Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணமொரு காதல் கொண்டேன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பனிக்குளிரில்

இதம் சேர்க்க

ஓர் இழுத்தணைப்பு..!

மெல்லத் தொட்டு

மேனி தடவி

இதழோடு இதழ் வைத்து

வெப்பமூட்டி

அவள் மூச்சில்..

என் சுகம்..!

சுவாசம் எங்கும்

அவள்

வாசனை தரிக்க

உடலோடு ஐக்கியமாகி

சொர்க்கத்தின்

வாசல் திறந்தாள்

எனக்காய் மட்டும்..!

நான்

தொட்டுத் சுகித்து

இன்புற்று

பின்..

தூக்கி எறிந்தேன்

அடுத்தவன்

உறவானாலும்

எனக்கென்ன

என்ற நினைவில்..!

பார்த்திருக்க

வீதியால் சென்றவன்

எடுத்தணைத்தான்

அவளும்

ஒட்டி உரசி

அவனோடும்..

சீ சீ..

என்ன அசிங்கம்

இதுவும் ஒரு வாழ்வா..??!

விபச்சாரி..

பட்டம் வழங்கி

நான் புனிதனானேன்..!

கண்டவன்

போனவன்

சிரித்தவன்

எடுத்தவன்

அடுத்தவன் எல்லாம்

சுகித்த பின்

தூக்கி எறிந்தனன்..

மிச்சம் மீதிக்கு

யாரோ..??!

கண்முன்னே கண்றாவி

பெண்ணொருத்தி

அவளைத் தொட்டு

தூக்கி அணைத்து

இதழோடு இதழ் வைத்து

பெண்ணும் பெண்ணும்..

உறவாட..

சீ..

என்ன உலகிது

அவள் சுகத்துக்காய்

அலைகிறதே

குற்றமுணராத

புனிதனாய்

அவள் முன்னே

நான்

இன்னொரு புதிய கன்னியை

அணைத்தபடி.!

காலத்தின் முடிவில்

அவள்

கட்டையாய்

வீழ்ந்தாள்..!

ஆரம்பித்து வைத்தவன்

நான்..

கண்ணீர் விடக்கூட

மனதின்றி

எங்கோ ஒளிந்து கொண்டேன்

என் புனிதம் காத்திட!

கணமொரு கன்னியர்

காசுக்கு

என் காதல் கண்டு

கரங்களில் தவழ்ந்தனர்..!

அன்புக்கு எங்கே

பெறுமதி..

கன்னிக்கும் இப்போ

உடலோடு தான் தேவை..!

ஓர் நாள்

இருமலோடு வாந்தி

இரத்தம் கலந்து வர..

சோதனைக்குச் சென்ற

என் காதில்.

"என் உடலோடு தீராத நோயாம்.."

கதை விழுந்தது.

தொட்டதன் விளைவுதானாம்

அது!

ஆனதும் பெண்ணாலே

அழிவதும் பெண்ணாலே

வரிகளோடு

மரணத்தின் வாசல்படியில்

நான்..!

தொட்டவள் தந்த வினையது..!

இறுதியில்..

சிகரட் எனும் நாமம்

கொண்டவர்

கன்னியர் உறவே

வெறுத்திடுங்கள்

புனிதராய் வாழ்ந்திடுங்கள்..

தத்துவம் பேசியே

என் மூச்சும் அடங்குகிறது..!

பயன் தான் கிட்டுமா..??!

விண்ணிருந்து பார்கின்றேன்

புகைவிடும் கதையும்

ஓர் தொடர்கதை தான்

பூமியில்!

- குருவிகள்

சுட்ட இடம்: http://kuruvikal.wordpress.com/

(கவிதைக்குரியவர் தனது கவியில் செய்த திருத்தத்துக்கு அமைய சிறிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்குசாமி குருவியிடம் சுட்டகவிதையை கண்ணுற்றதும் என் கண்கள் "இரத்தக்கண்ணீர்" வடிக்கின்றது :lol:

சுட்டு ஒட்டியதற்கு நன்றி :rolleyes:

குளிர்காலத்தில எல்லாற்றை வாயாலையும் மூக்காலையும்தான் புகையுது.. இவர் வேறை வந்திட்டாரு.. :rolleyes:

:lol:

Edited by sOliyAn

புத்திசாலித்தனமான படைப்பு என்பது என் கருத்து :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான், எடுத்தது ஒட்டியது சுட்டது என்று இடக்கு முடக்காக விடையளிக்கலாம் தப்பில்லை ஆனால் கான்சருக்கும் கன்னிக்கும் என்ன சம்பந்தம்? எடுத்ததற்கெல்லாம் பெண்களைச் சீண்டுவதே உங்களுக்குப் பிழைப்பாகிவிட்டது. கவலைப்படுகிறோம் கர்த்தர் உங்களைக் காப்பாற்றட்டும்.

