Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் விச வாயுவை பயன்படுத்த அரசு திட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த திங்களன்று (நேற்று) அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் பிரதேசத்தில் நடந்த மோதலில் விடுதலைப்புலிகள் பாவித்த கண்ணீர் புகையை ஒத்த புகைக் குண்டுகள் என்று கருதத்தக்க புகைக் குண்டுத் தாக்குதலால் 16 படையினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டத்தாகக் கூறியுள்ள வன்னிப் படைத்தரப்பு... விடுதலைப்புலிகளின் இரசாயன ஆயுதங்களைச் சமாளிக்க தன்னைத் தயார்படுத்தி வருவதாக அரசை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இது உண்மையில் விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பாவிக்கின்றனரா அல்லது அரசு தான் வன்னி மீது இரசாயன ஆயுதங்களைப் பாவித்து தாக்குதல் நடத்த திட்டுமிடுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதற்கிடையில் இவ்வாறான தாக்குதல் நடந்ததாக அரசு உத்தியோகபூர்வமாகச் சொல்லாதவிடத்தும்.. இது தொடர்பில் டெயிலிமிரர் எனும் சிறீலங்கா அரச மற்றும் அதன் படைகள் சார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Govt. prepares for LTTe chemical attack

The government has put in place contingency plans for a possible chemical attack by the LTTE against the security forces fighting in the North.

Healthcare and Nutrition Minister Nimal Siripala De Silva, yesterday, instructed officials to immediately despatch extra health staff, medicines and equipment to the North to face any contingencies that may arise in the event of a chemical attack on the security forces, said ministry spokesman W.M.D. Wanninayaka.

The decision was taken following a discussion held at the ministry and chaired by Mr. De Silva, to draft a contingency plan in the event of a chemical attack on the armed forces, he said.

Soldiers hospitalized after ‘gas’ attack

At least sixteen soldiers were hospitalized after experiencing breathing difficulties following an LTTE attack using what was initially believed to be some sort of gas in the Akkarayankulam and Vannivilankulam areas in the Kilinochchi district.

Informed ground sources revealed that on Monday evening troops of the Task Force 2 in Wanniwilankulam, West of Mankulam were attacked using the gas which caused breathing problems to at least six soldiers.

Last morning, soldiers of the 57 division operating in Akkarayankulam in the Kilinochchi district came under a similar type of attack. At least ten soldiers were admitted to hospital with breathing difficulties.

The Military believes the LTTE may have used a substance similar to Tear Gas for the attack. However, there was no official confirmation about the attack. (SJ)

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=26547

Edited by nedukkalapoovan

வாயுக்களை தற்காப்பு நடத்துபவர்களைவிட வெட்ட வெளிகளை பகலில் தாண்டுவதுக்கு இலகுவாக இருக்கும் என்பதுக்காக முன்னேறுபவர்கள்தான் பாவிப்பர்... அதுவே அவர்களுக்கே ஆப்பாக இருந்து இருக்கும்...!!

விசவாயுக்களுக்கான பாதுகாப்பு ஆடைகளை முழுமையாக பிரித்தானிய இராணுவமே கொண்டு இல்லை... அவ்வளவு செலவு அதிகம்... புலிகளுக்கு எதிராக முன்னேறும் போது இராணுவம் பாவிக்குமா என்பது தெரியவில்லை...

மற்றது விசவாயுக்கள் வெட்டவெளிகளில் முன்னேறும் போது யாரும் இலகுவில் பயன்படுத்த மாட்டார்கள்.... விமான குண்டுகளில் போடுவதுக்கான சாத்தியம் தான் அதிகம் உண்டு....

பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்க படுவதுக்கான சந்தர்பம் அதிகம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசவாயுக் குண்டுகளை தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே வழங்குகிறோம் என்ற போர்வைக்குக் கீழ் இந்தியாதான் இலங்கை ராணுவத்துக்கு வழங்கி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Edited by karu

பயங்கரவாதிகள் மீது எத்தகைய தாக்குதல் நடத்தினாலும் எவரும் கேள்வி கேட்கப்போவதில்லை!

இறைமையுள்ள ஈராக் மக்களுக்காக்கூட இதுவரை எவரும் குரல் எழுப்பவில்லை!

