Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியிலிருந்து வெளியேற முடியாதென ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது--வன்னி மக்களின் போராட்டத்திற்கு வெற்றி

Featured Replies

இலங்கை அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய வன்னியிலிருந்து வெளியேற முடியாதென ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்று அறிவித்துள்ளது. யுத்தம் காரணமாக வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களின் எதிர்ப்புகளை மீறி தமது பணியாளர்களை குறித்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற முடியாதென தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 160,000 சிவிலியன்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 70,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய கடந்த வியாழக்கிழமை முதல் ஐக்கிய நாடுகள் அமைப்பு தனது பணியாளர்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தது.

எனினும், பணியாளர்களை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற்றும் பணிகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு தற்போது தற்காலிகமாக இடைநிறுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்னி மக்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளியேறக் கூடாதென எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அதன் காரணமாக பணியாளர்கள் மற்றும் பொருட்களை அகற்றும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும

  • Replies 62
  • Views 5.8k
  • Created
  • Last Reply

நன்றி

புலிகளுக்கு கோடுத்த அழுத்தம் வேலை செய்ய இல்லை போலை... அதுதான் முடிவை மாத்தி நல்லவர்களாய் காட்டுகினம்...

UN says unable to leave Sri Lanka's war-torn north

COLOMBO (AFP) - The United Nations said Sunday its aid staff were unable to comply with a Sri Lankan government order to quit the war-torn north of the island because of protests by local civilians.

UN agencies say some 160,000 people have been displaced in the past few months in the districts of Mullaittivu and Kilinochchi as the government steps up its offensive against Tamil Tiger rebels.

Some 70,000 people have fled due to fighting in the past two months alone.

UN agencies began pulling out of the region on Thursday after Colombo said it could not guarantee the safety of aid workers.

"We have temporarily suspended withdrawing our staff, vehicles and other equipment. Large groups of civilians continue to block our offices in the Wanni since Friday," UN spokesman, Gordon Weiss told AFP.

He said thousands of men, women and children were protesting outside UN and other international aid agency offices in Kilinochchi to stop aid workers from leaving.

"The Sri Lankan government is very much aware of the present situation," he said, adding that the UN's Colombo offices were waiting further instructions from their headquarters in New York.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) have warned against the pullout, saying it cause a "humanitarian crisis."

http://news.yahoo.com/s/afp/20080914/wl_as...id_080914062107

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. என்றாலும் இவர்கள் எந்த அளவுக்கு வன்னி மக்களுக்கு உதவுகிறார்கள் என்று தெரியவில்லை. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் எங்கட மக்கள் இதுவாவது கொஞ்சமாவது நின்மதியாய் இருக்கும்

வெளியேறினால் மீண்டும் உட்செல்ல முடியுமா? என்ற கேள்வி அவர்களுள் எழுந்திருக்கலாம். அப்படி மீண்டும் உட்சென்றாலும் மக்களாதரவு கிடைக்கமா? தவிக்கவிட்டுச் சென்றவர்கள்தானே என மக்கள் சிந்திக்கலாம். அல்லது அரசிற்கு வால்பிடிப்பவர்கள் என்ற அவப்பெயர் ஏற்படலாம் என்ற காரணங்கள் பல இருக்கலாம். இருந்தாலும் தற்போதைய நிலையில் ஓர் ஆறுதல்.

வன்னிப் பிராந்தியத்திலிருந்து தம்மை வெளியேறுமாறு சிறிலங்கா அரசாங்கம் பணித்திருக்கின்ற போதிலும், உள்ளுர் மக்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கத்தின் உத்தரவை தம்மால் நிறைவேற்ற முடியாதிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இது தற்காலிகம் என்றே அது சொல்லியிருக்கின்றது. ஆனால் அது நிரந்தரமாகுமா என்பது பொறுத்துப் பார்க்க வேண்டியது. இவை மக்களுக்கு உதவியதை விட வேறு பணிகளில் தான் நேரத்தைக் கடத்துகின்றார்கள் என்பதுண்மை.

எம்மக்களுக்கான உதவிகளை நாமே செய்திட வேண்டும்

முதல்போன்று பொருட்களை எடுத்து செல்ல விடுவார்களோ தெரியாது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படியோ மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தரும் செய்தி

மக்களால் தடுத்து நிறுத்தப்பட்ட பொருட்கள்... பீர் பாட்டில்கள், குளிருட்டிகள்.....! :icon_mrgreen:

NGOs-pulling-out.jpg

sundaytimes.lk

Edited by சாணக்கியன்

மக்களால் தடுத்து நிறுத்தப்பட்ட பொருட்கள்... பீர் பாட்டில்கள், குளிருட்டிகள்.....!

NGOs-pulling-out.jpg

அப்ப உதுகளோடைதான் இவ்வளவுகாலமும் வன்னியிலை காலம் போக்கினவை எண்டுறீயள்....

பத்தி எரியும் மனதை தண்ணி ஊத்தி ஆற்றினவை ஆக்கும்...

