நக்கிப்போட்டு அங்கையே படுத்திருக்குங்கள்.நாங்களும?? வயலிலை விதை பொறுக்க வாற பறைவைகளை கலைக்கிறதுக்காக ஒரு பெரிய தகரம் ஒண்டை வைரவரின்ரை கூரையிலை கட்டித் தொங்க விட்டிட்டிட்டு இரும்பு கம்பியாலை அடிச்சு சத்தம் எழுப்புவம். அதுமட்டுமில்லை அதுதான் வைரவர் கோயில் மணியும் 2 இன்1 எண்டு பயன்படும். மாலைநேரத்திலை அந்தக்கொட்டிலுக்குள்ளை இருந்துதான் நாங்கள் தாயம் ஆடுபுலியாட்டம் எண்டு விழையாடுறது மட்டுமில்லை யாரின்ரையும் தோட்டத்துக்குள்ளை களவாய் பிடுங்கின வெள்ளரிக்காயை வைச்சு சாப்பிடுறது முக்கியமாய் கள்ள பீடி அடிக்கிறதும் அங்கைதான்.ஒரு பீடியை பத்தவைச்சு ஆள் மாறி மாறி இழுத்து சுருளாய் புகைவிட முயற்சி செய்து புது பழக்கத்திலை பிரக்கடிச்சு (புரையேறி) கண்ணெல்லாம் கலங்கி தொண்டை நோவெடுத்தாலும் மீண்டும் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் போல அடுத்தநாளும் பீடியை பத்தவைச்சு சுருள்புகைவிட முயற்சிப்பது. வீட்டை போகேக்கை வாயிலை பீடி நாத்தம் போறதுக்கு தோட்டத்திலை வெங்காயத்தை பிடுங்கி சப்பிறது.இப்பிடி எத்தனையோ விடயங்கள் சுமுகமாய் போய்க்கொண்டு இருக்கேக்குள்ளை அதுக்கு ஒரு தடை வந்திட்டிது. அதுக்கு காரணம் அந்தக் கோயிலுக்கு பக்கத்திலை குடியிருந்த ஒருவர் அவர் வேலை வெட்டிக்கு அதிகம் போக மாட்டார்.அன்றாடம் தண்ணியடிக்க செலவுக்கு மட்டும் ஊரிலை ஏதாவது ஒரு சின்ன வேலையள் செய்வார்.

ஆனால் ஒவ்வொரு நாளும் இரவு தண்ணியடிச்சிட்டு கத்தறதுதான் அவரின்ரை முக்கிய வேலை. ஒரு அறுவடைக்காலம் சிலர் வைரவருக்கு பொங்கிபடைச்சுக் கொண்டு இருக்கேக்குள்ளை அங்கை நிண்ட அவர் திடீரெண்டு உருவந்து(சாமியாட) ஆடத்தொடங்கிட்டார். ஆடினவர் இந்த ஊர்மக்களுக்கு நல்லது செய்யப்போறன் பல உண்மையள் சொல்லப்போறன் என்று கத்தினபடி ஆட அதை பாத்துக்கொண்டு நிண்ட நாங்கள் நினைச்சம் எங்கடை அனியாயம் தாங்க ஏலாமல் வைரவர்தான் உண்மையிலை வந்து கள்ள வெள்ளரிக்காய் புடுங்கிறது கள்ளபீடியடிக்கிறதைப்பற்றி சொல்லப் போறாராக்கும் எண்டு நினைச்சு எங்களுக்கு சாதுவாய் கலக்கத் தொடங்கிட்டுது. ஆனால் அப்பிடியொண்டும் நடக்கேல்லை அவரும் வேறை என்னவோ எல்லாம் புலம்பிப் போட்டு மயங்கிவிழுந்திட்டார். சுத்திவர நிண்டவை அவருக்கு முகத்திலை தண்ணியை தெளிச்சதும் எழும்பிப் பாத்தவர் எல்லாத் தமிழ் சினிமாவிலையும் மயங்கி விழுறவை எழும்பிக்கேக்கிற அதே வசனமான ஆ...நான் எங்கையிருக்கிறன் எனக்கு என்ன நடந்தது. எண்டு கேட்டார்.அதுவரை காலமும் அவரை டேய் எண்டு கூப்பிட்டவை எல்லாரும் அண்டைக்கு மரியாதையாய் அய்யா உங்களிலை வைரவர் வந்தவர் எண்டு சொல்லவும். அவர் அப்பிடியா எண்டு கேட்டிட்டு வைரவரைப்பாத்து விழுந்து கும்பிட்டிட்டு விபூதியை அள்ளி எல்லாருக்குமேலையும் எறிஞ்சுபோட்டு போட்டார்.

