Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடருந்தில் குண்டுவெடிப்பு: 9 பேர் பலி- 73 பேர் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் நண்பர் ஒருவர் தெரிவித்த தகவல் இது. கொட்டாஞ்சேனை பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மூன்று பஸ்கள் இயங்குகின்றன 102,112, மற்றும் 168 ஆனால் காவல்துறையினரோ 168பஸ்சை மட்டும் பரிசோதிப்பார்களாம், ஏனென்றால் அந்த பஸ்சில் அதிகம் சிங்களமக்கள் பிரயாணம் செய்வார்கள் 102ம் 112ம் தமிழ் மக்கள் அதிகம் பிரயாணம் செய்பவை. ஆகவே 102லோ 112இலோ குண்டு வெடித்தால் காவல்துறைக்கு கவலையில்லை.

  • Replies 61
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஆய்வு நெடுக் உங்க ஆய்வு நாட்டுக்கு தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கோ உண்மை வருகுது.. பிபிசிக்கால...

Warning

Correspondents say that the number of attacks in the south has increased as the fighting has intensified in the north.

The Tigers have fought for a generation for an independent state for the Tamil minority in the island's north and east.

About 70,000 people have been killed since the civil war began in 1983.

Violence in the island nation intensified after the government formally pulled out of a ceasefire agreement in January.

Before the latest outbreak of hostilities, the Tamil Tigers had warned that not only the Tamils in the north, but the majority-Sinhalese in the south would also feel the impact of the war.

The warning has been followed up by roadside bombs, suicide blasts and explosions targeting public transport in the south, although civilians inside rebel-held territory in the north have also become victims of mines allegedly planted by the army.

Analysts say that if the violence continues, the government may be forced to redeploy some troops from the northern battlefront to the south to step up security.

இது ஏன் இப்ப இரண்டு நாளைக்கு முன்னர் வரல்ல. பிபிசி தமிழில வந்ததை ஏன் பிபிசி சர்வதேசம் மறைச்சது..????!

அடியைப் போல அண்ணன் தம்பி உதவமாட்டான். அப்படி என்ற நிலைக்கு மனிசரை கொண்டு வந்திட்டுது உலகம்..!

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7420231.stm

Edited by nedukkalapoovan

http://www.tamilnet.com/pic.html?path=/img...53&caption=

இதில் உள்ள படத்தைப் பார்த்தால், சிங்கள ஆமிக்காரனின் பூட்ஸைப் போலுள்ளது!! தாக்கப்பட்டது இராணுவ இலக்கா?

எதுவாக இருப்பினும் நேற்றஒய தினம் சிங்கள அரசினால் கொல்லப்பட்ட 17 எம் உறவுகளுக்கு அஞ்சலிகள்! "முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்"! இன்னும் பாக்கி உள்ளது!!

நாட்டுக்காக உரிர் தியாகம் செய்யும் சிங்களவர்களுக்கு வாழ்த்துக்கள்! தொடரட்டும் தியாகங்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்

கொழு‌ம்பு ர‌யி‌லி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 9 பே‌ர் ப‌லி- 70 பே‌ர் படுகாய‌ம்!

திங்கள், 26 மே 2008( 21:17 IST )

கொழு‌ம்பு‌ ர‌யி‌லி‌ல் கு‌ண்டு வெடி‌த்த‌தி‌ல் 9 பே‌ர் ப‌லியானதுட‌ன் 70 பே‌ர் படுகாயமடை‌ந்து உ‌ள்ளதாக முத‌ல் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

‌சி‌றில‌ங்க தலைநக‌ர் கொழு‌ம்‌பி‌ல் இரு‌ந்த பாண‌ந்துறை நோ‌க்‌கி‌ச் செ‌ன்று கொ‌ண்‌டிரு‌ந்த ர‌யி‌‌லி‌ல் இ‌ன்று மாலை நட‌ந்த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 9 பே‌ர் ப‌லியானதுட‌ன் 70 பே‌ர் படுகாயமடை‌ந்து உ‌ள்ளதாக த‌மி‌ழ்நெ‌ட்.கா‌ம் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

தெகிவளை ர‌யி‌ல் நிலையத்திற்கு அரு‌கி‌ல் இ‌ன்று மாலை 4.45 ம‌ணி‌க்கு இக்குண்டுவெடிப்பு நட‌த்து‌ள்ளதாகவு‌ம், நெரிசல் மிகு‌ந்த ர‌யி‌ல் பெட்டி ஒ‌ன்‌றி‌ல் கு‌ண்டு வை‌க்க‌ப்ப‌ட்டு இரு‌ந்‌திரு‌க்கலா‌ம் எ‌ன்று‌ம் ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடை‌ந்து‌‌ள்ளவ‌ர்க‌ள

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து பாணந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்தில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 73 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

நன்றி நெடுக்ஸ்,

அவசரமா துவைச்சு காயப்போட்டதில துணியில இருந்த ஊத்தைகளை கழுவ மறந்திட்டீங்கள் போல!

1) மக்களின் கோபதாபம், பழிக்கு பழி என்ற அடிப்படையில இருந்து இந்த ஆய்வை மேற்கொள்ளத் தலைப்பட்டதால சில அடிப்படைகள் மறைக்கப்பட்டிருக்கு.

இலங்கையில் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணுவதில இரண்டு காரணிகள் முக்கிய பங்கை வகிக்கிறது அனைவருக்கும் தெரியும். ஒன்று இராணுவ பலம், மற்றது மிக முக்கியமான அரசியல் நகர்வு. இந்த இரண்டு கோணத்திலையும் ஆராயுறதுதான் பயன் தரும். உணர்வு ரீதியாக இந்த சம்பவத்தை அணுக வெளிக்கிட்டா எல்லை இல்லாத அழிவுதான் மிஞ்சும்.

சாதாரண எண்ணை விலை ஏற்றத்திற்கே மகிந்த அரசை சிங்கள மக்கள் வெறுக்கேக்கை, தமிழ் மக்களுக்கு மரணத்தையும், சித்திரவதைகளையும் மட்டுமே இருவரை பெற்றுத்தந்த இந்த போரை வழிநடத்திற பிரபாகரனையும் அவருடைய புலிகள் இயக்கத்தையும் மக்கள் எப்பவோ வெறுத்திருக்க வேணும். அப்படி இல்லாமல் கற்பையும், உறவுகளையும் தொலைத்தும் கூட எல்லாத்திற்கும் ஒரு நல்ல தீர்வு வரும் என்று சனம் எதிர்பாத்திருக்குது.

இங்கை பாதிக்கப்படுகிற சனம் எண்டு நான் குறிப்பிடுறது இலங்கை தீவில எல்லா இடத்திலும் வாழுற தமிழ் சனத்தை. கொழும்பு யாழ்ப்பாணம் வன்னி என்று குறைவில்லாமல் எல்லாசனத்திற்குமே உள்ள ஒற்றுமை என்னவென்றால் மனிதஉரிமை மறுக்கப்பட்டு உயிராபத்தான வாழ்க்கை. இதுக்குள்ள பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகிப்பது என்பது புலம்பெயர்ந்து பாதுகாப்பான உறுதியான வாழ்கையை வாழ்ந்து கொண்டு ஒய்வு நேரத்தில் தாங்கள் எழுதும் கருத்துகளை நியாப்படுத்தவே.

எனவே புலிகள் இதைச் செய்திருந்தா அவர்கள் ஒரு போதும்.. அணு அளவும் இதற்காக சர்வதேசம் தண்டனை வழங்கிடும் என்று பயப்பிட்டு.. தொடை நடுங்கிக் கொண்டு இருக்கத் தேவையில்லை..! ஏனெனில் அவர்கள் செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன பழியும் தண்டனையும் அவர்கள் மீதுதான் என்பது நிச்சயப்பட்ட விசயம்..!

சரி இப்ப முதலாவது கேள்விக்கு வருவம்,

"வல்லரசுகள் எல்லாம் எதிர்க்குது", "பயங்கரவாதி என்று முத்திரை குத்தியாச்சு" அப்ப இப்ப தமிழ் மக்கள் சார்பில என்ன எதிர்பார்பில இந்த யுத்தம் புலிகளால முன்னெடுக்கப்படுகுது?

