Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் பற்றிய சர்ச்சைக்குரிய படம் எடுத்த சிங்கள டைரக்டருக்கு அடி, உதை விழுந்தது.

Featured Replies

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பற்றிய சர்ச்சைக்குரிய படம் எடுத்த சிங்கள டைரக்டருக்கு அடி, உதை விழுந்தது.

தொடர்ந்து வாசிக்க

http://isoorya.blogspot.com/2008/03/blog-post_6122.html

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் பற்றிய சர்ச்சைக்குரிய படம் எடுத்த சிங்கள டைரக்டருக்கு அடி, உதை விழுந்தது.

Wednesday, 26 March 2008

`பிரபாகரன்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சினிமாவில், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பற்றி தவறாக சித்தரித்திருப்பதாக கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சத்தம் கேட்டு லேப்பில் இருந்து வெளியே வந்த அந்த சினிமா படத்தின் இயக்குனர் பெரீஷ் என்பவரையும் அடித்து உதைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலதிக விபரங்களுக்கு

http://www.ajeevan.ch/content/view/1330/1/

  • கருத்துக்கள உறவுகள்

"பிரபாகரன்" என்ற பெயரில் படம் இயக்கிய சகோதரமொழி இயக்குனர் சென்னையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்

3/26/2008 10:31:45 AM

வீரகேசரி இணையம் - பிரபாகரன் என்ற பெயரில் திரைப்படம் இயக்கிய இலங்கையை சேர்ந்த சகோதர மொழி இயக்குனர் ஒருவர் சென்னையில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

சிங்கள மொழியில் இத்திரைப்படத்தை இயக்கி உள்ள பிரஸ்தாப இயக்குனர் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளுக்காக சென்னை சென்ற வேளையிலேயே இச்சமபவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் படம்-சென்னையில் சிங்கள இயக்குநருக்கு அடி

புதன்கிழமை, மார்ச் 26, 2008

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து படம் எடுத்துள்ள சிங்கள இயக்குநரைக் கண்டித்து சென்னையில் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இயக்குநருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது.

இலங்கையைச் சேர்ந்த துஷாரா பெரீஸ் என்பவர் பிரபாகரன் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்துப் படம் எடுத்துள்ளார். இப்படத்தை சிங்களத்தில் எடுத்துள்ள அவர், படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் மற்றும் பிரிண்ட் போடுவதற்காக சென்னைக்கு வந்துள்ளார்.

கே.கே.நகரில் உள்ள ஜெமினி கலர் லேபில் பிரிண்ட் போடும் பணி நடந்து வருகிறது. இந்தத் தகவல் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிய வந்தது. இதையடுதது திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், இயக்குநர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்டோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஜெமினி லேபுக்கு விரைந்தனர்.

லேபுக்கு முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரபாகரன் பட பிரிண்ட் போடும் பணியை நிறுத்த வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதையடுத்து இயக்குநர் பெரீஸ், தமிழர் அமைப்பினரை சமாதானப்படுத்துவதற்காக வெளியே வந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் பெரீஸ் மீது பாய்ந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் பெரீஸ் அதி்ர்ச்சி அடைந்தார். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். தமிழர் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வருகிற 27ம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்குப் படத்தைப் போட்டுக் காட்டுவது, அவர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் பிரிண்ட் போட்டுக் கொடுத்து இலங்கைக்கு அனுப்புவது என்ற முடிவுக்கு அனைவரும் வந்தனர்.

இதையடுத்து வருகிற 27ம் தேதி பிரபாகரன் படத்தை ராமதாஸும், திருமாவளவனும் பார்க்கவுள்ளனர். தமிழ் சப்-டைட்டிலுடன் படம் காட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பிரபாகரன், தமிழர்களின் போராட்டம் குறித்து தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கருத்து பரவியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/03...-sinhalese.html

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து படம் எடுத்துள்ள சிங்கள இயக்குநரைக் கண்டித்து சென்னையில் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இயக்குநருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது.

இலங்கையைச் சேர்ந்த துஷாரா பெரீஸ் என்பவர் பிரபாகரன் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்துப் படம் எடுத்துள்ளார். இப்படத்தை சிங்களத்தில் எடுத்துள்ள அவர், படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் மற்றும் பிரிண்ட் போடுவதற்காக சென்னைக்கு வந்துள்ளார்.

