Jump to content

நேத்து வச்ச கேரள மீன் குழம்பு


Recommended Posts

மீன்%20குழம்பு.JPG

பழைய சாதமும் பழைய மீன் குழம்பும் சாப்பிடுற சுகம் வேறு எதற்கு வரும் என்ற வரிகள் அடிக்கடி என் காதில் விழும். அட அப்படி அதில் என்ன தான் இருக்கு என முயற்சித்து பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது, சுவையோ சுவைதான் போங்க. (இருக்காத பின்ன, மீனை வெட்டி,சுத்தம் பண்ணுறது நாங்க தானே என வீட்டில் மாமா முணுமுணுப்பதையெல்லாம் சொல்லிட்டா இருக்க முடியும்)

என்னுடைய நெடுநாள் வலைப்பூ நண்பர் தீபக் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். சமையலில் என் ஆர்வம் பார்த்து, கேரள சமையல் குறிப்புகள் பலவற்றை தந்துள்ளார். அவற்றிலிருந்து சிலவற்றை முயற்சித்து பார்த்து வருகின்றேன். (இந்த மாதம், கேரளா உணவு மாதம்) அதில் முதல் முயற்சி தான் இந்த கேரள மீன் குழம்பு. எங்களுடைய மீன் குழம்போடு ஒப்பிட்டு பார்க்கும் போது, சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி உண்டனர். (இப்படி சொன்னால் தானே நீங்களும் யான் பெற்ற இன்பத்தை பெறுவீர்கள்)

தேவையானவை:

கறிமீன் - 1/2 கிலோ

வினாகிரி - கொஞ்சமா

தேங்காய் எண்ணெய் - 2 மே.க

கடுகு - 1/2 tsp

கறிவேப்பிலை - 20 இலைகள்

வெங்காயம் - 1

இஞ்சி- 1" துண்டு

உள்ளி - 6

பச்சைமிளகாய் - 2

மிளகாய் தூள் - 1 மே.க

மல்லி தூள் - 2 மே.க

மஞ்சள் தூள் - 1/2 தே.க

வெந்தயம் - 1/2 தே.க

புளி கரைசல் - 1/2 தே.க

தக்காளி - 1

உப்பு தேவையான அளவு

செய்ய வேண்டியது:

1. ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து, அதில் வினாகிரியையும் 1/2கப் உப்பையும் சேர்க்கவும். அதில் மீனை 15 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின்னர் வெளியே எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.

2. இன்னொரு சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் போட்டு கொத்திததும், அதில் கடுகை போடவும், தொடர்ந்து கறிவேப்பிலை, இஞ்சி, உள்ளியை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

3. அடுத்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். தொடர்ந்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

4. தக்காளி வதங்கி வந்ததும் மேற்கூறிய தூள்களை சேர்த்து தூள் வாசம் போகும் வரை கிளறவும்.

5. கலவையில் நீர், புளிகரைசல், உப்பை சேர்த்து கொதி நிலைக்கு (சாப்பிடுபவர்களை அல்ல) கொண்டுவரவும்.

6. கலவை கொதித்ததும் அதில் மீன் துண்டுகளை போட்டு 2 நிமிடங்கள் வரை மெதுவான சூட்டில் வைக்கவும்.

7. இன்னோர் சட்டியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, அதில் வெந்தயத்தை போட்டு தாளிக்கவும்.

8. தாளித்த வெந்தயத்தை குழம்பில் சேர்த்து கிளறவும். மேலும் 10-15 நிமிடங்களுக்கு மெதுவான சூட்டில் வைத்து இறக்கினால் சுவையான கேரளாமீன் குழம்பு ஆயத்தமாகிவிடும்.

