Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முறிகண்டியில் சிறிலங்காப் படை நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் படுகொலை

Featured Replies

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டி அக்கராயன் வீதியில் சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உட்பட 17 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி முறுகண்டி அக்கராயன் வீதியில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இரணைமடு மக்கள் முழங்காவிலுக்குச் சென்றுகொண்டிருக்கும் போது சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் இக்கிளைமோர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் குழந்தைகள் உட்பட 17 பேர் பலியாகியுள்ளனர். சம்பவ இடத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

www.pathivu.com

இவ் அராஜகத்திற்கு முடிவே இல்லையா???????????? இப் பெண்களும் குழந்தைகளும் தமிழர்களாகப் பிறந்ததுதான் இவர்கள் செய்த

குற்றமா? இவர்களின் வாழ்தலுக்கான உரிமையினை பறிக்க சிங்களவனே நீ யார்? இவ் ஏதுமறியா அப்பாவிப் பொதுமக்களின்

வன் உயிர் பறிப்பிற்கு நீ பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.

இக் கொடிய தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். இக் கொடிய வன் தாக்குதலினால் தம் இனிய உறவுகளைப்

பிரிந்து பரிதவிக்கும் மக்களுக்கு எங்கள் இதயபூர்வமான ஆறுதல்களைத் தெரிவிப்பதுடன் உங்கள் துக்கத்தில் நாங்களும்

பங்கெடுக்கின்றோம்.

Edited by thamizhanpan

  • கருத்துக்கள உறவுகள்

:blink: இன்னும் எவ்வளவு காலத்துக்கு இது நடந்துகொண்டிருக்கப்போகிறது ?

எதிரியின் தாக்குதலை தடுக்க முடியாவிட்டால் , எதிரி தாக்குதல் நடத்துவதற்குத் தயங்குமளவிற்காவது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர் மேல் தாக்குதல் நடத்தினால் பதிலடி எப்படியிருக்கும் என்று அவன் யோசிக்க வேண்டும்.

ஈவிரக்கமற்ற பயங்கரவாத மிலேச்ச அரக்கர் படை தமது ஆத்திரத்தைத் அப்பாவி மக்களைக் கொன்று தீர்த்துக் கொண்டுள்ளது.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியை தாங்க முடியாமல் அப்பாவி பொதுமக்களை பழிவாங்கும் கோழைகள். பதிலடி சிங்களம் நினைத்து பார்க்காத அளவுக்கு கொடுக்க வேண்டும்.

(இணணைப்பு 02)வன்னியில் மற்றுமொரு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் குறைந்தது 17 பொதுமக்கள் பலி கிளிநொச்சி பாரதிபுரத்தில் இன்று பிற்பகல் சம்பவம்

வீரகேசரி இணையம் - முறிகண்டி - அக்கராயன் வீதி 4 ஆம் கட்டை பகுதியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் குறைந்தது 17 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 3 பேர் காயமடைந்ததாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 20 பேர் பயணம் செய்த வாகனம் ஒன்றின் மீதே இந்த கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மாங்குளம் பகுதியில் நேற்றிரவு அம்புலன்ஸ் வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட ஒரு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் சம்பவத்தில் அரச அதிகாரி ஒருவர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டதுடன், 4 பேர் காயமடைந்தனர் என்பது தெரிந்ததே.

சிங்கள படையின் கோர வெரியாட்டத்தின் புகைபடங்களை பார்க்க.........................

http://isoorya.blogspot.com/2008/05/2-16_23.html

பால்ராஜ் அண்ணையின் வீரவனக்க கூட்டங்களில் கலந்து விட்டு வரும் தளபதிகளை குறிவைக்க காத்து இருந்து வந்த முதல் வாகனமே தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டது

அவர்களை பொறுத்த மட்டில் வன்னியில் ஒரு மாடு தங்கள் தாக்குதலில் இறந்தாலே அது பெரிய வெற்றியாக நினைப்பார்கள்

இனி உடும்பு கறி ஆனந்த சங்கரி புலிகள் மக்களை பாதுகாக தெரியாவிட்டா பதவியை தன்னிடம் தந்து விட்டு ஆயுதத்தையும் உப்படைக்க்க சொல்லி ஊளைய்டிட போகிறது..

இதை எல்லாம் பார்த்து கனடாவில் இருக்கும் ஆனந்த சங்கரியின் பிள்ளை டமில் டேசியம் டமில் டேசியம் என்று உரக்க ஊலையிட போகிரது.....................

