Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய ஊர் நினைவுகள்.....

Featured Replies

அன்றொரு நாள்... சண்டிலிப்பாயில் இருந்த காலம்...

கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில படிச்சனான் ..ஆறு தலை முறை வீடு..வீட்டில இருந்து பள்ளிக்கூடம் 2 கிலோமீட்டர் தூரம் இருக்கும்...இடையில வயல் வெளி.. வீட்டில இருந்து பள்ளிக்கூடம் வெளிக்கிட்டம் என்றால்... அப்பிடியே பின்னால பையைக் கொழுவிக்கொன்டு சைக்கிள்ளை கந்தரோடை வயல் வெளியைத் தாண்டி காற்று தள்ள தள்ள ஓடுறது ஒரு சுகம்தான்...வீட்டில இருந்து வரேக்கை.... வலப்புறவயலில கண்ணகை அம்மன் கோவில்.. இடப்புற வயலில அளவெட்டி மாரி அம்மன் கோவில், நடுவில தவறனை ஒண்டு வேறை...

கார்த்திகை, மார்கழியில.. வழுக்கை ஆற்றின் படுக்கயில இரண்டு பக்கமும் வயல் பச்சைப்பசேல் எண்டு இருக்கும்..

மார்கழி,தை மாதம் எண்டா அதால நடந்து வரும் எங்கடை மட்டங்களுக்கு கொண்டாட்டம்..வீதியோர வயல்களுக்குள்ளை இறங்கி

நெல்லுக்குடலை சாப்பிடுறதில ஒரு சந்தோஷம்.. அதன் சுவையே ஒரு தனி தான்... சிலவேளையில வீதியால போற பெருசுகள் அதைப் பார்த்துட்டு.. தம்பி டேய்.. அது யார்டா குடலை களவெடுக்கிறது எண்டு ஒரு சத்தம் போட.. துண்டைக்கானோம் துணியைக் கானோம் எண்டு பின்னங்கால் பிடரீல அடிபட ஓடுறது...ம்ம்.. அது ஒரு காலம்..

நான் சைக்கிலில போறதுக்கு கவலைப்பட்ட காலம் அது ஒண்டு தான்.. ஏனென்டா என்னால அந்த நெல்லுக்குடலை அடிக்கடி சாப்பிட முடியுறதில்லை..

மற்ற நாட்களிலலையும் வயலில சணல் எண்டொரு அவரைத்தாவரம் போடுவினம்..அது வேகமாக வளரும்...மேல அழகான மஞ்சள் பூக்கள் பூக்கும்..எல்லா வயலும் பூத்துருக்கேக்கை அந்த அழகைக்கான கண்கோடி வேண்டும்..அது காய் காய்த்து.. காய்ந்ததன்பிறகு.. அந்த வயல் ஒரமா நடந்தால்.. எல்லா சணலும் ஆடி கிலு கிலு எண்டு சத்தம் போடுவது அழகோ அழகு..

சிலவேளயலில நான் யோசிப்பன்.. இதென்னடா இது.. இத நடுகினம்.. இருந்தாப்போல எல்லாத்தையும் வெட்டி திருப்பி ஒண்டையும் விளைச்சலெண்டு வீட்டை கொண்டுவராம வயலிலயே தாக்கினம் எண்டு...

எங்கடை விவசாயிகள் புத்திசாலிகள்.. அவையளுக்கு தெரியும்.. என்னத்தை பயிரிட்டா நிலத்தில இழந்த நைதரசனை மீளப்பதிக்கலாம் எண்டு..அசற்றொபக்டர் எண்டொரு பக்டீரியா சணலின்ட வேர் முடிச்சில இருக்கிறதாயும் அது வளியில இருக்கிற நைதரசனை நிலத்தில பதிக்கும் எண்டும்.. நான் பிறகு தான் ..கேள்விப்பட்டன்...

