Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன F-7 விமானங்கள் வன்னியில் தாக்குதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரேமதாச அரசு காலத்தில் முதற் தடவையாக சிறீலங்கா விமானப்படை சுப்பர் சொனிக் விமானங்களை தமிழர் தாயகம் மீது குண்டு வீச பாவிக்க ஆரம்பித்தது. அப்போது அவர்கள் சீனத் தயாரிப்பு F-7 விமானங்களைப் பாவித்தனர். அதன் பின்னர் சந்திரிக்கா அம்மையார் இஸ்ரேலிய தயாரிப்பு கிபீர் விமானங்களைப் பாவித்தார். அதன் பின்னர் ரணில் மகிந்த கம்பனி மிக் 21 மற்றும் மிக் 27, 29 விமானங்களைப் பாவிக்க ஆரம்பித்தன. தற்போது தரை இலக்குகளை தாக்க மீண்டும் சீனத் தயாரிப்பு F-7 களமிறக்கபட்டு வன்னியில் இன்று அதன் மூலம் தாக்குதலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

f7mg1snq1.jpg

சீன F-7 தரைத் தாக்குதல் விமானம்.

வன்னி சர்வதேச நாடுகளின் பேரழிவு ஆயுதங்களின் பரீட்சைக் களமாக மாறி வருவது வருத்தமளிக்கின்ற விடயமாக உள்ளது..!

அண்மையில் யாழில் பிரசுரிக்கப்பட்ட ஒரு அவதானிப்பறிக்கையில் F-7 விமானங்கள் விரைவில் களமிறங்க இருப்பதாக ஒரு அவதானிப்பாளர் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் சீன தூதர் சீனா சிறீலங்காவுக்கு பேரழிவு ஆயுதங்களை வழங்குவதில்லை சிறிய ஆயுதங்களைத் தான் வழங்குகிறது என்று மனோ கணேசன் எம்பியிடம் பொய் சொல்லி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

--------

The Air Force says jets including F-7 bombers attacked two LTTE positions in the north this morning including a command post used by the Sea Tigers.

டெயிலிமிரர்.

Edited by nedukkalapoovan

துரோகிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே இடப்பட்ட தகவலில் இரண்டு விடயங்கள் திருத்தப்பட்டுள்ளன.

1. முதலில் இணைக்கப்பட்டிருந்த சண்டை விமானம் சீன - இஸ்ரேல் கூட்டுத்தயாரிப்பு F-10 தற்போது இணைக்கப்பட்டுள்ளதுவே சீனத் தயாரிப்பு - F-7

2. பிரேமதாச அரசு காலத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் சுப்பர் சொனிக் விமானமும் F-7 ஆகும். F-5 அல்ல..!

அநுராதபுரம் வான்படை தளம் மீதான தாக்குதலின் போது இவ்வகை விமானங்கள் சேதமடைந்திருந்தன. இருப்பினும் இவ்வாண்டு ஆரம்பத்தில் இவ்வகை விமானங்கள் (F-7G) 6 ஐ சீனா சிறீலங்காவுக்கு வழங்கியுள்ளது..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

F--5, F- 7 மூலம் கிபீரை விட கூடுதலான அழிவை ஏற்படுத்த முடியுமா? அல்லது சீனா கொடுத்த விமானங்களை களத்தில் இறக்கி பரீட்சிக்கிறார்களா?

எல்லா நாடுகளும் தங்கள் ஆயுதங்களை பரீட்சிக்க இலங்கையை பாவிக்கின்றன....!

அண்மையில் யாழில் பிரசுரிக்கப்பட்ட ஒரு அவதானிப்பறிக்கையில் F-7 விமானங்கள் விரைவில் களமிறங்க இருப்பதாக ஒரு அவதானிப்பாளர் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த புகழ்பெற்ற அவதானிப்பாளர் இன்னமும் பிரேமதாச காலத்தில இருந்து கொண்டே யாழ்களத்தில் அவதானிப்பறிக்கைகள் எல்லாம் பரபரப்பாக விடுகிறார்? :)

J10 அறிமுகமாகியே 5 வருடங்களிற்கு மேலையாச்சு. இதுக்குள்ளை J7 கொண்டுவந்து தமிழரின்ரை தலையில பரிசோதிக்கிறாங்கள் எண்டு ஒப்பாரி வைச்சா யார் நம்பப் போகிறார்கள்? பிரச்சாராங்களை கொஞ்சம் நம்பக் கூடியமாதிரி செய்யுங்கோ. :huh:

சிறீலங்காவில எந்த நாடும் தமது பலமாகக் கருதும் புதிய ஆயுதங்களை பரிசோதிக்க துணியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில எந்த நாடும் தமது பலமாகக் கருதும் புதிய ஆயுதங்களை பரிசோதிக்க துணியாது.

