Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவனும் காதலிச்சான் நானும் காதலிச்சன்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா நான் போயிட்டு வாறன்.. புன்னகை தந்து விடைபெற்றான் சங்கர்.

இப்ப தான் வந்தாய்.. அதுக்குள்ள எங்கையடா போறாய்.. தாயின் பதில் கேள்வி அவசர அவசரமா வெளி வர, கொஞ்சம் திக்குமுக்காடிப் போன சங்கர் சுதாகரித்தபடி..

ஒரு இடமும் இல்ல அம்மா.. உவன் சிவா வீட்டடிப் பக்கம் சைக்கிளில ஒரு நாலு மிதி மிதிச்சு வட்டமடிச்சிட்டு வரப் போறன்.

உந்த உச்சி வெய்யிலுக்க உலாத்தாமல் கெதியா வந்து சேர்.. பாசமிகு எச்சரிக்கையோடு அம்மா விடை தர சங்கரின் சைக்கிள் லண்டன் வீதிகளில் காதலிகளோடு பறக்கும் பி எம் டபிள்யு வாகப் பறந்தது ஊர்ப் புழுதியில் குளித்தபடி.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சைக்கிள் நேராக காயத்திரி வீட்டு வாசலில் போய் நின்றது.

காயத்திரி.. அழகான பள்ளித் தோழி. சிரிப்பழகி சினேகாவை ஒத்த உருவம். சங்கரும் காயத்திரியும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். காயத்திரி சாதாரண தரம் படிக்கும் போது சங்கரிடம் அடிக்கடி நெருங்கி வந்து பழகிய போதெல்லாம்.. அவளுடன் காதல் பூப்பதாய் உணர்ந்தவன்.. அவளுடன் கனவில் டூயட் பாடித் திரிந்தவன் தான் இந்தச் சங்கர்...

சங்கர் உனக்கு சங்கதி தெரியுமா எங்கட வாகையடி வீட்டு பரிமளம் அன்ரி இருக்கிறா எல்லோ

ஓம் சொல்லுங்கோ அவாக்கு என்னம்மா... அவவுக்கு ஒரு மகளும் இருக்கெல்லோம்மா..

ஓமடா அவாட அந்த மகள் காயத்திரி கலியாணம் கட்டிக் கனடாவுக்குப் போயிட்டுதாம். போன கிழமை தான் மாப்பிள்ளை கனடாவில இருந்து வந்து கட்டிக் கொண்டு போனவராம். கலியாணம் கொழும்பில பெரிசா நடந்ததாம்.

மாப்பிள்ளை கனடாவில இஞ்சினியராம். அவளும் பிள்ளை அதிகம் படிக்காட்டிலும் கிளி போல நல்ல அழகு தானே. அதுதான் ஆசைப்பட்டு கட்டிக் கொண்டு போனவையாம். பொடியன் குடும்பம் எல்லாம் கன காலமா கனடாவில தானாம். பெரிய வசதியாம். எங்கட பசுபதி மாமா தானாம் பேசிச் செய்து வைச்சவர்.

என்று அம்மாவும் மகனும் சமீபத்தில் உரையாடிய வார்த்தைகள் காயத்திரி வீட்டு வாசலிலும் மனதோடு மீள.. அன்றொரு நாள் அவளோடு கனவில் முணு முணுத்த காதற் கான வரிகள் சோக வரிகளாக எழுந்தன சங்கரின் மனதில்.

எடே சங்கர் அது அப்ப.. இப்ப நீ யார்.. மனச் சாட்சி அவனைக் கேள்வி கேட்க.. காயத்திரியின் நினைவில் இருந்து மீண்டவன்.. சிவா வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.

அப்போ.. வாகனம் ஒன்று வேகமாய் வந்து அருகில் நின்றது.

சங்கர்.. உன்னை அண்ண உடன கூட்டிக் கொண்டு வரச் சொன்னவர் என்று வாகனத்தில் இருந்தவர் சொல்ல..

அப்படியா.. இதோ வாறன். சைக்கிள வாகனத்தில பின்னால போடுறன்.. அப்படியே வீட்ட போயிட்டு அம்மாட்டையும் சொல்லிட்டுப் போவம் என்ன.

ஓம் சங்கர். அப்படியே செய்வம்.

வாசலில் வாகனம் வந்து நிற்க.. சங்கரின் தாய்..

வாங்கோ பிள்ளையள் எப்படி இருக்கிறீங்கள்.

சுகமா இருக்கிறம் அம்மா. சங்கரைக் கூட்டிக் கொண்டு வரச் சொல்லி அண்ண சொல்லி விட்டவர் அதுதான் வந்தனாங்கள்.

