Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸ் பரிசோதனையும் அடையாள அட்டையும்

Featured Replies

பொலிஸ் பரிசோதனையும் அடையாள அட்டையும்

சற்று கிராமச்சூழலை அண்டிய பகுதியில் வாழும் மீனா ரொம்ப அழகானவள். பெற்றோருக்கு ஒரேயொரு செல்லமகளான மீனா பருவமடைந்தாலும் இன்னும்

செல்லப்பிள்ளையாகவே வீட்டில் வலம் வந்தாள். படிப்பில் கெட்டிக்காரியான அவளுக்கு தனி அறை ஒதுக்கப்பட்ட போதிலும் படுக்கையை பெற்றோரோடு பங்கிட்டாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரம் உறங்கும் பழக்கம் கொண்ட மீனா கட்டிலில் பூனைகுட்டி போல மென்மையாக ஆனால் கடுமையான உறக்கத்தில்

இருந்தவளை தாய் உலுப்பி எழுப்பியதால் திடுக்கிட்டு எழும்பி சிணுங்கியபடி எழுந்து "என்னம்மா இப்படி அவசரபடுத்தி எழுப்புறீங்க" என்ற முனங்கலோடு

கண்ணைக் கசக்கியவண்ணம் குளியலறையை நோக்கிச் சென்றவள் வீட்டினுள் துப்பாக்கியோடு இருந்த இராணுவத்தையும் பொலிசாரையும் கண்டு திகிலடைந்தாள்.

அவளின் அழகான நித்திரை முகத்தைக் கண்ட இராணுவத்துக்கும் பொலிசாருக்கும் சிரிப்பு வந்த போதிலும் தமது கடமையில் சற்றேனும் நிதானம்

குறையாதவர்களாக "ஏய் மெஹே எனவா" (ஏய் இங்கை வா) என அதட்டலோடு கூப்பிட்டதையும் பொருட்படுத்தாதவளாக குளியறைக்கு சென்று முகத்தில் குளிர் தண்ணியால்

கழுவி அன்றலர்ந்த செந்தாமரை போல வந்தவள் தந்தையையும் தாயையும் பார்த்துவிட்டு அவர்களின் பின்னால் தயங்கியவாறே நின்றாள்.

ஒவ்வொரு அறைகளையும் பரிசோதித்துவிட்டு வந்த ராணுவத்தினர் "ஹேய் நங்கி ஒயாஹே ஐடெண்டி கார்ட் பலாண்டோனே பென்னனவா"

(தங்கச்சி உன் அடையாள அட்டையை காட்டு பார்ப்பம); என்ற கடுங்குரலைக்

கேட்ட மீனா மிகவும் பயத்தோடு தனது அறையை நோக்கி விரைந்து அலுமாரியின் கதவை இழுத்து அடையாள அட்டை வைக்கும் இடைத்தை

பார்த்த போது அங்கு அதைக் காணவில்லை என்றதும் ஒரு கணம் செத்து மீண்டாள். கண்ணில் கண்ணீரோடு வெளியே வந்தவள் பெற்றோருக்கு

அடையாள அட்டையைக் காணவில்லை என்ற தகவலைச் சொன்னதும் அவர்கள் பயந்தனர். ஆளை அடையாளபப்டுத்தும் முக்கிய ஆவணமான

அடையாள அட்டை இல்லையேல் மீனாவை கைது செய்துடுவார்களே என்று துடித்தனர்.

மீனாவின் தாய் பரிசோதனை நடப்பதையும் மறந்து தன் மகளை கண்டபடி திட்டினாள் எப்பவும் உனக்கு செல்லம் தான். ஒரு இடத்தில் வைக்க

தெரியாதோ என்ன நினைப்பில் இருந்தனி உந்த அடையாள அட்டை உன் உயிரைப்போல என்று எவ்வளவு நாள் சொன்னேன். வடிவாக தேடிப்பார்

என்று சத்தமிட்டவளை மீனாவின் பார்வை பொலிசாரை நோக்கி போவதை கண்டு நிறுத்தினாள்.

அங்கு பரிசோதனைக்காக வந்திருந்த படையிடமும் பொலீசாரிடமும் அமைதியாக ஆனால் பயமின்றி கேட்டாள் தன்னுடைய அறையைச்

சுட்டிக்காட்டி "சேர் மே காபரே பரிக்ச கரத?" (சேர் இந்த அறை செக் பண்ணிட்டியளா?) "ஓவ் பரிக்சா கரா எய் அகன்னே?"