கே.கே.நகரில் உள்ள ஜெமினி கலர் லேபில் பிரிண்ட் போடும் பணி நடந்து வருகிறது. இந்தத் தகவல் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிய வந்தது. இதையடுதது திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், இயக்குநர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்டோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஜெமினி லேபுக்கு விரைந்தனர்.

லேபுக்கு முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரபாகரன் பட பிரிண்ட் போடும் பணியை நிறுத்த வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதையடுத்து இயக்குநர் பெரீஸ், தமிழர் அமைப்பினரை சமாதானப்படுத்துவதற்காக வெளியே வந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் பெரீஸ் மீது பாய்ந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் பெரீஸ் அதி்ர்ச்சி அடைந்தார். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். தமிழர் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வருகிற 27ம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்குப் படத்தைப் போட்டுக் காட்டுவது, அவர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் பிரிண்ட் போட்டுக் கொடுத்து இலங்கைக்கு அனுப்புவது என்ற முடிவுக்கு அனைவரும் வந்தனர்.

இதையடுத்து வருகிற 27ம் தேதி பிரபாகரன் படத்தை ராமதாஸும், திருமாவளவனும் பார்க்கவுள்ளனர். தமிழ் சப்-டைட்டிலுடன் படம் காட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பிரபாகரன், தமிழர்களின் போராட்டம் குறித்து தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கருத்து பரவியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

படம் இறுதிப் பூசைக்கு வந்தவருக்கு நல்ல பூசை தான் போங்கோ. சிங்கள ஊடகங்களில் சிங்களவர்கள் கொதிக்கிறார்கள்.. இதைக் கேட்டு...! :lol::lol:

நல்ல செய்தி! நன்றி கறுப்பி!

தமிழர்களின் விரலை எடுத்தே, தமிழர்களின் கண்களை குத்த முயற்சிப்பவர்களின் கண்கள் பிடுங்கி எறியப்படவேண்டும்! அடி உதை மட்டும் போதாது

Edited by vettri-vel

படம் இறுதிப் பூசைக்கு வந்தவருக்கு நல்ல பூசை தான் போங்கோ. சிங்கள ஊடகங்களில் சிங்களவர்கள் கொதிக்கிறார்கள்.. இதைக் கேட்டு...! :lol::lol:

:D :D :lol:

அடுத்த பூசை சங்கரியாருக்கும் டக்ளசுக்கும் நடைபெற வாழ்த்து்கள்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

:lol: தலைவரைப் பற்றிக் கேவலமாப் படம் எடுத்ததும் இல்லாம அதை தமிழ்நாட்டில வேற கொண்டுபோய் பிரதி எடுக்கவா ? என்ன துணிவு ????? போட்டுத்தாக்கு !!!!!!!

இன்னும் தர்ம அடி மீதி இருக்கு. வைத்தியர் ராமதாசும் மற்றவர்களும் படம் பாத்தபின் அது அவருக்குக் கொடுக்கப்படும். கையக், கால எடுத்தல்தான் உவங்கள் திருந்துவாங்கள்.

படம் இறுதிப் பூசைக்கு வந்தவருக்கு நல்ல பூசை தான் போங்கோ

இன்னும் தர்ம அடி மீதி இருக்கு. வைத்தியர் ராமதாசும் மற்றவர்களும் படம் பாத்தபின் அது அவருக்குக் கொடுக்கப்படும். கையக், கால எடுத்தல்தான் உவங்கள் திருந்துவாங்கள்.

திருமாவும் பார்ப்பாராம்....! கட்டாயம் விளும்...!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:lol: நான் நினைக்கிறன் அநேகமா படப் பிரதியும் வேண்டாம், ஒண்டும் வேண்டாம் எண்டு "பிச்சை வேண்டாம், நாயைப் பிடி " எண்டு ஓடுறாரோ தெரியவில்லை.

இவங்களுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி மொட்டை அடித்து தெருத் தெருவா இழுத்து வந்தால்தான் சரி. ராணுவத்தின்ர உதவியோட தானாம் இவர் படம் எடுத்தவர், அப்ப படம் எப்படியிருக்கும் எண்டு பாக்க வேண்டியது தானே ?!!!!!

சோதனை மேல் சோதனை... சொறிஞ்ச இடத்தில வேதனை எண்ட மாதிரி..

அவளை தொடுவானேன் கவலை படுவான் எண்டமாதிரி...

உந்த படம் எடுப்பான் ஏன் அதை போய் அங்க காட்டுவானேன்? உதுதான் முதல் படமில்லை உப்பிடி ஒருபடத்தை காமினி பொன்சேக எடுத்தவர்.. அதுக்கு பேர் "னொமியன மினுசுன்" (சாகா மனிதன்)..