இப்பிடித்தான் ஒரு நாள் கண்னகை அம்மன் கொவிலில ஒரு இரவுத் திருவிழா.. கோயிலில சாமிக்குப்பின்னால ஆக்கள்.. குரங்கு,அனுமார் வேசம் எல்லாம் போட்டு முகமூடி போட்டுக்கொண்டு ஆடுவினம்...அப்ப எங்கள்தரவளிகள்.. அந்த உருவத்திண்டை வாலைப்பிடிச்சு இழுத்து. அவங்களுக்கு கோபத்தை மூட்டுவாங்கள்..அவங்கள் திரும்பிறதுக்கிள்ளை சிட்டாய்ப் பறந்துடுவாங்கள்..ஒரு முறை இப்பிடித்தான் ஏற்கனவே கோபமூட்டப்பட்ட அந்தக்குரங்கு.. அடுத்தவர் வந்து தொட்டா பிடிச்சு நாலு சாத்துறது எண்ட தீர்மானத்தில இருந்திருக்கிறார்...முன்னம் நடந்த விடயம் தெரியாத நான்.. வாலை பிடிச்சுப் போட்டன் பாருங்கோ....அந்தாள் என்னை துரத்த தொடங்கீட்டுது.. அம்மா கடவுளே இப்ப நினைச்சாலும் நெஞ்செல்லாம் நடுங்குது அப்பிடி ஒரு ஒட்டம் வயல் வெளிக்குள்ளால..

நல்ல காலம் அவர் மேல பாரமான உடுப்பெல்லாம் போட்டிருந்தவர் எண்ட படியா என்னைப்பிடிக்க முடியேல்லை...ஒரு விஷயம் என்னென்றால் வயலில அறுவடை எல்லாம் முடிஞ்ச காலம்... வயலில ஒரு பயிரும் இல்லை.. அதோட இன்னொரு விஷயம்.. ஆங்கங்கே வயலில கிணரெல்லாம் நில மட்டத்தோட தான் இருக்கும்.. தெய்வாதீனமா ஒண்டுக்கையும் விழாம தப்பீட்டன்..அப்பிடி ஏதும் நடந்திருந்தா நீங்கள் எல்லாம்

நான் கதை எண்டு எழுதும் இந்த அலம்பலை கேக்காமலே தப்பி இருக்கலாம்....

இப்பிடி பள்ளிக்கூடம் போய் விட்டு..

சில நாட்களில வீட்டை வரேக்கை எதிர்க்காத்தாக இருக்கும்.. பள்ளிக்கூடம் 2 10 க்கு தான் விடுவினம்.. நல்ல பசியிலை அந்த காத்துக்கை ஓடிப்போய் வீட்டு ஒழுங்கேக்கை இறங்கினா சொர்க்கத்தை கண்டமாதிரி இருக்கும்.. இரண்டு புறமும் பூவரசு மரம் வேலியில சடைச்சு வழந்து இருக்கும்..நல்ல நிழல்.. அதோடை குளிர்மையாயும் இருக்கும்.. வீட்டில அம்மா வாசலில நிப்பா.. அம்மா சாப்பாடு... எண்டு கத்திக்கொண்டே வீட்டை புகுந்தன் எண்டா.. நான் உடுப்புக் கழட்டுவதற்கு இடையில.. சாப்பாடு தயாராக இருக்கும்....

அப்ப எங்கடை பள்ளிக்கூடத்தில...தற்பரானந்த

Edited by uthayam

  • கருத்துக்கள உறவுகள்

உதயம் அந்த கண்ணகையம்மன் கோயில் கேணி சண்டிலிப்பபாய் கல்வளை பிள்ளையார் கேணி சீரணி அம்மன் கோயில் கேணி மருதடி கேணி இதுகளுக்குள்ளை தான் நான் நீச்சல் பழகினனான்.பெரிய நீச்சல் வீரனாாய் வந்திருக்க வேண்டியவன் கேணிக்குள்ளை நீச்சல் பழகினதாலை 100 மீற்றருக்கு மேலை நீந்த இயலாமல் போச்சுது :rolleyes::rolleyes::unsure:

  • தொடங்கியவர்

நீங்கள் சொல்லுரதைப் பார்த்தால்.. நீங்கள் நீந்தப்பழகினது கண்ணகை அம்மன் பிள்ளையார் கோவில் தீர்த்தம் போல கிடக்கு...

அதைச்சுற்றி இருக்கிற சின்னச்சின்ன கிடங்குகளிலயும்.. கிணறுகளிலையும் ஒவ்வொரு வருடமும் யாராவது... விழுந்து சாவினம் எண்டு கேள்விப்பட்டு இருக்கிறன்.. என்னோட படிச்ச கேதீ.. எண்ட பெடியனும் விழுந்து செத்தவன் :rolleyes: ....

