Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஜீவன் உடனான தீபம் தொலைக்காட்சியின் நேர்காணல்

Featured Replies

எந்த ஒரு சித்திரவதை கூடம் நடத்தும் அரசும் அவற்றை பார்க்க அனுமதிக்காது என்பது வெளிப்படையான விடயம். சாத்தியமான வழிகளில் சொல்ல வரும் விடயத்தைச் சொல்ல வேண்டுமே தவிர... விடயத்தை இணைத்த எனக்கே பாடம் கற்பிக்க விளைவது உபயோகமானதாகவன்று உபத்திரபமானதாகவே இருக்கிறது வசம்பண்ணை. உங்களுக்கு இது சரிப்பட்டு வரக் கூடாது என்பதே சரிப்பட்டு வரனும் என்பதை விட அதிகம் இருக்கிறது போல..! :lol::(

அரசின் கோரமுகத்தை வெளிக்கொணர்வது அவசியம். அதற்கு முடிந்தவரை உண்மையானவற்றை வைத்தே வெளியுலகிற்கு காட்ட முயலவேண்டும். அதற்காக செயற்கையாக செட் போட்டு எடுத்து வெளியிட்டால் உண்மையான நிலைப்பாடு மற்றவர்களை சென்றடைவது கேள்விக்குறியாகிவிடும். நீங்கள் உங்கள் சிந்தனைகளை செயல்வடிவமாக்க ஏற்கனவே வாழ்த்தினேன். ஆனால் நீங்கள் களத்தில் மட்டுமே படம் காட்டி சா...சா... படம் எடுத்து முடித்து விடுவீர்கள் போல. :D:(

:lol:எப்படியும் நீங்கள் இதை வைத்தே 20-30 பக்கங்களை ஓட்டிவிடுவீர்கள். ^_^

Edited by Vasampu

  • Replies 181
  • Views 21.2k
  • Created
  • Last Reply

திரு நெடுக்காலபோவான்,

அவர்தான் சிறையிலிருந்து செவ்விகளை எடுத்து இப்படைப்பை மெருகூட்டலாம் என சொல்லியிருக்கிறாரே....அதுவே பெரியதொரு பணி. அவர் அதனைத் திறம்படச் செய்வார் என நம்பலாம்.

எனவே சோர்வுறாமல் தொடருங்கள்......

எழுத்தாளர் என தன் பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டவர் தனக்குப் பயம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருப்பதால் பொருத்தமானவர் ஒருவரைப் பிரேரியுங்கள்.

அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு....

Edited by ஔவையார்

ஒளவையார்

ஆர்வமுள்ள நீங்களே எழுத்தாளர் பணியைச் செய்தால் இன்னும் சிறப்பாக அமையுமென நான் நினைக்கின்றேன். ஏனெனில் இதற்கான விளம்பரத் தயாரிப்பின் போதே உங்கள் திறமை வெளிப்பட்டது. அதுபோல் இப்பணியையும் நிச்சயம் நீங்கள் திறம்படச் செய்வீர்கள்.

  • தொடங்கியவர்

நெடுக்ஸ் ஒழிச்சிருந்து கதை எழுதினால்.. நடிகர்களும் ஒழிச்சிருந்துதான் நடிக்கணும்.. ஆகவே.. ஒரு சிறைச்சாலையை காட்டி.. இசையையும் சேர்த்து கெதியாய் படத்தை வெளியிடுங்கப்பா.. :D:(

நிச்சயமாக என்னால் முடியும்..

இப்படியானதொரு விடயத்திற்கு என் பங்களிப்பு நிச்சயம் உண்டு.

ஆனால் நேற்று முளைத்தவர், இன்று வந்தவர் என தாக்குதல் செய்ய நபர்கள் காத்திருக்கின்றனர்.

அதனாலேயே மூத்த பதிவாளர்கள் எனப் பதிவினை இட்டேன்....

எனவே தனித் தமிழில் களமிறங்க நான் தயார். செவ்விகளுக்கு தாங்கள் தயாரா?

திரு நெடுக்கின் ஒருங்கிணைப்பிற்காய் காத்திருக்கும்.......ஒளவையார்.

