Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை சோனிய குடும்பம் மன்னித்துவிட்டது. - நளினியின் வழக்கறிஞர்.

Featured Replies

இந்தியாவின் முன்னர்ள் பிரதமர் கொலைக்குற்றவாளிகள் அனைவரையும் சோனியா குடும்பம் மன்னித்திருப்பதாக நளினியின் வழக்கறிஞர் துரைசாமி nதிரிவித்துள்ளார்.

பிரியங்கா-நளினி சந்திப்பு குறித்து பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் நளினியின் சர்ர்பில் ஆஜராகும் வழக்கறிஞர் கேசரி வாரவெளியீட்டிற்கு பிரத்தியோக செவ்வி ஒன்றை வழங்கியுள்ளர்ர்.

அதில் பிரியங்காவால் விடுதலைப்புலிகளை நேரில் சந்தித்து , உங்கள் மீது கோபமோ விரோதமோ வெறுப்போ கிடையாது என்று சொல்ல முடியாது. அதானல் தான் அவர் நளினியைப் பயன்படுத்திக்கொண்டார். நளினியிடம் தன் கருத்துக்களைச் சொன்னதன் மூலம் பிரியங்கா தனக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தேடி கொண்டிருப்பதுடன், தன் மனனதில் உள்ள மனித நேயத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்; என்று துரைசாமி தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தியின் குடும்பதினருக்கே விடுதலைப் புலிகள் மீது கோபம் இல்லை என்றாகிவிட்ட பிறகு இந்திய அரசும் அதை ஏற்காத்தான் வேண்டும் தங்களுக்கும் புலிகள் அமைப்பின் மீது கோபம் இல்லை என்பதை இந்திய அரசு வெளிப்படுத்த வேண்டும்.

இது நாள் வரையில் பொதுவாக இந்திய மக்கள் விடுதலைப் புலிகள் என்றால் கோபம் கலந்த வெறுப்புடன் பார்த்தார்கள். மக்களாகட்டும், காங்கிரஸ் கட்சியினராகட்டும் எல்லோருக்குமே இந்தக் கோபமும் வெறுப்பும் இருந்தது உண்மை. ஆனால் பிரியங்காவின் இந்த நடவடிக்ககைகுப் பிறகு அக் கோபம் ஏறத்தாழ மறைந்து விட்டது என்று வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

பிரியங்காவினால் நளினிக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு? நடிகர் சரத்குமார்.

நளினியை சந்தித்த வேளையில் பிரியங்கா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் அதற்கு யார் பொறுப்பேற்ப்பது தமிழக அரசின் உளவுத்துறையின் செயல்பாடு வெட்கக் கேடானது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகா சரத்குமார் கூறியுள்ளார்.

நளினி - பிரியங்கா சந்திப்பின் பின்னால் இருக்கும் உணர்வுகளை நான் மதிக்கின்றேன். மறப்போம் மன்னிப்போம் என்ற பண்பை இந்திரா காந்தி குடும்பத்தினர் இன்னும கட்டிக் காத்து வருகின்றார்கள் என்பதை வெளிக்காட்டிய இன்னோரு நிகழ்ச்சிதான் அந்தச் சந்திப்பு.

ஆனால், நான் அந்த சந்திபினை விமர்சனம் செய்கிறேன். பிரியங்கா, வேலுரர் வந்து போனது ரகசியமாக வைக்கப்பட்டு ஏதோ ஒரு காரணத்துக்காக கசியவிடப்பட்டிருக்கிறது. உச்சபட்ச பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் ஒரு பெண் எந்தச் சுவடுமில்லாமல் வேலுர்ர் சிறைக்கு வந்து கொலை வழக்கில் குற்றம் சாட்டிபட்டிருக்கும் பெண்மணியைச் சந்தித்துத் திருப்பியிருப்பது தேவையா? என்பது தான் என் கேள்வி.

அதுவும் பிரியங்காவும் நளினியும் பூட்டபட்ட ஒரு அறையில்; யாருமில்லவாமல தனியாக பேசினார்கள் என்ற தகவல்கள் வெளியாகின்றன. பல வருடங்களாக சிறையில் இருக்கும் நளினியின் மன நிலை எப்படி இருக்கும்? அன்புக்காக ஏங்கும் பெண்ணாக இருப்பாரா அல்லது சமூகத்தின் மீது வெறுப்பை உமிழும் ஆளுமையோடு இருப்பாரா என்று யாருக்கும் தெரியாது. இந்நிலையில் அவரைத் தனிமையில் சந்தித்துப் பிரியங்கா பேசியபோது நளினியால் ஏதும் ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும். தமிழகத்தில் மீண்டும் ஒரு பரிதாபம் என்று அனைத்துலக ரீதியில் நம் மாநில மானம் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கும்.

ராஜீவ் கொலையால் ஈழத்தமிழர்கள் ஏற்கனவே பல இடர்ப்பாடுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறர்கள். ராஜீவை கொன்றது விடுதலைப் புலிகள் தான் என்ற ஒரு தோற்றம் இன்னும் மறையாமல் ஈழப் பிரச்சினை இழுத்துக் கொண்டிருக்கிறது. ராஜீவ் கொலை நடந்து இவ்வளவு வருடத்திற்குப் பிறகு இக் கொலையில் குற்றம் சாட்டிபட்டிருப்பவரை பிரியங்கா இப்பொது சந்திப்பதால் என்ன விளைவுகள் ஏற்பட்டு விடப் போகின்றது?

இருவரும் சந்தித்த போது என்னென்ன பேசிக் கொண்டார்கள் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை எந்தளவு உண்மை என்று தெரியவில்ல.

என்னைப் பொறுத்தவரையில் பிரியங்கா நளினி சந்திப்பால் ஈழப் பிரச்சியில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் தனிப்பட்ட பயணம் சந்திப்பு என்று சொல்லும் பிரியங்காவுடன் ஏன் மத்திய அரசின் உயரதிகாரிகள் உளவுத் துறையினர் எனப் பெரும் படையே வந்தது?

பிரியங்கா வெளிப்படையாக நளினியைச் சந்திதத்துப் பேசியிருக்க வேண்டும். அவர் அப்படி வந்து பேசுவதை தமிழக மக்கள் யாரும் எதிர்க்கமாட்டடார்கள்.

