Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை எதிர்த்து செயற்பட்ட பரீஸ் மக்களாம்..., அபாண்ட பிரச்சாரம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேங்காய்கள் சிதறும் தீவிரம் அதிகரித்தது. பக்தர்கள் போட்டிக்கு உடைப்பதாய்ப் புரிந்து கொண்டேன். பட பட வெனச் சிதறி விழுந்த தேங்காய்ச் சொட்டுகள் நிமிர்ந்தும் கவிழ்ந்தும் கிடந்தன. ஊர் பெயர்ந்து ஓடிய நாட்களில் அரியாலையில், எழுதுமட்டுவாளில் அரிசி மாவிற்குள் இளநீர் விட்டு தேங்காய்த் திருவலைத் தூவி பசியாறியிருக்கிறேன். இன்னமும் அங்கே பசியாற தேங்காய்கள் தேவைப்படுகின்றன.

http://blog.sajeek.com/?p=11

  • Replies 74
  • Views 7.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இங்கே இணைக்க படுவதுக்கு இந்த ஒரு பிரச்சாரத்தை அதிகமாக முன்னெடுத்த யாழ்கள வல்லுனர்களையே கேள்விக்கு உட்படுத்துவதாலாகும்... இதுக்கான அவர்களின் எதிர் பிரச்சாரமாக என்னதை திட்டமிட்டு வந்தார்கள் என்பதை மக்கள் அறியவேண்டும்... இதை ஏற்படுத்தி கொடுத்தவர்களும் அனுசரனை வளங்கியவர்களுமே இதன் பாதிப்புகளையும் ஏற்க வேண்டும்...

கடந்த முறை விநாயகர் கோயில் உற்சவத்தின் போது " அடியார்களே நான் பசியாய் இருக்கிறேன்" எனும் உருக்கமான சுலோகம் அடங்கிய துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது... அதில் உடைக்கும் தேங்காய்களுக்கான பண்ணவிரையத்தையும், அதன்பின் பரீஸ் வீதிகளை சுத்த படுத்தும் வேலைக்கான பணம் கொடுப்பனவு விரையத்தையும் சேர்த்து வன்னி மக்களின் அவலத்தை காக்க உதவுங்கள் எனும் வேண்டுகோள் முன் வைக்க பட்டது...

அதனை ஒட்டி யாழ்களத்தின் வழமையாக கோயில்களை இடிப்பவர்களும், மணிகளை கள்ளட்டுபவர்களுமாக தங்களது பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்... வாசிக்கும்போது உணர்ச்சி எல்லாம் பீரிட்டு எழும்பியது... ஆனால் விளைவுதான் வேதனையானது...

சர்வதேச அரங்கின் புலிகளுக்கு எதிராக பிரச்சாரத்துக்காக ஏற்படுத்த பட்ட இணையம் ஒண்று புலிகளின் கோரிக்கையையும், அறிவுரையும் உதாசீனம் செய்து ஆயிரக்கணக்கான மக்கள் விநாயகர் பூசையில் தோங்காய்களை உடைத்து புலிகளுக்கு பதிலடி எனும் விதத்தில் செய்தி (கட்டுரை வடிவிலேயே) வெளியிட்டு உள்ளது...

இந்த பிரச்சாரத்தை புலிகள் செய்யவில்லை என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.. அப்படி பிரச்சாரம் செய்த மற்றவர்கள் விட்ட தவறுகள் என்ன... விளைவுகளை அறியாமல் பிரச்சாரம் செய்வதால் இப்படித்தான் விளைவு எல்லாரையும் தாக்கும்..

இந்த செய்திகளின் பாதிப்பு என்பது ஒட்டு மொத்த தமிழினத்தின் மீதான பாதிப்புதான்... இங்கே பிரச்சாரம் செய்பவர்கள் இது யாரின் தவறு என்பதை தெளிவு படுத்த வேண்டும்...

ஒருவேலையை உங்களால் செய்ய முடியாது என அறிந்தால் அதை செய்யாமல் இருப்பதே எல்லாருக்கும் நல்லது...

அந்த இணையத்தின் இணைப்பை தர விருப்பம் இல்லை...

அந்த ஊடகங்களின் தகவல்களுக்கும் உண்மைத்தன்மைக்கும் பொருத்தம் என்ற ஒன்று இருந்தால் அல்லவா அவை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும் புலிமேல் அவதூறு சுமத்துவதை தொழிலாக செய்பவர்கள் தானே அவர்கள்.

கடவுள் இல்லை என்ற அடிப்படையில் சொல்வதாக எடுக்காமல் நல்ல நோக்கத்தின் அடிப்படியில் சொல்பவையாக ஏன் எடுக்கப்படக் கூடாது?

தெருவே வீடாகி அடுத்த நிமிடத்தின் நிலமை கேள்விக்குறியாகி மக்கள்துன்பம் மலிந்து கிடக்கும் போது நல்லூர்கந்தனுக்கு ஆடம்பர விழா அவசியம்தானா? இது கடவுள் நம்பிக்கை உடையவனுக்கு வரக்கூடாத கேள்விதானா?

கோவிலுக்கு கொட்டுகின்ற பணத்தை மக்கள்பட்டினியை துடைக்க பயன்படுத்து என்கின்ற சிந்தனை கடவுளை நம்புகின்றவனுக்கு வரக்கூடாததா?

இவை கடவுளை நம்பாதவன் சொன்னால் ஏற்க்கக் கூடாதா?

