Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்களை தாக்கும்போது கேட்க நாதியில்லை விஜயகாந்த் ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களை தாக்கும்போது கேட்க நாதியில்லை விஜயகாந்த் ஆவேசம்

14.07.2008 / நிருபர் எல்லாளன்

வடமாநிலத்தில் ஏதேனும் பிரச்னை என்றால் ராணுவம் செல்கிறது. ஆனால், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும்போது அதை கேட்க நாதியில்லை' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதையும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் நேற்று தே.மு.தி.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை வகித்து அவர் பேசியதாவது:

தமிழக மீனவர்களின் மீன் பிடிப்பு பகுதியான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்க மத்திய அரசு முன் வந்த போது பதவியை காப் பாற்றுவதற்காக எதிர்ப்பு தெரிவிக்காத கருணாநிதி, தற்போது கடற்படையால் சுடப்பட்டு தமிழக மீனவர்கள் பலியானபோதும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் "கடலில் தூக்கி எறிந்தால் கட்டுமரமாகி வருவேன் அதில் மீனவர்கள் பயணம் செய்யலாம்' என்று கவிதை பாடுகிறார். மீனவர்களிடம் ஓட்டு மட்டும் வாங்கிச்செல்லும் இவர்கள் மீனவர் நலனில் அக்கறை செலுத்தவில்லை. ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நிர்வாணப்படுத்தி மனித உரிமை மீறல் செய்துள்ளனர்.

வேதாரண்யத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி உள்ளனர். ஒப்பந்தம் போடுவதே பிரச்னைகளை தவிர்ப்பதற் காகத்தான். ஆனால் 1987ல் இலங்கைத் தமிழர் நலனுக் காக இந்திய, இலங்கை அரசுகளால் போடப்பட்ட இலங் கையின் வடக்கு, கிழக்கு மாகாண ஒப்பந்தத்தை இலங்கை அரசு கிழித்து குப்பையில் போட்டுவிட் டது. அது போல் பிரச்னைக்குரிய கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் கிழித்து போட்டு, தமிழக மீனவர்களை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன்களுக்கு கடலில் எல்லைகள் கிடையாது. அதுபோல் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கும் எல்லைகள் கிடையாது. மீன் உள்ள இடங்களுக்கு சென்று மீனவர்கள் மீன் பிடிப்பார்கள். ஆயிரம் மைல்களுக்கு இடையில் எல்லையில்லாத போது, ராமேஸ்வரத்துக்கும் இலங்கைக்கும் இடையே 18 மைல் இடைவெளியுள்ள கடல் பகுதியில் எல்லை எங்கிருந்து வரும். ரேஷன் பொருட்களை கடத்தினால், இலவச "டிவி' க்களை விற்றால் போலீஸ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் முதல்வர் கருணாநிதி, தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார் என தெரியவில்லை.

வடமாநிலங்களில் உள்ளவர்களுக்கு பிரச்னை என்றால் மக்களை காப்பாற்ற ராணுவம் செல்கிறது. ஆனால் இங்கு நாள்தோறும் இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கினாலும் கேட்பதற்கு நாதியில்லை. மீனவர்கள் பழகி விட்டால் உயிரையும் கொடுப்பார்கள். மீனவர்களை நான் கைவிட மாட்டேன். இலங்கை கடற்படையினரிடமிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கக்கூடாது.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

http://www.sankathi.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நியாயமான கேட்கப்படவேண்டிய கேள்விகள் .மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசுகள் ஆட்சி செய்ய தகுதி அற்றவர்களாகவே நோக்கப்படுவர்.

அரசியல் கோசங்களாக வருபவை

ஆன்மாவிலிருந்து வந்தால் அவன்தான் மக்கள்நலன்மேல் அக்கறையுள்ள அரசியல்வாதி...

எழுதிவைத்த காகிதத்திலிருந்து வந்தால் அவன்..சந்தர்ப்பவாதி

இவர் வெறும் அரசியலுக்காக கோசம் போடுகின்றார். நாளை இவர் ஆட்சிக்கு வந்தாலும் இது தான் நடக்கும். அதை விட தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதே உண்மையான பிரைச்சினை. இதை தமிழக மீனவ சங்கத் தலைவரே பிபிசி பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் சொன்ன காரணம் சிலோன் காரங்க அங்குள்ள தடையால் மீன் பிடிப்பதில்லை. அதனால் அங்கு நெறைய மீனு கிடைக்குதுங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடலில் எல்லைகளைத் தாண்டினால் கைதுசெய்வார்கள். அதற்காக அவர்களைச் சுட்டுக்கொல்வது இலங்கை இராணுவத்தினரால்தான் அடிக்கடி அரங்கேற்றப்படுகின்றது. அது ஒரு தமிழன் அல்லாதவராக இருந்தால் நிச்சயம் இப்படி நடக்காது.

எப்போது ஒரு மீனவனை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என்ற செய்தி படித்தாலும் எனது இரத்தம் கொதிக்கும். அங்கே ஒரு உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது, அவரின் குடும்பம் வாழ்வதற்கு இனிமேல் எவ்வளவு சிரமப்படப்போகின்றது, இதனைக் கேட்பதற்கு யாருமே இல்லையா? என்றுதான் என் மனம் ஏங்கும்.