இதில் என்ன பிழை இருக்கின்றது?

தமிழர்களே எந்த கவலையும் இல்லாமல் இருக்கும் போது குறைந்த பட்ச உதவியாவது செய்கின்றார்களே என்று சந்தோசப்படாமல் இருக்கின்றீர்களே?

நீங்கள் யாரும் கொழும்பிலோ அல்லது வெளிநாட்டிலோ குடிப்பதில்லையா? இந்த வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்தவன் என்ற முறையில் சொல்கின்றேன் காலையில் 8 மணியில் இருந்து பின்னேரம் 5 மணிமட்டும் இவர்கள் வேலை செய்கின்றார்கள்.சிலவேளைகளில? தூர இட முகாம்களுக்கு சென்றார்கள் என்றால் 9 மணிக்கு பின் கூட வந்திருக்கின்றார்கள்.குடிப்

Edited by THEEPAN0007

யம்மா என்னமா கோபம் கொப்பளிக்குது.... யாரும் இந்தக்குடிகாரர்களை குறைசொல்லவில்லையப்பா!

மேலும் அவசரப்பட்டு இந்தக் குடிகாரர்களை தியாகிகள் ஆக்கிவிடாதீர்கள்! எதிர்கால சுகபோக வாழ்க்கைக்காக கொழுத்த சம்பத்திற்காக கஸ்டப்பட்டு உழைக்கிறார்கள். அது அவர்களது தனிப்பட்ட சுதந்திரம்.

ஆனால் கூட்டமாக கொன்று குவிக்கப்படப் போகும் பொதுமக்களை காக்கும் வலிமை இன்று போரளிகளை விட இந்த குடிகாரர்களின் கைகளுக்கே உண்டு என்பதே வலி! :icon_mrgreen:

Edited by சாணக்கியன்

இதில் என்ன பிழை இருக்கின்றது?

தமிழர்களே எந்த கவலையும் இல்லாமல் இருக்கும் போது குறைந்த பட்ச உதவியாவது செய்கின்றார்களே என்று சந்தோசப்படாமல் இருக்கின்றீர்களே?

நீங்கள் யாரும் கொழும்பிலோ அல்லது வெளிநாட்டிலோ குடிப்பதில்லையா? இந்த வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்தவன் என்ற முறையில் சொல்கின்றேன் காலையில் 8 மணியில் இருந்து பின்னேரம் 5 மணிமட்டும் இவர்கள் வேலை செய்கின்றார்கள்.சிலவேளைகளில? தூர இட முகாம்களுக்கு சென்றார்கள் என்றால் 9 மணிக்கு பின் கூட வந்திருக்கின்றார்கள்.குடிப்

இவர்கள் இருப்பதால் தான் குண்டு வீச்சு குறைவாக இருக்கின்றது.இவர்கள் இங்கு இருப்பதால் தான் நடந்த குண்டு வீச்சுகள் கூட தலைமையகத்துக்கு தெரிகின்றது.

குடிகாரர்கள் என்கி;ன்றீர்களே ஈழத்தில் கூட யாரும் குடிப்பதில்லை என்று சொல்ல முடியுமா உங்களால்?

ஏன் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று செய்யலாம் தானே? தமிழர்களை பட்டினி போடாதே என்றும் மன நோயாளி ஆக்காதே என்றும் ஏன் உங்களால் முடிவதில்லை?இதற்கு உங்களிடம் பதில் கிடைத்தால் நீங்கள் இறுதியாக சொன்ன வாக்கியத்துக்கு பதில் கிடைக்கும்.அவர்களை நாட்டை விட்டே வெளியேற்றி விடுவார்கள்

ஆனால் நீங்கள் இந்த படத்தை இணைத்த நோக்கம் வேறு என்றும் எங்களுக்கு தெரியும்.இனியும் நான் உங்களுக்கு பதில் சொன்னால் உங்களுடைய நோக்கம் நிறைவேறும்

சிலபேர் எப்பவும் எதாவது சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள்... அதையாரும் தடுக்கேலாது... அவங்கள் என்னத்தை குடிச்சா என்ன விட்டா என்ன?

அவங்கள் போனா நிலமைமோசமெண்டுதானே சனம் கஸ்டப்பட்டு போராடி தடுத்து நிறுத்தியது...

இவர்கள் இருப்பதால் தான் குண்டு வீச்சு குறைவாக இருக்கின்றது.இவர்கள் இங்கு இருப்பதால் தான் நடந்த குண்டு வீச்சுகள் கூட தலைமையகத்துக்கு தெரிகின்றது.

குடிகாரர்கள் என்கி;ன்றீர்களே ஈழத்தில் கூட யாரும் குடிப்பதில்லை என்று சொல்ல முடியுமா உங்களால்?

