Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

35 பேர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

35 பேர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்.

01.07.2008 / நிருபர் எல்லாளன்

கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 35 கைதிகளை 10-05-2008 அன்று மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அங்கு கைதிகளுக்கான போதிய வசதிகள் இன்மையாலும் கைதிகளின் உறவினர்களோ, சட்டத்தரணிகள் எவரையும் சந்திக்கமுடியாத நிலை காணப்படுவதால் அவர்களின் பிரச்சினை குறித்து கவனத்தில் எடுக்கப்படாததால் மீண்டும் தங்களை கொழும்பிலுள்ள சிறைச்சாலை ஒன்றிற்கு மாற்றம் செய்யக்கோரியும் அல்லது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப்போவதாக மேற்கண்ட 35 கைதிகளும் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தங்களது சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை நாளை (02-07-2008) காலை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

sankathi.com

எனக்கொரு திட்டம் ஏன் நாங்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் எமது நாடுகளில் உள்ள பாராளுமன்றங்களின் முன்னால் ஈழப்பிரச்சினைக்கு ஓரு தீர்வு கிட்டும் மட்டும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்ககூடாது. நான் தயார். என்னுடன் யார் வருவீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு யோசனை.உண்மையில் இது ஊடகங்கள் உட்பட எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியது. ஜேர்மனியிலும் இப்படியொரு நிகழ்வை நடாத்தினால் நல்லதென நினைக்கின்றேன்.நானும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க தயார்.

களமும்.... புலமும்.... யாழ்களமும்.... சூடாகின்றன <_<

இம்மாதம் ஈழத்தமிழரின் முக்கிய மாதமும் கூட... :huh:

உங்கள் துணிவே துணிவு.... பரணி குமாரசாமி :wub:

ஆனால் இவ்மேற்குலகு அதற்கு அனுமதிதரா என எண்ணுகிறேன்.

களநண்பர்கள் தொடரட்டும்.... நன்றி. :wub:

(என்னாலான ஆதரவு உங்களிற்கு தருகிறேன் நீங்கள் சொன்னதுபோல் தேவைப்படும்போது)

Edited by Netfriend

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு திட்டம் ஏன் நாங்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் எமது நாடுகளில் உள்ள பாராளுமன்றங்களின் முன்னால் ஈழப்பிரச்சினைக்கு ஓரு தீர்வு கிட்டும் மட்டும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்ககூடாது. நான் தயார். என்னுடன் யார் வருவீர்கள்.

இந்த முயற்சி எல்லாம் பயன் தராது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொரு திட்டம் ஏன் நாங்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் எமது நாடுகளில் உள்ள பாராளுமன்றங்களின் முன்னால் ஈழப்பிரச்சினைக்கு ஓரு தீர்வு கிட்டும் மட்டும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்ககூடாது. நான் தயார். என்னுடன் யார் வருவீர்கள்.

நல்லதொரு யோசனை.உண்மையில் இது ஊடகங்கள் உட்பட எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியது. ஜேர்மனியிலும் இப்படியொரு நிகழ்வை நடாத்தினால் நல்லதென நினைக்கின்றேன்.நானும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க தயார்.

பரனி , குமாரசாமி உங்களுடைய தேசப்பற்றுக்கு தலை வணங்குகிறேன் ஆனால் இது எவ்வளவு தூரம் நடைமுறைச்சாத்தியம் என்று தெரியவில்லை. <_<

நல்லதொரு யோசனை.உண்மையில் இது ஊடகங்கள் உட்பட எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியது. ஜேர்மனியிலும் இப்படியொரு நிகழ்வை நடாத்தினால் நல்லதென நினைக்கின்றேன்.நானும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க தயார்.

கு.சா... இது உங்கடை வழமையான பகிடி இல்லை எண்டு நினைக்கிறதால சொல்லுறன்....

எல்லா சா.வ.உண்ணாவிரதக்காரரும் நினைவு தடுமாறுற நேரத்தில ஒரு தம்மாத்துண்டு உறுதிமொழியை சாட்டித்தானே விரதத்தை முடிக்கிறவை. (தீலிபன், புபதியை தவிர) ஜேர்மனிகாரனுக்கு இருக்கிற பிரச்சனைக்குள்ள உடன உங்களுக்கு ஒரு உறுதிமொழி தந்துபோட்டுதான் வேறவேலை பார்ப்பான் எண்டு நம்புறிங்களே! அப்பியே நீங்கள் மண்டைய போட்டாலும் இங்க யாழிலையும் புதினத்திலையும் மட்டும்தான் செய்தி வரும்!

