Jump to content

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போன்டா


Recommended Posts

bonda.jpg

போன்டா என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிற்றுண்டி. இந்த வசனத்தை எப்படி இத்தனை உறுதியாக சொல்கின்றேன் என கேட்பவர்களுக்காக:

1. சின்ன வயதில் பள்ளியில் போன்டா சாப்பிடாதவர்கள் உண்டோ (குறிப்பாக ஆண்கள்). அதிலும் வகுப்பு வேளையில் போய் வாங்க, அதை ஒரு ஆசிரியர் பார்க்க. அப்புறம் என்ன, கன்னத்துக்கு வெளியிலும் போன்டா, உள்ளும் போன்டா.

2. ஏன் சொல்கின்றார்கள் என்றே புரியவில்லை. ஆனால் வலைப்பூ மக்கள் ஒன்றுகூடலில் இவ்வுணவு பற்றி பேசுகின்றார்களாமே!

3. லக்கிண்ணா கூட போன்டா செய்முறை எழுதியிருக்கின்றார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!! (இதை விட ஒரு காரணம் வேண்டுமா)

4. யம்மு அடிக்கடி துங்காபியில் போன்டாவுடன் காணப்படுவார்.

5. நான் போன்டா செய்முறை எழுதுவது (சோதனை மேல் சோதனை)

தேவையான பொருட்கள்:

கிழங்கு கறிக்கு:

உருளை கிழங்கு - 5

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - 3 கட்டு

இஞ்சி அரைத்தது - 1 தே.க

மஞ்சள் தூள் - 1/2 தே.க

சீரக தூள் - 1/2 தே.க

கடுகு - 1/2 தே.க

தேசிக்காய் புளி- 1 தே.க

உப்பு - தேவையான அளவு

மேல் மாவுக்கு:

கடலை மா - 3/4 கப்

அரிசி மா - 1/4 கப்

மிளகாய் தூள - 1 தே.க

அப்ப சோடா - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

செய்ய வேண்டியவை:

1. உருளை கிழங்கை சுத்தம் செய்து, அவித்து, மசித்து வைத்து கொள்ளவும். அவிக்கும் போது சிறிதளவு மஞ்சள் தூளும், உப்பும் சேர்க்க மறக்க வேண்டாம்.

2. வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக அரிந்தெடுத்து வைத்து கொள்ளவும்.

3. ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, அதில் கடுகை போட்டு வெடிக்க விடவும். (உங்கள் மேல் அல்ல) (யாராச்சும் கோவமா இருந்தா அவங்க மேல கூட போட்டு வெடிக்குதா என பார்க்கலாம்)

4. கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, வெங்காயம் என ஒன்றின் பின் ஒன்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

5. வெங்காயம் வதங்கிய பின்னர் மஞ்சள் தூள் & சீரக தூளை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

6. மசித்து வைத்திருக்கும் உருளை கிழங்கு கலவையை வதக்கியவற்றோடு போட்டு கலக்கி, தேசிக்காய் புளி சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள்.

7. சிறிது சூடு ஆறியதும், உங்களுக்கு விருப்பமான அளவில் உருண்டைகளாக பிடித்து வைக்காவும். உருண்டையாக தான் இருக்க வேண்டும் என சட்டம் இல்லை. அதனால் எந்த வடிவத்திலும் பிடிக்கலாம்.

8. இப்போ ஒரு சட்டியில் எண்ணெயை சூடாக்க விடணும். அதிகம் சூடானால் ஆபத்து உங்களுக்கும், போன்டாவிற்கும். ஆகையால் மெதுவான சூட்டில் வைக்கவும்.

9. எண்ணெய் சூடாகும் நேரத்தில், கலவைக்கு தேவையான அனைத்து பொருட்களையு ஒன்றாக ஒரு சட்டியில் இடவும். நீரை சிறிது சிறிதாக் சேர்த்து இறுக்கமான ஒரு கலவையாக கொண்டுவரவும்.

10. உருட்டி வைத்திருக்கும் கறியை, மா கலவையில் இட்டு பின்னர் எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:

*போன்டாவை மட்டும் பொரிக்கவும். சூடான எண்ணெயை தூர நின்று பார்த்தால் போதும். கைபிடி நீளமான அகப்பையால் பொரிக்கவும்.

* சுட சுட வாயில் போட்டு சுட்டபழம் ஆக வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போன்டா என்று சில பேருக்கு பட்டப்பெயர் இருக்கு என்று கேள்விப்பட்டிருக்கிறன் அப்படியான வரலாற்று சிறப்புமிக்க போன்டா பற்றிய சமையல் குறிப்புக்கள் வழங்கிய தூயாவுக்கு நன்றி :lol: . நல்ல உருண்டைய இருக்கு யாருக்கும் இதால ரெண்டு போட்டால் தக்காளி சோஸ் வருமோ :lol: ?

