Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்புக் கச்சும் மார்பக அழற்சியும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_44859672_pilates226spl.jpg

பெண்கள் தமது மார்பகங்களின் அளவுக்கும் அவற்றின் மேல் கீழ் மற்றும் பக்கப்புறமான அசைவுக்கும் தகுந்த அளவு இடமளிக்காது மார்புக் கச்சுக்களை அணிவதால் மார்பகங்களில் உள்ள இணையங்கள் (ligaments) இழுபட்டு சிதைவடைகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக உடற்பயிற்சிகளின் போது அல்லது விளையாட்டுக்களில் பங்கெடுக்கும் போது அதற்குத் தகுந்த சரியான தயாரிப்புள்ள மார்புக் கச்சுக்களை பெண்கள் அணியத் தவறின் இந்த விளைவு ஏற்படுவது தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சியின் போது மார்பகம் கிட்டத்தட்ட 21 சென்ரி மீற்றர்கள் மேல் - கீழ், உள் - வெளி மற்றும் பக்கப்புறம் என்று அசைய இடமளிக்கப்பட வேண்டும். ஆனால் பல வகை மார்புக் கச்சுகளும் நிலைக்குத்தான மார்பக அசைவுக்கு இடமளிப்பதில்லை. இதனால் மார்பக இணையங்கள் இழுபட்டு நாளடைவில் அவை சிதைவடைய வழி உண்டாகின்றது என்று கண்டறிந்துள்ளனர்.

அதுமட்டுமன்றி அன்றாட வாழ்விலும் பெண்கள் தங்களின் மார்பக அளவுக்கு ஏற்ப சரியான மார்புக் கச்சுக்களை தெரிந்து அணிவதில் அக்கறை காட்டுவதும் குறைவு என்று சொல்லப்படுகிறது. பொதுவாக தங்கள் மார்பகங்களை குறிப்பிட்ட அளவில் காண்பிக்க என்றே பெண்கள் அதிகம் மார்புக் கச்சுக்களை தெரிவு செய்கின்றனர். இதனால் மார்பக நோவு மற்றும் அசெளகரிய உணர்வு என்பன ஏற்பட வாய்ப்புக்கள் உண்டாகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் வாழ்நாளில் காலத்துக்கு காலம் மார்பகத்தின் பருமனில் ஏற்படும் அளவுக்கு ஏற்ப சரியான மார்ப்புக் கச்சுகளை தேர்வு செய்து அணியும் பழக்கத்தைப் பல பெண்கள் கொண்டிருப்பதில்லை என்றும் ஒரே அளவான மார்புக் கச்சையே எப்போதும் பாவிக்க முற்படுகின்றனர் என்றும் கண்டறிந்துள்ள ஆய்வாளர்கள், இது ஆபத்தானது என்றும் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக பாலூட்டும் பெண்கள் மற்றும் மாதவிடாய் நிரந்தரமாக தடைப்பட்ட (menopause) நிலையில் வாழும் பெண்கள் இவற்றில் அதிகம் அக்கறை செய்தல் வேண்டும். பெண்களின் மார்பகம் மாதந்தோறும் நிகழும் மாதவிடாய் சக்கர நிகழ்வின் போது ஓமோன்களின் செல்வாக்கால் பருமன் மாற்றத்துக்கு இலக்காகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

source: http://kuruvikal.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பின் ( pin ) விளைவுகள் இருந்தும் மார்புக்கச்சையை ஏன் அணிகின்றார்கள் . இது அவசியமான பொருளா ?

பழங்கால வீரத்தமிழ் பெண்கள் இதனை பாவித்ததாக குறிப்புகள் இல்லையே .......

ஆட்டுக்கு தாடியும் , பெண்களுக்கு மார்புக்கச்சையும் தேவையா..........?

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பின் விளைவுகள் இருந்தும் மார்புக்கச்சையை ஏன் அணிகின்றார்கள் . இது அவசியமான பொருளா ?

