Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எட்டு வயது சிறுமியை மணம் முடித்த பிரிட்டன் சிறுவன் மறுநாளே மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு வயது சிறுமியை மணம் முடித்த பிரிட்டன் சிறுவன் மறுநாளே மரணம்

[29 - July - 2008]

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எட்டு வயதுச் சிறுவனின் ஆசையை நிறைவேற்ற வகுப்புத் தோழியை அச்சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பிரிட்டனில் நடைபெற்றுள்ளது. அதேநேரம், திருமணம் முடிந்த மறுநாள் அச்சிறுவன் மரணமடைந்துள்ளான்.

லண்டனை சேர்ந்தவர் லோரென் என்ற பெண். இவரது மகன் ரெச்சே பிளமிங். எட்டு வயது சிறுவனான இவனுக்கு, கடந்த 2004 இல் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

மருத்துவமனைக்கு சென்றபோது, புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. "பிளமிங், இன்னும் சில காலம் தான், உயிருடன் இருப்பான்' என டாக்டர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து, பிளமிங்கின் பெற்றோர், அவனது தேவைகளை அறிந்து நிறைவேற்றினர்.

சில மாதங்களுக்கு முன் தனது தாயாரை அழைத்த பிளமிங், ""என்னுடன் படிக்கும் எல்லேனோர் என்ற சிறுமி மீது எனக்கு மிகவும் விருப்பம். அவளுக்கும் எனக்கும் திருமணம் செய்து வையுங்கள். இது எனது கடைசி ஆசை. இது நிறைவேறாவிட்டால் இறந்தாலும் என் ஆன்மா சாந்தி அடையாது' என பெற்றோரிடம் உருக்கமாக வேண்டினான்.

இதைக் கேட்ட லோரென் அதிர்ச்சி அடைந்தார். சம்பந்தப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்ற லோரென், இது குறித்து தயங்கியவாறு அவர்களிடம் தெரிவித்தார். சிறுமி எல்லேனோரின் பெற்றோர், முதலில் திடுக்கிட்டாலும், பின்னர் சுதாகரித்துக் கொண்டனர். பிளெமிங்கின் நிலைமையை நன்கு அறிந்த அவர்கள், திருமணத்திற்கு சம்மதித்தனர்.

இதையடுத்து, கடந்த 10 ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிளமிங்கின் வீடு அலங்கரிக்கப்பட்டது. நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் அழைக்கப்பட்டனர்.

மணமகள் உடையில் பிளமிங்கின் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாள், எட்டு வயது சிறுமி எல்லேனோர். கைநிறைய ரோஜா பூக்களுடனும், முகம் நிறைய சந்தோஷத்துடனும் தனது தோழியை வரவேற்றான், பிளமிங்.

இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். திருமணம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நண்பர்களும், உறவினர்களும் உருக்கமாக வாழ்த்து தெரிவித்தனர். தனது கடைசி ஆசை நிறைவேறியதால், பிளமிங்கின் உள்ளத்தில் ஒரு இனம் புரியாத அமைதி ஏற்பட்டது.

திருமணம் முடிந்த அடுத்த நாள், பிளெமிங் கின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவனது உயிர் பிரிந்தது. லோரென் கூறுகையில், திருமணம் முடிந்ததும் என்னிடம் வந்த பிளெமிங், ""அம்மா இப்போது என் ஆசை நிறைவேறிவிட்டது. இனிமேல் நிம்மதியாக கண் மூடுவேன்' என்றான். அடுத்த நாளே அவனது உயிர் பிரிந்துவிட்டது. தற்போது அவன் உயிருடன் இல்லை. இருந்தாலும், அவனது கடைசி ஆசையை நிறைவேற்றிய சந்தோஷம் எனக்கு உள்ளது' என்றார்.

தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

இது சட்டத்துக்குப் புறம்பான திருமணமாச்சே. :wub:

இருந்தாலும் அச்சிறுவனின் இறுதியாசை தீர்த்து வைக்க உதவிய சிறுமிக்கும் அவளின் பெற்றோருக்கும் உள்ள மனிதாபிமானம் வியக்க வைக்கிறது.

எந்தனையோ ஆண்களின் வாழ்வை அழித்து அவர்களின் உயிரையே குடித்திருக்கிறார்கள் பெண்கள். அப்படி இருக்க... இப்படி ஒரு சிறுமியும் பெற்றோரும் உலகில் எனும் போது.. உலகம் இன்னும் மனிதாபிமானத்தை காக்கிறது என்பதை காணக்கூடியதாகவே இருக்கிறது.

வாழ வேண்டிய வயதில் உயிரைப் பறிகொடுத்த சிறுவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..!

Edited by nedukkalapoovan

எப்படி சட்டம் அனுமதித்தது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்தனையோ பெண்களின் வாழ்வை அழித்து அவர்களின் உயிரையே குடித்திருக்கிறார்கள் ஆண்கள்.

சிறுவனுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்

8 வயதில் இப்படி ஒரு ஆசையா......

இருந்தாலும் பாவம் பிளமிங்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தனையோ ஆண்களின் வாழ்வை அழித்து அவர்களின் உயிரையே குடித்திருக்கிறார்கள் பெண்கள்.

எந்தனையோ பெண்களின் வாழ்வை அழித்து அவர்களின் உயிரையே குடித்திருக்கிறார்கள் ஆண்கள்.

:unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

8 வயதில் இப்படி ஒரு ஆசையா......

இருந்தாலும் பாவம் பிளமிங்.

8 வயதைக் கடந்து வந்தவன் என்ற ரீதியில் அங்கு ஓமோன்கள் தூண்டும் காதல் வந்திராது.... அழகு மற்றும் அந்தச் சிறுமி தரும் நட்பு.. அவனுக்கு அவளில் ஒரு ஈர்ப்பைத் தந்திருக்கும்.! அது இயல்பானது. நான் கூட அதை அனுபவித்திருக்கிறேன். இன்றும் கூட அந்த ஞாபகங்கள் மனதில் இருக்கவே செய்கின்றன. நான் இறுதியாக எனது 9 வது வயதில் கலவன் பாடசாலையில் படிப்பதை விட்டு விலகினேன். ஆனால் அதற்கு முன் நிகழ்ந்தவை இப்பவும் ஞாபகத்தில் இருக்கிறது..! அதற்காக காதல் வந்தது என்றில்லை. ஒரு ஈர்ப்பு வரும். அது இயற்கையானது. அது எல்லோரிடமும் வராது..! ஒரு சிலர் மீதே ஒருவருக்கு வரும். :rolleyes:

Edited by nedukkalapoovan

8 வயதைக் கடந்து வந்தவன் என்ற ரீதியில் அங்கு ஓமோன்கள் தூண்டும் காதல் வந்திராது.... அழகு மற்றும் அந்தச் சிறுமி தரும் நட்பு.. அவனுக்கு அவளில் ஒரு ஈர்ப்பைத் தந்திருக்கும்.! அது இயல்பானது. நான் கூட அதை அனுபவித்திருக்கிறேன். இன்றும் கூட அந்த ஞாபங்கள் மனதில் இருக்கவே செய்கின்றன. நான் இறுதியாக எனது 9 வது வயதில் கலவன் பாடசாலையில் படிப்பதை விட்டு விலகினேன். ஆனால் அதற்கு முன் நிகழ்ந்தவை இப்பவும் ஞாபகத்தில் இருக்கிறது..! அதற்காக காதல் வந்தது என்றில்லை. ஒரு ஈர்ப்பு வரும். அது இயற்கையானது. அது எல்லோரிடமும் வராது..! ஒரு சிலர் மீதே ஒருவருக்கு வரும். :rolleyes:

:lol: தாத்தா ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பழைய காலத்தை மீட்டிப்பார்க்கிறியளோ நல்லது.

