Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துணுக்காயை வளைக்க படையினர் முன்நகர்வாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துணுக்காயை வளைக்க

படையினர் முன்நகர்வாம்!

வன்னியில் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தித் தொடரும் இராணுவத்தினர் நேற்று அதிகாலை துணுக்காயை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளனர் எனப் பாதுகாப்பு அமைச்சுத் தெரிவித்துள்ளது.

இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவினர் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்ப்பிற்கும் மத்தியில் துணுக்காய் நகரைச் சுற்றிவளைக்கத் தொடங்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, நேற்று அதிகாலை வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ஊடாக இராணுவத்தினர் முன்னேறத் தொடங்கினர் எனவும் தெரிவித்தது.

நேற்று நண்பகல் 11.35 மணியளவில் அங்கு மோதலொன்று இடம்பெற்றது. இதன் பின்னர் விடுதலைப் புலிகள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.(

http://www.sudaroli.com/

  • கருத்துக்கள உறவுகள்

இது நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது

மீண்டும் துணுக்காைய பிடிக்கமுயற்சி என்கின்றனர்

யாராவது விளக்கம் தரஏலுமா???

சில நாட்களாக செய்தி பார்க்காததால்;;;;;;;;;;;;

இது நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது

மீண்டும் துணுக்காைய பிடிக்கமுயற்சி என்கின்றனர்

யாராவது விளக்கம் தரஏலுமா???

சில நாட்களாக செய்தி பார்க்காததால்;;;;;;;;;;;;

கொஞ்சம் பொறுங்கோ குகதாசன் இன்னும் ஒரு நாள் தான் கிடக்கு இலண்டனிலிருந்து வன்‍னியன் மற்றும் வேல்சிலிருந்து அரூஷ் என்பவை வருவினம் ஒரு பல‌ விரிவான விளக்கங்களோட.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாங்குளம் - வெள்ளாங்குளம் வீதியில் அமைந்துள்ள துணுக்காய் நகர் விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய இடமாகக் கடந்த 25 வருடங்களாகத் திகழ்ந்து வந்துள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத்தள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

இவ்வாறு பிபிசி தமிழ் எழுதியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ குகதாசன் இன்னும் ஒரு நாள் தான் கிடக்கு இலண்டனிலிருந்து வன்‍னியன் மற்றும் வேல்சிலிருந்து அரூஷ் என்பவை வருவினம் ஒரு பல‌ விரிவான விளக்கங்களோட.........

நீங்கள் எதனடிப்பைடயில் இவ்வாறு எழுதுகின்றீர்கள் என எனக்கு ெதரியவில்ைல

ஆனால் நான் அவர்களின் எழுத்துக்களை எமது நலம் சார்ந்ததாகேவ பார்க்கின்ேறன்

அேத ேநரம்

அவர்களது எழுத்துக்களும் ஒரு இக்கட்டான நிைலக்கு வந்துவிட்டதை உணருகின்ேறன்°°°°°°°°°°°°°°°

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவிலுள்ள துணுக்காய் நகரமும், உயிலங்குளப் பிரதேசமும் இராணுவத்தால் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளன என்று செய்திகள் சொல்லுகின்றன..

Tunnukkai, Uyilankulam captured - SLA

Military sources confirmed that the Army had captured the strategically important Tunnukkai & Uyilankulam area in Mullaithivu district, this morning.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=24105

நாளை ஆகஸ்ட் 23, வடமத்திய, சப்பிரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

கடைசி நேர வாக்கு அறுவடைக்கு இது போன்ற பிரச்சார யுக்திகளை சிங்கள அரசு முன்னெடுக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான்.

நிதானமாக சிந்திப்பவர்களுக்கு குழப்பங்கள் இல்லை <_<

Edited by vettri-vel

எதிரி மாவிலாரில் தொடங்கி துணுக்காய் மட்டும் தமிழ்மண்ணை தொடராக ஆக்கிரமிட்டு அழித்து வருகிறான்...

இன்னும் தொடருவான்... ஏன் எனில் அவனுக்கு தொடர்ந்து பிடிக்கலாம் என்ற ஒரு நம்பிக்கை வந்துவிட்டது...

தற்போதைய அவனது பல்குழல் எவுகணை,விமானத்தாக்குதல், மந்தைக்கூட்டம் போல் ஆயுதப்படை பலம், வெளினாட்டு உதவிகள் என்பன....