அதுக்குப்பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் கோயிலை கூட்டிசுத்தம் செய்து. மழைவந்தால் மட்டுமே குளித்துக்கொண்டிருந்த வைரவரை குளிக்கவாத்து ஒரு பட்டுத்துணியும் கட்டி பூ எல்லாம் வைச்சு மணியடிக்கத்தொடங்கிட்டார்.அ??ு கேள்விப்பட்டு சனங்களும் வரத்தொடங்க இறுதி உச்சக்கட்ட காட்சியாய் அவரும் உருவாடி முடிக்க வைரவர் சூலத்தடியில் சில சில்லறைகளும் விழத்தொடங்கவே. உருவாடியவர் ஒரு நெஸ்பிறே பால்மா பேணியொண்டை உண்டியலாக்கி வைரவர் சூலத்தில் கட்டிவிட்டார்.அதுவரை காலமும் நிம்மதியாய் இருந்த வைரவருக்கும் எங்களுக்கும் பூசை எண்டு சனம் வரத்தொடங்கினதாலை நிம்மதியும் போய் கொஞ்சம் வளையமாய் புகைவிடப்பழகியிருந்ததும் மறந்து போகும் அபாயம் இருந்தது.ஆனால் எங்களிற்கு ஒரு சந்தேகம் அதுவரை காலமும் எவ்வளவு நட்பாய் வைரவரும் நாங்களும் பழகியிருப்பம் ஒரு நாள்கூட எங்களிலை வராமல் தண்ணியடிச்சிட்டு இரவிரவாய் கத்தி எங்கடை நித்திரையை கலைக்கிறவரிலை ஏன் வரவேணும் எண்டு யோசிச்சு அதுக்கு ஒரு முடிவு கட்ட தீர்மானிச்சம்.

ஒருநாள் இரவு அவர் தண்ணியடிச்சிட்டு சத்தம் போட்டபடி வந்துகொண்டிருக்க சனநடமாட்டம் இல்லாத வயற்பகுதியில் சாக்கு ஒன்றுடன் தயாராய் பதுங்கியிருந்த நாங்கள் பாய்ந்து அவரது தலையை சாக்கால் மூடிக்கட்டி வயலுக்குள் போட்டு. வைரவர் உண்மையாகவே உன்னிலை வந்தவாரா எண்டு கேட்டு அவருக்கு உருவாடிவிட்டம்.அவருக்கு நாங்கள் தான் உருட்டி உருட்டி உருவாடினது எண்டு தெரிஞ்சிட்டுது.தம்பியவை நான் இனி கோயில் பக்கமே வரமாட்டன் என்று மன்னிப்பு கேட்டது மட்டுமில்லை அதுக்கு பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழைமையும் ஊரிலையே நிக்கமாட்டார். அடுத்த வெள்ளிக்கிழைமையும் வழைமை போல பூசைக்கு தயாராய் வந்த சனங்கள் அவரை காணாமல் அவரது வீட்டில் விசாரித்தனர்அவர் ஊரில் இல்லையெண்டதும் குழப்பத்துடன் போய்விட்டனர். சனங்களின் தொல்லை குறையவே.வெளியே துரத்தப்பட்ட நாய்களும் மீண்டும் வந்து மண்ணை விறாண்டி படுத்தக்கொள்ள கோயில் கூரையில் செருகியிருந்த பீடியை தேடியெடுத்து நாங்கள் சுருள் சுருளாய் விட்ட புகையை பார்த்து வைரவருக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும்.

Edited by sathiri

வணக்கம் சாத்திரி ..நல்ல கிராமிய மணம் கமிழும் பதிவு நன்றிகள். பாரதிராஜா படங்களில் வரும் கிராமங்கள் மாதிரி யாழ் குடா நாட்டில் இருக்கா என்று தேடி பார்த்தால் கிடைக்கிற கஸ்டம் .கிராமிய மணமும் நகர் புற வாடையும் கலந்து தான் வீசும். அந்த காலத்தில் வடமாராட்சி கிழக்கு பகுதிகளில் இருக்கும் அம்பன் குடத்தனை ,நாகர்கோவில் பகுதிகளை சொல்லலாம். இப்ப அவற்றயும் சொல்லமுடியாது.