2) குண்டு வெடிப்பு விளைவுகள் குறித்து கதைக்கிறத்திற்கு இரண்டு உண்மையான உதாரணங்களை சொல்லுறன்:

அ) குண்டு வெடிச்ச உடன் சிங்கள சக ஊழியர் ஒருவர் இப்படி கூறினார்,

"ஏற்கனவே ஏதிர்பார்ததுதானே, ஆனா வைச்ச 4 இல 1 தானே வெடிச்சது, பஸ்சில வைச்ச மிச்ச 3 ஐயும் சனம் விழிப்பா இருந்து கண்டுபிடிச்சிட்டுது. ரயிலுக்கு இன்னும் மக்கள் விழிப்புக்குழு அமைக்க இல்லை. இன்னும் நாங்கள் விழிப்பா இருக்க வேணும். அங்க நல்ல அடி விழுகிறதாலை தான் இங்காலை பொது சனத்தை தாக்கிறாங்கள். இந்த முறை விடாம ஓரேஅடியா அடிச்சு எல்லாத்தையும் முடிச்சிட வேணும்"

ஆ) சம்பவம் பற்றி கேள்விப்பட்ட வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாட்டு பிரஜையான உள்ளுர் நிறுவனமொன்றின் இயக்குனர் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும்,

தனது ஊழியர்களை தொலைபேசியில் அழைத்து பாதுகாப்பாக இருக்கும் படியும், மக்கள் செறிவாக கூடும் இடங்களையும், போக்குவரத்தையும் தவிர்க்கும்படியும், வாடகை கார்களில் வீடு செல்லும்படியும் அறிவுறுத்தினார். அத்துடன் தங்கள் நாட்டிலும் பயங்கரவாதிகள் இவ்வாறே தாக்குவதாவும், எங்கும் இதே நிலமைதான் என்றும் கூறினார்.

உண்மையில் இந்தத்தாக்குதல் சிங்கள மக்களை பலவீனப்படுத்துவதற்கு பதில் போருக்கு ஆதரவாக பொருளாதார நெருக்கடிகளை மறந்து ஒன்றிணைய வைக்கிறது என்பதே யதார்த்தம்.

மேலும் வெளிநாட்டினர் பார்வையில் இத்தாக்குதலை தங்கள் உள்ளுர் பயங்கரவாத தாக்குதல்களோடு ஒப்பிட்டு ஒரு பயங்கர வாதத்தாக்குதாலாகவே நோக்கப்படுகின்றது. இதன் பின்னனியில் 17 பேர் கொல்லப்பட்ட கொடுமையை யார் அவர்களுக்கு சொல்வது? பிறகு எப்படி அவர்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்?

இலாப நட்டக் கணக்குப்படி.. பரீட்சை மீதி விபரங்கள்.. சொல்லும் தரவுப்படி.. சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசுக்கே அதிக நட்டம்..!

யதார்த்தத்தை மூடிமறைக்காது ஆராய்ந்தால்... ?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ கிளைமோரில் கொல்லப்படும் அப்பாவி தமிழ்மக்களுக்கு என்ன தான் முடிவு? . தொடர்ந்து இராணுவம் அப்பாவி மக்களை கொல்லப்போகிறது. தெற்கிலும் சிங்கள மக்களுக்கு அதே அவலம் ஏற்படும் போது தான் உண்மையான வலியை உணர்வார்கள்.

"ஏற்கனவே ஏதிர்பார்ததுதானே, ஆனா வைச்ச 4 இல 1 தானே வெடிச்சது, பஸ்சில வைச்ச மிச்ச 3 ஐயும் சனம் விழிப்பா இருந்து கண்டுபிடிச்சிட்டுது. ரயிலுக்கு இன்னும் மக்கள் விழிப்புக்குழு அமைக்க இல்லை. இன்னும் நாங்கள் விழிப்பா இருக்க வேணும். அங்க நல்ல அடி விழுகிறதாலை தான் இங்காலை பொது சனத்தை தாக்கிறாங்கள். இந்த முறை விடாம ஓரேஅடியா அடிச்சு எல்லாத்தையும் முடிச்சிட வேணும்"

ஒவ்வொரு இனவாதியின் மனதிலும் தமிழரை முடிக்க வேண்ண்டும் என்ற மனப்பாங்கை தான் இக்கருத்து காட்டுகிறது

...தெற்கிலும் சிங்கள மக்களுக்கு அதே அவலம் ஏற்படும் போது தான் உண்மையான வலியை உணர்வார்கள்...

மத்திய வங்கி குண்டுவெடிப்பிலிருந்து இந்த அவலம் அவர்களுக்கு ஏற்பட்டே வந்திருக்கிறது!

நீங்கள் எதிர்பார்த்த அந்த மாற்றம் நிகழ்ந்ததா?

மாறாக, எதிர்மறையான விளைவுகளே ஏற்பட்டன!

உதாரணமாக தாங்கள் செய்த பயங்கரவாதங்களை உலக அரங்கில் நியாப்படுத்த அவற்றை உபயோகித்துக் கொண்டார்கள். சிங்கள பொது மக்களும் இனவாத அரசிற்கு பெரும்பான்மை ஆதரவை வழங்கினார்கள்.

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பயங்கரவாதத்தை மேற்கொள்வது கால நீட்சிக்கே வழிகோலும். (இங்கே பயங்கரவாதம் என்பது அப்பாவிகள் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களை குறிக்கிறது, இராணுவ நலன் சார்ந்த தாக்குதல்களையோ, அரசியல் படுகொலைகளையோ குறிப்பிடவில்லை)

பணவீக்கம் வேலைவாய்ப்பின்மை காரணமாக யுத்தத்திற்கு சுலபமான ஆட்சேர்ப்பு, தாக்குதல் அச்சம் காரணமாக யுத்தத்திற்கு கீழ்மட்ட மக்களிடம் பலமான ஆதரவு என்பவற்றை பெற்றுக் கொள்கிற அதே வேளை, யுத்தத்திற்கான பணத்தினை வல்லரசுகளுக்கிடையிலான போட்டியை தந்திரமாக பாவித்து உதவிகளை மிகச்சுலபமா அனைத்து தரப்பிடமிருந்தும் முன்னர் எதிர்பாராத அளவில் பெற்றுவருகிறது. (சீனா, இந்தியா, அமெரிக்கா, .....)

அண்மைக் காலமாக வெளிவரும் அனைத்து அரசியல் ஆய்வுகளிலும் அரசாங்கத்தின் வீழ்ச்சி பற்றி பலமான ஆருடங்களை கூறி கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கின்றன எங்கள் தமிழ் ஊடகங்கள்!.

ஆனால், புதிய இலங்கை அரசு பழைய சூத்திரங்களை தவிடு பொடியாக்கி வெற்றிகரமாக தொடந்து நடைபோட்டு வருகின்றது!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

அந்த செய்தியை அஸ்திரேலிய பத்திரிகை அனைத்துக்கும் மின்னஞ்சல் செய்தேன் படங்களுடன் ஒன்றிலும் வரவில்லை உலகத்தை நம்பி பயனில்லை அடிகிற அடிதான் இவங்களை எல்லாம் பேசவைக்கும்

தொடர்ந்து அனுப்புங்கள். அவர்கள் பிரசுரிக்கிறார்களோ இல்லையோ நீங்கள் அனுப்பிக் கொண்டிருங்கள். முன்பு பி.பி.சி ஆங்கில சேவைக்கு இவ்வாறு நான் அனுப்புவதுண்டு. அல்லைப்பிட்டி படுகொலைச் சம்பவம் பற்றி அனுப்பி இருந்தேன். அதற்கு பி.பி.சி எனக்கு விளக்கமாக பதில் அனுப்பி இருந்தார்கள்.சுனாமியின் போது அமைக்கப்பட்ட இடைக்கால நிற்வாகம் பற்றி வந்த பிழையான செய்தி தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸுக்கும் முன்பு அனுப்பி அவர்கள் பதில் அளிக்க நானும் பதில் அளிக்க கருத்துப்பரிமாற்றங்களை மின்னஞ்சலில் செய்தேன். ரொய்ட்டர்ஸ்க்கும் அனுப்புங்கள்.

கந்தப்பு

எந்த பதிலும் இன்னும் வரவில்லை 7 பத்திரிகைகளுக்கு அனுப்பி இருந்தேன்

சானக்கியன்

பிரபாகரன் மேல வெறுப்பு வந்திருக்க வேண்டும் என சொல்லி இருந்தீர்கள் பிரபாகரன் இல்லாவிட்டால் தமிழ் சனம் எப்படி இருந்திருக்கும் என சற்று உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு எழுதமுடியுமா

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய வங்கி குண்டுவெடிப்பிலிருந்து இந்த அவலம் அவர்களுக்கு ஏற்பட்டே வந்திருக்கிறது!

நீங்கள் எதிர்பார்த்த அந்த மாற்றம் நிகழ்ந்ததா?

மாறாக, எதிர்மறையான விளைவுகளே ஏற்பட்டன!

உதாரணமாக தாங்கள் செய்த பயங்கரவாதங்களை உலக அரங்கில் நியாப்படுத்த அவற்றை உபயோகித்துக் கொண்டார்கள். சிங்கள பொது மக்களும் இனவாத அரசிற்கு பெரும்பான்மை ஆதரவை வழங்கினார்கள்.