நெடுக்ஸ் ஒழிச்சிருந்து கதை எழுதினால்.. நடிகர்களும் ஒழிச்சிருந்துதான் நடிக்கணும்.. ஆகவே.. ஒரு சிறைச்சாலையை காட்டி.. இசையையும் சேர்த்து கெதியாய் படத்தை வெளியிடுங்கப்பா.. :(:lol:

போற போக்கிலை பேசாமல் மோகன்லால், பிரபு இணைந்து நடித்த "சிறைச்சாலை" படத்தையே கிராபிக்ஸிலே மாத்தி வெளியிடச் சொன்னாலும் சொல்வீர்கள் போல!!! :lol::D:(

நிச்சயமாக என்னால் முடியும்..

இப்படியானதொரு விடயத்திற்கு என் பங்களிப்பு நிச்சயம் உண்டு.

ஆனால் நேற்று முளைத்தவர், இன்று வந்தவர் என தாக்குதல் செய்ய நபர்கள் காத்திருக்கின்றனர்.

அதனாலேயே மூத்த பதிவாளர்கள் எனப் பதிவினை இட்டேன்....

எனவே தனித் தமிழில் களமிறங்க நான் தயார். செவ்விகளுக்கு தாங்கள் தயாரா?

திரு நெடுக்கின் ஒருங்கிணைப்பிற்காய் காத்திருக்கும்.......ஒளவையார்.

நிச்சயமாக இராமருக்கு அணில் உதவியது போல, நெடுக்கிற்கு நான் உதவத் தயார்.

இங்கு ஒருவரும் புதியவர் பழையவர் என்று பார்த்து பழகுவது இல்லை. ஒதுக்கி வைப்பது இல்லை. புதியவர்களை ஒதுக்கிவைத்து கருத்தாடல் செய்வதில்லை. அன்று ஒரு காலத்தில கீழ இருக்கிற காணொளிய நாம செய்து இருந்தோம். இன்று அப்படியான ஒரு மனநிலையில நாம இல்லை என்றால் அதற்கான காரணம் என்ன என்று தினமும் யாழுக்கு வருபவர்களுக்கு புரியும். :D

  • கருத்துக்கள உறவுகள்

முரளி.. அது யார் நீங்களா பாடினது? ரொம்ப நன்னா இருக்கு..! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி.. அது யார் நீங்களா பாடினது? ரொம்ப நன்னா இருக்கு..! :D

வேறை ஆர் இஞ்சை உந்தளவுக்கு மினைக்கடுவீனம் :(

  • தொடங்கியவர்

மருமேன்.. நல்லாய்தான் இருக்கிறது பாடலும் இசையும்.. ஒளித்தொகுபஇபு அசைபடம் எல்லாம் அனிதாவா? உண்மையிலேயே மிகவும் பாராட்டுதற்குரியது. இப்படியான திறமைகள் மேலும் மேலும் பலவகைகளில் விரிவடைய வாழ்த்துக்கள்! தற்பொழுதுதான் இப் பாடல் காட்சியை பார்க்க நேரிட்டது.. எனவே, இணைப்பிற்கும் மிக மிக நன்றிகள்!!

தமிழ் தொலைக்காட்சியள் எல்லாம் ஐரோப்பால வரமுந்தி.. நானும் ஆசைக்கு ஒரு பாடலுக்கு.. படம் பிடிச்சு வெட்டி ஒட்டிப் பாத்தனான்.. பாக்கிறியளோ?! :D

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசின் கோரமுகத்தை வெளிக்கொணர்வது அவசியம். அதற்கு முடிந்தவரை உண்மையானவற்றை வைத்தே வெளியுலகிற்கு காட்ட முயலவேண்டும். அதற்காக செயற்கையாக செட் போட்டு எடுத்து வெளியிட்டால் உண்மையான நிலைப்பாடு மற்றவர்களை சென்றடைவது கேள்விக்குறியாகிவிடும். நீங்கள் உங்கள் சிந்தனைகளை செயல்வடிவமாக்க ஏற்கனவே வாழ்த்தினேன். ஆனால் நீங்கள் களத்தில் மட்டுமே படம் காட்டி சா...சா... படம் எடுத்து முடித்து விடுவீர்கள் போல. :D:(

^_^எப்படியும் நீங்கள் இதை வைத்தே 20-30 பக்கங்களை ஓட்டிவிடுவீர்கள். :)

ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு தாண்டவக்கோனே :(:lol::lol:

முரளி.. அது யார் நீங்களா பாடினது? ரொம்ப நன்னா இருக்கு..! :lol:

ஓம் டங்குவார், நீங்கள் கேள்வி கேட்டதிண்ட உள்ளார்ந்தம் விளங்கிது. இப்பிடி எல்லாம் எழுதுற நானா அப்பிடி ஒருகாலத்தில கோயிலுக்கு பாடுற மாதிரி இப்படியான திருப்பதிகம் ஒண்டு பாடினனான் எண்டு. இந்தப்பாட்டக் கேட்க என்னாலையே நம்ப ஏலாம இருக்கிது இத நானா முந்தி பாடினன் எண்டு. நீங்கள் எப்பிடி நம்புவீங்கள்.. :(:lol:^_^ எல்லாம் காலம் போற போக்கடா சாமி! :(:D

மருமேன்.. நல்லாய்தான் இருக்கிறது பாடலும் இசையும்.. ஒளித்தொகுபஇபு அசைபடம் எல்லாம் அனிதாவா? உண்மையிலேயே மிகவும் பாராட்டுதற்குரியது. இப்படியான திறமைகள் மேலும் மேலும் பலவகைகளில் விரிவடைய வாழ்த்துக்கள்! தற்பொழுதுதான் இப் பாடல் காட்சியை பார்க்க நேரிட்டது.. எனவே, இணைப்பிற்கும் மிக மிக நன்றிகள்!!

தமிழ் தொலைக்காட்சியள் எல்லாம் ஐரோப்பால வரமுந்தி.. நானும் ஆசைக்கு ஒரு பாடலுக்கு.. படம் பிடிச்சு வெட்டி ஒட்டிப் பாத்தனான்.. பாக்கிறியளோ?! :)

சோழியன் மாமா... பாட்டு உண்மையில அந்தமாதிரி சூப்பரா இருக்கிது. காணொளிதான் கொஞ்சம் தெளிவு இல்லாமல் இருக்கிது. அதில ஆண் குரல் உங்களுடையதா? பெண், ஆண் குரல் ரெண்டும் நல்லா இருக்கிது. அப்ப நான் உங்காளப்பக்கம் வரேக்க ரெண்டுபேரும் சேந்து ரெண்டு பாட்டு செய்வமோ? :(

  • தொடங்கியவர்

பாடல் யேர்மனியிலிருந்து வெளிவந்த இறவெட்டு ஒன்றிலிருந்து எடுத்தது.. வீஎச்எஸ் கசற்றில இருந்து.. பிறகு அடிப் பெட்டியளுக்கை இருந்து.. தூசு தட்டி.. அதை கணனீல ஏத்த.. இருந்ததே கொங்சம்.. அதுவும் மங்கலாயிடுச்சு.. :D பாட்டு ஆயத்தப்படுத்திக் கொண்டு வாருங்கோ.. நடிக்குறதுக்கு இங்க ஆளுக்கு பஞ்சமில்லை..

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் கோரமுகத்தை வெளிக்கொணர்வது அவசியம். அதற்கு முடிந்தவரை உண்மையானவற்றை வைத்தே வெளியுலகிற்கு காட்ட முயலவேண்டும். அதற்காக செயற்கையாக செட் போட்டு எடுத்து வெளியிட்டால் உண்மையான நிலைப்பாடு மற்றவர்களை சென்றடைவது கேள்விக்குறியாகிவிடும். நீங்கள் உங்கள் சிந்தனைகளை செயல்வடிவமாக்க ஏற்கனவே வாழ்த்தினேன். ஆனால் நீங்கள் களத்தில் மட்டுமே படம் காட்டி சா...சா... படம் எடுத்து முடித்து விடுவீர்கள் போல. :D:(

:(எப்படியும் நீங்கள் இதை வைத்தே 20-30 பக்கங்களை ஓட்டிவிடுவீர்கள். :lol:

ஈராக் சிறைகளில் எடுக்கப்பட்ட 4 புகைப்படங்கள் தான் அமெரிக்கப்படைகளின் சிறை அட்டூழியங்களை வெளி உலகுக்குக் கொண்டு வந்தன. நாங்க உண்மைச் சம்பவங்களைச் சொல்ல வைப்போம்... அதற்காக சிறை வாசலில் நின்று தான் சொல்ல வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம் போல தோன்றவில்லையா வசம்பண்ணன்.

