Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடு பிரதேசத்தை உத்தியோகபூர்வமாக கைப்பற்றியதாக அறிவிக்க ஜனாதிபதி தயாராகிறார்

Featured Replies

பாதுகாப்புப் படையினர் மடு தேவாலயப் பகுதிக்குள் பிரவேசித்துள்ள போதிலும் இன்று மாலை ஜனாதிபதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை தகவல்களை வெளியிடுவதில்லை என பாதுகாப்பு அமைச்சுத் தீர்மானித்துள்ளது.

572ஆவது படையணியின் ஏழாவது தரைப்படை மற்றும் 7ஆவது சிங்கப் படையணி என்பன இணைந்து நேற்று நண்பகல் அளவில் மடு தேவாலயப் பிரதேசத்தை கைப்பற்றியதாக இராணுவ உயர் அதிகாரியொருவர் எமது இணையதளத்திற்கு தெரிவித்தார்.

தற்போது அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த எவரும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மடு தேவாலயம் கைப்பற்றப்பட்ட விடயம் தொடர்பாக ராவய பத்திரிகை இராணுவப் பேச்சாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது இன்னமும் படையினர் தேவாலயத்திலிருந்து 500 மீற்றர் அப்பால் இருப்பதாகவும், இதனால் தேவாயலப் பிரதேசத்தை கைப்பற்றியதாக அறிவிக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

மடு தேவாலயப் பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரதேசத்தில் பூரண கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த இன்னும் சில தினங்கள் போகலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மடு தேவாலயம் கைப்பற்றப்பட்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் இதுவரையில் எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை என செய்தி திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மடு தேவாலயம் கைப்பற்றப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நாட்டு மக்களுக்கு ஆற்றவிருக்கும் உரையை அமைச்சர் டலஸ் அலப்பெரும தயாரித்து வருவதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : www.lankadissent.com

மடுவிலிருந்து புலிகள் வெயேற்றம்.

வீரகேசரி இணையம் 4/25/2008 12:26:28 PM - சர்வ மத அமைப்பு, மடுப் பகுதி இராணுவ மயமாவதை நிறுத்தும்படி கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தையும், விடுதலைப்புலிகளையும் கேட்டிருந்த நிலையில் தற்போது விடுதலைப்புலிகள் மடுவிலிருந்து வெளியேறி உள்ளதாக வெளிநாட்டு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி வீரகேசரி

மடு படையினரிடமாம்!

வீரகேசரி இணையம் 4/25/2008 11:17:45 - மன்னார்,மடுப் பகுதியை படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலயம் தெரிவித்துள்ளது.

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியை புலிகள் பிடிக்கேக்க மாங்குளத்தைப் பிடிச்சு ரத்வத்தை சந்திரிக்கா கூட்டணி சாதனை செய்தது போல இது இருக்கிறது.

என்றாலும் இராணுவம் மடுவை வன்பறிப்புச் செய்திருப்பது.. எமது தேசத்தின் மீட்சிக்கான செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பதைச் சொல்லி இருக்கிறது.

இராணுவம் 5 கிலோமீற்றர்கள் தூரத்தை கடந்து வந்திருக்கிறது முன்னைய முன்னரங்க நிலையில் இருந்து..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரப் போர், புரட்சி என்பவை ஒரே தலைமுறையில் நிகழ்ந்து முடிவுக்கு வரவேண்டியவை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்சென்றால் போராட்டம் எதுவாயிருந்தாலும் அது பிசு பிசுத்துப் போய்விடும்.

அப்படி நடந்தால் அது எதிரிக்குத் தான் வெற்றி.

எனவே போராட்டங்களுக்கு காலம் எந்தவகையிலும் தோழன் அல்ல.

தமிழீழ விடுதலைப்போர் நடந்த காலஅளவு ஏறத்தாள 30 வருடங்களை தாண்டுகிறது.

தமிழீழம் என்பதே மக்களும் நிலமும் தான் இந்நிலையில் தமிழ்தரப்பு கையகப்படுத்தி வைத்திருந்த நிலங்களை கைவிட்டுச்செல்வது உசிதமல்ல. தாய் மண்ணின் நிலங்களை வெல்லத் தான் விடுதலை விரைந்து வரும்.

மடுத் தேவாலய பிரதேசத்தை விட்டு புலிகள் விலகிச்செல்லுமிடத்து சிறிலங்கா இராணுவம் தமது வேண்டுகோளுக்கு மதிப்பளிக்காமல் உடனடியாக அவ்விடத்தைக் கைப்பற்றி மாபெரும் ஊடகப்பிரச்சாரத்தை செய்து வெற்றி விழா கொண்டாடுவார்கள் என்பது சர்வ மத அமைப்புக்கும் தெரியும் புலிகளுக்கும் தெரியும். அப்படியிருக்க சர்வ மத அமைப்பு புலிகளை விலத்திச் செல்லும்படி கேட்பதென்பது சிங்கள இராணுவத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது போன்றது தான். இப்போது இடத்தை கையகப்படுத்தியபின் அவ்விடத்தில் நின்றுகொண்டு இடம்பெயர்ந்த மடுமாதா சொருபத்தை மீண்டும் நிலை நிறுத்தும்படி சிங்கள அரசு தேவாலய நிர்வாகிகளுக்கு அழுத்தங்கள் கொடுக்க அதிக வாய்ப்புகளுமுண்டு.

கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கின்ற தன்மை புலிகளிடம் காணப்படுகிறது. அதனை வெற்றியாக எடுத்துக் கொள்ளும் நிலை அரசிடம் காணப்படுகிறது. மடு தேவாலயம் கையகப்படுத்தப்பட்ட விதம் சர்வமத அமைப்பும் துணைபோயிருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

madu1ar7.jpg

மடு தேவாலயம் நோக்கி இராணுவம் நகர்ந்த திசை நீல அம்புக்குறியால் காட்டப்பட்டுள்ளது..!

முகமாலை இழப்புக்கள் இதனால் ஓரளவிற்கு மறைக்கப்படும் .

  • கருத்துக்கள உறவுகள்

S Lanka rebels 'abandon shrine'

The Sri Lanka military says troops have taken control of a church containing the country's most important Roman Catholic shrine.

The shrine, located in the northern town of Madhu, lies on a front line in the renewed civil war between the army and Tamil Tiger rebels.

Both sides in the conflict have accused each other of shelling the shrine area.

Meanwhile it has been reported that at least 165 soldiers were killed in fighting in the far north on Wednesday.

The government has said that 43 soldiers were killed in the fighting in the Jaffna peninsula and that 38 soldiers were missing.

However, military sources have now told the AFP news agency that at least 165 died and that 20 more were missing.

More than 100 rebels were killed in fighting which ended after 11 hours on Wednesday, the military said.

The rebels put their losses at 16. They said they had killed more than 100 soldiers and wounded about 500.

Tamil Tiger rebels have been fighting for an independent state for the Tamil minority in Sri Lanka for a quarter of a century.

'Rebels gone'

Photographs have shown considerable damage to the Catholic shrine located in Madhu in the Mannar region of northern Sri Lanka.

An army spokesman said there were no Tamil Tiger rebels at the site when the army reached the location.

Priests fled the complex earlier this month, removing a statue of the Virgin Mary, known as Our Lady of Madhu, deeper into Tamil Tiger controlled territory. It was the first time the statue had been moved for 400 years.

Sri Lanka's military has been trying to crush the Tigers in the territory they hold in the north since completing an operation to drive them from the east last July, he says.

Senior military and government figures predicted swift victory.

But, our correspondent says, the rebels' forces are more concentrated in the north than they were in the east, and some in Sri Lanka are speculating that resistance is stiffer than had been expected.

Journalists are generally denied access to the area where fighting is going on, making it extremely difficult to independently verify the casualty claims both sides make.

At least 70,000 people have died since the civil war began in 1983.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7366400.stm

-------------

ஏலவே மடுவை விட்டுப் போராளிகள் பத்திரமாக வெளியேறி விட்டனர் என்பதை இராணுவமும்.. சர்வதேச ஊடகங்களும் தெரிவித்துள்ளன.

போராளிகள் பத்திரமா வெளியேறிக் கொண்டதை வரவேற்க வேண்டும். காரணம் மடுவை நோக்கி மடு மாதா போக வேண்டின் இராணுவம் அற்ற வலயமாக மடு உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலை உள்ள வேளையில்... முக்கியத்துவம் அற்ற ஒரு களமுனையில் போராளிகளை போரிடச் செய்வது அவசியமற்ற ஒன்றாகும்..!

இதேவேளை கடந்த புதன் சண்டையில் கொல்லப்பட்ட படைவீரர்களின் எண்ணிக்கை 165 என்றும் இன்னும் 20 பேரைக் காணவில்லை என்றும் படைத்தரப்பு ஏ எப் பிக்குக் கூறியுள்ளது..!

மடு இராணுவத்துக்கு மன பல உறுதியை அதிகரிக்க பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் இலக்காகி இருக்கிறதே தவிர.. அதன் இராணுவ முக்கியத்துவம் என்பது அத்துணை பெரிதாக இல்லை என்பதால் தான் போராளிகள் சண்டை செய்வதைத் தவிர்த்துள்ளனர்..! :lol:

Edited by nedukkalapoovan

நேற்றைய வெற்றியின் தாக்கத்தில் இது சில பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

ஆனாலும் விடுதலை புலிகள் கவனமான இராணுவ மதிப்பீடுகள் இன்றி இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

மடு தொடர்பான அரசின் அறிவிப்பு தமிழ் ஊடகங்களில் முக்கியம் பெறாமைக்கு காரணம் என்ன..???! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

மடு தொடர்பான அரசின் அறிவிப்பு தமிழ் ஊடகங்களில் முக்கியம் பெறாமைக்கு காரணம் என்ன..???! :lol::)

இன்னும் உறுதிப்படுத்தமுடியாததாக இருக்கலாம்

இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்?????

