Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ நடவடிக்கையில் ஆலயங்களை சேதமாக்குவது தவிர்க்க முடியாதது: சொல்வது தேரர்

Featured Replies

இப்படிக் கூறுகிறார் எல்லாவல மேத்தானந்த தேரர்

1111ov7.png

ஆதாரம் வீரகேசரி

மடு தேவாலயம், திருக்கோணேஸ்வர் மற்றும் திருக்கேதிஸ்வர ஆலயங்கள் பௌத்தர்களின் புண்ணிய புனித பிரதேசங்களென தொல் பொருள் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹெல உறுமைய எம்.பி எல்லாவல மேதானந்த தேரோ, இராணுவ நடவடிக்கையின் போது ஆலயங்களும் தேவாலயங்களும் சேதமாக்கபடுவது தவிர்க்கப்பட முடியாதெனவும் இதனை பொருட்படுத்த தேவையில்லையெனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

'ஜெயராஜின் படுகொலை பாரளுமன்றை சோபையிழக்கச் செய்துள்ளது. எனினும் பிரபாகரனின் குண்டுகளினால் இப்பாரளுமன்றை மௌனமாக்கிவிட முடியாது. அதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

ஜெயராஜ் வெலிவேரியாவில் வைத்து படுகொலை செய்யபட்டுள்ளார். இப்பிரதேசத்தில் வசித்தவரே இராணுவத் தளபதி மீதும் தாக்குதல் மேற்கொண்டார். எனவே, அரசு வெலிலேவரிய பிரதேசம் மீது கூடிய அவதானம் செலுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் இன்று வரலாற்றை திரிபுபடுத்துகின்றனர். திருமலை கோணேஸ்வரர் ஆலயம், மாந்தை திருக்கேதிஸ்வர ஆலயம் ஆகியன பௌத்த விகாரைகளை இடித்தே கட்டப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தன் போன்ற எம்.பிக்கள் வரலாற்றைத் திரிபுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது. இதனை நாம் கண்டிக்கின்றோம்.

இன்று சிலர் மதங்களுக்கிடையே யுத்தத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். இதில் எவரும் சிக்கிவிடக்கூடாது.

மடு தேவாலயத்தை புலிகள் அழித்துவிட்டு பழியை இராணுவத்தினர் மீது போட நடவடிக்கை மேற்கொண்டனர். இது பலனளிக்காத நிலையிலேயே, அங்குள்ள சொரூபத்தை புலிகளின் பிரதேசத்திற்கு கொண்டு சென்றதன் மூலம் மன்னார் ஆயர் தவறிழைத்துள்ளார். இது கண்டிக்கப்பட வேண்டியது.

மடு தேவாலயம் கூட பௌத்தர்களுக்கு சொந்தமானதேயாகும். தேவாலயத்தில் புனித பௌத்த சின்னங்கள் காணப்பட்டதை தொல்பொருள் ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

தேசத்தை பாதுகாத்து, பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் இராணுவ நடவடிக்கையின் போது இந்து கோயில்களோ கிறிஸ்துவ ஆலயமோ சேதமாகுவது தவிர்க்க முடியாது. இதனை பொருட்படுத்தத் தேவையில்லை."

நன்றி சுடர் ஒளி

இராணுவ நடவடிக்கையின் போது ஆலயங்களும், தேவாலயங்களும் சேதமாக்கப்படுவது தவிர்க்கப்பட முடியாது என்றும், இதனைப் பொருட்படுத்த தேவையில்லை என்றும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவ நடவடிக்கையின் போது ஆலயங்களும், தேவாலயங்களும் சேதமாக்கப்படுவது தவிர்க்கப்பட முடியாது என்றும், இதனைப் பொருட்படுத்த தேவையில்லை என்றும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டப் பிரேரணை விவாதத்தின் போது உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் கொலை நாடாளுமன்றத்தினை சோபையிழக்கச் செய்துள்ளது. எனினும் பிரபாகரனின் குண்டுகளினால் இந்த நாடாளுமன்றத்தினை மெளனமாக்கிவிட முடியாது. அதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

ஜெயராஜ் வெலிவெரியவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பிரதேசத்தில் வசித்தவரே இராணுவத் தளபதி மீதும் தாக்குதல் மேற்கொண்டார். எனவே, அரசாங்கம் வெலிவெரிய பிரதேசம் மீது கூடிய அவதானம் செலுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் இன்று வரலாற்றை திரிபுபடுத்துகின்றனர். திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம், மாந்தை திருக்கேதீஸ்வர ஆலயம் ஆகியன பெளத்த விகாரைகளை இடித்தே கட்டப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் சான்று பகிர்கின்றன.