அதுமட்டுமன்றி.. இது நெடுக்காலபோவனின் சாமத்தியவீட்டுக் கதையல்ல.. நீங்கள் அந்நியத்தனமா ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்க. உங்கள் இனத்தின்.. பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான ஒரு ஒளியைத் தேடிய பயணம். அதில் உங்களின் இங்குள்ளோரின் அனைவரினதும் ஆலோசனைகள் ஆக்கங்கள் பங்களிப்புக்கள் எல்லாமே எதிர் பார்க்கப்படுகின்றன. அப்போதுதான் ஒரு படைப்பை காத்திரமாக வழங்க முடியும்..!

எனவே இதுவரைக்கும் நீங்கள் வழங்கிய தூர நின்றான ஆலோசனைக்கு நன்றி. எனி நெருங்கி வாருங்கள். ஒத்துழைப்போம் ஒற்றுமையுடன் படைப்போம்.. வெல்வோம்..! :lol:

Edited by nedukkalapoovan

ஈராக் சிறைகளில் எடுக்கப்பட்ட 4 புகைப்படங்கள் தான் அமெரிக்கப்படைகளின் சிறை அட்டூழியங்களை வெளி உலகுக்குக் கொண்டு வந்தன. நாங்க உண்மைச் சம்பவங்களைச் சொல்ல வைப்போம்... அதற்காக சிறை வாசலில் நின்று தான் சொல்ல வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம் போல தோன்றவில்லையா வசம்பண்ணன்.

அதுமட்டுமன்றி.. இது நெடுக்காலபோவனின் சாமத்தியவீட்டுக் கதையல்ல.. நீங்கள் அந்நியத்தனமா ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்க. உங்கள் இனத்தின்.. பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான ஒரு ஒளியைத் தேடிய பயணம். அதில் உங்களின் இங்குள்ளோரின் அனைவரினதும் ஆலோசனைகள் ஆக்கங்கள் பங்களிப்புக்கள் எல்லாமே எதிர் பார்க்கப்படுகின்றன. அப்போதுதான் ஒரு படைப்பை காத்திரமாக வழங்க முடியும்..!

எனவே இதுவரைக்கும் நீங்கள் வழங்கிய தூர நின்றான ஆலோசனைக்கு நன்றி. எனி நெருங்கி வாருங்கள். ஒத்துழைப்போம் ஒற்றுமையுடன் படைப்போம்.. வெல்வோம்..! :D

இங்கே நான் குறிப்பிட்டது செட் போட்டு படம் எடுத்தால் அது போலியாக மற்றவர்களால் கருதப்பட்டுவிடும் என்பதையே. ஈராக், குவாட்டனமோ போன்ற இடங்களில் எடுக்கப்பட்ட நிஜமான படங்களைப் போல் நம்நாட்டு சிறைச்சாலைகள் சம்பந்தமாகவும் படங்கள் கிடைத்தால் அவற்றை வைத்தும், கைதாகி இருப்பவர்களின் அல்லது அவர்களின் நெருங்கிய இரத்த உறவுகளின் செவ்விகளையும் இணைத்து ஒரு விபரணப் படமாக தயாரித்து வெளியிடலாம்.

களத்தில் துள்ளிக்குதித்து அடிக்கடி கத்தினால்த்தான் தேசியத்திற்கு குரல் கொடுப்பதென்றோ மற்றவர்களெல்லாம் சும்மா இருக்கின்றார்கள் என்றோ ஒரு போதும் அர்த்தமாகிவிடாது. சிலபேர் விளம்பரமில்லாமலே பலவிடயங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பலர் தம்மை தேசியவாதிகளாக விளம்பரப் படுத்துவதில் மட்டுமே குறியாக இருக்கின்றார்கள்.

ஈராக் சிறைகளில் எடுக்கப்பட்ட 4 புகைப்படங்கள் தான் அமெரிக்கப்படைகளின் சிறை அட்டூழியங்களை வெளி உலகுக்குக் கொண்டு வந்தன. நாங்க உண்மைச் சம்பவங்களைச் சொல்ல வைப்போம்... அதற்காக சிறை வாசலில் நின்று தான் சொல்ல வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம் போல தோன்றவில்லையா வசம்பண்ணன்.