அதாவது மிகப்பெரும் பலத்தை தமிழ்மக்களின் இடங்களின் மீது பிரயோகித்து குறுகிய காலத்தில்

மிகப்பெரிய பிரதேசங்களை பிடித்துவிடலாம் என்பது அவன் நம்பிக்கை..

எதிரியின் வேகம் கட்டுப்படுத்த வேண்டின் கடைசி அவனது தாக்குதல் பின்பலமாகவுள்ள பல்குழல்

ஏவுகணைகள் பலம், விமானத்தக்குதல் பலம் என்பன அழிக்கப்படல் வேண்டும்....

கிளி நொச்சி, முல்லைத்தீவு பூ நகரி என்பன அவன் எறிகணை தாக்குதல் எல்லைக்குள் இருப்பது மிக மிக ஆபத்தானது...

மக்கள் மிக செறிவாக உள்ளபகுதி...கிழக்கு மாகணத்தில் எப்படி மக்களைப்பற்றி அக்கறைபடாமல் அழித்து முன்னேறினானோ அதேபாணி இப்போதும்...

அவனுக்கு என்ன சிங்கள மக்கள் இல்லைத்தானே....

தமிழ் மக்கள் பக்கம் தன்னம்பிக்கை, கடந்த கால வெற்றிகளின் அடிப்படையில் ஒரு தலைவரின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை....

தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த நம்பிக்கைதான் வெற்றியை கொடுக்கும்....

இதுதான் நாட்டையும் மீட்கும்....

வாழ்க்கையே தன்னம்ப்பிக்கையில் தான்... அழிவுகள் இழப்புகள் மேலும் வன்மத்தை கொடுக்கும்....

இது எமது வாழ்வா சாவா என்பதை நிச்சயிக்கும் போராட்டம்....?

புலம் பெயர்மக்கள் பலவழிகளிளும் தொடரான ஆதரவு வழஙவேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஆகஸ்ட் 23, வடமத்திய, சப்பிரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

கடைசி நேர வாக்கு அறுவடைக்கு இது போன்ற பிரச்சார யுக்திகளை சிங்கள அரசு முன்னெடுக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான்.

நிதானமாக சிந்திப்பவர்களுக்கு குழப்பங்கள் இல்லை <_<

உண்மை.

கடந்த சில மாதங்களாக வார இறுதிப் பத்திரிகைகளூடு சிங்கள மக்களுக்கு வெற்றிகரமான போர்ச் செய்தியை வழங்கி விடுமுறையைக் குதூகலிக்கச் செய்வதில் மகிந்த அரசு மிகவும் கரிசணை காட்டி வருகிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் மணலாறு முல்லைத்தீவு கிளிநொச்சி என்று ஒவ்வொரு கள முனையில் இருந்தும் வெற்றிச் செய்திகள் இராணுவத்தால் தரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உதாரணத்துக்கு இதே துணுக்காய் சந்தியை கடந்த ஆகஸ்ட் 9ம் திகதி கைப்பற்றி அங்கிருந்து 6.5 கிலோமீற்றர்கள் வடக்கே நகர்ந்து விட்டதாக இராணுவம் அறிவித்திருந்தது.

அதன் பின்னர் அங்கிருந்தும் வெள்ளாங்குளத்தில் இருந்தும் முன்னேறி முழங்காவிலைப் பிடித்ததாகவும் சொல்லிக் கொண்டது.

ஆனால் அன்று கைப்பற்றிய துணுக்காய் சந்தியை.. இன்று துணுக்காய் நகராக்கி.. அன்று கைப்பற்றிய உயிலங்குளம் என்ற சிற்றூரை இன்று ஒரு பெரும் தளமாக்கி.. அரசு ஊடகங்களூடு வெற்றிப் பிரச்சாரம் செய்து வருகிறது.

ஆனால் கள நிலவரம் உண்மையில் கடந்த இரண்டு வாரங்களாக முல்லைக் கிழக்கு, கிளிநொச்சி முனைகளில் மந்தமான போக்கையே அரசுக்கு காட்டுகிறது என்பது உண்மை.

அதனால் தான் பழைய முன்னகர்வுகளால் கிடைத்த பயனை.. தேர்தல் முதலீடாக்க மகிந்த அரசு.. இவ்வாறான பிரச்சாரங்களைச் செய்கிறது..!