சாத்திரியின் இந்த பதிவு போல உள்ள வயலும் வைரவர் சார்ந்த பகுதி என் அப்பம்மா வசிக்கும் பகுதியில் இருந்தது. சிறு வயதில் அந்த சூழ்நிலையில் அங்கு சென்று குதியம் குத்திய ஞாபகங்களை கிளறிவிட்டன :wub: இந்த சாத்திரியாரின் பதிவு.. மீண்டும் நன்றிகள்

வைரவர் அங்கிள் வெறி சாறி சாத்திரி அங்கிள் கதை நன்னா தான் இருக்கு :wub: ..பட் எனக்கு என்னவோ நம்ம சாத்திரி அங்கிள் தான் உருவாடினவர் போல இருக்கு..(உண்மையை சொல்லுங்கோ :( )..

சாத்திரி அங்கிள் கதையை நகர்த்திய விதம் மணகண்ணில் நாம் கதையில் உள்ளவர்கள் போன்று இருந்தது மிகவும் நன்றாக இருந்தது :lol: சாத்திரி அங்கிள்..ம்ம் நாளைக்கு கட்டாயம் உங்களுக்கு ஒரு தேங்காய் உடைத்து விடுறேன் என்ன..!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரி ..நல்ல கிராமிய மணம் கமிழும் பதிவு நன்றிகள். பாரதிராஜா படங்களில் வரும் கிராமங்கள் மாதிரி யாழ் குடா நாட்டில் இருக்கா என்று தேடி பார்த்தால் கிடைக்கிற கஸ்டம் .கிராமிய மணமும் நகர் புற வாடையும் கலந்து தான் வீசும். அந்த காலத்தில் வடமாராட்சி கிழக்கு பகுதிகளில் இருக்கும் அம்பன் குடத்தனை ,நாகர்கோவில் பகுதிகளை சொல்லலாம். இப்ப அவற்றயும் சொல்லமுடியாது.

சாத்திரியின் இந்த பதிவு போல உள்ள வயலும் வைரவர் சார்ந்த பகுதி என் அப்பம்மா வசிக்கும் பகுதியில் இருந்தது. சிறு வயதில் அந்த சூழ்நிலையில் அங்கு சென்று குதியம் குத்திய ஞாபகங்களை கிளறிவிட்டன :D இந்த சாத்திரியாரின் பதிவு.. மீண்டும் நன்றிகள்

கருத்திற்கு நன்றிகள் சின்னக்குட்டி நீங்கள் சொன்னது போல யாழ் குடாவில் பெரும்பாலும் நகரம் என்றும் சொல்லமுடியாத தனிக்கிராமம் என்றும் சொல்லமுடியாதஇரண்டும் கலந்த கிராமங்களே அதிகம். காரணம் யரிழில் பயிர்ச்செய்கை நிலங்கள் குறைவு உதாரணமாக வன்னி மட்டு அம்பாறை கந்தளாய் பகுதிகளில் ஒருவர் பத்து ஏக்கர் காணி வைச்சிருந்தால் தான் அவர் விவசாயி அனால் யாழில் பத்து பரப்பு வைச்சிருந்தாலே விவசாயி.அப்படித் தேடினாலும் அராலி பக்கம் சங்கானைப்பக்கம் கொஞ்ச இடம் புத்தூர் நீர்வேலிப்பகுதிகளில் சில இடங்களைத்தான் தனிக்கிராமங்களாக காணமுடிந்தது. ஆனால் நான் வன்னிப் பகுதிகளில் நீங்கள் சொன்ன அந்தப் பாராதிராஜா படத்து கிராமங்கள் பலதை கண்டிருக்கிறேன்.அனுபவித்தும

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை நல்ல நகைச்சுவையுடன் கலந்து எழுதிய விதம் நன்றாக இருந்தது சாத்திரியார்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கன நாளா ஒரு சந்தேகம்.இந்த வைரவருக்கு பொங்கள் பூசை என்று வரும் போது முக்கியமாக வைரவருக்கு வடை மாலை போடுவது வழக்கம்.வடை மாலையை போட்டுவிட்டு அரத நாய் காவிக்கொன்டு போயிடாமல காவல் இருந்து நாய் வந்தால் ஒரே எறிகல்வீச்சுதான்.ஆனால் வைரவரின் வாகனம் நாயாம் :D சாத்திரி உங்கள் இந்தக்கதை என்னையும் ஒரு முறை எங்கள் ஊர் வைரவரை ஞாபகப்படுத்த வைத்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை நல்ல நகைச்சுவையுடன் கலந்து எழுதிய விதம் நன்றாக இருந்தது சாத்திரியார்.