இந்நிலையில ராஜீவை கொன்றது புலிகளே அல்ல என்ற கருத்தும் வாதமும் வேறு நீண்டு கொண்டுதான் இருக்கிறது. அந்த விவாதத்ததுக்கு விடை தேடித்தான் பிரியங்கா வேலூருக்கு வந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். அப்படியென்றால் அதனை அறிய இதுதான் சரியான முறையா என்பதுதான் என் கேள்வி.

எல்லா விஷயத்தையும் முன்கூட்டியே கண்டு பிடிப்பதுதான் உளவுத்துறையின் வேலை. ஆனால் பிரியங்கா வருகை பற்றி மாநில உளவுத்துறைக்கு ஏதாவது தகவல் முன் கூட்டியயே தெரியுமா? அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.

பாவம், முக்கியமானவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு அதைக் குறிப்புகளாக்கி மேலிடத்துக்கு அனுப்புவதற்குத் தானே அவர்களுக்கும் நேரம் சரியாக இருக்கிறது.

ஆயுள் தண்டனை கைதி நளினி விடுதலைகோரி உயர் நீதி மன்றில் மனுத்தாக்கல்

வீரகேசரி இணையம் - ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் நளினியை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றில் மனு, தாக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இவ் வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. நளினி விடுதலையாவார் என்று அவரது வழக்கறிஞர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991இ மே.21ன்றில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த போது ஸ்ரீபெரும்புதூரில் இடம் பெற்ற மனித வெடிகுண்டுக்கு பலியானார். இது தொடர்பான வழக்கில் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த மரண தண்டனை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையீட்டின் பேரில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

நளினிக்கு கருணை காட்டும்படி அவர் கேட்டுக்கொண்டதால் இவ்வாறு தண்டனை குறைக்கப்பட்டது. இந் நிலையில் 1991ம் ஆண்டு முதல் நளினி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவரை சோனியாவின் மகள் பிரியங்கா வேலூரில் சிறையில் சந்தித்தார். என் தந்தை நல்ல மனிதர். அவரை ஏன் கொன்றார்கள் என்று கேட்டு பிரியங்கா அழுதார். நளினியே அப்போது கண்ணீர் விட்டு அழுதாராம். இந்த சந்திப்பு உண்மை என்று பிரியங்கா பிறகு ஒப்புக்கொண்டார்.

17 ஆண்டுகளுக்கு பிறகு நளினியை பிரியங்கா சந்தித்தது ஏன் என்பது புதிராக உள்ளது என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் பிரியங்கா தன்னை சந்தித்ததின் மூலம் தன் பாவங்களெல்லாம் நீங்கிவிட்டது என்று நளினி கூறியுள்ளார். வேலூர் சிறையில் நளினி 17 ஆண்டுகளாக இருந்து வருகிறார். ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள்தான் ஆனால் அதையும் தாண்டி நளினி சிறையில் இருந்து வருகிறார். அவரை விடுவிக்கக்கோரி பலமுறை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால் அந்த மனுக்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இப்போது நளினியை பிரியங்கா சந்தித்துள்ள நிலையில் நளினியை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன்படி விரைவில் மீள் மனு தாக்கல் செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் கூறினார். நளினி விடுதலையாவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்பு அடுத்தவாரம் விசாரணை ஆரம்பமாகலாம் என்றும் தெரிகிறது. அநேகமாக நளினி இந்த முறை விடுதலையாவார் என்று அவரது வழக்கறிஞர் மீண்டும் ஒரு முறை நம்பிக்கையோடு கூறினார்.

நன்றி வீரகேசரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரியங்காவினால் நளினிக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு? நடிகர் சரத்குமார்.

சிங்கள நடிகை ராதிகாவின் இந்நாள் கணவர் மிகவும் நன்றாக நடிக்கின்றார். இவரது பல வியாபாரங்கள் சக்தி ரிவி உட்பட இலங்கையில் இருப்பதால் ஸ்ரீ லங்கா அரசுக்கு சார்பாகத் தான் இவர் கதைக்கின்றார்

ராதிகா விரைவில் இலங்கயில் சொந்தமாக தொலைகாட்சி தொடங்க இருக்கின்றார் அதுதான் மேட்டர்

சிங்கள நடிகை ராதிகாவின் இந்நாள் கணவர் மிகவும் நன்றாக நடிக்கின்றார். இவரது பல வியாபாரங்கள் சக்தி ரிவி உட்பட இலங்கையில் இருப்பதால் ஸ்ரீ லங்கா அரசுக்கு சார்பாகத் தான் இவர் கதைக்கின்றார்

அவர் நடிக்கிறதிருக்கட்டும். எதுக்காக நீங்கள் சரத்குமார் மீது செய்யாத குற்றத்தைச் சுமத்துகிறீர்கள்?

சண் டிவியிலை ராதிகாவின் நாடகங்கள் போய்க்கொண்டிருந்தபோது திமுகவிட்டு விலகி அதிமுகவிற்குப் போய் சண்டீவியையும் விமர்சித்தாரே. அப்போது அவரிற்கு அவரின் வியாபரமெல்லாம் தெரியவில்லையா?

இந்தச் செய்தியில் எங்கே சிறிலங்கா அரசிற்குச் சாதகமாக கருத்துச் சொல்லியிருக்கிறார்? அல்லது எப்போதாவது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஏதாவது சொல்லியிருக்கிறாரா?

ஈழவிடுதலைப் போராட்டதிற்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளாரென்றே நம்பப்படுகிறது.

அவரிற்கோ அல்லது அவரின் மனைவிக்கோ இலங்கையில் சொத்தோ முதலீடுகள் இருந்தால் நமக்கென்ன?