அவர் அண்டைக்கு தப்பீட்டார்.. அதுக்கும் சேர்த்து உவருக்கு போடவேணும்...

  • கருத்துக்கள உறவுகள்

:lol: suuraavaLi,

காமினி பொன்சேக்கா இன்னொரு படமும் எடுத்தவர். " கொட்டி வலிகய "( புலியின் வால் என்று பொருள்). அதிலயும் முழுக்க முழுக்க சிங்கள ராணுவப் புராணமும், புலிகள பயங்கரவாதிகளாகவும் காட்டினவர்.

பிறகு கல்யாண் என்ற இயக்குனர் " புன்சி சுரங்கனாவே"( சின்ன தேவதை ) எண்டு படம் எடுத்தவர். அதிலயும் புலித்தகப்பனையும் அவரின் மகளையும் காட்டி, நல்ல சிங்களவனால், ஒரு பயங்கரவாதப் புலியும் மகளும் காப்பாற்றப்படுவதாகக் கதை. இதில் கேவலமென்னவென்றால் புலித் தகப்பனுக்கு நடித்த மகேசன் யாழ்ப்பாணத்தில் சிங்கள ராணுவ அட்டூழியங்களுக்குள் புனித பத்திரிசியார் கல்லூரியில் படித்த தமிழர். உண்மையான பயங்கரவாதிகள் யாரென்று நேரில் கண்டவர்.

மகேசனுக்கே புலிகள் பயங்கரவாதிகளாகத் தெரியும்போது, சிங்கள இயக்குனர்களுக்கு புலிகள் பயங்கரவாதிகளாகத் தெரிவதில் வியப்பில்லை.

Edited by ragunathan

இப்ப அந்த மகேசன் எங்க?

:lol::lol::D

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்
:lol: 2002 வரை கொழும்பில சுத்திக்கொண்டு இருந்தவர். அதுக்குப் பிறகு நான் இங்கு வந்துவிட்டேன். என்ன ஆனார் எண்டு தெரியாது.

அந்த எருமையை அறிந்து கொண்டேன்... ஞாபகம் வருது... உவக்கு ஒரு ஆசான் வேற புளுகல் பொன்னையன்....

எங்கையாவது ஓடி இருப்பாங்கள் ...

குமுதம்.காம் முச்சந்தி.:

சிங்கள சினிமா பட டைரக்டருக்கு தமிழ்நாட்டில் விழுந்த அடி-_உதை

இன்றைய அலப்பறை கூட்டம். சென்னை கலைவாணம் அரங்கில் கூடியது. ''என்னய்யா'' கோட்டை' கோபாலு ரெண்டு நாளு லீவுக்கு பிறவு இன்னைக்குத்தான் சட்டமன்ற கூட்டம் கூடியிருக்கு ஏதாவது விசேஷம் உண்டா'' என்று தொடங்கி வைத்தார் சித்தன்.

''ஆமாம்பா. வழக்கமா வர்ற கோடை மழை இந்த தடவை தென்தமிழகத்த வெள்ளக்காடா புரட்டிபோட்டுடிச்சு. வெளஞ்ச நெல்லு எல்லாம் வீணா போச்சேன்னு விவசாயிகள் எல்லாம் வாயிலேயும் வயித்துலேயும் அடிச்சுகிட்டாங்க. தஞ்சையில ஒரு விவசாயி தற்கொலை செஞ்சுக்கிட இருந்தாரு. எப்படியோ காப்பாத்திட்டாங்க. பெரிய அளவுக்கு சேதாரமாயிடுச்சு. அதான் எம்.எல்.ஏ.எம்.பி.ங்கன்னு எல்லோரும் தொகுதிக்கு போய் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிய முதல்வரு செய்யச் சொன்னாரு. அதான் ரெண்டு நாலு லீவு.

அப்புறம் நேத்திக்கு சாயங்காலம், கோட்டையில அமைச்சரவைய கூட்டினாரு முதல்வரு. அதுல வெள்ளச் சேதாரம் பற்றி, எடுக்க வேண்டிய நடவடிக்கைய பற்றி விரிவாபேசினாங்க. நம்ப கெவர்மெண்ட் நறுக்குன நூறு கோடி தவிர கூடுதலா நிதி ஒதுக்க வேண்டியிருக்குமான்னும் பேசினாங்க.