ஆதாரங்கள்:

http://www.yarl.com/forum3/index.php?showt...=42835&st=0

Troops marching Northwards passing Tunukkai junction from the West met with stiff resistance from the terro**sts in the Tenniyankulama area , located 6.5 Km Northeast of Tunukkai . Pitched battles erupted from morning till evening as troops started to dominate the road running from Tunukkai to Nachchikudha . Troops claimed 17 terro**sts were killed during these clashes. Also, 3 soldiers died and 8 others suffered injuries due to LTTE mortar fire and booby traps.

சிறீலங்கா பாதுகாப்பமைச்சக இணையத்தளம்.

இச்செய்தி பதிவு செய்யப்பட்ட நாள் நேரம்:

Last modified on: 8/9/2008 4:27:26 PM

** - தணிக்கைக்குரிய பதம்.

Edited by nedukkalapoovan

புலம்பெயர் நாடுகள் எங்கு தமிழர்கள் முதலீடு செய்துள்ள கோட்டைகளில் அதற்கான பரிகாரங்களை தேட வேண்டும். சுழற்சி முறையில் விசேட அபிசேக ஆராதனைகள் நொன் ஸ்ரப்பாக செய்ய வேண்டும் நிலமை மேலும் மோசமடையாது தடுப்பதற்கு. இன்று வெள்ளிக்கிழமை எனவே இன்றே ஆரம்பிப்போம் தாமதிக்காது.

"சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையதளம்"

இச்செய்தி பதிவு செய்யப்பட்ட நாள் நேரம்:

Last modified on: 8/9/2008 4:27:26 PM

** - தணிக்கைக்குரிய பதம்.

தமிழர் விரோத பொய்பரப்புரைகளை செய்து வரும் சிங்கள பேரினவாதத்தின் பிரச்சார பீரங்கியான சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்துக்கு யாழ் களத்திலிருந்து நேரடி இணைப்பு கொடுப்பது சிங்களத்தின் பரப்புரைகளுக்கு எம்மை அறியாமலேயே துணை போவதாகும் நெடுக்ஸ்!

தயவுசெய்து அந்த இணைப்பை நீக்கி விடுங்கள்!

Edited by vettri-vel

உந்தக் குறுக்காலபோவானின்ர கதையக் கேட்டு எம்பெருமானுக்கு ஒரு அருச்சனை செய்வம் எண்டா ஒவ்வொரு அருச்சனைக்கும் ஒவ்வொரு "றேற்" சொல்லுறாங்கள். எந்த அருச்சனை செய்தா நாட்டில பிரச்சனை தீரும் எண்டு தெளிவா விளக்கமாச் சொன்னா மெத்தப் பெரிய உபகாரமாயிருக்கும்.

அதோட இப்ப இருக்கிற தேர் கொஞ்சம் சின்னதா இருக்கெண்டு பெரிசா ஒரு தேர் இறக்கப் போகினமாம். அதுக்கு வேற "சைற்றால" காசு கேக்கினம். அதுக்கும் ஒரு பெரிய தொகை கொடுத்தா என்ர பேரெல்லாம் தேரில பொறிப்பினமாம்.

வன்னியில சனம் பட்டினியாக் கிடந்தா என்ன? கிழக்கில சனம் அவலப்பட்டா எனக்கென்ன? போற வழியில புண்ணியம் தேட உந்தக் கோயிலுகளுக்குச் செய்யம இருக்கேலுமோ?

புலம்பெயர் நாடுகள் எங்கு தமிழர்கள் முதலீடு செய்துள்ள கோட்டைகளில் அதற்கான பரிகாரங்களை தேட வேண்டும். சுழற்சி முறையில் விசேட அபிசேக ஆராதனைகள் நொன் ஸ்ரப்பாக செய்ய வேண்டும் நிலமை மேலும் மோசமடையாது தடுப்பதற்கு. இன்று வெள்ளிக்கிழமை எனவே இன்றே ஆரம்பிப்போம் தாமதிக்காது.

Edited by Aalavanthan

ஆளவந்தான். கூட்டுப் பிரார்த்தனை மாதிரி எல்லா இடமும் ஒரே அடியா செய்ய வேணும். அதுகள் ஒழுங்கு படத்த கடினம் எண்டா சுழற்ச்சி முறையில நொன் ஸ்ரப்பா செய்யலாம்.

துணுக்காயை காப்பாற்ற ஒரு தேர் மல்லாவியை காப்பாற்ற ஒரு தேர் எண்டு நேர்த்திகடன் வைக்கிறது நல்லம் எண்டு நினைக்கிறன்.