உங்களுக்கு விடயம் தெரியாதா? அனைத்து தமிழர்களுமே புலிகளுக்கு எதிரானவர்கள்தான். ஜெயதேவன் நடத்தும் கோவிலுக்குச் சென்று லண்டன் வாழ் மக்கள், தாம் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று நிரூபித்து விட்டார்கள். படையினர் முன்னின்று நடத்திய நல்லூர் திருவிழாவிற்கு சென்று தாமும் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று யாழ் குடா மக்களும் நிரூபித்து விட்டார்கள். பாரிஸில் தேங்காய் உடைத்து பாரீஸ் மக்களும் அதையே சொல்லி விட்டார்கள்.

உதுதான் அப்பொழுதே தேசியத் தலைவருக்கு சிலர் சொன்னவர்கள்

ஒருவேலையை உங்களால் செய்ய முடியாது என அறிந்தால் அதை செய்யாமல் இருப்பதே எல்லாருக்கும் நல்லது....

ஆனால் அவர் கேட்டால்தானே??!!!

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் விடுதலைப் போராட்டம் தமிழீழ விடுதலையைத் தவிர, எந்த நோக்கத்திற்காகவும் ஆரம்பிக்கவோ, நடத்தவோ இல்லை.

ஐயோ..

பெண் விடுதலை சமூக விடுதலை.. இதெல்லாம் அப்ப நாங்களோ செய்ய வேணும்..

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ..

பெண் விடுதலை சமூக விடுதலை.. இதெல்லாம் அப்ப நாங்களோ செய்ய வேணும்..

ஏன் அதுக்காகத் தான் போராட்டம் ஆரம்பிச்சது என்கின்றீர்களா?

ஏன் உந்தச் சுற்றிவளைப்புக் கதைகள் நேரடியாகச் சொல்லுங்கோவன். இந்தப் போராட்டம் என்ன நோக்கத்திற்கு ஆரம்பித்தது என்று.

உங்களுக்கு விடயம் தெரியாதா? அனைத்து தமிழர்களுமே புலிகளுக்கு எதிரானவர்கள்தான். ஜெயதேவன் நடத்தும் கோவிலுக்குச் சென்று லண்டன் வாழ் மக்கள், தாம் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று நிரூபித்து விட்டார்கள். படையினர் முன்னின்று நடத்திய நல்லூர் திருவிழாவிற்கு சென்று தாமும் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று யாழ் குடா மக்களும் நிரூபித்து விட்டார்கள். பாரிஸில் தேங்காய் உடைத்து பாரீஸ் மக்களும் அதையே சொல்லி விட்டார்கள்.

உதுதான் அப்பொழுதே தேசியத் தலைவருக்கு சிலர் சொன்னவர்கள்

ஒருவேலையை உங்களால் செய்ய முடியாது என அறிந்தால் அதை செய்யாமல் இருப்பதே எல்லாருக்கும் நல்லது....

ஆனால் அவர் கேட்டால்தானே??!!!

வாழ்த்துக்கள் சபேசன். இந்தக் கோதாரியை நிருபிக்கத் தானே தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், அது சார்ந்த நிகழ்வுகளையும் பாவிக்கத் துணிந்தீர்கள். அதைக் கேவலப்படுத்தத் துணிந்தீர்கள்!

ஜெயதேவன் கோவிலை அபகரிக்க முன்பு இதே கேள்வியைக் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நீங்கள் புலத்துக்க ஓடித்தப்பியதையும் எதிரி புலிக்கு எதிரானது என்று தான் சொல்கின்றான். அதுவும் எவ்வகை நிருபிப்பு??

இதையும் தேசியத்தலைவருக்கு யாராவது சொல்லியிருப்பார்களோ என்னமோ தெரியவில்லை. ஆனால் அக்காலப் பாடல்கள் சொல்லின. " எம் நாட்டு இளைஞர் கூட்டம் வேற்று நாட்டினில் அலைகையில், சொந்த மண்ணின் விடுதலைப் போரில் ....... கதை சொல்லும் என்று"

தூயவன்

எது அப்பட்டமான பொய்? வடக்கிலிருந்து இஸ்லாமிய தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு வெற்றிவேலின் அரசியல் சாயம் பூசும் முயற்சியா? அல்லது அந்த சம்பவத்தை நியாயப்படுத்தி முன்பு மதரீதியாக இந்து மத வெறியர்கள் யாழ்களத்தில் கொட்டிய வக்கிரங்கள் பொய்யா? இல்லை நெடுக்காலைபோவன் இஸ்லாமிய மிதவாதத்தோடு முடிச்சுப் போட்டு காட்டும் அவரது இந்து மதவெறி பொய்யா?

இல்லை தென்னிலங்கையில் பொளத்தர்கள் பாதிக்கப்படும் போது போராட்ட ஆதரவுத் தளத்தில் இருந்து கொண்டு இந்து மதவெறியில் கூக்குரல் இடுவது பொய்யா?

ஏற்கனவே வெற்றிவேலுக்கு சொன்னதை தான் மீண்டும் சொல்ல முடியும். போராட்டத்தில் நடக்கும் சம்பவத்திற்கான மத அடிப்படையிலான நியாயப்பாட்டை இந்துமதம் சார்ந்த அமைப்பாக இனங்காட்டிய படி வைத்தால் அதை இலகுவாக அடையாளம் கண்டு ஒதுக்கி விடலாம். தற்பொழுது போராடுவதும் இந்துமதத்திற்காகத்தான் என்ற பாணியில் போராட்டித்திற்குள் ஒளித்திருந்து கொண்டு நடக்கும் நிகழ்வுகளிற்கு இந்துமதத்தை முன்னிலைப்படுத்தி அர்த்தம் கற்பிக்க முனைவது தான் ஆபத்தானது. இதன் பலாபலனாகத்தான் இந்துக்களுக்கும் பொளத்தர்களுக்கும் இடையிலான பிணக்காகவும் புலிகளும் போராட்டமும் இஸ்லாமியர்களிற்கு எதிரானது என்றும் இனச் சுத்திகரிப்புச் செய்தார்கள் போன்ற கருத்தியல் தற்பொழுது நிலவுகிறது.

