Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிராண்ட்பாஸ் டி மெல் மாவத்தை ஸ்ரீ முத்துமாரியம் தேவஸ்தானத்தில் பிக்கு ஒருவரால் தெய்வ உருவச்சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இந்துக்களாய் பிறந்தால் நாயிலும் விட கேவலமப்பா .

  • Replies 75
  • Views 6.9k
  • Created
  • Last Reply

கடவுளர்ளையும் மதங்களையும் மனிதனே உருவாக்கினான்.இவற்றிற்காக மதம் கொண்டு அலைவதில் எந்தப் பயனும் இல்லை.தன்னையே பாதுகாக்க முடியாத ஒரு கற்சிலை எங்கனம் எல்லாம் வல்ல கடவுளாக இருக்க முடியும் என்பதே அறிவார்ந்து சிந்த்திப்பவர்கள் தமக்குள் எழுப்ப வேண்டிய கேள்வி.

பவுத்த மத வெறி மட்டும் அல்ல இந்து கிரித்துவ இசுலாமிய மத வெறிகளும் உலகில் மனிதரைக் கொல்கின்றன.

மனிதரைக் கொல்கின்ற இந்த மதங்களும் தம்மையே பாதுகாக்க முடியாத இந்த மதங்கலின் கடவுளர்களும் மனிதருக்கு அவசியமானவையா? :lol:

பகுத்தறிவும் நடைமுறையும் எல்லா நெரங்களிலும் ஒத்துப்போவதில்லை. பகுத்தறிவு சொல்வது போல,

1. மதங்கள் - வெறும் மாயைகள்.

2. பாசைகள் - வெறும் சப்தங்கள்.

3. கலாசாரங்கள் - வெற்று நடைமுறைகள்.

4. நாட்டு எல்லைகள் - செயற்கைக்கோடுகள்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். சரி... இவ்வளவு பகுத்தறிவு விசயத்தையும் நமது context இல் நடைமுறைப்படுத்தி பார்ப்போமா ?

மேற் சொன்ன 4 விடயங்களும் பகுத்தறிவின் பிரகாரம் வெறுமையானவையே. எனவே நாம் சிங்களவரின் மதம்,பாசை,கலாசாரம், நாடு என்பவற்றை ஏற்றுக்கொண்டு விட்டால் இவ்வளவு பிரச்சனைகளும் தேவையில்லையே ? ஏன் இந்த ஈழப்போரட்டம் ?

பகுத்தறிவின் பிரகாரம் ஈழப்போராட்டம் அவசியமற்றது :D

Edited by esan

பகுத்தறிவும் நடைமுறையும் எல்லா நெரங்களிலும் ஒத்துப்போவதில்லை. பகுத்தறிவு சொல்வது போல,

1. மதங்கள் - வெறும் மாயைகள்.

2. பாசைகள் - வெறும் சப்தங்கள்.

3. கலாசாரங்கள் - வெற்று நடைமுறைகள்.

4. நாட்டு எல்லைகள் - செயற்கைக்கோடுகள்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். சரி... இவ்வளவு பகுத்தறிவு விசயத்தையும் நமது context இல் நடைமுறைப்படுத்தி பார்ப்போமா ?

மேற் சொன்ன 4 விடயங்களும் பகுத்தறிவின் பிரகாரம் வெறுமையானவையே. எனவே நாம் சிங்களவரின் மதம்,பாசை,கலாசாரம், நாடு என்பவற்றை ஏற்றுக்கொண்டு விட்டால் இவ்வளவு பிரச்சனைகளும் தேவையில்லையே ? ஏன் இந்த ஈழப்போரட்டம் ?

பகுத்தறிவின் பிரகாரம் ஈழப்போராட்டம் அவசியமற்றது :)

ஈசன் நீங்களாகவே இது தான் பகுத்தறிவு என்று சொல்லி விட்டு மதத்திற்கும் ஈழப் போராட்டத்திற்கும் இணைப்பை உண்டு பண்ணுவது வேடிக்கையான விசயம்.

எந்தப் பகுதறிவாளனும் மனிதன் உருவாக்கிய மதத்தின் அடிப்படையில் இன்னொருவனைக் கொல்ல மாட்டான்.ஆனால் மதவெறியில் மனிதரைக் கொல்லும் சிங்களப்பவுத்தம் ஆகட்டும் இந்துத்வா வெறியனாகட்டும் அவற்றிற்க்கு எதிராகப் போராடுவான்.அதனால் தான் பகுத்தறிவாளர்கள் சிங்களப் பவுத்த பேரினவாத பயங்கரவாதத்திற்கு எதிரான ஈழப்போராட்டத்தையும் மற்ற மதங்களுக்கு மதவழிபாட்டு உரிமைக்கும் எதிரகா இருக்கும் இந்துதுவாப் பயங்கரவத்திற்க்கும் எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தருவான், நடைமுறையிலும் அது தான் நடக்கிறது அது ஈழமாகட்டும் தமிழ் நாடு ஆகட்டும்.பகுதறிவாளருக்கு மதங்கள் அல்ல மனிதர்களே முக்கியமானவர்கள்.

சிங்கள பவுதமதப் பேரினவாத்திற்க்கு எதிராகக் குரல் தரும் நீங்கள் இந்து மதவெறியர்களின் பயங்கரவாததிற்க்கு எதிராக் குரல் கொடுப்ப்பீர்களா? :lol:

Edited by narathar

இஞ்ச சில மேதாவிகள் சொல்லுறவை பாருங்கோ எங்கட பொடியள் சொறியிற படியால தான் அவங்கள் அப்படிச் செய்யுறவங்கள் எண்டு சிங்களவனுக்கு வக்காலத்து வாங்கிறவை ஆனால் பாருங்கொ இஞ்ச என்ன பிக்குவின்ர முதுகில எறும்பு கடிக்குது எண்டே எங்கட பொடியள் பிக்குவின்ர முதகில சொறிஞ்சவையள் ,,,,,, பன்னாடையளுக்கு விளண்டினால் சரி !

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவும் நடைமுறையும் எல்லா நெரங்களிலும் ஒத்துப்போவதில்லை. பகுத்தறிவு சொல்வது போல,

1. மதங்கள் - வெறும் மாயைகள்.

2. பாசைகள் - வெறும் சப்தங்கள்.

3. கலாசாரங்கள் - வெற்று நடைமுறைகள்.

4. நாட்டு எல்லைகள் - செயற்கைக்கோடுகள்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். சரி... இவ்வளவு பகுத்தறிவு விசயத்தையும் நமது context இல் நடைமுறைப்படுத்தி பார்ப்போமா ?

மேற் சொன்ன 4 விடயங்களும் பகுத்தறிவின் பிரகாரம் வெறுமையானவையே. எனவே நாம் சிங்களவரின் மதம்,பாசை,கலாசாரம், நாடு என்பவற்றை ஏற்றுக்கொண்டு விட்டால் இவ்வளவு பிரச்சனைகளும் தேவையில்லையே ? ஏன் இந்த ஈழப்போரட்டம் ?

பகுத்தறிவின் பிரகாரம் ஈழப்போராட்டம் அவசியமற்றது :)

ஈசன் பகுத்தறிவு என்ற ஒன்றே அடிப்படையில் இல்லை. அதைக் கூட மனிதன் தான் தனக்குத்தானே பகுத்தறிவு என்று வகைப்படுத்திக் கொண்டான். உண்மையில் மூளையின் தொழிபாடுதான் பகுத்து ஆயும் அறிவுதிறனாக இருக்கிறது.