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பயங்கரவாதத்தை மேற்கொள்வது கால நீட்சிக்கே வழிகோலும். (இங்கே பயங்கரவாதம் என்பது அப்பாவிகள் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களை குறிக்கிறது, இராணுவ நலன் சார்ந்த தாக்குதல்களையோ, அரசியல் படுகொலைகளையோ குறிப்பிடவில்லை)

பணவீக்கம் வேலைவாய்ப்பின்மை காரணமாக யுத்தத்திற்கு சுலபமான ஆட்சேர்ப்பு, தாக்குதல் அச்சம் காரணமாக யுத்தத்திற்கு கீழ்மட்ட மக்களிடம் பலமான ஆதரவு என்பவற்றை பெற்றுக் கொள்கிற அதே வேளை, யுத்தத்திற்கான பணத்தினை வல்லரசுகளுக்கிடையிலான போட்டியை தந்திரமாக பாவித்து உதவிகளை மிகச்சுலபமா அனைத்து தரப்பிடமிருந்தும் முன்னர் எதிர்பாராத அளவில் பெற்றுவருகிறது. (சீனா, இந்தியா, அமெரிக்கா, .....)

அண்மைக் காலமாக வெளிவரும் அனைத்து அரசியல் ஆய்வுகளிலும் அரசாங்கத்தின் வீழ்ச்சி பற்றி பலமான ஆருடங்களை கூறி கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கின்றன எங்கள் தமிழ் ஊடகங்கள்!.

ஆனால், புதிய இலங்கை அரசு பழைய சூத்திரங்களை தவிடு பொடியாக்கி வெற்றிகரமாக தொடந்து நடைபோட்டு வருகின்றது!

கொழும்பில் நடக்கும் குண்டு வெடிப்புக்கள்.. பணக்கார.. மற்றும் நடுத்தர வர்க்கச் சிங்களவர்களை போர் பற்றி சிந்திக்க வைத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

நீங்கள் குறிப்பிடுவது போல அன்றி.. ஏழைச் சிங்கள இளைஞர்கள் சம்பளத்துக்காக படையில்.. சேர இப்பவும் எப்பவும் தயாராகவே இருக்கின்றனர். ஆனால் ஏன் அவர்கள் என்றுமில்லாத அளவுக்கு படையை விட்டு ஓடினர்.. வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைத் தேடி வருகின்றனர் என்ற உண்மையை.. நீங்கள் மறைத்து விட்டீர்கள்.

தீவிர யுத்தங்களின் பின் படையை விட்டு ஓடியோர் எண்ணிக்கை முன்பு ஒரு காலத்தில் இருந்த சிறீங்கா படையின் மொத்த எண்ணிக்கைக்கு சமனாக இருக்கத்தக்கதாக இருந்தது என்பதை மறந்துவிட்டீர்கள்.

குண்டு வெடிப்புக்கள் தான்.. சிங்கள மக்களுக்கு சிறீலங்காவில் யுத்தம் ஒன்று நடக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. அதன் பின்னணியில் சமாதானக் குரல்கள் எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டு தான்.. சிங்களவர்கள் படையில் சேர்கின்றனர்.. என்ற தோற்றப்பாடு அவசியம் அன்று. சிங்களவர்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள இனவாதமே அவர்களை தமிழர்களுக்கு எதிராக இயங்க வைக்கிறது என்பதே யதார்த்தம். அதை பல தடவைகள் அவர்கள் இனக்கலவரங்கள் மூலம் செயலிலும் காட்டியுள்ளனர். இருந்தும்.. நம்மில் சிலர் அதை எல்லாம் மறந்துவிட்டு.. இன்று குண்டு வெடிப்புக்களில் சிங்களவர்கள் கொல்லப்படுவதற்கு.. பரிதாபப்படுகின்றனர்.

வன்னியில் வெடித்த குண்டுகளுக்கு சிங்களவன் புலிகள் தான் காரணமென்ற இருக்கும் என்று அறிக்கை விட்டவர்களும் தமிழர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சர்வதேச இராணுவ தரவுகளோடு.. சிங்கள அரசு.. ஆழ ஊடுருவும் அணியை அமெரிக்க படை உதவியிடன் அமைத்துக் கொண்டதை உறுதி செய்திருக்கின்றன. இவற்றை இவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரா..??! சொந்த மக்களின் உயிருக்கு இரக்கமின்றி உலைவைப்பவனை தங்களின் சுயநலனுக்காக.. அவனின் குற்றங்களை மறைத்துப் பாதுகாக்கும் இந்த துரோகிகள்.. சிங்களவனிற்கு மனிதாபிமானம் தேடுகின்றனர். ஒரு சிங்களவன் எழுதுகிறான்.. வன்னியில் இறந்தது.. புலிக்கு போன பெண்களும் சிறுமிகளும் குழந்தைகளும் என்று. ஏன் நாம் சொல்ல முடியாது... தெகிவளையில் இறந்தது சிங்களப் படையினனும் அவனின் கூடாரமும் என்று..! :wub:

சிங்கள அரசு.. பெரிய தந்திரமா செயற்பட்டு.. புலிகளைப் பயங்கரவாதிகள் ஆக்கினதாச் சொல்ல முடியாது. புலிகளை 1983 இல் இருந்தே பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா சொல்லிக் கொண்டுதான் உள்ளது. புலிகளை அழிக்க வேண்டின் தமிழ் மக்களை அழிக்க வேண்டும் என்று கூறியவர்களும் அவர்கள் தான். அதற்காக இஸ்ரேலிய மொசாட்டின் உதவியை.. நேரடியாக வழங்க கோரியதும்.. சிறீலங்கா விமானப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவுகளை.. முன்னேற்றியதும்.. அமெரிக்கா தான். அதன் வான் கலங்கள் தான்..! எனவே அமெரிக்கா ஏதோ மத்திய வங்கி குண்டு வெடிப்புக்குப் பிறகுதான்.. புலிகள் மீது பயங்கரவாதிகள் என்று நடவடிக்கை எடுத்தது போலவும்.. அதற்கு முன்னர் அது.. புலிகளுக்கு உதவியது என்பது போலவும் உங்கள் கதை இருப்பது.. உண்மைக்குப் புறம்பானது.

மத்திய வங்கிக் குண்டு வெடிப்பு அமெரிக்காவுக்கு புலிகள் பலத்தை காட்டியது. அதுவரை புலிகளை எது எலி என்று நினைத்துக் கொண்டிருந்தது. புலியைப் புலி என்று கண்டதும் கிலியில் தடை போட்டது. அதுவரை.. புலி எலியாகவே இருப்பதாக அது கனவு கண்டு கொண்டிருந்தது.

அமெரிக்காவின் நடவடிக்கைகள்.. சர்வதேச அரசியல் - இராணுவ - பொருளியல் மாற்றங்கள் சார்ந்து.. அதன் வல்லாதிக்க விரிவாக்கம் நோக்கி நிகழ்கிறதே தவிர.. புலிகள் வைக்கும் குண்டுகளால் அல்ல.

அண்மையில் எப் பி ஐ விடுத்த அறிக்கை ஒன்றே இதற்குச் சாட்சி. எந்த முகாந்தரமும் இன்றி எப் பி ஐ வடக்கில் கடந்த 2 ஆண்டுகளில் கொல்லப்பட்ட 4500 பொதுமக்களுக்கும் புலிகள் தான் காரணம் என்று அறிக்கை விட முடிகிறது என்றால்... அதை உலகம் ஏற்க முடிகிறது என்றால்.. அதனை ஏற்றுக் கொண்டு புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆயுதம் வழங்குகிறது என்றால்.. பிறகு என்ன. புலிகள் செய்யாதவைக்கே புலிகள் பொறுப்பாக்கப்பட்டு.. செய்த அரச படைகள் பாதுகாக்கப்படும் போது... ஒரு குண்டு வெடிப்பால் புலிகள் பயங்கரவாதிகள் ஆகினர் என்று தோற்றம் காட்டுவது.. உலகை ஏமாற்றும் செயல் மட்டுமன்றி.. வல்லாதிக்க சக்திகளும் பேரினவாதிகளும் காலம் காலமாக கைகோர்த்து செய்து வரும் மனித பேரவலங்களுக்கு துணை போவதுமாகும்.