பழங்கால வீரத்தமிழ் பெண்கள் இதனை பாவித்ததாக குறிப்புகள் இல்லையே .......

எனக்குப் பழங்கால தமிழ் பெண்களைப் பற்றித் தெரியாது. ஆனால் மார்புக் கச்சு அணிய வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் சரியான மார்புக் கச்சை தெரிவு செய்து அணிவதே அவசியமானது. அதுவும் தேவைகளுக்கு ஏற்ப அதனை தெரிவு செய்ய வேண்டும் என்பதுதான் இந்த ஆய்வின் முடிவும் கூட..!

மார்புக் கச்சு அணியாவிட்டாலும் மார்பக அழற்சி மிகவும் பாரதூரமான அளவில் ஏற்படும். காரணம் புவியீர்ப்பினால் மார்பகம் இழுக்கப்பட்டு இணையங்கள் விரிவடைவதால் மார்பக அழற்சி ஏற்படுவது மட்டுமன்றி.. அதனுடன் இணைந்துள்ள பிற தசைகளும் இழுபட்டு முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். முள்ளந்தண்டு கொண்டுள்ள வளைவுகளின் தன்மையிலும் மாற்றம் ஏற்படலாம். இவை பின் பல பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்லும். குறிப்பாக பருத்த மார்பகம் உள்ள பெண்களில் இந்தப் பிரச்சனைகள் பெரும்பாலும் அவதானிக்கப்படக் கூடியது. :mellow:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாக பருத்த மார்பகம் உள்ள பெண்களில் இந்தப் பிரச்சனைகள் பெரும்பாலும் அவதானிக்கப்படக் கூடியது. :huh:

அட ........ நான் இதனை இதுவரை அவதானிக்க தவறிவிட்டேன் . :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

அட ........ நான் இதனை இதுவரை அவதானிக்க தவறிவிட்டேன் . :mellow:

ஜயோ ஜயோ :huh::o:(:(:(:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட ........ நான் இதனை இதுவரை அவதானிக்க தவறிவிட்டேன் . :huh:

spinalcolumncurvaturerj1.png

மார்பகங்கள் வயதாக வயதாக பெரிதாகிக் கொண்டே போகும். பெண்களில் மார்பகம் மாதந்தோறும் (மாதவிடாய் காணும் பெண்களில்) பருமனில் சிறுகச் சிறுக அதிகரித்தபடியே இருக்கும். அதற்குக் காரணம் அவர்களின் மாதவிடாய் சக்கரத்தின் போது சுரக்கப்படும் ஓமோன்களே..!

சிலருக்கும் சில குறைபாடுகளால் இவ்விருத்தி தடைப்படுவதும் உண்டு. மார்பகம் அபரிமிதமாக பெருத்தால் அப்பெண்களில் உடற்திணிவு தாக்கும் ஈர்ப்பு மையம் இடம்மாற.. மேலா படத்தில் காட்டப்பட்ட முள்ளந்தண்டில் உள்ள அடிப்படை வளைவுகளின் தன்மையில் மாற்றம் ஏற்படும். அது பின்னர் பல உடல் உபாதைகளுக்கு இட்டுச் செல்லும். குறிப்பாக முதுகு வலி.. கால் வழி.. கூனல் போன்றவையோடு பல விளைவுகள் ஏற்படும்.

அடிப்படையில் அதிக கொழுப்பு சேர்வதும் மார்பகங்கள் பெருக்க ஒரு காரணம். இன்னொன்று மார்பக இழையங்களில் உள்ள இணையங்கள் நீட்சியடைதல். சரியான அளவு மார்ப்புக் கச்சை உலகில் உள்ள பெண்களில் மிகப் பெரும்பாலானோர் அணிவதில்லை. இதனால் மார்பக அழற்சி ஏற்பட்டு பெருத்த மார்பகங்களால் முதுகு வலி ஏற்பட்டு அவதியுறும் நிலையில் மார்பக சிறுப்பிப்பு சத்திரசிகிச்சை செய்ய வேண்டி ஏற்படுகிறது. இது அரசுகளுக்கு பல ஆயிரம் டொலர்களைச் செலவிடத் தூண்டுகிறது. இது பணக்கார நாடுகளில்..!