தாத்தா எனக்கொரு சந்தேகம்.

இங்கு அச்சிறுவன் மரணத்தை அண்மித்ததால் அவனின் ஆசை நிறைவேற்றப்பட்டது. இங்கு அவனின் வயதையோ அவனின் ஆசையயோ கவனத்தில் கொள்ளவில்லை. அவனின் அண்மித்த மரணத்தை கவனத்திற்கொண்டு ஆசை நிறைவேற்றப்பட்டது.

ஆனால் நம்ம கலாச்சாரத்தில் பருவத்தை அடைந்த போதிலும் காதலை/ஆசையை (இதுவும் ஒருவகை விருப்பம் தானே) ஏற்க மறுக்கும் பெற்றோர்களுக்காக காதலர்கள் தற்கொலை செய்கின்றனர். சிலர் அதை அதாவது நான் சாவேன் என்று சொல்லிய போதிலும் பெற்றோர் நீ செத்தாலும் பரவாயில்லை என அக்கறையின்றி அவர்களின் தற்கொலையை(அதுவும் ஒருவகையில் மரணம் , உயிர்நீத்தல் தான்) பொருட்படுத்துவதில்லையே.

இதில் இருந்து என்ன நினைக்கிறீங்க நெடுக் தாத்தா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா எனக்கொரு சந்தேகம்..

இங்கு அச்சிறுவன் மரணத்தை அண்மித்ததால் அவனின் ஆசை நிறைவேற்றப்பட்டது. இங்கு அவனின் வயதையோ அவனின் ஆசையயோ கவனத்தில் கொள்ளவில்லை. அவனின் அண்மித்த மரணத்தை கவனத்திற்கொண்டு ஆசை நிறைவேற்றப்பட்டது.

ஆனால் நம்ம கலாச்சாரத்தில் பருவத்தை அடைந்த போதிலும் காதலை/ஆசையை (இதுவும் ஒருவகை விருப்பம் தானே) ஏற்க மறுக்கும் பெற்றோர்களுக்காக காதலர்கள் தற்கொலை செய்கின்றனர். சிலர் அதை அதாவது நான் சாவேன் என்று சொல்லிய போதிலும் பெற்றோர் நீ செத்தாலும் பரவாயில்லை என அக்கறையின்றி அவர்களின் தற்கொலையை(அதுவும் ஒருவகையில் மரணம் , உயிர்நீத்தல் தான்) பொருட்படுத்துவதில்லையே.

இதில் இருந்து என்ன நினைக்கிறீங்க நெடுக் தாத்தா? :unsure:

தமிழர்கள் உட்பட்ட கீழத்தேயத்தவர்கள் மன இறுக்கமானவர்கள் என்பதை பல தடவைகள் நான் உணர்ந்திருக்கிறேன். அவர்கள் சிலவற்றை ஏன் எதிர்க்கிறோம் என்ற அர்த்தம் புரியாமல் தங்களளவில் விளங்கிக் கொண்ட போலிக் காரணங்களின் அடிப்படையில் எதிர்க்கின்றனர்.. அல்லது அங்கீகரிக்கின்றனர்.

அவர்களிடம் முன்னிலையில் நிற்பது சுயநலம் கலந்த சுய கெளரவம்.. என்ற ஒரு போலிப் பூதம். அது அவர்களின் மனிதாபிமான சிந்தனையை சிதறித்துவிட்டு அதிகாரம் செய்தலை செய்யத் தூண்டுகிறது.

ஆனால் மேலைத் தேயத்தவர்கள் பெரும்பாலானோர் மனிதாபிமானத்தை உணரக் கூடிய அளவுக்கு அதிகம் வளர்க்கப்படுகின்றனர்.