இவ்வாறே கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் பூர்வீகப் பிரதேசங்கள் ஏனைய சமூகங்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்றை திரிபுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது. இதனை நாம் கண்டிக்கின்றோம்.

இன்று சிலர் மதங்களிடையே போரை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதில் எவரும் சிக்கிவிடக்கூடாது.

மடு தேவாலயத்தினை விடுதலைப் புலிகள் அழிவித்துவிட்டு பழியை இராணுவத்தினர் மீது போட நடவடிக்கை மேற்கொண்டனர். இது பலனளிக்காத நிலையிலேயே, அங்குள்ள சொரூபத்தினை விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கு கொண்டு சென்றதன் மூலம் மன்னார் ஆயர் தவறிழைத்துள்ளார். இது கண்டிக்கப்பட வேண்டியது.

மடு தேவாலயம் கூட பெளத்தர்களுக்கு சொந்தமானதே ஆகும். தேவாலயத்தில் புனித பெளத்த சின்னங்கள் காணப்பட்டதனை தொல்பொருள் ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

தேசத்தைப் பாதுகாத்து, பயங்கரவாதத்தினை தோற்கடிக்கும் இராணுவ நடவடிக்கையின் போது இந்துக் கோயில்களோ, கிறிஸ்தவ தேவாலயங்களோ சேதமாகுவது தவிர்க்கப்பட முடியாதது. இதனை பொருட்படுத்தத் தேவையில்லை என்றார் எல்லாவெல மேதானந்த தேரர்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 78 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரரேணை வாக்கெடுப்பிற்கு விடப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதனை அடுத்து வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி. ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்தோர் வாக்களித்தனர்.

எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது.

வாக்களிப்பு நடைபெற்ற போது

ஐக்கிய தேசியக் கட்சி,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,

முஸ்லிம் காங்கிரஸ்,

மலையக மக்கள் முன்னணி,

மேலக மக்கள் முன்னணி,

ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாக இருக்கவில்லை.

பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் கிடைத்தன.

ஆதாரம்: தினக்குரல்

www.puthinam.com

Edited by puspaviji

இணையத்தில் படித்திருந்தேன் கோகண்ணவிகாரை இருந்த இடத்தில்தான் கோணேஸ்வரர்கோயில் கட்டப்பட்டதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது கோணேஸ்வரர் கோயிலின் இருப்பு அதன் வரலாறு சிங்களவரே இலங்கையின் பூர்வீக குடிமக்கள் என சொல்லுவதற்கும் சிங்கள லங்காவுக்கும் பிரச்சினையாக இருப்பதால் திட்டமிட்ட வகையில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது கடலுகுள் மாண்டிருப்பதாக கூறப்படும் கோணேஸ்வரர் ஆலயம் பற்றி பூரண ஆய்வுகள் நடத்தபடாமல் இருப்பதற்கு இதுவே காரணம்

போரில் வணக்கத்தலங்கள் தாக்கப்படுவது தவிர்கமுடியாது என சொல்லும் தேரர் தலதா மாளிகைக்கு யாரோ தாக்கியபோது போரில் தவிர்க முடியாதது என நினைத்து பொத்திகொண்டு இருந்தவரா

இதைதானே எங்கட குறுக்கரும் சொல்லுறவர்...!!!