நடிகர் விஜயகாந் உண்மையில் தமிழ்மக்கள்மேல் இரக்கம் உள்ளவர். அவர் கேட்டது நூற்றுக்கு நூறு வீதம் சரியானதே. எந்த ஒரு மீனவனின் உயிர் இப்படி அநியாயமாகப் பறிக்கப்பட்டாலும் அங்கே தமிழர்கள் பொங்கியெழ வேண்டும். போலிக்கௌரவத்துடன் பகட்டு வாழ்க்கை நடாத்தாமல் அப்பாவி மக்களுக்காகக் குரல்கொடுக்கவேண்டும்.

தலைவர் திருப்பதியில் வரம் கேட்கும்போது தமிழகத்தில் மீனவர்கள் தலைவருடை இராணுவத்தினரால் கொலை! இதுதான் தமிழக மீனவர்களின் விதியா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருவாளர் விசயகாந்து அவர்களே இந்திய அரசு ஸ்ரீ லங்கா அரசிற்கு ஆயுதம் கொடுப்பது தவறில்லை என அறிக்கை விட்ட பெருந்தகை. இப்போ இப்படி குத்துக்கரணம் அடிக்கிறார். அரசியல்லை இதெல்லாம் சாதாரணமப்பா.

விஜயகாந்தின் இந்த ஆவேசத்தில் நூறில் ஒரு பங்கு, இலங்கையரசிற்கு ஆயுதங்களை இந்தியா அள்ளி வழங்கிய போது

இருந்திருந்தால்...................................

............!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களை தாக்கும்போது கேட்க நாதியில்லை விஜயகாந்த் ஆவேசம்

14.07.2008 / நிருபர் எல்லாளன்

வடமாநிலத்தில் ஏதேனும் பிரச்னை என்றால் ராணுவம் செல்கிறது. ஆனால், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும்போது அதை கேட்க நாதியில்லை' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதையும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் நேற்று தே.மு.தி.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை வகித்து அவர் பேசியதாவது:

தமிழக மீனவர்களின் மீன் பிடிப்பு பகுதியான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்க மத்திய அரசு முன் வந்த போது பதவியை காப் பாற்றுவதற்காக எதிர்ப்பு தெரிவிக்காத கருணாநிதி, தற்போது கடற்படையால் சுடப்பட்டு தமிழக மீனவர்கள் பலியானபோதும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் "கடலில் தூக்கி எறிந்தால் கட்டுமரமாகி வருவேன் அதில் மீனவர்கள் பயணம் செய்யலாம்' என்று கவிதை பாடுகிறார். மீனவர்களிடம் ஓட்டு மட்டும் வாங்கிச்செல்லும் இவர்கள் மீனவர் நலனில் அக்கறை செலுத்தவில்லை. ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நிர்வாணப்படுத்தி மனித உரிமை மீறல் செய்துள்ளனர்.

வேதாரண்யத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி உள்ளனர். ஒப்பந்தம் போடுவதே பிரச்னைகளை தவிர்ப்பதற் காகத்தான். ஆனால் 1987ல் இலங்கைத் தமிழர் நலனுக் காக இந்திய, இலங்கை அரசுகளால் போடப்பட்ட இலங் கையின் வடக்கு, கிழக்கு மாகாண ஒப்பந்தத்தை இலங்கை அரசு கிழித்து குப்பையில் போட்டுவிட் டது. அது போல் பிரச்னைக்குரிய கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் கிழித்து போட்டு, தமிழக மீனவர்களை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன்களுக்கு கடலில் எல்லைகள் கிடையாது. அதுபோல் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கும் எல்லைகள் கிடையாது. மீன் உள்ள இடங்களுக்கு சென்று மீனவர்கள் மீன் பிடிப்பார்கள். ஆயிரம் மைல்களுக்கு இடையில் எல்லையில்லாத போது, ராமேஸ்வரத்துக்கும் இலங்கைக்கும் இடையே 18 மைல் இடைவெளியுள்ள கடல் பகுதியில் எல்லை எங்கிருந்து வரும். ரேஷன் பொருட்களை கடத்தினால், இலவச "டிவி' க்களை விற்றால் போலீஸ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் முதல்வர் கருணாநிதி, தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார் என தெரியவில்லை.

வடமாநிலங்களில் உள்ளவர்களுக்கு பிரச்னை என்றால் மக்களை காப்பாற்ற ராணுவம் செல்கிறது. ஆனால் இங்கு நாள்தோறும் இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கினாலும் கேட்பதற்கு நாதியில்லை. மீனவர்கள் பழகி விட்டால் உயிரையும் கொடுப்பார்கள். மீனவர்களை நான் கைவிட மாட்டேன். இலங்கை கடற்படையினரிடமிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கக்கூடாது.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

http://www.sankathi.com/

கடலில் எல்லைகளைத் தாண்டினால் கைதுசெய்வார்கள். அதற்காக அவர்களைச் சுட்டுக்கொல்வது இலங்கை இராணுவத்தினரால்தான் அடிக்கடி அரங்கேற்றப்படுகின்றது. அது ஒரு தமிழன் அல்லாதவராக இருந்தால் நிச்சயம் இப்படி நடக்காது.