--

பெரியார் போராடியது பார்ப்பணர்களும் இந்து மதமும் கடவுளின் பெயரால் தமிழ்ச் சமூகத்தில் கொண்டிருந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக. பிரபாகரன் போராடுவது சிங்கள மேலாதிக்க அடக்குமுறைக்கு எதிரான தமிழ் இன விடுதலைக்கு.

உலகில் இதுவரை மக்களின் ஆதரவை கவனத்தைப் பெற்ற எல்லாப் போராட்டங்களிற்கும் (தனியே பெரியாரின் பகுத்தறிவுப் போராட்டமும் இலங்கைத் தீவில் நடக்கு தமிழர்களின் உரிமைப் போராட்டமும் மாத்திரமல்ல) ஒரு ஒற்றுமை இருக்கு.

ஏதோ ஒரு கோட்பாடு சித்தாந்தத்தின் பெயரால் அல்லது அடிப்படையில் ஒரு குழுமம் இன்னொரு குழுமத்தின் மீது

செலுத்தி வந்த ஆக்கிரமிப்பு அல்லது அடக்குமுறை என்பது தான் அது.

பார்ப்பணர்கள் வரணாச்சிரமம் என்றும் இந்து மதம் என்றும் தமிழ்ச் சமூகத்தை கூறுபோட்டு கடவுளின் பெயரால் அடிமைப்படுத்தாவிட்டால் பெரியார் போராடியிருக்க மாட்டார் அதற்கான ஆதரவை கொடுக்கும் சூழலும் நியாயமும் இருந்திருக்காது.

சிங்களவர்கள் தமிழர்களை சம உரிமை உடையவர்களாக நடத்தியிருந்தால் பிரபாகரன் போராடியிருக்கமாட்டார். சிறுபான்மையினரின் இனத்துவ அடையாளத்தை மதித்து உள்வாங்கியதாக இலங்கைத் தீவின் தேசியம் சமத்துவமானதாக இருந்திருந்தால் 2 நாடுகளிற்கான நியாயம் இல்லை.

இது தான் 2 போராட்டத்திற்கும் இருக்கக் கூடிய ஒற்றுமையும் வேற்றுமையும்.

அடிப்படையில் அவதாரம் மறுபிறவி முற்பிறப்பு எல்லாம் வல்லவர் என்று கற்பனையில் சுகத்தை அனுபவிப்பவர்கள் மத நம்பிக்கையில் திளைப்பவர்கள் முக்கியமாக இந்து மதத்தவர்கள். அந்த வகையில் பிரபாகரன் பெரியாரின் மறுபிறவி என்ற உங்களது அங்கலாய்ப்புகளிற்கு மற்றவர்கள் என்ன செய்ய முடியும்?

--

எமது போராட்டத்தைப் பொறுத்தவரை தேவைகளும் பயணிக்க வேண்டிய தூரமும் நீண்டது. எதிரியோடு ஒப்பிடும் போது எண்ணிக்கையில் பொருளாதார ரீதியில் பல மடங்கு சிறயவர்களாக எமது தேவைகளை உணர்ந்து அது நோக்கிச் செயற்பட வைக்க வேண்டிய அவசிய தேவையிருக்கிறது.

சிறீலங்கா மாத்திரமல்ல இந்திய மேற்குலகு கொள்கை வகுப்பாளர்கள் முடிவுகளை எடுப்பது தரவுகளின் அடிப்படையில். 5...6 லட்சம் புலம்பெயர்ந்தவர்களின் பொருளாதார பலம் என்ன அதில் எத்தனை மில்லியன்கள் கோயில்களில் முடக்குப்பட்டிருக்கு என்று கணக்கு பார்த்தாலே எமது போராட்டத்தினை அடுத்த படி நிலைக்கு உயர்த்தி தக்கவைக்க முடியாது என்ற உண்மை அப்பட்டமாகும். இப்படிப்பட்ட எமது பலவீனங்களை வார்த்தை ஜாலங்களால் மூடிமறைத்து இராணுவ ஆய்வு செய்து வெற்றி கண்டுவிட முடியாது. வெறுமனே அதீத நம்பிக்கையும் கொக்கரிப்பும் (hubris) நாட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தரப் போவதில்லை. எதிரியும் சர்வதேசமும் அந்தளவிற்கு முட்டாள்கள் அல்ல.

