Jump to content

ஞாபகம் வருகுதோ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மங்கள இசை முழங்க புரோகிதர் தனது பணிகளை மும்மரமாக செய்து கொண்டிருந்தார் திருமண பந்தத்தில் இணையும் ஒரு உள்ளங்களுக்கு இறைவனிடம் அனுமதி கேட்டு.அவர் அனுமதி கொடுக்கும்படி புரோகிதருக்கு சொல்ல தம்பதிகளும் இணைந்துவிடுவார்கள் அந்த அக்கறையாக புரோகிதர் இருந்தார்.அத்துடன் தனது அன்பளிப்புகளையும் தயார்படுத்தி கொண்டு இருந்தார் வீட்டிற்கு எடுத்து செல்வதிற்கு.

அலங்கரிக்கபட்ட மேசைகள் மற்றும் கதிரைகளும் மண்டபத்தின் அழகை இன்னும் மெருகூட்டிய வண்ணம இருந்தது.அந்த மேசைகள் அலங்கரிக்கபட்ட விததிற்கேற்ப அந்த மேசைகளின் மேல் பலகாரங்கள் மற்றும் குளிர்பானங்களும் பார்க்கும் கண்களை கவர்ந்திழுக்கும் வகையில் அடுக்கபட்டிருந்தது.

சுரேஷ் தனக்கு தெரிந்த நண்பர்களின் மேசைக்கு போய் அவர்களுக்கு சலாம் போட்டு விட்டு அமர்ந்து கொண்டான் தெரியாதவர்களை தெரிந்தவர்கள் சுரேஷ்ற்கு அறிமுகபடுத்தி வைத்தார்கள் அவனும் பதிலிற்கு "கலோ" சொல்லிவிட்டு தனது வழமையான சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்.

"உம்மென்று" முகத்தை வைத்து கொண்டிருக்காமல் ஆட்களோட கதையுங்கோ என்று மனிசி திட்ட நிதானதிற்கு வந்தவன் பக்கத்து மேசையில் இருப்பவர்களை ஒரு நோட்டமிட்டான்.அரசியல் கதைக்க கூடிய ஆட்களை காணவில்லை.எல்லாரும் தங்களது பிள்ளைகளின் படிப்பை பற்றி தான் அதிகம் கதைத்து கொண்டிருந்தார்கள்.யாராவது விளையாட்டை பற்றி கதைப்பீனமோ என்று திரும்பி பார்த்தால் அதுவும் இல்லை.

எங்கன்ட ஆட்கள் உதைபந்தாட்டதிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை தானே கிரிகேட்டிற்கு தான் எங்கன்ட சனம் முக்கியத்துவம் கொடுக்கும் ஏன் என்றால் அது "டீசன்ட் போயிஸ்" விளையாடும் விளையாட்டு அதனால் உலக கோப்பை உதைபந்தாட்டதிலும் பார்க்க உள்ளூர் கிரிகேட் செய்தி பற்றி தான் சனம் அலசும் என்று நினைத்து போட்டு இருக்கையில்.

சுரேசின் முதுகை தட்டியபடியே கஸ்டம் கந்தர் வந்து அவனுக்கு அருகாமையில் அமர்ந்தார் அறிமுகமான "கஸ்டம்ஸ் கந்தரை" கண்டவுடன் சுரேசிற்கு ஒரே மகிழ்ச்சி காரணம் கந்தர் அரசியலில் இருந்து அடுபங்கரை வரை செய்திகளை ஒரு அலசல் அலசுவார்கள்..இலங்கையில் சுங்க இலகாவில் வேலை பார்த்து இளைப்பாறியவுடன் அவுஸ்ரெலியா பிரஜா உரிமை எடுத்து மூத்த பிரஜையாக இருக்கிறார்.வானொலி,பத்திரிகை

களிள் வரும் செய்திகளை அலசி ஆராய்வது தான் அவரின்ட தற்போதைய வேலை.