எப்போது ஒரு மீனவனை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என்ற செய்தி படித்தாலும் எனது இரத்தம் கொதிக்கும். அங்கே ஒரு உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது, அவரின் குடும்பம் வாழ்வதற்கு இனிமேல் எவ்வளவு சிரமப்படப்போகின்றது, இதனைக் கேட்பதற்கு யாருமே இல்லையா? என்றுதான் என் மனம் ஏங்கும்.

நடிகர் விஜயகாந் உண்மையில் தமிழ்மக்கள்மேல் இரக்கம் உள்ளவர். அவர் கேட்டது நூற்றுக்கு நூறு வீதம் சரியானதே. எந்த ஒரு மீனவனின் உயிர் இப்படி அநியாயமாகப் பறிக்கப்பட்டாலும் அங்கே தமிழர்கள் பொங்கியெழ வேண்டும். போலிக்கௌரவத்துடன் பகட்டு வாழ்க்கை நடாத்தாமல் அப்பாவி மக்களுக்காகக் குரல்கொடுக்கவேண்டும்.

தலைவர் திருப்பதியில் வரம் கேட்கும்போது தமிழகத்தில் மீனவர்கள் தலைவருடை இராணுவத்தினரால் கொலை! இதுதான் தமிழக மீனவர்களின் விதியா?

உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். உயிரிழப்பை எவரும் ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் இந்தியத் தமிழர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த போது, எமது தாயக மீனவர்கள் கூட அவர்களுடன் மோதிய சம்பவங்கள் பலமுறை இடம் பெற்றிருக்கின்றது. எமது நாட்டின் தடைகளால் எமது மீனவர்கள் மின் பிடிக்க போக முடியாமல் வருமான இழப்பு ஏற்பட்டு வாடும் போது, இந்திய மீனவர்கள் அவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தமக்கு அடித்தது யோகம் என்று செயற்படுவதை சரியென்கின்றீர்களா??

எல்லை தாணடுபவர்களை சுட்டுக் கொல்வது நியாயம் இல்லை. ஆனால் இலங்கைப் படையினர் பல தடவை இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்த போது கைது செய்து நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்ட போதும், அவர்கள் மீண்டும் மீண்டும் தவறிழைப்பதை எப்படி நீங்கள் நியாயப்படுத்துகின்றீர்கள்?? அது போல் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் இறந்த பின்னாலேயே இனம் காணப்படுகின்றார்களே தவிர சுட்டுக் கொல்லப்படுவதற்கு முதலல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு தானே தலைவா

உங்கள் மத்தியஅரசு சிங்களவருக்கு ஆயுதம் கொடுத்து இருக்கு

உங்களை சுடச்சொல்லி.............

ஓ............நீங்கள் நினைத்திருப்பீர்கள்

ஈழத்தமிழரைச்சுடச்சொன்னது என்று...............

ஆனால் தமிழர் என்றுதான் சொல்லி கொடுக்கப்பட்டதாலதான் உங்களுக்கும் விழுகுது

இப்பொழுதும் நாங்கள் பிரிந்து நின்று வேடிக்கை பார்க்காமல் ஒண்றிணையலாமே????

உங்கள் கரிசனம் உண்மையானால்????

வசம்பு சொல்லுவது ஞாயம் இல்லையெண்டு யாராவது சொல்லமுடியுமா?... எல்லை மீறி வந்து மீன் பிடிப்பவங்களைப்பத்தியே பேசுறிங்களே... சொந்த எல்லைகளுக்குள்ளேயே மின்பிடிக்க முடியாம சாகும் இங்கள் மீனவர்களை பத்தி யாராவுது ஏதாவது சோல்லுறங்களா?...

எங்கள் மீனவர்கள் இந்திய எல்லைகளுக்குள் போனால திரும்பி வரமுடியுமா?.. கைதுசெய்யப்பட்டு மறைந்த மீனவர்கள் இல்லையா?..

சரி என்ன இருந்தாலும் தமிழக மீனவர்கள் எண்டு பார்க்கும் போது வலிக்குதுதான்... அட அவங்களுக்குத்தானைய்யா பிராந்திய வல்லரசு இருக்கு ஒரு மானில அரசிருக்கு... விசயகாந்து இன்ன இதை செத்தவீட்டில கத்துறார்... போய் கத்தவேண்டிய இடத்துல கத்துறது... செத்தவீட்டிலையுமா வோட்டு வேட்டை?

கொஞ்ச காலத்துக்கு முன்னம்தானே மரியா கப்பல் கதை வந்தது.. அதை இன்றுவரைக்கு ஒத்துக்கொள்வார்களா?

