Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களப் படைத்திமிருக்கு வன்னிப் போரங்கில் தகுந்த பாடம் புகட்டப்படும் !

Featured Replies

வன்னியில் நிலம் விழுங்கிய படி முன்னேறும் சிங்களப் படையின் நகர்வால் ஊக்கம் பெற்றுள்ள மஹிந்த அரசு போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

போரில் சிங்களப் படைகள் வெற்றிநடை போடுகின்றன. என்று மஹிந்த அரசு பிரகடனங்களை விடுத்து வருகிறது. என விடுதலைப்புலிகள் ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலெழுந்த வாரியகப் போரை ஆய்வு செய்வோரும் - புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்று விரும்புவோரும் மஹிந்த அரசின் வெற்றிப் பிரகடனங்களை நம்புகின்றனர்.

கண்ணால் காண்பதும் பொய் -காதால் கேட்பதும் பொய் - தீர விசாரிப்பதே மெய் என்ற அனுபவ வாக்கியம் போர் நடைமுறைக்கும் பெருந்தும். போரில் பல்வேறுவிதமான போக்குகள் காட்டி எதிரியை ஆழஉள்ளிழுத்து ? அழிக்கும் வல்லமையுடனேயே புலிகள் இயக்கம் உள்ளது.

வன்னிநில அமைப்பும் - புலிகளின் படைவலுவும் இணைந்து இந்தப் போர்க்களப் புரட்சியை ஏற்படுத்தும் என்பது திண்ணம். அப்போது வன்னி நிலம் சிங்களப் படைக்கு ஒரு வரலாற்றுத் தோல்வியை வழங்கும். முதிர்ச்சி பெற்ற ஒரு விடுதலைப் போராட்டத்தை இராணுவ வடிவில் அழிக்க முடியும். என்பதற்குச் சிங்கள அரசு ஒரு சாட்சியாக இருக்கப் போகின்றதென்று சில ஆக்கிரமிப்பு வாதிகள் கனவு காண்கின்றனர்.

ஆனால் ஒரு ஆக்கிரமிப்பு அரசை புலிகளைப் போன்ற ஒரு பலம் வாய்ந்த விடுதலைச் சேனை வெற்றி கொண்டு விடுதலைபெற முடியுமென்ற முன்னுதாரணத்தையே வன்னிப் போர்க்களம் நிரூபிக்கப் போகின்றது.

புலிகள் இயக்கம் தமிழரின் பேராதரவு பெற்ற விடுதலைச் சேனைஇ மரபுப் போரிலும் - கெரில்லாத் தாக்குதலிகளிலும் வல்லமை பெற்ற ஒரு அரசியல் - இராணுவ அமைப்பு.

சமூகக் கட்டமைப்புக்களையும் இயக்கியபடி ? போரையும் எதிர்கொண்டபடி ? மக்களின் இடர்நிவாரணப் பணிகளையும் மேற்கொள்ளும் பன்முக ஆற்றல் கொண்ட ஒரு அரசாகவே புலிகள் அமைப்பின் செயற்பாடு உள்ளது.

தமிழ் மக்களை பீதிக்குள்ளாக்கி அடிபணிய வைக்கும் ஆக்கிரமிப்பு ஆசையுடன் - வான்தாக்கதல்களை ? எறிகணைத் தாக்குதல்களை நடாத்துகின்றது. இராணு ஆக்கிரமிப்பு பகுதிக்குள் வந்து பாதுகாப்புத் தேடும்படி மக்களுக்கு பாசாங்கு காட்டுகின்றது.

இனிவரும் மாதங்கள் போர்கள மாற்றங்களக்குரிய காலங்களாகவே இருக்கப் போகின்றன. வீரமும் - தியாகமும் - உழைப்பும் தான் தமிழினத்திற்கு வெற்றிகளைப் பெற்றத்தரும்.

தமிழரின் முப்படையும் இணைந்து சிங்களத்தின் இராணுவத் திமிருக்குப் தகுந்த பாடம் புகட்டும் நாள் வெகுதெலைவிலில்லை.

இந்த இராணுவ வெற்றியை ஈட்டுவதற்கு எமது விடுதலை வீரர்களுடன் மக்களும் தயார் நிலையிலுள்ளனர்.

வன்னிப் போரரங்கில் சிங்களப் படைகள் சந்திக்கப் போகும் படுதோல்வியானது அதன் ஆக்கிரமிப்பு எண்ணத்திற்கு நிரந்தரத் சாட்டையடியாகவே விழப்போகின்றது.