அதை உடனே சாப்பிட்டால் = சாதாரண கேரள மீன் குழம்பு

அடுத்த நாள் சாப்பிட்டால் = பதிவின் தலைப்பை பாருங்கப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழய மீன் குழம்புக்கு அரிசி மாவும் வெள்ளை மாவும் கலந்த பிட்டு தான் இன்னும் பிரமாதாமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

நன்றி தூயா மீன் குழம்பும் வெள்ளை புட்டும் எனது பிடித்தமான உணவுகளில் ஒன்று. கோழிப்புக்கை மற்றது. என்ன சொன்னாலும் எமது சாப்பாட்டு வகை அனேகமாக கேரள சாப்பாட்டு வகையை ஒத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கறிக்கு பழஞ்சோறு அந்த மாதிரியிருக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தூயா மீன் குழம்பும் வெள்ளை புட்டும் எனது பிடித்தமான உணவுகளில் ஒன்று. கோழிப்புக்கை மற்றது. என்ன சொன்னாலும் எமது சாப்பாட்டு வகை அனேகமாக கேரள சாப்பாட்டு வகையை ஒத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

கூப்பன்(கோதுமை) மாவிலை செய்ததுதானே? :lol:

Link to comment
Share on other sites

அதை தானே பிஸ்சாவிலே போட்டு விளாசுறாங்கள் அண்ணா. :lol: நீங்கள் வேறை ஒரு இழக்காரமாக பார்க்கிறீர்கள் கு.மா அண்ணா. நான் ஒன்றாக சாப்பிடும் போது(combination) என்பதை தான் சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை தானே பிஸ்சாவிலே போட்டு விளாசுறாங்கள் அண்ணா. :lol: நீங்கள் வேறை ஒரு இழக்காரமாக பார்க்கிறீர்கள் கு.மா அண்ணா. நான் ஒன்றாக சாப்பிடும் போது(combination) என்பதை தான் சொன்னேன்.

ஐயோ கடவுளே நான் இழக்காரமாய் பாக்கேல்லையப்பா :o எனக்கு கூப்பன் மாவிலை அவிச்ச இடியப்பமெண்டால் :lol: அதுவும் சொதியோடை சொல்லி வேலையில்லையப்பா :lol:

Link to comment
Share on other sites

பழைய சாதம் என்றால் முந்திய தினம் செய்த சாதம் தானே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் கறிக்கு புளிதான் சுவையைக் கொடுக்கும்.

கேரளா கறியும் கிட்டதட்ட நம்ம ஊர் கறி மாதிரி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அடிக்கடி சாப்பிடுவது கேரள உணவுவகைகள் தான் நல்ல ருசியாய் இருக்கும். அதுவும் கேரள மீன் குழம்பு சொல்லிவேலையில்லை அத்தோடு ஒருவகை அச்சாறும் போடுவார்கள் அதுவும் நல்லா இருக்கும் :lol:

Link to comment
Share on other sites

:lol::lol: நல்லாக ருசித்து சாப்பிடுறியள் போலிருக்கு.

நான் நினைச்சேன் எல்லாரும் வெளிநாட்டில் கே எவ் சீ மக்டொனால்ட் உப்படித்தான் சாப்பிடுவாங்க எண்டெல்லோ :o அடிக்கடி நிலாவின் எண்ணம் நிலாவுக்கு எதிரா போகுது. :lol:

தூயா பபா நல்லதொரு தகவல். உப்படி செய்து சாப்பிடனும் . அதுசரி என்ன மீன் என்றாலும் பரவாயில்லையோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol: நல்லாக ருசித்து சாப்பிடுறியள் போலிருக்கு.

நான் நினைச்சேன் எல்லாரும் வெளிநாட்டில் கே எவ் சீ மக்டொனால்ட் உப்படித்தான் சாப்பிடுவாங்க எண்டெல்லோ :o அடிக்கடி நிலாவின் எண்ணம் நிலாவுக்கு எதிரா போகுது. :o

தூயா பபா நல்லதொரு தகவல். உப்படி செய்து சாப்பிடனும் . அதுசரி என்ன மீன் என்றாலும் பரவாயில்லையோ

எவ்வளவு காலம்தான் அந்த கே எவ் சீ மக்டொனால்ட் பீசா இப்படி சாப்பிடுறது அதுஎல்லாம் அலுத்துப்போட்டுது இனிமல் பழையசோறும் கருவாட்டுக்குழம்பும் தான் :lol: .