அதுக்கு ஏற்றமாதிரி அ.தி.மு.க. 'அம்மா' வேற அரசு கொடுக்குற நிதி உதவி போதலை. எதுவும் சரியில்லை. கூடுதலா செய்யணும்னு அறிக்கை கொடுத்து போராட்டம் நடத்தப் போவதா சொல்லியிருக்காங்க. இதுவெல்லாம் இனிமே நடக்கப் போற பட்ஜெட் கூட்ட விவாதத்துல 'பிரச்சனையா' வச்சு அலம்பல் பன்றதுக்கும் அ.தி.மு.க. தயாராகிட்டு இருக்காம். அனேகமா 'மே' மாதம் முதல்வாரம் வரைக்கும் சட்டசபை கூட்டம் நடக்கும்னு சொல்றாங்க. இதுதான் சேதி என்றார் கோபல்.

நான் அதைவிட முக்கியமா ஒரு வேலையை செய்ய வந்தேன். அதுக்குள்ள கோபாலு குறுக்கே நுழைஞ்சுட்டாரு என்ற 'சுவருமுட்டி சுந்தரம்'...

''இலங்கையில இருக்குற சிங்களத்து சினிமா டைரக்டரு ஒருத்தர் 'பிரபாகரன்'னு படம் எடுத்திருக்காரு. முழுக்க முழுக்க தமிழ் போராளிகள் இயக்கத்த அதாவது புலிகளை சர்வதேச அளவில் கொச்சை படுத்துறவிதமான படமாம் அது. சிங்கள அரசே அந்த டைரக்டருக்கு பக்கபலமா இருந்து உதவிபன்னறாம். அப்படிப்பட்ட சினிமா படத்தை எடுத்துகிட்டு தமிழ்நாட்டுக்கு வந்தாரு அந்த டைரக்டர். கே.கே. நகர்ல இருக்குற ஜெமினி கலர் லேபில் வச்சு 'தமிழ் டப்பிங்' வேலைய செய்யுறதோட அறுபதுக்கும் மேற்பட்ட படக்காப்பி (ப்ரிண்ட்) போடுற திட்டத்திலேயும் இறங்கியிருந்தாரு.

ரகசியமா நடந்துகிட்டிருக்கிற இந்த படவேலை பத்தின தகவல் எப்படியோ, விடுதலை சிறுத்தைகள் அமைப்போட ஊடக பிரிவு பொருப்பாளரான வன்னி அரசுக்கு தெரிஞ்சிருக்கு. புலிகளுக்கு ஆயுதம் கடத்த உதவி பன்னாற்று கைதாகி ஜாமீன்ல வந்தாரே அதே 'வன்னி'தான் உடனே சுப. வீரபாண்டியன். சினிமா இயக்குனர் சீமான். உள்ளிட்ட பலருக்கும் தகவல் பரவிடுச்சு. அப்புறம் என்னது. திபுதிபுன்னு ஒரு ஆயிரம் தமிழ் பற்றாளர்களோட சுபவீ. சீமான், வன்னியரசு உட்பட பெரிய டீமே 'ஜெமினி' கலர் லேடிபுக்கு போயிருக்கு.

அந்த சிங்கள டைரக்டர்கிட்ட 'எங்க இனத்துக்கு எதிரா படம் எடுத்துட்டு, எங்க மண்ணுலேயே வந்து இந்த வேலைய செய்ய எப்படி துணிச்சல் வந்துச்சுன்னு ஓட ஓட விரட்டி தர்ம அடியா போட்டு தாக்கிட்டாங்க. சிங்கள டைரக்டரோட சட்டதுணி எல்லாம் கிழிஞ்சுடுச்சு. அவரு உயிர் பயத்துல 'அய்யோ, அய்யோ'ங்கிறத மட்டுமே தமிழ்ல கத்தினப் பாத்து, போனாப் போகுதுன்னு 'அடி'ய விட்டுட்டு அவரை தூக்கிட்டு வந்து ஒரு சேர்ல குந்தவச்சு முகத்துல தண்ணியடிச்சு கழுவிட்டு 'இந்த மாதிரி இனிமே செய்வியாடான்னு' திரும்பவும் ரெண்டு தட்டு தட்டியிருக்காங்க. அய்யோ சாமிங்கள சிலோன்லதான் 'புலிகள்' இருக்கான்னு நினைச்சேன் இங்கேயும் இருப்பீங்கன்னு தெரியாது நான் உங்க கேப்டன் பிரபாகரனுக்கு எதிராவோ, தமிழர்களுக்கு எதிராவோ படம் எடுக்கவே போராளி குழுவுல ஒரு சின்ன பையனா வர்றவருக்குதான் 'பிரபாகரன்'னு பேரு அதையே படத்துக்கு பேரா வச்சுட்டேன். மத்தபடி ஒரு தப்பும் செய்யலேன்னு கதறி அழுதிருக்காரு.