புலம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த விடையங்களுக்கு அடுத்தாக அதிக அளவில் பொது நோக்கில் முதலீடு செய்திருப்பது இவற்றில் தான். அப்போ தீர்வும் அதற்குள் தான் இருக்க வேண்டும்.

இந்தளவிற்கு அவற்றில் முதலீட்டை செய்து போட்டு வேறு எங்கையே தீர்வத் தேடிப் பயனில்லை. நாங்கள் கட்டின கோட்டைகள் இப்ப காப்பாற்றாட்டி எப்ப காப்பாற்றப் போகுது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓட்டங்குலத்துக்கு வந்த உடனேயே துணுக்காய் துணுக்காய் எண்டுதான் எல்லாரும் எழுதினவை..அதிபோல பாலிநகர் வந்த உடனேயே மல்லாவிக்கு வந்திடீண்டு எழுதினவை. வன்னியை பற்றி சரியான விளக்கம் இல்லாத ஆக்கள் அதுகளை விளங்கி கொள்ளுகிறது கஷ்டம். துணுக்காய்க்கு மேற்கால் கல்விலானும்..தெற்க்கால் ஓட்டங்குலமும் உள்ளது. இவ்வளவு நாளும் பாலியத்தை அண்டியே அவனை வரவிடாமல் தடுத்தவை...அதனால்தான்..அவன் கல்விலனுக்கல வந்து துணுக்காய் பிடிச்சு இருக்கிறான்...

'மல்டி பரல்' அடிக்கு உள்ள நின்டவைக்குதன் தெரியும் மல்ரிபரல் அருய்மை. அதோட இப்ப ஆட்டி'யை யும் கூடவே கொண்டுவந்து சாத்துறான்..அதுக்க நிண்டு சண்டை பிடிகிறேண்டுறது நடக்காத காரியம்.

பின்னுக்க பூந்து சூட்ட்டு ஆதரவுகளை நிப்படினாததன் கொஞ்சமாவது அடிபடலாம்..

இனி என்ன நடக்க போகுதெண்டு ஆண்டவனுக்கும், அண்ணைக்கு மட்டுந்தான் தெரியுய்ம்.. அதை விட்டுட்டு சும்மா கற்பனை , கவிதை பாடுறதெல்லாம் சரிவராது..

கிளிநொச்சி நகரிலிருந்து தென்மேற்காக 12 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் அக்கராயன்குளத்தின் தென்மூலைவரை படையினர் சென்றுள்ளதாக சிறிலங்கா படையினரின் இணைத்தளத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

//The weapons procured were 122mm Rockets for the Army's RM-70 (RaketoMet 1970) Multi-Barrel Rocket Launchers bought at $180 a piece. They are military surplus and are not missiles in the sense that they are unguided rockets.

The Sri Lanka Army has purchased 10,000 rockets from a surplus of such weapons at a very reasonable price//

1.8 mil USD

வாங்கின பத்தாயிரம் செல்களையும் அடிச்சு முடிக்க வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி நகரிலிருந்து தென்மேற்காக 12 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் அக்கராயன்குளத்தின் தென்மூலைவரை படையினர் சென்றுள்ளதாக சிறிலங்கா படையினரின் இணைத்தளத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

சரத் பொன்சேகா உடனடியாக வன்னி விரைந்து சென்றிருக்கிறார். படையினரின் எதிர்பாராத முன்னேற்றத்தை உற்சாகப்படுத்தும் அதேவேளை எதிர்தரப்பினை கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய சூழல் பற்றியும் அறிவுறுத்தச் சென்றுள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது..!

Hot on the heels of capture of Tunukkai, Uyilankulam and the southern edge of Akkarayankulam tank, Commander of the Army Lieutenant General Sarath Fonseka flew to Wanni Security Forces Headquarters Friday (22) morning with a view to receiving an update on the ground realities.

Lieutenant General Fonseka, highly impressed by invaluable ground achievements, gained by his troops in the Wanni theater of humanitarian operations, commended General Officer Commanders in Divisions and all soldiers on their selfless commitment and contribution to the Nation at this critical juncture of our history.

"I am very happy with the progress so far made in all Wanni fronts. We are now quite close to Kilinochchi. Though our future targets would be more challenging, I am sure we would be able to face them. Try to maintain the highest degree of morale among soldiers by speaking to all of them. Let us reach our targets with determination in the near future," Lieutenant General Fonseka told the gathering of Divisional and Brigade Commanders who briefed him on current developments in respective areas.