சுரேஷ் கந்தரை வம்பிழுக்க வேண்டும் என்று இன்னொரு மேசையில் இருந்த வெள்ளையர்கள்,ஆபிரிக்கா இனதவர்கள் மற்றும் சீனர்கள் என்று பல இன மக்களை காட்டி உவையள் எல்லாம் இருக்கீனம் கவனித்தீங்களோ என்று கந்தரை உசுபேற்றிவிட்டான்.

கந்தர் கொஞ்சம் சாதி தடிப்பு பிடித்த ஆள் அது தான் அவன் இப்படி உசுபேற்றினவன் தம்பி சுரேஷ் இப்ப எங்களுடைய ஆட்கள் வெளிநாட்டில் வாழும் போது பல்கலாச்சார மக்களுடன் பழக வேண்டி இருக்குது அத்துடன் அவர்களுடன் வேலை செய்யும் நண்பர்கள் இவர்களுக்கு அழைப்பு கொடுத்திருப்பார்கள் அது தான் அவர்கள் வந்திருப்பார்கள்.இது எல்லாம் நாங்கள் பெரிசாக எடுத்து கொள்ள கூடாது."இட் இஸ் நொட் அ பிக் டீல்".

அண்ணா ஊரில என்னுடைய அக்காவின் கல்யாணதிற்கு என்னுடைய நண்பன் ஒருத்தருக்கு அழைப்பிதழ் கொடுக்க போகக்க நீங்கள் தடுத்தது ஞாபகம் வருகிறதோ.ஒரே ஊரிலையே ஒரே நிறத்தில ஒரே மொழியில பேசுகிற ஒரு நண்பனிற்கு அழைப்பிதழ் கொடுக்கும் போது நீங்கள் என்ற அம்மாவிட என்ன சொல்லி தடுத்தனியள் என்று ஞாபகம் வருதோ?

நண்பனிற்கு அழைபிதழ் கொடுத்து அவன் கல்யாணதிற்கு வந்தால் நாங்களும் அந்த சாதி என்று சனம் நினைக்கும்,அது போக நீ அவனை கூப்பிட பிறகு அவன் உன்னை கூப்பிட பிறகு நீ அங்கு போய் சாப்பிட வேண்டி வரும் ஆனபடியால் பேசாமல் இரு என்று எனக்கு ஏசினது ஞாபகம் வருதோ.

அங்கு "பிக் டீலாக" இருந்த விடயம் இங்கே எப்படி "நொட் அ பிக் டீலாக" இருக்கிறது அங்கு பல ஒற்றுமைகள் இருந்தும் சாதியால் வேற்றுமை அழைப்பதழ் கொடுப்பதை தடுத்தியள்,இங்க பல வேற்றுமைகள் இருந்தும் (நிறம்,மொழி,கலாச்சாரம்,தேசம்) தராதரம் (வசதி,வாய்ப்பு) ஒற்றுமை காட்டுறியள் என்ற தாமதம் கந்தர் அந்த இடத்தில இருந்து மெல்ல நகர தொடங்கிட்டார்.

Posted

அட..அட நேத்தைக்கு நடந்த கல்யாணத்திலையோ உது எல்லாம் நடந்தது :D ..சா..சா நான் அங்கால இங்கால பார்த்ததில உதை கவனிக்காம விட்டுபோட்டன் :( ..அப்ப அங்கையும் தாங்கள் ஒழுங்கா இருக்கல எண்டு சொல்லுங்கோ..அது தானே பார்த்தன்.. :)

"ஞாபகம் வருதோ"..பலரிடம் கேட்கபட வேண்டிய கேள்வி..நல்லதொரு கதை வாழ்த்துக்கள் மாம்ஸ் :) ...சரி எனி ஒன்னுக்கும் கவலைபடாதையுங்கோ எண்ட கல்யாணதிற்கும் உங்கன்ட நண்பருக்கு பத்திரிகை கொடுப்போம் என்ன... :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஞாபகம் வருதோ? பலரிடம் கேட்கப்பட்ட கேள்வி இன்னும் பலரிடம் கேட்கப்படவேண்டிய கேள்வி

என்னதான் புலம் பெயர்ந்தாலும் தமிழர் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு

இது தமிழ் இரத்தத்தோட ஊறிப்போன சங்கதி. இதை உடைப்பதற்கு எம்மால் முடியாமல் போனாலும்

எம் அடுத்த சந்ததியால் நிச்சயம் முடியும்நன்றிகள் புத்தன்

Posted

புத்தன் வழைமை போல குட்டிக்கதையை குட்டி (தலையில்) சொல்லியிருக்கிறீங்கள் :lol:

Posted

அங்கு "பிக் டீலாக" இருந்த விடயம் இங்கே எப்படி "நொட் அ பிக் டீலாக" இருக்கிறது அங்கு பல ஒற்றுமைகள் இருந்தும் சாதியால் வேற்றுமை அழைப்பதழ் கொடுப்பதை தடுத்தியள்,இங்க பல வேற்றுமைகள் இருந்தும் (நிறம்,மொழி,கலாச்சாரம்,தேசம்) தராதரம் (வசதி,வாய்ப்பு) ஒற்றுமை காட்டுறியள் என்ற தாமதம் கந்தர் அந்த இடத்தில இருந்து மெல்ல நகர தொடங்கிட்டார்.

புத்தன் நல்ல குட்டி கதை. ஆனால் செய்தி ஒன்றையும் சொல்லி தான் இருக்கிறீர்கள். நாம் இன்னும் நிறைய படிக்கவேண்டியுள்ளது மற்றவர்களிடம் இருந்து.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல கதை புத்தன்.

அதுசரி உவன் ஜமுனனோடை என்னண்டு காலந்தள்ளுறியள் :lol:

Posted

அதுசரி உவன் ஜமுனனோடை என்னண்டு காலந்தள்ளுறியள் :lol:

:D:lol::D:D:):D கேட்டாங்கையா ஒரு கேள்வி.

கு சா தாத்தா எப்படி இபப்டி ஒரு கேள்வி கேட்க துணிஞ்சியள். ஜம்மு இப்ப வரபோறார் பாருங்கோ :D

புத்துமாமா நேற்று நடந்த கல்யாணத்தில் தான் உது எல்லாம் நடந்திச்சுதோ? ஜம்மு சொன்னபோல ஜம்முவின் கல்யாணத்தில் எல்லோருக்கும் அழைப்பு கொடுத்திடுங்கோ என்ன?

உவர் கந்தருக்கும் மறக்காம கொடுங்கோ :D

அங்கு "பிக் டீலாக" இருந்த விடயம் இங்கே எப்படி "நொட் அ பிக் டீலாக" இருக்கிறது அங்கு பல ஒற்றுமைகள் இருந்தும் சாதியால் வேற்றுமை அழைப்பதழ் கொடுப்பதை தடுத்தியள்,இங்க பல வேற்றுமைகள் இருந்தும் (நிறம்,மொழி,கலாச்சாரம்,தேசம்) தராதரம் (வசதி,வாய்ப்பு) ஒற்றுமை காட்டுறியள் என்ற தாமதம் கந்தர் அந்த இடத்தில இருந்து மெல்ல நகர தொடங்கிட்டார்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல கதை. எத்தனை பெயர்கள் இருக்கிறது. எதுக்கு புத்தா கந்தர் என்று கதாபாத்திரத்துக்கு பெயர் வைத்தனீங்கள்?. சனம் நான் தான் உந்தக் கந்தர் என்று நினைக்கப் போயினம்.

Posted

நல்ல கதை. எத்தனை பெயர்கள் இருக்கிறது. எதுக்கு புத்தா கந்தர் என்று கதாபாத்திரத்துக்கு பெயர் வைத்தனீங்கள்?. சனம் நான் தான் உந்தக் கந்தர் என்று நினைக்கப் போயினம்.