அப்படியா.. சங்கர் கவனமாப் போய் வாப்பு என்று அன்பு மகனை கட்டியணைத்து உச்சிமோந்து, கண்களில் கண்ணீர் முட்ட அனுப்பி வைத்தார் அம்மா.

சங்கர் போய் இரு தினங்களில்..

ஈழநாதம் விசேட பதிப்புக்காய் மக்கள் முண்டி அடிக்கிறார்கள்.

என்ன விசயமாம் தம்பி.. சனங்கள் வரிசை கட்டி நிக்குதுகள். சங்கரின் அம்மா பசுபதி மாமாவை வீதியில் கண்டு கேட்டார்.

நேற்றிரவு கடலில சண்டையாம். கடற் கரும்புலிகள் தாக்கி டோரா மூழ்கடிப்பாம்.

அப்படியே சங்கதி. எங்க பேப்பரில போட்டிருக்காமோ...

ஓமாம் அதுதான் சனங்கள் பேப்பருக்காக காத்திருக்குதுகள் நானும் அதுக்குத்தான் நிற்கிறன் என்று முடித்தார் பசுபதி மாமா.

அந்த நேரத்தில் பசுபதி மாமாவின் மகன் சுகின்.. பதறியடித்துக் கொண்டு பத்திரிகையும் கையுமாய் ஓடி வந்தான்..

அம்மா.. சங்கர் அண்ணா கரும்புலியா வீரமரணம் அடைஞ்சிட்டார். படம் போட்டிருக்கு. என்று பதட்டத்துடன் பேப்பரை நீட்டினான் சங்கரின் அம்மாவிடம்.

ஐயோ என்ர மகனே என்று கதறியபடி.. பேப்பரை பறித்துப் படித்த அம்மா.. மூர்ச்சையானாள்.. மகனின் ஏக்கத்தில்..! பசுபதி மாமா.. அவரைத் தாக்கியவராய்.. சங்கருக்கு மனதோடு வீரவணக்கம் செய்தார்.

சங்கரும் தான் காதலிச்சான்.. காயத்திரியை மட்டுமல்ல.. அதற்கு மேலாய் தாயக மண்ணை.. அப்படித்தான் ஒவ்வொரு கரும்புலியும். இது சங்கரின் வீர வணக்க நிகழ்வில் அவனின் உற்ற தோழர்களில் ஒருவன் சொன்ன வார்த்தைகள்.

காதலிகளின் பின்னால் அலைவதும்.. பின் பிரிவால் வாடுபவனாயும் எண்ணிக் கொண்டு தாயகத்தை மறந்து, வீணே குடியால், புகையால் சீரழியும் தொலை தூரத்தில் தாயக உறவறுத்து இருக்கும் எனக்காய் சொன்னான் போலும் அவ்வார்த்தைகளை..!

(யாவும் கற்பனை.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கால போவார்

காவியமான கரும்புலி .......

கடைசி வரிகள் மனதை கனக்க வைக்கிறது.

காதலிகளின் பின்னால் அலைவதும்.. பின் பிரிவால் வாடுபவனாயும் எண்ணிக் கொண்டு தாயகத்தை மறந்து, வீணே குடியால், புகையால் சீரழியும் தொலை தூரத்தில் தாயக உறவறத்து இருக்கும் எனக்காய் சொன்னான்..!

கடைசி வரிகள் மனதை பல கேள்விகள் கேட்டு கனக்க வைக்கிறதே நெடுக்காலபோவார்.

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணை நேசித்து தம்மை அர்ப்பணிக்கும் வீரமறவரின் மனதைப் படம்பிடித்து கனக்கும் வரிகளால் கதையில் காவியம் சொன்ன உங்கள் எழுத்துக்கள் உண்மையிலேயே எம்மை இளகவைத்து விட்டன. இது தினமும் எம் மண்ணின் நிகழ்வாக இருந்தபோதும் நீங்கள் கதை சொன்ன பாங்கு மிகவும் அற்புதம்.உங்கள் திறமைக்கு எம் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ் அண்ணா ...

அவனும் காதலிச்சான் ...நானும் காதலிச்சன் ...

.கதை நன்றாக இருக்கிறது .ஆனால் .......

ஒரு சிறு விளக்கம் தரவும் எனக்கு ...அவன் காதலிச்சான் ..காயத்திரியை அது .... சரி ..

.பின் தாயகத்தை ..அதுவும் சரி. நான் காதலிச்சன் ? எதை ? .....குடி .?..சிகரட் .....?