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை. படங்களை பார்க்க சகிக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் மற்றுமொரு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் 16 பொதுமக்கள் பலி

வீரகேசரி இணையம் - கிளிநொச்சி முறிகண்டி அக்கராயன் வீதி 4 ஆம் கட்டைபகுதியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 3 பேர் காயமடைந்ததாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 20 பேர் பயணம் செய்த வாகனம் ஒன்றின் மீதே இந்த கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மாங்குளம் பகுதியில் நேற்றிரவு அம்புலன்ஸ் வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட ஒரு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் சம்பவத்தில் அரச அதிகாரி ஒருவர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டதுடன், 4 பேர் காயமடைந்தனர் என்பது தெரிந்ததே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

23_05_08_dpu_01_68721_445.jpg

23_05_08_dpu_04_68733_218.jpg

23_05_08_dpu_05_68737_218.jpg

23_05_08_dpu_03_68729_218.jpg

23_05_08_dpu_02.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 16 பொது மக்கள் பலி

[ வெள்ளிக்கிழமை, 23 மே 2008, 10:29.33 AM GMT +05:30 ]

கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற இலங்கையின் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலில் 16 பொதுமக்கள் பலியாகினர்

இவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளன.

படுகொலை செய்யப்பட்டோரில் 4 குழந்தைகள், 3 சிறுவர்கள், 3 ஆண்கள், 6 பெண்கள் அடங்குவர். ஒரு குடும்பம் முற்றாக அனைவரையும் இழந்துள்ளது.

கிளிநொச்சி இரணைமடுச் சந்தியைச் சேர்ந்த மக்கள் முழங்காவிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த போது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இக்கிளைமோர்த் தாக்குதலை நடத்தினர்.

ஹையஸ் ஊர்தியில் மக்கள் சென்று திரும்பிக்கொண்டிருந்த போது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முறிகண்டி கோவிலில் இருந்து அக்கராயன் வீதியில் 2 கிலோமீற்றர் தொலைவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே 15 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காப் பயங்கரவாத அரசு திட்டமிட்டு அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்யும் வகையில் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.

படுகொலை செய்யப்பட்டோர் விபரம்:

ஜந்து பிள்ளைகளின் தாயாரான பன்னீர்ச்செல்வம் அழகுராணி (வயது 45)

சாமிக்கண்டு கறுப்பையா

கறுப்பையா உங்கா

வாகன ஓட்டுநரான கணேஸ் தனறாஜா (வயது 34)

செல்வராசா கமலாதேவி (வயது 34)

சுப்பிரமணியம் தனலட்சுமி (வயது 54)

அழகன் சுப்பிரமணியம் (வயது 40)

சுப்பிரமணியம் சரஸ்வதி (வயது 40)

பெரியசாமி விஜி

விஜி லக்சிகா (வயது 18)

விஜி நந்தா

விஜி தனு (வயது 09)

விஜி விதுசன் (வயது 07)

றாசேந்திரம் கலாவல்லி (வயது 29)

சந்திரமோகன் கார்த்திகா (வயது10)

சந்திரசேகரம் கீர்த்திகா

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இதேவேளை மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் மன்னார் மீன்பிடித்திணைக்கள அதிகாரி ஜூலியன் உட்பட்ட இருவர் பலியாகினர்.

23_01.jpg

23_02.jpg

23_03.jpg

23_04.jpg

23_05.jpg

23_06.jpg

23_07.jpg

23_08.jpg

23_001.jpg

23_002.jpg

Tamilwin.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

23_003.jpg

23_004.jpg

23_09.jpg

23_010.jpg

Tamilwin.com

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவிலிருந்து இலங்கை வெளியேற்றப்பட்டதை தமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதாக எடுத்துக் கொண்டார்களா ?

இனிமேல் தாம் நினைத்தபடி மனித உரிமையை மீறலாம் என்பதுபோல் உள்ளது அரசாங்கத்தின் நடவடிக்கைகள்.

இறந்தவர்கள் குடும்பத்திற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

candle.jpg

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இது நடந்துகொண்டிருக்கப்போகிறது ?

இறந்தவர்கள் குடும்பத்திற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

எமது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்

ஆடி அடங்குவதுதான் வாழ்க்கை. ஆடட்டும் ஆடும் மட்டும்

உயிர் பிரிந்த உறவுகளின் குடும்பங்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பிஞ்சு மொழியும் எதிரிக்கு புலியானதோ ?

இன்னும் எத்தனை உறவுகளை இழக்க வேண்டும்,

எம் தேசம் மலர்வதற்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.

பாதிக்கப்பட்ட அணைவருக்கும் எம் இதய அஞ்சலிகள்,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
:blink: பாதிகப்பட்டவர்களுக்கு எனது இதய அஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.