  • கருத்துக்கள உறவுகள்

Madhu444.jpg

pic: SLA

மடுவைக் கடந்து பாலம்பிட்டி நோக்கி இராணுவம் நகர்வதாகவும் அங்கு கடும் சண்டைகள் நடந்து கொண்டிருப்பதாகவும்.. அதேவேளை இரணைமடுப்பகுதியில் புலிகளின் தளம் மீது விமானப்படை தாக்குதல் நடத்தியதாகவும் இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது..!

இவை பற்றி தமிழ் ஊடகங்கள் எதுவும் ஒன்றும் சொல்லேல்லையே..???! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மடு தேவாயலப் பிரதேசம் மீட்கப்பட்டதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளார்

[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2008, 06:59.58 AM GMT +05:30 ]

மடு தேவாலயப் பிரதேசம் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு அறிவிக்க தயாராகி வருவதாகத் தெரியவருகிறது.

பாதுகாப்புப் படையினர் மடு தேவாலயப் பகுதிக்குள் பிரவேசித்துள்ள போதிலும் இன்று மாலை ஜனாதிபதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை தகவல்களை வெளியிடுவதில்லை என பாதுகாப்பு அமைச்சுத் தீர்மானித்துள்ளது.572ஆவது படையணியின் ஏழாவது தரைப்படை மற்றும் 7ஆவது சிங்கப் படையணி என்பன இணைந்து நேற்று நண்பகல் அளவில் மடு தேவாலயப் பிரதேசத்தை கைப்பற்றியதாக இராணுவ உயர் அதிகாரியொருவர் எமது இணையதளத்திற்கு தெரிவித்தார்.

தற்போது அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த எவரும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் மடு தேவாலயம் கைப்பற்றப்பட்ட விடயம் தொடர்பாக ராவய பத்திரிகை இராணுவப் பேச்சாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது இன்னமும் படையினர் தேவாலயத்திலிருந்து 500 மீற்றர் அப்பால் இருப்பதாகவும் இதனால் தேவாயலப் பிரதேசத்தை கைப்பற்றியதாக அறிவிக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

மடு தேவாலயப் பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரதேசத்தில் பூரண கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த இன்னும் சில தினங்கள் போகலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.மடு தேவாலயம் கைப்பற்றப்பட்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் இதுவரையில் எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை என செய்தி திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மடு தேவாலயம் கைப்பற்றப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நாட்டு மக்களுக்கு ஆற்றவிருக்கும் உரையை அமைச்சர் டலஸ் அலப்பெரும தயாரித்து வருவதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilwin.com/view.php?2a46QVb4b...dg2hr2cc0lj0g2e

நேற்று வாங்கினதுக்கு ஆறுதல் பரிசாக தென்னிலங்கைக்கு கொடுக்கப்போறார்...! உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்துக்கு எப்படி இருக்கும்..? பிரேதங்களையே இன்னும் எண்ணி முடியல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இழுத்தடித்தால் தான் கஷ்டப்பட்டு பிடித்தமாதிரி காட்டலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

மடு தேவாலய வளாகத்தினுள் சிறீலங்காப் படையினர்

maduentryarmy1kh3.jpg

maduentryarmy2sd6.jpg

மடுத் தேவாயத்தில் சிறீலங்காப் படையினர் நுழைந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறியதை அடுத்தே சிறீலங்காப் படையினர் இப்பிரசேத்தினுள் நுழைந்துள்ளனர்.

இந்த வெற்றிச் செய்தியை சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே முதலில் அறிவிக்க வேண்டும் என இருந்த நிலையில் ஊகங்களே அல்லது படைத்துறை் பேச்சாளர்களோ இச்செய்தியை முதலில் அறிவிக்க விடவில்லை.

மடு மாதா திருச்சுருவம் இடம்பெயர்ந்து புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் சென்றமை, அண்மைக் காலமாக மன்னார் பகுதியில் மற்றும் வடபோர் முனைகளில் படையினருக்கு ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவுகள் காரணமாக மடு தேவாலயத்தினுள் பிரவேசித்ததை வெற்றியாகக் கருதமுடியாது என ஜனாதிபதியின் ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால் மகிந்த ராஜபக்சவின் வெற்றி செய்தி அறிவிப்பு இடம்பெறாமல் போகும் சந்தர்ப்பங்கள் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pathivu.com

மடுமாதாவும் இலை

புலிகளும் இல்லை

சனங்கள் கூட இல்லை

பிறகேன் உந்த ஆமிக்காரங்கள் அங்க திரியுறாங்கள்?... யாழில கொஞ்ச படையினர் முடங்கி கிடக்கிறமாதிரி இங்கையும் ஒரு கொஞ்ச படியினர் முடங்க போயினம் போலகிடக்கு...

திரும்பிபோனாலும் அவமானம்.. சும்மா அங்கேயே இருந்தாலும் வீன் விரையம்.. முன்னேறலாமெண்டாலும் சுலபமில்லை...

உதுக்குதான் சொல்லுறது மோட்டு சிங்களவங்கள் எண்டு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.