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் படித்திருந்தேன் கோகண்ணவிகாரை இருந்த இடத்தில்தான் கோணேஸ்வரர்கோயில் கட்டப்பட்டதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது கோணேஸ்வரர் கோயிலின் இருப்பு அதன் வரலாறு சிங்களவரே இலங்கையின் பூர்வீக குடிமக்கள் என சொல்லுவதற்கும் சிங்கள லங்காவுக்கும் பிரச்சினையாக இருப்பதால் திட்டமிட்ட வகையில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது கடலுகுள் மாண்டிருப்பதாக கூறப்படும் கோணேஸ்வரர் ஆலயம் பற்றி பூரண ஆய்வுகள் நடத்தபடாமல் இருப்பதற்கு இதுவே காரணம்

போரில் வணக்கத்தலங்கள் தாக்கப்படுவது தவிர்கமுடியாது என சொல்லும் தேரர் தலதா மாளிகைக்கு யாரோ தாக்கியபோது போரில் தவிர்க முடியாதது என நினைத்து பொத்திகொண்டு இருந்தவரா

நாங்கள் தானே மதங்களுக்கு அப்பால் பட்டனாங்கள். புத்தமதமே பழைமை மிக்க மதம்.. ஏன் அதுவே தமிழர்களின் ஆதியான மதம் என்றும் இங்கு சிலர் அலறி அடிக்கின்றனரே.

இப்போ மத அடிப்படையில் சிங்களவன் தமிழர்களின் இருப்பை இனங்கண்டு.. அதை அழிக்க நினைப்பதையிட்டு.. பதறுபவர்களும்.. இந்து (சைவ) த்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் அணியில் நிற்பவர்கள் தானே..!

நான் முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன்.. தமிழர்களின் பாரம்பரிய அடையாள இனங்காணலில் இந்து மதத்துக்கு குறிப்பாக சைவத்துக்கு முக்கிய பங்கிருக்கிறது என்று. அப்போ அதை ஏற்க மறுத்து விதண்டாவாதம் செய்தவர்கள்.. இன்று தேரர் கூற்றை ஆதரிக்க எல்லோ வேணும். ஏன் அதற்காக கவலைப்படுகிறார்கள். தேரர் செய்வதைத்தானே யாழ் களமும் இந்து மதத்துக்கு எதிரான பிரச்சாரம் மூலம் செய்கிறது.

ஒன்றை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.. நாங்க மதத்தை அங்கீகரிக்கிறமோ இல்லையோ அல்ல இங்கு பிரச்சனை. தமிழர்களின் வரலாறு என்பது இந்து மதத்துடன் மற்றும் தமிழர்கள் பின்பற்றும் பிற மதங்களுடன் பின்னிப்பிணைந்து இருக்கிறது. இந்த அடிப்படையை ஏற்காதவர்கள்.. தேரரின் வழியில் அவருக்கும் அவரின் கருத்துக்கும் சலூட் செய்து.. அவரைப் பிந்தொடர்வதுதான் நியாயமானது..! :blink::blink:

பாரதியாரே சிங்களத் தீவிற் ஓர் பாலம் அமைப்போம் எண்டு தானே பாடினவர். டமில் தீவுக்கு எண்டு பாடவில்லையே?

கள்ளத் தோணி தமிழர்கள் விகாரைகளை உடைச்சு இந்துக் கோயில் கட்டினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

ஐரோப்பா கனடா வில இருக்கிற கோவில்களை பார்க்கும் போதே தெரியுது தானே டோல் எண்டு அந்தந்த சமூகங்களை சுறண்டி டமிலர்கள் என்ன செய்யினம் எண்டு.

தேரர் என்ன சொல்ல வருகிறார் என்றால், கோயிலும் தேவாலயங்களும் மட்டுமல்ல, விகாரைகளும் தாதுகோபங்களும் கூட சேதமாகலாம் அதையும் பொருட்படுத்தத் தேவையில்லை என்கிறார்.

பாரதியாரே சிங்களத் தீவிற் ஓர் பாலம் அமைப்போம் எண்டு தானே பாடினவர். டமில் தீவுக்கு எண்டு பாடவில்லையே?

கள்ளத் தோணி தமிழர்கள் விகாரைகளை உடைச்சு இந்துக் கோயில் கட்டினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

ஐரோப்பா கனடா வில இருக்கிற கோவில்களை பார்க்கும் போதே தெரியுது தானே டோல் எண்டு அந்தந்த சமூகங்களை சுறண்டி டமிலர்கள் என்ன செய்யினம் எண்டு.

எனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தமைக்கு நண்றி.... :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாலன் நகர் மீட்கப்படுபோது அனுராபுர விகாரை தரை மட்டமட்டமாகும்போது தேரர் இதைகூறிக்கொண்டிருப்பார் என எதிபார்ப்போம். :blink::blink:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். சிங்களத் தீவுக்குப் பாலம் அமையுங்கள் என்று பாரதி பாடியது கிமு 5000ம் ஆண்டுகளுக்கு முன்பு. இந்த குறுக்கால போனதுகளின் கதைகளைப் பார்த்தால் பாரதி பாடும்போது கூட இலங்கையில் தமிழ் மக்கள் இல்லை வாதிடுவார் போல...

சிங்களவன் தமிழனைக் கொல்லுறான். அவனுக்கு ஐஸ் வைக்கலாம் என்று ஒருவர் தமிழ் நாட்டில் 13000 புத்தசிலைகளை வைக்கப் போகின்றாராம். வாழ்க தமிழ் மக்களின் வீரலட்சணம்.

கோயிகளை உடைக்கிறதில எனக்கொண்டும் ஆட்சேபனை இல்லை... ஆனா கட்டுறதில தான் ஆட்சேபனை...

தமிழர்களை சிங்களத் தீவுக்கு கூலிகளாக கொண்டுவந்ததே ஐரோப்பியர்கள் தானே. கூலிகளுக்கு இப்ப சம உரிமை வேணும் எண்டு பயங்கரவாதம் பண்ணுதுகள்.

இல்லாட்டி பாரதி சிங்களத் தீவு எண்டு அதுவும் தமிழில் ஏன் படாவேணும்?

தீவில் தமிழர் இருந்தும் தமிழரை பிடிக்கவில்லை என்றா?

அல்லது சிங்களவர்கள் தான் தீவின் பூர்வீகர்கள் பெரும்பான்மையானவர்கள் என்பதாலா?

அல்லது பாரதி போன்ற கவிஞனுக்கு வேறு சொல்லாடல் கவினயமாக கிடைக்கவில்லை என்பதாலா?

பாரதி சும்மா அப்பிடி இப்பிடி பாடி திரிஞ்சது ஏதோ உண்மைதான்... இருந்தாலும் அவர் உங்களையும் என்னையும் மாதிரி அவ்வளவா படிக்க இல்லை... அதனாலதான் அறியாமையில சிங்கள தீவெண்டு சொல்லீட்டானாக்கும்....

இப்ப சுப்பிரமணியசாமி மதிரி எண்டு சொல்லுங்கோவன்... சுப்பிரமணியசாமி இந்த காலத்திலேயே.. உப்பிடி கதைக்கிறார் எண்டா.. பாரதியார் அப்ப எப்பிடி கைத்திருப்பார்?

  • கருத்துக்கள உறவுகள்

பாரதி சும்மா அப்பிடி இப்பிடி பாடி திரிஞ்சது ஏதோ உண்மைதான்... இருந்தாலும் அவர் உங்களையும் என்னையும் மாதிரி அவ்வளவா படிக்க இல்லை... அதனாலதான் அறியாமையில சிங்கள தீவெண்டு சொல்லீட்டானாக்கும்....

இப்ப சுப்பிரமணியசாமி மதிரி எண்டு சொல்லுங்கோவன்... சுப்பிரமணியசாமி இந்த காலத்திலேயே.. உப்பிடி கதைக்கிறார் எண்டா.. பாரதியார் அப்ப எப்பிடி கைத்திருப்பார்?

சாட்டையடீ உந்த குறுக்கு;கு......