(ஆம் செக் செய்தாச்சு. எதற்காக கேட்கிறாய்?)

என்று அங்கிருந்த இராணுவ சீருடையில் இருந்தவன் அதட்டியதையும் கேளாதவளாக

மீண்டும் கேட்டாள் கவுத பரிக்சா கரே? எய் ஹதுனும் பட்ட நத்தே (யார் செக் செய்தது ஏனெனில் என் அடையாள அட்டையை காணவில்லை) என்றாள்.

அங்கிருந்த ஒரு நடுத்தர வயதை உடைய பொலிசிடம் எயாவ பரிக்சா கர கெனாவ மம பலன்ட ஓனே.

மகே ஹதுனும் பட்ட எயாலா தமய் அரகத்தே அவ்வறையை சோதித்தவரை நான் சோதிக்கணும். என் அடையாள அட்டையை அவர்கள் தான் எடுத்துவிட்டனர் என கூறி முடித்தாள். அவ் இராணுவத்தைப் பார்த்த பொலிஸ் தனக்கே உரிய பாசையில் "எஹெ ஹிடிய எயா ஹதுனும் பத்த கத்தாத?" (அங்கிருந்து இவளின் அடையாள அட்டையை எடுத்தாயா?)

என்று கேட்கையில் அவன் "நஹ மம கத்தேனஹ"

(இல்லை நான் எடுக்கவில்லை) என்ற போதிலும் மீனா அவனை பரிசோதிக்கவே முடிவு செய்து பொலிசிடம் மீண்டும் முறைப்பாடு விட்டாள்.

அவளின் விருப்பத்திற்கிணங்கவே பொலிஸ் அனுமதித்த போதிலும் " இன்ன மமம எயாவ பரிக்சா கரன்னம்" (இரு நானே அவனை சோதிக்கிறேன்;) என சொல்லி

அவனின் கையில் இருந்த பைல் க்குள் மீனாவின் அடையாள அட்டை இருந்ததைக் கண்ட பொலிஸ் அவளிடமும்

அவளின் பெற்றோரிடமும் "கருனாகரலா அபிட சமாவென்ன" (தயவுசெய்து எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள்) என கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

நிலா அக்கே கொடக் காலக்க பக்சே ஓயாகே அத்த கத்தா கறிம சோக் :wub: ..(கத்தாவேங் என நங்கி ஓயாத :wub: )...கியல வடக் நா நிலா அக்கே..(சிறிலங்கா பொலிஸ் கட்டி ஓம தமாய் அக்கே :icon_mrgreen: )...பயவென்ன எப்பா ஓங்கொள்ளுட்ட....இத்திங் கெதர கட்டி ஓக்கம கொந்தாய்த :wub: ..பரிசமிங் இன்ட..(மம கீல என்னங் :wub: )..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

துவ ,கத்தாவ கொந்தாய் தவத் லியன்ட......எத்தன மினிசு மரனவா ஒயா தென்னம சிங்கல லியனவா நெத......

படையினர் எம் மக்களிற்கு

செய்வது துரோகம் தான்

என்பதை வெண்ணிலா அக்கா

நீங்களும் நிருபித்திருக்கிறீங்க.. :blink:

  • தொடங்கியவர்

நிலா அக்கே கொடக் காலக்க பக்சே ஓயாகே அத்த கத்தா கறிம சோக் :lol: ..(கத்தாவேங் என நங்கி ஓயாத :lol: )...கியல வடக் நா நிலா அக்கே..(சிறிலங்கா பொலிஸ் கட்டி ஓம தமாய் அக்கே :wub: )...பயவென்ன எப்பா ஓங்கொள்ளுட்ட....இத்திங் கெதர கட்டி ஓக்கம கொந்தாய்த :lol: ..பரிசமிங் இன்ட..(மம கீல என்னங் :lol: )..

அப்ப நான் வரட்டா!!

:icon_mrgreen: தம்பி ஆங்கிலம் எழுதவே திட்டுவாங்க. இப்ப நீங்க முழு சிங்களத்தில் எழுதி,,,,,,,,,,,,,,,,, ஐயோ முடியலை பேபி.