ஆனால் வறிய நாடுகளைப் பார்த்தால்.. அங்குள்ள பெண்களுக்கு வறுமையோடு அறியாமையும் அவர்களை வாட்டிவதைப்பதைக் காணலாம். அவர்கள் படும் அல்லல்கள் பல ஆண்களுக்கு புரிவதில்லை. பெரும்பாலான தாய்மார் முதுகு வலியால் அவதிப்படுவதை அவதானிக்கிறோம். அதற்குக் காரணமாக இவ்வாறான விடயங்களும் அமைந்திருக்கலாம். பிற காரணிகளும் இருக்கலாம்.

எனவே ஒரு அறிவூட்டலுக்காக இப்பதிவை இங்கு கொண்டு வந்திருக்கிறேன். :mellow:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தகலுக்கு நன்றி நெடுக்ஸ் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை ஆச்சிமார் உள்ளுக்கு ஒண்டும் கட்டாமல் குறுக்குக்கட்டோடை பன்ரெண்டு பிள்ளையளுக்கு மேலை பெத்தெடுத்து பாலூட்டி வளத்தெடுத்தவை :mellow:

இப்ப என்னடாவெண்டால் விண்ணாணம், கண்டுபிடிப்பு, மருத்துவம் எண்டு சொல்லி இல்லாத பொல்லாத வருத்தங்களை உந்த டாக்குத்தர்மார் புதிசுபுதிசாக கொண்டு வரீனம் :(

புதுப்புது மருந்துகளை கண்டு புடிக்க புதுப்புது வருத்தங்களும் உண்டாகிக்கொண்டு வருகுது :o:(

நெடுக்குசாமி!

செய்திக்கு நன்றி :( நல்லாய்த்தான் உள் அன்போடு யோசிக்கிறியள் :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை ஆச்சிமார் உள்ளுக்கு ஒண்டும் கட்டாமல் குறுக்குக்கட்டோடை பன்ரெண்டு பிள்ளையளுக்கு மேலை பெத்தெடுத்து பாலூட்டி வளத்தெடுத்தவை :mellow:

இப்ப என்னடாவெண்டால் விண்ணாணம், கண்டுபிடிப்பு, மருத்துவம் எண்டு சொல்லி இல்லாத பொல்லாத வருத்தங்களை உந்த டாக்குத்தர்மார் புதிசுபுதிசாக கொண்டு வரீனம் :(

புதுப்புது மருந்துகளை கண்டு புடிக்க புதுப்புது வருத்தங்களும் உண்டாகிக்கொண்டு வருகுது :(:(

நெடுக்குசாமி!

செய்திக்கு நன்றி :( நல்லாய்த்தான் உள் அன்போடு யோசிக்கிறியள் :huh:

அந்தக் காலப் பாட்டிமார் பாட்டாமாரால நல்லா கவனிக்கப்பட்டிருக்கினம். அதாலதான் 10, 12 என்று பெற்றுக்க முடிஞ்சிருக்குது. உடலாரோக்கியமாவும் இருந்திருக்கினம்.

இந்தக் காலத்துப் பூட்டிமார் ஒன்று பெத்துக்கிட்டாலே அவஸ்தை என்று பதறியடிச்சு ஓடினம். எல்லாம் இந்தக் காலப் பூட்டன்மாரின் கையாலாகாத் தனம் தானே..! :o:D

உள் அன்பு இல்லாமலா இருக்கும்..! அன்புதானே.. வேற ஒன்றும் இல்லையே பயப்பிட..! :(

Edited by nedukkalapoovan

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ்..