ஏலவே இக்குற்றச்சாட்டு விடுதலைப்புலிகளாலும் முன் வைக்கப்பட்டுள்ளது. நவீன ஆயுதங்களின் பரீட்சைக்களமாக வன்னி திகழ்கிறது என்று..!

விமானங்கள் சரி வர அடையாளம் காணப்படாத வரை.. அவற்றின் வகைகளை உறுதியாகக் கூறிட முடியாது. இந்தியாவின் பிரதான சண்டை விமானமான மிக் 29 சிறீலங்காவின் விமானப்படையில் இணைய இருக்கிறது. மிராஜ் 2000 ஐ அடுத்து இந்தியாவின் பலம் மிக் 29 இல் தான் அதிகம் தங்கி இருக்கிறது.

டெயிலிமிரர் மற்றும் பாதுகாப்பமைச்சின் செய்திக் குறிப்பின் பிரகாரமே தாக்குதல் விமானம் எப் 7 என்று வகைப் படுத்தப்பட்டிருக்கிறது. களத்தில் இருந்து இந்த வகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வரவில்லை என்பது நினைவு கூறத்தக்கது.! :huh:

Edited by nedukkalapoovan

அப்ப இஞ்சையும் புளரியை கிளப்பிட்டாங்கள் போல?

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 27-03-2008 17:40 மணி தமிழீழம் [அருள்நிலா]

வன்னியில் இரு வான் தாக்குதல்கள்

இன்று காலை வன்னி வான்பரப்பினுள் நுளைந்த சிறிலங்கா யுத்த வானூர்திகள் இரு வேறு இடங்களில் தாக்குதல்களை மேற்கொண்டதாக குடிசார் தககவல்கள் தெரிவிக்கின்றன.

காலை 6.25 மணியளவில் திருவையாறு கல்மடு பிரதேசத்திலும் 6.35 மணியளவில் பூநகரிப் பிரதேசத்திலும் கிபீர் மற்றும் F-7 ரக வானூர்தீகள் தாக்குதலை மேற்கொண்டன.

pathivu

சா சா எங்களுக் ஆயுத சப்பிளை சிறீலங்கா தான்.

டோராவின் பீரங்கிகளை விட அதிக வீச்செல்லையை கொண்ட பீரங்கிகள் கடற்புலிகளின் படகுகளில் இருக்கு எண்ட சோம பானம் தயாரிப்புக்கும் மந்திரத்தாலை சிறீலங்காவிட்டை இருந்து தான் எடுத்தனாங்கள்.

சிறீலங்காவிற்கே பல ஆயுதங்களை அறிமுகப்படுத்தியது புலிகள் தான் (எண்டால் இப்ப என்னென்வெல்லாம் கொண்டு வந்து இறக்கியிருப்பார்கள்) என்ற சோமபானத்திற்கும் மந்திரத்தாலை சிறீலங்காவிட்டை இருந்து தான் எடுத்தனாங்கள்.

ஏன் வான்புலிகளின் விமானங்களும் சிங்களவனிட்டை இருந்து தான் எடுத்தனாங்கள்.

உண்மை தான் பிரேமதாச காலத்தில ஏற்றுமதிச் சந்தையில் இருந்த நவீன விமானங்களில் ஒண்டு மிக்29. ஜேஆர் காலத்தில அதுக்கு பரீட்சாத்தக் களங்கள் தேவையாக இருந்திருக்கும் தான் யார் இல்லை எண்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் பிரேமதாச காலத்தில ஏற்றுமதிச் சந்தையில் இருந்த நவீன விமானங்களில் ஒண்டு மிக்29. ஜேஆர் காலத்தில அதுக்கு பரீட்சாத்தக் களங்கள் தேவையாக இருந்திருக்கும் தான் யார் இல்லை எண்டது.

அண்ணாச்சி இப்ப எதுக்குப் புலம்புறியள்.. மிக் 29 என்ன 2007 இல் அறிமுகமாகி முதன்முதலில வன்னிலதான் அடிக்குது என்று யாழில உள்ளவங்க நினைக்கிறாங்க என்று நீங்க நினைக்கிறீங்க. அதுவுமில்லாம மிக் 29 எப்படி 1987 இல இருந்திச்சோ அதே போலத்தான் ஒரு அப்கிரேடிங்கும் இல்லாம இப்பவும் இருக்குது என்று நீங்க நினைக்கிறீங்க.. அப்படித்தான் சீனாவின் எப் 7 என்று நீங்க சொல்லுறீங்க. இது இரண்டும் வழமை போலவே உங்க தவறான நினைப்புகள் என்றது இங்க உள்ளவங்களுக்கு நல்லாவே தெரியும். :D

அப்படியே இந்தக் கவலைக்கும் விளக்கம் சொன்னியள் என்றா அழகா இருக்கும்...