ஐய்யய்யோ இக்கதையில் வருவது நானில்லை. நானாவது இபப்டி கதைக்கிறதாவது. ம்ம்ம் உதை விட எவ்வளவோ எல்லாம் நடக்குது சில வீட்டில் நகைகளே காணாமல் போகுதாம் ல உது எபப்டி?

ஹீஹீ நான் எப்ப பயப்பட்டிருக்கிறேன் சொல்லுங்கோ. ம்ம்ம் வீட்டில் எல்லோருமே நலம். ஓகே போயிட்டு வாங்கோ பேபி :icon_mrgreen:

  • தொடங்கியவர்

துவ ,கத்தாவ கொந்தாய் தவத் லியன்ட......எத்தன மினிசு மரனவா ஒயா தென்னம சிங்கல லியனவா நெத......

புத்து மாமா கதை நல்லா இருக்கோ நன்றியுங்கோ. ம்ம் இன்னும் எழுதுறேன்

:icon_mrgreen: நாங்க இரண்டு பேரும் எழுதுறமோ இல்லை எழுத்தை கொல்லுறமோ தெரியலை. நீங்க வேறை :wub:

படையினர் எம் மக்களிற்கு

செய்வது துரோகம் தான்

என்பதை வெண்ணிலா அக்கா

நீங்களும் நிருபித்திருக்கிறீங்க.. :lol:

:lol::lol: நன்றிகள் கனிஷ்டா.

அட இப்ப எல்லாம் பொலிஸ் உடுப்பு போட்டு பொலிஸ் என்ற பெயரில் கள்ளர்களும் வாறாங்களாம். கேள்விப்பட்டேன் உது எபப்டி :icon_mrgreen:

வணக்கம் வெண்ணிலா ...சிறுகதைக்கு நன்றிகள்

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அல்ல ஆனால் எனக்கு ஒரு சம்பவம் நடத்திச்சு. மத்திய வங்கி குண்டு வெடித்த அன்று பஸ்ஸில் வந்த நான் ரோட்டில வைச்சு மாட்டுப்பட்டிட்டன். எல்லாரையும் போக விட்டு என்னை மட்டும் துருவிட்டே இருந்தாங்க. என்ர ஐடி உட்பட எல்லாத்தையும் பறிச்சிட்டு.. மதிலைப் பார்த்திட்டு இருக்கச் சொன்னார்கள். அப்ப நான் படிச்சிட்டு இருந்த படியா அந்த ஐடியும் இருந்தது அதையும் பறிச்சிட்டான். பறிச்சவன் அதையும் கொண்டு அப்பால போய்ட்டான். இடையில் ஒரு ஜீப்பில் ஒரு அதிகாரி வந்து இறங்கி நேர என்னட்டையே வந்தான். அவனின் பாதுகாவலன் துப்பாக்கியை தயார் நிலையில் வைத்து என்னை நோக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். வந்தவன் ஐடி எங்க என்றான். ஐடியை வாங்கிட்டினம் என்றன். ஆனால் வாங்கினவன் அதில நிற்கல்ல. அவன் நகர்ந்து தூரப் போய்ட்டான். அவனை எப்படி அடையாளம் காட்டிறது என்று தெரியாமல் முழித்துக் கொண்டே நின்றேன். வந்த அதிகாரி அயலில் நின்ர இராணுவத்தினரைக் கூப்பிட்டு விசாரித்துவிட்டு தொலைத்தொடர்பு சாதனம் மூலம் என்னிடம் ஐடி வாங்கினவை வரவழைத்தான். அப்ப தான் எனக்கு உயிரே வந்திச்சுது. அதன் பின்னர் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு எந்தப் பிரச்சனையும் இன்றி போக அனுமதித்துவிட்டனர்..!

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா! இது கதையல்ல! நிதமும் ஆங்கங்கே நடக்கும் நிஜங்கள்தான். எடுத்து வந்ததற்கு நன்றி சோதரி... :wub::D

  • தொடங்கியவர்

வணக்கம் வெண்ணிலா ...சிறுகதைக்கு நன்றிகள்

வணக்கம் சின்னக்குட்டியாரே.

