Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழும் நானும் (பகுதி 12: குளக்காட்டான் அண்ணா)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சியாம் அண்ணாவின் (சாத்திரியாரின்) நகைச்சுவை கதைகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தன என்றால் அது மிகையாகாது. பகிர்ந்த தூயாவுக்கு என் நன்றிகள். மேலும் தொடருங்கள்.

  • Replies 235
  • Views 28.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

என்ன கேள்வியிது?கொஞ்சக்காலம் ஒரு மூலயிலையிருந்து இஞ்சை நடந்த கூத்துக்களை கண்டுகளிச்சவனாச்சே :lol:

கிகிகி அப்போ நான் எழுதுவது அனைத்தும் உங்களுக்கு தெரிந்த விசயங்கள் தான்..

தூயா

எதைச் செய்தாலும் சிறப்பாகவும் அழகாகவும் செய்யும் உங்கள் பாங்கு இங்கும் தெரிகினன்றது. உங்களின் இந்த முயற்சி புதிய உறவுகளுக்கு பயன் தரக் கூடியது. மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

:wub: சியாமின் பதிவில் முக்கியமான ஒரு விடயத்தை விட்டுவிட்டீர்கள். அவ்விடயத்தில் உங்கள் பங்கும் அளப்பரியது. எங்கே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். :D

Edited by Vasampu

தூயா முகம்ஸ் சியாம் அண்ணா பற்றிய பதிவுகள் அருமை.

முகத்தார் கதைச்சாலே நகைச்சுவையாகத்தான் கதைப்பார்.

அவர் இப்ப களத்துக்கு வாறதில்லை என்பது கவலை தான்,

வசம்பண்ணா எனக்கு அது என்ன என்டு தெரியும். நானே சொல்லவா?

இல்லை தூயா சொல்லும்வரையும் காத்திருக்கவா??

இரசிகை

தூயா எப்படியும் கணடு பிடித்து விடுவா. அவவிற்கு ஞாபகம் வராவிட்டால் பின்பு நாம் உதவுவோம்.

  • தொடங்கியவர்

தூயா

எதைச் செய்தாலும் சிறப்பாகவும் அழகாகவும் செய்யும் உங்கள் பாங்கு இங்கும் தெரிகினன்றது. உங்களின் இந்த முயற்சி புதிய உறவுகளுக்கு பயன் தரக் கூடியது. மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

:wub: சியாமின் பதிவில் முக்கியமான ஒரு விடயத்தை விட்டுவிட்டீர்கள். அவ்விடயத்தில் உங்கள் பங்கும் அளப்பரியது. எங்கே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். :D

என்னோட பங்குமா???? :unsure::lol:

எங்கள் புலத்து புலம்பலை சொல்கின்றீர்களா? ஐரோப்பிய அவலம் தானே?

சாத்திரி பற்றி பின்னர் எழுதலாம் என்பதால் தான் இதில் குறிப்பிடவில்லை.

சில விடயங்களை சியாம் அண்ணா என எழுதுவதே எனக்கு பிடித்திருந்தது..

சில விடயங்களை சாத்திரி என எழுதலாம் என விட்டுவிட்டேன்... :)

இது தானா? வேறு ஏதுமா? இதில் என் பங்கு எங்கே இருக்கு வசம்ஸ்??

Edited by தூயா

  • கருத்துக்கள உறவுகள்

சியாமைப்பற்றிய பல பழைய தகவல்களை யாபகமூட்டியதற்கு நன்றிகள். இந்திய இராணுவச்சதியினால் தகப்பனை இழந்த சியாம்(சாத்திரி) அவர்களின் படைப்புக்களில் சியாமைவிட சாத்திரியின் படைப்புக்கள் தான் என்னை அதிகளவில் கவர்ந்தது.

  • தொடங்கியவர்

சியாமைப்பற்றிய பல பழைய தகவல்களை யாபகமூட்டியதற்கு நன்றிகள். இந்திய இராணுவச்சதியினால் தகப்பனை இழந்த சியாம்(சாத்திரி) அவர்களின் படைப்புக்களில் சியாமைவிட சாத்திரியின் படைப்புக்கள் தான் என்னை அதிகளவில் கவர்ந்தது.