:rolleyes: சாத்திரி தப்பீட்டிங்கள்.... :unsure:

Edited by uthayam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதயம் அந்த கண்ணகையம்மன் கோயில் கேணி சண்டிலிப்பபாய் கல்வளை பிள்ளையார் கேணி சீரணி அம்மன் கோயில் கேணி மருதடி கேணி இதுகளுக்குள்ளை தான் நான் நீச்சல் பழகினனான்.பெரிய நீச்சல் வீரனாாய் வந்திருக்க வேண்டியவன் கேணிக்குள்ளை நீச்சல் பழகினதாலை 100 மீற்றருக்கு மேலை நீந்த இயலாமல் போச்சுது :rolleyes::rolleyes::unsure:

இப்போது வேறு தண்ணியில் சாதனை படைக்கின்றீர்களே, அது போதாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உதயம்,.............

உங்கள் கதை நன்றாக இருந்தது . நெல்லு பொத்தி என்றால் என்ன?........

மிக ..மிக இளம் கதிர் (குடலை பிடுங்குதல் )சரியா? .............

நன்றியுடன் .... நிலாமதி

  • தொடங்கியவர்

வணக்கம் உதயம்,.............

உங்கள் கதை நன்றாக இருந்தது . நெல்லு பொத்தி என்றால் என்ன?........

மிக ..மிக இளம் கதிர் (குடலை பிடுங்குதல் )சரியா? .............

நன்றியுடன் .... நிலாமதி

மெத்தச்சரி... கதை மூலத்தில் மாற்றி உள்ளேன்...

நன்றி....

Edited by uthayam

அருமையான நினைவூமீட்டல்

இவையெல்லாம் அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை எனினும்

கேட்க்கும் போதே சந்தோசமாக இருக்கு :rolleyes:

தொடர்ந்து எழுதுங்கள்...வாசிக்க ஆவலாக உள்ளது

  • தொடங்கியவர்

மிக்க நன்றி தூயா.. எனக்கு கடைக்கும் நேரங்களிலெல்லாம்,என்னால் முடிந்ததை எழுதுகிறேன்...

உங்கள் வழ்த்துக்களுக்கு நன்றிகள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதயம் சத்தியமா ஒரு கணம் மனசை உலுக்கி போட்டுது,கதை உண்மையோ கற்பனையோ தெரியவில்லை,ஆனால் அந்த வயல்,அதே காற்று,அதே மண் வாசம்....அப்படியே வேணும் உதயம், .....எழுத்தாற்றல் நல்லா இருக்குது.வழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

இது கற்பனை இல்லை.. உண்மை.. எனது சொந்த அனுபவம்..உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சங்கிலியன்

  • தொடங்கியவர்

கருதுக்கள் எழுதிய கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்...

தொடர்ந்து எழுதுங்க்ள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிராமிய வாசனை மனுசனை பின்னி எடுக்குதப்பா :( வாழ்த்துக்கள் உதயம் :D

  • கருத்துக்கள உறவுகள்

கற்ப்பனையோ நிஜமோ அதை அனுபவித்த ரசனை மாறாமல் எழுத்தில் வடிக்க ஒரு திறமை வேண்டும்.அது உங்களிடம் நிறையவே இருக்கு.தொடர்ந்து எழுதுங்கள்.பாாரட்டுக்கள்.

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கு..நன்றிகள்.. குசா அண்ணா மற்றும்.. சஜீவன் அண்ணா.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கற்பனைக் கதைகள், உண்மைச் சம்பவங்களை உயிரோட்டத்துடன் எழுதுவது என்பதே ஒரு திறமை. இந்த உண்மைக்கதையை மட்டுமல்ல மற்றவர்கள் யாழ் களத்திலே எழுதும் இப்படியான கதைகளை நகைச்சுவையோடு கலந்து எழுதுவதைப் படித்துச் சுவைத்திருக்கிறேன். ஆனால் இவற்றைப் படிக்கும்போது எனக்குள் ஓர் ஆதங்கம் உதயமாகின்றது. நாம் தமிழை வளர்க்க எவ்வளவோ பாடுபடுகிறோம். அதிலும் ஆங்கிலம் கலக்காது, இலக்கணப் பிழைகள் விடாது எழுதவேண்டும் என்பதில் பலரும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். ஆனால் இப்படியாக பேச்சுத்தமிழில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டோமானால் நாளடைவில் நாமே தவறிழைத்தவர்கள் ஆகிவிடுவோம். எனவே இனிமேல் எழுதுபவர்கள் தயவுசெய்து பேச்சுத்தமிழில் எழுதவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வது என்னவெனில் உயிரெழுத்துக்களின் முன்னால் "ஓர்" என்று எழுதவும்.