ஈழவிடுதலைக்காக எப்போதுமே குரல் கொடுத்து வருகிற வைக்கோவையே "விசைப்பலகையில் மாத்திரம் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும்" தாயகப்பற்றாளர்கள் கேலி செய்யும்போது நீங்கள் சரத்குமாரை விமர்சிக்கிறது பெரியவிடயமில்லைத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

காலங்களில் மாற்றங்கள் தேவைப்படும் வேளையில்.. இவை நிகழும். நாம் எமக்கு சாதகமானவற்றை.. பாவித்துக் கொண்டு இலக்கை அடையுறதுதான் புத்திசாலித்தனம்..! :(

இந்த நாடகங்களின் அரங்கேற்றங்கள் பற்றிய சில உண்மையான வெளிப்பாடுகள் இன்னும் சிறிது நாள்களில் வெளிப்படும். மறப்பது மன்னிப்பது எல்லாம் சும்மா. இந்திய வெளிநாட்டுக் கொள்கைவகுப்பாளர்கள் என சொல்லப்படுவோரின் கருத்துக்கள் எதுவுமே இதுவரை வெளிப்படாதிருப்பது அவர்களின் நாடகமாகவே புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

ஆம் சரத்குமார்;; அப்படி ஏதும் நடந்திருந்தால் அதற்க்கு பிரியங்கா தான் பொறுப்பு ஏற்கவேண்டும். காரணம் நளினி ஒன்றும் ராஜிவ் குடும்பத்திடம் இதுவரை (17 வருடங்கள்) எதுவும் கேட்கவில்லை.பிரியங்கா தன்னுடைய சொந்தவிருப்பத்தின் பேரில் தான் நளினியை போய் சந்தித்துள்ளார். மற்றும் பிரியங்கா நளினியை பற்றி அவருடைய குனநலன்களை நன்நடத்தைகளை பற்றி நன்றாக தெரிந்துகொண்டபின் தான் போய் சந்தித்திருப்பார்.

நளினி பிரியங்காவுடன் அந்த ஒருமனிநேரம் நடந்துகொண்டவிதத்தில் இருந்தே பிரியங்கா நளினி குற்றமற்றவள் என்பதையும் அவர் ஒரு அப்பாவி என்பதையும் மிக நன்றாகவே புரிந்த்துகொண்டிருப்பார். அதையே நீங்களும் தமிழ்நாட்டில் இருப்பவர்களும் ஏன் எல்லா இந்தியர்களும் மிக தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். இனியாவது உண்மை குற்றவாளி யார் என்பதை அறிய முயற்ச்சி செய்யுங்கள்.

Edited by thanga

தமிழகத்தில் மக்களிடையே ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான ஒரு சூழல் தற்போது உள்ளது..

இந்த நிலையில் சிங்களர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய அரசு எடுத்தால்... தமிழகத்தில் இந்திய அரசுக்கு எதிராக ஒரு வெறுப்புணர்வு தோன்றி விடும்

....... எனவே கொள்கைகள் மாறலாம்

இந்த நாடகங்களின் அரங்கேற்றங்கள் பற்றிய சில உண்மையான வெளிப்பாடுகள் இன்னும் சிறிது நாள்களில் வெளிப்படும். மறப்பது மன்னிப்பது எல்லாம் சும்மா. இந்திய வெளிநாட்டுக் கொள்கைவகுப்பாளர்கள் என சொல்லப்படுவோரின் கருத்துக்கள் எதுவுமே இதுவரை வெளிப்படாதிருப்பது அவர்களின் நாடகமாகவே புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

தமிழகத்தில் மக்களிடையே ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான ஒரு சூழல் தற்போது உள்ளது..

இந்த நிலையில் சிங்களர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய அரசு எடுத்தால்... தமிழகத்தில் இந்திய அரசுக்கு எதிராக ஒரு வெறுப்புணர்வு தோன்றி விடும்

....... எனவே கொள்கைகள் மாறலாம்

மாற்றங்கள் உண்மையானதாக இருந்தால் தமிழர்கள் வரவேற்க தயங்க மாட்டார்கள்!

தர்மத்தின் வாழ்வுதனை சில நாள் சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய கொள்கை வகுப்பாளர்களின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு மிகப் பெரிய தடையாக இருப்பது திரு ராஜீவ் காந்தி கொலையும் அது தொடர்பாக இந்தியாவில் பரவலாக ஏற்பட்டுவிட்ட வெறுப்பு அலையும்தான்.

இலங்கை அரசு இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியபடி செய்யும் காய் நகர்த்தல்கள் இந்தியாவையே தின்று ஏப்பம் விடக்கூடிய நிலைக்கு வந்துவிட்டன.

அதனால் கொள்கையில் ஒரு மாற்றம் அல்லது மாற்ற விரும்புகிறோம் என்னும் எச்சரிக்கை தேவையாயயிருக்கிறது.

இலங்கை அரசுத் தலைவரின் சமீபத்திய சீன விஜயம் உட்பட தமிழக மீனவர்களின் பிரச்சனை, தமிழ் நாட்டு அரசின் நெருக்கு வாரங்கள், தமிழகத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ஈழ ஆதரவு அலை போன்றன இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேற்கு நாடுகள் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நேரடிப் பங்களிப்பைப் பெரிதும் எதிர்பார்ப்பதாலும், தற்போதைய நாலாம் கட்ட ஈழப்போரில் இலங்கையரசு வெற்றிகாணமுடியாமல் திணறி தமிழீழத்திற்கான சாத்தியங்கள் அதிகரித்துவிடக் கூடிய தோற்றப் பாடு காணப்படுவதாலும் இந்தியா தமிழர் தரப்போடும் உறவுகளை ஏற்படுத்தி மீண்டும் பிரச்சனையைத் தன் கையிலெடுக்க முனைவதுபோலத் தெரிகின்றது.

எது எவ்வாறிருந்தாலும் இந்து சமுத்திரத்தில் தனது பலம், தமிழீழத்திற்கானவொரு மாற்றீடு மூலம் தமிழீழத் தனிநாடு உருவாவதைத் தடுத்தல் என்னும் இரண்டு மாங்காய்களை வீழ்த்த நளினியையும் பிரியங்காவையும் சந்திக்க வைத்தது போன்ற இத்தகைய சென்ரிமெண்டான நிகழ்வுகளை இந்திய மேலிடம் காட்சிப்படுத்துகின்றது. எதற்கும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இந்திய மத்திய கொள்கை வகுப்பாளர்களின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு மிகப் பெரிய தடையாக இருப்பது திரு ராஜீவ் காந்தி கொலையும் அது தொடர்பாக இந்தியாவில் பரவலாக ஏற்பட்டுவிட்ட வெறுப்பு அலையும்தான்.