சாத்திரியின் படைப்புகள் சிறந்தவை

ஆனால் சியாம் அண்ணா தான் சிறந்தவர் ;)

கிகிகீ

  • கருத்துக்கள உறவுகள்

கிகிகீ

உது என்ன மொழி. தமிழில் தான் தமிழர்களோடு உரையாட வேண்டும். :wub:

  • தொடங்கியவர்

உது என்ன மொழி. தமிழில் தான் தமிழர்களோடு உரையாட வேண்டும். :wub:

இது தமிழில் சிரிப்பது ;)

  • கருத்துக்கள உறவுகள்

புதியவர் பழையவர் என்ற பாகுபாடின்றி.. கள உறவுகள் அனைவரையும் பற்றி தன் கூரிய பார்வைகளால் கண்டு அழகுற தெவிட்டாமல் தாய்த் தமிழில் தரும் தங்கை தூயாவுக்கு பாராட்டுக்கள் பல.

கள உறவுகள் பற்றி பல அறியாத சங்கதிகளும் அறியக் கிடைக்கிறது. குறிப்பாக சியாம்..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவு பல தகவல்களை பெறக்கூடியதாக இருக்கிறது.தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரையும் நேரில் பார்க்காமல் , அவர்களின் எழுத்தின் மூலம் குணாதிசயங்களை கணிக்கும் ஆற்றல் உங்களிடம் உள்ளது , தொடருங்கள் தூயா .

என்னோட பங்குமா???? :D:lol:

எங்கள் புலத்து புலம்பலை சொல்கின்றீர்களா? ஐரோப்பிய அவலம் தானே?

சாத்திரி பற்றி பின்னர் எழுதலாம் என்பதால் தான் இதில் குறிப்பிடவில்லை.

சில விடயங்களை சியாம் அண்ணா என எழுதுவதே எனக்கு பிடித்திருந்தது..

சில விடயங்களை சாத்திரி என எழுதலாம் என விட்டுவிட்டேன்... :lol:

இது தானா? வேறு ஏதுமா? இதில் என் பங்கு எங்கே இருக்கு வசம்ஸ்??

பட்டிமன்றம் ஒன்று நடந்ததை மறந்து விட்டீர்களே?? ஒரு அணிக்கு சியாம் தலைவர். மற்றைய அணிக்கு நான் தலைவர். உங்களுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையா?? இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியதே நீங்கள் தானே. அருமையாக செயற்பட்டீர்கள். உங்கள் திறமைகளுக்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது இந்நிகழ்ச்சி. இப்பட்டிமன்றம் தான் முதலாவது பட்டிமன்றமாக யாழ்க்களத்தில் அமைந்தது. நீதிபதியாக வந்து தன் பங்கை அருமையாகச் செய்திருந்தார் அருமை நண்பர் சோழியான். எப்படி மறந்தீர்கள் இவற்றையெல்லாம்??

இதோ அதற்காண இணைப்பு .: http://www.yarl.com/forum3/index.php?showtopic=4990&st=0

Edited by Vasampu

சாத்திரியின் படைப்புகள் சிறந்தவை

ஆனால் சியாம் அண்ணா தான் சிறந்தவர் ;)

கிகிகீ

உங்கள் தீர்ப்பை நான் வழிமொழிகின்றேன். சியாமின் கருத்திலிருந்த நேர்மை, சாத்திரியில் மிஸ்ஸிங்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்கள்: வசம்பு

சாத்திரிக்கு வசம்பு நண்பனாக இருக்கிறார் என்பதை நினைத்திருக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சபேஸ் . :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சபேஸ் , தயவு செய்து உங்களது அவதார் படத்தை மாற்றுங்கள் .

அன்பான வேண்டுகோள் .

சரி.. உங்கள் ஆசைக்கு இணங்க எடுத்திட்டேன். :) உண்மையை சொன்னா எனக்கும் அவ்வளவாக பிடித்திருக்கவில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு முறை நன்றி சபேஸ் .

  • தொடங்கியவர்

பட்டிமன்றம் ஒன்று நடந்ததை மறந்து விட்டீர்களே?? ஒரு அணிக்கு சியாம் தலைவர். மற்றைய அணிக்கு நான் தலைவர். உங்களுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையா?? இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியதே நீங்கள் தானே. அருமையாக செயற்பட்டீர்கள். உங்கள் திறமைகளுக்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது இந்நிகழ்ச்சி. இப்பட்டிமன்றம் தான் முதலாவது பட்டிமன்றமாக யாழ்க்களத்தில் அமைந்தது. நீதிபதியாக வந்து தன் பங்கை அருமையாகச் செய்திருந்தார் அருமை நண்பர் சோழியான். எப்படி மறந்தீர்கள் இவற்றையெல்லாம்??