மரபுவழிப் போராட்டம் மீண்டும் மனிதக்குரங்கு (கொரில்லா) போராட்டமாக மாறப்போகிறது!

***

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

***

போராட்ட வடிவங்கள் மாறலாம்.. ஆனால் இலட்சியம் மாறாது. அதுதான் உண்மை விடுதலைப் போராளிகளின் ஓர்மம். ஜனநாயகம் உச்சரிக்கும் உலகம்.. எப்போதுமே நியாயமான மக்கள் போராட்டத்தை உடனடியா அங்கீகரித்ததில்லை. அது வியட்நாம் ஆகட்டும்.. தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டம் ஆகட்டும். எல்லாம் பயங்கரவாத முலாம்.. பூசப்பட்டவைதான். அன்று.. நெல்சன் மண்டேலா.. சிறைக்குள் இருந்து ஜனநாயக நீரோட்டத்துக்கு போறன் என்று வெள்ளையின ஆட்சியில் ம-ந்திரிப் பதவிக்கு ஒத்துக் கொண்டிருப்பின்.. இன்று விடுதலை கிடைத்திருக்குமா..???!

உதாரணத்துக்கு உங்களையே நோக்குங்களேன்... ஜனநாயக நீரோட்டம் என்று.. மத்தியில் கூட்டாச்சு மாநிலத்தில் சுயாட்சி கேட்ட உங்க டக்கிளஸ் அண்ணாச்சி... இப்ப உள்ளூராட்சியில போய் நிற்கிராருங்கோ..! அதுதான் ஜனநாயக நீரோட்டம்.. மக்களுக்கு பெற்றுத் தந்த உரிமை. நான் நினைக்கிறன்.. உது பிரிட்டிஸ் இருக்கேக்கேயே போட்ட பிச்சையென்று.. அதுக்காக அண்ணாச்சி.. எனியும்.. தாடி வளர்த்து...???! :unsure::D

*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்து தணிக்கை செய்யப்பட்டதால் அதற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

இன்று இந்த நிலமைக்கு காரணம் என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்த நிலமைக்கு காரணம் என்ன?

அரசுக்கு சர்வதேசத்துக்கு மக்களையும் போராட்டத்தையும் கூவிவிற்றுப் பிழைக்கும்... தேசத் துரோகிகளை தலைவர் விட்டு வைத்ததுதான்.

இன்றேல்.. இந்தியாவுக்கு.. வரதராஜப் பெருமாளும்.. பிரேமதாசாவுக்கு ஒரு டக்கிளஸ் தேவனந்தாவும்.. சந்திரிக்காவுக்கு ஒரு லக்ஸ்மன் கதிர்காமரும்.. சித்தார்த்தனும்.. மகிந்தவுக்கு ஒரு கருணாவும்.. பிள்ளையானும் கிடைத்திருப்பார்களா..???!

எமது மக்களின் கோரிக்கையான தமிழீழத்துக்கு மாற்றுக் காட்டிறம்.. தமிழருக்கு மாற்றுத் தலைமை காட்டிறம் என்று இந்தக் கூலிகள் ஜனநாயகம் பேசி விலை போயிராவிட்டால்.. தேசிய தலைமையின் கீழ் தலைவரின் கீழ் எல்லோரும் ஒருங்கிணைந்து மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்திருப்பின் இன்று.. எமது மக்கள் தமிழீழ மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருப்பர். இத்தனை துன்பங்களுக்கும் காரணம்.. இந்தக் கூலிகள் போராளிகளையும் மக்கள் போராட்டத்தையும் பயங்கரவாதமாக அடையாளம் காட்ட நடந்து கொண்ட வழிமுறைகள்..!

தமிழீழம் கேட்டு ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த இந்தக் கூலிகள்.. மக்களுக்கு அதைப் பெற்றுக் கொடுக்க வேண்டாம்.. உபத்திரபம் கொடுக்காமல் ஒதுங்கி இருக்கலாமே..! துரோகிகளை தலைவர் விட்டு வைத்ததுதான்.. மக்களின் இந்த அவலத்துக்கு முக்கிய காரணம்..! :D

Edited by nedukkalapoovan

அரசுக்கு சர்வதேசத்துக்கு மக்களையும் போராட்டத்தையும் கூவிவிற்றுப் பிழைக்கும்... தேசத் துரோகிகளை தலைவர் விட்டு வைத்ததுதான்.