இலங்கை அரசு இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியபடி செய்யும் காய் நகர்த்தல்கள் இந்தியாவையே தின்று ஏப்பம் விடக்கூடிய நிலைக்கு வந்துவிட்டன.

அதனால் கொள்கையில் ஒரு மாற்றம் அல்லது மாற்ற விரும்புகிறோம் என்னும் எச்சரிக்கை தேவையாயயிருக்கிறது.

இலங்கை அரசுத் தலைவரின் சமீபத்திய சீன விஜயம் உட்பட தமிழக மீனவர்களின் பிரச்சனை, தமிழ் நாட்டு அரசின் நெருக்கு வாரங்கள், தமிழகத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ஈழ ஆதரவு அலை போன்றன இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேற்கு நாடுகள் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நேரடிப் பங்களிப்பைப் பெரிதும் எதிர்பார்ப்பதாலும், தற்போதைய நாலாம் கட்ட ஈழப்போரில் இலங்கையரசு வெற்றிகாணமுடியாமல் திணறி தமிழீழத்திற்கான சாத்தியங்கள் அதிகரித்துவிடக் கூடிய தோற்றப் பாடு காணப்படுவதாலும் இந்தியா தமிழர் தரப்போடும் உறவுகளை ஏற்படுத்தி மீண்டும் பிரச்சனையைத் தன் கையிலெடுக்க முனைவதுபோலத் தெரிகின்றது.

எது எவ்வாறிருந்தாலும் இந்து சமுத்திரத்தில் தனது பலம், தமிழீழத்திற்கானவொரு மாற்றீடு மூலம் தமிழீழத் தனிநாடு உருவாவதைத் தடுத்தல் என்னும் இரண்டு மாங்காய்களை வீழ்த்த நளினியையும் பிரியங்காவையும் சந்திக்க வைத்தது போன்ற இத்தகைய சென்ரிமெண்டான நிகழ்வுகளை இந்திய மேலிடம் காட்சிப்படுத்துகின்றது. எதற்கும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

சிறப்பான கருத்து !!! பாராட்டுக்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்கள் மீது சுமத்தப்பட்ட ராஜீவ் காந்தி கொலைக்கான குற்றத்தை நாங்கள் பெரிது படுத்தாமல் மறந்துவிடுகிறோம் அதற்குப் பதிலாக நீங்கள் உங்கள் தமிழீழ ஆசையை விட்டுவிடுங்கள் வேறு எதையாவது பெற்றுத் தருகிறோமென்று இந்தியா எம்மை வற்புறுத்தலாம். எதற்கும் இத்தகைய நிகழ்வுகளால் சும்மா நெகிழ்ந்து போகாமல் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.

------------------------------

ஈழ சுதந்திரம் வேண்டி நின்றார்பின் எதையும் விரும்புவாரோ?

இனிய நறுந்தேனிருக்கையில் வேம்பினது எண்ணெயைக் குடிப்பாரோ?[/color]

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ராஜீவ் கொலைக்கு முன்னரே இலங்கை விடயத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது இச்திரமற்ற இலங்கை, அல்லது எத்தரப்பும் வெற்றியடையாத இலங்கை( புலிகளும், அரசும்) என்பதாகும். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் தமிழருக்கும், தமிழீழத்திற்கும் எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்து விட்டது என்பதே உண்மை. ராஜீவ் காந்தியின் கொலையினால் இந்தியா தனது செய்கையை நியாயப்படுத்தியதே தவிர, அக்கொலையினால்த்தான் ஈழத்திற்கெதிரான நிலைப்பாட்டை எடுத்தது என்பது பிழை.

ஆக இன்று நடக்கும் பிரியங்கா- நளினி சந்திப்பு என்பது தமிழகத்தில் அதிகரித்து வரும் ஈழத்தமிழர் ஆதரவு அலையை அணை உடையாமல் வழிந்தோடப் பண்ணும் ஒரு ஏமாற்று நடவடிக்கையே தவிர, இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் இல்லை. இலங்கை அரசை சிக்கலில் மாட்டவைக்கும் எந்த நடவடிக்கையிலும் இந்தியா இறங்காது, அப்படி இறங்க வேண்டிய அவசியமும் இல்லை.

இலங்கையில் தனது பொருளாதார மைய்யங்களை திறக்க எத்தனிக்கும் இந்தியா எதற்காக இலங்கையை பகைத்துக்கொள்ள வேண்டும் ?

ஆக இப்போது நடப்பதெல்லாம் தமிழ்நாட்டுத் தமிழனின் ஈழத்தமிழன் மேலான அநுதாபத்தை தணிக்கும் ஒரு செயலேயன்றி வேறொன்றுமில்லை.

நாம் இவ்வளவு காலமும் இந்தியாவின் கைய்யில் பட்ட துன்பமெல்லாம் போதும், இனியும் நம்பி ஏமாறத் தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கர்,

நீங்கள் தந்த இணைப்பில் வாசகர்களின் கருத்துக்களில் சிலவற்றைப் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு தமிழர் 1225 அப்பாவி இந்திய ஜவான்களைக் கொன்றது பயங்கரவாதம் என்றும், அப்படிப்பட்ட பயங்கரவாதிகளான புலிகளை உடனே அழிக்க இந்தியா தன்னால் ஆன முழு உதவிகளையும் இலங்கை அரசுக்கு செய்ய வேண்டும் என்றும் தனது ஆதங்கத்தைக் கொட்டியிருந்தார். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

குறுக்கர்,

நீங்கள் தந்த இணைப்பில் வாசகர்களின் கருத்துக்களில் சிலவற்றைப் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு தமிழர் 1225 அப்பாவி இந்திய ஜவான்களைக் கொன்றது பயங்கரவாதம் என்றும், அப்படிப்பட்ட பயங்கரவாதிகளான புலிகளை உடனே அழிக்க இந்தியா தன்னால் ஆன முழு உதவிகளையும் இலங்கை அரசுக்கு செய்ய வேண்டும் என்றும் தனது ஆதங்கத்தைக் கொட்டியிருந்தார். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

பெயரை மட்டும் வைத்து ஒருவர் தமிழரா இல்லையா என்று சொல்வது இந்தியாவில் சற்று கடினமானது. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தமிழ் நாட்டில் மட்டும் விற்கப்படும் பத்திரிகை அல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாசகர்களை கொண்ட பத்திரிகை அது. இதோ கீழே இந்தியன் எக்ஸ்பிரஸ் வாசகர் ஒருவரின் கருத்து

.

rajive & LTTE

Dear Kamalanesan, Killing of 1225 IPKF soldiers in a war is not terrorism. But killing 7,000 innocent women and children in hospitals and schools and all around North and East of Srilanka is terrorism. Raping old and young women in groups is terrorism. Dragging an already affected tamil's life in to turmoil is terrorism. IPKF was fully armed with T-72 tanks and Mi-24, 35 s and fighter air craftes. So they were not there for Buddha's job. They were on a mission. And they killed innocent men and women in the name of peace. No army is innocent. They all the same. IPKF is no different !

