Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் ஆயுதப் பயிற்சி பெற்ற 8000 புலி உறுப்பினர்கள். -திவயின

Featured Replies

ஆயுதப் பயிற்சி பெற்ற புலி உறுப்பினாகள் 8000 பேர் கனடாவில் டொரன்டோ நகரில் தங்கியிருப்பதாக தகவல் டெரான்டோ பொலிஸாரின் தமிழர் விசாரணை விசேட பிரிவு வெளியிட்ட அண்மைய அறிக்கiயிலிருந்து வெளியாகியுள்ளது.

இவாகளை நிரஞ்சன் ஜேமின் மற்றும் ஸ்ரீ ரஞ்சன் ராசா ஆகிய இரு புலி உறுப்பினர்களே வழி நடத்துவதாக கனடிய இரகசியப் பொலிஸ் பிரிவினரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகா கூறப்படுகின்றது.

இப்புலி உறுப்பினர்களிடம் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், இயந்திரத்துபாக்கிகள் என பல்வேறு வகையான துப்பாக்கிகள் இருப்பதாகவும் அவற்றை இவர்களைக் கைது செய்தபோது அவை பறிமுதல் செய்தததாகவும் தெரியவருகின்றது.

டொரன்டோவில் நிலைகொண்டிருந்த புலி உறுப்பினாகள் பலர் வடமாராட்சி பகுதிகளைச் சேர்ந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது

(திவயின : 19.06.08)

நன்றி வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவை கைப்பற்ற 8000 புலிகள் வந்துள்ளார்கள் என திவியன சொன்னாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

திவயின எங்கின இருந்து இந்தத் தகவலைப் பெற்றன. இலங்கை அமைச்சர்களே எத்தனை புலிகள் உள்ளனர். எத்தனை பேரை கொன்றுவிட்டோம் என்று தகவல்கள் வெளியிடுவார்கள். இப்போ திவயினவும் அவர்களின் வாரிசாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்தது எட்டாயிரம் பேரையும் அவையளுடைய ஆயுதங்களையுமா அல்லது இரண்டு பேரையும் அவங்களுடைய ஆயுதங்களையுமா எண்டிற விளக்கம் இல்லை. எட்டாயிரம் பேருக்கும் பயிற்சி குடுத்தது யார். கனடா அரசாங்கமா? எட்டாயிரம் பேரெண்டால் அது லேசுப்பட்ட விசயமி;லைப் பாருங்கோ. திவயின சிங்கள மக்களுக்குக் காதில பூச்சுத்துறதெண்டால் அதுக்கும் ஒரு அளவு இருக்கவேணும்.

திவயின செய்தியில் முன்னர் இயங்கிய தெருக்கோஸ்டிகளின் தலைவர்களின் பெயர்களே திவயினவின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னர் பல்வேறு குற்றச் செயல்களில் குறித்த நபர்கள் ஈடுபட்ட பொழுதிலும் சிறைவாசத்தை அனுபவித்து வெளிவந்த இவர்கள் தற்போது சாதாரண வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

முன்னர் இவர்களிடம் ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் இருந்ததாக வதந்திகள் இருந்தன. ஆனால் காவல்துறையினரால் அவை கைப்பற்றப்பட்டதாக திவயினவில் சொல்லப்பட்ட தகவல் எந்தளவுதூரம் உறுதிப்படுத்தப்பட்டது என்பது தெரியவில்லை.

ஏ.கே கண்ணன் குழு, விவிரி மற்றும் இதர குழுக்கள் என இயங்கிய காலத்தில் மொத்தம் 8000 பேர் இந்த குழுக்களில் இருந்தாக 2000 ஆண்டளவில் சொல்லப்பட்டது. எனினும் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைகளால் ரொரன்ரோவில் இயங்கி வந்த தமிழ் தெரு குழுக்கள் ஒட்டுமொத்தமாக துடைத்தழிக்கப்பட்டுவிட்டன.

ஆனால் திவயின 2000ம் ஆண்டு செய்தியை இப்போது வெளியிட்டு பரபரப்பை சிங்களவர்களிடத்தில் ஏற்படுத்துக்கிறது.