இந்த உலகம் பல மதங்களைத் தழுவும் மக்களைக் கொண்டது. அதிலும் தமிழ் மக்கள் அநேகர் இந்துக்களாகவும் கிறீஸ்தவர்களாகவுமே இருக்கின்றனர்.

ஆனால் நாத்திகவாத வெறியர்கள் (தமக்குத் தாமே வகுத்துக் கொண்ட பகுத்தறிவின் முன் மதங்கள் இல்லை என்றால் ஏன் இவர்கள் மதம் சார்ந்த விடயங்களுக்குள் மூக்கை நுழைக்க வேண்டும். இல்லை என்று கருதுவதற்குள் இல்லாமல் இருப்பதே இவர்களின் கடமையாக இருக்க வேண்டும்.) சிங்கள பெளத்த பேரினவாததுக்கு நிகராக இந்து மத வெறி ஈழத்தில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை இங்கு காட்ட விளைகின்றனர்.

ஆக இவர்கள் பார்வையில்.. புத்த பிக்குவும்.. அவன் தலைமையில் சிங்கள பெளத்த பேரினவாதப் படையினரும் தமிழ் மக்களை கொல்வது என்பது இந்துக்களாக.. கிறீஸ்தவர்களாக உள்ள மத வெறியர்களை அழிப்பது என்பதுதாகத்தான் தெரிகிறது.

ஆக இவர்களின் பார்வையில் மதம் என்பதுதான் முன்னிற்கிறது மனிதம் அல்ல. மதத்தை வைத்து மனிதனை அடையாளப்படுத்திக் கொண்டு இவர்கள் செய்யும் அணுகுமுறை எந்த வகையில் மனிதாபிமானத்தின் பால் அமைந்தது. அல்லது அவர்களே சொல்லிக் கொள்ளும் பகுத்தறிவின் பால் விளைந்தது என்பதுதான் விநோதமாக இருக்கிறது.

யதார்த்த உலகில் வாழாதவர்களுக்கு சாதாரண மக்களின் உணர்வுகளை.. தேவைகளை உணர்ந்து அவர்களின் போராட்டம் பற்றிய பார்வையை செய்ய முடியாது என்பதற்கு இந்த நாத்திகவாதிகள் நல்ல உதாரணம்..!

சிலர்.. கோவில்கள்.. தேவாலயங்கள்.. மசூதிகள் சிலவற்றின் செயற்பாட்டின் அடிப்படையில்.. நாத்திகவாதிகளின் பின்னால் இழுபட்டு பொழுது கழிக்கின்றனர். ஆனால் மக்களில் அநேகரின் உணர்வுகள் சங்கமித்திருக்கும் மத நெறி சார்ந்த விடயங்களை எதிரி தனக்கு உகந்த வகையில் பயன்படுத்திக் கொண்டு உலகில் தனக்கான நற்பெயரை சம்பாதித்துக் கொள்கிறான். நாம் நாத்திக வெறித்தனத்தால் அறிவிழந்து மத வெறியை வெட்டி வீழ்த்த முனைந்து கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ள தீவிரமாக இருப்பதால்... இருக்கின்றதையும் இழந்து கொண்டிருக்கிறோம்..!

இதைத்தான் சொல்வார்கள்.. தக்கன பிழைக்கும் அல்லன மடியும் என்று. பெளத்த பேரினவாதம் எமக்குள்ளேயே எவ்வளவு பிரிவுகளை உருவாக்கி எம்மை நாமே ஒருவருக்கு ஒருவர் ஆடையை உரிந்துவிடும் நிலையை உருவாக்கி எம்மைப் பற்றி எம்மைக் கொண்டே வெளி உலகுக்கு காட்டி வருகிறது.

அதை உணராமல்.. இன்னும் நாம் நாத்திகம் பேசி.. மொத்தத் தமிழ் மக்களையும் நாத்திகர்களாகக் காட்டி.. உலக மக்களினின்றும் தனிமைப்படுத்தி.. பேரவலத்துக்குள் தள்ளுவதையே.. பகுத்தறிவு.. நாத்திகம் என்ற போர்வையில் செய்து கொண்டிருக்கிறோம். இதையே சிங்கள பெளத்த பேரினவாதமும் செய்ய விரும்புகிறது. அதற்கு எம்மாலான உதவிகளை இங்கு செய்து கொண்டிருக்கிறோம். அதற்கு இட்டுள்ள நாமம்.. நாத்திகவாதிகளின் பகுத்தறிவு..! :D:lol::)

Edited by nedukkalapoovan

கொழும்பில் கோவில்களை உடைக்கும் பவுத்த பேரினவதாம் ஏன் நல்லூரில் திருவிழாச் செய்கிறது?

தமிழர் என்னும் தேசிய இன அடையாளத்தை விட இந்து மதம் என்னும் மதவெறியை ஊட்டி அதன் மூலம் தன்னை யாழ்க் குடா நாட்டில் நிலை நிறுத்திக் கொள்ளலாம் என்னும் நோக்கிலையே உளவியல் ரீதியான தனது பரப்புரைக்கு அமைவாக சிங்கள பவுத்த பேரினவாத அரசு செயற்படுகிறது.இதற்க்கு அது பயன் படுத்துவது தமிழ் ஈழ மக்களின் ஒரு பகுதியினரின் இந்து மத வெறியை.இதை யாழ்க் களத்தில் கூடப் பாக்கலாம் வன்னியில் அல்லற்படும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை விட புலத்தில் சொதுக்களை வாங்கிக் குவிக்கும் கோவில்களின் செயற்பாடுகளை நியாயப்படுதும் அளவுக்கு சிலரை இந்து மத வெறி பீடித்துள்ளது.

ஆகவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைக்க வல்ல கூறுபோட வல்ல இந்து மத வெறியை எதிர்க்க வேண்டியது எல்லா மனிதாபிமானிகளினதும் தேசிய இனச் செயற்பாட்டளர்களதும் கடமையாக இருக்கிறது அவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்களாக இருக்கலாம் அல்லது கடவுள் மறுப்பளார்களாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் தீவிர மத நம்பிக்கை என்பது வெறியல்ல. அப்படி அதை வெறியென்றால்.. சிங்களவன் தமிழர்களைப் பார்த்து போர் வெறியர்கள் என்பதும் நியாயமானதே என்று நாத்திகவாதிகள் தங்கள் கொள்கை முன்னெடுப்பாக்க இட்டுக் கொள்ளும் சமன்பாடு காட்டிவிடும்.

மத நம்பிக்கை தவறல்ல. ஆனால் மதங்களுக்கு எதிரான வன்முறையை தூண்டுதல்.. தவறானது. அந்த வகையில் சிங்கள பெளத்த பேரினவாதம் மதங்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி விடுகிறது. அதுவே கண்டிக்கப்படுகிறது. இதே பிக்குகள் பல கிறீஸ்தவ தேவாலயங்கள் மீதும் கடந்த காலத்தில் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர் என்பதும் இறுதியில் அமெரிக்காவில் இருந்து ஒரு கண்டன அறிக்கை வந்ததும்.. அது தற்போதைக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும் தெரிந்ததே.

ஆனால் தமிழ் மக்களிற்கு அறிக்கை விட்டு பாதுகாக்க உலகில் எவரும் இல்லை என்ற நிலையையே நாத்திகவாதமும் சேர்ந்து ஊக்கிவிக்கிறது.