இதைத்தான் ஜிம்மி காட்டர் அவர்கள்.. இஸ்ரேல் மீதான பெரிய குற்றச்சாட்டாக முன் வைத்துள்ளார். இதுவரை இஸ்ரேலுக்கு எதிராக எந்த ஒரு அரசும்.. இவ்வாறான ஒரு கண்டனத்தை விட்டதில்லை. பூமியிலேயே மனிதப் பேரவலக் குற்றத்தைப் புரிந்த நாடு இஸ்ரேல் என்ற அந்தக் காட்டரின் குற்றச்சாட்டும்.. அதற்கு அமெரிக்கா பின்னணி என்ற காட்டரின் சுட்டிக்காட்டும்.. இலகுவாக எடுக்கப்பட்டு மறக்கப்படின்.. ஏன்.. புலிகள் சார்ந்து மட்டும் செய்யாத கொலைகளுக்கும் புனைப் பொறுப்புக்கள் சேர்க்கப்பட்டு பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தப்படுகிறது.

புலிகள் குண்டு வைத்தாலோ அல்லது விட்டாலோ.. சிறீலங்காவுக்கு அமெரிக்க உதவிகள்.. சீன உதவிகள்.. இந்திய உதவிகள்.. பாகிஸ்தான் உதவிகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். அதை குண்டுகள் தீர்மானிப்பதில்லை. அந்தந்த நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கைகளும் நலன்களுமே தீர்மானிக்கின்றன. அதேபோல் குண்டுகள் வைத்ததற்காக புலிகள் தங்கள் போராட்டத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லவில்லை என்றும் கூற முடியாது. காரணம்.. புலிகள் சுய சார்பானவர்கள். அவர்களை அழுத்தங்களால் அடக்க முடியாது என்ற ஒரு நிலையில் தான் பயங்கரவாதம் என்ற கூப்பாடு போடப்படுகிறதே தவிர.. புலிகள் அக்கூப்பாடுகளுக்கு பயந்தவர்கள் அல்ல.

ஆனால் புலிகளின் அரசியல் இலக்கை அடைய அந்தக் கூப்பாடு வெளிப்படைக்கு பாதகமாக காண்பிக்கப்படுகிறதே தவிர.. அந்தக் கூப்பாடு.. குண்டு வெடிப்புக்களின் விளைவுகள் அல்ல. உண்மையில் அந்தக் கூப்பாடுகள், புலிகள் தாம் சார்ந்து வளரவில்லை.. சுயமாக வளர்ந்து வரும் ஒரு சக்தி.. தமக்கு சவாலான இராணுவ உக்திகளை வகுக்கக் கூடிய சக்தி என்ற... பயம் கருதி எழுகின்றனவே தவிர.. குண்டு வெடிப்புக்களுக்காக அல்ல..!

அமெரிக்கா போன்ற நாடுகள் தாம் இராணுவ வலிமையைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டலாம் என்று கொள்கை வகுக்கும் அதேவேளை.. அடக்குமுறையைப் பிரயோகிக்கும் அரசுக்கு எதிராக அதனை ஆதரிக்கும் பேரினவாதக் கூட்டத்துக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தி ஒரு இனம் தனது இருப்பை.. விடுதலையை நிர்ணயிப்பதை.. அங்கீகரிக்க முடியாது எங்கிறது.. இது வேடிக்கையானது. வினோதமானது. இதே அமெரிக்கா.. எத்தனையோ நாடுகளில் பிரிவினையைத் தூண்ட வன்முறை இயக்கங்களை வளர்த்துவிட்டதை.. பயங்கரவாத நடவடிக்கை என்று தனக்குத் தானே பயங்கரவாதி என்று பெயரிட்டுக் கொள்ள முடியுமா..??! முடியாது.

தெற்கில் நடக்கும் குண்டு வெடிப்புக்கள் தான் வடக்கில் மக்கள் மீது சிங்கள அரசு குண்டுகளைக் கொட்டுகிறது என்பதை சிங்களவர்களுக்கு உணர்த்தவும்.. அதன் வலியை உணரவும் செய்கிறது. அதுமட்டுமன்றி சிங்கள தேசத்தை நெருக்கடிக்குள் தள்ளியும் விடுகிறது. சிறீலங்காவை வைத்து காய் நகர்த்தும் சர்வதேசத்தின் நகர்வுகளுக்கு இடைஞ்சல்கள் அல்லது நெருக்கடிகளையும் தருகிறது.

புலிகளைப் பொறுத்தவரை நான் ஏலவே குறிப்பிட்டது போல.. அவர்கள் வைத்தாலும் சரி வைக்கா விட்டாலும் சரி.. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருக்கும் காரணம்.. அவர்களின் சுயாதிபத்திய செயற்பாடும் கொள்கைப் பிடிப்புமே அன்றி.. குண்டு வெடிப்புக்கள் அல்ல..! புலிகள் மீது குற்றம் சுமத்த குண்டுகளை தாமே வெடிக்கச் செய்து குற்றங்களை புலிகள் மீது சுமத்தவும் பல நாடுகள் தயாராகத்தான் இருக்கின்றன. ஏனெனில் அவர்களுக்குத் தேவை என்னவோ அதை அவர்கள் எவ்வகையிலும் செய்து தீர்த்துக் கொள்வர் என்பதுதான் அங்கு முக்கியமானது..!

எனவே இந்தக் குண்டு வெடிப்புக்களால் தான்.. புலிகள் பயங்கரவாதிகள் ஆயினர்.. போராட்டம் பலவீனப்பட்டுப் போனது போன்ற தோற்றப்பாடுகள் காட்டும் சங்கரி அம்மான் போன்ற பூச்சாண்டிகளின் களிமண் ஐடியா இங்கு அவசியமில்லை. பேரினவாதிகளும்.. வல்லாதிக்க சக்திகளும் ஒன்றும்.. விரல் சூப்பும் பால் குடிகள் அல்ல..! புலிகள் குண்டு வைக்கும் வரை காத்திருந்து வெடித்த பின் பயங்கரவாதி என்று பட்டம் சூட்டி நடவடிக்கை எடுக்க...! மக்களை முட்டாள் ஆக்கும் கருத்துக்களை விதைக்காமல்.. உலக யதார்த்ததை.. வரலாற்றைப் புரட்டிப் பார்த்து பேசுங்கள்.

ஐநா விருதுக்காக உண்மைகளை மறைப்பது கேவலம். காட்டர் போன்றவர்கள் சாகப் போகும் நேரத்திலாவது காலம் கடந்த உண்மைகளை சொல்ல நினைக்கின்றனர். ஆனால் சங்கரி போன்றவர்களும்.. அவர்களின் பின்னால் அலையும்.. மிதவாத வேசக் கூட்டமும்.. இன்னும் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து.. வெற்றித் திலகமிட்டு. மேடையில் கண்ட தமிழீழத்தை.. சிறீலங்கா பாராளுமன்றக் கதிரையில் குந்த அதன் விரிப்பானாக்கி.. மகிழலாம் என்று கனவா காண்கின்றனர்..! அப்படி எனி ஏமாற தமிழர் சமூகம் தயார் இல்லை..! :D

மத்தியில் கூட்டாட்சி.. வடக்குக்கிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சி என்ற அண்ணன் டக்கிளஸ்.. இன்று பிரிக்கப்பட்ட கிழக்கில் வெறும் 5000 வாக்குகளோடும்.. தேர்தலில் போட்டியிடக் கூட ஒழுங்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முடியாதபடிக்கு சங்கரி அம்மானும்.. கவுண்டு கிடக்கும் இந்த நிலை தானா மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி என்பது..??! இதை சமாளிக்கத்தானா கொழும்பில்.. தெற்கில் வெடிக்கும் குண்டுகளால் தான்.. பயங்கரவாதம் முளைத்து.. புலிகள் எல்லாத்தையும் கெடுத்துவிட்டனர்.. நாமும் குப்புறக்கிடக்கிறம் என்ற தோற்றப்பாடு..! :wub:

Edited by nedukkalapoovan

அருமையான பதில் நெடுக்ஸ்.

அருமையான பதில் :D

:D தரமான அழுத்தமான கருத்துக்கள்.

வழமை போலவே நெடுக்கர்,

நெடிய கதைகள் நிறைய பேசி, சிறிய எனது கேள்விக்கான பதிலை தொலைத்து நிற்கிறார்!

திட்டமிடாத, அரசியல், இராணுவ, பொருளாதார இலக்குகளை தாக்காத, பொதுமக்களை தமிழர் சிங்களவர் என்ற பேதமில்லாமல் தாக்கும் இந்த குண்டு வெடிப்புகள் பிரச்சனையை தீர்க்க உதவுமா? ஆம் எனில் அது எப்படி?