:(:( நான் அபப்டித்தான் நினைத்தேன் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

:(:( நான் அபப்டித்தான் நினைத்தேன் :D

பார்த்தியே புத்தா, உந்தச் சின்னப்பிள்ளைகூட என்னைத் தப்ப நினைச்சிட்டுது

Posted

அதுசரி உவன் ஜமுனனோடை என்னண்டு காலந்தள்ளுறியள்

கு.சா தாத்தா என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்க உங்களுக்கு எப்படி தான் மனசு வந்ததோ :D ..நான் ஒரு நன்ன பிள்ள எண்டு எல்லாம் பொய் சொல்லமாட்டன் அல்லோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

கேட்டாங்கையா ஒரு கேள்வி.

கு சா தாத்தா எப்படி இபப்டி ஒரு கேள்வி கேட்க துணிஞ்சியள். ஜம்மு இப்ப வரபோறார் பாருங்கோ

புத்துமாமா நேற்று நடந்த கல்யாணத்தில் தான் உது எல்லாம் நடந்திச்சுதோ? ஜம்மு சொன்னபோல ஜம்முவின் கல்யாணத்தில் எல்லோருக்கும் அழைப்பு கொடுத்திடுங்கோ என்ன?

உவர் கந்தருக்கும் மறக்காம கொடுங்கோ

ஓ...அப்படி என்ன ஒரு கேள்வி கேட்டு போட்டார் எங்கன்ட் கு.சா தாத்தா :wub: ..உதுக்கு எல்லாம் ஏனப்பா துணிவு தேவை அச்சோ..அச்சோ..(முடியல) :lol: ..சா..சா இதுக்கு எல்லாம் ஜம்மு அசராது இது எல்லாம் ஜம்முவின் அரசியல் வாழ்க்கையில் சகஜமப்பா.. :wub:

எண்ட கல்யாணத்தை நான் வந்து இமயமலையில நடத்தலாம் எண்டு நினைத்திருக்கிறன்..எல்லாரும் வருவியள் தானே அங்க..?? :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன

பார்த்தியே புத்தா, உந்தச் சின்னப்பிள்ளைகூட என்னைத் தப்ப நினைச்சிட்டுது

கந்தர்" இமேஜ் " பழுதடைந்து விட்டதோ? எனது அடுத்த கதைக்கும் கதாநாயகன் கந்தர் தான் .கதையின் பெயர் "இமேஜ் பாதிக்கபடப்போகுது"

Posted

ஓ...அப்படி என்ன ஒரு கேள்வி கேட்டு போட்டார் எங்கன்ட் கு.சா தாத்தா :wub: ..உதுக்கு எல்லாம் ஏனப்பா துணிவு தேவை அச்சோ..அச்சோ..(முடியல) :) ..சா..சா இதுக்கு எல்லாம் ஜம்மு அசராது இது எல்லாம் ஜம்முவின் அரசியல் வாழ்க்கையில் சகஜமப்பா.. :wub:

எண்ட கல்யாணத்தை நான் வந்து இமயமலையில நடத்தலாம் எண்டு நினைத்திருக்கிறன்..எல்லாரும் வருவியள் தானே அங்க..?? :wub:

அப்ப நான் வரட்டா!!

:lol: புத்துமாமாவே உந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் போய்விட்டார் என்றால் கேள்வியின் பெறுமதி விளங்குது தானே.

அட அட இமயமலையிலோ உங்கள் திருமணம்? நான் நினைச்சேன் போற போக்கை பார்த்தால் கோகுலத்தில் என்றல்லவா :mellow:

Posted

:wub: புத்துமாமாவே உந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் போய்விட்டார் என்றால் கேள்வியின் பெறுமதி விளங்குது தானே.

அட அட இமயமலையிலோ உங்கள் திருமணம்? நான் நினைச்சேன் போற போக்கை பார்த்தால் கோகுலத்தில் என்றல்லவா :mellow:

சா...சா அவரே பதில் சொல்லா போயிட்டார் எண்டபடியால :wub: ...விளங்கி கொள்ளனும் என்ன பதில் விளங்கிச்சோ நிலா அக்காவிற்கு :lol: ..கோகுலத்தில் தக்க ராதையை சித்தபுவின் துணையுடன் தேர்வு செய்து இமயமலையில் கல்யாணம் எண்டா பாருங்கோ.. :wub:

அது சரி சித்தப்பு உங்களை தேடி கொண்டல்லாவ இருக்கிறார்..ஒரு நேர்முக பரீட்சைக்கு எப்ப பரீட்சை எண்டு அவரிட்ட வினாவுங்கோ என்ன.. :)

அப்ப நான் வரட்டா!!