. மதிக்கு ஒரு விளக்கம் தரவும் . சரியான வேளையில் ,

தேவையான போது அமைந்த கதை .மிக மிக நன்று . நிலாமதி

Edited by nillamathy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலியன்.. காவலூர் கண்மணி.. நிலாமதி உங்களின் ஊரோடு உறவாடி கரும்புலிகளின் நினைவுகள் தாக்கும் மனதை உணர முடிகிறது. அவை கரும்புலிகளுக்கு அர்ப்பணமாகட்டும்.

ஒரு சிறு விளக்கம் தரவும் எனக்கு ...அவன் காதலிச்சான் ..காயத்திரியை அது .... சரி ..

.பின் தாயகத்தை ..அதுவும் சரி. நான் காதலிச்சன் ? எதை ? .....குடி .?..சிகரட் .....?

இதென்ன கேள்வி. எளிமையாக விடையையும் சொல்லி கேள்வியும் கேட்கிறீங்களே.

நானோ கண்டதும் காட்சி கொண்டதும் கோலம் என்றிருக்க.. என்னை ஒத்த சூழலில் வாழ்ந்தும் கரும்புலியாய் ஆன ஒரு வீரனின்.. மன உறுதி ஊரை விட்டு ஓடி வந்தும் சீரழியும் என்னை விட எத்தனை மடங்கு பலமானது என்பதை சொல்லனுமே..! ^_^

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் தாத்தா,

உங்களின் "அவனும் காதலிச்சான் நானும் காதலிச்சன்"

கதை படித்தேன்.எடுத்து கொண்ட கருவும்,

முடித்து கொண்ட விதமும் நன்று.

ஆனாலும் கதையை கோர்வையாக்கும் விதத்தில்

அநுபவம் தேவை போல் தோன்றுகிறது. ^_^

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தாத்தா,

ஆனாலும் கதையை கோர்வையாக்கும் விதத்தில்

அநுபவம் தேவை போல் தோன்றுகிறது. ^_^

நன்றி புள்ள கனிஷ்டா. உண்மைதான் எனக்கு கதை எழுதி அதிகம் பழக்கமில்லை. இருந்தாலும் என் எண்ண ஓட்டங்களை எனக்குரிய வடிவில் சொல்லனும் என்ற விருப்பில் எழுதிவிடுவேன். வாசகர் உங்களுக்குத்தான் அதில் உள்ள சிரமங்கள் புரியும். எழுதிய நமக்கு அது இலகுவில் புரியாது. உங்களின் நிறை குறைகள் தான் எழுத்தை மெருகூட்டும். நமக்கு இது எமது எண்ணத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள மட்டுமே. கலைஞன்.. எழுத்தாளன்.. கதாசிரியர்.. கவிஞர்.. படைப்பாளி என்றெல்லாம் பட்டம் சூட்டிக்க இல்லத்தானே. :o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரும் தான் காதலிச்சான்.. காயத்திரியை மட்டுமல்ல.. அதற்கு மேலாய் தாயக மண்ணை.. அப்படித்தான் ஒவ்வொரு கரும்புலியும். இது சங்கரின் வீர வணக்க நிகழ்வில் வந்த அவனின் உற்ற தோழர்களில் ஒருவனின் வார்த்தைகள்.

காதலிகளின் பின்னால் அலைவதும்.. பின் பிரிவால் வாடுபவனாயும் எண்ணிக் கொண்டு தாயகத்தை மறந்து, வீணே குடியால், புகையால் சீரழியும் தொலை தூரத்தில் தாயக உறவறத்து இருக்கும் எனக்காய் சொன்னான் போலும்..!

கதைக்குள் ஒரு செய்தியை சொன்ன விதம் அருமையாக இருந்தது நெடுக்ஸ் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதைக்குள் ஒரு செய்தியை சொன்ன விதம் அருமையாக இருந்தது நெடுக்ஸ் .

நான் எதை எதிர்பார்த்து இக் குட்டிக்கதையை எழுதினேனோ.. நீங்களும் அதையே சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். நன்றி சிறி. ^_^

அட..எங்கன்ட தாத்தாவின்ட கதை.."அவனும் காதலிச்சான் நானும் காதலிச்சன்"..ஒரு கதையில் பலதை அடக்கிவிட்டீங்கள் தாத்தா முதலில் அதற்கு வாழ்த்துக்கள் :wub: ..ஒம் தாத்தா அவர்கள் தாய்நாட்டிற்காக உயிரை கொடுக்கிறார்கள் இங்கே சிலர் யாரோ ஒருத்திக்காக உயிரை கொடுக்கிறார்கள்..(உதுகள் ஒன்னும் செய்ய ஏலாது பாருங்கோ).. :)