ஒரு 7 பேரை சேர்த்து சுழற்சி முறை உண்ணாவிரதம் செய்யுங்கோ நல்லது! அதையும் நிறுவனமாயப்படுத்தி பிரச்சாரப்படுத்தி செய்யுங்கோ, இல்லாட்டி நீங்கள் செய்யுறது உங்களுக்கு மட்டும்தான் தெரியும், அல்லது பொதுவாழ்க்கைக்கு கேடு விளைவிச்ச குற்றத்தில உள்ளுக்கு போட்டுவாங்கள்!

ஏன் சென்ற ஆண்டு பரிசில் சுழற்சிமுறை உண்ணாவிரதம் நடந்தது தானே?? அதில் எந்தப் பலனும் ஏற்படவில்லையே??

****

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரகாட்டம் , காவடியாட்டம்,ஈழ எழுச்சி பாடல்களுக்கு குத்தியாட்டம் இப்படியே காலம் போய்க்கொண்டிருக்கட்டும்.

குமாரசாமி அண்ணாவும் பரணியண்ணாவும் இறங்க முன்னமே மாலையோட ஆக்கள் நிக்கிறாங்கள் போல. குத்தாட்டம் போடுறதை விட இது நல்ல ஒரு எண்ணம். சாணக்கியன் அண்ணா சொல்லுறதையம் கருத்தில் எடுக்க வேணம்.

//ஒரு 7 பேரை சேர்த்து சுழற்சி முறை உண்ணாவிரதம் செய்யுங்கோ நல்லது! அதையும் நிறுவனமாயப்படுத்தி பிரச்சாரப்படுத்தி செய்யுங்கோ, இல்லாட்டி நீங்கள் செய்யுறது உங்களுக்கு மட்டும்தான் தெரியும், அல்லது பொதுவாழ்க்கைக்கு கேடு விளைவிச்ச குற்றத்தில உள்ளுக்கு போட்டுவாங்கள்! //

Edited by Thalaivan

எனக்கென்னமோ புலத்தில சூஸ் தந்து சமாளிப்பங்கள் எண்டு தெரியேல்ல...

முதல்ல கூப்பிட்ட பொங்கு தமிழுக்கு சனத்தை வரச்சொல்லுங்கோ...

தசாவதாரம் படச்சினிமாவில எங்கட சங்களின் கூட்டம் அதிகமாம்... பொங்குதமிழுக்கு வந்தகெதியை பார்த்திங்களே?

மக்களுடைய ஓத்துழைப்பு தேவை. தனிமனிதனால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை. அப்படி நினைத்திருந்தால் எமக்கெல்லாம் இன்று தலைவர் இருக்கமாட்டார்.

எதற்காக கறுப்பி இதெல்லாம் சாத்தியப்படாது என்று கூறிவருகின்றீர்கள்.

களத்தில் உயிரை விடும் போராளிகளிற்கு நாம் செய்யும் நிதியுதவி மட்டும் பலம் சேர்க்கப்போவதில்லை. அவர்களிற்காக நாமும் ஏதாவது செய்து அவர்களின்; வீரத்தை மதிக்கவேண்டும். உந்து சக்தி வழங்கவேண்டும்.

இங்கு வாய் வீச்சடிக்கும் ஈழப்பற்றாளர்கள் இத்தகைய செயல்களை முன்நடத்த வேண்டும். சுழற்சி முறையில் செய்hல் நல்லது என்றால் கட்டாயம் செய்யலாம். இதற்கு இந்த நோர்வே மண்ணின் பொறுப்பாளர்கள் முன்வருவார்களா ? மக்கள் ஓத்துழைப்பு கிடைக்குமா ?

பெயரிற்கு பொங்கு தமிழ் என்று எமது தண்டவாளங்கள் வண்டவாளங்களை காட்டுவதிலும் பார்க்க இப்படியான ஒரு சில செயல்களை செய்வதன் மூலம் உலகநாடுகளை எம்பக்கம் இழுக்கலாம். இதன் மூலம் பல நன்மைகளும் கிடைக்கலாம்.