ஒரு பக்கம் மக்களை அரவணைக்க அவர்களின் மத நிகழ்வுகளில் கொஞ்சிக் குலாவும் படையினரே இன்னொரு பக்கம்.. சுட்டுச் சுட்டு கடலில் வீசுகின்றனர். மக்கள் தான் இந்தப் படையினரின் நயவஞ்சகத்தை புரிந்து கொண்டு தமது செயற்பாடுகளை அவர்களின் உண்மை முகத்தை வெளி உலகுக்குக் வகுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான பிரச்சாரங்களுக்கு இப்போ தேவை இருப்பதால் தான் அரச படைகளும் இவ்வாறு கொஞ்சிக் குலாவ வேண்டி இருக்கிறது. அதற்கு இடமளிக்காத வண்ணம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் மக்களை வழிநடத்த வேண்டியவர்களே மெளனமாக இருந்ததன் விளைவு... அரச பிரச்சாரத்தைக் கண்டு புழுங்க வேண்டி இருக்கிறது. இது அவர்களின் தவறன்றி வேறல்ல. இதற்கு இந்து மத வெறி காரணம் என்பது சரியான பார்வையன்று. அப்படி ஒரு வெறி ஈழத்தில் மக்களிடம் கிடையாது. அவர்களிடம் தீவிர மத நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் வெறியானதில்லை..! :lol:

Edited by nedukkalapoovan

மக்களின் தீவிர மத நம்பிக்கை என்பது வெறியல்ல. அப்படி அதை வெறியென்றால்.. சிங்களவன் தமிழர்களைப் பார்த்து போர் வெறியர்கள் என்பதும் நியாயமானதே என்று நாத்திகவாதிகள் தங்கள் கொள்கை முன்னெடுப்பாக்க இட்டுக் கொள்ளும் சமன்பாடு காட்டிவிடும்.

மத நம்பிக்கை தவறல்ல. ஆனால் மதங்களுக்கு எதிரான வன்முறையை தூண்டுதல்.. தவறானது. அந்த வகையில் சிங்கள பெளத்த பேரினவாதம் மதங்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி விடுகிறது. அதுவே கண்டிக்கப்படுகிறது. இதே பிக்குகள் பல கிறீஸ்தவ தேவாலயங்கள் மீதும் கடந்த காலத்தில் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர் என்பதும் இறுதியில் அமெரிக்காவில் இருந்து ஒரு கண்டன அறிக்கை வந்ததும்.. அது தற்போதைக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும் தெரிந்ததே.

ஆனால் தமிழ் மக்களிற்கு அறிக்கை விட்டு பாதுகாக்க உலகில் எவரும் இல்லை என்ற நிலையையே நாத்திகவாதமும் சேர்ந்து ஊக்கிவிக்கிறது.

ஒரு பக்கம் மக்களை அரவணைக்க அவர்களின் மத நிகழ்வுகளில் கொஞ்சிக் குலாவும் படையினரே இன்னொரு பக்கம்.. சுட்டுச் சுட்டு கடலில் வீசுகின்றனர். மக்கள் தான் இந்தப் படையினரின் நயவஞ்சகத்தை புரிந்து கொண்டு தமது செயற்பாடுகளை அவர்களின் உண்மை முகத்தை வெளி உலகுக்குக் காட்ட செயற்பட வேண்டும்.

இவ்வாறான பிரச்சாரங்களுக்கு இப்போ தேவை இருப்பதால் தான் அரச படைகளும் இவ்வாறு கொஞ்சிக் குலாவ வேண்டி இருக்கிறது. அதற்கு இடமளிக்காத வண்ணம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் மக்களை வழிநடத்த வேண்டியவர்களே மெளனமாக இருந்ததன் விளைவு... அரச பிரச்சாரத்தைக் கண்டு புழுங்க வேண்டி இருக்கிறது. இது அவர்களின் தவறன்றி வேறல்ல. இதற்கு இந்து மத வெறி காரணம் என்பது சரியான பார்வையன்று. அப்படி ஒரு வெறி ஈழத்தில் மக்களிடம் கிடையாது. அவர்களிடம் தீவிர மத நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் வெறியானதில்லை..! :lol:

சிங்களப் பவுத்தனின் தீவிர மத நம்பிக்கை தான் அவனின் பேரினவாத வெறி, சிறிலங்கா சிங்கள பவுத்தரின் புனித பூமீ இங்கு தமிழருக்கு இடம் இல்லை என்பது தான் தமிழரை ஒடுக்குவதற்கான அடிப்படைக் காரணம்.சிறிலங்கா சிங்கள பவுத்தனின் தேசம் என்னும், அதே வெறி தான் பிஜேபியின் இந்தியா இந்துக்களின் தேசம் என்னும் இந்துத்துவா வெறி.இதே இந்துத்வா வெறியை நியாயப்படுத்தும் ஈழத் தமிழர்கள் ஈழத்லும் இருக்கிறார்கள் யாழ்க் களத்திலுமிருகிறார்கள்.அதனை கண்டிக்காத எந்த இந்துவும் அந்த வெறியை நியாயப்படுத்துபவன்.அதனை நீயாப்படுத்தும் ஒருவரே ஈழத் தமிழரிடம் இந்து மத வெறி இல்லை என்று சொல்வது வேடிக்கையான விடயம்.

ஒடுக்கு முறையாளரின் உளவியற் போரை இனம் காண முடியாமால் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் யாழ் மக்களின் மத நம்பிக்கை.இந்த மத நம்பிக்கையை தனக்குச் சாதகமாக சிங்கள இராணுவம் பாவிக்கிறது.போராட்டத்தை மழுங்கடிக்கும் நம்பிக்கைகள் எவை எவை என்னும் புரிதலின் அடிப்படைலையே சிங்களப் பேரினவதாம் கோவில்களுக்கு பண உதவி செய்கிறது சாதிய வேறுபாடுகளைத் தூண்டி விடுகிறது.இவறிற்கு எதிரன போராட்டத்தை நடாத்த வேண்டிய பொறுப்பு எல்லாத் தமிழ்த் தேசியச் செயற்பாட்டளர்களுக்கும் அவர்களின் கடவுள் நம்பிக்கைகளுக்கு அப்பால் இருக்கிறது.

தமிழத் தேசிய அடையாளமும் அதை ஒட்டிய போராட்டமுமே பிரதானமானது.கடவுள் மத நம்பிக்கைகள் என்பது இரண்டாம் பட்சமானது.தமிழ்த் தேசிய விடுதலையை விட மதம் பெரிது என்று சொல்பவர் செயற்படுபவர் மத வெறியரே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழத் தேசிய அடையாளமும் அதை ஒட்டிய போராட்டமுமே பிரதானமானது.கடவுள் மத நம்பிக்கைகள் என்பது இரண்டாம் பட்சமானது.தமிழ்த் தேசிய விடுதலையை விட மதம் பெரிது என்று சொல்பவர் செயற்படுபவர் மத வெறியரே.

பி ஜே பி இந்துத்துவாக் கட்சி என்று அதன் எதிர்த்தரப்பு சொல்லிக் கொள்கிறது. ஆனால் பி ஜே பி ஆட்சிப்பீடமேறி இருந்த வேளையில்.. அது மொத்த இந்தியாவையும் இந்து நாடு என்றோ அல்லது இந்துக்களைத் தவிர இந்தியாவில் யாரும் இருக்கக் கூடாது என்றோ சொல்லவில்லை. பி ஜே பியில் இந்துக்கள் மட்டும் இடம்பெறவில்லை. பல மதத்தினவரும் இருக்கின்றனர்.