கடசியில் அவன் உயிரை பிரிந்தும் தாய் நாட்டின் மேல் உள்ள காதலி வெளிபடுத்தினான்...மற்றவை உயிரை பிரிந்து ஒன்னையும் வெளிபடுத்தாம பெற்றவருக்கும் கஷ்டத்தை கொடுக்கீனம்.. :(

"அவனும் காதலிச்சான் நானும் காதலிச்சன்" கதை அல்ல நிஜம்... :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அவனும் காதலிச்சான் நானும் காதலிச்சன்" கதை அல்ல நிஜம்... :(

அப்ப நான் வரட்டா!!

நியாயமான நிலை ஜம்முப் பேராண்டி. :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கதை நெடுக்ஸ் அண்ணை,

தாயக மண்ணே காதலி அதுவே மானம்...அதுவே உயிர்..மூச்சு.

இப்படித்தான் கதைமுடியும் என்று நினைச்சனான்..

இருந்தாலும் யாவும் கற்பனை எண்டு போட்டுட்டீங்களே...உதில ஒண்டும் கற்பனை இல்லை எங்கள் ஊரில் நடக்கின்ற நிகழ்வுகள் தான்..

காதலில் தோல்வி எண்டால் தண்ணியடிச்சு தாடிவளர்த்து தேவதாஸ் ஆகி பேர் கெட்டுப் போகாமல் மண்மானம் காக்க தன்மானப்புலியாய் வாழ்வது எத்தனை சுகம்..

அருமையான படைப்பு அண்ணை.

வாழ்த்துகள்....

Edited by Thamilthangai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலில் தோல்வி எண்டால் தண்டியடிச்சு தாடிவளர்த்து தேவதாஸ் ஆகி பேர் கெட்டுப் போகாமல் மண்மானம் காக்க தன்மானப்புலியாய் வாழ்வது எத்தனை சுகம்..

ம்ம்.. கரும்புலிகளோடு தேவதாசர்களை ஒப்பிடவே முடியாது. அது மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போன்ற ஒரு நிலை..!! இருந்தாலும் மலை உயர்ந்தது மடுவை விட என்று அழுத்திச் சொல்லத்தான் வேண்டி இருக்கிறது. :(

சங்கரும் தான் காதலிச்சான்.. காயத்திரியை மட்டுமல்ல.. அதற்கு மேலாய் தாயக மண்ணை.. அப்படித்தான் ஒவ்வொரு கரும்புலியும். இது சங்கரின் வீர வணக்க நிகழ்வில் வந்த அவனின் உற்ற தோழர்களில் ஒருவனின் வார்த்தைகள்.

பெரிய விசயத்தை குட்டிக்கதையாக அழகாக சொல்லி முடிச்சிருக்கிறீங்க. தொடர்ந்து இப்படியான கதைகள் எழுதுவீர்கள் என நம்புகின்றேன். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரிய விசயத்தை குட்டிக்கதையாக அழகாக சொல்லி முடிச்சிருக்கிறீங்க. தொடர்ந்து இப்படியான கதைகள் எழுதுவீர்கள் என நம்புகின்றேன். :lol:

மாவீரர்களின் வாழ்வைப் பற்றி சொல்லாமல் இருப்பதே தப்பு. அவர்கள் எமக்காய் வாழ்ந்து சாவை அனைத்த தியாகிகள். அவர்களின் சிறப்பை உள்ளபடி எழுதுவது.. ஒவ்வொரு தமிழனதும் தார்மீகப் பொறுப்பு. :lol:

நெடுக்ஸ்,

கதை நல்லாயிருக்கு. நான் வாசித்த போது எழுத்து நடையில் எந்த தடையும் எனக்கு வரலை. அப்படியே நன்றாக அலை போல தான் பயணித்த உணர்வு. அருமையான கரு. "என்ன நெடுக்ஸ் இப்படி கொஞ்சமா முடிச்சிட்டார்?" என மனதில் தோன்றியது. அழகான சில உணர்வுகள் கதையில், அதை இன்னும் விரிவாக்கியிருக்கலாமே என ஒரு சின்ன ஏக்கம். பேசாமல் உங்க கதை கருவை எடுத்து நான் ஒரு கதை எழுதிடலாம் என கை பரபரக்குது.

ஒருவரையும் சாடாமல், ஒருவருக்கும் பெரிய விம்பம் குடுக்காமல் அத்தனை பாத்திரங்களும் சாதாரணமாக வந்து போகின்றது. ஆனால் ஒவ்வொன்றும் தடம் பதிக்கின்றது.