வசம்பு ந{ங்கள் சொல்வது சரி.இது நடந்த போது மகிந்த இந்தியாவில் தான் இருந்தார்.ஒரு சிறிய எதிர்ப்பை கூட

ம{னவர்கள் காட்டவில்லை அங்கு. தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுப்பதில் காட்டிய ஆர்வத்தை எதிர்ப்பில் காட்டவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வியாபார ரீதியாக ஆயுதங்களை இந்தியா இலங்கைக்கு விற்று இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என சொன்னமேதை, ஆயுதங்களை கொண்டு சிறீலங்கா என்ன பனங்காய் சுடும் என கனவுகண்டு கொண்டு இருந்தாரா? :)

தமிழக மீனவர்களும் பல நூறு ஆண்டுகளாக அந்த ப்பகுதியில் மீன் பிடிப்பவர்கள் .... ஈழத்தை ஒட்டிய கடல் பகுதி ஆழம் கூடிய பகுதி , ஆகையால் அங்கே அதிக மீன்கள் கிடைக்கும் எனவே தான் அங்கே போகிறார்கள்.

பல முறை தமிழக கடல் எல்லைக்குள் வந்து சுட்டுக்கொன்ற சம்பவங்கள் நடந்துள்ளன...

புலிகளுக்கு தமிழக மீனவர்கள் உதவுகின்றனர் என்று, அண்மையில் இலங்கை குற்றம் சாட்டியிருந்தது கவனிக்கத்தக்கது

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். உயிரிழப்பை எவரும் ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் இந்தியத் தமிழர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த போது, எமது தாயக மீனவர்கள் கூட அவர்களுடன் மோதிய சம்பவங்கள் பலமுறை இடம் பெற்றிருக்கின்றது. எமது நாட்டின் தடைகளால் எமது மீனவர்கள் மின் பிடிக்க போக முடியாமல் வருமான இழப்பு ஏற்பட்டு வாடும் போது, இந்திய மீனவர்கள் அவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தமக்கு அடித்தது யோகம் என்று செயற்படுவதை சரியென்கின்றீர்களா??

எல்லை தாணடுபவர்களை சுட்டுக் கொல்வது நியாயம் இல்லை. ஆனால் இலங்கைப் படையினர் பல தடவை இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்த போது கைது செய்து நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்ட போதும், அவர்கள் மீண்டும் மீண்டும் தவறிழைப்பதை எப்படி நீங்கள் நியாயப்படுத்துகின்றீர்கள்?? அது போல் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் இறந்த பின்னாலேயே இனம் காணப்படுகின்றார்களே தவிர சுட்டுக் கொல்லப்படுவதற்கு முதலல்ல.

வசம்பு,

பணத்திற்காக கொலைகாரனை விடுவிப்பதற்காக வாதாடும் வக்கீலுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். திறமையான வக்கீல்போல் வாதாடும்(எழுத்துத்) திறமையிருந்தால் எப்படியும் வாதாடலாம் என்றில்லை. நீங்கள் தமிழனாக இருந்துகொண்டு சிங்களவர்களைப்போல் எழுதுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியாமலுள்ளது.

மீனவர்கள் இடம்விட்டு இடம் மீன் பிடிப்பதும், அவர்கள் சண்டை பிடிப்பதும் வழமை. ஏன் இது யாழ்ப்பாணத்திலேயே நடை பெற்றிருக்கிறது. எமது மீனவர்களும் தமிழகமீனவர்களும் பிரச்சனைப்படுவது வேறு கதை. அவர்கள் அண்ணன், தம்பி மாதிரி நேற்று அடிபட்டார்கள். இன்று ஒன்று சேர்ந்து சிலபேர் போராட்டத்துக்கும் உதவி செய்கிறார்கள். மீண்டும் ஒரு வேளை அடிபடலாம். அதற்காக ஒரு கேட்டுக் கேள்வியும் இல்லாமல் சிங்கள இராணும் சுட்டுக்கொல்வதை இப்படி நியாயப் படுத்துவது உங்களுக்கே நியாயமாகத் தெரிகிறதா? ஒன்றா, இரண்டா 400க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் 1000க்கும் மேற்பட்டோர் காயப்படுத்தப்பட்டுள்ளார்கள

Edited by பிரபா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் எல்லை மீறி வந்தார்கள் வரவில்லை எல்லாம் வேறு விடயம். அதற்காக சுட்டுக் கொல்வது என்பது காட்டுமிராண்டித்தனமானது. இதற்கு முன் பலதடவைகள் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்றத்திலே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள

வசம்பு,

பணத்திற்காக கொலைகாரனை விடுவிப்பதற்காக வாதாடும் வக்கீலுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். திறமையான வக்கீல்போல் வாதாடும்(எழுத்துத்) திறமையிருந்தால் எப்படியும் வாதாடலாம் என்றில்லை. நீங்கள் தமிழனாக இருந்துகொண்டு சிங்களவர்களைப்போல் எழுதுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியாமலுள்ளது.