அமெரிக்காவின் Brookings Institute ஆய்வாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணை வளங்களில் நாம் தங்கியிருக்கும் நிலையை மாற்ற வேண்டும். சூழல் மாசுபடுவதை குறைக்கவோ அல்லது அவர்கள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்க கூடிய துரும்பை மத்திய கிழக்கு நாடுகள் வைத்திருக்கும் என்றதுக்கும் அல்ல. அதிகரித்த விலையில் அவர்களது வளத்தினை இறக்குமதி செய்து எமது நுகர்வினை தொடர்ந்தால் அது எம்மை பொருளாதாரரீதியில் பலவீனமாக்கும் அவர்களை மேலதிகமாகப் பலப்படுத்துகிறது. இந்த பொருளாதாரரீதியில் மாற்ற மடைந்த சமன்பாடு நீடித்தால் அது இன்னொருவர் பொருளாதார ரீதியில் பலமடைந்து தமக்கு ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக எதிர்காலத்தில் மாற்றமடையலாம் என்று. இதே கண்ணோட்டத்தோடு தான் சீனாவின் ஏற்றுமதியையும் சீனத் தயாரிப்பு நுகர்வுகளையும் அதன் மூலம் சீனா பொருளாதாரரீதியில் பலப்படுவதையும் ஆபத்தாக பார்க்கிறார்கள். ஒரு இனத்தின் தேசியத்தின் பாதுகாப்பும் அதன் பொருளாதார பலமும் மனிதவளமும் எந்தளவிற்கு பின்னிப்பிணைந்திருக்கிறது என்பதை ஏனை நாடுகளைப் பார்த்தாகுதல் புரிய முயற்சியுங்கள். அவர்கள் போர்க்காலத்தில் என்னென்னவற்றிற்கு தமது நேரத்தையும் பொருளாதாரத்தையும் செலவிட்டார்கள் என்னென்னவற்றில் இருந்து திசை திருப்பி தேசிய பாதுகாப்பு தேவைகளை எதிர்கொண்டார்கள் என்பதை மற்றவர்களின் அனுபவ பட்டறிவின் மூலம் ஆகுதல் தெரிந்து கொள்ளுங்கள். இவை ஒன்றும் தேவையில்லை கடவுள் நம்பக்கம் இருக்கிறார் அவருக்கு இன்னம் 100 லீற்றர் பாலும் ஊத்தி 300 தேங்காயும் உடைச்சு 5 லட்சத்துக்கு தேர்கட்டுவம் என்று இருந்தால் வெல்லப் போவது சிங்கள பேரினவாதம் அழியப்போவது தமிழர்கள். அதை கரும்புலிகளாலும் தடுக்க முடியாது.

பகுத்தறிவு பற்றிப் பேசுபவர்கள் தான் மூர்க்கமாக சினிமாவினால் எமது பொருளாதார மனிதவளங்கள் சீரழிக்கப்படுவது பற்றியும் போசுகிறார்கள். எனவே இதை இந்துமதத்திற்கு எதிரானது என்று திசை திருப்பாது இன்றை காலகட்டத்தின் தேவைகளை உணர வேண்டியதன் அடிப்படையில் பாருங்கள்.

Edited by kurukaalapoovan

ஒரு விடுதலைப் போராட்டம் என்பது வெறுமனே நிலங்களை மீட்பது அல்ல. ஒரு இனம் தன்னை அடிமைப்படுத்தியிருக்கும் அனைத்து தளைகளிலும் இருந்து விடுவிப்பதுதான் விடுதலைப் போராட்டம்.

பெண் விடுதலை, சமூக விடுதலை என்று பல விடயங்கள் அதற்குள் அடங்கியிருக்கும்.

அனைத்துப் போரட்டங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படும். சில போராட்டங்களில் ஏற்படும் பின்னடைவுகளை எதிரி பரப்புரை செய்வான் என்பதற்காக நாம் போராடாமல் இருக்க முடியாது.

30 ஆண்டுகளாக எமது விடுதலைப் போர் நடைபெறுகின்றது. எத்தனை தடைகள்? எத்தனை எதிரிகள்? எல்லாவற்றையும் தாண்டித்தான் எமது விடுதலைப் போராட்டம் நடை போடுகின்றது.

ஒரு நாள் தமிழீழ நிலங்கள் முழுவதும் எமது கட்டுப்பாட்டில் இருக்கும். அடுத்த நாளே நாம் காடுகளுக்குள் நிற்க வேண்டி வரும்.

இவற்றை எல்லாம் நினைத்து கலங்கி போராடாமல் இருக்க முடியுமா?

ஆகவே நண்பர்களே! இந்தப் பூச்சாண்டி காட்டுகின்ற வேலைகளை தயவு செய்து விட்டுவிட்டு எமக்கு தோள் கொடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா?????????

சும்மா பாரீசில் நடந்த ஒரு கோயில் திருவிழாவில் தேங்காயை வீணாக உடைக்கவேண்டாம் என்று ஒரு நல்லமனம் சொல்லியது

அதை பலபேர் ஏற்றார்கள்

ஏனெனில் போனமுறையுடன் ஒப்பிடும்போது இந்தமுறை 10வீதம்கூட இல்லை

ஆனால் அந்த பத்துவீதத்தை படம் எடுத்து எதிரியும் துரோகியும் படம் காட்ட

இவையள் யாழ்.களத்தில் படம் காட்டினம்

தங்களது வர்க்கபுத்திகளை இங்க விதைக்கினம்

இயக்கம்- புலி - தலைவர்

அவரது கல்யாணம்............????

பலதையும் ஆராயினம்

கட்டுரை எழுதினம்

சும்மா இங்கையுள்ளவையை பார்த்து கைநீட்டமுன்னம்

உங்களுக்கு அதற்கு தகுதியிருக்கா என்று ஒருக்கா கேளுங்கோ????

நாங்கள் நீங்கள் விமர்சிக்கும் அதே பாரீசில்தான் இருக்கிறம்

இங்கே சும்மா நினைத்தமாதிரி எல்லோரும் ஆட முடியாது

அதை அவை அவை பார்ப்பினம்

உங்கட மதம் போதனை பெரியார் நாத்திகம் அபிசேகம் ஆராதனை .........................

உங்களோட மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் மேதாவிகளே

எமக்கு வேண்டாம் உங்கள் இலவச ஆலோசனை

வேண்டும்போது கடிதம் அனுப்புகின்றோம்

இதில ஒன்றுமட்டும் உறுதியா தெரியுது.... உந்த தேங்காய்கள் வன்னிக்கு போறதுக்கிடையில, இராணுவம் மக்களுக்கு பால்வார்த்திடும்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நெடுக்காலைபோவன் இஸ்லாமிய மிதவாதத்தோடு முடிச்சுப் போட்டு காட்டும் அவரது இந்து மதவெறி பொய்யா?