பரவாயில்லை பரவாயில்லை என்ன மீன் என்றாலும் பரவாயில்லை அதிலும் திமிங்கிலம் என்றால் இன்னும் ருசி அதிகமாம் :unsure:

முக்கிய குறிப்பு; எனக்கு தெரியாது நான் சாப்பிடவில்லை

Link to comment
Share on other sites

தகவலிற்கு நன்றி தூயா

எனக்கும் பிடித்த உணவு வகைகளில் கேரளா உணவுகள் மிகமிக ருசி.. அவர்களுடைய உணவுவகைகள் கிட்டத்தட்ட எமது உணவுகளுடன் ஓத்துப்போகும்... காரணம் புட்டு இடியப்பம் அவர்களின் உணவாக இருக்கின்றது...

Link to comment
Share on other sites

ம்ம்..கொழம்ப..(குழம்பை)..பார்க்க நன்னா இருக்கு :lol: ..ஆனா என்ன எனக்கு கொழம்பு மீன் பிடிக்காது அல்லோ..பொறித்த மீன் மட்டும் தான் பிடிக்கும்..ஆனா கொழம்பு சோச்சாவோட சாப்பிடுவன் அல்லோ..இல்லாடிக்கு சுறாமீன் அது மட்டும் பிடிக்கும் கொழம்பெண்டாலும்.. :o

புட்டோட சுறா கொழம்பும் வைத்து சாப்பிடனும்..(சொல்லி வேளையில்ல)...ம்ம்...நன்றி தூயிஸ் செய்முறைக்கு பொறுங்கோ வெகு கெதியில உங்கன்ட செய்முறையில ஒண்டை செய்து பார்க்கிறன் :lol: ..என்னை கொஞ்ச நாளைக்கு காணாவில்லை எண்டா ஆசுபத்திரியில எண்டு நினைத்து கொள்ளுங்கோ.. :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி

:lol::lol: ஏன் ஆஸ்பத்திரிக்கு போக மாமுட ஆச்சிரமம் இருக்கல்லோ

ஒரு தடவை வந்துற்று போறது

தக்க சிகிச்சை தாங்களுக்கு வழங்கப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சிரமத்தில மரக்கறியெல்லோ முனிவர் . :lol:

ஜம்மு பேபி ஆச்சிரமத்துக்கு வந்தால் என்ன சிகிச்சை எல்லாம் குடுப்பியள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: என்ன சிறி முள்ளு பொறுத்தால் தொண்டையில்

கழுத்தை வெட்டவேண்டியதுதானே :o:o:o

எங்க ஜம்முவ காணோம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனியளின்ரை ஆச்சிரமத்துக்கு சிகிச்சை செய்ய போனவை ஒழுங்காய் திரும்பி வந்ததாய் சரித்திரமே இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனியளின்ரை ஆச்சிரமத்துக்கு சிகிச்சை செய்ய போனவை ஒழுங்காய் திரும்பி வந்ததாய் சரித்திரமே இல்லை

:o:o:o:D:lol::D:D:lol::o

எப்படி கு .சா தாத்தா உங்களுக்கு மட்டும் தெரியுது

Link to comment
Share on other sites

:lol: என்ன சிறி முள்ளு பொறுத்தால் தொண்டையில்

கழுத்தை வெட்டவேண்டியதுதானே :D:D:o

எங்க ஜம்முவ காணோம் :lol:

:D முள்ளு சிக்கினால் கழுத்தை வெட்டுறதோ........ ஜம்மு அப்படி ஏதும் சிக்கினால் நிலாக்காட்டை வாங்கோ என :o அக்கா கையாலை பிள்ளைக்கு முள்ளு எடுத்து விடுறேன். :o முனிவரை நம்பி போனால் கழுத்தை வெட்டிடுவாங்க :o

