Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கந்தன் கொடியேற்றத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலிலை உங்கடை கலரை குறையுங்கோ அதுக்கு பிறகு ஊருக்கு உபதேசம் செய்யலாம் :(

இங்க ஒருத்தருக்கும் நான் உபதேசம் செய்யவில்லையே... என்னோட கருத்து உங்களுக்கு உபதேசம் மாதிரி படுது... என்ன பண்ண? எதுக்கு ரென்சன் ஆகுறீங்க? ஏன் தொப்பி பொருத்தமா இருக்கோ? :icon_idea:

  • Replies 111
  • Views 8.7k
  • Created
  • Last Reply

உண்மையை கதைக்கிற ஆக்களுக்கு பட்டங்களும், தண்டனைகளும் வழங்கி வந்த நீங்கள் எப்ப இருந்து மோட்ச அர்ச்சனை செய்ய வெளிக்கிட்டனியள்?

உண்மை! எது உண்மை ?

இது வரை சுமார ஆயிரம் தமிழர்கள் கொழும்பில் மட்டும் காணாமல் போய் இருக்கிறார்கள்!

ஒரு பல்கலைக்கழக உபவேந்தர் உட்பட, சிறிலங்கா அரசினால் கடத்தப்பட்ட தமிழர்கள் பலர் இருக்கும் இடமே தெரியவில்லை. இவர்களில் பலர் அரச அனுசரனையுடன் கொன்று புதைக்கப்பட்டு விட்டார்கள் ! இவை தான உண்மைகள் !!!

உங்களுக்கு தைரியம் இருந்தால் நாளை இந்த உண்மைகளை கொழும்பு தெருக்களில் கொஞ்சம் உரத்து பேசி பாருங்கள் !

அதன் பின் இந்த களத்தில் வந்து உண்மைகள் பேசுவதாக உளறிக் கொண்டிருக்கும் நீங்களும் உண்மையில் காணாமல் போனோர் பட்டியலில் சேர்ந்து விடுவீர்கள் !

அடுத்த வேளை தன் வயிற்றுக்கு மட்டும் கொஞ்சம் சோறும் இரண்டு எழும்புத்துண்டும் கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு விடுதலையாவது மண்ணாங்கட்டியாவது!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் குழப்பங்கள் சீக்கிரமே தீர்ந்து விடும்!!!

அத்தோடு உங்களை போன்றவர்களுக்கு நீண்ட அமைதியும் வந்து சேர வாழ்த்துக்கள்!!!

இதைத்தான் ஆப்பு எண்டு சொல்லுறதோ? :icon_idea:

முடிந்தவன் சாதிக்கிறான்

முடியாதவன் போதிக்கிறான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லூருக்கும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கும் என்ன தொடர்பு..

நீங்களே தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு.. அந்த அமைச்சக இணையத்தளம் தரும் நல்லூர் திருவிழா பற்றிய பரப்புரை படங்கள்.. செய்திகளைப் படியுங்கள்..

நீங்க உவ்வளவு கத்தியும் கேக்கமாட்டன் எண்டு அடம் பிடிக்குதுகள் சிலதுகள்... படத்தை காட்டினால் மட்டும் ஏத்துக்கொள்ளவா போகுதுகள்? இதை வைச்சு இன்னும் அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்குவினம்.. இல்லா ஊருக்கு உபதேசம் பண்ணவேண்டாம் என்பினம்...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை! எது உண்மை ?

இது வரை சுமார ஆயிரம் தமிழர்கள் கொழும்பில் மட்டும் காணாமல் போய் இருக்கிறார்கள்!

ஒரு பல்கலைக்கழக உபவேந்தர் உட்பட, சிறிலங்கா அரசினால் கடத்தப்பட்ட தமிழர்கள் பலர் இருக்கும் இடமே தெரியவில்லை. இவர்களில் பலர் அரச அனுசரனையுடன் கொன்று புதைக்கப்பட்டு விட்டார்கள் ! இவை தான உண்மைகள் !!!