இதுக்குள்ள நிறைய போலீஸ் உள்ள வந்துருச்சு. அவரை மீட்டு பாதுகாப்பா ஒரு அறைக்கு கொண்டு போய் வச்சாங்க. நம்ப 'டீம்' விடவில்லை. பதில் சொல்லுடான்னு அங்கேயும் போய் வம்படிச்சாங்க. பிறவு போலீஸ் மத்தியில வச்சுகிட்டு சுப.வீ. அந்த சிங்கள டைரக்டர்கிட்ட பேச்சுவார்த்தை நடத்தினாரு.

இறுதியா தமிழ் தலைவர்களான பழ. நெடுமாறன், டாக்டர்.ராமதாஸ், திருமாவளவன், இயக்குனர் சீமான் உள்ளிட்ட பலரை கூட்டி வச்சு அந்த 'பிரபாகரன்' படத்தை 27_ந் தேதி காலையில பதினோரு மணிக்கு போட்டு காட்டணும். போராளிகளுக்கோ தமிழர்களுக்கு படம் எதிரா இருந்தா தமிழ் டப்பிங், பிரிண்ட் போடுற எந்த வேலையும் செய்யக் கூடாது (அப்படி செய்தா படச்சுருளையே கொலுத்திடுவோம்னு வேற சொன்னாங்க). அப்படியே அந்த பெட்டிய தூக்கிட்டு அடிபடாம சிங்களத்துக்கு ஓடிப்போயிடனும். அனுமதி கிடையாது. நல்லபடியா இருந்துச்சுன்னா நீ செய்யுற வேலைய தாராளமா செய்துக்கிடலாம்னு'' அந்த டைரக்டர் கைப்பட எழுதி வாங்கிட்டு, அந்த 'பிரபாகரன்' சிங்களபடத்தை ஒரு வெட்டுக்குள்ள போட்டு மூடி சில வச்சுட்டுத்தான் வெளிய வந்தாங்க.''

அடடே அப்புறம் என்னாச்சு _ அன்வர்பாய்.

''அதான் முதலிலேயே உதைச்சுட்டுங்களே. பிறவு ஏதும் நடக்கலை. சமாதானமா வெளியேறிட்டாங்க. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். அந்த சிங்கள டைரக்டர் சட்டை துணி எல்லாம் கிழிஞ்சி கிடந்தாரில்ல. அத பாத்துட்டு தமிழ் உணர்வாளர்கள் பாவப்பட்டு, உடனே பக்கத்துல இருந்த துணிக் கடைக்கு ஓடி டைரக்டரோட சைஸுக்கு ஒரு டி.சர்ட் வாங்கி வந்து போட்டுக்க வச்சிருக்காங்க. ஏன் தெரியுமா, போலீஸ், பத்திரிக்கைக்காரங்கன்னு வந்து பார்க்குறப்போ, சட்டைகிழிந்து பரிதாபமா இருந்தா நல்லாருக்காது இல்ல அதான்'' என்றார் சிரித்தபடியே.

சரி. அது போகட்டும். நான் அரசியலுக்கு வர்றேன் என்ற சித்தன்...

டெல்லி காங்கிரஸ்ல, தமிழ் நாட்டுல தி.மு.க.வை கழட்டி விட்டுட்டு, விஜயகாந்த்த கூட வச்சுகிட்டு, அ.தி.மு.க. கூட்டணிங்கிற ஒரு முயற்சி நடந்ததே நாம கூட முன்ன பேசிவிட்டோமே. அதுக்கேத்தமாதிரி. தமிழ்நாட்டுக்கு மேலிட பார்வையாளரா இருக்குற அருண்குமார்கூட விஜய்காந்த் கூட பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தினாரே. அந்த ப்ளான் இப்போ புட்டுகிச்சாம்பா.