மீனவர்கள் இடம்விட்டு இடம் மீன் பிடிப்பதும், அவர்கள் சண்டை பிடிப்பதும் வழமை. ஏன் இது யாழ்ப்பாணத்திலேயே நடை பெற்றிருக்கிறது. எமது மீனவர்களும் தமிழகமீனவர்களும் பிரச்சனைப்படுவது வேறு கதை. அவர்கள் அண்ணன், தம்பி மாதிரி நேற்று அடிபட்டார்கள். இன்று ஒன்று சேர்ந்து சிலபேர் போராட்டத்துக்கும் உதவி செய்கிறார்கள். மீண்டும் ஒரு வேளை அடிபடலாம். அதற்காக ஒரு கேட்டுக் கேள்வியும் இல்லாமல் சிங்கள இராணும் சுட்டுக்கொல்வதை இப்படி நியாயப் படுத்துவது உங்களுக்கே நியாயமாகத் தெரிகிறதா? ஒன்றா, இரண்டா 400க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் 1000க்கும் மேற்பட்டோர் காயப்படுத்தப்பட்டுள்ளார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் வெறும் அரசியலுக்காக கோசம் போடுகின்றார். நாளை இவர் ஆட்சிக்கு வந்தாலும் இது தான் நடக்கும். அதை விட தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதே உண்மையான பிரைச்சினை. இதை தமிழக மீனவ சங்கத் தலைவரே பிபிசி பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் சொன்ன காரணம் சிலோன் காரங்க அங்குள்ள தடையால் மீன் பிடிப்பதில்லை. அதனால் அங்கு நெறைய மீனு கிடைக்குதுங்க.

விஜயகாந்த் சொன்னதைக் கலைஞர் சொல்லியிருந்தால் வசம்பர் கதைக்கும் விதமே வேறு மாதிரியிருந்திருக்கும்.

இந்திய அரசியல் சூழ்சிகளை பற்றி உங்களுக்கு தெரியாது.....இன்று தமிழ்நாட்டை ஆள வேண்டிய வை.கோ அவர்களின் நிலைமை எல்லருக்கும் தெரியும். காரணம்???? அதே அவர் இன்று ஆட்சியில் இருந்திருந்தால் நமது போராட்டத்திற்கு எவ்வளவோ பலமாய் இருந்திருக்கும்.

விஜயகாந்த் வாயில் இருந்து 'புலி' என்ற வார்த்தை எப்போது வரும் என்று காத்திருக்கிறார்கள் பல குள்ள நரிகள். அது விஜயகாந்த் க்கு நன்றாகவே தெரியும். வரும் இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு பின் பாருங்கள் விஜயகாந்தின் சுயரூபத்தை.

இந்திய அரசியல் சூழ்சிகளை பற்றி உங்களுக்கு தெரியாது.....இன்று தமிழ்நாட்டை ஆள வேண்டிய வை.கோ அவர்களின் நிலைமை எல்லருக்கும் தெரியும். காரணம்???? அதே அவர் இன்று ஆட்சியில் இருந்திருந்தால் நமது போராட்டத்திற்கு எவ்வளவோ பலமாய் இருந்திருக்கும்.

விஜயகாந்த் வாயில் இருந்து 'புலி' என்ற வார்த்தை எப்போது வரும் என்று காத்திருக்கிறார்கள் பல குள்ள நரிகள். அது விஜயகாந்த் க்கு நன்றாகவே தெரியும். வரும் இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு பின் பாருங்கள் விஜயகாந்தின் சுயரூபத்தை.

இவர் வெறும் அரசியலுக்காக கோசம் போடுகின்றார். நாளை இவர் ஆட்சிக்கு வந்தாலும் இது தான் நடக்கும். அதை விட தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதே உண்மையான பிரைச்சினை. இதை தமிழக மீனவ சங்கத் தலைவரே பிபிசி பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் சொன்ன காரணம் சிலோன் காரங்க அங்குள்ள தடையால் மீன் பிடிப்பதில்லை. அதனால் அங்கு நெறைய மீனு கிடைக்குதுங்க.

நீங்கள் பேசும் மொழி, இலக்கியம், இலக்கணம் , சாப்பாடு , ஆடைகள் , இப்படி எல்லா கோதாரியையும் தமிழ்நாட்டிலை இருந்து வேணும். ஆனா அவை வந்து மீன் பிடிக்க மட்டும் கூடாதோ.?

தமிழன் கடலிலை தமிழன் மீன் பிடிக்கிறான். அதை கேக்க சிங்களவனுக்கு என்ன உரிமை.? பாக்கிஸ்தான் காறன் கூட மீன் பிடிக்க போன எந்த இந்தியனையும் சுட்டதும் இல்லை கொலை செய்ததும் இல்லை.

ஈழத்தமிழன் கடலிலை மீன் பிடிக்க இல்லை எண்றால் காரணம் சிங்கள வெறியர்கள்தான். அதுக்கை இலங்கை படைகள் மட்டும் நடுநிலை பேணி தமிழ் மக்களின் வயித்திலை அடிக்கும் இந்திய மீனவரிடம் இருந்து பாதுகாக்கிறார்களாமோ.? நல்லா இருக்குகதை.