உங்களுக்கு தைரியம் இருந்தால் நாளை இந்த உண்மைகளை கொழும்பு தெருக்களில் கொஞ்சம் உரத்து பேசி பாருங்கள் !

அதன் பின் இந்த களத்தில் வந்து உண்மைகள் பேசுவதாக உளறும் நீங்களும் உண்மையில் காணாமல் போனோர் பட்டியலில்

சேர்ந்து விடுவீர்கள் !

அடுத்த வேளை தன் வயிற்றுக்கு மட்டும் கொஞ்சம் சோறும் இரண்டு எழும்புத்துண்டும் கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு விடுதலையாவது மண்ணாங்கட்டியாவது!!!

அது?????????

எங்கே பார்ப்போம்

இனி கொழும்புத்தெருக்களில் .........

வி.........டு............த.............லை

விடுதலை

வி.........டு............த.............லை

விடுதலை

பெயரைமட்டும் பார்த்தால் கருத்துத் தெரியாது...

கருத்தை மட்டும் பார்த்தால் சொல்லடி தெரியாது!

ஊணக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்,

ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுற்றம்தான்!

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது!

தொல்லை தந்த போதும் எங்கள் கருத்து மாறாது!

வீர பேச்சுகள் முன்னால் எங்கள் மக்கள் உணர்வுகள் தோற்காது,

மோகன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது!

நாட்டில் உண்டு ஆயிரம் வெற்றிவேல்கள் தான்

ராஜனுக்கு ராஜன் இந்த சாணக்கியன் தான்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெயரைமட்டும் பார்த்தால் கருத்துத் தெரியாது...

கருத்தை மட்டும் பார்த்தால் சொல்லடி தெரியாது!

ஊணக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்,

ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுற்றம்தான்!

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது!

தொல்லை தந்த போதும் எங்கள் கருத்து மாறாது!

வீர பேச்சுகள் முன்னால் எங்கள் மக்கள் உணர்வுகள் தோற்காது,

மோகன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது!

நாட்டில் உண்டு ஆயிரம் வெற்றிவேல்கள் தான்

ராஜனுக்கு ராஜன் இந்த சாணக்கியன் தான்!

பத்திரிகைகளின் கேள்விக்கு கருணாநிதி பதில் கொடுத்தமாதிரி உள்ளது... ஒண்ணுமே புரியுதில்லை :(

நாட்டில் உண்டு ஆயிரம் வெற்றிவேல்கள் தான்

ராஜனுக்கு ராஜன் இந்த சாணக்கியன் தான்!

கவிதை?!!!

கவி வதை ஐயா இது! :(

வெற்றிவேலுக்கு எப்போதும் மக்களோடு மக்களாக ஆயிரத்தில் ஒன்றாக இருக்கத்தான் விருப்பம் !

உங்களை போல் ராஜாதி ராஜனாக இருக்க விருப்பம் இல்லை

ஆகவே தான் வெற்றிவேலுக்கு மக்களின் விடுதலை பற்றி சிந்திக்க முடிகிறது

ஆனால் நீங்களோ ராஜாதி ராஜனாக வேண்டும் என்ற பேராசையால்

யார் யாருக்கோ இன்று கூஜா தூக்க நினைக்கிறீர்கள் !

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

:( என்ன சாணாக்கியன் ஏதும் பாடல் எழுதுகின்றீரோ

எனக்கும் ஒரு பாடல் தேவை எழுதி தருவிரோ

:D முனி பாட்டாக இருக்கவேணும்

:D அதிலும் மணி பாட்டாக இருக்க வேணும்

கோவிலுக்குப் போகக் கூடாது என்று சொல்லவில்லை. அரசாங்கத்தைப் பொறுத்தவரை மடுவாகட்டும்.. நல்லூராகட்டும்.. மக்கள் அங்கு பெருந்தொகையில் கூடுவதை வைத்து.. தனது படைகளின் செயற்பாட்டை மக்கள் அங்கீகரித்து நிற்பதாகவும்.. தனது கட்டுப்பாட்டின் கீழ் மக்கள் சுதந்திரமாக உள்ளதாகவும் காட்டப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில்.. மக்கள் இவ்வாறு பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடுவது அவசியம் தானா..???!