அதுமட்டுமன்றி.. இது நெடுக்காலபோவனின் சாமத்தியவீட்டுக் கதையல்ல.. நீங்கள் அந்நியத்தனமா ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்க. உங்கள் இனத்தின்.. பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான ஒரு ஒளியைத் தேடிய பயணம். அதில் உங்களின் இங்குள்ளோரின் அனைவரினதும் ஆலோசனைகள் ஆக்கங்கள் பங்களிப்புக்கள் எல்லாமே எதிர் பார்க்கப்படுகின்றன. அப்போதுதான் ஒரு படைப்பை காத்திரமாக வழங்க முடியும்..!

எனவே இதுவரைக்கும் நீங்கள் வழங்கிய தூர நின்றான ஆலோசனைக்கு நன்றி. எனி நெருங்கி வாருங்கள். ஒத்துழைப்போம் ஒற்றுமையுடன் படைப்போம்.. வெல்வோம்..! :wub:

அன்பு நெடுக்ஸ்

உங்கள் அறை கூவலுக்கு

எல்லோரும் வந்திருப்பார்கள் என்று பார்த்தால்?????

எல்லாரும் கப்சிப்புண்ணு இருக்கிறாங்க :lol:

இதுதான் யதார்த்தம்!

காகிதத்தில் நிலா பார்ப்பதும்

விண்ணுக்கு போய் நிலா பார்ப்பதும்

வெவ்வேறானவை!

என்று முன்னமே சொன்னேன்?

இருந்தாலும் உங்கள் முயற்சியை தொடருங்கள்

நான் பக்க பலமாக இருப்பேன்.

அனைத்து ஆரம்ப பணிகளும்

எப்படிப் போகுது என்று

கேட்டுக் கொண்டே இருப்பேன்!

சும்மா இருந்தவனை தாக்கிய போது

ஜாலியா நாமளும் ரெண்டு தட்டு தட்டுவம் என்று

தட்டினவங்களை கூட இப்ப காணோமே சார்? :wub::wub::(

அதுதான் வேதனையாக இருக்கிறது. :D

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்

யாழில் எத்தனையோ சினிமா கலைஞர்கள் இருக்கிறார்கள்!

முயற்சி திருவினையாகும் என்பது பொய்யாகுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணன்,

ஏலவே நேசக்கரத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது கூட இப்படித்தான் ஆகும் என்று எண்ணி இருப்பினும் குறைந்தது 3 திட்டங்களையாவது செய்ய முடிந்தது. (நீங்கள் உட்பட பலர் அதில் பங்கெடுத்திருக்கவும் இல்லை.. முன் வரவும் இல்லை.)

அப்படி இதுவும் ஏதேனும் ஒரு திசையில் நகரட்டும். முயற்சி இன்றோ நாளையோ கைகூடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் முயற்சிகளைத் தொடர்வதும்.. இது விடயத்தில் விழிப்புணர்வை அறிவூட்டலை தொடர்ந்து பேணிக் கொள்வதும்.. முயற்சி கைகூட வசதியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

அதுமட்டுமன்றி நான் நினைக்கிறேன்.. ஒரு காத்திரமான நம்பிக்கைக்குரிய அழைப்பை இது தொடர்பில் விட நிர்வாகம் உட்பட எல்லோரும் முன் வர வேண்டும். அப்போதுதான் இச்செயற்திட்டம் பற்றிய ஒரு நம்பிக்கை கள உறவுகள் மற்றும் வாசகர்கள் மத்தியில் தோன்றும். அப்போதுதான் பங்களிப்புக்களுக்கு ஆர்வம் உருவாகும். மற்றும்படி அவர்கள் இதை ஒரு கருத்தாடலின் பகுதியாக எண்ணி புறக்கணிக்கவும் வாய்ப்புண்டு.