ஏன் சென்ற ஆண்டு பரிசில் சுழற்சிமுறை உண்ணாவிரதம் நடந்தது தானே?? அதில் எந்தப் பலனும் ஏற்படவில்லையே??

****

அண்ணை நீங்கள் ஏன் குப்பைவாளியை கிண்டிப் பாத்தனியள்? சும்மா பகிடிக்கு.... சரி அதை விடுங்கோ!

எங்கடை சனம் பரிதவிக்குது, அதுக்களை காப்பாற்ற சரி நாங்களாவது ஏதாவது செய்வம் என்று சில நல்ல உள்ளங்கள் விரும்புது! உண்ணாவிரதம் சரியில்லையென்றா வேற ஏதாவது இருந்தா சொல்லுங்கோ?

உண்ணாவிரதம் இருக்கிறது என்றது மனிதஉரிமைகளை மதிக்கிற சமுகங்களால ஒரு கெளரவமான போராட்டமா நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பொது இடத்தில இதை சாட்ட வைச்சு, இங்க மக்களுக்கு நடக்கிற அனியாயங்களை புகைபடங்கள் மூலம் காட்சிக்கு வைக்கலாம். பிரசுரங்கள் வினியோகிக்கலாம். உதாலை உடனடியா பலனை எதிர்பார்க ஏலாதுதான். இது முதலில சாதரண மக்களைதான் சென்றடையும். உள்ளுர் சிறிய அரசியல் கட்சிகளையும் அறிவூட்டி இதில ஆதரவுதரச் சொல்லி கேட்கலாம். இதன் மூலம் ஆளும் கட்சிக்கு அழுத்தங்கள் கொடுக்க முடிந்தால் நல்லது!

நீங்களும் நோர்வே வந்திட்டீங்க அண்ணா. நீங்களும் களத்தில் நின்றிருக்க வேண்டியதுதானே? கறுப்பிக்கு ஏதாவது அனுபவ ஞானம் கிடைத்திருக்கலாம். இந்த குத்துபாட்டுகளைவிட உண்ணாவிரதம் இருப்பது எவ்வளவோ மேல். மற்றெதெல்லாம் ஏதோ கலர் காட்டுறதாத்தான் முடியும். அங்க என்ன புட்போல் மெச்சே நடக்குது? மனிதர்கள் சாகிறார்கள் அதை தடுத்து நிறுத்த செய்ய வேண்டிய எத்தனையோ இருக்கு.

Edited by Thalaivan

அண்ணை நீங்கள் ஏன் குப்பைவாளியை கிண்டிப் பாத்தனியள்? சும்மா பகிடிக்கு.... சரி அதை விடுங்கோ!

எங்கடை சனம் பரிதவிக்குது, அதுக்களை காப்பாற்ற சரி நாங்களாவது ஏதாவது செய்வம் என்று சில நல்ல உள்ளங்கள் விரும்புது! உண்ணாவிரதம் சரியில்லையென்றா வேற ஏதாவது இருந்தா சொல்லுங்கோ?

உண்ணாவிரதம் இருக்கிறது என்றது மனிதஉரிமைகளை மதிக்கிற சமுகங்களால ஒரு கெளரவமான போராட்டமா நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பொது இடத்தில இதை சாட்ட வைச்சு, இங்க மக்களுக்கு நடக்கிற அனியாயங்களை புகைபடங்கள் மூலம் காட்சிக்கு வைக்கலாம். பிரசுரங்கள் வினியோகிக்கலாம். உதாலை உடனடியா பலனை எதிர்பார்க ஏலாதுதான். இது முதலில சாதரண மக்களைதான் சென்றடையும். உள்ளுர் சிறிய அரசியல் கட்சிகளையும் அறிவூட்டி இதில ஆதரவுதரச் சொல்லி கேட்கலாம். இதன் மூலம் ஆளும் கட்சிக்கு அழுத்தங்கள் கொடுக்க முடிந்தால் நல்லது!