இதோ அதற்காண இணைப்பு .: http://www.yarl.com/forum3/index.php?showtopic=4990&st=0

:) இனிமையான நினைவொன்றை எழுதியிருக்கின்றீர்கள் வசம்ப்ஸ்.. :)

  • தொடங்கியவர்

பகுதி 9

சென்ற பகுதியிலிருந்து "யாழில் எனக்கு கிடைத்த அண்ணன்கள்" என்ற தலைப்பில் சியாம் அண்ணாபற்றி எழுத ஆரம்பித்திருந்தேன். சியாம் அண்ணா பற்றி எழுதியது உங்களில் பலருக்கு பழைய நினைவுகளை கொண்டுவந்திருக்கும் என நினைக்கின்றேன். அந்த நினைவுகள் தொடர்வதற்காக சியாம் அண்ணா காலத்து சகோதரன் ஒருவரை பற்றி இப்பகுதியில் எழுத போகின்றேன். வாசிப்பதோடு நிறுத்திவிடாமல், நான் எழுதுபவர்களை பற்றி உங்களுக்கு தெரிந்த விடயங்களோ / அவர்களுக்கு ஒரு சின்ன செய்தியோ, வாழ்த்தோ, நன்றியோ தெரிவியுங்களேன்.

யாழில் எனக்கு கிடைத்த அண்ணன்கள் II

வசம்பு

123639436043ef6f04dacce.gif

யாழில் இணைந்தது: 17-October 04

வேறு பெயர்கள்: வசம்பர்: அழைக்கத் தொடங்கியது சின்னப்பு

குசும்பர்: அழைக்கத் தொடங்கியது முகத்தார்.

வேறு ஐடி: தெரியலை

நண்பர்கள்: சியாம், சின்னப்பு, முகத்தார்

அதிகம் எழுதியது: உலக நடப்பு

அது என்ன சியாம் அண்ணா காலத்து சகோதரன் என கேட்பீர்களே!! சியாம் அண்ணா யாழில் இணைந்தது ஆடிமாதத்தில், வசம்புண்ணா இணைந்தது ஐப்பசியில். மூன்றே மூன்று மாத வித்தியாசங்கள் தான். இது தான் காரணம். அத்தோடு, நான் இணைந்த நேரத்தில் எனக்கு யாழில் நடைபழக்கியவர்களில் இவரும் ஒருவர்.

வசம்பு அண்ணாவோடு யாழில் என் உறவு சற்றே வித்தியாசமானது. அதிகம் பேசிக்கொண்டதேயில்லை. யாழ் தொடர்பான தேவைகள் தோன்றும் போது மட்டும் தனிமடலில் தொடர்புகொண்டுள்ளோம். களத்திலும் ஒருவருடைய பதில்களுக்கெல்லாம் அடுத்தவர் வாதம் செய்ததேயில்லை. தேடி தேடி பதிலும் எழுதியதில்லை. ஆனால் என்னுடைய ஒவ்வொரு படைப்பிற்கும் வசம்பண்ணாவிடம் இருந்து உண்மையான விமர்சனம் கிடைக்கும். ஊக்கம் நிச்சயம் கிடைக்கும்.

வசம்பு அண்ணா எப்போதாவது தான் பதிவுகளை ஆரம்பிப்பார். ஆனால் அவை நிச்சயம் சுவாரசியமாக, விவாதத்தை தூண்டுவதாக இருக்கும். கவிஞர் தாமரை பற்றிய பதிவை இதற்கு ஒரு உதாரணமாக எடுக்கலாம்.

வசம்பு அண்ணாவும் சமையல்கட்டில் எழுத தவறவில்லை. எங்க சமையல்கட்டிற்கு அத்தனை மகிமை. செய்முறை எழுதாவிடினும், சில உதவிக்குறிப்புகளை வாரி வழங்கியுள்ளார். (எல்லாம் அனுபவம் போல) படித்து பயன் பெறுங்கள்.

வசம்பு அண்ணாவை பற்றி நான் அவதானித்த ஒரு விடயம், விவாதங்களில் அடிக்கடி "களத்து பெண்கள் என்ன சொல்கின்றார்கள் பார்க்கலாம்" போன்ற ஒரு வரி நிச்சயம் இருக்கும். பொல்லு குடுத்து அடி வாங்குவதில் அவருக்கு அத்தனை பிரியம். முன்னர் தமிழினி அக்கி தான் இதற்கு பல தடவைகள் நல்ல பதில்கள் எழுதியிருக்கின்றார். (கிகிகி)

சியாம் அண்ணாவை பற்றி எழுதிய போது, வசம்பண்ணாவே எங்கள் முதல் பட்டிமன்றத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றது என்ற அணியின் தலைவராக இருந்து, சிறப்பாக செயல்பட்டிருந்தார். சியாமண்ணாவும், வசம்பண்ணாவும் நண்பர்களா என ஆச்சர்யப்பட்டவர்கள் மறக்காமல் இதை படித்து பாருங்கள். யாழின் முதல் பட்டிமன்றமாக அமைந்த இந்த பட்டிமன்றத்தில் பல விடயங்கள் நடந்திருக்கு. அது பற்றி இன்னொரு பகுதியில் விவரமாக பார்க்கலாம்.