இதே அரச படைகளும் அதன் கூலிக்குழுக்களும் தினமும் ஒருவரையாவது யாழ் குடாவில் கொல்கிறது அல்லது கைது செய்கிறது. வன்னியில் பெருமெடுப்பில் போர் செய்கிறது. இந்த நிலைகளில்.. இவ்வாறான ஒன்றுகூடல்களை அரசு தனக்குச் சாதகமான பிரச்சாரங்களுக்காக பாவிக்கத் தவறாது. இதற்கு தெரிந்து கொண்டும் மக்கள் இடமளிக்கத்தான் வேண்டுமா..??!

கோவிலுக்கு செவ்வாயோ.. வெள்ளியோ போய் கும்பிடலாம் தானே. முருகன் வேண்டாம் என்றாரா...! இப்படி பல்லாயிரக்கணக்கில் கூடி வரச் சொன்னாரா..???! தேவையின்றி ஏன் அரசுக்கு பிரச்சாரத்துக்கு உதவி அளிக்கிறீர்கள்.

ஏற்கனவே மடு விவகாரத்தை தனக்குச் சாதமாக்கிக் கொள்ள அரசு கங்கணம் கட்டி நிற்கும் நிலையில்.. இது.

ஒரு தூய்மையான மக்களின் உரிமைகளை மதிக்கின்ற அரசின் பிரச்சாரத்துக்காக... இவ்வாறு கூடின் பறுவாயில்லை. இனப்படுகொலையை திட்டமிட்டு செய்து நில வன்பறிப்பு மூலம் தமிழரின் இருப்பையே கேள்விக்குறியாக்கத் துடிக்கும் ஒரு அரசுக்கு மக்கள் மந்தைகள் போல செயற்பட்டு.. உதவி அளிக்க வேண்டுமா..??! :D:(:D

---------------------

அண்ணை சொல்லுறன் என்று குறை நினைக்காதையுங்கோ !

உங்களுக்கு என்ன தொடாந்தும் எங்கட யாழ்பாணத்துச் சனம் எதிரியால சுடப்பட்டு சாகவேணும் என்ற நினைக்கிறியளோ ???

ஏன் எண்டால் பாருங்கோ 2002- 2005 வரையும் செய்த பொங்கு தமிழ் நிகழ்வில பங்கு பற்றிய ஆட்களையே அவன் இன்னும் விட்டபாட தெரியவில்லை அதுக்குள்ள இங்க இருக்கிற சனம் புரட்சி செய்ய வெளிக்கிட்டால் என்னசெய்வான் என்று தெரியும் என்று நினைகிறேன் அதற்காக செய்ய முடியாது என்று கூறவரவில்லை .

அது மட்டுமில்லை இந்த வருட ஆரம்பத்தில தென்மராட்சி பகுதியில சம்பளம் போதாது என்று ஓரு எதிhப்பு ஏற்பாடு நடந்த பொழுது இராணுவ புலனாய்வுத் துறையினரின் அதனை தடுத்து நிறுத்தியிருந்தனர் அதற்கு அவர்கள் கூறிய காரணம் இவ்வாறு ஏதாவது ஆர்பாட்டங்கள் அல்லது எதிர்ப்பு கூட்டங்கள் அல்லது கண்டனங்கள் நடாத்தப்படுமாயின் அவற்றை தாம் புலிகள் தான் முன்னின்று நடத்துறார்கள் என்ற நிலைக்கு வந்து உங்களை சுடவேண்டி வரும் என வெளிப்படையாகவே அச்சுறுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களால் எந்த விதமான எதரிப்புக் கூட்டங்களோ வேறு ஏததையாவது நடத்த கூடிய சுழ் நிலை அங்கு இல்லை அதனையும் மீறி நடத்தபடுமானால் பயங்கரவாதி என்று பெயர் சுட்டுவதற்கு அவ்வளவு நேரம் தேவையில்லை.