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ் அண்ணா ..........

மருத்துவ கண்ணோட்டத்துடன் பார்த்த ,பயனுள்ள தகவலுக்கு

நன்றி . நிலாமதி அக்கா .

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நெடுக்கண்ணா ச்சா ஏதாச்சும் எழுதனும் எண்ட ஆவலாதியில (பிரியோசனமான தகவலுக்கு நன்றி எண்டு) எழுதிப்போட்டன்......:lol:

அட ........ நான் இதனை இதுவரை அவதானிக்க தவறிவிட்டேன் . :wub:

விஞ்ஞான ரீதியில அவதானிச்சிருந்தால் கண்டுபிடிச்சுருக்கலாம், சும்மா ஏனோ தானோ எண்டு................................... எப்படி அவதானிச்சிருப்பியள் ஆ? :lol:

Edited by Danklas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி நெடுக்கண்ணா ச்சா ஏதாச்சும் எழுதனும் எண்ட ஆவலாதியில (பிரியோசனமான தகவலுக்கு நன்றி எண்டு) எழுதிப்போட்டன்......:lol:

கண்டியளே ஒருத்தர்ரை கூத்தை இப்புடியான விசயமெண்டவுடனை வேட்டியை மடிச்சுக்கட்டிக்கொண்டு முன்னுக்கு வந்துட்டார் :wub:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

மார்புக் கச்சும் மார்பக அழற்சியும்.

ம்..........முக்கியமா ஒரு விசயத்தை ஆராச்சி பண்ணியிருக்கிறிங்க

தொடருங்க

எங்கையப்பா நாட்டிலை சண்டை நடக்குது இதெல்லாம் தேவையா ? என்று முண்டியடிச்சு முன்னுக்கு வந்தவங்கடை சத்தத்தை காணேல்லை. ஓ ஓ அவங்களும் இங்கை வந்த எழுதியிருக்காங்களோ . . நடக்கட்டும். .. . .

உண்மையில் ஆண்கள் நாங்கள் பெண்களை நக்கலடிப்பது ஏசுவது. அது தவறு அவர்கள் எவ்வளவு கஸ்டங்களை அனுபவிக்கின்றார்கள். அதை உணர்ந்தாவது மதிப்போம் . . .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கையப்பா நாட்டிலை சண்டை நடக்குது இதெல்லாம் தேவையா ?

உண்மையில் ஆண்கள் நாங்கள் பெண்களை நக்கலடிப்பது ஏசுவது. அது தவறு அவர்கள் எவ்வளவு கஸ்டங்களை அனுபவிக்கின்றார்கள். அதை உணர்ந்தாவது மதிப்போம் . . .

உலகில் மருத்துவ அறிவியலில் பல சமாச்சாரங்கள் சண்டைக்களங்களில் இருந்துதான் வளர்ச்சி பெற்றன. முதலாம் இரண்டாம் உலகப் போர் பிரசவித்த மரணங்களும் காயங்களும் தந்த மருத்துவ அறிவியல் தான் இன்று மருத்துவம் அதி வளர்ச்சியடையக் காரணமாகின.

யூலிய சீசர் என்ற பெரும் வீரன் தன் போர் வாள் கொண்டு தன் மனைவி குழந்தை பெற முடியாது துடித்த போது வயிற்றைக் கிழித்து குழந்தையை பிறப்பிக்க வைத்தது தான்... இன்று சீசேரியன் என்றாகி உலகில் எத்தனையோ கோடி தாய்மாரின் உயிரைக் காத்திருக்கிறது..! இத்தனைக்கும் சீசர் ஒரு மருத்துவன் அல்ல..! அவர் ஒரு போர் வீரன்.