நெடுக்காலபோவன்.. எங்கே இஸ்லாமிய மிதவாதத்தோடு முடிச்சுப் போட்டு.. இந்து மத வெறியை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை இதை எழுதியவர் இனங்காட்ட வேண்டும்.

இக்களத்தில்.. அநாவசியமாக இஸ்லாமிய மக்களின் உணர்வுக்குரிய சில விடயங்களை பெளத்த பேரினவாதத்துடன் ஒப்பிட்டும்.. இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தக் கூடிய வகையில் வரையப்பட்ட.. காட்டூன்களை.. படங்களை இட்டும்.. வேடிக்கை காட்டியவர்கள் யார்..???! :icon_idea:

தமிழீழ தேசிய தலைமை சிங்கள பெளத்த பேரினவாதத்திடம் இருந்து உரிமைகளைப் பெறப் போராடுகிறது. ஆனால் ராமசாமி.. தமிழர்களை இந்து சமயத்திடம் இருந்து பாதுகாக்கப் போராடினார் என்று தமிழீழத் தேசிய தலைமையுடன் அவரை ஒப்பிடுவது மோசமான மத விரோத சிந்தனையின் வெளிப்பாடு.

தமிழீழ தேசிய தலைமை இந்துக்களாக உள்ள தமிழ் மக்களினதும்.. உரிமைக்காகப் போராடுகிறது.. கிறீஸ்தவ தமிழ் மக்களின் உரிமைக்காகவும் போராடுகிறது.. இஸ்லாமிய தமிழர்களின் உரிமையையும் அங்கீகரித்து நிற்கிறது. ஆனால்.. ராமசாமி போன்று கொலை வெறிபிடித்து தமிழர்களுக்குள் ஒரு பிரிவினரை கண்டால் அடியடா.. வெட்டடா என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கவில்லை. மக்களின் மதச் சுதந்திரத்தை நிராகரித்து நிற்கவில்லை. ராமசாமி.. ஒரு வெட்டு வேட்டு. அவரை தமிழீழ தேசிய தலைமையின் இலட்சிய இலக்கோடு ஒப்பிடுதல்... அல்லது அதற்குச் சமாந்திரமாக முன்னிறுத்தல்.. மிகவும் தவறானது மட்டுமன்றி கண்டிக்கத்தக்கதுமாகும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பிரச்சனை என்னெவென்றால், பாரீசில் தேங்காய் உடைத்தவர்கள் எவருமே தமிழ்த் தாயகத்துக்கு உதவே இல்லை என்று சொன்னவர்களா? அல்லது அங்கு அனுப்பும் பணத்தில்த்தான் தேங்காய் உடைத்தார்களா? மதத்தில் நம்பிக்கை வைப்பதும், விடுவதும் அவரவர் சொந்த விடயம். எவரும் மதத்தைக் காட்டி விடுதலையை மறுப்பதில்லை.

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டபோது இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் அதைத் தமது மதப் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை நிரூபிக்கவும் முடியாது. அதேபோல வடக்குக் கிழக்கில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட இந்து, கிறீஸ்த்தவ ஆலயங்களும் இருக்கு என்பதை எவரும் மறந்து விடவும் கூடாது.

இந்துமதம் என்பது தமிழர் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தது. மதமில்லாமல் கலாச்சாரம் இல்லை. அதேபோல் அரசியலில் மதம் ஆதிக்கம் செலுத்தியதுமில்லை.

புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர் நடத்தும் எல்லா நிகழ்வுகளையும் விமர்சிக்கத் தொடங்கினால் இறுதியில் எதுவுமே மிஞ்சப்போவதில்லை. இனிக் கலியாண வீடு, சாமத்திய வீடு, புதுமனை புகு வீடு, பரத நாட்டிய அரங்கேற்றம் எண்டு எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லுவம். அப்பத்தான் சனம் வன்னிக்குக் காசு அனுப்பும் !!!நடக்கும் என்கிறீர்களா? இது உதவி செய்யிற சனத்தையும் ஒரு கணம் யோசிக்க வைக்கும் வேலை ! புலிகளுக்கும் அதிக வெறுப்பைக் கொடுக்கும் வேலை !

சும்மா இருந்த சங்கை ஊதிக்ம் கெடுத்த கதை ஆகிவிடக் கூடாது.

ஒரு விடயம் மட்டும் தெளிவு. உண்டியலில் போட்ட காசில் ஒரு சிறு பகுதியாவது வன்னி போய் சேருது.... ஆனால் சிலர் வாதங்களால் வன்னியின் தேவை தீர்ந்து விடும் என நினைக்கிறார்கள். சோஸல் சோமாலிகள்.. :icon_idea:

  • தொடங்கியவர்

xxxxxxxxx

Edited by தயா

  • தொடங்கியவர்

xxxxxxx

Edited by தயா

தேவையற்ற விவாதம்

யாருக்கும் பிரயோசனமற்றது.

Edited by THEEPAN0007

ஐயோ ஐயோ..

இவ்வாறு நீங்கள் சிவப்பு பெரிய எழுத்துக்களில் போட..மனித உரிமை காப்பாளர்கள் கருத்துச் சுதந்திரவாதிகள் மற்றும் இன்னோரன்ன மனிதம் காப்போர் எல்லாம் சீறியெழுந்து வரப்போகிறார்களே.....ஆனால் இவ்விடயங்களுக்கு மட்டும் தான் சீறுவார்கள் சினப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இஸ்லாமிய உறவுகள் வெளியேற்றப்பட்டதற்கு இந்து மதம் தான் பொறுப்பு என்று எந்தச் சந்தர்ப்பத்திலும், உறுதிப்படுத்தமுடியுமா? யாழ்களத்தில் விவாதிப்பது எல்லர்ம உண்மையான பதில் ஆகாதே. அந்த நேரத்தில் வெளியேற்றப்பட்டதற்கு எல்லோரும் நியாயம் கொண்டிருப்பார்கள்... அது புலிகள் உற்பட..