அதுதானே.. சிகரட்டுக்கும் கன்னிக்கும் என்ன சம்பநந்தம்? கான்சருக்கும் கன்னிக்கும் என்ன சம்பந்தம்? :rolleyes:)

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன், நான் நினைக்கிறேன்.

நெடுக்காலபோவானின் இதயத்தை யாரோ ஒரு கன்னி(????) அரித்துக் கொண்டிப்பாரோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழியன், நான் நினைக்கிறேன்.

நெடுக்காலபோவானின் இதயத்தை யாரோ ஒரு கன்னி(????) அரித்துக் கொண்டிப்பாரோ?

அதேதான் பிள்ள, விதியாரைதான் விட்டது :rolleyes: . தெரிந்துகொண்டு விழுவது இந்த காதலில் மட்டும்தான்

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை சொல்வதைப்பார்த்தால் நெடுக்கார் கண்ணைத் திறந்துகொண்டே கடலுக்குள் இறங்கிவிட்டாரோ? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதானே.. சிகரட்டுக்கும் கன்னிக்கும் என்ன சம்பநந்தம்? கான்சருக்கும் கன்னிக்கும் என்ன சம்பந்தம்? :))

சிகரெட் முதல் இழுக்க இழுக்க இன்பம் தரும் ஆனால் நாங்கள் நல்லா இழுத்துப்போட்டு வாயில சுட்டபின்பு தான் தூக்கி எறிவோம் :rolleyes: அதுபோலதான் பெண்களும். புற்றுநோய்க்கும் பெண்களுக்கும் என்ன ஒற்றுமை என்றால் இரண்டுமே மரணதுக்கான வழிகள் :lol: . இப்ப விளங்கிட்டுதா பிள்ள?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை சொல்வதைப்பார்த்தால் நெடுக்கார் கண்ணைத் திறந்துகொண்டே கடலுக்குள் இறங்கிவிட்டாரோ? :lol:

பிள்ள கண்ணை திறந்துகொண்டு இறங்கினால் என்ன கண்ணை மூடிக்கொண்டு இறங்கினால் என்ன இறங்கப்போறது கடலுக்குள்ளதானே :rolleyes: .காதலுக்குள்ள போனதுக்கு அப்புறம் கண்ணெல்லாம் தெரியாது பிள்ள, அனுபவம் இல்லையா மோனே ? அனுபவம் பெற வாழ்த்துக்கள் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிகரெட் முதல் இழுக்க இழுக்க இன்பம் தரும் ஆனால் நாங்கள் நல்லா இழுத்துப்போட்டு வாயில சுட்டபின்பு தான் தூக்கி எறிவோம் :lol: அதுபோலதான் பெண்களும். புற்றுநோய்க்கும் பெண்களுக்கும் என்ன ஒற்றுமை என்றால் இரண்டுமே மரணதுக்கான வழிகள் :o . இப்ப விளங்கிட்டுதா பிள்ள?

வல்வை.. சுப்பண்ணை சொன்னதைக் கேட்டியளோ.. நல்லதொரு அனுபவ விளக்கம் சுப்பண்ணை. :)

கவர்ச்சிகரமான பெட்டிகளில்.. இன்பத்தின் மூச்சு என்று தான் விற்கிறது.. ஆனால் அது துன்பத்தின் மூச்சு. அப்படித்தான் கன்னிகளும்... உலகில் இன்பத்தின் மூச்சு என்று.. காட்டப்படுகினம்.. ஆனால் அவர்களே துன்பத்துக்கான மூச்சாகியும் விடுகினம் தானே..! இந்த ஒரு ஒற்றுமை போதாதா குருவிகளுக்கு இரண்டையும் ஒப்பிக்க..! :D