வசம்பண்ணன்,

அவர்கள் தேசியவாதிகளாக இருக்கிறார்களோ இல்லையோ சிறீலங்காவில் மனித உரிமைகள் பற்றிப் பேசினா புலி ஆதரவு என்பது போல உங்கள் பார்வையிலும் தமிழ் தேசியத்தை உச்சரித்துவிட்டால் அதை உச்சரிப்பவர் தேசியவாதி என்றாகி விடுகின்றார். அது தமிழ் இனத்தின் தேசியம் என்பதை விளங்கிக் கொள்வீர்கள் என்றால் நீங்களும் உங்களை ஒரு தமிழ் தேசியவாதி ஆகவே உணர்வீர்கள்.. :D

Edited by nedukkalapoovan

இதுவேண்டுகோள்...

மட்டம் தட்டல்கள் தவிர்ப்போம், கருத்துக்களால் ஒன்றிணைவோம்...

கைகோர்ப்போம்...

அஜீவன் அண்ணன்,

ஏலவே நேசக்கரத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது கூட இப்படித்தான் ஆகும் என்று எண்ணி இருப்பினும் குறைந்தது 3 திட்டங்களையாவது செய்ய முடிந்தது. (நீங்கள் உட்பட பலர் அதில் பங்கெடுத்திருக்கவும் இல்லை.. முன் வரவும் இல்லை.)

அப்படி இதுவும் ஏதேனும் ஒரு திசையில் நகரட்டும். முயற்சி இன்றோ நாளையோ கைகூடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் முயற்சிகளைத் தொடர்வதும்.. இது விடயத்தில் விழிப்புணர்வை அறிவூட்டலை தொடர்ந்து பேணிக் கொள்வதும்.. முயற்சி கைகூட வசதியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

அதுமட்டுமன்றி நான் நினைக்கிறேன்.. ஒரு காத்திரமான நம்பிக்கைக்குரிய அழைப்பை இது தொடர்பில் விட நிர்வாகம் உட்பட எல்லோரும் முன் வர வேண்டும். அப்போதுதான் இச்செயற்திட்டம் பற்றிய ஒரு நம்பிக்கை கள உறவுகள் மற்றும் வாசகர்கள் மத்தியில் தோன்றும். அப்போதுதான் பங்களிப்புக்களுக்கு ஆர்வம் உருவாகும். மற்றும்படி அவர்கள் இதை ஒரு கருத்தாடலின் பகுதியாக எண்ணி புறக்கணிக்கவும் வாய்ப்புண்டு.

நெடுக்ஸ்

என்னால் முடிந்ததில் பங்கு கொள்வேன்.

முடியாததில் தலை போட மாட்டேன் அல்லது

முடியாததில் கைபோடவோ

அவர்களது பாதையை தடை செய்யவோ முயல மாட்டேன்.

எனது பணி மற்றும் கிடைக்கும் நேரங்களில்

செய்ய முடிந்தவற்றுக்கு மட்டுமே உறுதி மொழி கொடுப்பேன்.

சொன்னால்

என்ன பிரச்சனை வந்தாலும்

அதை அரை குறையாக விட்டு செல்ல மாட்டேன்.

முடியாது என தெரிந்தால்

ஆரம்பத்திலேயே முடியாது என்று

நேரடியாகவே சொல்லிவிடுவேன்.

அல்லது பேசாமல் இருந்துவிடுவேன்.

ஏற்றுக் கொண்டதை நடுவே கைவிடுவதும்

முடியாது என்பதை பார்க்கலாம் என

காலம் தள்ளி வெறுக்க வைப்பதும் எனக்கு செய்ய முடியாதது.

இதை சிலர் விரும்புவது உண்டு.

பலர் வெறுப்பதுண்டு.

ஆனால் எனக்கு இதுவே வழக்கமாகி விட்டது!

பல முக்கிய அழைப்புகளை கூட நேரடியாகவே

பல தருணங்களில் முடியாது என தவிர்த்திருக்கிறேன்.

நெடுக்ஸ்

முடியாதது அல்லது இயலாத ஒன்றில்

அதையே நான் செய்திருப்பேன்.

இங்குள்ள பிரச்சனை வேறு............

உங்கள் பணிக்கு உதவுவேன்.

மின்னுவதெல்லாம் பொன்னும் அல்ல

இருட்டில் தெரிவதெல்லாம் பேயுமல்ல.

எனவே எனக்கு

இப்படியான பிரச்சனைகளை பார்த்து பழகியிருக்கிறது.