:wub:நீங்க காமெடி கீமெடி ஒன்றும் பண்ணலைத் தானே?? :wub:

:wub:நீங்க காமெடி கீமெடி ஒன்றும் பண்ணலைத் தானே?? :wub:

தமிழர்கள் கடலில் தமிழர் மீன் பிடிக்க தடையாக இருப்பது இலங்கை கடற்படை என்பது சரிதானே....??

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ராணுவத்தின் வெறியாட்டத் துக்கு இன்னும் எத்தனை தமிழக மீனவர்கள்தான் பலியாகப் போகிறார் களோ, தெரியவில்லை...

கடந்த 11-ம் தேதி மதியம் 12 மணிக்கு வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறைப் படகுத்துறையிலிருந்து நாராயணசாமி, வாசகன், முரளி ஆகிய மூவர் கடலுக்குள் மீன் பிடிக்கப் போயிருக்கிறார்கள். இதில் முரளி தன்னிடமிருந்த செல்போன் மூலம் இரவு 12 மணிக்குக் கரையில் இருந்த கார்த்திகேயனைத் தொடர்புகொண்டு, ''எங்களை இலங்கை ராணுவம் சுட்டு ருச்சு. வாசகன் செத்துட்டான். நானும் நாராயணசாமியும் உயிருக்குப் போராடிக் கிட்டிருக்கோம்'' என்றிருக்கிறார். அடுத்த கணமே மூன்று படகுகளை எடுத்துக்கொண்டு தேடிப்போயிருக் கிறார்கள். விடிந்த பிறகே அந்தப் படகைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்குள் நாராயணசாமியும் இறந்துவிட, முரளி மட்டும் முனகிக்கொண்டு கிடந்திருக் கிறார்.

இதற்குள் செய்தி தீயாகப் பரவி பால்வளத் துறை அமைச்சர் மதிவா ணன், ஏ.கே.எஸ். விஜயன் எம்.பி., எஸ்.கே.வேதரெத்தினம் எம்.எல்.ஏ. என அரசியல் பிரமுகர்களும், மாவட்ட ஆட்சியர் ஜெயராமன், எஸ்.பி-யான அஸ்வின் கோட்னிஸ் என அதிகாரிகள் பட்டாளமும் ஆறுகாட்டுத்துறையில் ஆஜராகியிருந்தார்கள், கூடவே நாமும்.

முரளியை ஆம்புலன்ஸில் ஏற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு -- நாராயணசாமி, வாசகன் இருவரின் உடல்களையும் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். நாராயணசாமியின் அண்ணன் முருகனும், வாசகனின் தந்தை பாலகிருஷ்ணனும்,''நம்ம எல்லையில 'போயா'ங்கிற மிதவை கெடக்கும். அதைத்தாண்டி எவ்வளவு மீம்பாடு இருந்தாலும் நம்ப மீனவங்க போக மாட்டாங்க. அன்னைக்கும் சேது சமுத்திரத் திட்டத்துக்கு மண்ணள்ளுற கப்பல் பக்கத்துல நின்னும் சிங்கள ராணுவம் வந்து சுட்டுருக்கு'' என்று அழ ஆரம்பித்துவிட்டனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட படகு முழுவதும் ரத்தச் சகதி. மனித மூளையும் கை விரல்களும் சிதறிக் கிடந்தன.

துக்கம் விசாரிக்க வந்திருந்த அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் வாய்மேடு பழனியப்பன், “இதே ஊரைச் சேர்ந்த மூணு பேரை 1994-ல இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்னுருச்சு. இப்போ ரெண்டு பேர். இதுவரைக்கும் நிறைய முறை இலங்கை ராணுவம் நம்ம மீனவர்கள் மேல துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கு. நம்ம நாட்டோட கடல் எல்லைக்குள்ள சர்வ சாதார ணமா வந்துட்டுப் போற அளவு இலங்கை ராணுவத்துக்கு எப்படி துணிச்சல் வந்துச்சு? இந்த ரெண்டு பேரோட மரணத்துக்குப் பிறகாவது 'இந்தியக் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம்'னு ஒரு எச்சரிக்கையாவது விடவேண்டாமா? அதுக்கு கலைஞர் அரசு வலியுறுத்தியிருக்க வேண்டாமா? இதை எங்கள் 'அம்மா'விடம் கூறி போராட்டம் நடத்தப் போகிறோம்'' என்றார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருக்கும் முரளியைச் சந்தித்தோம். “ராத்திரி 12 மணி இருக்கும். நாங்க வலையைப் போட்டுட்டுப் படுத்திருந்தோம். திடும்னு படகு சத்தம் கேட்டுச்சி. எந்திரிச்சுப் பார்த்தா இலங்கை ராணுவம். எங்க படகை நோக்கி அவங்க வந்ததும் நாங்க ரெண்டு கையையும் மேலே தூக்கிட்டு நின்னோம். வந்த வேகத்துலயே படபடன்னு சுட்டுட்டுப் போய்ட் டாங்க. இவ்வளவுக்கும் சேது சமுத்திரத் திட்டத்துக்கு மண்ணு அள்ளுற கப்பல் பக்கத்திலதான் நாங்க இருந்தோம். அப்படி இருந்தும் சுட்டுட்டாங்க. அப்பவே வாசகன் செத்துப்போய்ட்டான். நாராய ணசாமி மட்டும் 'எப்படியாவது காப்பாத்துங்க'னு கத்திக்கிட்டே இருந்தான். எனக்குக் கைல அடிப்பட்டதால படகு இன்ஜினை ஸ்டார்ட் பண்ண முடியலை. அதுக்கப்பறம்தான் ஊருக்குத் தகவல் குடுத்தேன். அவங்க விடியறவரைக்கும் தேடிட்டு விடிஞ்ச பிறகுதான் வந்தாங்க. அதுக்குள்ள நாராயணசாமியும் துடிதுடிச்சுச் செத்துட்டான்'' என்றவர், ''நாங்க மீனவனாப் பொறந்ததைத் தவிர வேற எந்தப் பாவமும் செய்யலை. எங்களுடைய இந்தப் பிரச்னைகளைக் கேட்டு அதனைப் போக்குவதற்கு இந்த நாட்டில் கேட்பாரே இல்லையா?'' என்றார்.