பி ஜே பியை இந்துத்துவாக் கட்சியாக காட்டியவர்களே.. அதனுடன் கூட்டணி அமைத்துச் செயற்பட்டும் உள்ளனர். நாளை மீண்டும் பி ஜே பிக்கு வெற்றி வாய்ப்பு வரும் என்றால் அவர்களை பி ஜே பியை தேசியவாதக் கட்சியாக நிலைநிறுத்தி கதைப்பார்கள்.

ஆக அரசியல்வாதிகளின் வார்த்தைகளின் அடிப்படையில் பி ஜே பிக்கு நாமமிடுவது எமது மக்களின் துயர் தீர்க்க உதவாது.

யாழ் குடா மக்கள் இராணுவ நெருக்குவாரங்களை பற்றி அறிந்தே இருக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த மக்களுக்கு இராணுவத்தை எதிர்த்து அதன் கட்டுப்பாடுக்குள் இருந்து கொண்டே எவ்வாறு செயற்டுவது என்பதற்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்பதுதான் அங்கிருக்கின்ற குறைபாடே தவிர.. அந்த மக்கள் மத வெறியால் இராணுவ நெருக்குவாரங்களை மறந்து விட்டிருக்கின்றனர் என்பது நாத்திக வெறித்தனத்தின் மிக மோசமான மக்கள் விரோத கருத்தாகும்..!

யாழ் குடா உட்பட மொத்த வடக்குக் கிழக்கும் இந்தியப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த போது இந்திய அரசு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வெறுத்து ஒதுக்கிவிட்டதாக பிரச்சாரம் செய்த போது.. தமிழ் மக்களுக்கு ஈரோஸ் வழங்கிய சந்தர்ப்பத்தை அவர்கள் சரியாகக் கையாண்டு.. அன்றைய வேளையில் இந்திய அரசின் பிரச்சாரத்துக்கு வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் சரியான பாடம் கற்பித்தார்கள்.

அவ்வாறான ஒரு சூழல் இன்றும் யாழ் குடாவில் ஏற்படுத்தப்படின் மக்கள் தமது உணர்வுகளைப் பிரதிபலிப்பர். மக்களுக்கு மதம் மீது நம்பிக்கை இருக்கும் அதே அளவுக்கு இந்த விடுதலைப் போராட்டத்தை பிரசவித்த அவர்களுக்கு அதன் மீது நம்பிக்கை இருக்கு. அப்படி இல்லை என்பது தவறான பரப்புரையாகும்..! அதற்கு மத சாயம் பூசுவது நாத்திக வெறியர்கள் எவ்வாறான கீழ்மட்ட பிரச்சாரத்தை, மக்கள் விரோத பிரச்சாரத்தை மேற்கொண்டும் தங்கள் கொள்கையை வெறித்தனத்தை காக்க தயங்கமாட்டார்கள் என்பதையே இனங்காட்டுகிறது.! :lol:

Edited by nedukkalapoovan

ஈசன் நீங்களாகவே இது தான் பகுத்தறிவு என்று சொல்லி விட்டு மதத்திற்கும் ஈழப் போராட்டத்திற்கும் இணைப்பை உண்டு பண்ணுவது வேடிக்கையான விசயம்.

எந்தப் பகுதறிவாளனும் மனிதன் உருவாக்கிய மதத்தின் அடிப்படையில் இன்னொருவனைக் கொல்ல மாட்டான்.ஆனால் மதவெறியில் மனிதரைக் கொல்லும் சிங்களப்பவுத்தம் ஆகட்டும் இந்துத்வா வெறியனாகட்டும் அவற்றிற்க்கு எதிராகப் போராடுவான்.அதனால் தான் பகுத்தறிவாளர்கள் சிங்களப் பவுத்த பேரினவாத பயங்கரவாதத்திற்கு எதிரான ஈழப்போராட்டத்தையும் மற்ற மதங்களுக்கு மதவழிபாட்டு உரிமைக்கும் எதிரகா இருக்கும் இந்துதுவாப் பயங்கரவத்திற்க்கும் எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தருவான், நடைமுறையிலும் அது தான் நடக்கிறது அது ஈழமாகட்டும் தமிழ் நாடு ஆகட்டும்.பகுதறிவாளருக்கு மதங்கள் அல்ல மனிதர்களே முக்கியமானவர்கள்.

சிங்கள பவுதமதப் பேரினவாத்திற்க்கு எதிராகக் குரல் தரும் நீங்கள் இந்து மதவெறியர்களின் பயங்கரவாததிற்க்கு எதிராக் குரல் கொடுப்ப்பீர்களா? :lol:

நாரதர்,

நான் ஈழப்போராட்டத்தை மதங்களோடு இணைக்கவில்லை.

அனால் புலிகளினால் முன்னெடுக்கப்படும் ஈழப்போரட்டம் மதங்களுக்கு எதிரானது அல்ல.

ஈழதமிழரில் இந்துக்களும், கிறீஸ்தவர்களும் உள்ளனர். மிகப்பலம் கொண்ட இந்து அமைப்புக்களும், கிறீஸ்தவ அமைப்புக்களும்

நமக்காக குரல் கொடுக்குமாயின் எவ்வளவு நல்லது.

எனவே நாம் அவர்கள் நட்பை நாட வேண்டும்.

அதை விட்டிட்டு மிகச்சிருபான்மையினரான நாஸ்திக கூட்டங்களோடு தான் ஈழப்போரட்டம் இணையவேண்டும் என்று நீங்கள் ஒற்றை காலில் நிற்பது அறிவுபூர்வமானதா?

உலகதில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். இவை எல்லாவற்றிற்கும் அனுசரித்தோ/ எதிர்த்தோ ஈழப்போராட்டம் நகர வேண்டிய கட்டாயம் இல்லை. உதாரணமாக நீங்கள் சொன்ன ஒரிஸ்சா பிரச்சனை. இது எமக்கு சம்பந்தம் இல்லாதது. 80 கோடி இந்திய இந்துக்களின் ஆதரவா, எதிர்ப்பா முக்கியம் ?

VHP இன் ஆதரவும் Vatican இன் ஆதரவும் இருந்திட்டு போகட்டுமேன்.

ஈழப் போரட்டம் என்பது ஒரு மதத்தின் போராட்டம் அல்ல அது ஒரு ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்கான போராட்டம்.அதனை ஒரு மதப் போராட்டமாக நாம் மாற்ற முடியாது.பவுத்த பேரினவதாம் என்பது மதம் சார்ந்தது.இந்த மதவெறிக்கெதிரான போரட்டம் தமிழர் என்னும் அடையாளம் சார்ந்ததே ஒழிய சைவம் இந்து என்னும் அடையாளம் சார்ந்தது இல்லை.இங்கே ஈழ விடுதலைப் போராட்டம் மதம் சார்ந்தது இல்லை என்னும் போது அது மதவாதிகளின் சக்திகளின் அரவணைப்பால் வளர முடியாது அது எந்த ஒரு மதத்துடனும் தன்னை அடையாளப்படுத்த முடியாதாது.ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் அதனைத் தமிழரின் ஒடுக்கப்பட்ட போராட்டமாகத் தான் ஆதரிக்க முடியும்.இந்துக்களின் கிரித்துவர்களின் இசுலாமியர்களின் போராட்டமாக அல்ல.இங்கே ஈழ விடுதலைப்போராட்டம் என்பது கடவுள் மறுப்பாளர்களின் போராட்டம் என்று எவரும் எங்கேயும் சொல்லவில்லை.சொல்லாதனவற்றை சொல்லியதாக் கூறி எழுதுவது நாகரீகம் அன்று.