Posted

சா...சா அவரே பதில் சொல்லா போயிட்டார் எண்டபடியால :mellow: ...விளங்கி கொள்ளனும் என்ன பதில் விளங்கிச்சோ நிலா அக்காவிற்கு :wub: ..கோகுலத்தில் தக்க ராதையை சித்தபுவின் துணையுடன் தேர்வு செய்து இமயமலையில் கல்யாணம் எண்டா பாருங்கோ.. :wub:

அது சரி சித்தப்பு உங்களை தேடி கொண்டல்லாவ இருக்கிறார்..ஒரு நேர்முக பரீட்சைக்கு எப்ப பரீட்சை எண்டு அவரிட்ட வினாவுங்கோ என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

:wub: எனக்கு தெரியும் தானே என்ன பதில் என்று....

அட சிலவேளை மாமா வீட்டிலேயே உங்க கிட்ட கேள்விக்கு விடையை சொல்லிட்டு நித்தாவாகிட்டாரோ தெரியல்லை

அட அட கோகுலத்தில் தேர்வு செய்து இமயமலையில் திருமணமா? அதுசரி இமயமலைக்கு கொண்டுசெம்ன்று அங்கிருந்து தள்ளிவிட்டிட்டு மீண்டும் கோகுலம் வந்து இன்னொன்றை தேர்வு செய்யமாட்டியள் தானே :lol: இல்லை கேட்டனான் பாருங்கோ

ஓ தேடினவரோ? இப்போ வந்துவிட்டேன் நாளைக்கும் வருவேன் என அறிவித்து விடுங்கள்.

அட தேவுக்கு நான் வராட்டாலும் என்னை பாஸ் பண்ண வைச்சிட மாட்டியளோ நீங்கள்? :)

Posted

:wub: எனக்கு தெரியும் தானே என்ன பதில் என்று....

அட சிலவேளை மாமா வீட்டிலேயே உங்க கிட்ட கேள்விக்கு விடையை சொல்லிட்டு நித்தாவாகிட்டாரோ தெரியல்லை

அட அட கோகுலத்தில் தேர்வு செய்து இமயமலையில் திருமணமா? அதுசரி இமயமலைக்கு கொண்டுசெம்ன்று அங்கிருந்து தள்ளிவிட்டிட்டு மீண்டும் கோகுலம் வந்து இன்னொன்றை தேர்வு செய்யமாட்டியள் தானே :wub: இல்லை கேட்டனான் பாருங்கோ

ஓ தேடினவரோ? இப்போ வந்துவிட்டேன் நாளைக்கும் வருவேன் என அறிவித்து விடுங்கள்.

அட தேவுக்கு நான் வராட்டாலும் என்னை பாஸ் பண்ண வைச்சிட மாட்டியளோ நீங்கள்? :lol:

ஓ..உங்களுக்கு தெரியுமோ.. :mellow: (எங்கள் கோகுல இரகசியங்கள் எல்லாமே வெளியாள கசியுது)..இது எப்படி என்பதனை நாம் முதலில் கண்டு பிடிக்க வேண்டும்..சா..சா அவர் ஒன்னும் சொல்லல்ல நான் நன்ன பிள்ள எண்டு உங்களுக்கு தெரியாதா என்ன.. :)

ஓ..அதுவும் நன்ன யோசனையா இருக்கு எதற்கும் உங்கன்ட யோசனையை சித்தப்புட்ட சொல்லுறன் அவர் என்ன சொல்லுறார் எண்டு பார்த்து செய்யிறன்..ஆனா இமயமலையில இருந்து எல்லாம் தள்ளமாட்டன் பாவம் தானே வேற ஏதாவது சின்ன மலையில இருந்து தள்ளிவிடுறன் என்ன..(சரி முளுசாதையுங்கோ).. :wub:

சரி..சரி நான் சொல்லி விடுறன்..நான் உங்களை சித்தி பெற வைத்திடுவன் ஆனால் சித்தப்பு உங்களிட்ட பல கேள்விகள் கேட்கனும் எண்டு சொல்லி இருக்கிறார் அது தான் நானும் யோசிக்கிறன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Posted

ஓ..உங்களுக்கு தெரியுமோ.. :mellow: (எங்கள் கோகுல இரகசியங்கள் எல்லாமே வெளியாள கசியுது)..இது எப்படி என்பதனை நாம் முதலில் கண்டு பிடிக்க வேண்டும்..சா..சா அவர் ஒன்னும் சொல்லல்ல நான் நன்ன பிள்ள எண்டு உங்களுக்கு தெரியாதா என்ன.. :lol:

ஓ..அதுவும் நன்ன யோசனையா இருக்கு எதற்கும் உங்கன்ட யோசனையை சித்தப்புட்ட சொல்லுறன் அவர் என்ன சொல்லுறார் எண்டு பார்த்து செய்யிறன்..ஆனா இமயமலையில இருந்து எல்லாம் தள்ளமாட்டன் பாவம் தானே வேற ஏதாவது சின்ன மலையில இருந்து தள்ளிவிடுறன் என்ன..(சரி முளுசாதையுங்கோ).. :wub:

சரி..சரி நான் சொல்லி விடுறன்..நான் உங்களை சித்தி பெற வைத்திடுவன் ஆனால் சித்தப்பு உங்களிட்ட பல கேள்விகள் கேட்கனும் எண்டு சொல்லி இருக்கிறார் அது தான் நானும் யோசிக்கிறன்.. :)

அப்ப நான் வரட்டா!!

ஓ கோகுல ரகசியங்கள் கசிகின்றனவா? அப்போ என்மீது சந்தேகமோ? உது ஒன்றும் நல்லாவே இல்லை ஆமா.

அட நன்ன பிள்ளை என தெரியாதா என்ன? ஆனால் உங்களுக்கு வரும் சந்தேகங்களை எபப்டி தீர்க்கிறியள் புத்துமாமா என்று கு சா தாத்தா கேட்டிருப்பார் அதனால் தான் நான் அபப்டி சொன்னேன் அழாதீங்கோ.

ஓ சின்ன மலி தேவையோ? சொல்லவோ எந்த மலை என்று....? :wub:

தம்பி உது என்னப்பன் சித்தி சித்தப்பு என்றெல்லாம்? :wub: ஓ சித்தப்புவுக்கு சித்தி இருக்கிறாவோ சுகம் கேட்டதாக சொல்லிவிடுங்கோஎ ன.

என்னாது என்னை கேள்வி கேட்கணுமாமோ

என்ன கேள்வி ஆயுட்காப்புறுதி எடுக்க கேள்விகள் கேட்பினமோ

சரி கேட்கட்டும் பேஷா சொல்லிடுவம் ல. எல்லாம் உங்கள் கருணை தான் கண்டியளோ

Posted

ஓ கோகுல ரகசியங்கள் கசிகின்றனவா? அப்போ என்மீது சந்தேகமோ? உது ஒன்றும் நல்லாவே இல்லை ஆமா.

அட நன்ன பிள்ளை என தெரியாதா என்ன? ஆனால் உங்களுக்கு வரும் சந்தேகங்களை எபப்டி தீர்க்கிறியள் புத்துமாமா என்று கு சா தாத்தா கேட்டிருப்பார் அதனால் தான் நான் அபப்டி சொன்னேன் அழாதீங்கோ.

ஓ சின்ன மலி தேவையோ? சொல்லவோ எந்த மலை என்று....? :mellow:

தம்பி உது என்னப்பன் சித்தி சித்தப்பு என்றெல்லாம்? :wub: ஓ சித்தப்புவுக்கு சித்தி இருக்கிறாவோ சுகம் கேட்டதாக சொல்லிவிடுங்கோஎ ன.