இதன்மூலம் புலிகள் இயக்கம் அசைக்க முடியாத தனது இராணுவப் பலத்தை நிரூபித்து விடுதலைப் போராட்த்தின் உயர் பரிமானத்தை வெளயிப்படுத்தும்.

எனவே எதிர்வரும் நாட்களில் வன்னிப் போர்க்களத்தில் சிங்களப் படைகளுக்குப் போரழிவு காத்திருக்கிறது.

'தமிழரின் இனப்பிரச்சனையை இராணுவ வழியில் தீர்க்க முடியும்இ புலிகள் இயக்கத்தை அழிக்க முடியும்' என்ற பேரினவாதிகளின் ஆசைகளும் - கனவுகளும் வன்னிப் பேரரங்கில் வைத்துக் சிதறடிக்கப்படும் நாட்கள் வெகுதூரத்திலில்லை.

புலிகளின் ஏடு

நன்றி சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியை நோக்கிச் சிங்களம் தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து முன்னேற முயல்கின்றது. செய்திகளின்படி சில ஊடுருவல்களும் நடைபெற்றுள்ளன. காலம் ஓர் மாயாவி. அது செய்யும் வித்தைகள் சில வேளை நம் கண்களைக் கட்டிவிடும். நாம் ஒன்றை நினைக்க அது வேறொன்றைச் செய்யும்.

வரலாறு எப்போதும் ஒரே சீராகச் சென்றதாக வரலாறில்லை. பள்ளங்களும் மேடுகளும் வீழ்ச்சிகளும் நிமிர்வும் இல்லாமல்:

காலக் கலைஞனவன் கதையெழுதிச் சென்றதில்லை.

கோலத்தை நேரான கோடாய்க் கிழித்ததில்லை

நேராய் வரைபை நிமிர்த்தி வரைந்ததில்லை

பொய் நாரெடுத்துப் புழுகு மலர் தொடுக்கும்

பையாக்கள் போர்ப் பரணி பாடுகிறாரென்பதனால்

விட்டில்களாகி விளக்கில் உடலெரிக்கும்

முட்டாள்களாக முழு அழிவைத் தேடாமல்

பாயும் வரை தருணம் பார்த்துப் பதுங்குவதே

தேயத்திற்கின்று தெரிவென்பதை உணர்வோம்

வன்னிக்குள் எமது உறவுகள் எதிரியின் ஆக்கிரமிப்புக்குப் பயந்து புகலிடம் தேடுகிறார்கள். எப்போது எதிரியின் விமானங்கள் குண்டு வீச வரப்போகின்றனவோ என்னும் பயத்தில் வானத்தைப் பார்த்தவாறு தவித்துத் தடுமாறுகிறார்கள்.

எப்போது இந்த இழிவு நிலை மாறும்?

உள்ளத் தனல் பெருகி உயிர்த்து நெடு மூச்சு

வன்னிக்குள் நைந்து மரநிழலில் வாழுகிற

எங்கள் உறவுகளை எண்ண மனம் வேகிறதே

பாமினியை நாவிருத்திப் பாடிவிட்ட பாக்களெல்லாம்

போமா இனியாதும் பொருளின்றி? சே! சே!

நாவிலிருப்பவளே நற்றமிழே தேவீ! என்

ஆவி புகுந்து அடியெடுத்துத் தந்தவளே

சந்த மரபில் சளைக்காத நற் கவிதை

தந்தவளேயம்மா நின் தாழ் பணிந்து நிற்கின்றேன்

என்ன உனதெண்ணம் எதற்காயெனைப் பிடித்தாய்

அன்னையே என் நா அமர்ந்தேன் உரைப்பித்தாய்

சொன்னவைகளெல்லாம் சுரத்தின்றி வீணான

பொய்யாய்க் கனவாய்ப் புனை கதையாய்ப் போவதுவோ!

வெல்வோம் பகையை என வீறோடுரைத்திட்ட

சொல்லிழிய எங்கள் துயர் நிலைக்க வைப்பாயோ!

நீதிக்காய் இந்த நிலமீதோர் மானுடத்தின்

வேதனைகளுக்காய் விழிதிறக்க வைத்தவளே!

சொல்ல வைத்த சொற்கள்தனைச்

சோத்தியாய் ஆக்குவையோ?

எல்லை வரை சென்று எதிரி புறங்காட்ட

உன் கண் எரி தீ உமிழ்வதினி எக்காலம்?