விஎச்பி இந்து என்று சொல்லி கிரித்துவர்களை ஒரிசாவில் கொன்று கொண்டு இருக்கும் போது , தமிழ் கிரித்துவர்கள் விஎச்பியை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இந்து மத வெறியின் பாற்பட்டது, தமிழ்த் தேசிய அடையாளத்தின் பாற்பட்டது அல்ல. உணமையாக தமிழத் தேசிய அடையாளத்தை ஏற்கும் ஒருவர் விஎச்பி என்னும் இந்து மத வெறியரை எந்த விததிலும் நியாயப்படுத்தமாட்டார்.அதே போல் தான் வதிக்கானும் வதிக்கான் ஒரு நாட்டில் இந்துக்களையோ இசுலாமியர்களையோ கொன்று குவிக்கும் போது நாம் அதனை ஆதரிக்க முடியாது.

VHP, கதோலிக்க திருச்சபை என்பன பெரும் சக்திகளாகும். இவற்றை விலத்தியோ எதிர்த்தோ போகுமளவுக்கு ஈழப்போரட்டம் வலியது அல்ல.

மாறாக இவற்றின் ஆதரவு போராட்டத்திற்கு வலுசேர்க்கும். இவற்றின் ஆதரவு பெற்றால் இந்துக்களும் கிறீஸ்தவர்களும் ஒருவரை ஒருவர் வெறுப்பர் என்பது அறிவுபூர்வமாகாது.

உதாரணமாக மன்னார் ஆயர் வன்னி அகதிகளுக்கு நேற்று முன் தினம் தார்பார் வளங்கினார் என்றால் அதை ஒரு மதவெறியின் செயற்பாடு என்று கருதி ஒருவரும் போர்கொடி தூக்குவது இல்லை.

உலகத்தின் பல பாகங்களில் நடக்கும் மத வன்முறைகள், இந்த மத அமைப்புகள் நமக்கு தரும் ஆதரவின் மூலம் நமக்குள்ளும் தொற்றிவிடுமா என்னும் அச்சம் தேவையற்றது. அதற்கான காரணிகள் தமிழரிடம் இல்லை.

மாறாக இவற்றுடன் உள்ள தொடர்புகளை தகுந்த முறையில் நெறியாள்கை செய்வதன் மூலம் - புவிகோள அரசியளிக்கு ஏற்ப - போராட்டம் முன்னெடுக்கப்படலாம்.

ஈசன் பகுத்தறிவு என்ற ஒன்றே அடிப்படையில் இல்லை. அதைக் கூட மனிதன் தான் தனக்குத்தானே பகுத்தறிவு என்று வகைப்படுத்திக் கொண்டான். உண்மையில் மூளையின் தொழிபாடுதான் பகுத்து ஆயும் அறிவுதிறனாக இருக்கிறது.

இந்த உலகம் பல மதங்களைத் தழுவும் மக்களைக் கொண்டது. அதிலும் தமிழ் மக்கள் அநேகர் இந்துக்களாகவும் கிறீஸ்தவர்களாகவுமே இருக்கின்றனர்.

ஆனால் நாத்திகவாத வெறியர்கள் (தமக்குத் தாமே வகுத்துக் கொண்ட பகுத்தறிவின் முன் மதங்கள் இல்லை என்றால் ஏன் இவர்கள் மதம் சார்ந்த விடயங்களுக்குள் மூக்கை நுழைக்க வேண்டும். இல்லை என்று கருதுவதற்குள் இல்லாமல் இருப்பதே இவர்களின் கடமையாக இருக்க வேண்டும்.) சிங்கள பெளத்த பேரினவாததுக்கு நிகராக இந்து மத வெறி ஈழத்தில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை இங்கு காட்ட விளைகின்றனர்.

ஆக இவர்கள் பார்வையில்.. புத்த பிக்குவும்.. அவன் தலைமையில் சிங்கள பெளத்த பேரினவாதப் படையினரும் தமிழ் மக்களை கொல்வது என்பது இந்துக்களாக.. கிறீஸ்தவர்களாக உள்ள மத வெறியர்களை அழிப்பது என்பதுதாகத்தான் தெரிகிறது.

ஆக இவர்களின் பார்வையில் மதம் என்பதுதான் முன்னிற்கிறது மனிதம் அல்ல. மதத்தை வைத்து மனிதனை அடையாளப்படுத்திக் கொண்டு இவர்கள் செய்யும் அணுகுமுறை எந்த வகையில் மனிதாபிமானத்தின் பால் அமைந்தது. அல்லது அவர்களே சொல்லிக் கொள்ளும் பகுத்தறிவின் பால் விளைந்தது என்பதுதான் விநோதமாக இருக்கிறது.

யதார்த்த உலகில் வாழாதவர்களுக்கு சாதாரண மக்களின் உணர்வுகளை.. தேவைகளை உணர்ந்து அவர்களின் போராட்டம் பற்றிய பார்வையை செய்ய முடியாது என்பதற்கு இந்த நாத்திகவாதிகள் நல்ல உதாரணம்..!

சிலர்.. கோவில்கள்.. தேவாலயங்கள்.. மசூதிகள் சிலவற்றின் செயற்பாட்டின் அடிப்படையில்.. நாத்திகவாதிகளின் பின்னால் இழுபட்டு பொழுது கழிக்கின்றனர். ஆனால் மக்களில் அநேகரின் உணர்வுகள் சங்கமித்திருக்கும் மத நெறி சார்ந்த விடயங்களை எதிரி தனக்கு உகந்த வகையில் பயன்படுத்திக் கொண்டு உலகில் தனக்கான நற்பெயரை சம்பாதித்துக் கொள்கிறான். நாம் நாத்திக வெறித்தனத்தால் அறிவிழந்து மத வெறியை வெட்டி வீழ்த்த முனைந்து கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ள தீவிரமாக இருப்பதால்... இருக்கின்றதையும் இழந்து கொண்டிருக்கிறோம்..!

இதைத்தான் சொல்வார்கள்.. தக்கன பிழைக்கும் அல்லன மடியும் என்று. பெளத்த பேரினவாதம் எமக்குள்ளேயே எவ்வளவு பிரிவுகளை உருவாக்கி எம்மை நாமே ஒருவருக்கு ஒருவர் ஆடையை உரிந்துவிடும் நிலையை உருவாக்கி எம்மைப் பற்றி எம்மைக் கொண்டே வெளி உலகுக்கு காட்டி வருகிறது.

அதை உணராமல்.. இன்னும் நாம் நாத்திகம் பேசி.. மொத்தத் தமிழ் மக்களையும் நாத்திகர்களாகக் காட்டி.. உலக மக்களினின்றும் தனிமைப்படுத்தி.. பேரவலத்துக்குள் தள்ளுவதையே.. பகுத்தறிவு.. நாத்திகம் என்ற போர்வையில் செய்து கொண்டிருக்கிறோம். இதையே சிங்கள பெளத்த பேரினவாதமும் செய்ய விரும்புகிறது. அதற்கு எம்மாலான உதவிகளை இங்கு செய்து கொண்டிருக்கிறோம். அதற்கு இட்டுள்ள நாமம்.. நாத்திகவாதிகளின் பகுத்தறிவு..! :D:lol::)

சரியாகச் சொன்னீங்கள் நெடுக்கர். :)

நாரதர்,

VHP, கதோலிக்க திருச்சபை என்பன பெரும் சக்திகளாகும். இவற்றை விலத்தியோ எதிர்த்தோ போகுமளவுக்கு ஈழப்போரட்டம் வலியது அல்ல.