ஆகவே மக்கள் எமது கோயி;லகளிற்கு அல்லது எம்மவர்களின் தேவாலங்களிற்கு சென்று தானே வழிபடுகிறார்கள் ( மதப்பிரசாரம் செய்யவில்லை அதனை வெறுப்பவன் நான் ) புத்த மதத்தின் விகாராகளிற்கு யாழிpல் செல்லவி;ல்லையே !

.

மடுமாதா வருடாந்த திருவிழாக் கூட கைவிடப்பட்டிருக்கிறது. நல்லூரானுக்கு மட்டும்.. இந்தப் போர்ச் சூழலுக்க.. அந்நியரின் அநியாயத்துக்க என்ன வேடிக்கை வேண்டி இருக்குது..! :D:(

அப்பிடி எணடால் அண்ணை 95 ஆண்டிலையும் கோயிலுக்கு பொக விட்டதுகளே அல்லது கனக்க வேணடாம் 2006 இல என்ன நடந்தது.???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியனும் புதியவனும் சொல்வதில் நிச்சயமான உண்மை இருக்கின்றது. ஆனால் சாணக்கியனின் வழமையான புலிகளிற்கு எதிரான கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை. அது வேறு கதை.

யாழ் மக்கள் விடுதலையைப் பற்றி மூச்சு கூட விடமுடியா நிலையில் இருக்கின்றார்கள்.

புலம்பெயர் நாடுகளில் நம்மவர்கள் என்ன வன்னியில் பரிதவிக்கும் உறவுகளை நினைத்து உருகி தங்கள் கேளிக்கைகள் எல்லவற்றையும் துறந்தா விட்டார்கள்? பீச், கிளப், பார்ட்டி, தண்ணி, திரைபடங்கள் என்பதில் எதுவித குறைச்சலும் இல்லை. அப்படி இருக்கும் போது திக்கற்ற மக்கள் காலா காலமாய் செல்லும் நல்லூருக்கும் செல்லக் கூடாது என்பதை சொல்ல நமக்கு ஏதும் அருகதை இல்லை.

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

புதியவன்.. யாழ் குடா நாட்டு மக்கள் ஒன்று திரண்டு பகிஸ்கரித்தால் படையினரால் எதுவும் செய்ய முடியாது. அப்படிக் கொல்ல வேண்டும் என்றால் 3 இலட்சம் பேரையும் கொல்ல வேண்டும். 3 இலட்சம் பேரை ஒரு 40 ஆயிரம் சிங்களவன் மேய்க்கிறான்.. மேய்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை..!

போன காலங்கள் போகட்டும்.. நிகழ் காலத்தில் இதைச் செய்தால்.. நிறைய விடயங்களை வெளி உலகுக்குக் கொணர முடிந்திருக்கும்.. ஆனால்.. முருகனுக்கு அரோகரோ போடுறதோட.. சந்திரசிறிக்கு.. தோப்புக்கரணம் போடுறதைச் செய்வதால்.. மக்களின் துயரங்கள் தீருமா..??! தீர்ந்தால் புண்ணியம் பாருங்கோ..???! :D:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3 லட்சம் மக்களும் தாமாக ஒருங்கிணைவார்களா? அவர்களை அப்படி செய்யத் தூண்ட ஒரு சக்தி அவசியம். யார் அதை செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்

3 லட்சம் மக்களும் தாமாக ஒருங்கிணைவார்களா? அவர்களை அப்படி செய்யத் தூண்ட ஒரு சக்தி அவசியம். யார் அதை செய்வது?

30 வருட போராட்டம் பற்றிய அறிவை இன்னும் யாழ்ப்பாணக் குடா நாட்டில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளவில்லையா..??! ஒவ்வொரு தடவையும் ஒரு குழு வந்து ஆசுவாசப்படுத்த வேண்டுமா..??! மக்களுக்கான போராட்டத்தை மக்கள் தான் முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்க வேண்டும். :(

கவிதை?!!!