நன்றிகள் தமிழ்சிறி

எனக்கும் கன நாளா ஒரு சந்தேகம்.இந்த வைரவருக்கு பொங்கள் பூசை என்று வரும் போது முக்கியமாக வைரவருக்கு வடை மாலை போடுவது வழக்கம்.வடை மாலையை போட்டுவிட்டு அரத நாய் காவிக்கொன்டு போயிடாமல காவல் இருந்து நாய் வந்தால் ஒரே எறிகல்வீச்சுதான்.ஆனால் வைரவரின் வாகனம் நாயாம் :D சாத்திரி உங்கள் இந்தக்கதை என்னையும் ஒரு முறை எங்கள் ஊர் வைரவரை ஞாபகப்படுத்த வைத்தது.

வைரவருக்கு வடைமாலை போடுறதே நாங்கள் சாப்பிடத்தானே பிறகெப்பிடி நாய் சாப்பிடலாம். பிறகு நன்றியுள்ள நாய்க்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம். :D:lol:

வைரவர் ஏழைகளின் கடவுள் அவரின்ரை பொரும்பாலான கோயில்களிலை உண்டியலே இருக்காது அதாலைதான் எங்கடை மக்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலை எந்த நாட்டிலையும் யாரும் வைரவருக்குகோயில் கட்டவேயில்லை என்று நினைக்கிறன்.

இதுதான் சாத்திரியின் ஆப்பு :D:D

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி கதை அம்சமா இருக்குது. ஆனா எழுத்துப் பிழைகள் கதையைக் கொல்லுது. உதாரணத்துக்கு "மலை நேரத்தில்.. விழையாடுறது " என்ட என்னடா அது மலை நேரம் என்று ஜோசிச்சிட்டு இருந்தன். பிளீஸ்... கொஞ்சம் புறூவ் பார்த்து புறுபுறுக்காம.. போடுங்க..! :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி கதை அம்சமா இருக்குது. ஆனா எழுத்துப் பிழைகள் கதையைக் கொல்லுது. உதாரணத்துக்கு "மலை நேரத்தில்.. விழையாடுறது " என்ட என்னடா அது மலை நேரம் என்று ஜோசிச்சிட்டு இருந்தன். பிளீஸ்... கொஞ்சம் புறூவ் பார்த்து புறுபுறுக்காம.. போடுங்க..! :lol:

வசி வடிவாய் வரி வரியாய் படிச்சிருக்கிறீங்கள் எண்டு விளங்குது. :lol: நெடுக்கு என்ன செய்ய எல்லாம் அவசரம் அதிலை சில நேரங்களிலை மாலை நேரத்திலை காலை (அரவு)ப் போட மறந்திடுறன் :D:D:lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

(யாரிலும்) கால் போடாமல் இருந்து பழக வேணும் என்று சின்னவயதில் பெரியவர்கள் சொன்னதைத் தொடர்ந்து பேணுகின்றீர்கள் என்பதன் மூலம் உங்களின் பண்பைக் கண்டு பாராட்டுகின்றேன். ஆனால் எழுதும்போது கால் போட்டுத் தான் ஆக வேண்டும் சாத்திரி.

இருள்அழகனை இளுள் அழகன் என்று எழுதியிருக்கின்றீர்கள். மனுசன் கண்டால் கண்ட இடத்தில் வெட்டும்.

ஹீஹீ மீண்டும் ஒரு கதையா?

நல்லா இருக்கு சாத்திரி மாமா.

மாமோய் இருள் அழகன் இப்போ எங்கை மாமா? அட பீடி குடிக்கிறதுக்காக அந்த மனுசனை சீ சாமியாரை துரத்திட்டாங்க பாவம்.