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயங்களை அழிப்பதை நியாயப்படுத்தும் துறவி

இராணுவ நடவடிக்கைகளின் போது ஆலயங்களை சேதமாக்குவது தவிர்க்க முடியாத விடயமெனவும் இதனைப் பொருட்படுத்தத் தேவையில்லையெனவும் ஜாதிக ஹெல உறுமய எம்.பி.யான எல்லாவல மேதானந்த தேரர் நேற்று முன்தினம் புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்பதுடன் இலங்கையிலுள்ள பாடல் பெற்ற திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் என்பன பௌத்தர்களுக்கு சொந்தமான இடங்களெனவும் பௌத்த விகாரைகளை அழித்தே இந்த ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் இந்நாட்டிலுள்ள தமிழர்கள் வரலாற்றை திரிவுபடுத்த முற்படுவதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். லௌகிக வாழ்வை வெறுத்து `நிலையாமை' குறித்த பட்டறிவுடன் பற்றுகளை நீக்கி துறவறம் பூண்டுள்ள எல்லாவல மேதானந்த தேரர் அரசியல் கட்சியொன்றில் இணைந்து பாராளுமன்ற உறுப்பினராகி மக்களுக்கு சேவையாற்றுகின்றமை தொடர்பாக எந்தவொரு அபிப்பிராய பேதமும் இல்லை.

ஆனால், போரை வெறுத்து சமாதானக்கோட்பாடுகளை போதிக்கும் பௌத்த மதத்தைச் சேர்ந்த துறவியொருவர் இராணுவ நடவடிக்கைகளை வரவேற்பதுடன் மட்டும் நின்றுவிடாது பிறமதங்களைச் சேர்ந்த ஆலயங்களை இடித்தழிப்பது தவிர்க்கப்படமுடியாததொன்று என்று கூறுவதும் வரலாற்றுக்காலம் தொட்டு இருந்துவரும் ஆலயங்கள், தேவாலயங்களை தான் சார்ந்த மதத்தினரின் உடைமைகளென உரிமை கொண்டாடுவதும் யாவற்றிலும் மேலாக வரலாற்றை திரிவுபடுத்தி மக்கள் மனங்களை தவறான சிந்தனைக்கு இட்டுச்செல்வதும் தார்மீக சிந்தனையுடைய மதக் கோட்பாட்டை வரித்துக் கொண்ட ஒரு துறவிக்கு உரிய இலட்சணமா என்பதே எம்முன்னால் எழுந்திருக்கும் கேள்வியாகும்.

ஆப்கானிஸ்தானிலிருந்து சென்னை வரையிலான (இவை தற்போதைய இடங்களின் பெயர்கள்) கி.மு. 264 இல் அதாவது இற்றைக்கு 2272 ஆண்டுகளுக்கு முன் அரசாண்ட மௌரியப் பேரரசன் அசோகன் கி.பி. 255 இல் கலிங்கம் மீது படையெடுத்து வெற்றிகொண்டதும் யுத்தத்தின் குரூரத்தன்மையைக் கண்டு அதனை வெறுத்து ஒதுக்கியதும் பௌத்தத்தின் சாத்வீகக் கோட்பாடுகளை வரித்துக் கொண்டதும் அதன் பின்னரான தனது ஆட்சிக்காலத்தில் இந்தியா முழுவதும் கிணறுகளை தோண்டுவித்தும் நிழல்தரும் மரங்களை நாட்டியும் மருத்துவமனைகள், ஆதுலர்சாலைகளை நிர்மாணித்தும் மூலிகைத்தோட்டங்களை அமைத்தும் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்தும் பாரதத்திலுள்ள பழங்குடிகள், ஏனைய இனக்குழுக்களின் நலன்களை பேணிப்பராமரிக்க தனியான அமைச்சை உருவாக்கியதும் ஊழல், மோசடிகள், மேலாதிக்கவாதம் என்பனவற்றை இல்லாதொழிப்பதற்கான நற்போதனைகளை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் சென்றமையும் வரலாற்று ரீதியாக ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உன்னதமான விடயங்களாகும்.

இவற்றுடன் மட்டும் மாமன்னன் அசோகன் நின்றுவிடாது பௌத்த மதக் கொள்கைகளை அண்டைய நாடுகளுக்கும் தூதுக்குழுக்கள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்திருந்தான். காஷ்மீர், பாரசீகம் (ஈரான்), இலங்கை, அலெக்சாண்டிரியா போன்ற நாடுகளுக்கு பௌத்த துறவிகளடங்கி தூதுக்குழுக்கள் சென்றன.