"ற்" இற்குப் பக்கத்தில் "க்" வரக்கூடாது. இவற்றையாவது கவனித்து எழுதவும்.

எழுதிவிட்டு களத்திற்கு அனுப்ப முன்னர் குறைந்தது ஒரு முறையாவது திரும்பவும் படித்துப் பார்க்கவும். அப்போதுதான் ஏதாவது எழுத்துப் பிழைகள் இருந்தால் திருத்த முடியும்.

நன்றி.

  • தொடங்கியவர்

செல்வமுத்து..உங்கள் கருத்துடன் நூறு வீதம் உடன்படுகிறேன்...

நான் என்னால் முடிந்த அளவு எழுத்துப்பிழைகளை தவிர்த்தே வந்திருக்கிறேன்....

நான் தமிழ் இலக்கணத்தில் மிகுந்த புலமையுடயவன் அல்ல...அத்தோடு இலக்கியத்துறை சார்ந்தவனும் இல்லை(வாசிப்புப் பழக்கம் மாத்திரமே).... அனுபவங்கள் அல்லது உண்மைச்சம்பவங்கள் எழுதும் போது பேச்சுத்தமிழில் எழுதும் போது சுவை அதிகம் என நான் நினைத்தேன்...

எது எவ்வாறெனினும் எனது எழுத்தினால் தமிழ் கொலை செய்யப்படும் என நீங்கள் கருதினால்.. நான் கதை எழுதுவதை மனப்பூர்வமாக நிறுத்திக் கொள்கிறேன்..

மிக்க நன்றி...

செல்வமுத்து..உங்கள் கருத்துடன் நூறு வீதம் உடன்படுகிறேன்...

நான் என்னால் முடிந்த அளவு எழுத்துப்பிழைகளை தவிர்த்தே வந்திருக்கிறேன்....

நான் தமிழ் இலக்கணத்தில் மிகுந்த புலமையுடயவன் அல்ல...அத்தோடு இலக்கியத்துறை சார்ந்தவனும் இல்லை(வாசிப்புப் பழக்கம் மாத்திரமே).... அனுபவங்கள் அல்லது உண்மைச்சம்பவங்கள் எழுதும் போது பேச்சுத்தமிழில் எழுதும் போது சுவை அதிகம் என நான் நினைத்தேன்...

எது எவ்வாறெனினும் எனது எழுத்தினால் தமிழ் கொலை செய்யப்படும் என நீங்கள் கருதினால்.. நான் கதை எழுதுவதை மனப்பூர்வமாக நிறுத்திக் கொள்கிறேன்..

மிக்க நன்றி...

என்னா நயினா ...இப்படி சொல்லிட்டே ..சோக்கா கதை சொல்லிக்கிட்டு இருந்திட்டு இடையில் விட்டுட்டு போறன் என்று சொல்லிறியே ...நியாயங்களா....

சும்மா ..பென்சனில இருக்கிற பெரிசுகளும் நேர்சறி போற சிறிசுகளும் ஏடும் சொல்லிக்கோணும் என்று பலடும் பட்டும் சொல்லிக்குக்கும்....ஊதை பட்டி அல்லாம் கண்டுக்காதை நயினா...உனக்கு பட்டதை உன்ரை பாணியில் எழுது ...அட கொப்பரானை கெஞ்சிக்கிறேன் ..உன்ரை பாணியில் எழுதிக்கிறதை விட்டுடாதை நயினா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வமுத்து..உங்கள் கருத்துடன் நூறு வீதம் உடன்படுகிறேன்...

நான் என்னால் முடிந்த அளவு எழுத்துப்பிழைகளை தவிர்த்தே வந்திருக்கிறேன்....