Name - anton

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழப் போராட்டம் பலமாக முன்னோக்கி நகரவிடாமல் தடுப்பதில் புலிகளின் தலைமை மீது கோபம் கொண்டுள்ள, தூரதரிசனமற்ற பழங்காலத்து வெளியுறவு ஆலோசகர்கள் இன்னமும் விடாது செயற்படுகின்றார்கள். இவர்களின் பிழையான வழிநடத்தலால் இந்தியாவுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும். இதைப் புரிந்துகொள்ள அவர்கள் எடுக்கும் காலம் அதிகமானால் பாதிப்பு தமிழீழத் தமிழருக்கும் இந்தியருக்கும்தான்.

ரகுநாதன் அண்ணை உண்மை தான். உவங்கள் மோட்டு வடக்கத்தையாருக்கு குடுத்த அடி காணாது போல கிடக்கு. தென்னிலங்கைக்கு போரை விரிவாக்கினது போல அங்காலையும் பேதி குடுத்தாத்தான் உவங்கள் சரிவருவங்கள் போல கிடக்கு. நீங்கள் என்ன நினைக்கிறியள்?

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பொதுத்தேர்தல் வரும் சந்தர்ப்பத்தில் அதற்காகத் தான் இச் சந்திப்பைப் பிரியங்கா செய்தார் என்று சிலர் சொன்னாலும், அதை இரகசியமாக வைக்கத் தேவையில்லை. நளினியைப் பிரியங்கா சந்தித்தது தொடர்பாக இலங்கையரசும் எதிர்ப்பினைக் காட்டி நிற்கின்றது.

ஆயினும் இந்தியக் கொள்கை என்பது இதில் மாற்றங்களுக்குரியதா என்பது நம்பக்கூடியதல்ல. பல்லாயிரம் மக்கள் வாழ்ந்த சம்பூரில் அனல் மின்னிலையம் தொடங்க அடிக்கல் நாட்டி இந்திய அரசு தமிழ்மக்களின் வாழ்விடயங்களை அழிக்கத் துணை போய்க் கொண்டு தான் இருக்கின்றது

என்ன குறுக்கு... மோட்டு சிங்களவன் அடிச்சே இப்பிடி திரியிறம்... இதில உந்த இந்திகாரனும் சேர்ந்தா.. பிறகேன் கேட்பான்...

எங்களிட்டை முந்தி முப்படை உயர் தொழில்நுட்பம் பல்குழல் ஏவுகணை செய்மதி எண்டு பாவிக்காத காலத்திலேயே அடி வேண்டிக் கொண்டு துண்டைகாணோம் துணியக் காணோம் எண்டு ஓட்டமெடுத்தவங்கள். இப்ப சேட்டைவிட்டா அவையின்ரை கதி எப்பிடி இருக்கும்? அந்தக் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியுமோ தெரியா.

எங்களுக்குத்தானே கரும்புலிகள் தேசிய தலைவர் எல்லாரும் இருக்கினம். பிறகேன் கடுமையாக யோசிக்கிறியள் பயப்பிடுறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கர் நான் சொல்ல வந்தது வேற,

இந்தியர்களுக்கு தமிழீழத்தில் 1987 இலிருந்து 1989 வரையிலும் நடந்தது தெரியாது. ஏதோ ஆயுதம் தரிக்காத அப்பவி ஜவான்களைத்தான் புலிகள் பயங்கரமாகக் கொன்று போட்டார்கள் என்று எண்னிக்கொண்டு இருக்கிறார்கள். அதைத்தான் சொல்ல வந்தேன். நீங்கள் வேற செய்மதி, பல்குழல் ஏவுகணை எண்டு லொள்ளுப்பண்ணிக் கொண்டு ....!

  • கருத்துக்கள உறவுகள்

பிரியங்கா- நளினி சந்திப்பு கூறும் செய்தி என்ன ?

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு தமிழகத்தின் வேலூரில் மத்திய சிறையில் ஆயுட் காலச் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி ஷ்ரீஹரனுக்கும் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா வடேராவுக்கும் இடையே கடந்த மாதம் 19 ஆம் திகதி மிகவும் இரகசியமாக நடந்த சந்திப்பு தற்போது அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஷ்ரீலக்ஷ்மி நாராயணி பொற்கோயிலைத் தரிசிப்பதற்காகத்தான் பிரியங்கா கடந்த மாதம் தமிழகம் வந்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. தமிழக விஜயத்தின் போது அவரது நடமாட்டம் குறித்து மாநில அரசாங்கத்தின் உயரதிகாரிகளுக்கே தெரியாத அளவுக்கு பேணப்பட்ட இரகசியத்தன்மையின் புதிரை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. பிரியங்காவின் வேலூர்ச் சிறை விஜயம் அரசியல் விவாதத்துக்கும் ஊகங்களுக்கும் உரிய விவகாரமாக மாறியிருக்கிறது. இந்தியாவின் முதன்மையான அரசியல் குடும்பமொன்றின் உறுப்பினரான பிரியங்கா தனது தந்தையாரின் கொலை வழக்கின் குற்றவாளியொருவரைச் சந்தித்துப் பேசிய செயல் இந்தியாவில் மாத்திரமல்ல இலங்கையிலும் பெரும் ஆர்வத்தையும் அக்கறையையும் தூண்டியிருக்கிறது.