களத்தில் சிலர் ஆர்ப்பாட்டமாக நகைச்சுவையாக எழுதுவார்கள். சிலர் அமைதியாக எழுதிவிட்டு சென்றுவிடுவார்கள். வசம்பண்ணா அதில் நிச்சயம் இரண்டாவது வகை தான். அவரில் சில மறுமொழிகளை பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்திருக்கின்றேன். அவற்றில் சில:

"சூனியத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் செய்வினையில் நம்பிக்கை உண்டு. ஏனெனில் முன்பு தமிழில் செய்வினை செயற்பாட்டுவினை படித்தனான். "

"காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்மந்தம்? :?: :?: " இரண்டும் க வரிசையில் ஆரம்பிக்கின்றன. இது கூடவா தெரியவில்லை?"

முகத்தார், சின்னப்புவை அடிக்கடி வம்பிற்கு இழுக்கும் பழக்கம் எங்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு விசயம். இதில் வசம்பண்ணாவும் விதிவிலக்கல்ல என்பதற்கு என்னுடைய ஆதாரம்:

முகத்தாரின் சொந்தக்காரரொருவர் சுண்ணாகம் சந்தையில் முகத்தாரைக் கண்டு கதைத்தார். அப்போ

சொந்தக்காரர்: அட தம்பி இப்ப நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

முகத்தார் : ஊரிலே அப்பாவிற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றேன்.

சொந்தக்காரர் : ஓ நல்லவிடயம். அப்பா என்ன வேலை தம்பி செய்கிறார்?

முகத்தார் : சும்மாதான் இருக்கின்றார்

சொந்தக்காரர் : :roll: :roll: :roll: :roll:

சிலவருடங்கள் தினமும் வசம்பண்ணா எழுதுவதை பார்த்து வருகின்றேன். அதில் நான் அவதானித்த ஒரு விடயம், வசம்பண்ணா அனைவரையும் பெயர் சொல்லி தான் அழைப்பார். எங்களில் பலர் அண்ணா, அக்கா, தங்கை, தம்பி என குறிப்பிடுவோம். ஆனால் வசம்பண்ணா அப்படியல்ல. சரிதானே வசம்பண்ணா? அனைவரையும் ஒரே முறையில் மரியாதையாக தான் அழைப்பார், கதைப்பார், விவாதங்களில் பங்கெடுக்கும் போது விளிப்பார்.

வசம்பண்ணாவிடம் எனக்கு பிடித்த இன்னொரு விடயம், பாரபட்சம் பாராமல் திறமையாளர்களை ஊக்குவிப்பதும், நன்றி சொல்ல வேண்டிய இடங்களில் யார் என்றாலும் நன்றி சொல்வது தான். இவரை பார்த்து நானும் இந்த நல்ல விடயத்தை கற்றுக்கொண்டு செயல்படுத்த முயற்சிக்கின்றேன்.

ஒரு தடவை குருவி பபா சொன்னவர் "யாழ் ஒரு பேருந்து போல, உறுப்பினர்கள் பயணிகள் போல ஏறி இறங்கிக்கொண்டேயிருப்பார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு ஒரு திறமையான கருத்தாளர். நகைச்சுவையானவர். நிறையப் பொது விடயங்களைப் படித்து வைத்திருப்பவர்.

ஆனால் அவர் விவாதம் செய்கின்ற போக்கு ஒரு மாதிரியாகத் தான் இருக்கும். அவருடைய கருத்துக்கு யாரும் பதில் எழுதினால், உடனே வடிவாகப் படித்து விட்டு எழுது, விளக்கமில்லாமல் எழுததாதே என்று கருத்துக்குக் கருத்து எழுதிக் கொண்டிருப்பார்.

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

வசம்புவின் கருத்துக்கள் வித்தியாசமானவை. சிந்திக்க தூண்டுபவை. பிடித்தது கருத்து எழுதுபவரை( செய்தி இணைப்பவரை) அடிக்கடி கேள்வி கேட்பார். நிறைய வாசிப்பார் போல தெரிகிறது. மொத்தத்தில் நல்ல கருத்தாளர். தூயாவுக்கு நன்றி.

நல்ல பதிவு தூயா. தொடருங்கள்.

  • தொடங்கியவர்

ஊக்கம் தரும் என் யாழ் உறவுகளுக்கு நன்றிகள் :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.