அதை எல்லாம் விடுத்து

முயற்சிகளை தொடருங்கள்.............

  • கருத்துக்கள உறவுகள்

இதுவேண்டுகோள்...

மட்டம் தட்டல்கள் தவிர்ப்போம், கருத்துக்களால் ஒன்றிணைவோம்...

கைகோர்ப்போம்...

">

இதுவேண்டுகோள்...

மட்டம் தட்டல்கள் தவிர்ப்போம், கருத்துக்களால் ஒன்றிணைவோம்...

கைகோர்ப்போம்...

">

பாராட்டுகளுக்கு நன்றி...

நெடுக்கின் எண்ணம் காலத்தின் தேவை...

அஜீவனின் பங்களிப்பு அதற்குத் தேவை.....

வசம்பின் ஆலோசனை அதற்கு உரம்...

ஆனால் மனங்களோ பல திசைகளில்...

இத்திசைகளை ஒன்று சேர்க்கமுடியுமா என சிந்தித்தேன்.

இப்போது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது...

நிச்சயமாக விளையாட்டுக்கு இதைச் செய்யவில்லை...

எம்மால் முடியும்...

  • கருத்துக்கள உறவுகள்

காய்க்கிற மரம் கல்லெறி வாங்கித்தான் ஆகவேண்டும்!

காய்ப்பதா வேண்டாமா என்ற முடிவை மட்டுமே உங்களால் எடுக்க முடியும். கல் எறிவதா வேண்டாமா என்ற முடிவை எடுப்பவர்கள் அதனை பார்ப்பவர்கள். கலைஞர்கள் இதை நினைவில் கொள்வது மிக நன்று!

அஜீவன் அண்ணா அவர்களின் சிரமங்கள் யாவரும் அறிந்தததே...... இருப்பினும் நான் யாழைவிட்டு வெளியேறுகிறேன் என நீங்கள் முன்பு எழுதியது..... உங்களை கொஞ்சம் இழக்காரமாக எண்ணவேண்டிய நிலைக்கு எமை தழ்ழியது. அதன் கரணகர்த்தா நீங்களே. கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும் என நீங்களே எழுதிகொண்டு விமர்சனங்களில் இருந்து நான் ஒதுங்குகிறேன் என்பது ஒன்றோடு ஒன்று ஒவ்வாதது என்பது நீங்கள் அறிந்ததுதானே.

நெடுக்காலபோவானின் ஆரம்ப விமர்சனத்தில் எந்த தவறையும் என்னால் காணமுடியாமல் உள்ளது. பல முறை படித்துவிடடேன். இலங்கையின்... கலை பற்றி ஆரம்ப காலம்தொட்டு இன்று வரை தொடும்போது? எத்தனையோ இன்னல்களுக்கும் மத்தியில். சாதரண அரிசிக்கே தடைக்குள்ளான இடத்தில் இருந்து எத்தனையோ குறும்படங்களை எடுத்திருக்கிறார்கள் அது எவ்வாறு மறைந்து போகும்? அது பற்றி நீங்கள் அறிந்திராது விடின் தவறில்லை. ஆனால் அதை ஒருவர் சுட்டிகாட்டும்போது ஏற்க மறுப்பது. அல்லது கத்தினால்தான் தேசியமா? என்றுவிட்டு இருட்டடிப்பு செய்வது நிச்சயம் தவறானதே! விடுதலைபுலிகளை பயங்கரவாதிகள் என தமது அரசாங்கமே தடைவிதித்து வைத்தபோதிலும் ........ ஒர் அவூஸ்ரேலிய தொலைகாட்சி நிறுவனமும் அமெரிக்கா சின் ன் செய்திசேவையும் புலிகளின் கள படப்பிடிப்பாளர்களை பற்றியும் அவர்கள் படும் கஸ்டங்கள் பற்றியும் ஒரு விபரண படத்ததை தாயரித்து வெளியிட்டார்கள். காரணம் அது எவ்வாறன கஸ்டங்களை உடையது என்பதை அதே துறையில் உள்ள இன்னொருவனே அறிவான். அதுபோல நீங்களும் ஒரு கலைஞனாதலால் தாயகத்து குறும்படங்கள் பற்றி அறிவேண்டியவராகின்றீர்கள் என்பதே எனது தாழ்மையான எண்ணம்.