Edited by சாணக்கியன்

தெற்கில் நடக்கும் குண்டு வெடிப்புக்கள் தான் வடக்கில் மக்கள் மீது சிங்கள அரசு குண்டுகளைக் கொட்டுகிறது என்பதை சிங்களவர்களுக்கு உணர்த்தவும்.. அதன் வலியை உணரவும் செய்கிறது. அதுமட்டுமன்றி சிங்கள தேசத்தை நெருக்கடிக்குள் தள்ளியும் விடுகிறது. சிறீலங்காவை வைத்து காய் நகர்த்தும் சர்வதேசத்தின் நகர்வுகளுக்கு இடைஞ்சல்கள் அல்லது நெருக்கடிகளையும் தருகிறது.

என்ற உங்கள் கருத்தை மட்டுமே கேள்விக்கான பதிலாக கொள்ளலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போலவே நெடுக்கர்,

நெடிய கதைகள் நிறைய பேசி, சிறிய எனது கேள்வியை தொலைத்து நிற்கிறார்!

திட்டமிடாத, அரசியல், இராணுவ, பொருளாதார இலக்குகளை தாக்காத, பொதுமக்களை தமிழர் சிங்களவர் என்ற பேதமில்லாமல் தாக்கும் இந்த குண்டு வெடிப்புகள் பிரச்சனையை தீர்க்க உதவுமா? ஆம் எனில் அது எப்படி?

நீங்களும் சங்கரியாரும்.. சுற்றிச் சுற்றி சுப்பற்ற கொல்லைக்கதான் நிக்கிறியள்..!

பொருளாதார இலக்கை.. தாக்கினால்.. அங்கு சிங்களவர்கள் இருக்கமாட்டார்கள்.. தமிழர்கள் இருக்கமாட்டார்கள்.. வெளிநாட்டவர்கள் இருக்கமாட்டார்கள் என்று எப்படி நினைக்கிறியள்.

அதற்காகத் தான் முன் எச்சரிக்கைகள் ஏலவே பல தடவை அரசுக்கு சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்டாயிற்று. அவர்கள் அதையெல்லாம் உதாசீணம் செய்த போதே.. இவ்வழிவுகளுக்கு வித்திட்டுவிட்டுத்தான் இருந்தனர். அப்போது வாழாதிருந்தவர்கள் இப்போ.. நிகழ்வுகள் நடக்கும் போது பயங்கரவாதம் என்று கூப்பாடு போடுவதில் எந்த நியாயமும் இல்லை.

ஒன்றல்ல.. பல தடவைகள் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டது. நோர்வே ஊடு கூட.. வழங்கப்பட்டது. மீண்டும் போர் வெடித்தால் யுத்தம் தென்னிலங்கையில் தான் என்று. அதை தென்னிலங்கை மக்களும் அங்கு வாழ்வோரும்.. அரசும்.. விளையாட்டாகக் கருதிக் கொண்டது.. உதாசீணம் செய்து கொண்டது எச்சரிக்கை விடுத்தவர்களின் தவறா அரசின் தவறா.. அரசை வழிநடத்தும் மக்களின்.. சர்வதேசத்தின் தவறா..????!

அரச கட்டுப்பாட்டுக்குள் உள்ள தமிழர்களுக்கும் செய்திகள் அனுப்பப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப அவதானமாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர.. ஆளாளுக்கு இன்று குண்டு வெடிக்கப் போகுது பத்திரமா வீட்டுக்க இருங்க என்று சொல்லிவிட்டு தாக்குதல் நடத்த முடியாது சாணக்கியன்.

எல்லாத் தாக்குதல்களும் திட்டமிட்டுத்தான் நடத்தப்படுகின்றன. ஒன்றும் எழுந்தமானமாக நடப்பதாகத் தெரியவில்லை. அது புலிகள் செய்தால் என்ன அரசு செய்தால் என்ன.. இராணுவ உதிரிக் குழுக்கள் செய்தால் என்ன வெளிநாட்டு சக்திகள் செய்தால் என்ன.

தமிழ் பொதுமக்கள் தமிழீழத்தில் இலக்கு வைக்கப்படும் போது தெற்கிலும் அது இலக்காகிறது. அது பொதுமக்கள் இலக்கு மட்டுமன்றி.. அதற்குள் பொருளாதார.. இராணுவ பின்னணிகளும் இருக்கிறது. அப்படி இல்லை என்று சாணக்கியன் எப்படி எடுத்துக் கொண்டீர்கள் என்பதும்.. நடக்கும் குண்டு வெடிப்புகள் சகட்டு மேனியானவை என்று சங்கரியார் புலம்புவது போல நீங்களும் புலம்பக் காரணமும் தான் என்ன..??!

கடந்த பெரிய குண்டு வெடிப்புக்களின் போது நானும் தென்பகுதியில் தான் வாழ்ந்தனான். அதனால் நேரடியாக பல அசெளகரியங்களையும் சந்தித்திருந்தேன். அதற்காக நான் அந்த வெடிப்புக்களை குற்றம் சொல்லித் திரியவில்லை. எனது செளகரியத்துக்காக அல்லது ஒரு சில ஆயிரம் பேரின் செளகரியத்துக்காக ஒரு இனத்தின் அடிப்படையை சிங்களப் பேரினவாத பூதம் எம்மைக் காட்டி அழிக்க அனுமதிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன்.

வரும் முன்னெச்சரிக்கைகளை அவதானமாக கருத்திற் கொண்டு நடந்தால் நிச்சயம் இக்குண்டு வெடிப்புக்களை அரசும் சர்வதேசமும் தவிர்த்திருக்கலாம். அரசின் இறுமாப்பும்.. சர்வதேசத்தின் ஆதிக்கப் போக்குமே... இவற்றுக்குக் காரணம். இவற்றை உணர்த்த இவ்வகை குண்டு வெடிப்புக்கள் நிறைய உதவும் என்பது உண்மை.

குண்டு வெடிப்பில் இருந்து தமிழ் முஸ்லீம் மக்கள் தப்பி இருக்க பழகிக் கொள்ள வேண்டும். சிங்களவர்களிலும் பேரினவாதத்துக்கு தமிழர்கள் மீதான போருக்கு ஒத்தூதாத (15%) அப்பாவி மக்களும் இதில் இருந்து பாதுகாக்கப்படனும். அதை அவர்களின் அரசைக் கொண்டும் அவர்கள் செய்ய அரசை தூண்ட வேண்டும். வரும் முன்னெச்சரிக்கைகளை அரசு உதாசீணம் செய்து.. போரைத் திணிப்பதைக் கண்டித்து.. சமாதான வழிக்கு அரசையும் இராணுவத்தையும் கொண்டு வர வேண்டும். அதுதான் எல்லா மக்களுக்கும் பாதுகாப்பானது.

இதை உணர்த்த இது போன்ற குண்டுகள் வெடிப்பதில் தவறில்லை. அதை யார் செய்யினும்.. இது உணரப்படனும்...! தமிழ் பொதுமக்கள் மீது வான் குண்டு வீசுவது உட்பட்ட அனைத்து பொது மக்கள் இலக்குகளும் தவிர்க்கப்படும் போது.. சாணக்கியன் விரும்புவது போல.. குண்டை ஆக்களில்லாத பிரேமதாச ஸ்ரேடியத்துக்கு வைச்சிட்டு வரலாம்..! மற்றும் படி பிரேமதாச ஸ்ரேடியத்துக்கு போறதைத் தவிர்க்கிறதுதான் நல்லது.. காரணம் போர் சிறீலங்காவின் எவ்விலக்கையும் தாக்கலாம். போர் வடக்கில் அல்ல நடக்கிறது. முழு இலங்கையிலும் நடக்கிறது. வடக்குக் கிழக்கு தாக்கப்பட்டால் அங்கு மக்களுக்குப் பாதுகாப்பில்லையோ.. பின் மொத்த இலங்கைக்கும் அதுதான் கதி. இதை இவை தெளிவாக உணர்த்துகின்றன.

குண்டுகள் எல்லா இடமும் வெடிக்கவில்லை. அவற்றிலும் ஒரு பொதுத்தன்மையை அதை வைப்பர்கள் கடைப்பிடிப்பது.. அவர்கள் எவ்வளவோ சிரமங்கள் மத்தியில் அப்பாவி சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் இழப்புகளை தவிர்க்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றனர் என்பதை இனங்காட்டுகிறது.ஒன்றிரண்டு வெடிப்புகளில் சில தமிழ் முஸ்லீம் மக்கள் சிக்கிக் கொள்வது.. தவிர்க்க முடியாதது. அதை தவிர்க்க வேண்டின்.. மக்கள் குண்டுகள் வெடிக்க கூடிய வழிகளில் தங்கள் பிரசன்னத்தை தவிர்ப்பதே சிறந்த வழிமுறை.