அதுசரி உந்த வைரவர் ஆக்களை பிடிக்கிறதில்லையோ இரவிலை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தூயவன் திருத்தியிருக்கிறேன். வெண்ணிலா இருள் அழகனும் இப்ப பிரான்சிலைதான் இருக்கிறான் ஒவ்வொரு தரமும் ஒரு பேப்பர் வந்ததும் அவரின்ரை மனிசி பே;ப்பரை எடுத்து என்ரை கதையைத்தானாம் முதல் படிக்கிறது .அதினை இருள் அழகனைப் பற்றி என்ன எழுதியிருக்கெண்டு படிச்சிட்டு அண்டைக்கு அவன் பட்டினிதானாம் என்று எனக்கு போனிலை அழுவான் :):unsure::(

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தூயவன் திருத்தியிருக்கிறேன். வெண்ணிலா இருள் அழகனும் இப்ப பிரான்சிலைதான் இருக்கிறான் ஒவ்வொரு தரமும் ஒரு பேப்பர் வந்ததும் அவரின்ரை மனிசி பே;ப்பரை எடுத்து என்ரை கதையைத்தானாம் முதல் படிக்கிறது .அதினை இருள் அழகனைப் பற்றி என்ன எழுதியிருக்கெண்டு படிச்சிட்டு அண்டைக்கு அவன் பட்டினிதானாம் என்று எனக்கு போனிலை அழுவான் :):unsure::(

உங்களுக்கெண்டு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல கதை அல்லது நிஜம் சாத்திரி. பழைய நினைவுகளை அப்படியே அள்ளிக் கொண்டு போகுது. :D:D

யாழ்ப்பாணத்தில் கல்லுண்டாய் வைரவர் கோயிலும் பெரியகோயில். வட்டுக்கோட்டையில் படித்த உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன். சிறுவயதில் சாமத்தில் கார்,லொறி ஓடிப்பழகியது அந்த வீதியில்தான். அப்போதெல்லாம் அந்த வைரவர்கோயில்தான் எமக்கு முறிகண்டிமாதிரி தரிப்பிடம். நன்றி சாத்திரி. யாழ். இந்துக்கல்லூரி மைதானத்துக்குள் இருக்கும் வைரவரும் அசத்தலானவர்தான். :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல கதை அல்லது நிஜம் சாத்திரி. பழைய நினைவுகளை அப்படியே அள்ளிக் கொண்டு போகுது. :lol::D

யாழ்ப்பாணத்தில் கல்லுண்டாய் வைரவர் கோயிலும் பெரியகோயில். வட்டுக்கோட்டையில் படித்த உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன். சிறுவயதில் சாமத்தில் கார்,லொறி ஓடிப்பழகியது அந்த வீதியில்தான். அப்போதெல்லாம் அந்த வைரவர்கோயில்தான் எமக்கு முறிகண்டிமாதிரி தரிப்பிடம். நன்றி சாத்திரி. யாழ். இந்துக்கல்லூரி மைதானத்துக்குள் இருக்கும் வைரவரும் அசத்தலானவர்தான். :lol::lol:

சுவியண்ணை நீங்கள் சொல்லத்தான் கல்லுண்டாய் வைரவர் ஞாபகத்திற்கு வந்தவர் அதுவும் பெரியகோயில்ததான் முந்தி காரைநகர் மற்றும் அராலி படகுத்துறையாலை இருந்து வாற பஸ்சுகள் அதிலை நிண்டுதான் வெளிக்கிடுறது.சனம் போய் கும்பிட்டிட்டு வாறவை. பிரச்சனை ஆரம்ப காலங்களிலை ( காரைநகர் நேவி அடிக்கடி அதிலை நிப்பாங்கள்.அந்தப் பயத்திலை நான் அந்தறோட்டாலை அதிகம் போறதில்லை :D:D

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் தலைப்பை பார்த்தவுடனே வயலும் வாழ்வுமோ எண்டு நினைச்சுட்டேன்.

கதை நல்லாருக்கு சாத்திரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கெண்டு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கு

:huh::wub::wub:

கதையின் தலைப்பை பார்த்தவுடனே வயலும் வாழ்வுமோ எண்டு நினைச்சுட்டேன்.

கதை நல்லாருக்கு சாத்திரி

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஅப்ப முதல் கதையை படிக்காமலேயே கருத்து எழுதியிருக்கிறிங்கள் எண்டு விழங்குது :wub::wub:

வணக்கம் சாத் அண்ணை (பெயர்ச் சுருக்கம் எப்படியிருக்கு) சேத்து வாசிச்சால் இன்னும் நல்லாயிருக்கும்.