நான் தமிழ் இலக்கணத்தில் மிகுந்த புலமையுடயவன் அல்ல...அத்தோடு இலக்கியத்துறை சார்ந்தவனும் இல்லை(வாசிப்புப் பழக்கம் மாத்திரமே).... அனுபவங்கள் அல்லது உண்மைச்சம்பவங்கள் எழுதும் போது பேச்சுத்தமிழில் எழுதும் போது சுவை அதிகம் என நான் நினைத்தேன்...

எது எவ்வாறெனினும் எனது எழுத்தினால் தமிழ் கொலை செய்யப்படும் என நீங்கள் கருதினால்.. நான் கதை எழுதுவதை மனப்பூர்வமாக நிறுத்திக் கொள்கிறேன்..

மிக்க நன்றி...

விமர்சனங்களை சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்.உங்கள் பயணத்தை தொடர என் வாழ்த்துக்கள். :D

  • தொடங்கியவர்

உங்கள் நம்பிக்கை தரும் சொற்களுக்கு நன்றி குசா அண்ணா மற்றும் மதராசி அண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்

உதயம்

உங்கள் கதை சூப்பர்.

இப்படியான மண்வாசனைக் கதைகளுக்கு இலக்கிய இலக்கணங்கள் எதுவும் வேண்டாம்.

வாய்ப்பேச்சு வழக்கில் எழுதத்தான் இனிக்கிறது. எனது வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி இதயம்!அங்கையங்கை கொஞ்ச எழுத்து பிழை இருந்தாலும் கதை வைரமான கதை தம்பி.

இந்த எழுத்துப்பிழை போகப்போக எல்லாம் சரியாய்வரும்.ஒண்டுக்கும் கவலைப்படவேண்டாம்

எனி எங்கடை ஊர்க்கதையை வீரபாண்டிய கட்டப்பொமன் பட வசனநடையிலேயே எழுதேலும்

தம்பி இதயம் வா ராசா உங்கடை பாசையிலை நீங்கள் எழுதுங்கோ உங்கை படிக்க கன பேர் இருக்கினம் வேறை என்னத்தை நான் சொல்லுறது :lol:

வாழ்க தமிழ் :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதயன்

நீங்களோ மற்றையவர்களோ தமிழ்க்கொலை செய்வதாக நான் கூறவில்லை. ஆனால் தமிழைத் தமிழாக எழுதவேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டேன். பேச்சுத்தமிழ் வேறு எழுத்துத்தமிழ் வேறு. நேரிடையாகப் பேசும்போதோ அல்லது மேடையில் சமூக நாடகங்கள் நடிக்கும்போதோ பேச்சுத்தமிழில் பேசினால்தான் சுவையாக இருக்கும். நீங்கள் எழுதியதை நல்ல தமிழில் எழுதிவிட்டு ஒருமுறை படித்துப் பாருங்கள். அதன் சுவை ஒருபோதும் குன்றவே மாட்டாது.

யாழ் களத்தைப் படிப்பவர்களில் பலர் புலத்தில் பிறக்காவிட்டாலும் தமிழைத் தொடர்ந்தும் படிப்பவர்கள். புலத்தில் பிறந்து வளர்பவர்களும் பேசுவது போலவே எழுதவும் முற்படுகின்றார்கள். நாம் ஆங்கில மொழியையும், மற்றைய மொழிகளையும் எழுதும்போது எதுவித இலக்கணப்பிழைகளும் விடாது எழுதவே முயற்சிக்கிறோம். ஆனால் தமிழை எழுதும்போது மட்டும் ஏன் அப்படிச் செய்வதைத் தவிர்க்கின்றோம்? எனக்கு விளங்கவில்லை.

யாழ்கள கருத்துக்களம் பகுதில் இப்படி ஒரு குறிப்பும் இருக்கிறது.

ஆங்கிலச் சொற்களை,ஆங்கில உச்சரிப்பை தமிழில் எழுதுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். உதாரணமாக: ஹல்லோ, பட், கவ் ஆர் யூ. இது போன்ற கோமாளித்தனமான - தமிழ் மொழியைச் சிதைக்கும் வகையிலான சொற்கள் இடம்பெறும் கருத்துக்கள் "ஈவிரக்கமின்றி" முற்றுமுழுதாக நீக்கப்படும்.[மேலும்]

நன்றி.

