Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கான நாடு அமைக்கப்படும் போதே இடம்பெயர்வதைத் தடுக்கமுடியும் - எட்டுத் தடவைகள் இடம்பெயர்ந்துள்ளவர் ஒருவரின் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இடம்பெயர்வதைத் தடுக்க வேண்டுமானால் அவர்களுக்கென்று ஒரு நாடு உருவாகும் போதே அது சாத்தியப்படும் என்று எட்டுத் தடவைகள் இடம்பெயர்ந்துள்ளதாகக் கூறும் குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மன்னாருக்குத் தான் குடும்பத்துடன் சில வருடங்களுக்கு முன்னதாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்ததாகவும் பின்னர் கடந்த ஒருவருடத்தில் மட்டும் ஏழு தடவைகள் மாறி மாறி இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் தம்மைப்போன்று பல குடும்பங்கள் இந்த ஒன்றரை வருடங்களில் மட்டும் மன்னார் பகுதியிலிருந்து பல இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கைப் படையினர் தொடர்ந்தும் தமிழ் மக்களின் வாழ்விடங்கள்மீது எறிகணை வீச்சுக்களை நடத்தி அவர்களை வேரோடு பிடுங்கி எறிகின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தமிழர்களுக்கென்று நாடு அமையாமல் இந்த இடப்பெயர்வுகளைத் தடுக்க முடியாது என்கிற மனநிலையிலேயே தாங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முழங்காவில் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வன்னேரிக்குளத்தில் மரநிழலில் தனது சிறுபிள்ளைகள் அடங்கிய குடும்பத்துடன் தங்கியுள்ள குடும்பஸதர் ஒருவரே இவ்வாறு தெரிவித்தார்

http://www.tamilwin.com/view.php?2aIWnVe0d...d436QV3b02ZLu2e

  • கருத்துக்கள உறவுகள்

அக்குடும்பத்தவரின் பொறுமையும், மனோதிடமும் பாராட்டுக்குரியது. ஆனால் மக்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான் நாடோடிகளாக மர நிழலின் கீழ் வாழமுடியும்?

சும்மா யாரோ சொன்னதா எழுதிறவங்களை பிடிச்சு உதைக்க வேணும்.

பாவம் மக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா யாரோ சொன்னதா எழுதிறவங்களை பிடிச்சு உதைக்க வேணும்.

பாவம் மக்கள்.

அப்போ நாடு வேண்டாம் என்கின்றீர்களா?

அப்போ நாடு வேண்டாம் என்கின்றீர்களா?

"தமிழர்கள் இடம்பெயர்வதைத் தடுக்க வேண்டுமானால் அவர்களுக்கென்று ஒரு நாடு உருவாகும் போதே அது சாத்தியப்படும்"

இதை எழுதின எழுத்தாணியை பார்த்து வந்ந வரி அது.

இழந்த எங்களுக்கெல்லோ தெரியும் என்ன வேணுமெண்டு.

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் மட்டும் என்ன நாட்டைத் தூக்கிக் கொண்டு வந்தா ஓடி வந்தோம்? 90ம் ஆண்டிலிருந்து 2002 வரை ஓடிக் கொண்டே இருந்தவர்கள் நாங்கள். ஏதோ உங்களுக்குத் தான் நாட்டைப் பற்றித் தெரியும் என்றமாதிரியல்லவா போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தலைவன் ....

ஏன் இந்த பாய்ச்சல் ...பெயர் சொல்லவிரும்பாத குடும்பதனாக இருக்கலாம் ,

அல்லது எழுதியவர் மக்கள் உள்ள கிடக்கையை சொல்லலாம் ஏன் இந்த பாய்ச்சல் .?

அண்ணா . அமைதி /......நிலமதியக்கா

********************************************************************************

*

வணக்கம் பொன்னர் ....அண்ணா

எல்லோரும் பட்ட ,பட்டுக்கொண்டிருக்கும் வலி .....விதியின் வலி ......கொடுமை

Edited by nillamathy

நாங்கள் மட்டும் என்ன நாட்டைத் தூக்கிக் கொண்டு வந்தா ஓடி வந்தோம்? 90ம் ஆண்டிலிருந்து 2002 வரை ஓடிக் கொண்டே இருந்தவர்கள் நாங்கள். ஏதோ உங்களுக்குத் தான் நாட்டைப் பற்றித் தெரியும் என்றமாதிரியல்லவா போகின்றது.