இங்கே இந்தப் போராட்டம் என்பதை இந்து மதத்து்ககு எதிரானது என்று காட்ட சில கும்பல்கள் யாழ்களத்தில் முனைவதால் தானே இத்தனை பிரச்சனைகள் எழுகின்றன. ஆரம்பத்தில் நல்லூர்க்கந்தனில் திருவிழா வைப்பது பற்றி எழுதியது நெடுக்கலாபோவான். மற்றவர்கள் எல்லோரும் அமைதியாகத் தான் இருந்தார்கள். அல்லது மெளமாக ஆதரித்தார்கள். அங்கே மதம் பற்றிய எந்தக் கண்ணோட்டமும் இல்லாமல், அது சிங்கள அரசுக்கு எதிரான ஒரு சக்தியாக மக்கள் மாற வேண்டும் என்ற தேவையை உணர்த்துவதாக இருந்தது.

அவ்வாறே புலத்தில் தேங்காய் உடைப்பது பற்றிய விமர்சனமும், தேவையற்ற செலவைக் குறைப்பதை மையப்படுத்தியே அமைந்தது. அதற்கு நெடுக்காலபோவன், வெற்றி உற்பட்ட பலர் ஆதரவளித்தார்கள். அங்கே மதங்கள் பற்றிய சிந்தனை தவிர்த்து மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமேஇருந்தது.

ஆனால் இங்கே உள்ள திராவிட வெறிபிடித்த சிலர், அதை இந்து மதத்திற்கு எதிரான பிரச்சாரமாக மாற்ற முனைந்தார்கள். அதனால் தான் அதை எதிர்த்து நெடுக்காலபோவன் உற்பட்ட பலர் கருத்து எழுதினார்கள். அதுவும் தேங்காய் மட்டுமல்லாமல், ஏனைய செலவுகளையும் தவிர்க்க கருத்து முன் வைக்கப்பட்டது.

இப்படிப் பிரச்சனை திசை திரும்பக் காரணம், திராவிடவெறி பிடித்தவர்கள் தான். அதை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். இதில் கூட உங்களின் வெறியைக் காட்டி நிற்கின்றீர்கள். பெளத்த மேலாதிக்க வெறிபிடித்தவர்களைக் காலம் காலமாக நீங்கள் ஆதரித்துத் தான் வந்திருக்கின்றீர்கள். அது உங்களின் பல கருத்துக்களில் அவதானித்த ஒன்று. ஒரு சிலருக்காக எல்லாப் பெளத்தரையும் சாடக் கூடாது எனத் தத்துவம் எழுதும் தாங்கள் யரோ சிலருக்காக இந்து மதக்காரர்கள் முழுப்பேரையும் குற்றம் சாட்டுவது எந்த விதியில் அமைந்தது என்று தெரியவில்லை. அவ்வாறே இங்கே இஸ்லாமிய மிதவாதம் என்று அதற்கும் சப்பை கொட்டியதையும் அவதானிக்க முடிந்தது....

---------------------------

ராமசாமி போராடியது அவரது சுயவிளம்பரத் தேவைகளுக்கும், தன் பெயரை நிறுத்திக் கொள்ளவுமே. அப்படிப்பட்ட ஒருவரைத் தமிழீழத் தேசியத் தலைவரோடு இணைத்துக் கதைக்க வேண்டிய எத் தேவையும் எழவில்லை. கோவில்களில் அதிகாரத்தை வைத்து மற்றவர்கள் அடிமையாக்கி வைத்த குணம் ராமசாமிக்கு. மறுபக்கம் விளம்பரம் தேடப் பகுத்திறிவு வாதம் என்ற பெயிரில் குப்பையை விதைத்தார்

மறுபிறப்பே பொய் என்று மாண்டுபோன ஒருவரை வைத்து அவரது அல்லைக்கைகள் ஏன் அவரின் மறுபிறப்பு பிரபாகரன் என்று விளம்பரம் செய்ய வேண்டும்.

---------

கடவுளுக்குப் பால் ஊத்தி, பூ வைச்சால் எல்லாம் நடக்கும் என்று யாரும் சொன்னதில்லை. முற்காலத்திலும் சண்டைக்குப் போகும்போது வழிபட்டார்களே தவிர, பஞ்சாமிருதம் கலக்கியதுமில்லை. கடவுள் இல்லை என்றதுமில்லை.

பகுத்தறிவு வாதம் பேசுகனிற்வர்கள் உருவானதும் அடையாளப்படுத்துவதும் இன்றைய சினிமாவில் தானே. அவர்கள் சினிமாவில் அழியும் பொருளாதரவளம் பற்றிக் கதைக்கின்றார்கள் என்பது வேடிக்கை. கருணாநிதி முதல், சீமான் வரும் மசாலாப்படங்களுக்கு வித்துடுபவர்கள் இந்தப் பகுத்தறிவு வாதிகள் என்போர் தான்.

ஏதோ சமூக அக்கறை என்ற முகமூடி போட்டு மக்களின் பணத்தைச் சுறுட்டுவதில் தான்இவர்களின் நோக்கம் இருக்கின்றது. அது தான் வரலாறும் கூட.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிலை இருந்து ஆரம்பீக்க போகிறீர்கள்.... நண்பர்களோடை சேர்ந்து ஒருவர் அடிக்கும் பியரின் விலை ஒரு பவுன்ஸ்... மாதம் 30 பவுன்ஸ்... அதிலை இருந்தும் கூட ஆரம்பிக்கலாம்...!!

பொருத்தமான ஒப்பீடு.