மாறாக இவற்றின் ஆதரவு போராட்டத்திற்கு வலுசேர்க்கும். இவற்றின் ஆதரவு பெற்றால் இந்துக்களும் கிறீஸ்தவர்களும் ஒருவரை ஒருவர் வெறுப்பர் என்பது அறிவுபூர்வமாகாது.

உதாரணமாக மன்னார் ஆயர் வன்னி அகதிகளுக்கு நேற்று முன் தினம் தார்பார் வளங்கினார் என்றால் அதை ஒரு மதவெறியின் செயற்பாடு என்று கருதி ஒருவரும் போர்கொடி தூக்குவது இல்லை.

உலகத்தின் பல பாகங்களில் நடக்கும் மத வன்முறைகள், இந்த மத அமைப்புகள் நமக்கு தரும் ஆதரவின் மூலம் நமக்குள்ளும் தொற்றிவிடுமா என்னும் அச்சம் தேவையற்றது. அதற்கான காரணிகள் தமிழரிடம் இல்லை.

மாறாக இவற்றுடன் உள்ள தொடர்புகளை தகுந்த முறையில் நெறியாள்கை செய்வதன் மூலம் - புவிகோள அரசியளிக்கு ஏற்ப - போராட்டம் முன்னெடுக்கப்படலாம்.

முதலில் கத்தோலிக்க திருச்சபையும் விஎச்பியும் ஒன்றல்ல.விஎச்பி ஒரு இந்து பயங்கரவாதா அமைப்பு அது இந்தியா இந்துக்களின் தேசம் என்று சொல்லி மற்ற மதத்தவரின் வழிபாட்டு உரிமையையும் உயிர்வாழும் உரிமையையும் மறுப்பது.ஒரு மதவெறிக்கு எதிராகப்போராடும் நாம் எவ்வாறு விஎச்பி போன்ற அமைப்புக்கு ஆதரவு கொடுக்கலாம் என்பது விளங்கவில்லை.கத்தோல்லிக்கத் திருச்சபை இந்துக்களைக் கொல்லவில்லை, தமிழர்கள் கதோலிக்கர்களே தமீழீழம் கத்தோலிக்கரின் தேசம் என்றெல்லாம் சொல்லவில்லை.

மன்னார் ஆயர் வன்னி மக்களுக்கு உதவுவதும் விஎச்பி ஒரிஸ்ஸாவில் கிருத்துவர்களைப் படுகொலை செய்வதும் ஒன்றென நீங்கள் கூறினால் உங்கள் சார்பு நிலை எது என்பது மிகத் தெளிவானது.இந்தக் காலகட்டதில் எதாவது இந்து அமைப்புக்கள் வன்னி மக்களுக்கு உதவினால் அதை எவரும் மறுக்கவோ தடுக்கவோ போவதில்லை.ஆனால் இந்து மத அமைப்புக்களும் கோவில்களும் திருவிழாக்களை அல்லவா செய்து கொண்டிருக்கின்றன.

கத்தோலிக்கத் திருச்சபயியையும் மதவன்முறையை கையாளும் விஎச்பியையும் ஒரே தட்டில் வைத்துக் கரூத்துச் சொல்லும் உங்களையே உதாரணமாகக் கூறலாம் எவ்வாறு இந்து மதவாதம் என்பது எமக்கும் எமது போராட்டதிற்கும் ஆபத்தானது என்பதைக் காட்ட.

தமிழ்த் தேசியம் என்பது இந்து மதவாதமாக மாறினால் தான் போராட்டம் நலிவடையுமே ஒழிய ,தமிழ்த் தேசியம் என்பது மத அடையாளம் அற்ற ஒரு தேசிய இன அடையாளமாக இருப்பதே அதைப் பலப்படுத்தும்.

பூகோள அரசியல் சர்வதேச் அதரவு என்பவை தமிழத் தேசயத்தைப் பலப்படுதும் வண்ணமே கையாளப் படவேண்டும்.அதை விட்டு விட்டு சர்வதேசம் சொல்கிறது விஎச்பி சொல்கிறது பிஜேபி சொல்கிறது என்பதற்காக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டதின் அடிப்படைகளைக் காவு கொள்வ தென்பது போராட்டதையே அழித்து ஒழிக்கும் செயல்.எந்தக் காலத்திலும் தமிழீழத் தேசியத் தலமை என்பது அத்தகைய பிழைகளை விடாது.

தூரதிஸ்டவசமாக என்னால் ஒரு மத அமைப்பு கொலைகார அமைப்பு என்றோ மற்றயது அன்பு சொரூபமானது என்றோ என்னால் கூற முடியாமல் உள்ளது.

இது மதப் பூசலுக்கே வழிசமைக்கும். இது எமக்கு அவசியம் அற்றதும் கூட.

என்னுடைய Post ஐ மறுபடியும் வாசியுங்கள். அரசியளிலோ, பிராந்தியத்திலோ உள்ள சக்திகளை பகைக்காமல் போராட்டம் முன்னெடுக்கபட வேண்டும் என்னும் தொனியிலேயே எழுதியுள்ளேன்.

அவர்களிடம் உள்ள குறை நிறைகள் எமக்கு அக்கறை இல்லை. எவ்வழியில் அவர்களை பயன்படுத்தலாம் என்பதைப்பற்றியே நாம் சிந்திக்க வேண்டும்.

ஆனால் உடனடியாகவே நீங்கள் அவர்களை வேற்றுமைபடுத்தி, தாழ்த்தி , உயர்த்தி பூசலை உண்டாக்குகிரீர்கள். இது எவ்வழியில் போராட்டத்திற்கு உதவும் எனத் தெரியவில்லை.

உஙகள் அடிபடை பார்வை மதக்கண்னோட்டத்திலேயே உள்ளது. இதை விடுத்து போராட்டத்திற்கு நாம் எப்படி வலு சேர்க்கலாம் என்று சிந்தியுங்கள். காட்சிகள் தெளிவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியம் என்பது இந்து மதவாதமாக மாறினால் தான் போராட்டம் நலிவடையுமே ஒழிய ,தமிழ்த் தேசியம் என்பது மத அடையாளம் அற்ற ஒரு தேசிய இன அடையாளமாக இருப்பதே அதைப் பலப்படுத்தும்.

தமிழ் தேசியம் மத அடையாளம் இடப்பட்ட ஒன்றாக இருந்ததும் இல்லை.. இருக்கப் போவதும் இல்லை. ஆனால் அது மத அடையாளங்களை தூசிக்கவும் போவதில்லை. அதுதான் தமிழ் தேசியவாதிகளுக்கும் நாத்திகவெறியர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை மத அடிப்படையில் காட்டி நிற்கிறது..! மத அடிப்படையில் மக்களை தூசிப்பவன் தமிழ் தேசியத்தோடு முற்றாக ஒட்டிவிடலாம் என்றும் மத நம்பிக்கை உள்ளவன் தமிழ் தேசியத்தில் இருந்து விலகியவன் என்பதும் தவறான அர்த்தப்படுத்தல்கள் மட்டுமன்றி நாத்திக வெறியின் அளவுக்கு அதிகமான கற்பனையும் ஆகும்..!