சிறீலங்கா என்ன இந்தியாவின் மீது படையெடுக்கவே ஆயுதம் வாங்குது இல்லையே. அப்ப ஏனாம் இவைக்குக் கவலை என்றதை அண்ணாச்சி தனக்கு விளங்கின மட்டுக்கு சொன்னா நல்லா இருக்குமே..???!

மிக் 29 ம் எப் 7 லும் நாலு அமெரிக்க ரடாரும்.. சில பாகிஸ்தானிய மல்ரி பரல்களும்.. ரஷ்சிய ரி 55 தாங்கிகளும்.. சீன ஆட்லறிகளும்.. இஸ்ரேலிய டோராவும்.. சில இஸ்ரேலிய லேசர் கைட் ஏவுகணைகளும்.. சில ஆளில்லாத விமானங்களும்.. கிபீரும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாமா..??! உதில அரைவாசியும் ஜே ஆர், பிரேமதாச காலத்தில இருந்து இருக்குதுதானே..! அப்ப வாராத கவலை இப்ப ஏனாம்...??! :huh::)

---------------------------

சிறிலங்கா அரசு வேறு தரப்பிடமிருந்து ஆயுதங்கள் பெறுவது எமது பலத்திற்கு அச்சுறுத்தலாகலாம்: எம்.கே.நாராயணன்

[வியாழக்கிழமை, 27 மார்ச் 2008, 04:47 மு.ப ஈழம்] [காவலூர் கவிதன்]

சிறிலங்கா அரசாங்கம் வேறு தரப்பிடமிருந்து ஆயுதத் தளபாடங்கள் பெறுவது தெற்காசியாவில் எமது பலத்திற்கு அச்சுறுத்தலாகலாம் என்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்திய வான்படைத் தளபதி பி.சி.லாலின் 25 ஆம் ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றிய எம்.கே.நாராயணன், சிறிலங்காவின் ஆயுதக் கொள்வனவு குறித்து கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை இனப்பிரச்சினைக்கு எந்தவொரு அதிகாரப்பகிர்வு தொடர்பான தீர்வையும் முன்வைக்காது, தனியாக இராணுவத் தீர்வை மட்டுமே இலக்காக வைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரைத் தொடர்கிறது சிறிலங்கா அரசாங்கம்.

தெற்காசியாவில் இந்தியாவின் இராணுவ உச்சக்கட்டப் பலத்தை, சிறிலங்கா அரசாங்கத்தில் அபரிமிதமான ஆயுதக் கொள்வனவு எதுவிதத்திலும் தளம்பல் நிலைக்குத் தள்ளக்கூடாது என்பதில் இந்திய அரசாங்கம் உறுதியாக இருக்கும்.

தமிழர்களுக்கு கௌரவமான ஒரு தீர்வை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்.

இலங்கையின் தற்போதைய நிலைமையை நாம் அவதானிக்கும்போது, அமைதி முயற்சிகள் அனைத்தும் முறிவடைந்து போகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. இது மிகவும் மோசமான ஒரு நிலைமைக்கு எம்மை இட்டுச் செல்லும்.

எனவே, இலங்கையில் மிகப்பெரிய சிறுபான்மைத் தமிழினமான ஈழத் தமிழர்களை, சிறிலங்கா அரசாங்கம் கௌரவத்துடன் நடத்த வேண்டும் என்பதே எமது விருப்பம்.

கடந்த இரண்டு வருடத்தில் சிறிலங்கா அரசாங்கப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரில் பல்லாயிரககணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காண்பதனை இந்தியா எதிர்ப்பதுடன் சிறுபான்மை இனத்திற்கு அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தும்படியும் கொழும்பை இந்திய வலியுறுத்துகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தின் மீது எவ்வளவு அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம் என்பது தொடர்பாகவும், எவ்வளவு இராணுவ உதவிகளை வழங்கலாம் என்பது தொடர்பிலும், எமக்கு இடையே ஒரு தேசிய முடிவு எட்டப்பட வேண்டும்.