அல்லற் பட்டாற்றா தரற்றிடுமோர் மானுடத்தைக்

கொல்லப் பகைவன் குறிவைத்துத் தாக்குகையில்

நீதியின் பக்கலிலே நில்லடாவென்றெனக்குச்

சோதியே நீதானே சொல்லெடுத்துத் தந்திட்டாய்!

பாவில் உரைத்தவைகள் பலிக்காது போகுமெனில்

நாவில் அமர்ந்திருந்து நல்ல தமிழ் தந்த

நீயும் பொய்யாமோ நிலமீதில்? இல்லையம்மா!

தேவீ! மெய் ஞானத் திருவுருவே தெய்வதமே

ஆவியுருக அடிபணிந்து நிற்கின்றேன்

நெஞ்சுருகி நின்னை நினைந்து வணங்குகிறேன்

தாயே! எனது தமிழினத்தைக் காப்பாற்று

எங்கள் உரிமைகளை எம்மினிய தாயகத்தை

செங்களத்தில் ஆடும் எம் செல்வப் புதல்வர்களை

எண்ணி உனது இனிய முகம் காட்டு!

கண்ணைத் திறந்து கருணை ஒளி பாய்ச்சு!

முன்னேறிச் செல்லுகிற மூர்க்கப் பெரும் பகையை

அன்னாய் உனது அழகுப் பிறை நுதலின்

மூன்றாம் விழியால் முடித்துவிடு. எங்கெல்லாம்

ஆட்சியதிகாரம் அதர்மம் புரிகிறதோ

பாய்ச்சு உன் சூலப் படையைத் தருமங் கோல்

ஓச்சச் செய்! என்று உயிர் கரைந்து வேண்டுகிறேன்

தாயே! உனது தயை எம்மேற் சேரட்டும்!

அன்னையே! உன்றன் அருளெம் மேற் பாயட்டும்!

நீதியாய் நின்று நிலத்தில் ஒளிபாய்ச்சும்

சோதியே எம்மினத்தைச் சோதித்தது போதும்

ஆதியே துர்க்கா அருளை நிலை நிறுத்து

வேதப் பொருளே நல் வித்யா அறமுரைக்கும்

நாதமாய் நின்றெனக்கு நல்ல தமிழ் தந்தாய்

தேவீ நினது திருவருளாலன்றோ என்

நாவில் கவிதை நயம் சேர வாழ்ந்திருந்தேன்!

ஆழ அளந்து அறஞ்சேர்த்துச் சொல்லிய என்

நீள வரிகளிலே நீயிருந்தாய் என்றன்றோ

அன்று நினைந்திருந்தேன் அத்தனையும் பொய்யாமோ!

வென்று அதம்புரியும் வெம்பகையின் பக்கலில்த்தான்

நீதியுண்டாமோ! நியாயம் சரிந்திடுமோ!

வன்னியினுட் சென்று வதம் புரியக் காத்திருக்கும்

சிங்களத்தின் ஆணவத்தைச் சிதைத்தழிக்க வேண்டுமடி

தாயே உனது தயை வேண்டி நிற்கின்றேன்

மாயா மனமிரங்கி வா!

சந்தோசம் ஆயிரம் சொல்லிட முடியா வார்த்தைகளில்

தயவு செய்து அடம் பறி பொகுது என்று அலட்சியம் அல்லது நம்பிக்கை கொள்ளாதீர்கள் இவ்வாறே வெகு விரiவில் சிங்கள சிப்பாய்களின் வீரத்தை புலம்பும் அரசு ஆயிரக்கணக்கில் சிதறுண்டு கிடக்கப் போகும் சிங்கள விப்பாய்களின் உடலத்தை ஏற்காமல் வன்னியில் கொளுத்தப்பேவது இதைப்போலத் தான் நடக்கப் பொகுது .

இந்தக்கட்டுரையுடன் கருவின் கவிதை கலந்து என்னை மெய்மறக்கச்செய்தது... நன்றி கரு

கருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவராம் நல்லா இருக்கு. எனக்கும் படிக்க பகத்தி பரவசம் பீறிட்டு பாயுது. உதை கால் கை முகம் கழுவிப்போட்டு பயபகத்தியோட 3 தரம் காலை மாலை உரக்கப் படிச்சா 57 ஆவது படையணி சிதைஞ்சுபோகுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கவிதையைப் பாராட்டிய சூறாவளிக்கு நன்றி.