உங்க கதைகளை விமர்சிக்கும் அளவுக்கு என்னுடைய தமிழ் இல்லை என்றாலும் என் மனதில் தோன்றியவற்றை பகிர்ந்துகொண்டேன். தொடர்ந்து எழுதுங்கள். :0

காதலிக்காக தாய் தந்தை உறவுகளைத் துறப்பவர்களுக்கு, காதலித்த தன் நாட்டுக்காகத் உயிரையே துறந்த சங்கர் ஒரு பாடம்.

பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,

கதை நல்லாயிருக்கு. நான் வாசித்த போது எழுத்து நடையில் எந்த தடையும் எனக்கு வரலை. அப்படியே நன்றாக அலை போல தான் பயணித்த உணர்வு. அருமையான கரு. "என்ன நெடுக்ஸ் இப்படி கொஞ்சமா முடிச்சிட்டார்?" என மனதில் தோன்றியது. அழகான சில உணர்வுகள் கதையில், அதை இன்னும் விரிவாக்கியிருக்கலாமே என ஒரு சின்ன ஏக்கம். பேசாமல் உங்க கதை கருவை எடுத்து நான் ஒரு கதை எழுதிடலாம் என கை பரபரக்குது.

ஒருவரையும் சாடாமல், ஒருவருக்கும் பெரிய விம்பம் குடுக்காமல் அத்தனை பாத்திரங்களும் சாதாரணமாக வந்து போகின்றது. ஆனால் ஒவ்வொன்றும் தடம் பதிக்கின்றது.

உங்க கதைகளை விமர்சிக்கும் அளவுக்கு என்னுடைய தமிழ் இல்லை என்றாலும் என் மனதில் தோன்றியவற்றை பகிர்ந்துகொண்டேன். தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி புள்ள தூயா. ஆற அமர்ந்திருந்து வாசிச்சு உங்கள் கருத்தைப் பகர்ந்து கொண்டதற்கு.

தாராளமாக இதே கதைக்கருவை நீங்கள் கையாண்டு ஒரு காவியம் படைக்க அழைக்கின்றேன். அதற்குத் தடையில்லை. உண்மையில் இது எனது கதைக் கரு அல்ல. தாயகத்தில் எம்மக்கள் மத்தியில் அவர்களின் நிஜ வாழ்வில் கருக்கட்டியுள்ள நீண்ட கால கதைக் கரு.. நானும் அதை எடுத்து எனது அளவுக்கு கையாண்டேன் அவ்வளவும் தான். :lol:

காதலிக்காக தாய் தந்தை உறவுகளைத் துறப்பவர்களுக்கு, காதலித்த தன் நாட்டுக்காகத் உயிரையே துறந்த சங்கர் ஒரு பாடம்.

பாராட்டுக்கள்.

முத்தாரமான தன் பார்வையோடு கருத்துத் தந்த இணையவனுக்கு நன்றிகள். :D

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு நல்ல கதையினை வாசித்த திருப்தி.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் வீதிகளில் காதலிகளோடு பறக்கும் பி எம் டபிள்யு வாகப் பறந்தது

நன்பரே! கதைமுழுதும் நிஜமேதான் கற்பனையில்லை. வேணுமென்டால் இதுமட்டும் உங்க கற்பனையாக இருக்கலாம். லன்டனில பி.எம். டபிள்யு என்ன போர்ஜ்கூட ஊரத்தான் முடியும். நன்றி நெடுக்ஸ். தொடருங்கள் வாழ்த்துக்கள்... :huh::wub:

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படைப்பு நெடுக்கண்ணை..!

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் வீதிகளில் காதலிகளோடு பறக்கும் பி எம் டபிள்யு வாகப் பறந்தது

நன்பரே! கதைமுழுதும் நிஜமேதான் கற்பனையில்லை. வேணுமென்டால் இதுமட்டும் உங்க கற்பனையாக இருக்கலாம். லன்டனில பி.எம். டபிள்யு என்ன போர்ஜ்கூட ஊரத்தான் முடியும். நன்றி நெடுக்ஸ். தொடருங்கள் வாழ்த்துக்கள்... :rolleyes::o

எதாவது பெரிய விளையாட்டு அணியினரது உதைப்பந்தாட்டம் நடைபெறும் போது வேகமாகச் செல்லலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு நன்றிகள் கந்தப்பு,சுவி மற்றும் டங்குவார். உங்கள் கருத்துக்கள் மேலும் எழுதத் தூண்டுதலாக அமையும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.