சிறீலங்கா அரசுக்கும் அதன் போர் வெறிக்கும்.. அதற்கு முண்டு கொடுக்கும் சிங்கள பேரினவாதத்தை விரும்பும் சிங்களவர்களுக்கும்.. தமிழர்கள் மீதான அவர்களின் அழிப்பு நடவடிக்கை தரவல்ல எதிர்விளைவு என்பதைக் காட்டுவது அவசியம். இன்றேல்.. தமிழினம்.. கேட்டுக் கேள்வி இன்றி அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். சிங்களவர்கள்.. தமிழர்களையும் முஸ்லீம்களையும் தெற்கில் மனிதக் கேடயங்களாகப் பாவித்துக் கொண்டு.. வடக்கிலும் கிழக்கிலும் இன அழிப்பை அழகாகச் செய்து கொண்டிருப்பர்..!

மக்கள் நிலமையை உணர்ந்து தம்மை தற்காத்துக் கொண்டு.. போரை விரும்பித் திணிக்கும் சிங்கள அரசுக்கு பாடம் புகட்ட செயற்படும் செயற்பாட்டாளர்களுக்கு ஒத்துழைப்பதே இவ்வேளையில் சிறந்த வழிமுறையாகும். :D

குறிப்பு: இன்றைய நிலையில் கருத்துக்கணிப்புகள் 85% சிங்களவர்கள் வடக்கில் போர் தொடர்வதை விரும்புகின்றனர் என்பது செய்தி. இதே கருத்துக்கணிப்பு மையத்தில் 2000 ஆண்டில் வெறும் 13% பேரே போரை விரும்பி இருந்தனர்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும் பாண்மை மக்கள் தெரிவு செய்த அரசுதானே இது, அரசு மேற்கொள்ளும் போர் நடவடிக்கைகளால் ஏற்படும் அசெளகரியங்களையும் அவர்களே பொறுத்துக்கொள்ள வேண்டும். பெரும் பாண்மை சிங்களவர் போரைத்தானே விரும்புகிறார்கள் என்று வாக்கெடுப்புகள் காட்டுகிண்றன. போர் என்றால் வடக்கு கிழக்கில் நடப்பது மட்டும்தான் போர் என்று நினைத்து கொண்டார்களா? நல்ல விளையாட்டா இருக்கு , போர் என்றா இப்படித்தான் இருக்கும். இதை 30 வருடமாக அனுபவித்தவர்கள் நாம் அதானால்தான் பேசித்தீர்ப்போம் என்கிறோம் இதயசுத்தியுடன் பேச சிங்களம் தயாரா? பேச்சுவார்த்தயின் போது எப்படி தமிழர் படையை பலவீனப்படுத்தலாம் என்றல்லவா முயற்சித்துகொண்டிருந்தார்க

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சாணக்கியன் போன்றவர்கள்

ஒன்றைப்புரிந்து கொள்ளவேண்டும்

இதில் எதையும் புலிகள் உரிமைகோராமல்

சிறீலங்காவின் பொய்களை மட்டுமே ஆதாரமாக வைத்து ஆராய்வதே தப்பு

அடுத்தது

புலிகள்தான் செய்தார்கள் என்று சொல்ல வேறு ஆதாரங்களை சமர்ப்பித்து ஆராயாமல் எழுந்தமானத்தில் கை நீட்டுவது செய்தவன் தப்பிக்கவே வழியமைக்கும்

அடுத்து

இங்கேயுள்ளவர்கள் சிலர் இவற்றை ஆமோதிக்கின்றனர் என்றால்

இதனால் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை எதிரி குறைக்கமாட்டானா??? என்ற நப்பாசைதான் காரணமே ஒழிய சிங்களமக்கள் சாவதை பார்த்து சந்தோசப்படுவதால் அல்ல

தயவு செய்து அழிவைத்தடுக்க தமிழனுக்கு அழிவைத்தேடுவதைத்தவிர வேறு ஏதாவது வழியுண்டா சொல்லுங்கள்???

கொழும்பில் நடக்கும் குண்டு வெடிப்புக்கள்.. பணக்கார.. மற்றும் நடுத்தர வர்க்கச் சிங்களவர்களை போர் பற்றி சிந்திக்க வைத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

உண்மை, ஆனால் அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் எப்படி புலிகளை பிரபாகரனை முடிக்கலாம் என்றுதான் திட்டமிடுகிறார்கள். செயற்படுத்துகிறார்கள். அண்மைய விழைவுகளையும், சிங்கள சார்பு கருத்துக்களங்களையும் சென்று பார்க்கும் யாருக்குமே இலகுவில் புரியும்!

நீங்கள் குறிப்பிடுவது போல அன்றி.. ஏழைச் சிங்கள இளைஞர்கள் சம்பளத்துக்காக படையில்.. சேர இப்பவும் எப்பவும் தயாராகவே இருக்கின்றனர். ஆனால் ஏன் அவர்கள் என்றுமில்லாத அளவுக்கு படையை விட்டு ஓடினர்.. வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைத் தேடி வருகின்றனர் என்ற உண்மையை.. நீங்கள் மறைத்து விட்டீர்கள்.

எந்த தரவுகளின் அடிப்படையில் இவற்றை நீங்கள் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை? உங்கள் கருத்தை பலப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு எழுந்தமானமான முறையில் எழுதுவதை தயவு செய்து தவிருங்கள். முன்புபோலன்றி முழு இலங்கையும் ஆயுதப்படைகள், துணைப்படைகள், மக்கள் பாதுகாப்பு குழுக்கள் என்று நிரம்பி வழிகிறது. பிள்ளையான் குழு புலிகளை உடைத்து கிழக்கு தமிழ் இளைஞர்களை கொண்டு கிழக்கை ஆயுதமுனையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. முன்னர் உச்சரித்த தந்திரோபாய பின்னகர்வு, பொறி என்ற சொற்பிரயோகங்களை இப்போது காணக்கிடைக்கவில்லை.

தீவிர யுத்தங்களின் பின் படையை விட்டு ஓடியோர் எண்ணிக்கை முன்பு ஒரு காலத்தில் இருந்த சிறீங்கா படையின் மொத்த எண்ணிக்கைக்கு சமனாக இருக்கத்தக்கதாக இருந்தது என்பதை மறந்துவிட்டீர்கள்.

அதை நான் ஏன் ஞாபகம் வைத்திருக்க வேண்டும், இன்று அவர்களின் பலம் என்ன என்பதும் அதற்கு குண்டுவெடிப்குள் ஏற்படுத்தும் அதிர்வலைகள் காரணியாக செயற்படும் விதம் பற்றியதே என் கேள்வி!

...மத்திய வங்கிக் குண்டு வெடிப்பு அமெரிக்காவுக்கு புலிகள் பலத்தை காட்டியது...

...புலிகள் வைக்கும் குண்டுகளால் அல்ல.....

...அவர்கள் வைத்தாலும் சரி வைக்கா விட்டாலும் சரி....

....புலிகள் மீது குற்றம் சுமத்த குண்டுகளை தாமே வெடிக்கச் செய்து குற்றங்களை புலிகள் மீது சுமத்தவும் பல நாடுகள் தயாராகத்தான் இருக்கின்றன...

தயவு செய்து இவ்வாறு தாறுமாறாக கருத்து வைக்காதீர்கள். ஒரு தளத்தில் நின்று கொண்டு உரையாடுங்கள். அல்லது அது உங்கள் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது! துணிவிருந்தால் புலிகள் வைத்தார்கள் அல்லது இல்லை என்ற ஒன்றை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டு பதில் தாருங்கள்!

....வன்னியில் வெடித்த குண்டுகளுக்கு சிங்களவன் புலிகள் தான் காரணமென்ற இருக்கும் என்று அறிக்கை விட்டவர்களும் தமிழர்கள் என்பதை மறுக்க முடியாது. .......

.....சொந்த மக்களின் உயிருக்கு இரக்கமின்றி உலைவைப்பவனை தங்களின் சுயநலனுக்காக.. அவனின் குற்றங்களை மறைத்துப் பாதுகாக்கும் இந்த துரோகிகள்.. சிங்களவனிற்கு மனிதாபிமானம் தேடுகின்றனர்....

....ஒரு சிங்களவன் எழுதுகிறான்.. வன்னியில் இறந்தது.. புலிக்கு போன பெண்களும் சிறுமிகளும் குழந்தைகளும் என்று. ஏன் நாம் சொல்ல முடியாது... தெகிவளையில் இறந்தது சிங்களப் படையினனும் அவனின் கூடாரமும் என்று....