நளினியைச் சந்தித்துவிட்டு பிரியங்கா புதுடில்லி திரும்பிய பின்னரும் கிட்டத்தட்ட ஒருமாதகாலமாக இரகசியம் பேணப்பட்டுவந்திருக்கிறது. தகவல் அறிவதற்கான உரிமை தொடர்பாக சென்னை வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்த பின்னர்தான் உண்மை வெளியாகியிருக்கிறது. செய்திகள் வெளியானதும் நளினியைச் சந்தித்ததை ஒப்புக்கொண்ட பிரியங்கா இதில் பகையோ, பழி உணர்வோ, குரோதமோ, கோபமோ இல்லையென்றும் தன்னுடைய தனிப்பட்ட முயற்சி காரணமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றது என்றும் வன்முறையில் தந்தையாரைப் பறிகொடுத்த தனக்கு ஆறுதல் தேடுவதற்கான ஒரு வழிமுறையாகவே சந்திப்பு அமைந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். பகை எண்ணம், பழி உணர்வில் தனக்கு நம்பிக்கை இல்லையென்றும் அந்த உணர்வுகள் தன்னை ஆட்கொள்ள அனுமதிக்கப்போவதில்லையென்று

  • கருத்துக்கள உறவுகள்

astrix91's comment on Priyank's visit to Vellore

Whoever wrote the comments under the name astrix91 is calling the editor as an idiot becaue he practically justifies the assasination of Rajiv Gandhi. You astrix91 must be a selfish Indian. You only talk the people who were killed in India but you don't want to talk how IPKF butchered the Tamil people, raped the women and stole the personal belongings of the Tamil people in Srilanka. Thousands were massacred by the IPKF, in my village -Kondavil the IPKF walked into a Hindu Temple ( Dhurga Temple) and sprayed bullets on the displaced people who were taking refuge in the temple. They walked into the temple with their army boots and killed 32 people instantly. They walked into the Jffna hospital and killed all the medical staff and doctors. A neibour of mine, an innocent young man was draged out his house and was asked to lie down on the street and then the IPKF drove the battle tank on him alive. There are thousands of this horrors created by IPKF. You monters, bastards, you are humanity's shame. IPKF is the world's dirtiest and terrorist army ! For the mess you guys created in Srilanka, not only Rajiv, YOU WILL be paying more, thats is for sure !Name - Bleeder

This article was found in Indian Express under the heading of " Priyangka's visit to Nalini". As it really appropriate and spoke about the actrocities carried out in our homeland in 1987 to 1989, i thought to attach it here.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

சந்திப்பின் பின்னணி என்ன?

[20 - April - 2008] [Font Size - A - A - A]

கலைஞன்

இந்திய அரசியலில் தற்போது விலைவாசி உயர்வு விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் அதனை விடவும் பெரிதாக, ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளி நளினியை வேலூர் சிறையில் பிரியங்கா காந்தி சந்தித்து பேசிய விடயம் பூதாகரமாக வெடித்துள்ளதுடன், இது தொடர்பான வாதப்பிரதிவாதங்களுடன் இச்சந்திப்பின் சாதக, பாதக தன்மைகளும் அலசி ஆராயப்படத் தொடங்கியுள்ளன.

நளினியை பிரியங்கா காந்தி சந்தித்ததன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் அரசியல்சார் நலன்களா அல்லது இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான விடயங்களா மையப்படுத்தப்பட்டன என்ற ரீதியிலேயே தற்போது விமர்சனங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டமையானது இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழருக்குமிடையே கடந்த 17 வருடங்களாக பாரிய வெற்றிடமொன்றை ஏற்படுத்திவிட்ட நிலையில், அக்கொலையுடன் சம்பந்தப்பட்ட நபரொருவரை பிரியங்கா காந்தி இரகசியமாக சந்தித்தமை சாதாரண விடயமல்ல.

ஆனாலும், நளினியை பிரியங்கா காந்தி சந்தித்ததன் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும் அதன் மத்திய அரசும் கரிசனை காட்டத் தொடங்கிவிட்டதாகவும் இச்சந்திப்பு இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழருக்குமிடையே மீண்டுமொரு நட்புறவை, இரத்த பாசத்தை, ஏற்படுத்திவிட்டதாகவும் இந்தியா மற்றும் இலங்கையில் ஒரு சாரார் கூறுவது அவ்வளவு புத்திசாலித்தனமானதல்ல.

காங்கிரஸ் கட்சியையோ மத்திய அரசையோ பொறுத்தவரை அவர்கள் நாராயணன்கள், சிவ்சங்கர்மேனன்களின் அறிவுரையின்றியும் உளவுத்துறையான `றோ'வின் வழிகாட்டுதல்களின்றியும் ஒரு அணுவைக் கூட அசைக்க மாட்டார்கள்.

இவ்வாறான நிலையில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் நாராயணனுக்கோ அல்லது `றோ' வின் மேல் மட்டங்களுக்கோ தெரியாமல் பிரியங்கா காந்தி நளினியை சந்திப்பதற்கு வாய்ப்புகளில்லை. எனவே, இவர்களின் ஆசிர்வாதத்துடனேயே இச்சந்திப்பு இடம்பெற்றிருக்கும்.

அத்துடன், பிரியங்கா காந்தி நளினியை சந்திப்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசுக்கோ அதன் உளவுத்துறைக்கோ தெரியாமல் மிகவும் ரகசியமான முறையில் மத்திய அரசின் உளவுத்துறையே செய்து கொடுத்துள்ளது.

எனவே, இச்சந்திப்பு விடயத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை பின்னணியில் இருப்பதற்கான சாத்தியங்களில்லை. ராகுல் காந்தியை கொண்டு மத்திய பிரதேசங்களில் செய்யும் தேர்தல் பிரசார யுக்தியை பிரியங்கா காந்தியை கொண்டு காங்கிரஸின் தலைமை தமிழகத்தில் செய்துள்ளது.

இதனாலேயே, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக ஒரு சிறு துருப்பு அசைந்தாலும் அலறித் துடிக்கும் இந்திய மேல் தட்டு வர்க்கம் இந்த விடயத்தில் இதுவரை எந்தவிதமான கருத்துக்களையும் கண்டனங்களையும் வெளியிடாது மௌனம் காத்து வருகின்றன.