மதம், மது இரண்டுக்கும் கனக்க வித்தியாசங்கள் இல்லை.

வெறி தான் இரண்டிற்கும் காரணம்.

அரோகரா சொல்லி தேங்காயை உடைக்கிறத்தில ஒருத்தன் கடவுளை காணலாம் எண்டா அது பெரிய காமடியாத் தான் இருக்கும்.

மொத்தத்தில மதம், மது: entertainment (பலருக்கு) + bussiness (சிலருக்கு)

போராட்டத்தில் நடக்கும் சம்பவங்களிற்கு இந்துமத தளத்தில் இருந்து வியாக்கியான செய்து சம்பவத்தை தவறாக பிரச்சாரம் செய்ய புலிகள் மீது முத்திரை குத்த உதவியது என்று தான் எழுதியிருக்கிறன்.

புலிகள் பாதுகாப்பு விவகார அடிப்படையில் தவிர்க்க முடியாது எடுத்த முடிவுகளை அரசியல் என்றும் ஏனைய வழிகளிலும் உங்கடை மத வெறியில் அர்த்தம் கற்பிப்பது தான் தவறு.

இந்து மதத்தில பால் ஊத்தி தேங்காய் உடைச்சு கோடி செலவழித்து கோபுரம் கட்டி திருவிழா நடத்தி தேர் கட்டி இழுக்க வேண்டியதில்லை எழிமையான வழிபாடே போதும் எண்டால் அதை இந்து மதத்திற்குள்ளை இருந்தே எடுத்திச் சொல்லி சீர்திருத்தலாமே? அதை இந்துமதத்தவர்களே முன்னெடுத்தால் மற்றவர்கள் தலையிட வேண்டிய தேவை வராது. இந்து மதத்திற்கு அப்படியான பகுத்தறிவுச் சிந்தனைக்கு சுதந்திரமும் இருந்தால் அன்றும் பெரியார் போரிட்டிருக்கமாட்டார் இன்றும் அப்படி ஒரு முயற்சிக்கு தேவையில்லாது போகும்.

வன்னியின் இடப்பெயர்வு அவலத்திற்கு மன்னார் ஆயர் மழைக் கூடாரங்கள் அனுப்புகிறார் கிளிநொச்சி சென்று நேரடியாக நிகழ்வுகளை அறிகிறார்.

ஆனால் உங்கடை இந்துமதச் சிந்தனை என்னத்தை தூண்டுது? கிளிநொச்சி கோவில் ஒன்றில் போராளிகளுக்கும் தளபதிகளுக்கும் ஆசி வேண்டி யாகம் நடத்தீனம். அதில உடைச்ச தேங்காய் ஒன்று அதிசய வடிவத்தில இருந்தாம். :) லண்டனில ஒரு கோயிலில நொன்ஸ்ரப்பா எத்தனையோ நாள் விசேட பூசை செய்யினமாம் அமைதியும் சமாதானமும் வேண்டி.

காலம் அறியாது இந்து மதச் சம்பிரதாயங்கள் என்று செய்யப்படும் விரையங்களை இந்துமதத்தவர்களே சீர்திருத்தினால் ஏன் மற்றவர்கள் தலையிடுகிறார்கள்?

சிங்கள பேரினவாதத்தை ஆதரிக்கிறனே இல்லையோ பாராட்டவேணும். சிங்கள பேரினவாதத்திட்டை வேண்டின அடியிலான் கொஞ்சமாகுதல் தமிழர் தேசியம் என்று மந்தைகள் சிந்திச்சுப் பேசுதுகள். இல்லாட்டி கோயில் மாறி கோயில் கட்டி அரோகரா போட்டு நக்கிக் கொண்டு திரிஞ்சிருக்குங்கள்.

சினிமா ஒரு ஊடகமாக இருப்பதால் அதிலும் பகுத்தறிவு பற்றி பேசப்படுகிறது. போராட்டங்களை மைய்யப்படுத்தி வரும் படங்களை வைத்து ஈழத்துப் போராட்டம் சினிமாவினால் உருவானது என்ற கதை போல கிடக்கு. :)

  • தொடங்கியவர்

xxxxxxxxx

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்லாண்டுகளாக மதசம்பிருதாயங்களில் புளித்துப் போய் இருந்த ஒரு இனத்தை தனிஒரு மனிதனால் அதற்க்குள் இருந்து பெருங்கூட்டத்தையே தன்னுடன் பெயர்த்தெடுக்க முடிந்திருக்கின்றது இதுவே அறிவினால் நிகழ்த்தப்பட்ட புரட்சி என்பதற்க்கு மிகச்சிறந்த ஆதாரம். இந்தக் கொள்கையின் பயனாளர் சமூகம் அல்ல கொள்கையின் பரப்புரைஞ்ஞரே எனவாதிடுவது பட்டப்பகலை இருட்டென்று கண்திறந்து கொண்டே சொல்வதற்க்கு சமன் அல்லவா?

தெரிந்தும் சமூகதின் நன்மைகளை புறம்தள்ளுவது பக்தியின் பாற்பட்டதல்ல மதவெறியின் பாற்பட்டதே!

சமூகத்தின் மொத்த நன்மைக்கு மதம் ஒழிக்கபடவே வேண்டும் என்றிருந்தால் ஒரு உண்மையான கடவுள் பக்தனால் அது மனதார ஏற்றுக் கொள்ளப் படும் என்றால், அவன் இதயம்தான் கடவுள் எழுந்தருளத்தக்க உண்மையான கோவில்.

இல்லவே இல்லை! மனிதர்களைக் கொளுத்தியேனும் மதத்தை வாழவைப்பேன் என்று வருபவனின் உள்ளம் எரிந்துகொண்டிருக்கும் சுயநலக்காடு போன்றது.