அடுத்தது குறுக்கால போவானவர்களே! நிச்சயமாகப் பக்தியோடு வேண்டினால் பலன் கிடைக்கும். நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு அம்பிகை சரண் புகுந்தால் அதிக பலன் பெறலாம்.

ஆனால் இந்தக் கவிதையைத்தான் படிக்க வேண்டுமென்றில்லை. உங்களுடைய ஊராக்கள் எழுதிய பக்திமிக்க கவிதைகளையும் படிக்கலாம்.

அல்லது கவிதையை விட்டுவிட்டு மனதாலும் பிரார்த்தனை பண்ணலாம்.

இருந்திற்று கைகால் முகத்தை மட்டும் கழுவிக் கொண்டிருக்காமல் இடைக்கிடை குளியுங்கோ! பிரார்த்தனைக்கும் நல்லது, உடம்புக்கும் நல்லது, கூடப் புழங்கிறவைக்கும் நல்லது.

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

கருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவராம் நல்லா இருக்கு. எனக்கும் படிக்க பகத்தி பரவசம் பீறிட்டு பாயுது. உதை கால் கை முகம் கழுவிப்போட்டு பயபகத்தியோட 3 தரம் காலை மாலை உரக்கப் படிச்சா 57 ஆவது படையணி சிதைஞ்சுபோகுமோ?

வேறு கருத்தே வராதா???

அல்லது

இனம்மாறியாச்சா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேறு கருத்தே வராதா???

அல்லது

இனம்மாறியாச்சா???

அவரைப் பச்சோந்தி எண்டு சொல்ல வாறியளோ? :mellow:

முதலில் கவிதையைப் பாராட்டிய சூறாவளிக்கு நன்றி.

அடுத்தது குறுக்கால போவானவர்களே! நிச்சயமாகப் பக்தியோடு வேண்டினால் பலன் கிடைக்கும். நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு அம்பிகை சரண் புகுந்தால் அதிக பலன் பெறலாம்.

ஆனால் இந்தக் கவிதையைத்தான் படிக்க வேண்டுமென்றில்லை. உங்களுடைய ஊராக்கள் எழுதிய பக்திமிக்க கவிதைகளையும் படிக்கலாம்.

அல்லது கவிதையை விட்டுவிட்டு மனதாலும் பிரார்த்தனை பண்ணலாம்.

இருந்திற்று கைகால் முகத்தை மட்டும் கழுவிக் கொண்டிருக்காமல் இடைக்கிடை குளியுங்கோ! பிரார்த்தனைக்கும் நல்லது, உடம்புக்கும் நல்லது, கூடப் புழங்கிறவைக்கும் நல்லது.

நான் குளிப்பது குறைவு. ஆனால் பக்தியோடு வேண்டி பலன் கிடைக்கும் எண்டால் ஒவ்வொரு நாளும் குளிச்சுபோட்டு வேண்டுதல் செய்ய தயார். உங்களுக்கு பக்தியோடு வேண்டி கிடைச்ச விடையங்களை பட்டியல் இட்டு என்னை நம்பவச்சியள் எண்டா நானும் தொடங்கலாம்.

வேறு கருத்தே வராதா???

அல்லது

இனம்மாறியாச்சா???

நான் எப்பவும் சிறீலங்கன் பிறப்பால். வெளிநாட்டுக்காறர் யாரும் கேட்டா வசதிக்கா பெருமைக்காக இந்தியன் எண்டு தான் சொல்லிறனான். நான் எந்த இனமாக இருக்கும் எண்டு நீங்கள் குளம்பிக் கொண்டிருக்கிறயள்?

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவராம் நல்லா இருக்கு. எனக்கும் படிக்க பகத்தி பரவசம் பீறிட்டு பாயுது. உதை கால் கை முகம் கழுவிப்போட்டு பயபகத்தியோட 3 தரம் காலை மாலை உரக்கப் படிச்சா 57 ஆவது படையணி சிதைஞ்சுபோகுமோ?

குறுக்கர் இது எந்த ஊர் குசும்பு? :mellow:

அவரைப் பச்சோந்தி எண்டு சொல்ல வாறியளோ? :mellow:
:huh:
  • கருத்துக்கள உறவுகள்

வேறு ஒரு பகுதியில் குறுக்கரை ஓணான் என்று யாரோ சொன்ன மாதிரி கிடக்குது ......... :mellow:

என்னவோ குறுக்கருக்கு , ஆட்களிடம் பேச்சு வாங்கிற ராசி போல ....... :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்பவும் சிறீலங்கன் பிறப்பால்.