சாணக்கியன்

இங்கு சுவிசில் உண்ணாவிரதத்தை இங்குள்ள மக்களோ அல்லது அரசோ பலமாக எதிர்க்கின்றது. இங்கு அகதி முகாமில் இருந்த போது அங்கு ஏற்பட்ட பிரைச்சினை ஒன்றின் போது நிர்வாகத்தை எதிர்த்து நாங்கள் (தமிழர்கள்) உண்ணாவிரதமிருக்கத் தொடங்கினோம். தொடங்கிய வேகத்திலேயே முடிக்க வேண்டிய நிலைமை வந்தது. உடனடியாக முகாம் நிர்வாகத்திற்கு அரச உத்தரவு வந்தது; நிர்வாகத்தை எமது உண்ணாவிரத்ததை நிறுத்தும்படி அதை மீறினால், எங்களை கைது செய்யும் படி. நாம் உண்ணாவிரத்தை கைவிடாது விட்டிருந்தால் எம்மைக் கைது செய்து எமது நாட்டிற்கே அனுப்பியிருப்பார்கள். நான் சுவிசின் நிலைமைகளைத் தான் சொல்லுகின்றேன். மற்றைய ஐரோப்பிய நாடுகளைப் பற்றி அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.

ஆனால் உண்ணாவிரத்தை விட ஒவ்வொரு பிரதான பகுதிகளிலும் அனுமதி பெற்று 50, 100 பேரெனக் கூடி நாட்டின் தற்போதய நிலைகளை பிரசுரமாக விநியோகித்து கவனமீர்ப்புப் போராட்டமாக செய்யலாமென நான் நினைக்கின்றேன். இதற்கு பெரும்பாலும் ஒத்துழைப்புக் கிடைக்கும்.

களம் வீரர்களைத்தான் ஏற்றிருக்கின்றது.

வசம்பு அண்ணா அவரது நாட்டு நிலமையை சொல்றார். அத சரியாக இருக்ககலாம். அங்கே அது வசதி என்றால் அதை செய்யலாம். அங்கு பொறுப்பாளர்கள் ஒத்துக் கொள்வார்களா?

களம் வீரர்களைத்தான் ஏற்றிருக்கின்றது.

நீங்க?

நாம் யார் என்று நமக்குத்தான் தெரியுமே ? பிறகேன் . .. .

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சென்ற ஆண்டு பரிசில் சுழற்சிமுறை உண்ணாவிரதம் நடந்தது தானே?? அதில் எந்தப் பலனும் ஏற்படவில்லையே??

****

எதில் விளையாடுவது என்று இல்லை

அதை ஒழுங்கு செய்தவர்களையும் பங்குபற்றியோரையும் இப்படியா அவமானப்படுத்துவது.....

தமிழா ..........உனக்கு விமேசனம்???? கண்ணுக்கெட்டிய தூரம்வரை இருட்டாகவே உள்ளது.....

பாரிசில் நடந்தது உண்ணா விதரப்போராட்டம் அல்ல. ஒரு மாதகாலத்திற்கு கவனஈர்ப்புப் போராட்டம் பாரிசின் புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்திற்கு முன்னால் நடந்தது.மற்றபடி பிரான்சில் உங்கள் எதிர்ப்பை எங்கும் எப்படியும் காட்டலாம். ஆனால் உண்ணா விதரம் என்பது சட்டப்படி குற்றம் என நினைக்கிறேன் . அது எந்தச் சட்டத்தின் கீழ் எப்படி வருகிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு முறை ஊருக்கு திருப்பி அனுப்ப வைத்திருந்த தமிழர்கள் உண்ணாவிதரம் இருந்த பொழுது . அவர்களிற்கு மொழி பெயர்ப்பிற்காக என்னை காவல் துறையினர் அழைத்திருந்தனர். அப்பொழுது காவல்துறை அதிகாரி சொன்னது பிரான்சில் உண்ணாவிதரம் இருப்பது சட்டத்திற்கு எதிரானது அதற்காக தனியாக வழக்குப் பதிவு செய்யமுடியும் என்றார்.பிரான்சின் நீதிமன்ற தீர்ப்புக்களிற்கு எதிராக உண்ணாவிதரம் இருப்பதா அல்லது பொதுவாக அப்படித்தானா என்று சரியாகத் தெரியாது. விசாரிக்கிறேன். ஆனாலும் உண்ணாவிதரம் இருப்பதென்பது ஜரோப்பிற நாடுகளில் நடை முறைக்கு பெரிதும் சாத்தியப்படாத ஒன்று.காரணம் தற்கொலை முயற்சி என காரணம் காட்டி கைது செய்யப் படலாம்;

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் நோர்வே வந்திட்டீங்க அண்ணா. நீங்களும் களத்தில் நின்றிருக்க வேண்டியதுதானே?