....எனவே இந்தக் குண்டு வெடிப்புக்களால் தான்.. புலிகள் பயங்கரவாதிகள் ஆயினர்.. போராட்டம் பலவீனப்பட்டுப் போனது போன்ற தோற்றப்பாடுகள் காட்டும் சங்கரி அம்மான் போன்ற பூச்சாண்டிகளின் களிமண் ஐடியா இங்கு அவசியமில்லை. பேரினவாதிகளும்.. வல்லாதிக்க சக்திகளும் ஒன்றும்.. விரல் சூப்பும் பால் குடிகள் அல்ல..! புலிகள் குண்டு வைக்கும் வரை காத்திருந்து வெடித்த பின் பயங்கரவாதி என்று பட்டம் சூட்டி நடவடிக்கை எடுக்க...! மக்களை முட்டாள் ஆக்கும் கருத்துக்களை விதைக்காமல்.. உலக யதார்த்ததை.. வரலாற்றைப் புரட்டிப் பார்த்து பேசுங்கள்.....

....ஐநா விருதுக்காக உண்மைகளை மறைப்பது கேவலம். காட்டர் போன்றவர்கள் சாகப் போகும் நேரத்திலாவது காலம் கடந்த உண்மைகளை சொல்ல நினைக்கின்றனர். ஆனால் சங்கரி போன்றவர்களும்.. அவர்களின் பின்னால் அலையும்.. மிதவாத வேசக் கூட்டமும்.. இன்னும் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து.. வெற்றித் திலகமிட்டு. மேடையில் கண்ட தமிழீழத்தை.. சிறீலங்கா பாராளுமன்றக் கதிரையில் குந்த அதன் விரிப்பானாக்கி.. மகிழலாம் என்று கனவா காண்கின்றனர்..! அப்படி எனி ஏமாற தமிழர் சமூகம் தயார் இல்லை..!

....மத்தியில் கூட்டாட்சி.. வடக்குக்கிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சி என்ற அண்ணன் டக்கிளஸ்.. இன்று பிரிக்கப்பட்ட கிழக்கில் வெறும் 5000 வாக்குகளோடும்.. தேர்தலில் போட்டியிடக் கூட ஒழுங்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முடியாதபடிக்கு சங்கரி அம்மானும்.. கவுண்டு கிடக்கும் இந்த நிலை தானா மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி என்பது..??! இதை சமாளிக்கத்தானா கொழும்பில்.. தெற்கில் வெடிக்கும் குண்டுகளால் தான்.. பயங்கரவாதம் முளைத்து.. புலிகள் எல்லாத்தையும் கெடுத்துவிட்டனர்.. நாமும் குப்புறக்கிடக்கிறம் என்ற தோற்றப்பாடு..!

வேறு அரசியல்வாதிகள், இணையத்தளங்கள், பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் கருத்துகளை காவிவந்துதான் குண்டுவெடிப்பை நியாயப்படுத்தத் தேவையில்லை. இவற்றிற்கு நான் பதில் தரத்தேவையும் இல்லை.

மேலும் உங்கள் வாதத்தில் இருந்து ஒரு புதிய கேள்வியும் பிறக்கிறது?

வருடம் தோரும் பிரபாகரனின் மாவீரர் உரையில், சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுப்பது எதற்காக?

சர்வதேச அங்கிகாரம் எமக்கு தேவையா இல்லையா?

அமெரிக்கா, ஐ.நா, ஐ.ஒ போன்றவற்றின் ஆதரவு இல்லாமல், பயனுள்ள சுதந்திரம் கிடைக்குமா?

நன்றி.

முதலில் சாணக்கியன் போன்றவர்கள்

ஒன்றைப்புரிந்து கொள்ளவேண்டும்

இதில் எதையும் புலிகள் உரிமைகோராமல்

சிறீலங்காவின் பொய்களை மட்டுமே ஆதாரமாக வைத்து ஆராய்வதே தப்பு

அடுத்தது

புலிகள்தான் செய்தார்கள் என்று சொல்ல வேறு ஆதாரங்களை சமர்ப்பித்து ஆராயாமல் எழுந்தமானத்தில் கை நீட்டுவது செய்தவன் தப்பிக்கவே வழியமைக்கும்

அதை பிரபாகரனிடமும், பொட்டுஅம்மானிடமும் தான் கேட்டு உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் இங்கே புலிகள் தான் செய்தார்கள் என்ற எடுகோளில் தான் உரையாடப்படுகிறது. அதை ஏற்றுக்கொள்ளாமல் விடுவது உங்கள் சுதந்திரம்.

அடுத்து

இங்கேயுள்ளவர்கள் சிலர் இவற்றை ஆமோதிக்கின்றனர் என்றால்

இதனால் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை எதிரி குறைக்கமாட்டானா??? என்ற நப்பாசைதான் காரணமே ஒழிய சிங்களமக்கள் சாவதை பார்த்து சந்தோசப்படுவதால் அல்ல தயவு செய்து அழிவைத்தடுக்க தமிழனுக்கு அழிவைத்தேடுவதைத்தவிர வேறு ஏதாவது வழியுண்டா சொல்லுங்கள்?

நான் பொய் சொல்ல விரும்பவில்லை... சிங்கள மக்கள் கொத்துக் கொத்தாக சாவதில் எனக்கு நல்ல விருப்பம்! பழிக்கு பழி, இரத்ததிற்கு இரத்தம்!

ஆனால் உங்கள் கேள்விதான் எனக்கும்? அங்கு குண்டு வெடித்து 2 அல்லது 3 நாட்களில் இங்கு நடத்தப்படும் இந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் எமது மக்களை பாதுகாக்குமா? நிரந்தரத் தீர்வை பெற்றுத்தருமா?

முன்பு வேறு எங்காவது இப்படி நடைபெற்று அதன் மூலம் நல்ல தீர்வு கிடைத்துள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

எந்த தரவுகளின் அடிப்படையில் இவற்றை நீங்கள் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை? உங்கள் கருத்தை பலப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு எழுந்தமானமான முறையில் எழுதுவதை தயவு செய்து தவிருங்கள். முன்புபோலன்றி முழு இலங்கையும் ஆயுதப்படைகள், துணைப்படைகள், மக்கள் பாதுகாப்பு குழுக்கள் என்று நிரம்பி வழிகிறது. பிள்ளையான் குழு புலிகளை உடைத்து கிழக்கு தமிழ் இளைஞர்களை கொண்டு கிழக்கை ஆயுதமுனையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. முன்னர் உச்சரித்த தந்திரோபாய பின்னகர்வு, பொறி என்ற சொற்பிரயோகங்களை இப்போது காணக்கிடைக்கவில்லை.

வருடம் தோரும் பிரபாகரனின் மாவீரர் உரையில், சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுப்பது எதற்காக?

சர்வதேச அங்கிகாரம் எமக்கு தேவையா இல்லையா?

அமெரிக்கா, ஐ.நா, ஐ.ஒ போன்றவற்றின் ஆதரவு இல்லாமல், பயனுள்ள சுதந்திரம் கிடைக்குமா?

நன்றி.

தென்னிலங்கையில் ஆள் திரட்ட முடியும் என்றால் எதற்கு.. பொது மன்னிப்பு அளித்து வா வா என்று அழைக்க வேண்டிய நிலை அரசுக்கு...???! திரட்டி போதிய பயிற்சியை குடுத்து வைச்சிருக்கலாமே கடந்த 5 வருட சமாதான காலத்தில்...??!

http://www.mideastyouth.com/2008/03/10/sri...ast-statistics/

மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கை ஆண்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் சீரான வளர்ச்சியைக் கண்டு வந்துள்ளன. இந்தப் போக்கு 90களின் நடுப்பகுதியில் சீரான வீழ்ச்சியாக இருந்தது.

இராணுவத்தை விட்டு ஓடும் பலர் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளூடு பிற ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும்.. மத்திய கிழக்கிலும் வேலை வாய்ப்பைத் தேடி வருகின்றனர் என்பது இலங்கை மக்களுக்கு தெரிந்த விடயம். ஆனால் உங்களுக்கு அது தெரியாத விடயம். முன்னரெல்லாம் ஆண்கள் இராணுவத்துக்குப் போக பெண்கள் மத்திய கிழக்குப் போக.. குடும்பங்களில் பிரச்சனைகள் என்று சிங்களவர் கண்ணீர் வடித்துத் திரிந்தவற்றையும் நல்லா ஞாபகம் பண்ணிப் பாருங்கோ..!

மகிந்த சிவில் பாதுகாப்புக்கு என்று தொண்டர் அடிப்படையில் 1 இலட்சம் பெயரை சேர்த்து வைத்துள்ளார். அது போர்க்களத்துக்கு வெளியில் சிவில் பாதுகாப்புக்கு என்றுள்ளது. அவர்களும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு தாக்குப் பிடிப்பர் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாமே..??! :D

கிழக்கில் பிள்ளையானின் படையணிகள் தான் கிழக்கை பாதுகாத்து நிற்பதை போல எல்லோ உங்கட கதை இருக்குது. சாணக்கியன் எப்ப தொடங்கி ரம்புக்வலவின் உதவியாளர் ஆனீர்கள். பிள்ளையானிடன் பயிற்சி அளிக்கப்பட்ட ஆயிரம் தொடங்கி 2 ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால் கிழக்கை இராணுவமும் அதிரடிப்படையும் தான் பாதுகாத்து நிற்கிறது.