குளிர்காலத்தில எல்லாற்றை வாயாலையும் மூக்காலையும்தான் புகையுது.. இவர் வேறை வந்திட்டாரு.. :o

:D

அடப்பாவி அண்ணா.. அது நீராவி... உதில வாறது விச வாயு அண்ணாச்சி. :D

பிள்ள கண்ணை திறந்துகொண்டு இறங்கினால் என்ன கண்ணை மூடிக்கொண்டு இறங்கினால் என்ன இறங்கப்போறது கடலுக்குள்ளதானே :lol: .காதலுக்குள்ள போனதுக்கு அப்புறம் கண்ணெல்லாம் தெரியாது பிள்ள, அனுபவம் இல்லையா மோனே ? அனுபவம் பெற வாழ்த்துக்கள் :D

ஏமாத்தியே வாழப் பழகிட்டா எப்படியண்ண காதலின் வலி தெரியும் பெண்களுக்கு சொல்லுங்கோ..! அதுக்கு வல்வை அக்காவும் விதிவிலக்கே. (சும்மா பகிடிக்கு அக்கா நீங்க அச்சா அக்கா..!) :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்திசாலித்தனமான படைப்பு என்பது என் கருத்து :o

நன்றி தங்கை. இப்படிச் சில நல்ல தங்கைகளும் உலகில இருக்கத்தான் செய்யுறாங்க. பாருங்க வல்வை அக்கா. :lol:

(குறிப்பு: படைப்பு எனதல்ல. ஒட்டியதே எனது வேலை.)

Edited by nedukkalapoovan

என்ன நெடுக்காலபோவான் திடீரெண்டு காதல் அது இது எண்டு ஒரு மாதிரி இருக்கிறீங்கள். உங்களுக்குதானே இதுகள் எல்லாம் பிடிக்காது. யாழில காதல் ஒழிப்பு சங்கம் எண்டு எல்லாம் துவங்கிப்போட்டி இப்ப இப்பிடியாப் போனீங்கள். சரி சரி பரவாயில்ல. கால ஓட்டத்தில ஆக்கள் மனநிலை மாறுறது சகஜம் தானே? உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கோ. :lol:

மற்றது.. கவிதை சரியான நீளமா இருக்கிது. இதுண்ட சாரம்சத்த ரெண்டு வசனத்தில ஒருக்கால் சொல்ல ஏலுமோ? :lol:

அப்ப குருவி எண்டுறது நீங்கள் இல்லையோ? யாரப்பா அந்த பேடி (BIRD) :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்காலபோவான் திடீரெண்டு காதல் அது இது எண்டு ஒரு மாதிரி இருக்கிறீங்கள். உங்களுக்குதானே இதுகள் எல்லாம் பிடிக்காது. யாழில காதல் ஒழிப்பு சங்கம் எண்டு எல்லாம் துவங்கிப்போட்டி இப்ப இப்பிடியாப் போனீங்கள். சரி சரி பரவாயில்ல. கால ஓட்டத்தில ஆக்கள் மனநிலை மாறுறது சகஜம் தானே? உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கோ. :lol:

மற்றது.. கவிதை சரியான நீளமா இருக்கிது. இதுண்ட சாரம்சத்த ரெண்டு வசனத்தில ஒருக்கால் சொல்ல ஏலுமோ? :lol:

அப்ப குருவி எண்டுறது நீங்கள் இல்லையோ? யாரப்பா அந்த பேடி (BIRD) :o

யாரோ எழுதினதையும் என்ற தலையில தான் போட்டு உருட்டுறியளா..??! இப்படி எத்தின பேர் கிளம்பி இருக்கீங்க உலகத்தில. (நான் ரசிகன் மட்டுமே. காதலில் எல்லாம் போய் விழுந்து.. காயப்பட்டு.. நிற்கமாட்டன். வேணும் என்றால் காயப்படுத்திட்டு நிற்பன்..!) :o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலில் எல்லாம் போய் விழுந்து.. காயப்பட்டு.. நிற்கமாட்டன். வேணும் என்றால் காயப்படுத்திட்டு நிற்பன்..!) :lol:

அது ரொம்ப ரொம்ப தப்பு தாத்தா. :o

காயப்பட விரும்பாதவங்க காயப்படுத்தவும் கூடாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது ரொம்ப ரொம்ப தப்பு தாத்தா. :o

காயப்பட விரும்பாதவங்க காயப்படுத்தவும் கூடாது

அப்படி என்றீங்க புள்ள இன்னிசை. நானா காயப்படுத்த மாட்டன். அவையா காயப்பட்டுக் கொண்டா அதற்கு என்ன செய்யுறது புள்ள..! :lol:

ஒன்னு சொன்னா கோவிக்க மாட்டியள் தானே தாத்தா :o ..அது என்னவென்டா நேக்கு பிடிகல..பிடிகல எங்கன்ட தாத்தா யாரோ எழுதின கவிதையை சுட்டு போடுறதை..(நீங்க எழுதுங்கோ தாத்தா கவிதை).. :)

சரி எனி விசயதிற்கு வருவோம் என்ன..

அருமையான கவிதை :lol: ...இந்த கவிதையும் ஒரு வகையில் சிகரட்டை போல தான் இருக்கு புகைப்பவர்களுக்கு இனிக்கும் அருகில் இருப்பவர்களுக்கு இருமும் பாருங்கோ :lol: ..சொல்ல போனா சிகரட் மேல கொண்ட காதலும் பொண்ணு மேல கொண்ட காதலும் காலம் தாழ்தி தான் பல பின்விளைவுகளை ஏற்படுத்து என்ன தாத்தா.. :o

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்னு சொன்னா கோவிக்க மாட்டியள் தானே தாத்தா :o ..அது என்னவென்டா நேக்கு பிடிகல..பிடிகல எங்கன்ட தாத்தா யாரோ எழுதின கவிதையை சுட்டு போடுறதை..(நீங்க எழுதுங்கோ தாத்தா கவிதை).. :lol:

சிகரட் மேல கொண்ட காதலும் பொண்ணு மேல கொண்ட காதலும் காலம் தாழ்தி தான் பல பின்விளைவுகளை ஏற்படுத்து என்ன தாத்தா..

யாற்ற கவிதை என்றாலும் அதன் பொருளை ரசிப்பதில் தவறில்லைத் தானே பேராண்டி.

நான் நினைக்கிறேன் கவிதையை எழுதியவரும்.. சிகரட்டை கன்னிக்கு உவமிக்க நீங்கள் சொன்ன காரணமும் முக்கியமாக இருந்திருக்கும் என்று. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதையை இரண்டு மூன்றுதரம் வாசித்துப்பார்த்தேன். இதில் ஒரு கன்னியை உவமானமாக்கி அந்த வெள்ளைப் புடவை கட்டிய சின்னப் பெண்(அதுதான் சிகரட்)செய்யும் சிருங்காரத்தைத்தான் கவிஞர் கூறியிருப்பதாக எனக்கு விளங்கியது. மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது. உணர்ந்து எழுதியவருக்கும் உள்வாங்கி ஒட்டியவருக்கும் பாராட்டுக்கள்.

காவலூர் கண்மணி.. உணர்ந்து எழுதியவருக்கும் உள்வாங்கி ஒட்டியவருக்கும் என்று கிச்சுக்கிச்சு மூட்டாதேங்கோ.. :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதையை இரண்டு மூன்றுதரம் வாசித்துப்பார்த்தேன். இதில் ஒரு கன்னியை உவமானமாக்கி அந்த வெள்ளைப் புடவை கட்டிய சின்னப் பெண்(அதுதான் சிகரட்)செய்யும் சிருங்காரத்தைத்தான் கவிஞர் கூறியிருப்பதாக எனக்கு விளங்கியது. மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது. உணர்ந்து எழுதியவருக்கும் உள்வாங்கி ஒட்டியவருக்கும் பாராட்டுக்கள்.

கண்மணி அக்காவின் கருத்து 100% சரியானதாகவே எனக்கும் படுகிறது..! :lol:

காவலூர் கண்மணி.. உணர்ந்து எழுதியவருக்கும் உள்வாங்கி ஒட்டியவருக்கும் என்று கிச்சுக்கிச்சு மூட்டாதேங்கோ.. :wub:

சோழியண்ணன்.. இதுதா வேண்டாங்கிறது..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.