Link to comment
Share on other sites

நல்ல உருண்டைய இருக்கு யாருக்கும் இதால ரெண்டு போட்டால் தக்காளி சோஸ் வருமோ :lol: ?

நிச்சயம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.......... இது நல்ல ஒரு சிற்றுண்டி தூயா . இதனை போன்டா என்றா ? அல்லது போண்டா என்றா கூறுவார்கள் ?

ஏதோ , இந்த சிற்றுண்டியை கண்டுபிடித்த பெண்மணி , இதற்கு பெயர் வைக்கும் போது வேண்டா வெறுப்பாக ஆண் பெயரையும் வைத்ததோடு , மரியாதைக்குறைவாக டா வும் சொல்லி விட்டார் . :lol:

Link to comment
Share on other sites

ஏதோ , இந்த சிற்றுண்டியை கண்டுபிடித்த பெண்மணி , இதற்கு பெயர் வைக்கும் போது வேண்டா வெறுப்பாக ஆண் பெயரையும் வைத்ததோடு , மரியாதைக்குறைவாக டா வும் சொல்லி விட்டார் . :lol:

என்ன ஒரு கண்டுபிடிப்பு :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பா தமிழ்சிறி இந்த போன்டாவால் எதாவ்து பின் விளைவுகள் உண்டா? :lol::lol::lol:

தூயாவை விடுங்கோ நீங்கள் சொல்லுங்கோ?

Link to comment
Share on other sites

நன்றி தூயா பதிவிற்கு

இது போன்டா அல்ல போண்டா. எனக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி. அதற்கு செய்யும் கிழங்குக் கறியை இறுக்கமில்லாமல் செய்து அதை தோசைக்குள் வைத்தால் மசாலா தோசை. இவற்றை ருசிப்பதற்கென்றே அடிக்கடி நான் TV க்கு செல்வேன். என்ன முழிக்கிறீங்க :lol: TVஎன்றால் அது தாங்க Tamothara Vilas (தாமோதர விலாஸ்). :lol:

அது போல் போளி, பெரிய உழுந்து மசால் வடையை ருசிக்க MCக்கு செல்வேன். MC என்றால் Malayan Cafe (மலாயன் கபே) தானுங்க. :lol::lol:

Link to comment
Share on other sites

எப்பா தமிழ்சிறி இந்த போன்டாவால் எதாவ்து பின் விளைவுகள் உண்டா? :lol::lol::lol:

தூயாவை விடுங்கோ நீங்கள் சொல்லுங்கோ?

எல்லாச் சாப்பாட்டிற்கும் செமிபாடடைந்த பின், பின் விளைவுகள் இடம் பெறுவது வழமை தானே. அதுபோல் இதற்கும் வழமையான பின் விளைவுகள் உண்டுங்கோ.............. :lol::lol:

Link to comment
Share on other sites

நன்றி தூயா பதிவிற்கு

இது போன்டா அல்ல போண்டா. எனக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி. அதற்கு செய்யும் கிழங்குக் கறியை இறுக்கமில்லாமல் செய்து அதை தோசைக்குள் வைத்தால் மசாலா தோசை. இவற்றை ருசிப்பதற்கென்றே அடிக்கடி நான் TV க்கு செல்வேன். என்ன முழிக்கிறீங்க :lol: TVஎன்றால் அது தாங்க Tamothara Vilas (தாமோதர விலாஸ்). :lol:

அது போல் போளி, பெரிய உழுந்து மசால் வடையை ருசிக்க MCக்கு செல்வேன். MC என்றால் Malayan Cafe (மலாயன் கபே) தானுங்க. :lol::lol:

போண்டா என்ற பெயர் வர காரணம் என்ன வசம்பு?

தமிழா?

Link to comment
Share on other sites

போண்டா என்ற பெயர் வர காரணம் என்ன வசம்பு?

தமிழா?

"போண்டா" ஒரு தென்னிந்திய சிற்றுண்டி தான். ஆனால் எப்படி "போண்டா" என்று பெயர் வந்தது என்று எனக்கும் சரியாகத் தெரியாது. யாராவது இது பற்றிய விபரம் தெரிந்தவர்கள் வந்து சொல்வார்கள் என்று நானும் எதிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போண்டாவுடன் எதை தொட்டுக்கொண்டு சாப்பிடுவது?

Link to comment
Share on other sites

இந்த போண்டாவுடன் எதை தொட்டுக்கொண்டு சாப்பிடுவது?