கவி வதை ஐயா இது! :(

ஒ... கமலகாசன் பாடினா மட்டும் பராட்டுங்கோ....!

Edited by சாணக்கியன்

ஒ... கமலகாசன் பாடினா மட்டும் பராட்டுங்கோ....!

பின்ன ஆனந்த சங்கரி பாடுவதை கேக்கனுமா? :(:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 வருட போராட்டம் பற்றிய அறிவை இன்னும் யாழ்ப்பாணக் குடா நாட்டில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளவில்லையா..??! ஒவ்வொரு தடவையும் ஒரு குழு வந்து ஆசுவாசப்படுத்த வேண்டுமா..??! மக்களுக்கான போராட்டத்தை மக்கள் தான் முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்க வேண்டும்.

இலட்சிய உலகத்தில் மட்டுந்தான் அப்படிப்பட்ட மக்கள் இருப்பார்கள்.

ஒரு வொல்டேஜ் (மின் அழுத்தம்) இருந்தால்தான் கறண்ட் ஒடும். மக்கள் கரண்ட் போன்றவர்கள்.

கனடாவில் 3 லட்சம் தமிழர் வாழ்கின்றோம். உலகத் தமிழர் அமைப்புக்கு தடை கொண்டுவந்தார்கள். மிக வருத்தமாக இருந்தது. இதற்கு எவ்வழியிலும் எதிர்ப்பு காட்ட வேண்டும் போல இருந்தது. சம்பந்தப் பட்டவர்கள் எதுவித ஆர்பாட்டங்களையும் ஒழுங்கு செய்யவில்லை. தனி மனிதனாக எதையாவது செய்ய எனக்கு திறமையும் அறிவும் சக்தியும் இருக்கவில்லை. ஆனால் பொங்குதமிழில் கலந்து கொண்டேன். என் போலத் தான் பெரும்பாலான மக்கள். வெறும் உணர்வுகள் மட்டும் எதையும் செய்துவிடாது. அந்த உணர்வுகளை சரியான முறையில் ஒருங்கிணைக்க ஒரு சக்தி அவசியம்.

Edited by காட்டாறு

ஒ... கமலகாசன் பாடினா மட்டும் பராட்டுங்கோ....!

கரிகாலன் பாடல் என்றால் நிச்சயம் பாராட்டலாம்

கமலஹாசன் கரிகாலன் பாடல் பாடினாலும் நிச்சயம் பாராட்டலாம்

மற்றும் படி கமலின் பாடல் கேட்க நேரம் இல்லை

ஆனால் கருத்து வரட்சியால் இதற்குள் கமலை கொண்டு வந்து இந்த தலைப்பின் விவாதத்தை திசைதிருப்ப முனைகிறீர்கள்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

இலட்சிய உலகத்தில் மட்டுந்தான் அப்படிப்பட்ட மக்கள் இருப்பார்கள்.

ஒரு வொல்டேஜ் (மின் அழுத்தம்) இருந்தால்தான் கறண்ட் ஒடும். மக்கள் கரண்ட் போன்றவர்கள்.

கனடாவில் 3 லட்சம் தமிழர் வாழ்கின்றோம். உலகத் தமிழர் அமைப்புக்கு தடை கொண்டுவந்தார்கள். மிக வருத்தமாக இருந்தது. இதற்கு எவ்வழியிலும் எதிர்ப்பு காட்ட வேண்டும் போல இருந்தது. சம்பந்தப் பட்டவர்கள் எதுவித ஆர்பாட்டங்களையும் ஒழுங்கு செய்யவில்லை. தனி மனிதனாக எதையாவது செய்ய எனக்கு திறமையும் அறிவும் சக்தியும் இருக்கவில்லை. ஆனால் பொங்குதமிழில் கலந்து கொண்டேன். என் போலத் தான் பெரும்பாலான மக்கள். வெறும் உணர்வுகள் மட்டும் எதையும் செய்துவிடாது. அந்த உணர்வுகளை சரியான முறையில் ஒருங்கிணைக்க ஒரு சக்தி அவசியம்.