அது சரி. திவயின இப்போதுதான், Y2K இல் இருக்கின்றது. :):lol:

இத்தாலியில் 28 புலிகள் கைது செய்யப்பட்டனார் என்ற புழுகத்தில்

எல்லா நாடுகளிலும் இப்படி கைதுகள் நடக்கத்தூண்டுகிற ஒரு நரித்தந்திரம்

எனவே எல்லோரும் உசாரக இருங்கள்........

சிங்களத்தின் தந்திரத்தை உடைப்பதற்கு எல்லா நாடுகளிலும் அரசியல் கட்சிகளுடன்

உரிய விளக்கங்களை கொடுத்து இலங்கையின் பருப்பு அவியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

எமது தாயக விடுதலையை எப்படியாவது இல்லாமல் செய்வதற்கு எதுவும் செய்வான்

எதிரி.......

நாம் முந்த வேண்டும்.......

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கிதை;த தகவல்படி

கனடாவில் 3 லட்சத்திற்கு மேற்பட்ட புலிகள் உள்ளனர்

ஆனால் இவர்கள் ஏன் குறைத்துச்சொல்கிறார்கள் என்றுதான் சந்தேகமாக உள்ளது???

எனக்கு கிடைத்த தகவல்படி

கனடாவில் 3 லட்சத்திற்கு மேற்பட்ட புலிகள் உள்ளனர்

ஆனால் இவர்கள் ஏன் குறைத்துச்சொல்கிறார்கள் என்றுதான் சந்தேகமாக உள்ளது???

2001 இல் வந்த செய்தி

Up to 8,000 Tamil guerrillas living in Toronto, RCMP says

April 27, 2001

Up to 8,000 Tamil guerrillas living in Toronto, RCMP says

Military training: Most retired but some remain active, officer tells hearing

Stewart Bell

National Post

TORONTO - An RCMP officer has testified at an immigration hearing that as many as 8,000 Tamil guerrillas with military weapons training .............................

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எழுத உவங்கலுக்கு எப்படி மனசு வருது...கடவுலே

எல்லாம் குளப்பம்தான்... :)

தொண்டர்கள்... எண்ணிக்கையை சொல்லியுள்ளார்களாக்கும்... :D:):unsure::icon_idea:

விடுதலைப்புலிகள் நல்லவர்கள் என்று யார் கதைத்தாலும் அவர்கள் புலிகள் என்று நிணைத்து நடக்குது மகிந்த ராஜ்சியம்....

போன ஏப்பிரல் முதலாம் திகதி வரவேண்டிய செய்தியை ஏன் பிந்திப் போட்டியள் என்று விளங்கேல்ல :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Stewart Bell

National Post

நசனல் போஸ்ட் பத்திரிக்கை ஒரு 100% இனவாத பத்திரிக்கை... கனடவிண்ட 'தியவன' நாளிதழ் எண்டும் சொல்லலாம். அந்த அளவுக்கு இனவாதத்தை வெளியில காட்டாம காக்கிற பெருமையான பத்திரிக்கை...

அதிலையும் இந்த ச்ற்றுவட் பெல் என்கிரவருக்கு சின்ன வயசில எதோ எங்கடை ஆக்களால எதோஓஓ நடந்திருக்கு....என்ன புர்வ ஜென்ம பகையோ தெரியாது...சுடுதனி குடிச்ச நாய் மாதிரி எங்களை கிண்டுரதுதான் வேலை...முதலும் ஒரு புத்தகத்தில snow tigers எண்டு கணக்கா எழுதினவர்.. பேபர் போடுற எங்கடை ஆக்கள் இனி நாங்கள் நசனல் போஸ்ட் போடமாடம் எண்டாலே அவைக்கு விளங்க வைக்கலாம். என்ன செய்யிறது......

அதோட அந்த 8000 பேர் எண்டு ர்ச்ம்ப் சொன்னது உண்மையையும் இருக்கலாம்..ஏன் ஏன்டா.. இங்க 1983 இல இருந்து கைய துக்கின ஆக்கல்ல ஒரு கொஞ்ச 5000 பேர் ஆவது தாங்கள் பயிற்சி எடுத்தெண்டு பொய் சொல்லி வழ்க்கை வேண்டு இருப்பினம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.