இதேவேளை, நளினியுடனான சந்திப்புக் குறித்து கருத்து வெளியிட்ட பிரியங்கா காந்தி, வன்முறை, பகை எண்ணம், பழி உணர்ச்சி எதுவும் தன்னிடமோ தனது குடும்பத்திடமோ இல்லையெனவும் இந்த உணர்வுகள் தம்மை ஆட்கொள்ள தாம் அனுமதிப்பதில்லையெனவும் கூறியுள்ளதுடன், நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக்கிய கருணையுள்ளம் கொண்டவர் தனது தாய் சோனியா எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரியங்கா காந்தி கூறுவது போல் அவர்களிடம் வன்முறை, பகை உணர்வு, பழிவாங்கும் எண்ணங்கள் இல்லாவிட்டால் ராஜீவ்காந்தி படுகொலையின் பின்னர் கடந்த 17 வருடங்களாக அயல்நாடான இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்க்க முடியுமா? அல்லது இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் இடம்பெயர்வுகள், துன்பங்களை அனுபவிப்பதற்கும் காரணமான இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளையும் பொருளாதார வளங்களையும் அள்ளிக்கொடுக்க முடியுமா? இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகள் வழங்க வேண்டாமென தமிழகத்திலுள்ள தமிழின உணர்வாளர்கள் எத்தனையோ போராட்டங்களை நடத்திய போதும் அதனை கிஞ்சித்தும் கவனத்திலெடுக்காது இருக்க முடியுமா?

ராஜீவ்காந்தி கொலைக்கு முன், ராஜீவ்காந்தி கொலைக்கு பின் என்ற ரீதியில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழக அரசு அணுகுவதற்கான அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் கொடுத்தது இந்தக் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு தான்.

அத்துடன், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கையை தண்டிக்க முற்படும் போதெல்லாம் இலங்கையை காப்பாற்றி அம்மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தும் பெருமையும் பிரியங்கா கூறும் சிறப்பியல்புகளைக் கொண்ட காந்தி குடும்பத்தையே சேரும்.

எனவே, நளினியுடனான பிரியங்கா காந்தியின் சந்திப்பு எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு தமிழக மக்களை கவரும் ஒரு திட்டமாகவேயுள்ளது. மத்திய பிரதேசங்களில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் ராகுல்காந்தி, ஆதிவாசிகளின் வீடுகளில் படுத்துறங்கியும் ஏழை எளியவர்களின் வீடுகளில் விருந்துண்டு மகிழ்ந்தும் மக்களை கவர முயன்றுவருகிறார். இதற்கு ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

இவ்வாறான ஒரு பிரசாரத்தை தமிழகத்தில் முன்னெடுப்பதற்காக தமிழக மக்களின் நாடிபிடித்துப் பார்த்து, எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்பதை தெரிந்துகொண்டு நடத்தப்பட்டதே பிரியங்கா காந்தி நளினி சந்திப்பாகும்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உட்கட்சிப் பூசல்களாலும் கோஷ்டி மோதல்களாலும் சின்னாபின்னமாகி வரும் நிலையில், நளினியுடனான பிரியங்காவின் சந்திப்பு இடம்பெற்றதும் அது தற்போது தமிழகத்தில் மட்டுமன்றி இலங்கையிலும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியதும் கவனிக்கப்பட வேண்டியது.

தமது பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் அணுகுமுறையில் மாறுதல்கள் ஏற்பட வேண்டுமென பலவழிகளிலும் முயன்று தோற்றுப்போன இலங்கைத் தமிழர்களும் அவர்கள் சார்பு அமைப்புகளும் ராஜீவ் கொலைக் குற்றவாளியான நளினியை பிரியங்கா காந்தி சந்தித்த விடயத்தை தமக்கு சாதகமானதாகவே கருத முற்படுகின்றனர். பிரியங்கா - நளினி சந்திப்பு மூலம் மத்திய அரசு தமக்கு எதனையோ சொல்ல முற்படுவதாக அவர்கள் நினைக்கின்றனர்.

ஆனால், இந்திய அரசியலைப் பொறுத்தவரை அதில் ஆதிக்கம் செலுத்திவரும் மேல் தட்டு வர்க்கம் என்பது எப்பவுமே தமது அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்டு எதனையும் சிந்திப்பதற்கோ, செய்வதற்கோ முயன்றதில்லை.

இவ்வாறான நிலையில் நளினியுடனான பிரியங்காவின் சந்திப்பின் மூலம் தமக்கு விமோசனம் கிடைக்குமென இலங்கைத் தமிழர் எதிர்பார்ப்பது அவ்வளவு விவேகமானதல்ல.

இனி வேலூர் சிறையில் பிரியங்கா காந்தி - நளினி சந்திப்பு எவ்வாறு நடந்தது என்ற விடயத்துக்கு வருவோம்.

கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி தமிழக அரசுக்கோ அதன் உளவுத்துறைக்கோ தெரியாமல் சென்னைக்கு வந்த பிரியங்கா காந்தி. வேலூர் சிறையில் நளினியை சந்தித்து 19 நிமிடங்களுக்கு மேலாக பேசிய விடயம் ஒரு மாதம் வரை தெரியாத நிலையில் தற்போது அவ்விடயம் வெளிப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியினதும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியினதும் மகளான பிரியங்கா காந்தி, தமிழக அரசுக்கும் அதன் உளவுத்துறைக்கும் தெரியாமல் தமிழகம் வந்து சென்றமை அப்போது பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியிருந்தது. தமக்குத் தெரியாமலே தமிழகம் வந்து தமக்குத் தெரியாமலே பிரியங்கா காந்தி டில்லி சென்றமை தமிழக உளவுத்துறைக்கு பெரும் அவமானத்தையும் தமிழக அரசுக்கு பெரும் ஏமாற்றத்தையும் கொடுத்ததால் இரு தரப்புமே அப்போது பிரியங்காவின் விஜயத்தை மறுத்திருந்தன.