மக்களை ஒருங்கிணைக்க ஒரு சக்தி அவசியம் என்பது தென்படின்.. அந்தச் சக்தி மறைமுகமாக உருவாகிச் செயற்படலாம்.. இப்படியான பகிஸ்கரிப்புக்களில்.

வரலாற்றைத் திருப்பிப் போட்டுப் பாருங்கள்.. அல்லது படித்துப் பாருங்கள்.. 1986 காலப்பகுதியில் இராணுவம் முகாம்களுக்குள் போராளிகளால் முடக்கப்பட முதல் எவ்வாறு மக்கள் போராட்டம் தொடர்பாக விழிப்புணர் ஊட்டப்பட்டார்கள். அரசுக்கு மக்களின் எண்ணங்கள் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டன. அப்போதும் இராணுவம் நிலை கொண்டிருக்க தக்கதாகவே பகிஸ்கரிப்புக்கள்.. பணி நிறுத்தங்கள்.. என்று மக்கள் செய்து அரச நடவடிக்கைகளை முடக்கச் செய்ய முற்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் சொல்கின்றனவே. ஏன் அப்படியான ஒரு நிலையை இன்று.. போராட்டம் மிகக் கூர்மை அடைந்துள்ள நிலையில் செய்ய முடியாது எங்கிறீர்கள்..???!

உண்மையில்.. உங்கள் வாதம்.. மக்களை போராட்டத்தின் இன்றும் திசை திருப்ப நினைக்கும் எதிரிக்கு சார்பாக அமையக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

மக்கள் போராட்டம் பற்றி விழிப்புணர்வோடு மட்டுமன்றி.. தாம் விரும்பாத அரசும் அதன் படைகளும் நிர்வாகிக்கும் கட்டமைப்புக்குள் மகிழ்ச்சியாக இல்லை.. என்பதை வெளி உலகுக்குக் காட்ட வேண்டிய நேரத்தில்.. மெளனமாக இருப்பது.. ஒருங்கிணைக்க சக்தி இல்லை என்று சாக்குப்போக்குச் சொல்வது உண்மையில்.. மக்களுக்கு தாமாக போராட்டத்தை முன்னெடுக்க உள்ள வழிகளை மறைப்பதாகவே இருக்கிறது..!

பாரிய மனிதப் புதைகுழிகளை.. தினப் படுகொலைகளை.. இதே படைகளால் கண்ட மக்கள் இன்று அதே படைகளின் பாதுகாப்போடு திருவிழாக் கொண்டாடுகிறார்கள் என்று அரசு பிரச்சாரம் செய்யும் போது.. மனிதப் புதைகுழிகளில் மாண்டவர்.. கனவுகளை.. மாழப் போபவர்களை யார் காப்பது..???!

திருவிழா முடிந்ததும் மீண்டும் கொலைப்படலம் தானே யாழ் குடாவில் தொடரப் போகிறது. அப்போது.. அழுது கண்ணீர் வடித்தால்.. உலகின் கண்ணில் அது தென்படுமா..??! நிச்சயமாக செம்மணி போல அதுவும் அடக்கப்பட்டு விடும்..!