இராணுவப் பயிற்சிகளை இந்தியா தொடர்ந்தும் சிறிலங்காவுக்கு வழங்கி வருகின்ற போதிலும், வலிந்த தாக்குதல் தொடுக்கவல்ல இராணுவத் தளபாடங்கள் என்று கருதப்படுகின்றவற்றை சிறிலங்காவுக்கு வழங்க இந்தியா மறுத்தே வருகின்றது என்றார் அவர்.

http://www.puthinam.com/full.php?2b2Pqhe0d...d43dQX3b035Pq3e

Edited by nedukkalapoovan

ஓம் மிக்29, ஜே7 எல்லாம் அப்கிரேட் ஆகிக் கொண்டு தான் இருக்கு. எம்எஸ் டொஸ் இல இருந்து வின்டோஸ், 95, 98, 2000, எக்ஸ்பி எண்டு அப்கிரேட் பண்ணியிருக்கிறாங்களாம். இனி என்ன வயர்லெஸ் மவுஸ், கிபோட், வெப்கம், டிவிடி பேர்னரோடை விஸ்ராவிக்கு அப்கிரேட் பண்ணப் போயினமாம் எண்டு அடுத்த அவதான அறிக்கையில முற் கூட்டியே குறிப்பிடப் போறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு அதுகள் புலிகளின்ரை கைக்கு போயிடுமோ எண்டு நினைச்சுப் பயமா இருக்காம் எண்டு தான் (பொதுமகனாக நான்) விளக்கம் கொடுக்க வேணும். சிறீலங்கா வேண்டுறதுகளை புலிகளிட்டை எல்லே பறிகொடுக்கினம். பிறகு புலிகளின்ரை கையில போன் அதுகளை எப்பிடி எப்பிடி எல்லாம் அப்கிறேட் பண்ணிப் பாவிப்பார்கள் எண்டு வேல்ஸ் இருந்து வந்த பூவிறுசுகளை வைசிச்ச சின்னப் பிள்ளைக்கும் தெரியும்.

வைகோல் பட்டடை நாய் எண்டு கேள்வி பட்டு இருக்கன்... இப்பதான் பாக்கிறன்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாச்சி கொடுத்த லிங்கிலேயே விபரங்கள் கிடக்குது... அதுகள பார்க்காம.. XP.. vista என்று புலம்புறார்..!

"The newest version of the J-7, the J-7G, entered service with the PLAAF in 2003."

"Early 2008 the (SL) air force received six F-7Gs"

http://en.wikipedia.org/wiki/Chengdu_J-7

எப் 7 இன் புதிய வேர்சன் F - 7 ஜி என்பதும் அது சீன விமானப்படையில் 2003 இல் இணைக்கப்பட்டது என்ற தகவலும் உண்டு..! அதில 6 விமானங்கள் இவ்வாண்டின் ஆரம்பத்தில் சீனாவிடமிருந்து பெறப்பட்டுள்ளது. ஆக பிரேமதாச காலத்தான் தான் இப்ப ஓடுது என்றது... மெகா ஜோக்..! :):huh:

Edited by nedukkalapoovan

அட உந்த லிங்குகள் எல்லாம் இப்பவே வாசிச்சு முடிச்சனிங்கள்? அவதான அறிக்கைக்கு எந்த லிங்குகளை வாசிக்கிறனீங்கள்? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

சீனா உலக சமாதானத்துக்காக தன்னுடைய நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியையும் நடாத்திக்கொண்டு தமிழனை அழிக்க போர் விமானமும் கொடுக்கின்றது .

புலிகள் வன்னீக்கை கடலுக்காலை பிளேன் கொண்டு வந்த கதை எந்த லிங்குக்காலை எடுத்தனீங்கள் எண்டு ஒருக்கா சொன்னா பூண்ணியமாப்போகும்......!

  • கருத்துக்கள உறவுகள்

அட உந்த லிங்குகள் எல்லாம் இப்பவே வாசிச்சு முடிச்சனிங்கள்? அவதான அறிக்கைக்கு எந்த லிங்குகளை வாசிக்கிறனீங்கள்? :D

அது தானே. மோட்டு சிங்களவர்கள் கோமணத்தோடை பூறிஸ் விடுகிறமாதிரி கருத்துகளை தெரிவித்து கொண்டு. :huh::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கும் சமீபத்தில ஒரு சிறிய ஆசியா நாடு ஒன்று... பரீட்சிக்க எண்டு ஆயுதங்கள் கொடுத்து உதவினவ எண்டு கேள்விபட்டன்..

இந்த விதத்தில் பரீட்சிப்பது நல்ல விடயம் தானே?..