ஏன் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று செய்யலாம் தானே? தமிழர்களை பட்டினி போடாதே என்றும் மன நோயாளி ஆக்காதே என்றும் ஏன் உங்களால் முடிவதில்லை?இதற்கு உங்களிடம் பதில் கிடைத்தால் நீங்கள் இறுதியாக சொன்ன வாக்கியத்துக்கு பதில் கிடைக்கும்.அவர்களை நாட்டை விட்டே வெளியேற்றி விடுவார்கள்

ஆனால் நீங்கள் இந்த படத்தை இணைத்த நோக்கம் வேறு என்றும் எங்களுக்கு தெரியும்.இனியும் நான் உங்களுக்கு பதில் சொன்னால் உங்களுடைய நோக்கம் நிறைவேறும்

நன்றி

என்ன தீபன் தண்ணியும் புகையும் தொட்டும் பார்க்காத சிறிலங்காவின் பெருங்குடிமக்களை பார்த்து நீங்கள் இப்படி சொல்லலாமா?

இந்த படத்தை பிரசுரித்த சண்டே டைம்ஸின் நோக்கம் என்ன?

- - இப்படி குளிரூட்டப்பட்ட அறைகளில் பியர் போத்தல்களுடன் இந்த தான் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் வன்னியில் பொழுதை கழிக்கின்றன

- - இவர்கள் வன்னி மக்களுக்கு ஒரு சேவையும் செய்யவில்லை

- - ஆகவே இந்த சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வன்னியை விட்டு வெளியேற வேண்டும்

என்னும் பரப்புரையை செய்யும் நோக்கத்தில் தானே சிங்கள பயங்கரவாதத்தின் ஊது குழல்களின் ஒன்றான சன்டே டைம்ஸ் இது போன்ற படங்களை வெளியிடுகிறது

***

மேற்கு நாடுகளில் ஒரு பியர் கேனின் விலை தேனீர், கோப்பி விலையை விட குறைவானது என்று இவர்கள் அறிவார்களா? பியர் என்பது மேற்கு நாடுகளில் ஒரு ஆடம்பர பொருள் அல்ல.

Edited by இணையவன்
*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

இவர்கள் இன்னும் இருப்பதால் தான் அதிகமான உலக நாடுகளுக்கு நமது பிரச்சனைகள் சிறிதளவேனும் தெரியவர காரணம்.ஆனால் இவர்களை போன்றவர்கள் நினைக்கின்றார்கள் குறித்து கும்மாளம் அடித்து திரிகின்றார்கள் என்று?

இவர்களை போன்றவர்களால் தான் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சொல்லி கூட சில நாடுகள் சொல்கின்றது.

புலிகள் மக்களுக்காக தான் போராடுகின்றார்கள் என்பது கொஞ்சமாவது எடுத்து சொல்கின்றார்கள்.

நான் இவர்களை போன்றவர்களுடன் வேலை செய்தவன் என்ற முறையில் அவர்களை பற்றி சொன்னேன்.

நாளைக்கு இதே பத்திரிகையில் இதே படத்தை போட்டு புலிகள் நிறுவனங்களின் சொத்துக்களை கொள்ளையடித்தார்கள் என்று கூட செய்திஎழுதுவார்கள் இவற்றையெல்லாம் சிந்திக்க மாட்டார்கள் இணைக்கும் போது?

கடைசி நானும் தமிழன் என்ற குறைந்த பட்ச உணர்வாவது இருக்குமோ தெரியாது?

தற்பொழுது வன்னியிலிருந்து அனைத்து சர்வதேச நிறுவனங்களையும் வெளியேறுமாறும், இல்லாவிடில் அவர்களின் உயிர்களுக்கு தாம் பொறுப்பில்லை என்ற பின் இன்று அல்லது நாளை வன்னியிலிருது முழுவதுமாக வெளியேறுவதாக பி, பி சிக்கு ஜக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

நானும் கேள்விப்பட்டேன்... இங்கே சிலதுகளுக்கு கொண்ட்டாட்டமா இருக்கும்... குடியை விரும்பாத மென்மையானவர்களுக்கு சமர்ப்பணம்.

ஐநாவுக்கு 29ம் திகதி மட்டும் அவகாசம் கொடுத்திருப்பதாகவும் மற்றய நிறுவனங்களுக்கு 20ம் திகதியுடன் வெளியேற வேண்டும் என்றும் சொன்னதாக நானும் கேள்விப்பட்டேன்.

புதினம் ஏற்றிய போதையில் மிதந்த புலம்பெயர்ந்தவர்களுக்கு இப்போது அறளைபெயர்ந்ததுதான் மிச்சம்! :unsure:

தமிழர் பிரச்சாரம் மதவாச்சியை நோக்கியும், நிஜம் கிளிநோச்சியை நோக்கியும் போகிறது.... !

இந்த இழுபறியில் மக்களும், அவர்கள் பாதுகாப்பும் தொலைந்து போய்விட்டது... !

Edited by சாணக்கியன்

ஏ9 முறிகண்டிப் பகுதி மீது கடும் ஏறிகணைத் தாக்குதல்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26946

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் மாத்திரம் 2 லட்சம் மக்கள் இடப் பெயர்வு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.