சொந்தபெயரில் வந்து எழுதுங்கள் என அறைகூவல் விடுத்தீர்கள். பின்பு நீங்களே உங்கள் உறவினர்கள் கொழும்பில் இருக்கிறார்கள் என எழுதுகின்றீர்கள். உண்மையை நான் மறைக்கிறேன் என்று நீங்களே ஒப்பு கொள்கின்றீர்கள் இந்த இடத்தில். தமிழனாக பிறந்ததால் மட்டும் எத்தனையோ துன்பங்களை நாங்கள் (நீங்களும்தான்) அனுபவித்திருக்கிறோம் உங்களின் நிலைமையை எங்களால் நிச்சயமாக புரிந்துகொள்ள முடியும். உங்களது உறவினர்களையும் உங்களது படைப்புக்களையும் காக்கவேண்டிய கடமை உங்களுக்கு இருக்க வேண்டியதே. அதே போலதான் உங்களின் படைப்புகளை காப்பாற்றுவதற்காகவா சிங்களத்தை துக்கி நிறுத்துகின்றீர்கள் என்ற கேள்வியை முன்வைப்பது அதை பார்க்கும் ஒரு தழினுக்கு இயல்பாகவே தோன்ற கூடிய ஒரு உணர்வு. இங்கே சிலர் குறிப்பிடுவதுபோல் புலியும் தேசியமும் இருக்க வேண்டிய எந்ந அவசியமும் இல்லை தமிழன் என்ற அடையாளத்துடன் பிறந்த பிறப்பே போதும். இது உங்களுக்கு சிக்கலை தர கூடிய ஒரு கேள்வி. இங்கே உங்களின் சாமர்தியத்தைதான் நான் எதிர்பார்த்தேன் .......... நீங்கள் நான் ஒதுங்குகிறேன் என்பது எனக்கு ஏமாற்றாமாக இருந்தது. அதனால்தான் முடிந்தவைகளையும் திரும்ப கிளறவேண்டிய ஒரு துர்ரதிஸ்ட நிலை!

கலைஞர்களின் வாழ்வு கடினமானதே. மற்றவரை சந்தோசபடுத்த அவர்கள் எத்தனையோ கஸ்டங்களை படுகின்றார்கள்..... அதற்கு உறுதியான மனமும் கடின உழைப்பும் அவசியமானது இடைவிடாத முயற்சிகள்தான் பல வெற்றிகளை கொடுத்திருக்கின்றன. உண்மையில் நீங்கள் இலங்கை சிறைபற்றி குறும்படம் தாயரிக்க முயற்சி செய்தால் என்னால் ஆன பங்களிப்பை பொருளாதார ரீதியில் கூட செய்ய ஆவலாய் உள்ளேன் எப்போதும் தொடர்புகொள்ளுங்கள்!

(அஜீவன் அண்ணா எனது கருத்து உங்களால் புரிந்துகொள்ள கூடியதாக இருக்குமென நான் நினைக்கிறேன். இங்கே உங்கள் மனதை தொடும்படியாக எதுவுமே இல்லை........ ஆனாலும் ஓரே விடயம் வேறு ஆளுக்கு வேறுமாதிரியாக பட்டுவிடும் அதனால்தான் சொல்கிறேன்)

இதுவேண்டுகோள்...

மட்டம் தட்டல்கள் தவிர்ப்போம், கருத்துக்களால் ஒன்றிணைவோம்...

கைகோர்ப்போம்...

">

  • தொடங்கியவர்

தாயக குறும்படங்கள் பற்றியோ அல்லது வேறு ஆக்கங்கள் பற்றியோ விமர்சிப்பதென்பது மிகவும் கடினமான விடயம். சிலவேளை அவை தப்பபிப்பிராயத்துக்கும் இடமளிக்கலாம். தப்பபிப்பிராயம் ஏற்படக் கூடாது என்பதற்காக சிலவற்றைத் தவிர்த்தால், அது விமர்சகரது திறமையைக் களங்கப்படுத்தலாம்.. இப்படியான நிலையில், அஜீவனும் தாயகப் படைப்புகள் பற்றிய விமர்சனத்தைத் தவிர்த்திருக்கலாம் இல்லையா..?!

Edited by sOliyAn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.