தமிழ் தேசியம் எவ்வாறு மத அடையாளங்களை இட்டுக் கொள்ளவில்லையோ.. அதேபோல் நாத்திக அடையாளத்தையும் தன்னக்கத்தே கொண்டிராது. அது மதம் சார்ந்து பக்கச்சார்ப்பற்ற ஆனால் மதத்தை விரோதிக்காத தேசியமாகவே இருக்கும்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்கை பாத்தால் பேசாமல் யெகோவா இல்லாட்டி அல்லொலகல்லோல மதங்களுக்கு மாறலாம் போலை கிடக்கு :)

கோட்டும்சூட்டும் தந்து கையோடை கொஞ்ச காசும் தருவாங்களாம் :lol:

மனிதா மனிதா

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நாம் அவற்றை சரியான வடிவில் வெளி உலகுக்கு கொண்டு வராததால் தான்.. பல கோடி இந்துக்களின் அனுதாபத்தை எம் பக்கம் வைத்திருக்கத் தவறி இருக்கிறோம்.

நெடுக்ஸ்.

நீங்கள் கூறிய இக்கருத்து இப்போதைய காலகட்டத்தில் சரிவருமா?உலகில் உள்ள இஸ்லாமிய நாகரீகம் இந்து நாகரீகம் கிறிஸ்தவ நாகரீகம்,பெளத்த நாகரீகங்களின் ஆதரவால் அந்தந்த நாகரீகங்களை சார்ந்த இனங்களுக்கு ஆதரவு கிடைத்ததாக சரித்திரம் தற்போதைய காலத்தில் இல்லை.ஆதரவு கிடைத்து வெற்றி பெற்றதாகவும் சரித்திரம் இல்லை.

அப்படி நீங்கள் கூறியபடி மத ஆதரவால் விடுதலை கிடைக்கும் எனின் ஏன் பலஸ்தீனம் இன்னும் விடுதலை பெறாமல் இருக்கின்றது?

இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை அரசியல் சார்பு பின்புலம் தான் வெற்றியை பெற்று கொடுக்கிறது தேசிய இனங்களுக்கு.

உதாரணமாக கோசவா மற்றும் ஜோர்ஜியா,கிழக்கு தீமோர் போன்ற நாடுகளை எடுக்கலாம்.

மதம் சார்ந்து விடுதலை பெற்ற நாடுகள் இல்லை என்றே கூறலாம். :lol:

தமிழ் தேசியம் மத அடையாளம் இடப்பட்ட ஒன்றாக இருந்ததும் இல்லை.. இருக்கப் போவதும் இல்லை. ஆனால் அது மத அடையாளங்களை தூசிக்கவும் போவதில்லை. அதுதான் தமிழ் தேசியவாதிகளுக்கும் நாத்திகவெறியர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை மத அடிப்படையில் காட்டி நிற்கிறது..! மத அடிப்படையில் மக்களை தூசிப்பவன் தமிழ் தேசியத்தோடு முற்றாக ஒட்டிவிடலாம் என்றும் மத நம்பிக்கை உள்ளவன் தமிழ் தேசியத்தில் இருந்து விலகியவன் என்பதும் தவறான அர்த்தப்படுத்தல்கள் மட்டுமன்றி நாத்திக வெறியின் அளவுக்கு அதிகமான கற்பனையும் ஆகும்..!

தமிழ் தேசியம் எவ்வாறு மத அடையாளங்களை இட்டுக் கொள்ளவில்லையோ.. அதேபோல் நாத்திக அடையாளத்தையும் தன்னக்கத்தே கொண்டிராது. அது மதம் சார்ந்து பக்கச்சார்ப்பற்ற ஆனால் மதத்தை விரோதிக்காத தேசியமாகவே இருக்கும்..! :lol:

பால் குடிக்கையில் மூச்சுத்திணறி ஒரு குழந்தை இறந்து விட்டது

அது பற்றி ஒரு குருடன் விசாரிக்கிறான்

குருடன் : குழந்தை எப்படி இறந்தது?

வீட்டார்: பால் புரை ஏறியதால் மூச்சு திணறி இறந்து விட்டது

குருடன்: பால் எப்படி இருக்கும்?

வீட்டார்: வெள்ளை நிறத்தில் இருக்கும்!

குருடன்: வெள்ளை எப்படி இருக்கும்?

வீட்டார்: கொக்கு போல் இருக்கும்!

குருடன்: கொக்கு எப்படி இருக்கும்?

வீட்டில் ஒருவர் கையை கொக்கு போல் வளைத்து காட்டி கொக்கு இப்படி இருக்கும் என்கிறார்

கையை தடவி பார்த்த குருடன் சொல்கிறான்

ஓ! இவ்வளவு பெரிய பொருள் குழந்தையின் வாய்க்குள் போனால் குழந்தை இறக்காமல் என்ன செய்யும்?

இந்த கதையில் வரும் குருடனை போல் விடயங்களை புரிந்து கொள்ளும் நிலையில் அறிவை வைத்திருப்பவர்களுக்கு

நீங்கள் என்ன விளக்கம் சொல்லியும் என்ன ஆகப்போகிறது

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.

நீங்கள் கூறிய இக்கருத்து இப்போதைய காலகட்டத்தில் சரிவருமா?உலகில் உள்ள இஸ்லாமிய நாகரீகம் இந்து நாகரீகம் கிறிஸ்தவ நாகரீகம்,பெளத்த நாகரீகங்களின் ஆதரவால் அந்தந்த நாகரீகங்களை சார்ந்த இனங்களுக்கு ஆதரவு கிடைத்ததாக சரித்திரம் தற்போதைய காலத்தில் இல்லை.ஆதரவு கிடைத்து வெற்றி பெற்றதாகவும் சரித்திரம் இல்லை.

அப்படி நீங்கள் கூறியபடி மத ஆதரவால் விடுதலை கிடைக்கும் எனின் ஏன் பலஸ்தீனம் இன்னும் விடுதலை பெறாமல் இருக்கின்றது?

இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை அரசியல் சார்பு பின்புலம் தான் வெற்றியை பெற்று கொடுக்கிறது தேசிய இனங்களுக்கு.

உதாரணமாக கோசவா மற்றும் ஜோர்ஜியா,கிழக்கு தீமோர் போன்ற நாடுகளை எடுக்கலாம்.

மதம் சார்ந்து விடுதலை பெற்ற நாடுகள் இல்லை என்றே கூறலாம். :lol:

மதம் சார்ந்து விடுதலை பெற்ற தேசங்கள் இல்லை என்பதாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் மத அடிப்படையில் ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க மக்கள் இருக்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது.

பலஸ்தீன தேசத்துக்கு அரபுலகெங்கும் ஏன் சிறீலங்காவில் வாழும் முஸ்லீம்கள் கூட எந்த அடிப்படையில் தார்மீக ஆதரவை வழங்கி வருகின்றனர். பலஸ்தீன மக்கள் இஸ்ரேலால் தாக்கப்பட்ட போது கம்பகாவில் கூட பள்ளிவாசல்களில் கூடி ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லீம்கள் தமிழ் மக்கள் சிறீலங்காவால் தாக்கப்படும் போது ஏன் செய்ய முன்வரவில்லை..???!

எமது தேசம் விடுதலை அடைகின்ற போது.. அது மத சார்பின்மையை காண்பிக்கும். ஆனால் ஒருபோதும் மதவிரோத (அல்லது நாத்திக கொள்கை பரப்பு) தன்மை கொண்ட தேசமாக இருக்காது.