உதை முதல் மாற்றும்

சிறீலங்கன் தமிழில் எழுதமுடியாது

நீர் எந்த இனமாக இருக்கும் எண்டு நான் குளம்பிக் கொண்டிருக்கொண்டிருக்கவேண்

நான் எப்பவும் சிறீலங்கன் பிறப்பால்.

உதை முதல் மாற்றும்

சிறீலங்கன் தமிழில் எழுதமுடியாது

நீர் எந்த இனமாக இருக்கும் எண்டு நான் குளம்பிக் கொண்டிருக்கொண்டிருக்கவேண்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கணும்

நான்சிறீலங்கனுடன் கதைப்பதில்லை

இனம்தான் முக்கியமே தவிர

சமயமல்ல...........

மொழிதான் முக்கியமே தவிர

வாழும் நாடல்ல..............

நான் குளிப்பது குறைவு. ஆனால் பக்தியோடு வேண்டி பலன் கிடைக்கும் எண்டால் ஒவ்வொரு நாளும் குளிச்சுபோட்டு வேண்டுதல் செய்ய தயார். உங்களுக்கு பக்தியோடு வேண்டி கிடைச்ச விடையங்களை பட்டியல் இட்டு என்னை நம்பவச்சியள் எண்டா நானும் தொடங்கலாம்.

நான் எப்பவும் சிறீலங்கன் பிறப்பால். வெளிநாட்டுக்காறர் யாரும் கேட்டா வசதிக்கா பெருமைக்காக இந்தியன் எண்டு தான் சொல்லிறனான். நான் எந்த இனமாக இருக்கும் எண்டு நீங்கள் குளம்பிக் கொண்டிருக்கிறயள்?

அப்போ இரண்டும்கெட்டான் இணமாக இருக்குமோ?அப்படியும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறப்பால் சிறீலங்கன் இந்து. இதுக்குள்ளை ஏன் தமிழ போட்டு குளப்புறியள்?

சிறீலங்கா எங்கை எண்டு தெரியாத ஆக்களுக்கு இந்தியன் எண்டா உடனை விளங்குது பிரச்சனை முடிச்சுது.

உங்களை எந்த இனம் எண்டு கேக்கவிலையே? என்னை இனமாறியாச்சோ எண்டு கேட்டதுக்கு தானே பதில் தந்தனான் ஏன் குளம்பிறியள் நான் எப்பவும் சிறீலங்கன் தான் எண்டு.

நீர் இலங்கையர் என்றால் நாம் தொடர்ந்து கதைக்கலாம்

சிலோன்காரன் என்றால்கூட கதைக்கலாம்

சிறிலங்கன் என்றால் வேண்டாம்...............???

  • கருத்துக்கள உறவுகள்

நீர் இலங்கையர் என்றால் நாம் தொடர்ந்து கதைக்கலாம்

சிலோன்காரன் என்றால்கூட கதைக்கலாம்

சிறிலங்கன் என்றால் வேண்டாம்...............???

மூண்டுக்கும் என்ன வித்தியாசம்? சுதந்திர கீதம் படிக்கவில்லையா?

ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா

நமோ நமோ நமோ நமோ தாயே

நல்லெழில் பொலி சீரணி

நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா

ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்

நறுஞ்சோலை கொள் லங்கா

நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்

நமதுதி ஏல் தாயே

நமதலை நினதடி மேல் வைத்தோமே

நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா

................

:mellow::huh:
  • கருத்துக்கள உறவுகள்

மூண்டுக்கும் என்ன வித்தியாசம்? சுதந்திர கீதம் படிக்கவில்லையா?

ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா

நமோ நமோ நமோ நமோ தாயே

நல்லெழில் பொலி சீரணி

நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா

ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்

நறுஞ்சோலை கொள் லங்கா

நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்

நமதுதி ஏல் தாயே

நமதலை நினதடி மேல் வைத்தோமே

நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா

................

இலங்கையர் சிலோன்காரன் என்பது ஆதியில் இருந்தது

சிறிலங்கன் என்பது எம்மீது வலுக்கட்டாயமாக புகுத்தப்பட்டது

எல்லாவற்றிற்கும் சிறிலங்கா என பெயரை மாற்றிய சிறிலங்கா

இன்றுவரை அங்கிருந்து வரும் தேயிலையில் மட்டும் ஏன் சிலோன்தேயிலை என்கிறது

ஓ.........வியாபாரமே????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.