அட என்னமோ எழுதிருந்தீர்கள். இப்ப அதை காணவில்லை. சத்தியமா நீங்கள் எழுதியது எனக்கு என்னான்னு விளங்கவே இல்லை :)

இப்படி அல்ல ஆனால் எனக்கு ஒரு சம்பவம் நடத்திச்சு. மத்திய வங்கி குண்டு வெடித்த அன்று பஸ்ஸில் வந்த நான் ரோட்டில வைச்சு மாட்டுப்பட்டிட்டன். எல்லாரையும் போக விட்டு என்னை மட்டும் துருவிட்டே இருந்தாங்க. என்ர ஐடி உட்பட எல்லாத்தையும் பறிச்சிட்டு.. மதிலைப் பார்த்திட்டு இருக்கச் சொன்னார்கள். அப்ப நான் படிச்சிட்டு இருந்த படியா அந்த ஐடியும் இருந்தது அதையும் பறிச்சிட்டான். பறிச்சவன் அதையும் கொண்டு அப்பால போய்ட்டான். இடையில் ஒரு ஜீப்பில் ஒரு அதிகாரி வந்து இறங்கி நேர என்னட்டையே வந்தான். அவனின் பாதுகாவலன் துப்பாக்கியை தயார் நிலையில் வைத்து என்னை நோக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். வந்தவன் ஐடி எங்க என்றான். ஐடியை வாங்கிட்டினம் என்றன். ஆனால் வாங்கினவன் அதில நிற்கல்ல. அவன் நகர்ந்து தூரப் போய்ட்டான். அவனை எப்படி அடையாளம் காட்டிறது என்று தெரியாமல் முழித்துக் கொண்டே நின்றேன். வந்த அதிகாரி அயலில் நின்ர இராணுவத்தினரைக் கூப்பிட்டு விசாரித்துவிட்டு தொலைத்தொடர்பு சாதனம் மூலம் என்னிடம் ஐடி வாங்கினவை வரவழைத்தான். அப்ப தான் எனக்கு உயிரே வந்திச்சுது. அதன் பின்னர் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு எந்தப் பிரச்சனையும் இன்றி போக அனுமதித்துவிட்டனர்..!

ஓஒ மத்திய வங்கி குண்டு வெடிப்பின் போது நெடுக் தாத்தாவுக்கு இப்படி நடந்த்து எனில் இப்போ எத்தனை வயதிருக்கும் தாத்தாக்கு? :D

அட அப்போ போக அனுமதித்தமையால் இப்போ இங்கே எழுதுறியள் இல்லையா தாத்தா :lol:

உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

வெண்ணிலா! இது கதையல்ல! நிதமும் ஆங்கங்கே நடக்கும் நிஜங்கள்தான். எடுத்து வந்ததற்கு நன்றி சோதரி... :unsure::unsure:

:D ம்ம் உண்மைச் சம்பவம் தான். அதை நான் கதையாக எழுதியமையால் கதைப்பகுதிக்குள் போட்டேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஓஒ மத்திய வங்கி குண்டு வெடிப்பின் போது நெடுக் தாத்தாவுக்கு இப்படி நடந்த்து எனில் இப்போ எத்தனை வயதிருக்கும் தாத்தாக்கு..!

இதென்ன கேள்வி பிள்ள.. அப்ப 85 வயசு. இப்ப 96 வயசு..! :D:)

  • தொடங்கியவர்

இதென்ன கேள்வி பிள்ள.. அப்ப 85 வயசு. இப்ப 96 வயசு..! :unsure::D

அட 85 வயதிலேயே உங்க கிட்ட படிக்கிற அடையாள அட்டை இருந்ததோ? அட அதை பார்த்துட்டும் தந்துட்டானா. உங்களாஇயும் போக அனுமதிச்சிட்டானா. எங்கேயோ இடிக்குதே :)

தலைநகரத் தமிழனின் நிலையினைச் சொன்ன பதிவு. பாராட்டுக்கள் வெண்ணிலா.

தமிழனுக்கு அடையாள அட்டைகளும் அகதிக் கார்ட்டுகளும் அந்நியப் பாஸ்போட்களும் அவசியமற்றவையாய்ப் போகின்ற நாள் எப்போது வரப் போகிறது?

அன்றாட வாழ்க்கையில் படும் வேதனைகளை கதையாக தந்த வெண்ணிலாவிற்கு நன்றிகள்.