இப்படி ஒரு சிறுவன் எமது சமூகத்தில் இருந்து எமது பெற்றோரில் ஒருவர் தமது சிறுமியை குறித்த சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்து அச்சிறுவனின் மன மகிழ்ச்சி மீது மனிதாபிமானம் காட்டுவார்களா..! நிச்சயம் இல்லை. வைக்கும் உண்மையான அன்பையே புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு தம்மையும் பிள்ளைகளையும் வளர்த்தெடுக்கும் பெரும்பாலான தமிழ் பெற்றோர்... நிச்சயம்.. இதை ஓர் அதிசயமாகவே பார்ப்பர்.

ஆனால்.. எனக்கென்றால் இதில் மனிதாபிமானமே முன்னின்று வென்றிருக்கிறது என்பது தெரிகிறது...! மனிதாபிமானச் சிந்தனை நோக்கி எம்மவர்கள் வளர்க்கப்பட வேண்டும். அதில் பலமான குறைபாடு எம்மவர் மத்தியில் நிறைந்திருக்கிறது.

அண்மையில் வீதியால் போய்க் கொண்டிருக்கும் போது.. ஒரு முள்ளம்பன்றி (சிறியது) வீதியைக் கடக்க முனைந்து நடு வீதியில் நின்று விட்டது. பார்த்த எனக்கு சங்கடமாகிப் போக என்ன செய்வதென்று நினைப்பதற்குள் ஒரு வெள்ளை இனச் சிறுவன் ஓடி வந்து வீதியின் குறுக்கே நின்று கொண்டான். அந்த முள்ளம்பன்றியை துரத்தவில்லை. அதுவாக ஓய்வெடுத்த பின் நகரும் வரை நின்று கொண்டிருந்தான். வாகனங்களும் இரு மருங்கும் நிறுத்தப்பட்டிருந்தன. இது நிகழ்ந்தது பூரணமாக வெள்ளையர்கள் வாழும் ஒரு பகுதியில்..!

ஆனால் லண்டனில் ஒரு சிறீலங்கன் வீதியில் வாகனத்தால் மோதுப்பட்டுக் கிடக்க.. எல்லோரும் கூடி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அவனைத் தாண்டி வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன. அதிலும் பல வாகன ஓட்டிகள் ஆசியர்களாகவே இருந்தனர்.

இதுதான்.. அவர்களுக்கு எம்மவருக்கும் இடையில் உள்ள சிந்தனைப் போக்கு.. மனிதாபிமானமற்றவர்களாகவே எம்மவர்கள் வளர்க்கப்பட்டு.. சுயநலமும்.. சுய கெளரவமும்.. அடுத்தவனை ஏமாற்றவும், போட்டி, பொறாமை கொள்ளவும் என்ற மனப்பான்மை ஊட்டி வளர்க்கப்படுகின்றனர். இதன் விளைவுகளே நீங்கள் சொன்னவை எம்மத்தியில் நிகழக் காரணம்..! நிச்சயம் எம்மவர்களுக்கு மனிதாபிமானச் சிந்தனை குறைவு. இப்போ புலம்பெயர்ந்த நாடுகளில் மற்றவையை பிரதிபண்ண நினைக்கிறார்கள்.. இருந்தும்.. இன்னும் முழுசா அது முடியவில்லை. மனிதாபிமானம் என்பது இயல்பாக எழ வேண்டுமே தவிர.. அடுத்தவனைப் பார்த்து எழுவதல்ல. இருப்பினும் மனிதாபிமானம் என்பதை அடுத்தவையை பிரதிபண்ணியாவது தெரிந்து கொள்ளட்டும் என்பது ஒரு ஆறுதலுக்கு ஏற்கக் கூடிய விடயம் தான்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

8, 10 வயதில் காதல் வளருதல் என்பது சினிமா ஊடகங்களால் ஏற்பட்ட தாக்கமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

8, 10 வயதில் காதல் வளருதல் என்பது சினிமா ஊடகங்களால் ஏற்பட்ட தாக்கமா?