எமது மக்கள் இந்திய மதப் பண்பாட்டோடு அதிகம் ஈடுபாடு கொண்டவர்கள். அந்த வகையில் மத அடிப்படையிலும் கூட இந்திய தேச மக்களின் அனுதாபத்தை எம் பக்கத்தில் பெற்றுக் கொள்ள வாய்ப்பிருந்தும் அதற்கான முயற்சிகள் செய்யப்படவில்லை.

எமது விடுதலைக்கு சாத்தியமான வழிகளில் எல்லாம் உலக மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்ள வேண்டுமே தவிர.. அர்த்தமற்ற மத விரோதக் கொள்கைகளால்.. அயலக மக்களையும் அரசுகளையும் பகைப்பதன் மூலம் நாம் எமது விடுதலைக்கான ஆதரவு.. அனுதாபத் தளத்தை இழப்பதனால்.. சிங்கள பெளத்த பேரினவாதமே அதனால் நன்மை அடைகிறது..!

சிறீலங்கா சீனா.. ஜப்பான்.. தாய்லாந்து என்று அதிகம் உறவாட பெளத்த மதத் தொடர்புகளையும் அது பாவிக்கத் தவறவில்லை. சாத்தியமான எல்லா வழிகளூடும் அது நாடுகளிடையேயான புரிந்துணர்வை வளர்க்க முனைகிறது.

ஆனால் விடுதலையை வேண்டி நிற்கும் நாம்.. மதத்தால்.. பிரித்து.. விரோதித்து.. எதை செய்யப் போகின்றோம். அதன் மூலம் பலமான புரிந்துணர்வை சர்வதேச அரங்கில் எமது விடுதலை தொடர்பில் ஏற்படுத்த முடியுமா..??!

மதப் புரிந்துணர்வு விடுதலையை பெற்றுத்தரும் என்று சொல்லவில்லை. ஆனால் விடுதலைக்கான நியாயப்பாட்டை.. புரிந்துணர்வை அதிகரிக்கச் செய்யும் என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதை மறுதலிக்க முடியாது..! அதுதான் நிகழ்கால உலக ஒழுங்கில் யதார்த்தமும் கூட..!

மக்களிடையே மத ரீதியில் அமைந்த நெருக்கத்தை.. புரிந்துணர்வை வளர்ப்பது என்பது மத வெறித்தனத்தை.. மத வன்முறைகளை அங்கீகரிப்பதாக இனங்காட்டப்பட அனுமதிக்கக் கூடாது..! :)

Edited by nedukkalapoovan

தூரதிஸ்டவசமாக என்னால் ஒரு மத அமைப்பு கொலைகார அமைப்பு என்றோ மற்றயது அன்பு சொரூபமானது என்றோ என்னால் கூற முடியாமல் உள்ளது.

இது மதப் பூசலுக்கே வழிசமைக்கும். இது எமக்கு அவசியம் அற்றதும் கூட.

என்னுடைய Post ஐ மறுபடியும் வாசியுங்கள். அரசியளிலோ, பிராந்தியத்திலோ உள்ள சக்திகளை பகைக்காமல் போராட்டம் முன்னெடுக்கபட வேண்டும் என்னும் தொனியிலேயே எழுதியுள்ளேன்.

அவர்களிடம் உள்ள குறை நிறைகள் எமக்கு அக்கறை இல்லை. எவ்வழியில் அவர்களை பயன்படுத்தலாம் என்பதைப்பற்றியே நாம் சிந்திக்க வேண்டும்.

ஆனால் உடனடியாகவே நீங்கள் அவர்களை வேற்றுமைபடுத்தி, தாழ்த்தி , உயர்த்தி பூசலை உண்டாக்குகிரீர்கள். இது எவ்வழியில் போராட்டத்திற்கு உதவும் எனத் தெரியவில்லை.

உஙகள் அடிபடை பார்வை மதக்கண்னோட்டத்திலேயே உள்ளது. இதை விடுத்து போராட்டத்திற்கு நாம் எப்படி வலு சேர்க்கலாம் என்று சிந்தியுங்கள். காட்சிகள் தெளிவாகும்.

உலகின் பிராந்தியத்தில் நிகழும் போராட்டங்கள் எவ்வகையானவை என்னும் பார்வை போராடும் இனத்துக்கு அவசியமானது.அந்த அந்தப் போராட்டங்களை அந்த அந்த மக்களே நிகழ்துகிறார்கள் மற்றவர்களின் போராட்டத்தில் நாங்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. நாம் எவ்வாறு ஒரு ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகிறோமோ அவ்வாறே ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கே நாங்கள் ஆதரவு தருவது எமது தார்மீகக் கடமை.அதை விட்டு ஒடுக்குபவனோடு நாமும் செர்வதென்பது போராட்டத்தின் தார்மீக அடிப்படைகளையே சிதைத்து விடும்.குறிப்பாக இந்து மதவாதச் சக்திகளின் ஆதரவு என்பது தமிழ்த் தேசியம் என்னும் அடையாளத்தையே சிதைப்பது.

மத அடையாளமே வேண்டாம் என்னும் போது எனது கன்ணோட்டம் மதக்கண்ணோட்டம் என்று கூறுவது வேடிக்கையானதாக இருக்கிறது.மத வாதச் சக்திகளோடு இணையவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பவர் நீங்கள், நான் அல்ல.

கண் முன்னாலையே படுகொலைகளைச் செய்து கொண்டிருக்கும் ஒரு அமைப்பை கொலைகார அமைப்பு என்று சொல்ல உங்களால் முடியாது இருக்கிறது என்பதே உங்கள் மதச் சார்பைக் காட்டுகிறது.

கொள்கைகள் அழகாக இருக்கலாம். தவறில்லை. அதற்காக தார்மீகம் என்று சொல்லி 2 கிளெமோரை ULFA இற்கு கொடுத்துவிட்டு அயுதக்கப்பலை இந்திய கடற்படையிடம் பறிகொடுப்பது முட்டாள் தனம்.

நீங்கள் மத அடையாளம் வேண்டாம் என்று சொல்பவராகத் தெரியவில்லை. மாறாக இந்து மத எதிர்ப்பாளராகவே தெரிகிறீர்கள். முன்பு ஒரு காலத்தில் மளையாள தேசத்தில் இருந்து ஏபிரகாம் கோவூர் என்பவர் யாழ்பாணம் வந்திருந்தார். அவர் தன்னை பகுதறிவாளராகக் காட்டிக்கொன்டார். இந்து மத எதிர்ப்பே அவர் நோக்கம்.

இப்படிபட்ட குறிவைக்கப்பட்ட நாஸ்திகம் Targetted Atheism என்பது மிகப் பழைய, உக்கிப்போன தந்திரோபாயம். அறிந்தவர்கள் ஊதித்தள்ளிவிட்டுச் செல்வார்கள்.

45 இலட்சம் அப்பாவி வியற்னாம் மக்களை அமெரிக்கர்கள் நேபாம் கொண்டு குன்ஜு குருமன் என்று பார்காமல் உயிருடன் எரித்த பொழுது எங்கள் இரற்சகர்கள் மௌனமாக இருந்தார்கள். மௌனம் சம்மதமே. நீங்கள் ஏன் இதைப்பற்றி கதைப்பதில்லை. வரலாற்றில் அறியாமையோ ?

இப்படியாக..... இரத்தக்கறை அற்ற கைகளைப் பார்ப்பது கடினம். அதனால் தான் நான் எற்கனவே சொல்லி இருந்தேன் அவர்கள் குறை நிறை எமக்கு அவசியமில்லை, எம்முடைய நன்மையை பார்பதே முக்கியம் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.