கொழும்பில் வசிக்கும் போது அடையாள அட்டையை காப்பாற்றுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கின்றது. அதுவும் பஸ்சில் போகும் போது ......

  • தொடங்கியவர்

தலைநகரத் தமிழனின் நிலையினைச் சொன்ன பதிவு. பாராட்டுக்கள் வெண்ணிலா.

தமிழனுக்கு அடையாள அட்டைகளும் அகதிக் கார்ட்டுகளும் அந்நியப் பாஸ்போட்களும் அவசியமற்றவையாய்ப் போகின்ற நாள் எப்போது வரப் போகிறது?

:) நன்றிகள் மணி அத்தான்.

ஆமா உதுகள் எப்பதான் அவசியமற்ரவை ஆகுமோ யாருக்கு தெரியும்? அக்காலம் வருமா? :D

அன்றாட வாழ்க்கையில் படும் வேதனைகளை கதையாக தந்த வெண்ணிலாவிற்கு நன்றிகள்.

கொழும்பில் வசிக்கும் போது அடையாள அட்டையை காப்பாற்றுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கின்றது. அதுவும் பஸ்சில் போகும் போது ......

ம்ம்ம்ம் இது ஒரு நிஜக்கதையும் கூட.

ஐயோ அதி ஏன் சொல்லுறீங்க? நீங்கலூம் அனுபவப்பட்டிருக்கிறீங்க போல. நான் பஸ்சில் போகும்போது குறைந்தது 4 தடவைகள் எனது அடையாள அட்டை இருக்கின்றதா இருக்கின்றதா என செக் பண்ணி பார்ப்பேன் :unsure:

அட என்னமோ எழுதிருந்தீர்கள். இப்ப அதை காணவில்லை. சத்தியமா நீங்கள் எழுதியது எனக்கு என்னான்னு விளங்கவே இல்லை

கதை நல்லாய் இருக்கு பிள்ளை.....

எனக்கே பிள்ளை எழுதினது என்னவென்று விளங்கவில்லை ...அதனால் எடுத்துட்டன் :) ...

எல்லாரும் சிங்களத்திலை வெழுத்து வாங்கிறியள்

பின்னை பார்த்தன் ...தனக்கு விளங்கா சிங்களம் என்று நினைச்சு கொண்டு எதையோ சும்மா பகிடிக்கு சும்மா எந்த அர்த்தமே இல்லாத மொழியை எழுதி பார்த்தன் . குறை நினைக்க வேண்டாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

பெயருகளைப் பார்த்தா தமிழ் பெயர் மாதிரி இருக்கு.இது எந்த நாட்டில நடந்தது?

இலங்கையில் இப்படி நடக்க சந்தர்ப்பமே இல்லை.

  • தொடங்கியவர்

கதை நல்லாய் இருக்கு பிள்ளை.....

எனக்கே பிள்ளை எழுதினது என்னவென்று விளங்கவில்லை ...அதனால் எடுத்துட்டன் :D ...

எல்லாரும் சிங்களத்திலை வெழுத்து வாங்கிறியள்

பின்னை பார்த்தன் ...தனக்கு விளங்கா சிங்களம் என்று நினைச்சு கொண்டு எதையோ சும்மா பகிடிக்கு சும்மா எந்த அர்த்தமே இல்லாத மொழியை எழுதி பார்த்தன் . குறை நினைக்க வேண்டாம் :)

:lol::lol: நன்றிகள் சின்னக்குட்டியாரே. இருப்பினும் உங்கள் கதைகளுக்கு முன்னால் இதெல்லாம் வெறும் தூசி :)

ஹாஹா எனக்கும் விளங்கவில்லை.

அட எல்லோரும் வெளுத்து வனக்குறாங்க என நினைச்சு நீங்களுமா? என்ன கொடுமை பா. வெளுத்து வாங்கினதை ஒழுங்கா வெளுத்திருக்கலாமே :lol::)

பெயருகளைப் பார்த்தா தமிழ் பெயர் மாதிரி இருக்கு.இது எந்த நாட்டில நடந்தது?

இலங்கையில் இப்படி நடக்க சந்தர்ப்பமே இல்லை.

கொழும்பில் தான் இபப்டி நடந்திச்சு. :D

எல்லா பொலிஸும் கெட்டவங்க என்றில்லையே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.