தம்பி உதயம் எழுதுவதென்பது ஒரு கலை அது உங்களிடம் இயற்கையாகவே நன்றாக அமைந்துள்ளது. தொடங்கும்போதே இதைத்தான் எழுதவேண்டும் இப்படித்தான் எழுதவேண்டுமென்று வேலிகளைப்போட்டுக்கோண்டு எழுதத் தொடங்கினால் உங்களது ஆளுமையைச் சரியாகக் காட்டமுடியாது. பிறந்த குழந்தை உடம்புபிரட்டி தவண்டு எழுந்து நின்று மெதுவாக அடியெடுத்து வைத்துத்தான் நடக்கத்தொடங்கும்.

எப்பவூமே ஒரு ஆக்கத்தைப் பேரிலக்கியம்போலப் படைக்க முற்பட்டால் ஆது குறிப்பிட்ட அறிவூஜீவிகள் அல்லது தமிழ்வித்தகர்களை மட்டுமே சென்றடையூம். ஆனால் பெரும்பாலான மக்களையூம் சென்றடைய வேண்டுமெனில் அவர்களுக்குத் தெரிந்த அவர்கள் புரிந்துகொள்ளும் பாசையிலே எழுதினால்தான் அது சாத்தியமாகும்.

யாழ் இணையத்தை எடுத்துக்கொண்டாலகூட ஆரம்பகாலங்களில் என்னைப்போன்ற பழசுகள்தான் நிறைய இருந்தம் ஆனால் இப்ப இங்கை பிறந்து வளர்ந்த பிள்ளைகள்கூட நிறைய களத்தில உலா வருகினம் என்னிடம் இங்கு தமிழ் படிச்சவையில ஒன்று இரண்டுபேர்கூட இப்ப களத்தில சின்னது சின்னதா இரண்டொரு வரி எழுதுகினம்போலத் தெரியூது. நான் அம்புலிமாமா ராணி என்று படிக்கத்தொடங்கிப் பிறகு கத்தரிக்காய் காயத்திரி சுந்தரியின் ராத்திரிகள் போன்றவற்றைப் பாடப்புத்தகங்களுக்கை ஒழித்துவைத்துப் படித்து மித்திரன் பத்திரிகையில வந்த தொடருகள் படிச்சு ஆனந்தவிகடன் குமுதத்திற்கு வந்து பிறகுதான் மெல்ல மெல்லச் சாண்டிலியன் அசோகமித்திரன் பாலகுமாரன் டொமினிக்ஜுவா எஸ்போ ஜெயாகந்தன் முத்துலிங்கம் என்று தேடிப் படிக்கத்தொடங்கினான்.

சுந்தரியின் ராத்திரிகள் படித்ததுக்கு நான் வெட்கப்பட இல்லை அந்தக் காலகட்டத்தில விடலைப் பருவத்தில இதுவூம் எனக்குத் தமிழ் படிக்க ஒரு உந்துகோலாக இருந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறன்.

நீங்களும் உங்களுக்த் தெரிந்ததை தெரிந்த பாணியிலேயே கவலைப்படாமல் எழுதுங்கோ ஆனால் அதிலும் வாசகருக்குச் சொல்வதற்கு ஒரு சிறு கருத்தாவது இருக்கிறதா என்று யோசித்து எழுதினால்போதும். காலப்போக்கில் உங்களை அறியாமல் நீங்களாகவே பரிணாம வளர்ச்சி அடைவீர்கள்.

நான் என்ரை சொந்த அனுபவத்தில சொல்லுறன் இதே யாழிலேயே வேட்டியை மடிச்சுக்கட்டு கொம்புpயூட்டர் விற்பனைக்கு............. என்று ஒருவித பாணியில எழுதினன் அதையூம்பல வாசகர்கள் ரசித்தினம். வேர்களைத்தேடி......... என்று வேறொருவிதமாக எழுதினன் அதையூம் பலர் பாராட்னார்கள்.

ஆதலினால் தொடரட்டும் உங்கள் பாணி! சிறக்கட்டும் உங்கள் எழுத்துக்கள்!

நாங்கள் படித்த எழுதிய எங்கள் தமிழை மெல்ல அடுத்த தலைமுறையூம் தங்கள் தோள்களில் சுமப்பதைக் காணும் பாக்கியம் பழசுகள் எமக்குக் கிடைக்கட்டும்.

Edited by ampalathar

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவங்களை வாசிக்க நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் , உதயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.