எழுதியது நீங்கள் போல இருக்கு! அதுதான் இந்தக் கடுப்பு. இருந்தாலும் எங்கள் குடும்பத்தில் பலர் என்ன சொல்கிறார்கள் என்பது எனக்கத் தெரியும் ஐயா. காரணம் எங்கள் வீடுகள் செல்வீச்சால் நாசமாகியுள்ளது. வீீட்டில் இருந்த போராளிகள் வன்னிக்கு பொருட்களை ஏற்றிவிட்டு மோதிக்கொண்டிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழர்கள் இடம்பெயர்வதைத் தடுக்க வேண்டுமானால் அவர்களுக்கென்று ஒரு நாடு உருவாகும் போதே அது சாத்தியப்படும்"

இதை எழுதின எழுத்தாணியை பார்த்து வந்ந வரி அது.

இழந்த எங்களுக்கெல்லோ தெரியும் என்ன வேணுமெண்டு.

எல்லாரும் தலைவன் ஆனா இப்படித்தான்.................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா! நான் முல்லைத்தீவைச் சேர்ந்தவன். எனக்கும் அங்கு பாதிக்கப்படும் உறவுகள் உள்ளனர். இவ்வாறு தமிழர் நிலங்களை ஆதரிக்க முயலும் சிங்களப்படைகள் மீது தான் எனக்குக் கோபம். எம் மக்கள் வாழ்கின்றார்கள் என்று உணராமல் குண்டு வீசிக் கொல்ல முனையும் அவனைத் தான் நாம் எதிர்க்கின்றோம். உலகத்தில் எந்த நாடு தன்நாட்டு மக்களை இப்படிப் போர் மூலம் அழித்தது?இந்தச் சிங்களக் கடுங்கோலர்கள் தானே?

போராளிகளின் கஸ்டம் எமக்குத் தெரியும். அவர்களின் கஸ்டத்தில் நாமும் பங்குகொள்வதால் தான் அமைதியாக இருக்கின்றோம்.

அவர்கள் அனுபவிப்பதை விட நாம் ஒன்றும் பெரிதாக அனுபவிக்கவில்லையே!

சென்ற சில மாதங்களுக்கு முன் சிறிலங்கா அரசினால் நெடுங்கேணியில் கொல்லப்பட்ட ஒருவர் என் உறவினர் தான். அந்தக் கொடுமையைச் செய்த சிங்களவர்கள் மீது தான் எனக்குக் கோபம் உண்டு.

எல்லாரும் தலைவன் ஆனா இப்படித்தான்.................

அது தெரியும் வரை காத்திருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தகுதியில்லாமலேயே ............ தலைவனாகும் ஆசை வந்தால்??? இப்படித்தான் புலம்புவார்கள்.

நான் சிங்கள இராணுவ தளபதியை சொன்னேன். புலிகளை இன்னும் ஆறு மாததிற்குள் முடித்துவிடவாராம்.......

இதில் வேடிக்கை என்னவேனில்...... புலிகளின் கதையை ஆறு ஆறு நாட்களுக்குள்ளேயே முடிக்க என்று லிபரேசன் ஒப்ரேசன் என்று பெயரும் வைத்துகொண்டு 20 வருடங்கள் முன்பே சிங்கள இராணுவம் வெளிகிட்ட நாளில் இருந்தே இவர் இராணுவத்தில் தான் இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா! நான் முல்லைத்தீவைச் சேர்ந்தவன். எனக்கும் அங்கு பாதிக்கப்படும் உறவுகள் உள்ளனர். இவ்வாறு தமிழர் நிலங்களை ஆதரிக்க முயலும் சிங்களப்படைகள் மீது தான் எனக்குக் கோபம். எம் மக்கள் வாழ்கின்றார்கள் என்று உணராமல் குண்டு வீசிக் கொல்ல முனையும் அவனைத் தான் நாம் எதிர்க்கின்றோம். உலகத்தில் எந்த நாடு தன்நாட்டு மக்களை இப்படிப் போர் மூலம் அழித்தது?இந்தச் சிங்களக் கடுங்கோலர்கள் தானே?

போராளிகளின் கஸ்டம் எமக்குத் தெரியும். அவர்களின் கஸ்டத்தில் நாமும் பங்குகொள்வதால் தான் அமைதியாக இருக்கின்றோம்.