என்னாது என்னை கேள்வி கேட்கணுமாமோ

என்ன கேள்வி ஆயுட்காப்புறுதி எடுக்க கேள்விகள் கேட்பினமோ

சரி கேட்கட்டும் பேஷா சொல்லிடுவம் ல. எல்லாம் உங்கள் கருணை தான் கண்டியளோ

சா..சா உங்கள் மீது எல்லாம் நாம் சந்தேகபடுவோமா :wub: ..அச்சோ நான் பகிடிக்கு சொன்னான்பா...ஓ அப்ப நான் நன்ன பிள்ள எண்டு சொல்லுறியள் சித்தப்பு கூட இன்னைக்கு நான் நன்ன பிள்ள ஆனா ராதைகளை கண்டால் மட்டும் நான் தன்னை கண்டு கொள்ளுறதில்லை எண்டு கவலைபட்டவர் எண்டா பாருங்கோ.. :lol:

ஓ..எந்த மலை எண்டு சொல்லுங்கோ பார்போம்..அச்சோ நான் சொன்ன சித்தி வந்து பரீட்சையில் சித்தி பெறுவது பத்தி என்ன கொடுமை இது..ஓம் நீங்கள் சளைக்காமல் பதில் சொல்லுங்கோ நான் கிருஷ்ணன் அவதாரம் எடுத்து வந்து உங்களை பரீட்சையில் சித்தி அடையை செய்யிறன் என்ன.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Posted

சா..சா உங்கள் மீது எல்லாம் நாம் சந்தேகபடுவோமா :wub: ..அச்சோ நான் பகிடிக்கு சொன்னான்பா...ஓ அப்ப நான் நன்ன பிள்ள எண்டு சொல்லுறியள் சித்தப்பு கூட இன்னைக்கு நான் நன்ன பிள்ள ஆனா ராதைகளை கண்டால் மட்டும் நான் தன்னை கண்டு கொள்ளுறதில்லை எண்டு கவலைபட்டவர் எண்டா பாருங்கோ.. :lol:

ஓ..எந்த மலை எண்டு சொல்லுங்கோ பார்போம்..அச்சோ நான் சொன்ன சித்தி வந்து பரீட்சையில் சித்தி பெறுவது பத்தி என்ன கொடுமை இது..ஓம் நீங்கள் சளைக்காமல் பதில் சொல்லுங்கோ நான் கிருஷ்ணன் அவதாரம் எடுத்து வந்து உங்களை பரீட்சையில் சித்தி அடையை செய்யிறன் என்ன.. :wub:

அப்ப நான் வரட்டா!!

:mellow: சும்மா சொன்னியளாஅ? அபப்டின்னா சரி.

ஓ ராதைகளாஇக் கண்டால் ஏன் நீங்கள் சித்தப்புவைக் கண்டுக்கிறீங்க இல்லை? சித்தப்புக்கும் அப்படியே ஒரு பாதை அமைத்துக்கொடுக்கலாமே....

ஓ எந்தமலை என சொன்னால் என்னையே கேட்ட்பியள் அக்கா வாங்கோவன் ஒருக்கா பரிசோதிச்சு பார்ப்பம் தள்ளி விழுத்தினால் எத்தனை அடி உயரம் என தெரியலாம் என நினைச்சு... அச்சோ நான் வரல்லை உந்த விளையாட்டுக்கு :wub:

ஆஹா... உந்த சித்தியை சொன்னியளா? நானும் ஏதோ னு நினைச்சுட்டேன் எல்லோ. கிருஸ்ண அவதாரமோ இப்பவே அந்த அவதாரம் தானே. வேணுமெனில் ராம அவதாரம் எடுங்கோ. அப்போதாவது சாந்தமா வெள்ளையா :) இருக்கிற ஜமுபேபியை காணலாம். என்ன சொல்லுறேள்

Posted

சும்மா சொன்னியளாஅ? அபப்டின்னா சரி.