தமிழகம் வருவதானால் உள்துறை செயலகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் அவர் வரமுடியாது. அப்படி வந்திருந்தாலும் அவர் புறப்பட்டுச் செல்லும் போதாவது காங்கிரஸ் கட்சித் தலைவர்களாவது சந்தித்திருப்பார்கள். குறைந்தபட்சம் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியாவது விமான நிலையத்திற்கு சென்று ஒரு பூங்கொத்தாவது கொடுத்து வரவேற்றிருப்பார் அல்லது வழியனுப்பி வைத்திருப்பார். எனவே, பிரியங்கா தமிழகம் வந்தார் என்ற செய்தியில் உண்மை இல்லையென உளவுத்துறையினர் வாதிட்டனர்.

ஆனால், மார்ச் மாதம் 19 ஆம் திகதி காலை டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த பிரியங்கா காந்தி பின்னர் அங்கிருந்து கார்மூலம் ஷ்ரீபெரும்புதூரிலுள்ள தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து வேலூர் ஷ்ரீபுரம் பொற்கோவிலுக்கு காரில் வந்தார். அங்கு தரிசனம் முடித்த பின்னர் மீண்டும் சென்னை சென்று மாலையில் டில்லி புறப்பட்டுச் சென்றார். இந்த விடயங்களை மட்டுமே மத்திய புலனாய்வுத்துறையினர் பின்னர் தெரிவித்து பிரியங்காவின் விஜயத்தை உறுதிப்படுத்தினர்.

நளினியை பிரியங்கா காந்தி மார்ச் மாதம் 19 ஆம் திகதி சந்தித்த விடயம் கடந்தவாரம் நளினியை அவரின் தாயார் சிறையில் சந்திக்கச் சென்ற போது தெரிய வந்ததையடுத்தே பெரும்பரபரப்புகள் ஏற்பட்டன.

நளினியை அவரின் தாயார் சந்திக்கச் சென்றபோது, தன்னை பிரியங்கா காந்தி வந்து சந்தித்த விடயத்தை கூறிய நளினி இதனை தனது வழக்கறிஞர் துரைசாமியிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து, தனது உதவி சட்டத்தரணி இளங்கோவனை நளினியை சந்திக்க அனுப்பிய சட்டத்தரணி துரைசாமி, பிரியங்கா நளினியை சந்தித்ததை உறுதிப்படுத்திக் கொண்டார். அதன் பின்னரே ஊடகங்கள் இச்செய்தியை போட்டி போட்டு பிரசுரித்தன. ஹிந்துஸ்தான் ரைம்ஸ், பத்திரிகையே இச் செய்தியை முதலில் பிரசுரித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக அரசுக்கே தெரியாமல் தமிழகம் வந்து சென்ற பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்குச் சென்று ராஜீவ் கொலைக் குற்றவாளி நளினியை பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் சந்தித்ததுடன், அதனை பின்னர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டமை தமிழக அரசை தலைகுனிய வைத்துள்ளதுடன், இவ்வாறான ஒரு சந்திப்பு தமிழக உளவுத்துறைக்கு தெரியாமல் எவ்வாறு நடக்க முடியுமென்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

வேலூர் சிறையில் பிரியங்கா - நளினி சந்திப்பு

கடந்த மாதம் 19 ஆம் திகதி மிகவும் ரகசியமான முறையில் தனி விமானத்தில் பிரியங்கா தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்திற்குள்ளிருந்து சாதாரணமான காரொன்றில் அவர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். பிரியங்காவின் வருகையை தமிழக உளவுத்துறைக்குக் கூடத் தெரிவிக்காமல் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ரகசியமாக வைத்திருந்தனர்.

சென்னையிலிருந்து ஷ்ரீபெரும்புதூர் சென்ற பிரியங்கா அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அமர்ந்து 30 நிமிடங்கள் தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்து ஷ்ரீபுரம் பொற்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இதன் பின்னரே ராஜீவ் கொலைக் குற்றவாளியான நளினியை சந்திப்பதற்காக வேலூர் சிறைக்கு பிரியங்கா ரகசியமாகச் சென்றார். பிரியங்காவின் வருகையை வேலூர் சிறை அதிகாரிகள் எதிர்பார்க்காததால் அதிர்ச்சியடைந்தனர். சிறை விதிமுறைகளை மீறிய பிரியங்கா

சிறையில் உள்ள கைதி ஒருவரை அவர் சம்மதிக்கும் பட்சத்தில் யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால், ஏராளமான கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் உள்ளன. ஆனால், பிரியங்கா அந்த விதிமுறைகளையெல்லாம் மீறியே நளினியை சந்தித்தார்.

சிறைக் கைதிகளை யார் சந்திக்க வந்தாலும் வருகைப் பதிவேட்டில் அவர்களின் பெயர் விபரம் பதிவு செய்யப்படும். ஆனால், பிரியங்கா வந்த விபரம் எதுவும் குறிப்பிடப்படாமல் `ஒரு பார்வையாளர் நளினியை பார்வையிட வந்தார்' என்று மட்டுமே பதிவு செய்யப்பட்டது.

பார்வையாளர் எத்தனை மணிக்கு வந்தார், எத்தனை மணிக்கு சென்றார் என்ற விபரங்கள் எதுவும் பதியப்படவில்லை. கைதிகளை பார்க்க வருபவர் முறைப்படி சிறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், பிரியங்கா விண்ணப்பம் எதுவும் கொடுக்கவில்லை.

கைதிகள், பாதிக்கப்பட்டவரின் இரத்த உறவினர் என்றால் அவருடன் காவலர் ஒருவர் இருக்க வேண்டுமென்ற விதியுள்ளது. ஆனால், அது கடைப்பிடிக்கப்படவில்லை. அத்துடன், வேலூர் சிறையில் செவ்வாய், மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே கைதிகளை பார்வையிட முடியும். ஆனால், பிரியங்காவுக்கு புதன்கிழமை அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், அரசியல் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோர் கைதியை சந்திப்பதாகவிருந்தால் தமிழக அரசின் அனுமதி பெற்றேயாக வேண்டும். அந்த விதியும் மீறப்பட்டது.

இந்த விதிமுறை மீறல்கள் தொடர்பில் தமிழக அரசோ பொலிஸாரோ இதுவரை எந்தவிதமான பதில்களையோ விளக்கங்களையோ வழங்க முன்வரவில்லை.

- தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.