அவர்கள் அனுபவிப்பதை விட நாம் ஒன்றும் பெரிதாக அனுபவிக்கவில்லையே!

சென்ற சில மாதங்களுக்கு முன் சிறிலங்கா அரசினால் நெடுங்கேணியில் கொல்லப்பட்ட ஒருவர் என் உறவினர் தான். அந்தக் கொடுமையைச் செய்த சிங்களவர்கள் மீது தான் எனக்குக் கோபம் உண்டு.

பொன்னையா அண்ணை நீங்கள் என்ன சொல்லவாறீங்கள்......??

சிங்கள இராணுவம் (மன்னிக்கவும்) சிறிலங்கா சிறப்பு படையினர் மக்களுக்கு கொடுமை இளைக்கிறார்கள் என்று சொல்கின்றீர்களா???

கொஞ்சம் நடுநிலைமையாளராக இருந்து யோசித்து பாருங்கள்

மக்களின் நிலையையும் பாராது புலிகள் போராடுவதால்தானே...... சிறப்பு படையினர் செல்லடிக்கினம்.

என்ன அண்ணே நீங்கள் ஒரு பக்க நீயாயத்தை மட்டுமே பார்க்கின்றீர்கள்.

நடுநிலைமையாளராக நில்லுங்கள்........ யாழுக்கும் கொழும்புக்கும் நடுவில மதாவாச்சியிலேயே பயமின்றி நிற்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி நாங்கள் எங்களுக்குச் சார்பாக இருக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து கொண்டு கள நிலவரங்களை இனங்காட்ட பழைய கதைகளை எடுத்துவிடுறம்.

ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இராணுவம் 1987 இல் இருந்த நிலையிலா இன்று இருக்கிறது. எவ்வளவோ பிரதேசங்களை வன்பறிப்புச் செய்துவிட்டது மட்டுமன்றி இராணுவ தளபாட ரீதியில்.. உளவுச் செயற்பாடுகள் ரீதியில் அது பல மடங்கு முன்னேறியுள்ளது.

ஏன் 2002 இல் இருந்த சிறீலங்கா இராணுவம் அல்ல இன்றிருப்பது. எனவே 2000ம் ஆண்டு போல சண்டைக்களங்களை அமைக்கலாம் என்பது சரியான பார்வையாக இருக்க முடியாது.

இன்று இராணுவத்தின் முன்னகர்வுகளின் தன்மை ஜெயசிக்குறுத் தோல்விக்குப் பின்னர் மாற்றம் கண்டிருக்கிறது. நங்கு பயிற்சி பெற்ற கமோண்டோ அணிகள் மற்றும் ஊடுருவி உளவு பார்க்கும் அணிகள், ஊடுருவித் தாக்கும் அணிகள்.. அதிர்ச்சித் தாக்குதல் அணிகள்.. விமானப்படை ஒருங்கிணைப்பு மற்றும் பல்குழல், ஆட்லறி ஒருங்கிணைந்த சூட்டாதரவு.. ராங்கி ஒருங்கிணைப்பு என்று இராணுவமும் பல மார்க்கங்களை இனங்கண்டு பலப்படுத்தி இருப்பதுடன் புதிய உக்திகளையும் புகுத்தி இருக்கிறது.

விடுதலைப்புலிகளின் பெரும்பாலான முறியடிப்புச் சமர்கள் சமீபகாலமாக பேரிழப்புக்களையே சந்தித்து வருகின்றன. அதற்கு அவர்கள் பாவிக்கும் ஒரேவிதமான உக்திகள் கூட காரணமாக இருக்கலாம்.

விடுதலைப்புலிகளின் வலிந்து தாக்குதல்கள் 2006 இல் திருமலைக் களமுனையில் கண்ட வெற்றி மற்றும் மண்டைதீவுத் தரையிறக்கம் என்று இருந்தன. ஆனால் மண்டைதீவுத் தரையிறக்கமும் கிளாலி ஊடான ஊடறுப்பு முயற்சிகள் போராளிகள் தரப்பில் கடும் உயிர்ச்சேதத்தை தந்திரந்தது மட்டுமன்றி சுமார் 200 உடலங்கள் வரை இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் விட்டுவிட்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதை இராணுவம் இணையத்தளங்களில் அப்போ பிரசுரித்துக் காட்டி இருந்தமையை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.

இதுவே இன்று வரையும் தொடர்கிறது.