பெண்களிற்குள்ள பிரச்சனைகளை எடுத்துச் சொல்வது அவங்க தங்கட உடல் நலத்தை கவனிக்கனும் என்பதற்காகவே அன்றி அவங்க மீது இரக்கம் காட்டனும் என்பதற்கல்ல. மனிதர்கள் மனிதாபிமான உணர்வோடு நடந்து கொண்டால் அவர்கள் மீது மனிதாபிமானத்தைக் காட்ட வேண்டுமே தவிர.. இரக்கம் காட்டுதல் மற்றவர்களை பலவீனக்காரர்கள் என்பதாகக் காட்டி விடும். ஆணோ பெண்ணோ அடிப்படையில் மனிதனாவான். :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை ஒன்றா இரண்டா?

நெடக்காலபோவான் மாதிரி நல்ல தமிழில் தர முடிவதில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி நெடுக்கண்ணை..!

உடற்பயிற்சியின் போது மார்பகம் கிட்டத்தட்ட 21 சென்ரி மீற்றர்கள் மேல் - கீழ், உள் - வெளி மற்றும் பக்கப்புறம் என்று அசைய இடமளிக்கப்பட வேண்டும்.

:Dbigthinkpo5.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி நெடுக்கண்ணை..!

:lol:bigthinkpo5.gif

கனக்க யோசிக்காதேங்கோ.. ஆய்வாளர்கள் சொன்னதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.. :D

"They said that during exercise, breasts move up to 21cm (8.26inches), up and down, in and out and side to side - but most bras just limit vertical movement." :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கனக்க யோசிக்காதேங்கோ.. ஆய்வாளர்கள் சொன்னதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.. :lol:

"They said that during exercise, breasts move up to 21cm (8.26inches), up and down, in and out and side to side - but most bras just limit vertical movement." :rolleyes:

எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து இந்த ஆராச்சி நடக்குது.இன்னும் முடியல்லியா :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

யார சொல்லுறியள்

அண்ணன் டங்கு கிளாஸ்யா? :rolleyes:

நிறைய யோசிப்பாரோ :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

யார சொல்லுறியள்

அண்ணன் டங்கு கிளாஸ்யா? :rolleyes:

நிறைய யோசிப்பாரோ :lol:

இல்லை முனிவர்.. 21 செ.மீ. அங்கயும் இங்கையும் போறதை நினைச்சுப் பாக்க முடியேல்ல. அதான் ஆழ்ந்த சிந்தனையில மூழ்கிட்டன். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தக் காலப் பாட்டிமார் பாட்டாமாரால நல்லா கவனிக்கப்பட்டிருக்கினம். அதாலதான் 10, 12 என்று பெற்றுக்க முடிஞ்சிருக்குது. உடலாரோக்கியமாவும் இருந்திருக்கினம்.

இந்தக் காலத்துப் பூட்டிமார் ஒன்று பெத்துக்கிட்டாலே அவஸ்தை என்று பதறியடிச்சு ஓடினம். எல்லாம் இந்தக் காலப் பூட்டன்மாரின் கையாலாகாத் தனம் தானே..! :rolleyes::lol:

அன்றைய வாழ்க்கையெல்லாம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை.மூன்று சந்ததி ஒரு பெரிய வீட்டில் வாழ்வார்கள்.உதவிஒத்தாசைக்கு வீட்டில் பலர் இருப்பார்கள்.உணவுவகைகள் எல்லாம் தரமானதாக இருக்கும். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான ரீதியில அவதானிச்சிருந்தால் கண்டுபிடிச்சுருக்கலாம், சும்மா ஏனோ தானோ எண்டு................................... எப்படி அவதானிச்சிருப்பியள் ஆ? :icon_mrgreen:

எனக்கு அதனை உற்று அவதானிக்க ஒரு மாதிரி உள்ளது . என்ன செய்யலாம் ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பயிற்ச்சி எடுத்துகொள்ளுங்கள்..........சிறி :lol:

சிங்கம் டங்குவார் இருக்கார் அல்லவா :):lol:

உங்களுக்கு நல்ல பயிற்ச்சி கொடுப்பார் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.