ஓ ராதைகளாஇக் கண்டால் ஏன் நீங்கள் சித்தப்புவைக் கண்டுக்கிறீங்க இல்லை? சித்தப்புக்கும் அப்படியே ஒரு பாதை அமைத்துக்கொடுக்கலாமே....

ஓ எந்தமலை என சொன்னால் என்னையே கேட்ட்பியள் அக்கா வாங்கோவன் ஒருக்கா பரிசோதிச்சு பார்ப்பம் தள்ளி விழுத்தினால் எத்தனை அடி உயரம் என தெரியலாம் என நினைச்சு... அச்சோ நான் வரல்லை உந்த விளையாட்டுக்கு

ஆஹா... உந்த சித்தியை சொன்னியளா? நானும் ஏதோ னு நினைச்சுட்டேன் எல்லோ. கிருஸ்ண அவதாரமோ இப்பவே அந்த அவதாரம் தானே. வேணுமெனில் ராம அவதாரம் எடுங்கோ. அப்போதாவது சாந்தமா வெள்ளையா இருக்கிற ஜமுபேபியை காணலாம். என்ன சொல்லுறேள்

நாம் அனைத்தையுமே சும்மா தான் சொல்லுவோம்..(உது தெரியாதா) :lol: ..ஆகா அருமையான யோசனை தான் நானும் சித்தபுவிற்கு பாதை அமைத்து கொடுக்க ராதையை தேடுகிறேன்..ஆனால் ராதைகள் தான் சித்தபுவை கண்டு ஓடி அல்லவா ஒளிகிறார்கள்..அது தான் பாருங்கோ.. :lol:

ஆனாலும் இவ்வுலகிலே சித்தபுவிற்காக ஒரு ராதை பிறந்திருக்காமல போய்விடுவாள் :D ..என்னை பத்தி நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள் போல..தங்களை மலையில் இருந்து தள்ளி விடுவேனா என்ன..அப்படியே தள்ளி விட்டாலும் நான் காப்பத்திவிடுவேன் பயம் கொள்ள வேண்டாம்.. :lol:

கண்ணனை பத்தி தப்பான அபிப்பிராயத்தை கொண்டூள்ளீர்கள் போல் தெரிகிறது..அப்படி எல்லாம் நினைக்கபடாது ஏன் எண்டால் மானிடர்கள் நினைப்து போல நாம் எதையும் செய்ய மாட்டோ அல்லவா :lol: ..சரி தங்களின் விருப்பதிற்கேற்ப நான் இராமர் அவதாரம் எடுக்கிறேன் ஆனால் அதில் ஒரு சிக்கல் உண்டு..ஏனேனில் ஆண்களிள் இராமன் கிடையாது அல்லவா அது தான் யோசிக்கிறேன்..

அப்ப நான் வரட்டா!!

Posted

நல்ல கதை கரு..

கந்தப்பு கல்யாணத்தில் உங்கள் இலையில் இருந்தடை எடுத்தாரா? அந்த கோபமா?

Posted

சாதி தடிப்பு பிடிச்ச சனத்துக்கு சாட்டை அடி கொடுக்குறதை கேள்விபட்டு இருக்கிறேன்... நீங்கள் உரலுக்கை போட்டு உலக்கையாலை இடிச்சு இருக்கிறீயள்...!!

Posted

சாதி தடிப்பு பிடிச்ச சனத்துக்கு சாட்டை அடி கொடுக்குறதை கேள்விபட்டு இருக்கிறேன்... நீங்கள் உரலுக்கை போட்டு உலக்கையாலை இடிச்சு இருக்கிறீயள்...!!

ஆனால் இது இப்பவும் தொடர்வதுதான் வேதனையான விடயம். வெளிநாடுகளிலை கறுவலோடுகளுடன் கூடப் பழகுவார்கள், ஏன் கலியாணம் கூடச் செய்து கொள்ளுவார்கள். ஆனால் தங்கள் இனத்திற்குள்ளே மட்டும் வேறை சாதிக்குள்ள செய்ய விடமாட்டினம். எப்பதான் எங்கட பெரிசுகள் திருந்தப் போகுதுகளோ தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் ..
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.