புலம்பெயர் நாடுகளில் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒரு சிலர் சொல்லிக்கொண்டிருக்கும் அருமையான வசனம். இப்படியான வசனங்கள் பலரை இங்கே ஒதுங்கியிருக்க வைத்துள்ளது இங்கே யாரும் போராளிகளிலோ போராட்டத்திலோ குறை காணவில்லை.

மாறாக எத்தனையோ புலம்பெயர்மக்கள் குற்ற உணர்வுடன் கூனிக்குறிகித்தான் நிற்கின்றனர்.

அதற்காக ஒதுங்கியிருக்கவுமில்லை .

பலர் இயன்றளவு தாயகத்துடன் தொடர்புகளை வைத்துக்கொண்டு தானிருக்கின்றனர் .

உண்ணாவிரத்தை விட ஒவ்வொரு பிரதான பகுதிகளிலும் அனுமதி பெற்று 50, 100 பேரெனக் கூடி நாட்டின் தற்போதய நிலைகளை பிரசுரமாக விநியோகித்து கவனமீர்ப்புப் போராட்டமாக செய்யலாமென நான் நினைக்கின்றேன். இதற்கு பெரும்பாலும் ஒத்துழைப்புக் கிடைக்கும்.

வசம்பண்ணா சொல்வது போல் இந்த முறை ஆரம்பிப்பதற்கு இலகுவாக இருக்குமென நம்புகின்றேன்.

அதே போல் குர்திஷ் மக்கள் புலம்பெயர் நாடுகளில் எடுத்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் தவறிப்போனதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்

அப்ப நீங்க எல்லாரும் உண்ணா விரதம் இருக்க போறியள் எண்டு சொல்லுங்கோ..நீங்க எல்லாருக்கு இருக்க யோசித்த படியால நான் வந்து... :D

வந்து

வந்து

வந்து...

நீங்க உண்ணா விரதம் இருக்கிறதை பார்க்க வாரன் எண்டு சொல்ல வந்தனான் பாருங்கோ :D ....வேண்டும் எண்டா எண்ட சார்பில எங்கன்ட குரு உண்ணா விரத்தில கலந்து கொள்வார் எண்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் :lol: ..அது எல்லாம் சரி யாழ்களத்திளையோ உண்ணா விரதம் இருக்க போறியள் பாருங்கோ..

சரி..சரி ஒருத்தரும் கோவித்து போடாதையுங்கோ என்ன.. :wub:

எங்கன்ட சாத்(திரி) அங்கிள் சொன்னதையும் கொஞ்சம் கேட்கிறது நல்லது..எல்லாத்தையும் விசாரித்து போட்டு எப்ப உண்ணாவிரதம் எண்டு சொல்லுங்கோ அங்க சந்திக்கிறன்.. :)

அப்ப நான் வரட்டா!!

யமுனா,

இங்க எழுதுறவை எல்லாம் வீட்டில் இருந்து எழுதும் முகமூடிகள், ஆனால் வாசகர்கள் பல்வேறுபட்டவர்கள் வேலைக்கு போறவர்கள், மாணவர்கள், நிபுணர்கள். ஒரு ஆதங்கம் வேண்டுகோளாக முன்வைக்கப்பட்டு பின்னர் செயற்பாடாக முன்னெடுக்கப்படும் போது இதை அவர்களே முன்னின்று செய்ய வேண்டும் என்றோ, அல்லது அவர்களின் முகமூடிகள் கலைக்கப்பட வேண்டும் என்றோ எதிர்பார்க்கவில்லை! அது அவர்களின் மனசாட்சியின் வேலை!

இன்று இங்கு கதைக்கும் விடையம், இன்னும் ஒரு மாதத்தில் எப்படியும் செயற்படுத்தப்படும்!