எனவே அவர்களும் இராணுவ உக்திகளை போர் முறைகளை மாற்றுவது போல விடுதலைப்புலிகளும் மாற்றங்களைச் செய்தாக வேண்டியவர்களாகவே இருக்கின்றனர். எனவே அப்போ அகலக் கால்பதிக்கவிட்டு அடிச்சது போல இப்பவும் செய்யலாம் என்று 100% நம்ப முடியாது. இராணுவமும் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து தாக்குகிறது.. போராளிகள் மத்தியில் இழப்புக்களைத் தருகிறது என்பதையும்.. அது களத்தில் செய்யவல்ல மாற்றங்கள் என்ன என்பதையும் குறித்து நாமும் சிந்திக்க வேண்டும்.

பழைய பல்லவிகளைப் பாடிக் கொண்டிருக்க முடியாது. அது ஆக்கிரமிப்பாளனுக்கே உதவியாக அமையும்..! :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

அப்துல்கலாம் சொன்னதை ஈழத்தமிழன் மட்டும்தான் செய்யுறான்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்கள் நெடுக்காலபோவான்!

நீங்கள் சொல்வது உண்மைதான்.......... அதைதான் போராளிகளும் செய்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். முதலில் எதிரியின் பலம் என்ன என்பதை ஆதாரத்துடன் அறிய வேண்டும். அதற்கு நேர அவகாசம் நிச்சயம் தேவை. இங்கே சிலர் எதிர்பார்ப்பது போல் ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற நிலை அங்கே இருக்காது. சற்றலைற்றின் உதவியுடன் அவர்கள் போராளிகளின் அனைத்து நகர்வையும் நேராகவே பார்த்து கொண்டிருப்பான்கள்.... அதை நிற்சயம் இந்தியா செய்து கொடுத்திருக்கும். ஆகவே படை நகர்வு எல்லாம் முன்பு போல் அவர்களால் உரிய இடத்திற்கு செய்ய முடியாது. அதற்கான சாதாகமான சூழ்நிலை அமைந்தால் மட்டுமே முடியும்..... உதவிகள் காயப்பட்ட போராளிகளை பின்னகர்த்தல் புதிய குழுக்களை முன்நகர்த்துவது எல்லாமே ......... இரவில் மட்டுமே செய்வார்கள் என நினைக்கிறேன். அதனால்தான் பல தடவைகள் போரளிகளின் உடல்களை எதிரியிடம் விடவேண்டிய நிலமை அங்கே இருக்கின்றது.

ஆனாலும் இது நிரந்தரமல்ல..... என்பதே எனது கருத்து,

நெடுக்காலைபோவான் 2006 ஓகஸ்டில் நடைபெற்ற மோதல்களின் போது 200 வரையான போராளிகளின் உடல்கள் படையினரிடம் இழக்கப்படவில்லை. படையினர் கூட 200 வரையான உடல்களைக் கைப்பற்றியதாக அறிவிக்கவும் இல்லை.

முகமாலையிலிருந்தான முன்னகர்வின்போதோ அல்லது மண்டைதீவில் தரையிறங்கி நடத்தப்பட்ட தாக்குதலின்போது புலிகளிற்கு பெரியளவில் இழப்புக்கள் ஏற்படவில்லை. ஆனால் கிளாலி இறங்குதுறையில் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கத் தாக்குதலே பலத்த பின்னடைவைச் சந்தித்தது. இதன்போது 98 போராளிகளின் உடல்களைக் கைப்பற்றியதாகப் படையினர் தெரிவித்தனர். அவற்றை செஞ்சிலுவைச் சங்க மூலம் விடுதலைப் புலிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துவிட்டு செஞ்சிலுவைச் சங்கத்தினைத் தொடர்பு கொள்ளாமலேயே உடலங்களை அடக்கம் செய்துவிட்டனர். இவ்வாறு 50ற்கும் குறைவான உடல்களே படையினரால் கைப்பற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. ஆனால் புலிகளிற்கு பாரிய தோல்வி ஏற்பட்டதாக பரப்புரை செய்யவே கைப்பற்றப்பட்ட உடல்களின் எண்ணிக்கை படையினரால் அதிகமாகக் கூறப்பட்டது.

(ஆனால் தற்போது படையினர் தாம் கைப்பற்றும் போராளிகளின் வித்துடல்களின் எண்ணிகையை சரியாகவே அறிவிக்கின்றனர்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.