இதற்கிடையில் கடந்த 12-ம் தேதி இரவு புஷ்பவனத் திலிருந்து சென்ற மீனவர்களை இலங்கை ராணுவம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதோடு வானத்தை நோக்கிச் சுட்டு பயமுறுத்தி அனுப்பியிருக்கிறது.

- வீ. மாணிக்கவாசகம்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

'இலங்கையுடன் மோத மீனவர் படை...'

போர் முரசு கொட்டுகிறது கம்யூனிஸ்ட்

சமீபத்தில் தமிழகத்தின் கடலோர கிராமங் களில் மீனவர்கள் வாழ்வுரிமைக்கான விழிப்பு உணர்வுப் பயணத்தை நடத்தி முடித்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வேதாரண்யம் சம்பவத்தையடுத்து, வருகிற 30-ம் தேதி இலங்கைத் தூதரகத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்த விழிப்பு உணர்வு பயணத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான அக்கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரனை சந்தித்தோம்.

''இதுநாள்வரை இந்தியக் கடல் எல்லையை மீறிவந்து மீன் பிடித்த தமிழர்களைத்தான் இலங்கை ராணுவம் சுட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இன்றைக்கு நம்முடைய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அப்பாவி மீனவர் களைக் கொன்றிருக்கிறார்கள். வாசகன் உடலில் மட்டும் இருபதுக்கும் மேலான குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. சேது சமுத்திரக் கால்வாய் பகுதியான நம்முடைய கடல் எல்லையில் மீன் பிடித்தவர்களை சுட்டுக் கொல்கிற அளவுக்கு இலங்கை ராணுவம் இனவெறி பிடித்து அலைகிறது. கடந்த இருபத்தைந்து வருஷங்களில் எட்டாயிரம் முறை நம் மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறது. அதில் நானூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உறுப்புகளை இழந்து ஊனமுற்றவர்களாகிக் கிடக்கிறார்கள். ஆனால், இந்தக் கொடூரங்களுக்கெல்லாம் இந்திய அரசுத் தரப்பிலிருந்து இலங்கை ராணுவத்தைக் கண்டித்து ஒரு கேள்விகூட எழுப்பப் படவில்லை. தமிழர்களின் உயிர், இந்திய அரசுக்கு ஏதோ கிள்ளுக்கீரையைப் போல் தெரிகிறது. தமிழர்களின் மேல் இலங்கை அரசுக்கு இருக்கும் கோபத்தைக் காட்டிலும் நம் இந்திய அரசுக்கு அதிகமாக இருக்குமோ என்கிற பயம் எழுகிறது'' என ஆவேசமாக வெடிக்கும் மகேந்திரன், இந்திய-இலங்கை கடல் எல்லை குறித்த விவரங்களையும் சொல்லத் தொடங்கினார்.

''இந்திய-இலங்கை கடலுக்குள் எல்லைப் பகுப்பு சரியானபடி நடந்திருக்கிறதா? 22 கடல் கிலோமீட்டர் ஒரு நாட்டின் கடல் எல்லையாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது. ஆனால், நம் இந்திய எல்லையிலிருந்து 22 கடல் கிலோ மீட்டரைக் கணக்கிட்டால் அது இலங்கையையே தொட்டு விடுமே... குறுகிய கடல் பரப்புகளை இணக்கமான முறையில் பேசி, கூட்டு மீன் பிடிப்புக்கு வழி செய்திருக்க வேண்டிய இலங்கை-இந்திய அரசுகள் அப்படிச் செய்யவில்லை. ரஷ்யா, நார்வே, பின்லாந்து நாடுகள் தங்களின் கடல்பரப்பு குறுகிய அளவில் இருப்பதால், கூட்டு மீன் பிடிப்புக்கு ஒப்பந்தம் போட்டிருக்கின்றன. அந்தக் கடல் பரப்பில் மூன்று நாட்டு மீனவர்களும் எங்கே வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம். இந்திய-இலங்கை கடல் எல்லையை மீனவர்களுக்கு பளிச்சென சொல்கிற அளவுக்கு ஒளி பொருந்திய மிதவை விளக்குகளைப் பயன்படுத்தலாம். ஆனால், அதைக்கூடச் செய்யவில்லை.