ஏன் இங்கே எழுதுறவை எல்லாம் வீட்டில இருந்து எழுதும் முகமூடி எண்டு சொல்லுறிங்க சாணக்கியன் அண்ணா அவர்களும் எத்தனையோ வேலை பளு மத்தியில் தான் இங்கே எழுதுகிறார்கள்..(நீங்கள் உட்பட)..ஏற்று கொள்கீறிர்கள் தானே அண்ணா.. :lol:

ஒம்..செயற்பாடாக ஒண்டை எடுப்பது பிழை அல்ல..(அந்த செயற்பாட்டின் மூலம்)..நாங்கள் அடையும் இலக்கு என்ன எண்டு சிந்தித்து தான் ஒரு செயற்பாட்டை எடுக்க வேண்டும் :wub: ..யாரும் அப்படி செய்து விட்டார்கள் எண்டவுடன் நாங்களும் இறங்கபோறோம் எண்டு இறங்குவது என் பார்வையில் செயற்பாடாக படவில்லை... :)

மற்றது இங்கே கதைக்கும் விடயம் 1 மாசம் என்ன பல மாதங்களானாலும் கதைத்து போட்டு செல்லும் விடயமாகவே நான் பார்க்கிறேன்..மற்றவர்களின் பார்வை பற்றி எனக்கு தெரியவில்லை. :D .அதை விடுத்து செய்வார்கள் எனின் நிச்சயமாக வரவேற்தக்க செயற்பாடு தான் ஆனால் குறுங்கால நோக்கில் ஒண்டை பார்வையிடாம நீண்டகால செயற்பாட்டில் அவதானிக்கும் போது தான் அது வெற்றி அளிக்கும்.. :D

இது எம்மவர்களாள் புரிந்து கொள்வது கடினம் தான்..ஆனால் புரிந்து கொண்டால் வெற்றி..மற்றுமடி உங்கள் செயற்பாட்டை கேலி பண்ணுவதல்ல என் நோக்கம்.. :D (ஆனால் யதார்த்தம் எண்டு ஒண்டு இருக்குதல்லோ)..அதையும் கவனத்தில் எடுத்து செயற்படுங்கோ..வாழ்த்துக்கள்.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களுடைய ஓத்துழைப்பு தேவை. தனிமனிதனால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை. அப்படி நினைத்திருந்தால் எமக்கெல்லாம் இன்று தலைவர் இருக்கமாட்டார்.

எதற்காக கறுப்பி இதெல்லாம் சாத்தியப்படாது என்று கூறிவருகின்றீர்கள்.

களத்தில் உயிரை விடும் போராளிகளிற்கு நாம் செய்யும் நிதியுதவி மட்டும் பலம் சேர்க்கப்போவதில்லை. அவர்களிற்காக நாமும் ஏதாவது செய்து அவர்களின்; வீரத்தை மதிக்கவேண்டும். உந்து சக்தி வழங்கவேண்டும்.

இங்கு வாய் வீச்சடிக்கும் ஈழப்பற்றாளர்கள் இத்தகைய செயல்களை முன்நடத்த வேண்டும். சுழற்சி முறையில் செய்hல் நல்லது என்றால் கட்டாயம் செய்யலாம். இதற்கு இந்த நோர்வே மண்ணின் பொறுப்பாளர்கள் முன்வருவார்களா ? மக்கள் ஓத்துழைப்பு கிடைக்குமா ?

பெயரிற்கு பொங்கு தமிழ் என்று எமது தண்டவாளங்கள் வண்டவாளங்களை காட்டுவதிலும் பார்க்க இப்படியான ஒரு சில செயல்களை செய்வதன் மூலம் உலகநாடுகளை எம்பக்கம் இழுக்கலாம். இதன் மூலம் பல நன்மைகளும் கிடைக்கலாம்.

உங்கள் ஆதங்கம் புரிகிறது பரணி.

ஆனால்........ உண்ணாவிரதங்கள் எல்லாம் பயன் தராது. சட்டத்திற்கு புறம்பான செயல் என்று கூறி உள்ளே தள்ளிவிடுவாங்கள். அதைவிட இறுதியில் கண்ணீர்புகை கொண்டு விரட்டுவினம். அவர்கள் சொன்னவை இப்போதும் என் காதில்ல ஒலித்தக்கொண்டிருக்கு இதெல்லாத்தையும் உங்கட நாட்டில்ல போய் செய்யுங்கோ எங்கட நாட்டில வேண்டாம் .

முன்பும் உண்ணாவிரதங்கள் மேற்கொள்ளப்பட்டது சுமுகமான முடிவுகள் எட்டப்பட வில்லை.

ஊர்வலங்கள் எல்லாம் முன்னேடுக்கப்படுகின்றது நல்ல விசயம்.................ஆனால்..............இதற்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.