எனவே மக்கள் அரசு பிரச்சாரப்படுத்த முயலும் விடயங்களில் அரசுக்கு எதிராக தாம் இருப்பதாக உலகுக்குக் காட்ட தாமாகவே ஒருங்கிணைந்து முன் வந்து உலகின் பார்வையை கண்காணிப்பை தம்மை நோக்கி திருப்பி வைத்துக் கொள்வதே அவர்களை அரசின் இன அழிப்பில் இருந்து காக்கும். அதைவிடுத்து அற்ப சந்தோசத்துக்காக சந்திரசிரிக்கு தோப்புக்கரணம் போட்டால் அவன் தேவை முடிந்ததும்.. தோப்புக்கரணம் போட்டவனையே புதைகுழிக்குத்தான் அனுப்புவான். அவனின் இருப்பே இன அழிப்புக்குத்தானே தவிர தமிழர்களைப் பாதுகாக்கவல்ல. அதை அவன் உலகின் கண்களுக்கு மறைத்துச் செய்ய விளைவதால்.. அது மெது மெதுவாக மக்களின் உணர்வுக்குள் சிக்காமல் நடந்து கொண்டிருக்கிறது..! இதை எப்போ புரிந்து கொள்ளப் போகிறீர்கள்..??! மக்களை இது தொடர்பில் அறிவூட்டப் போகிறீர்கள். யாழ் குடாவுக்கு மட்டுமல்ல.. திருமலை.. மட்டக்களப்பு.. அம்பாறைக்கும் இது பொருந்தும்..! :D:(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலண்டனில் பொங்குதமிழில் ஒன்றுகூடினவர்களே சும்மா யாழ்க் கதையும், ஊர் கதையும் கதைக்கத் தான் போனதாக எண்ணுகின்றபோது, யாழ்ப்பாண மக்கள், சிங்கள இராணுவத்தின் ஆயுதங்களால் மிரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் எழுந்து கொள் என்று சொல்வது வெறும் விதண்டாவாதமாகும். தவிரவும் இவ்வாறான நிகழ்சசி ஒருங்கிணைப்பார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தான் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி அதிபர் உற்பட்ட பலரைச் சிறிலங்கா இராணுவம் சுட்டுக் கொன்றது.

சுதந்திரமான இடத்தில் வசிப்பவர்கள் முதலில் ஒன்றுகூடுவதை விட்டு, அவர்களுக்கு ஏன் புத்தி சொல்ல வேண்டும். இன்று புலிகள் தடை செய்யப்பட்டதற்கெதிராக புலத்தில் எத்தனைபேர் கிளம்பியிருக்கின்றார்கள். தடைகளில் தாங்கள் மாட்டுப்படக்கூடாது என்பதற்காக வெளியில் சம்பந்தமே இல்லாதவர்கள் போல நடிப்பவர்கள் பலர்.

புலிகள் மீதான உலகமட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட தடைகள் தமீழம் பற்றிய அங்கிகாரம் பெறுவதற்கான ஒரு தடைக்கல்லாகவும், அதைத் தாண்டுவதற்கும் போராட வேண்டி வரும் என்பதைப் புலத் தமிழர்களும் அறிய வேண்டும்

......ஆனால் கருத்து வரட்சியால் இதற்குள் கமலை கொண்டு வந்து இந்த தலைப்பின் விவாதத்தை திசைதிருப்ப முனைகிறீர்கள்

சரி எங்கடை புடுங்குப்பாடுகளை பிறகு பார்ப்பம்.... இங்கை பொன்னையா அண்ணை சில உண்மைகளை புட்டுப்புட்டு வச்சிருக்கிறாரே... அதைப்பற்றி?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1986 காலப்பகுதியில் இராணுவம் முகாம்களுக்குள் போராளிகளால் முடக்கப்பட முதல் எவ்வாறு மக்கள் போராட்டம் தொடர்பாக விழிப்புணர் ஊட்டப்பட்டார்கள்.

இராணுவம் முடக்கப்பட என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

ஆனால் இன்றைய யாழ் நிலை என்ன?

யாழ்ப்பாண மக்கள் நல்லுர் கந்தனுக்கு விழா எடுத்ததால்தான் வன்னியில் கடந்த பத்து நாட்களாக சிறிலங்காப் படையினரால் முன்னேற முடியவில்லை என்பதை மறந்து விடாதீர்கள்!

இத்தனை மக்கள் போய் தேர் இழுத்ததன் பலனை விரைவில் கண்பீர்கள்!

நல்லூர் முருகனுக்கு அரோகரா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.