போண்டாவை அப்படியே சாப்பிடலாம். எதையாவது தொட்டுக்கத் தான் வேண்டுமென்றால், பக்கத்தில் இருப்பர் யாரையேனும் தொட்டுக் கொள்ளுங்கள். அதனால் ஏதாவது பிரைச்சினை வந்தால் அடியேன் பொறுப்பல்ல.... :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம பாடசாலைக்கென்று போய்வந்த காலத்தில் வெள்ளிக்கிழமைகளில் கடையில் சாப்பாடு வாங்க பணம் தருவார்கள்.

நான் மிகவும் விரும்பி சாப்பிடுவது

2 போண்டா அல்லது

2 கீரை வடை

இரண்டுமே ஒன்று 10 சதம் தான்.

ஊரிலை போண்டா கீரைவடையெல்லாம் பத்து சதத்துக்கு வாங்கி அமுக்கியிருக்கிறியள் :lol:

அப்புடியெண்டால் இப்ப உங்கடை வயது :lol:

Link to comment
Share on other sites

இந்த போண்டாவுடன் எதை தொட்டுக்கொண்டு சாப்பிடுவது?

வட இந்தியர்கள் சமோசாவுடன் ஒரு சோசை (sauce)(உறைப்பு கூடியது, குறைந்தது என உண்டு) தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்பது எனது அனுபவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போண்டாவுடன் எதை தொட்டுக்கொண்டு சாப்பிடுவது?

போண்டா சாதாரணமாக சுவையான சிற்றுண்டி.

இதில் தொட்டுக்கொள்ள ஏதும் வேண்டுமென்று அடம் பிடித்தால் அது அவர்களின் பழக்கதோசம் :lol:

Link to comment
Share on other sites

இந்த போண்டாவுடன் எதை தொட்டுக்கொண்டு சாப்பிடுவது?

பச்சை சட்னியுடன் சாப்பிடலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நல்லதொரு சமையல் குறிப்பு

நன்றி தூயா.

வகுப்பு வேலையில் - வகுப்பு வேளையில்

லக்கிண்ணா - லக்கியண்ணா

எது சரி தூயா?

Link to comment
Share on other sites

சட்னியுடன் வடை தான் போகும் தூயா. கு.மா அண்ணாவுக்கு சோஸே பிடிக்குதில்லை. ஒவ்வொருவரின் சுவை வித்தியாசமானது தூயா. நன்றி இணைப்புக்கு. முக்கியமாக எழுத்து பிழையில்லாமல் எழுதுபவர்களில் நீங்களும் ஒருவர் தூயா.அத்தோடு புலம் பெயர்ந்து தமிழ் படித்து எழுத்து பிழை விடாமல் எழுத்துவதில் நீங்கள் முதன்மையானவர். அடுத்தவர் இனியவள் என நினைக்கிறேன். யாரையாவது தவற விட்டால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

மீண்டும் நல்லதொரு சமையல் குறிப்பு

நன்றி தூயா.

வகுப்பு வேலையில் - வகுப்பு வேளையில்

லக்கிண்ணா - லக்கியண்ணா

எது சரி தூயா?

எது சரி என சொல்லும் அளவிற்கு எனக்கு தமிழ் தெரியாது.

இது தான் சரியென தெரிந்தவர்கள் சொன்னால், திருத்தி எழுதுவேன்.

லக்கிண்ணாவின் பெயர்....இதற்கு மட்டும் ஒரு சிறு விளக்கம்.

அவரை அப்படி அழைப்பதால், அப்படியே எழுதியுள்ளேன்.

சுட்டிகாட்டியமைகு நன்றிகள். :lol:

சட்னியுடன் வடை தான் போகும் தூயா. கு.மா அண்ணாவுக்கு சோஸே பிடிக்குதில்லை. ஒவ்வொருவரின் சுவை வித்தியாசமானது தூயா.

உண்மை தான்.

சோஸுடனே காலத்தை ஓட்டுபவர்களும் உள்ளனர்.

Link to comment
Share on other sites

பெருமையில்லாத பொண்ணு, தூயா.

பெருமையில்லாத மட்டுமல்லாமல், பெருப்பமில்லாத பெண்ணாகவும் தூயா இருக்க வேண்டுமென்பதே எனது ஆசையும். :D தொடர்ந்து சமையல் குறிப்புகளாய் தந்தாலும், எனது ஆசையையும் கவனத்தில் எடுங்கள். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பா தமிழ்சிறி இந்த போன்டாவால் எதாவ்து பின் விளைவுகள் உண்டா? :D:D:lol:

தூயாவை விடுங்கோ நீங்கள் சொல்லுங்கோ?