அட உந்த லிங்குகள் எல்லாம் இப்பவே வாசிச்சு முடிச்சனிங்கள்? அவதான அறிக்கைக்கு எந்த லிங்குகளை வாசிக்கிறனீங்கள்? :mellow:

நிறைய சிரிக்காமல், புலிகளின் குரல் இந்த விமானம் பற்றி 27/03/2008 அண்றின் செய்தி வீச்சில் சொல்கிறார்கள் கேட்டு பாருங்கள்...

http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...008/Nveech.smil

http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...2008/Nveech.mp3

மற்றவனை நீங்கள் கிண்டுவது போல இல்லாமல், உங்களின் அறியாமையை நினைக்க வருத்தமாக இருக்கு... :mellow::mellow::mellow:

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: சர்வதேசம் தனது புதிய ராணுவ தளபாடங்களை இலங்கையில் பரீசித்துப் பார்க்கிறது என்பது எவ்வளவு தூரத்திற்குச் சரியென்று தெரியவில்லை. சீனாவினால் கொடுக்கப்பட்ட விமானங்கள் அது தற்போது தயாரித்ததாக இருக்குமென்பது சந்தேகம்தான். ஏனென்றால் அது சில காலம் வரை ரகசியமாக வைக்கப்படும் மற்றயது அதன் இன்றைய கொள்வனவு விலை இலங்கயால் கொடுக்கப்பட முடியாதது.

மிக் 29 என்பது ரஷ்ஷியாவினால் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட விமானம் இல்லை. அது பல காலமாக ரஷ்ஷியாவினாலும் அதன் நேச நாடுகளாலும், பெரும்பாலான அரபு நாடுகளாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிக் 29 இன் நவீன வடிவம் அண்மையில் இந்தியா பெங்களூரில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் இடம்பெற்றதாக செய்தி. அதை வாங்குவதென்பது இலங்கையினால் நினைத்துப் பார்க்க முடியாத விடயம்.

இலங்கைக்கு கிடைக்கும் ஆயுதங்களின் நவீனத்துவம் என்பது இலங்கையுடனான அந்த நாடுகளின் நட்பின் ஆழத்திலும், இலங்கை கொடுக்க விரும்பும் விலையிலும் தங்கியிருக்கிறது.

இலங்கை ராணுவத்தால் இன்று பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் பரீட்சிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்.

நவீன ஆயுதங்கள் பரீட்சிக்கப்படும் களங்கள் அந்தந்த நாடுகளினால் நடத்தப்படும் போர்களிலேயே பெரிதும் பரீட்சிக்கப்படும். உதாரணத்திற்கு இன்று ஈராக்கில் தீவிரவாதிகளுக்கெதிராக அமெரிக்க ராணுவம் பாவிக்கும் தொழிநுட்பம், முதலாம் வளைகுடாப் போரில் அமெரிக்கா பரீட்சித்த ஏவுகணை பரீட்சை, இன்று ஆப்கானிச்த்தானில் தலிபான்களுக்கெதிராக அமெரிக்க ராணுவம் பாவிக்கு நவீன ரக பீரங்கி என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இவ்வாறே ரஷ்ஷியா ஆப்கானிஷ்தானிலும், பின்னர் செச்சென்னியாவிலும் பாவித்தது, இன்று இச்ராயேல் பாலச்தீனத்தில் பாவிக்கிறது.

ஆகவே இந்நாடுகள் இலங்கையில் கொண்டுவந்து தமது ஆயுதங்களைப் பரீட்சிக்க வேண்டிய அவசியம் இருக்குமா என்பது சந்தேகமே!

குண்டு போடக்கூடிய எந்த விமானமும் கூடாததுதான்... MI29 என்ன F7 என்ன எல்லாம் ஒண்டுதான்...

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 28-03-2008 23:03 மணி தமிழீழம் [மயூரன்]

ஸ்ரீலங்கா விமானப்படையின் தாக்குதல்களில் சீன தயாரிப்பான எப் - 7 ரக விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வன்னியில் விமானப்பப்படையினர் மேற்கொள்ளும் வான் தாக்குதலில் சீனாவில் எவ்.7 ரக விமானங்களும் இணைந்துள்ளன. வன்னியில் நேற்று வியாழக்கிழமை காலை இரு இடங்களில் இந்த விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தாக்குதல்களில் இஸ்ரேலிய கிபிர் விமானங்களுடன் சீனத் தயாரிப்பு எவ். 7 ரக விமானங்களும் ஈடுப்ட்டிருந்தன.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.