சிறீலங்கா பாதுகாப்பமைச்சின் இணையத்தளச் செய்தி.

Edited by nedukkalapoovan

எதிரி மாவிலாரில் தொடங்கி துணுக்காய் மட்டும் தமிழ்மண்ணை தொடராக ஆக்கிரமிட்டு அழித்து வருகிறான்...

இன்னும் தொடருவான்... ஏன் எனில் அவனுக்கு தொடர்ந்து பிடிக்கலாம் என்ற ஒரு நம்பிக்கை வந்துவிட்டது...

தற்போதைய அவனது பல்குழல் எவுகணை,விமானத்தாக்குதல், மந்தைக்கூட்டம் போல் ஆயுதப்படை பலம், வெளினாட்டு உதவிகள் என்பன....

அதாவது மிகப்பெரும் பலத்தை தமிழ்மக்களின் இடங்களின் மீது பிரயோகித்து குறுகிய காலத்தில்

மிகப்பெரிய பிரதேசங்களை பிடித்துவிடலாம் என்பது அவன் நம்பிக்கை..

எதிரியின் வேகம் கட்டுப்படுத்த வேண்டின் கடைசி அவனது தாக்குதல் பின்பலமாகவுள்ள பல்குழல்

ஏவுகணைகள் பலம், விமானத்தக்குதல் பலம் என்பன அழிக்கப்படல் வேண்டும்....

கிளி நொச்சி, முல்லைத்தீவு பூ நகரி என்பன அவன் எறிகணை தாக்குதல் எல்லைக்குள் இருப்பது மிக மிக ஆபத்தானது...

மக்கள் மிக செறிவாக உள்ளபகுதி...கிழக்கு மாகணத்தில் எப்படி மக்களைப்பற்றி அக்கறைபடாமல் அழித்து முன்னேறினானோ அதேபாணி இப்போதும்...

அவனுக்கு என்ன சிங்கள மக்கள் இல்லைத்தானே....

தமிழ் மக்கள் பக்கம் தன்னம்பிக்கை, கடந்த கால வெற்றிகளின் அடிப்படையில் ஒரு தலைவரின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை....

தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த நம்பிக்கைதான் வெற்றியை கொடுக்கும்....

இதுதான் நாட்டையும் மீட்கும்....

வாழ்க்கையே தன்னம்ப்பிக்கையில் தான்... அழிவுகள் இழப்புகள் மேலும் வன்மத்தை கொடுக்கும்....

இது எமது வாழ்வா சாவா என்பதை நிச்சயிக்கும் போராட்டம்....?

புலம் பெயர்மக்கள் பலவழிகளிளும் தொடரான ஆதரவு வழஙவேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

துணுக்காய், உயிலங்குளம், அக்கராயன்குளம் ஆகியவற்றைக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள துணுக்காய், அதனை அண்டிய உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் பிரதேசத்தின் தென்பகுதி ஆகியவற்றை இராணுவத்தினர் வெள்ளியன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவ தலைமையகத்தின் முக்கிய இராணுவ அதிகாரிகளுடன் வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய ஆயுதப்படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். முக்கிய களமுனை இராணுவ தளபதிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

வட இலங்கை மோதல் நிலவரம் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

பிபிசி/தமிழ்

Edited by nedukkalapoovan

துணுக்காய் உயிலங்குளம் பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது .

துணுக்காய்ப் பிரதேசத்தையும் உயிலங்குளம் பகுதியையும் இன்று படையினர் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கடந்த ஒரு மாத காலமாக இப்பிரதேசத்தில் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த இராணுவத்தின் 57 ஆவது படையணியினர் புலிகளின் கடும் தாக்குதல்களை முறியடித்து இப்பிரதேசத்தை இன்று கைப்பற்றியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

துணுக்காய் பிரதேசம் ஏ 9 வீதிக்கும் மேற்குக் கரையோரமாகச் செல்லும் ஏ 32 வீதிக்கும் மத்தியில் அமைந்துள்ள முக்கிய நகராகும்.

துணுக்காயிலிருந்து கிளிநொச்சி நகருக்கு இன்னும் 12 கிலோ மீற்றர் தூரம் மட்டுமே இருப்பதாகவும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பாக விடுதலைப்புலிகள் எதுவித கருத்தையும் தெரிவிக்கவில்லை

http://www.tamilwin.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.