Link to comment
Share on other sites

ம்ம்..கொழம்ப..(குழம்பை)..பார்க்க நன்னா இருக்கு :huh: ..ஆனா என்ன எனக்கு கொழம்பு மீன் பிடிக்காது அல்லோ..பொறித்த மீன் மட்டும் தான் பிடிக்கும்..ஆனா கொழம்பு சோச்சாவோட சாப்பிடுவன் அல்லோ..இல்லாடிக்கு சுறாமீன் அது மட்டும் பிடிக்கும் கொழம்பெண்டாலும்.. :wub:

புட்டோட சுறா கொழம்பும் வைத்து சாப்பிடனும்..(சொல்லி வேளையில்ல)...ம்ம்...நன்றி தூயிஸ் செய்முறைக்கு பொறுங்கோ வெகு கெதியில உங்கன்ட செய்முறையில ஒண்டை செய்து பார்க்கிறன் :huh: ..என்னை கொஞ்ச நாளைக்கு காணாவில்லை எண்டா ஆசுபத்திரியில எண்டு நினைத்து கொள்ளுங்கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

யம்மு, சமைக்க முதல் சொல்லுங்க.

மருத்துவமனையில் வந்து பார்க்கிறேன்..கிகிகிகி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழய மீன் குழம்புக்கு அரிசி மாவும் வெள்ளை மாவும் கலந்த பிட்டு தான் இன்னும் பிரமாதாமாக இருக்கும்.

உண்மைதான்

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி

ஏன் ஆஸ்பத்திரிக்கு போக மாமுட ஆச்சிரமம் இருக்கல்லோ

ஒரு தடவை வந்துற்று போறது

தக்க சிகிச்சை தாங்களுக்கு வழங்கப்படும்

மாமு..மு அங்க வைத்து இங்க வைத்து கடசியல எனக்கே ஆப்பா..பா.. :( (உது நன்னாவே இல்ல சொல்லிட்டன்)..தக்க சிகிச்சை வழங்கபடுறது எல்லாம் சரி..(ஆனா கிட்னி இருக்குமோ)..எண்டு சந்தேகம்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஆச்சிரமத்தில மரக்கறியெல்லோ முனிவர் . ஜம்மு பேபி ஆச்சிரமத்துக்கு வந்தால் என்ன சிகிச்சை எல்லாம் குடுப்பியள் .

யார்..சொன்னது ஆச்சிரமத்தில மரகறி எண்டு தமிழ் சிறி அண்ணா..வெளியாள அப்படி தான் சொல்லி கொள்வோம் ஆனா உள்ளுகுள்ள..மீன் கொழம்பின்ட வாசணை மணக்கும் என்ன மாமு.. :huh:

வந்தா தானே அவர் சிகிச்சை கொடுக்கிறதிற்கு..(என்ன ஒரடியா அனுப்புறது எண்டு முடிவு பண்ணிட்டியளோ) :o ..பாவம் என்னும் வாழ்க்கையில ஒன்னையும் அநுபவிக்கல..மாமு எல்லாத்தையும் அனுபவித்திட்டார் பாருங்கோ..

அப்ப நான் வரட்டா!!

என்ன சிறி முள்ளு பொறுத்தால் தொண்டையில்

கழுத்தை வெட்டவேண்டியதுதானே :

எங்க ஜம்முவ காணோம்

ஏன்..மாமு...வெட்டுறதிற்கு எண்ட கழுத்து என்ன சாமிக்கு நேர்ந்த கடாவா..(முடியல) :huh: ..வெட்டனும் எண்டு ஆசை இருந்தா பாண வெட்டுங்கோ இல்லாட்டி வெங்காயத்தை வெட்டுங்கோ அதை விட்டிட்டு..(அவ்..அவ்.)..அழுதிடு

Link to comment
Share on other sites

உண்மைதான்

ஓ..அப்படியே..ஊட்டில..(வீட்டில)..க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:huh: ஜயோ பாவம் கந்தப்பு
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.