என்ன நக்கலா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

8 வயதைக் கடந்து வந்தவன் என்ற ரீதியில் அங்கு ஓமோன்கள் தூண்டும் காதல் வந்திராது.... அழகு மற்றும் அந்தச் சிறுமி தரும் நட்பு.. அவனுக்கு அவளில் ஒரு ஈர்ப்பைத் தந்திருக்கும்.! அது இயல்பானது. நான் கூட அதை அனுபவித்திருக்கிறேன்.

உலகிலேயே வயது குறைந்த அப்பாவுக்கு 9வயது என்று வாசித்த ஞபகம்... எப்பிடீப்பா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நக்கலா என்ற சொல்லுச் சொல்வதற்கு மண்ணிறத்தில் வர்ணம் போட்டு, சாய்வெழுத்து ஆக்கி ஏன் கஸ்டப்படுகின்றீர்கள்...

இதில் நக்கல் ஏதுமில்லை. இப்போது காதலிக்காவிட்டால் தப்பு என்ற மாதிரி ஒரு தோற்றத்தை எமக்குள் ஏற்படுத்தியது தமிழ்ச் சினிமா தான். அதிக படங்கள் அதை மையப்படுத்தியு;ம, காதல் என்பது ஒரு புனிதமானது எனப் பலர் புலம்புகின்ற சொற்றொடருக்கும் காரணமாக அமைந்தது.

சிறுவர் காதல் என்பதை இன்றைய சினிமா மெதுவாகக் கையில் எடுத்துள்ளது. இப்போதெல்லாம் தங்கர்பச்சானின் படங்களில் கட்டாயம் அது இல்லாமல் வந்ததில்லை. தமிழ் உலகிலும் அப்படி ஒரு கலாச்சாரத்தைப் புகுத்த முயல்கின்றார்களோ என அஞ்சவேண்டியுள்ளது.

சிறுவயதிலும் காதல் வரவேண்டும் என்று எம் இளைய சமுதாயத்தைக் குட்டிச் சுவராக்கப் போகின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே வயது குறைந்த அப்பாவுக்கு 9வயது என்று வாசித்த ஞபகம்... எப்பிடீப்பா?

நான் தான் அது. கண்ட திருப்தியும்.. களம் முழுதும் புலம்பித் திரிய தகவலும் கிடைச்சிருக்குமே. இதுதான் நியமமான தமிழர்களின் தன்மை. இதை நான் நங்கு அறிவேன்.. அறிந்து கொண்டு தான் எழுதிக் கொண்டும் இருக்கிறேன்.. ஐயா..! :rolleyes:

ஆனால் லண்டனில் ஒரு சிறீலங்கன் வீதியில் வாகனத்தால் மோதுப்பட்டுக் கிடக்க.. எல்லோரும் கூடி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அவனைத் தாண்டி வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன. அதிலும் பல வாகன ஓட்டிகள் ஆசியர்களாகவே இருந்தனர்.

நெடுக் தாத்தா இச்சம்பவத்தின் போது நீங்கள்...................................எங்கிருந

்தீர்கள்? (யாராவது சொல்லக் கெட்டிர்களாஅ? எங்காவது படிச்சீர்களா? அல்லது நேரில்..........

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் தாத்தா இச்சம்பவத்தின் போது நீங்கள்...................................எங்கிருந

்தீர்கள்? (யாராவது சொல்லக் கெட்டிர்களாஅ? எங்காவது படிச்சீர்களா? அல்லது நேரில்..........

நான் வெளியூர் ஒன்றுக்குப் போய்விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் நிகழ்ந்தது..! என்னால் உதவக் கூடிய நிலை அங்கு இருக்கவில்லை..! ஆனால் பொலீசும் பரா மெடிக்ஸும் வந்து எல்லாம் கிளியர் பண்ணும் வரை நானும் வந்த வாகனத்தில் காத்திருக்க வேண்டி இருந்தது..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

8, 10 வயதில் காதல் வளருதல் என்பது சினிமா ஊடகங்களால் ஏற்பட்ட தாக்கமா?