இலங்கைக்கு தனது மகனான மகிந்த தேரரையும் மகளான சங்கமித்தையையும் அசோகன் அனுப்பி வைத்ததாகவும் அச்சமயம் ஆட்சியிலிருந்த தேவநம்பியதீசன் பௌத்த மதத்தை தழுவியதும் அதன்பின் இலங்கையில் பௌத்தம் பெரும்பான்மையினரின் மதமாக வளர்ச்சிகண்டதும் வரலாற்றுத் தகவல்கள். இது தொடர்பாக நாம் மாற்றுக் கருத்தை தெரிவிக்கவில்லை.

ஆனால் பௌத்தமதம் இலங்கையில் வேரூன்றி வளர்ச்சி கண்டது போல இந்து மதமும் ஏனைய மதங்களும் காலத்துக்காலம் மக்களால் தமது சமயங்களாக வகுத்துக் கொள்ளப்பட்டு இலங்கைத் தீவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற போதும் அவற்றை இரண்டாம் பட்சமானவை என்ற தொனியிலும் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டவை என்ற கண்ணோட்டத்திலும் கருத்துகளை பரப்பி வருவதே வெறுக்கத்தக்க விடயமாகும்.

தமிழகத்தில் பல்லவர் ஆட்சிக் காலத்தில் பல்கிப் பெருகிய பக்தி இலக்கியங்களில் (கி.பி 6-9 ஆம் நூற்றாண்டு) திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வர ஆலயங்கள் மீது பதிகங்கள் பாடப்பெற்றிருந்தமை வரலாற்று ரீதியான ஆதாரங்களாகும்.

`மாதுமையாளோடு கோணேஸ்வரத்தானை' சம்பந்தரும் மாதோட்ட நன்னகரில் பாலாவியின் கரை மீது குடிகொண்டிருக்கும் கேதீஸ்வரத்தானை சுந்தரரும் பாடித்துதித்திருந்தமை சுமார் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னர் என்பதை மேதானந்த தேரர் அறிந்திருக்கவில்லைப் போலும்.

யாவற்றுக்கும் மேலாக மடுமாதா தேவாலயமும் பௌத்தர்களின் விகாரையிருந்த இடமென தேரர் உரிமை கொண்டாடியிருக்கிறார். சுமார் 400 வருடங்களுக்கு மேலாக மடுமாதா ஆலயம் தமிழ், சிங்கள சமூகங்களைச் சார்ந்த கிறிஸ்தவ மக்களின் புனிதத்தலமாக இருந்து வரும் நிலையில் அது பௌத்தர்களின் இடமென உரிமை கொண்டாடத் தலைப்படும் இத்தேரரின் `பரந்த மனப்பான்மையின் தாற்பரியம்' தான் என்னவென்பது.

மதங்கள் வேறுபட்டவையாக இருந்தாலும் அவற்றின் உட்பொருளும் குறிக்கோளும் ஒன்று என்பர் ஞானிகள். ஆகவே, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தத்தமது மத, சுதந்திரத்தை அனுபவிக்க உரிமை உடையவர்கள் என்பது மனிதாபிமானக் கோட்பாடு என்பது மாத்திரமல்லாமல் இலங்கையின் அரசியலமைப்பிலும் உறுதி செய்யப்பட்டிருக்கும் ஒன்று என்பதையும் எது முந்தி வந்தது. எது பின்தோன்றியது என்று நதிமூலம் , ரிஷிமூலம் பார்த்துக் கொண்டிருக்காமல் மக்கள் மத்தியில் மத சகிப்புத்தன்மை, பரிவிரக்கம் , அன்பு என்பவற்றை போதிப்பதே மதத்துறவியொருவருக்குரிய கடமை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மாறாக ஆலயங்களை அழிப்பது தவிர்கப்பட முடியாதது என்ற ரீதியில் போர்முன்னெடுப்புகளுக்கும் பேரினவாதக் கொள்கைகளுக்கும் உற்சாகம் அளிக்கும் விதத்திலான அறிக்கைகளும் கருத்துகளும் மனித குலத்திற்கு பேரழிவையே ஏற்படுத்தும் என்பதை எல்லாவல மேதானந்த தேரர் போன்ற துறவிகள் அறிந்து கொள்ளாமலிருக்க வாய்ப்பில்லை என்பதே எமது உறுதியான நம்பிக்கை.

thinakural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.