நாங்கள் மேற்கொண்ட விழிப்பு உணர்வுப் பயணத்தில் மீனவர்களின் துயரங்களை நாங்கள் கேட்க கேட்க, அதெல்லாம் எங்களைக் கொந்தளிக்க வைத்துவிட்டன. அதனால்தான், எங்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், 'ஒவ்வொரு மீனவருக்கும் துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்பட வேண்டும்' என முழங்கினார். தற்காப்புக்காக நடிகர்களும், அரசியல்வாதிகளும் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் போது, நிராதரவாய் கடலுக்குள் செல்கிற மீனவர்களும் துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நியாயம்தானே! எங்களின் விழிப்பு உணர்வு பயணத்தின் போது ஒரு இளைஞர் இப்படிச் சொன்னார்... 'சிங்கள ராணுவத்தினரைக் காட்டிலும், தமிழக மீனவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்தக் கொடூரங்கள் தொடர்ந்தால் ஒட்டுமொத்த மீனவர்களும் கடலுக்குள் திரண்டுபோய் இலங்கை ராணுவத்தோடு சண்டை போடவும் தயங்க மாட்டோம். இந்திய அரசு எங்களுக்காக ஏதும் மெனக்கெடாவிட்டாலும் சிங்கள ராணுவத்துக்கு சரியான அடி கொடுக்க எங்களாலேயே முடியும். நாங்கள் ராணுவமாக மாறினால்தான் இந்திய அரசுக்கு உறைக்கும்' என அந்த இளைஞர் சொன்னபோது எங்களால் பதில் ஏதும் பேச முடியவில்லை. குஜ்ஜார் மக்களைப் போல் எத்தகைய போராட்டங்களைக் கையிலெடுக்கவும் மீனவமக்கள் தயங்க மாட்டார்கள் என்பது அப்போதுதான் எங்களுக்குப் புரிந்தது'' என ஆதங்கமும் ஆவேசமுமாகச் சொன்ன மகேந்திரன் தமிழக அரசையும் ஒரு பிடி பிடித்தார்.

''மீனவ மக்கள் கொல்லப்படுகிற போதெல்லாம் அதிகாரிகள், அரசுக்குத் தவறான தகவல்களையே சொல்கிறார்கள். நிவாரண உதவிகளைக்கூட இழுத்தடித்தே செய்கிறார்கள். இன்றைக்குத் தமிழக அரசு, மத்திய அரசுக்கே நிர்ப்பந்தம் கொடுக்கக்கூடிய அளவுக்கு சக்தியோடு இருக்கிறது. இதேபோல் தமிழக மீனவர்கள் விஷயத்திலும் மத்திய அரசை நிர்ப்பந்திக்க தமிழக அரசு ஏன் தயங்குகிறது? விரைவில் இலங்கையில் நடக்கவிருக்கிற தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டில் தமிழக மீனவர்களின் சோகங்களுக்கு இந்திய அரசு நீதி கேட்க வேண்டும். இதற்கு மத்திய அரசை தமிழக முதல்வர் வற்புறுத்த வேண்டும். இலவச வீட்டுமனைத் தொடங்கி மின்சார வசதிகள்கூட இல்லாத மீனவ மக்களுக்கு தமிழக அரசு தக்க உதவிகளை உடனே செய்யவேண்டும். பாம்பன் பகுதியைச் சேர்ந்த அருள் சகாயம் என்பவரின் மகன் உட்பட ஐந்து பேரை அனுராதபுரம் ஜெயிலில் இலங்கை அரசு அடைத்து வைத்திருக்கிறது. அவர்களை மீட்கிற முயற்சியில் தமிழக அரசு அசுர வேகத்தோடு களமிறங்க வேண்டும். நாங்கள் விழிப்பு உணர்வு பயணம் மேற்கொண்ட போது ஆறுகாட்டுத்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு பெரியவர் எங்களின் கரங்களைப் பற்றி, கண்ணீரோடு மீனவ மக்களின் சோகங்களைச் சொன்னார். அந்தப் பெரியவரின் மகனான நாராயணசாமிதான் கடந்த பன்னிரண்டாம் தேதி சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். 'அன்னிக்கு மத்த புள்ளைகளுக்காக அழுதேன்... இன்னிக்கு எம்புள்ளைக்கே இந்தக் கதியாயிடுச்சே...'ன்னு அந்தப் பெரியவர் கதறலோடு சொல்கிற வார்த்தைகளை கேட்டாவது தமிழக அரசு இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி, மீனவர்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்!'' என்றார் உறுதியான குரலில்.

- இரா.சரவணன்

நன்றி: ஜூனியர் விகடன்

Edited by பிரபா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.