தன் எதிரிகளை ஏன் பெரியார் போன்ற பேர் உள்ளம் படைத்தவர்கள் மீது கூட

அவதூறைக் கொட்ட சற்றும் மனம் கூசாதவர்கள்!

வடக்கு லண்டன் கோயில் நடத்துபவரின் நண்பர் ஒருவர் சொன்னார்... இலங்கை தூதரகத்தில் இருந்து நேரடியான எச்சரிக்கை வந்ததாம்.. புலிகளுக்கு ஆதரவாக பக்தர்களிடம் இருந்து நிதி சேகரிப்பதாக...!! விசாரித்ததில் சொன்னார்கள் வன்னி மக்களுக்காக நிதி சேகரிதார்களாம்...

சொல்லிப்போட்டு செய்தால் விளம்பரம், சொல்லாமல் செய்தால் தொண்டு எண்டு சிலர் சொல்ல கேட்டு இருக்கிறேன்...!

பிரத்தியோகமாக இனிமேல் நிதி சேர்த்துத்தான் வன்னி மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற நிலையில் எமது புலம்பெயர் கோயில்கள் இருப்பது வேதனை.

இத்தனை வருடங்களாக பக்தர்கள் கடவுளுக்காக என்று கொட்டிய பணத்தையெல்லாம் கடவுளுக்குக் கொடுத்துவிட்டார்களா ?

தம்மிடம் இருக்கும் பணத்தை உடனடியாகக் கொடுத்துதவுவதுதான் இவர்கள் செய்யும் உண்மையான தொண்டாக இருக்க முடியும்.

பிரத்தியோகமாக இனிமேல் நிதி சேர்த்துத்தான் வன்னி மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற நிலையில் எமது புலம்பெயர் கோயில்கள் இருப்பது வேதனை.

இத்தனை வருடங்களாக பக்தர்கள் கடவுளுக்காக என்று கொட்டிய பணத்தையெல்லாம் கடவுளுக்குக் கொடுத்துவிட்டார்களா ?

தம்மிடம் இருக்கும் பணத்தை உடனடியாகக் கொடுத்துதவுவதுதான் இவர்கள் செய்யும் உண்மையான தொண்டாக இருக்க முடியும்.

எல்லாவற்றையும் விளம்பரம் போட்டு ஊரைக்கூட்டி செய்து விடமுடியாது.

ஐரோப்பாவில் நம்மவர்களின் சில இந்து கோவில்கள் அந்த அந்த நாடுகளின் புலனாய்துறைகளின் தொடர்ச்சியான கண்காணிப்பின் (Vigilance) கீழ் இருப்பதை அறிவீர்களா???

சிலரின் முட்டாள் கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் போட்டு இணையதளங்களில் உடைக்க வெளிக்கிட்டால் சங்கு ஊதிவிடுவார்கள்! பரவாய் இல்லையா!!!

அரைகுறையாக விடயங்களை தெரிந்து வைத்திருப்பவர்களை சமாளிப்பது எப்போதும் பிரச்சினை தான்!!!

சுழல் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு குற்றம் கண்டுபிடிப்பதும் மிகவும் இலகுவான செயல் தான்!!!

Edited by vettri-vel

அட்ரா அட்ரா

1- சிறீலங்கா தூதரகத்தில இருந்து நேரடியாக அச்சுறுதல் கோயில்களுக்கு வருதாம்.

2- உள்நாட்டு புலநாய்வுத்துறை கோயில்களை தொடர்ச்சியாக கண்காணிப்பில வைச்சிருக்காம்.

3- பெரியார் திராவிட அரசியலை உருவாக்காட்டி இந்தியாவில இருக்கிற இந்துக்கள் எல்லாரும் சேர்ந்து தமிழீழம் எடுத்து தந்து போட்டுத்தான் அடுத்த வேலை பாத்திருப்பினம்.

4- இந்து அமைப்புகளும் ஆதீனங்களும் கிறீஸ்தவ அமைப்புகள் போல் தமிழர்களின் மனித உரிமை விடையங்களிற்கு குரல் கொடுப்பதில்லை ஏன் என்றால் அவர்களிற்கு மேற்குலகு போன்ற பலமான பின்புலம் இல்லை.

5- கோயில்கள் கட்டின படியால் தான் அதன் வாசலில நிண்டு ஒளிவீச்சும் தாயக நாட்காட்டியும் விக்கக் கூடியதாக இருக்கு.

6- புலம்பெயர்ந்த கோயில்களில உடைக்கிற தேங்களாலை தாயகத்துக்கு 2 வீதம் போய்ச் சார்ந்தாலும் சேருமாம்.

7- மற்றவர்கள் சொல்லி செய்து விளம்பரம் தேடீனம். இந்துக் கோயில்கள் எல்லாம் சொல்லாமல் தொண்டு செய்யினமாம்.

என்னமா சிந்திக்கிறாங்களப்பா

இந்திய தமிழ்சினிமாவில பார்ப்பனர்களுக்கு வாற பாத்திரங்கள் மாதிரித்தான் இருக்கு உந்த சோடிப்பான விளக்கங்கள் எல்லாம்.

தொடர்ச்சியா கண்காணிக்கிற புலநாய்வுத்துறைகளுக்கு கோயில்கள் செய்யிற தொண்டுகள் தெரியாமல் இருக்கத்தான் ஆடம்பரமான திருவிழாக்கள் கோபுரங்கள் தேர்கள் செய்து திசை திருப்பி தப்பிறம் எண்டு எருமை மூத்திரம் எலிப்புழுகையில புட்பக விமான ஓடின மாதிரி ஆய்வு செய்யாதது தான் மிச்சம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.