அதாவது சோனியா இப்போ தெளிவா சொல்லிட்டாங்களாம். தமிழ்நாட்டுல தி.மு.க. கூடதான் கூட்டணி. அந்த கட்சிய யாரும் சீண்டக்கூடாது. விஜயகாந்த் மண்குதிரை அதை நம்பி ஏறி குந்திகிட்டு ஆற்றுல இறங்க முடியாதுன்னு, தெளிவா சொல்லிட்டாங்க. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொருப்பாளரான 'அருணை' கூப்பிட்டு விஜயகாந்த் கூட பேச்சுவார்த்தைங்கிறத எல்லாம் விட்டுடணும்னு ஸ்டாங்கா சொல்லிட்டாங்க. அவரு பயந்து போயிட்டாரு. உங்க உத்தரவு ஆகட்டும் தாயேன்னு தலையாட்டிட்டு வெளியில போய் 'மீடியாகிட்ட' தி.மு.க. வை பத்தி ஆகா ஓகோன்னு புகழ்ந்து பேசிட்டு போனாராம். இது எப்படி இருக்கு' என சிரித்தார்.

கடைசியா நான் ஒரு அரசியலை சொல்லிடறன்பா என்ற சுவருமுட்டி சுந்தரம்.

''தமிழ்நாட்டுல ஒரு புது கூட்டணி உருவாகப் போவுதாம். அதுக்கான அண்டர்கிரவுண்ட் வேலைய நம்ம டாக்டர். சுப்ரமணிய சுவாமிதான் செய்யுறாராம். அதாவது அ.தி.மு.க. பி.ஜே.பி. கூட்டணிங்கிறது வேற. அது நடந்துடுமாம். இந்த கூட்டணிக்கு தமிழ் நாட்டுல பலம் வேணுமே. அதுக்காக நம்ப சரத்குமார் கட்சிகூட பேசுறாராம் சாமி. அ.தி.மு.க. பி.ஜே.பி. கூட்டணியில சரத்குமாரும் இருப்பாராம். அப்படியே முடிஞ்சா விஜயகாந்தையும் இழுத்துட்டு வந்துடறதுன்னுப் ப்ளானாம். இதைவிட பெரிய விஷயம் ஒன்று. தி.மு.க.வால நாம் கட்டப்பட்டு ஒதுக்கி வச்சிருக்கிற தயாநிதி மாறனை சாமியோட டெல்லி 'கோர்ஸ்' மூலம் எப்படியாவது பேசி இந்த கூட்டணிக்கு பக்கபலமா வச்சிக்கிடணும்னு வேற சுத்துறாராம். ஆனா இதெல்லாம் நடக்குமா, நடக்காதானு எனக்கு தெரியாதுப்பா'' என்றபடியே எழுந்தார். நம்ப சுப்ரமணியசாமின்னா, சும்மா சாமின்னு பேரு. இப்படி ஏதாவது 'டகால்டி' நியூஸை எல்லாம் கிளம்புவாறு. பார்த்துடலாமே என்ற பதிலுக்கு நக்கலடித்தார் சித்தன்.

சபை களைகட்டும்.

ஒட்டுக் கேட்டவர் :

பா. ஏகலைவன்

குமுதம்.காம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரவுசரையும் உருவி இருகனும்.. ..

சட்டையோட விட்டாங்கள்.....

விரைவில் முழு தமிழகமும் கொந்தளிக்க வேண்டும் அப்போது... :huh::wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தகுந்த பதிலடி கொடுத்த தமிழ் ஆர்வலருக்கு கோடானுகோடி நன்றி.

உண்மையில் பாராட்டுக்குரியது அதே மாதிரி ராமதாஸ் கருணாநிதி போன்றோர் இந்திய அரசு இலங்கக படைகளுக்கு செய்யும் இராணுவ புலனாய்வு தகவள் ஆயுத உதவியையும் நிறுதினால் இன்னும் சிறப்பாக இருக்குமே

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பாராட்டுக்குரியது அதே மாதிரி ராமதாஸ் கருணாநிதி போன்றோர் இந்திய அரசு இலங்கக படைகளுக்கு செய்யும் இராணுவ புலனாய்வு தகவள் ஆயுத உதவியையும் நிறுதினால் இன்னும் சிறப்பாக இருக்குமே

காத்திருக்கிறோம்

அந்த நல்ல செய்திக்காய்

அந்த இயக்குனருக்கு எதிர்ப்பு தெரிவித்தது சரி. ஆனால் அடி உதை கொஞ்சம் ஒவர். இதையே நாளைக்கு புலி எதிர்ப்பாளர்கள் பெரிய பிரச்சினை ஆக்குவார்கள். இலங்கை அரசும் இதனை விளம்பரமாக்கும்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.