முனிவர் பின் விளைவுவுகளையும் , முன் யோசிக்கும் அனுபவப்பட்ட முனிவர் போல் உள்ளது . :D

பின் விளைவுகள் கட்டாயம் வேணுமென்றால் , :lol:

பச்சைமிளகாய் ---------- 13

மிளகாய்தூள் ------------ 13 மேசைக்கரண்டி

போட்டு போண்டா தயாரித்தால் பின் விளைவுகள் உடனே கிடைக்கும் . :lol:

பின் குறிப்பு : இதனை உங்கள் ஆச்சிரமத்தில் உள்ள சிஷ்யர் , சிஷ்யைகளுக்கு கொடுக்க வேண்டாம் .

அப்படி கொடுத்தால் அவர்கள் வேறு ஆச்சிரமத்துக்கு ஓடி விடுவார்கள் . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் பின் விளைவுவுகளையும் , முன் யோசிக்கும் அனுபவப்பட்ட முனிவர் போல் உள்ளது . :lol:

பின் விளைவுகள் கட்டாயம் வேணுமென்றால் , :lol:

பச்சைமிளகாய் ---------- 13

மிளகாய்தூள் ------------ 13 மேசைக்கரண்டி

போட்டு போண்டா தயாரித்தால் பின் விளைவுகள் உடனே கிடைக்கும் . :D

பின் குறிப்பு : இதனை உங்கள் ஆச்சிரமத்தில் உள்ள சிஷ்யர் , சிஷ்யைகளுக்கு கொடுக்க வேண்டாம் .

அப்படி கொடுத்தால் அவர்கள் வேறு ஆச்சிரமத்துக்கு ஓடி விடுவார்கள் . :lol:

நான் ஆச்சிரமத்தில் இருப்பது பிடிக்கவிலையா

நான் வெளியேறினால் உங்களிடம்தான் வருவேன்

எப்படி வசதி :lol::D

Link to comment
Share on other sites

போண்டா முலம் எங்கடை ஊர் குமார் கடையை ஞாபகப் படுத்தியத்திற்கு நன்றிகள் தூயா. முன்னர் யாழில் சில் சாப்பாட்டுக்கடைகள் ஒரு சாப்பாட்டிற்கு பேர் போனதாக அதாவது மசால்வடைக்கு மலாயன் கபே. இறைச்சி றோஸ்கறிக்கு 5 சந்தி பிளவுஸ்.இடியப்பத்திற்கு சுண்ணாகம் ஜயர்கடை. இப்பிடி பல கடைகள் அது போல போண்டாவிற்கு மானிப்பாய் குமார் கடை . நாங்கள் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் குமார் கடைக்கு போனாலே என்ன வேண்டும் என்று கேட்க மாட்டார்கள் போண்டாவும் பிளேன்ரீயும் தானாய் வரும். போண்டாவின் விலை எழுதமாட்டன் பிறகு கு.சா என்ரை வயதை கண்டு பிடிச்சிடுவார் :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இதை உக்ரேன் போர் ஆரம்பித்த காலங்களிலிருந்தே சொல்லிக்கொண்டு வருகின்றேன். அப்போது என் மீது கோபப்பட்டவர்கள் தான் அதிகம். அண்மையில் ஜேர்மனியும் மற்றும் ஒரு சில நாடுகளும் உக்ரேனுக்கான பண உதவியை நிறுத்தியிருந்தனர். இன்னும் ஒரு சில மாதங்கள் பொறுத்திருங்கள். உக்ரேனைப்பற்றிய நல்ல செய்திகள் வரும். 😂
    • கிந்தியன்ர ஆட்டோ எல்லாத்தையும் நிற்பாட்ட காற்று தானாய் சுத்தமாகும். இலையான் மாதிரி எல்லா இடத்திலையும் குவிஞ்சு போய் கிடக்குதாம்.அதின்ர புகைய சுவாசிச்சாலே நோமல் வாழ்கை கணக்கில 20 வருசம் குறையுமாம்.
    • பொழுபோறதுக்காக லெக்சன் கேக்கிற மாதிரி எனக்கு தெரியுது....
    • 1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                     ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                     இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                               இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                     ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                              ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                     இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                         ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                     இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)    இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                       இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                                இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                       ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                                இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                 ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                               இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                        இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                            ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                            ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( தேசிய ஜனநாயக முன்னணி)                     இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி)            இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)                                ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)        ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)                            ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி------- 4 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------10 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 03 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------    தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------    தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------              ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------       தமிழரசுக்கட்சி 42) மன்னர்-----------------------         ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------            தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா-------------------          தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------         தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------    தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை----------     தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை-------------------      தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-------     4 54)தமிழரசு கட்சி----------------------              7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு     2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.