சினேகி கேட்டதையே நானும் கேட்கிறேன்......

நெடுக்ஸ் தாத்தா பந்தி பந்தியாய் எழுதி வைத்து சொல்கிறார் எல்லாம் வரும் என்று....தனக்கும் வந்ததென்று.

போதாததிற்கு.... 9வயதில் பிள்ளையும் வரும் என்று யாரோ சொல்லிகினம்... இதையெல்லாம் வாசித்துவிட்டு

அதென்ன கேள்வி வருமா வராதா???

இப்போதைக்கு இன்னும் வராதது......... கருவறையில் காதல்!

அதுகும் காலம் போறபோக்கில....... முதலிரவும் முடிந்து...... பிள்ளைகளுடன்தான் பிள்ளைகள் பிறக்குமோ என்னமோ.

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு இன்னும் வராதது......... கருவறையில் காதல்!

அதுகும் காலம் போறபோக்கில....... முதலிரவும் முடிந்து...... பிள்ளைகளுடன்தான் பிள்ளைகள் பிறக்குமோ என்னமோ.

அப்படிக் கருவறையிலேயே தீர்மானிச்சிட்டுப் பிறந்திட்டா.. காதல் என்று ஒரு பொம்பளைக்கு போட்டி போட்டு அடிபட்டு சாகத் தேவையும் இல்ல.. தற்கொலை செய்துக்க தேவையும் இல்ல.. காதலிக்கிறன் என்றிட்டு ஏமாத்திட்டு மனசெல்லாம் உழைச்சலோட இன்னொருத்தரைத் தேடி வாழ வேண்டி அவசியமும் இல்ல.. கள்ளக் காதல் என்று கட்டினதுகள் இருக்க.. ஓட வேண்டியதும் இல்ல.. பெற்றோருக்கும் பிரச்சனை இல்ல.. நீதிமன்றங்களுக்கும் விவாகரத்துக் கொடுக்கிற பிரச்சனை இல்ல.. அனாதைப் பிள்ளைகளும்.. கருக்கலைப்புக்களும்.. அவசியமில்லை... இப்படி இன்னோரென்ன... நன்மைகள் மனிதரிடத்தில் உதித்திருக்கும்..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தான் அது.

சொல்லவே இல்லை... :lol::D

Edited by snegi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நக்கலா என்ற சொல்லுச் சொல்வதற்கு மண்ணிறத்தில் வர்ணம் போட்டு, சாய்வெழுத்து ஆக்கி ஏன் கஸ்டப்படுகின்றீர்கள்...

எங்கட ஊர் மண் இந்த நிறம் இல்லை. அதோட எனக்கு அந்த சொல்லுகலர் குடுக்குறதெல்லாம் பெரிய வேலையா தெயியேல்ல.. கஸ்டமாயும் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். :D

சிறுவர் காதல் என்பதை இன்றைய சினிமா மெதுவாகக் கையில் எடுத்துள்ளது. இப்போதெல்லாம் தங்கர்பச்சானின் படங்களில் கட்டாயம் அது இல்லாமல் வந்ததில்லை. தமிழ் உலகிலும் அப்படி ஒரு கலாச்சாரத்தைப் புகுத்த முயல்கின்றார்களோ என அஞ்சவேண்டியுள்ளது.சிறுவயதிலும் காதல் வரவேண்டும் என்று எம் இளைய சமுதாயத்தைக் குட்டிச் சுவராக்கப் போகின்றார்கள்

அப்பு நெடுக்கு தாத்தாவுக்கு தமிழ்சினிமா பாத்தோ அந்த இனம்புரியா காதல் வந்தது? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லவே இல்லை... :lol::lol:

அதுதான் சொல்லிட்டனில்ல..! :lol:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே வயது குறைந்த அப்பாவுக்கு 9வயது என்று வாசித்த ஞபகம்... எப்பிடீப்பா?

எந்தப் புண்ணியவான் அதுக்குக் காரணமோ...! :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.