நீங்கள் எழுதுகின்ற விடயங்கள் எல்லாம் நாங்களும் கண்டு அனுபவித்தவை தான். ஆனால் அதை ரசிக்கும் படியாய் எழுத்தில் கொண்டு வரும் கலை உங்களிடம் தானிருக்கு. (அது சரி உங்களுக்குச் செவ்வாய் 2ம் வீட்டிலை இருக்குதோ)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத் அண்ணை (பெயர்ச் சுருக்கம் எப்படியிருக்கு) சேத்து வாசிச்சால் இன்னும் நல்லாயிருக்கும்.

நீங்கள் எழுதுகின்ற விடயங்கள் எல்லாம் நாங்களும் கண்டு அனுபவித்தவை தான். ஆனால் அதை ரசிக்கும் படியாய் எழுத்தில் கொண்டு வரும் கலை உங்களிடம் தானிருக்கு. (அது சரி உங்களுக்குச் செவ்வாய் 2ம் வீட்டிலை இருக்குதோ)

யோ மணி (டிங் டிங் )இதுவும் பெயர்ச்சுருக்கம்தான் நானே வாடைகை வீட்டிலைதான் இருக்கிறன் இதுக்கை செவ்வாய் 2ம் வீட்டிலையா??? யாரந்த செவ்...வாய்.... அந்த செவ்.....வாயை ஒருக்கா பாக்கவேணும் எனக்கு :huh::wub:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எழுதுகின்றீர்களே சாத்திரி.

வளலாய்க் கதையும் எனி வரும் காலங்களில் வருமா:huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எழுதுகின்றீர்களே சாத்திரி.

வளலாய்க் கதையும் எனி வரும் காலங்களில் வருமா:wub:

:huh::wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ!

வெக்கத்தைப் பாருங்கோ

வெண்ணிலா இருள் அழகனும் இப்ப பிரான்சிலைதான் இருக்கிறான் ஒவ்வொரு தரமும் ஒரு பேப்பர் வந்ததும் அவரின்ரை மனிசி பே;ப்பரை எடுத்து என்ரை கதையைத்தானாம் முதல் படிக்கிறது .அதினை இருள் அழகனைப் பற்றி என்ன எழுதியிருக்கெண்டு படிச்சிட்டு அண்டைக்கு அவன் பட்டினிதானாம் என்று எனக்கு போனிலை அழுவான் :huh::):D

:(:( அப்படின்னா இருள் அழகன் தன் இளமை சுவாரசியமான சம்பவங்களை மனைவிக்கு சொல்லி ஆனந்தப்படுவதில்லை நீங்கள் தான் ஒரு பேப்பருக்கு எழுதும் கதைகள் மூலம் சொல்லுறியளாக்கும். ஹீஹீ நல்லாயிருக்கு சாத்ரி மாமோய் :D ஆமா ஏன் அவரை பட்டினி போடுறா? சமைக்கிறதில்லையாமோ ஒருபேப்பர் வந்தால் :D

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வயலும் வைரவரும்.

இந்தவார ஒரு பேப்பரில்

மற்றப்படி வைரவரை காவல்தெய்வமாய் கும்புடுறதாலை ஊருக்கு நாலைஞ்சு வைரவர் இருப்பினம்.வைரவர் ஏழைகளின் கடவுள் அவரின்ரை பொரும்பாலான கோயில்களிலை உண்டியலே இருக்காது அதாலைதான் எங்கடை மக்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலை எந்த நாட்டிலையும் யாரும் வைரவருக்குகோயில் கட்டவேயில்லை என்று நினைக்கிறன்.

தமிழர்களின் காவல் தெய்வமாக இருந்த வைரவருக்கு புலம் பெயர்ந்த நாடுகளில் கோவில் இல்லை. தமிழர்கள் கும்பிடாத ஐயப்பன், அனுமாருக்கு புலம் பெயர்ந்த நாடுகளில் கோவில்கள் அதிகமாக இருக்கிறது. கோவில்தான் இல்லை என்றாலும் கோவில் விக்கிரகங்களாகவும் வைரவரை சில கோவில்களில் காணமுடியாது. பிரிஸ்பனில் ஒரு ஈழத்தமிழர்களின் கோவிலில் பிரம்மாவுக்கும் சிலை வைத்திருக்கினம். சிட்னியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஐயப்பன் கோவிலில் கேள்விப்படாத கருப்பணாசுவாமிக்கும் விக்கிரகம் அமைக்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.