கருணா 6 ஆயிரம் பேருடன் இருந்த போதுதான் அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு கருணாவின் துரோகத்தில் இருந்து கிழக்கு மீட்கப்பட்டது என்பதை சுலபமா மறந்திடுறீங்களே..???!

இது முதற்தடவையல்ல.. இந்திய அமைதிப்படை TNA என்று ஒன்றை வடக்குக்கிழக்கு எங்கனும் ஆயிரக்கணக்கில் பிள்ளை பிடித்து வளர்த்து வைத்திருந்த கட்டமைப்புக்கு என்ன ஆனது என்பதை அறியாதவரோ நீங்கள். அறிந்திருப்பீர்கள்.. மறக்கடிக்கப்பட்டிப்பீர்கள்..!

பிள்ளையானும் கருணாவும் ஏதோ புதிசா செய்யினம் என்றது போல படம் வேண்டாம். புளட் மோகன்.. ராசிக்.. ஈபிடிபி.. ஈபி வரதர்.. எல்லோரும் செய்ததைத்தான் இவர்களும் செய்கின்றனர். இராணுவம் ஆயிரக்கணக்கில் நிலை கொண்டு கனரக ஆயுதங்களுடன் நின்று பாதுகாக்க கிழக்கு தற்காலிகமா அரசின் கைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதே நிலைகள் முன்னரும் இருந்தன சாணக்கியன். நீங்கள் மறக்கலாம். ஆனால் போராடுறவன்.. வரலாறை நல்லாப் படிச்சிருக்கிறான் சாணக்கியன். அவனுக்கு தெரியும் எதை எங்க எப்ப செய்யனும் என்று.

கண்ட இடமெல்லாம் போர் என்று செய்து அப்பாவி மக்களை தொடர்ந்து அந்த இடங்களிலெல்லாம் பலி கொடுத்திட்டு இருக்கிறதிலும்.. சாதகமான போர் முனையில் எதிரியை அழிச்சு.. களைப்படையச் செய்து.. அதன் பின் இலக்கை அடையுறதும்.. தந்திரம் தான் சாணக்கியன்.

உங்களுக்கு போதுமான பதில் இதில் இருக்கலாம் சாணக்கியன்..! :wub:

தலைவர் கேட்பது.. தமிழ் மக்களின் நியாயத்தைப் புரிந்து கொண்டு தார்மீக ஆதவரவை தரச் சொல்லியே தவிர.. குண்டு வெடிப்புக்களுக்கு கண்டன அறிக்கைகளும்.. சிறீலங்கா அரசுக்கு ஆயுத சப்பிளையும் அல்ல.

சர்வதேசத்தின் எல்லா நகர்வுகளும் சரியென்று ஏற்றுக் கொள்ள முடியாது. எமக்கு சாதகமானவை என்றும் கொள்ள முடியாது. எமக்குச் சாதகமாக அமைவதை தற்போதைய குண்டுகள் எதையும் தடுத்து விடப் போவதில்லை..! காரணம் சர்வதேசம் எமக்கு எதிராக இருப்பதாக வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள ஆரம்பித்து தசாப்தம் கடந்தாயிற்று.

சர்வதேசம் இயக்கங்களை வளர விடுவதும்.. பின்னர் அவற்றின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அவற்றின் பிராந்திய தேவைகளுக்காக அவற்றைப் பயன்படுத்துவதும் ஒன்றும் தலைவரோ உலகோ அறியாத விடயங்கள் அல்ல.

அதைத்தான் தலைவர் மாவீரர் தின உரையில்.. வருகின்ற நூற்றாண்டு எமக்கானது என்று சொல்லி வைத்தார்..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன்,

தென்னிலங்கையில் குண்டுகள் வெடிக்காது இருந்தால் மட்டும் இந்த பணக்கார மற்றும் நடுத்தர வர்க்கச் சிங்கள மக்கள் யுத்தம் பற்றிய நினைவிழந்து புலிகள் அவர்கள் பாட்டில் இருக்கட்டும், நாம் எமது பாட்டில் இருப்போம் என்று இருந்து விடுவார்களா என்ன? இல்லையே ! மாறாக தென்னிலங்கையில் குண்டுகள் வெடித்தாலும் சரி, வெடிக்காவிட்டாலும் சரி அவர்கள் யுத்தத்திற்கு தமது ஆதரவைத் தொடர்ந்தும் வழங்கிக் கொண்டுதானே இருக்கிறார்கள் . இன்றைக்கு அரசின் யுத்த முயற்சிக்கு முண்டு கொடுத்துவரும் மிகப்பெரிய சக்தி இந்த வர்க்கம் தானே ? அப்படியிருக்கும் போது, தென்னிலங்கைக் குண்டு வெடிப்புகளால்த்தான் இவர்கள் புலிகளுக்கெதிராக மாறுகிறார்கள் என்பதை ஏற்க முடியாது. நீங்கள் இப்படிச் சொல்வது தமிழரால்த்தான் யுத்தம் தொடங்கப்பட்டது என்ற சிங்கள அரசின் பிரச்சாரத்தைப் பின்பற்றுவதாக உள்ளது.

புலிகள் உரிமை கோராதவரை இத்தாக்குதல்கள் அவர்களால்த்தான் செய்யப்பட்டது என்று நாம் கூற முடியாது. சிவிலியன்கள் கொல்லப்படுவது , அவர்கள் எத்தரப்பினராயிருந்தாலும் கவலை அளிப்பதுதான். ஆனால் தாம் எதற்காகத் தாக்கப்படுகிறோம், எதற்காக இலக்கு வைக்கப்படுகிறோம் என்று இந்த பணக்கார மற்றும் நடுத்தர வர்க்கம் எண்ணிப்பார்க்கவும் இது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். நீங்கள் கூறுவதுபோல இவ்வாறான குண்டுவெடிப்புகள் இதுவரையில் எவ்வாறான மாற்றத்தையும் கொண்டுவராமல் இருக்கலாம், ஆனால் அரசு தொடர்ந்து தமிழ் மக்களை கொன்று குவித்துக்கொண்டிருக்க முடியாது என்ற செய்தியை அவர்களுக்குக் கொண்டு செல்லும்.

1995 இல் மத்திய வங்கித் தாக்குதலின்போதும், 1996 இல் தெகிவளை புகையிரதத் தாக்குதலின் போதும் இதே நடுத்தர வர்க்கத்தினர் தான் இலக்கு வைக்கப்பட்டார்கள். காரணம், அரச இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் . அரசின் போர் முயற்சிகளுக்கு துணை போவபர்கள் இவர்கள். இவ்வாறான மென்மையான இலக்குகளைத் தாக்குவதன் மூலம் அரசின் பொருளாதார வளங்களைச் சிதைக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்திருக்கலாம்....இது எனது சொந்தக் கருத்து மட்டுமே.

பல தாக்குதல்களை வெறுமனே சிவிலியன்கள் மேலான தாக்குதல்கள் என்று பார்ப்பதை விட, எச்சரிக்கைகள் அல்லது முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் என்று கொள்வதே பொருத்தம்.

மீண்டுமொருமுறை, புலிகள் உரிமை கோராத விடத்து நாம் யாரும் உரிமை கோரத் தேவையில்லை. அதை யாரோ செய்ததாக இருக்கட்டும். அரசாங்கம் சொல்வதுபோல, "இதை அரசே செய்துவிட்டு, புலிகள் மேல் குற்றம் சாட்டப் பார்க்கிறது" என்று சொல்லிக் கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் உங்கள் கேள்விதான் எனக்கும்? அங்கு குண்டு வெடித்து 2 அல்லது 3 நாட்களில் இங்கு நடத்தப்படும் இந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் எமது மக்களை பாதுகாக்குமா? நிரந்தரத் தீர்வை பெற்றுத்தருமா?

இல்லை தற்காலிகமாகவேனும் அரசின் தமிழ் மக்கள் மீதான நரபலி குறைக்கப்படும். நாங்கள் பேசாமல் பதில் தாக்குதலை நடத்தாமல் விட்டால் மட்டும் நிரந்தர தீர்வை பெற்று தந்து விடுமா?. நீங்கள் கூறும் சர்வதேசமே அப்பாவி மக்களை தான் கொன்று குவிக்கிறது. இவர்களிடம் நாங்கள் நியாயத்தை எதிர்பார்ப்பது எங்களது மடமை.

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.