இன்றேல்.. இந்தியாவுக்கு.. வரதராஜப் பெருமாளும்.. பிரேமதாசாவுக்கு ஒரு டக்கிளஸ் தேவனந்தாவும்.. சந்திரிக்காவுக்கு ஒரு லக்ஸ்மன் கதிர்காமரும்.. சித்தார்த்தனும்.. மகிந்தவுக்கு ஒரு கருணாவும்.. பிள்ளையானும் கிடைத்திருப்பார்களா..???!

எமது மக்களின் கோரிக்கையான தமிழீழத்துக்கு மாற்றுக் காட்டிறம்.. தமிழருக்கு மாற்றுத் தலைமை காட்டிறம் என்று இந்தக் கூலிகள் ஜனநாயகம் பேசி விலை போயிராவிட்டால்.. தேசிய தலைமையின் கீழ் தலைவரின் கீழ் எல்லோரும் ஒருங்கிணைந்து மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்திருப்பின் இன்று.. எமது மக்கள் தமிழீழ மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருப்பர். இத்தனை துன்பங்களுக்கும் காரணம்.. இந்தக் கூலிகள் போராளிகளையும் மக்கள் போராட்டத்தையும் பயங்கரவாதமாக அடையாளம் காட்ட நடந்து கொண்ட வழிமுறைகள்..!

தமிழீழம் கேட்டு ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த இந்தக் கூலிகள்.. மக்களுக்கு அதைப் பெற்றுக் கொடுக்க வேண்டாம்.. உபத்திரபம் கொடுக்காமல் ஒதுங்கி இருக்கலாமே..! துரோகிகளை தலைவர் விட்டு வைத்ததுதான்.. மக்களின் இந்த அவலத்துக்கு முக்கிய காரணம்..! :D

இன்று இந்த நிலமைக்கு காரணம் என்ன?

நீங்கள் தானெண்டா கேக்கவா போறியல்... நாங்கள்தான்னையா. நாங்கள்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று இந்த நிலமைக்கு காரணம் என்ன?

இந்த நிலை மாற களைகள் பிடுங்கப்படவேண்டும், வேலியில் ஏறும் கறையான்கள் தட்டப்படவேண்டும், ஒண்று இரண்டுதானே என்று பார்த்து கொண்டு இருந்தால் முழுதுமே நாசமாகிவிடும் :D:unsure::lol:

இந்த விசவாயுக் குண்டுகளை தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே வழங்குகிறோம் என்ற போர்வைக்குக் கீழ் இந்தியாதான் இலங்கை ராணுவத்துக்கு வழங்கி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கழுவுவதற்கு இந்தியா தயாராக இருக்கும் வரை, மகிந்தா காட்டிக்கொண்டுதான் நிற்பான். :)

சிங்கள அரசு விசவாயுக் குண்டு பாவித்தால் இப்ப என்ன செய்ய முடியும்?

விரும்பினால்10 வருடம் அல்லது 50 வருடத்துக்கு பின் ஒரு அறிக்கக வரும் பயங்கரவாதத்தூக்கு எதிரான யுத்தத்தில்

மகிந்த அரசு கொஞ்சம் அதிகமாக கடும் போக்கக பாவித்து விட்டது என்று அதுவும் சிங்கள அரசு அமெரிக்க அல்லது ஜரோப்பிய எதிர் அணி என்று ஒன்று இருந்து அந்த அனி சார்பாக நடந்து கொண்டால் மட்டுமே.......

அரசுக்கு சர்வதேசத்துக்கு மக்களையும் போராட்டத்தையும் கூவிவிற்றுப் பிழைக்கும்... தேசத் துரோகிகளை தலைவர் விட்டு வைத்ததுதான்.

இன்றேல்.. இந்தியாவுக்கு.. வரதராஜப் பெருமாளும்.. பிரேமதாசாவுக்கு ஒரு டக்கிளஸ் தேவனந்தாவும்.. சந்திரிக்காவுக்கு ஒரு லக்ஸ்மன் கதிர்காமரும்.. சித்தார்த்தனும்.. மகிந்தவுக்கு ஒரு கருணாவும்.. பிள்ளையானும் கிடைத்திருப்பார்களா..???

"நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாட்டு"

காற்றுப்புகாத இடத்தினுள்ளும் புகுந்து முட்டைக்குள்ளால் வெளிவரும் தலைவருக்கு, இந்த அற்பமனிதர்கள் தடைக்கற்களா?

(தலைவர் ஒன்றும் அவர்களை இரக்கப்பட்டு விட்டுவைக்கவில்லை, டக்கிளசை கொல்ல 7 தடவை முயன்று பார்த்தார் சரிவரவில்லை)

தமிழர் போராட்டம், இன்று உலக அரங்கில் பயங்கரவாதமாக தனித்து நிற்பது யாரால்?

இந்த அவலத்தை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்ல ஆளில்லாமல் இருப்பது யாரால்?

முப்படைகள், நிழல் நிர்வாகம் என்று மக்களை பப்பாவில் ஏற்றி இன்று நடுக்கடலில் தவிக்க விட்டது யாரால்?

"நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாட்டு"

முப்படைகள், நிழல் நிர்வாகம் என்று மக்களை பப்பாவில் ஏற்றி இன்று நடுக்கடலில் தவிக்க விட்டது யாரால்?

யாழ்க்கள உறுப்பினர்கள்தாம்... நானில்லை நானில்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாட்டு"

காற்றுப்புகாத இடத்தினுள்ளும் புகுந்து முட்டைக்குள்ளால் வெளிவரும் தலைவருக்கு, இந்த அற்பமனிதர்கள் தடைக்கற்களா?

(தலைவர் ஒன்றும் அவர்களை இரக்கப்பட்டு விட்டுவைக்கவில்லை, டக்கிளசை கொல்ல 7 தடவை முயன்று பார்த்தார் சரிவரவில்லை)

தமிழர் போராட்டம், இன்று உலக அரங்கில் பயங்கரவாதமாக தனித்து நிற்பது யாரால்?

இந்த அவலத்தை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்ல ஆளில்லாமல் இருப்பது யாரால்?

முப்படைகள், நிழல் நிர்வாகம் என்று மக்களை பப்பாவில் ஏற்றி இன்று நடுக்கடலில் தவிக்க விட்டது யாரால்?

சாணக்கியன் போறபாதையில் சில முற்கள் இருந்து காலை குத்தினால் அதை எடுத்து எறிந்துவிட்டு போக சிலநேரங்களை செலவிடவேண்டும் ஆனால் போகவேண்டிய இடத்துக்கு போயேதீருவோம் என்ன விலைகொடுத்தாவது அதில் எந்த மற்றமும் வராது.

அந்த தாடியன் வெளியில வந்தால் தனே கொல்லுறதுக்கு கக்**** போறது என்றாலும் பொந்துக்க தான் போறான் அப்புறம் வந்து மகிந்தவின் வேட்டிக்குள்ள ஒளிந்து இருக்கிறான் அப்புறம் எப்படி? இவங்களுக்காக எல்லாம் அதிரடி தாக்குதலில் பல கரும்புலிகளை பயன்படுத்தமுடியாது நேரம் வரும்போது தகுந்த தண்டனை நிச்சயம் வழங்கப்படும்

தமிழர் போராட்டம் பயங்கரவாத போராட்டம் என்று சொல்லும் உலகநாடுகள் சில அந்த தவறுகளை திருத்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் வரும் அதுவரை காத்திருங்கள்.இன்று மரம் நட்டுவிட்டு இன்றே பழம் பறிக்கமுடியாது. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாட்டு"

காற்றுப்புகாத இடத்தினுள்ளும் புகுந்து முட்டைக்குள்ளால் வெளிவரும் தலைவருக்கு, இந்த அற்பமனிதர்கள் தடைக்கற்களா?

(தலைவர் ஒன்றும் அவர்களை இரக்கப்பட்டு விட்டுவைக்கவில்லை, டக்கிளசை கொல்ல 7 தடவை முயன்று பார்த்தார் சரிவரவில்லை)

தமிழர் போராட்டம், இன்று உலக அரங்கில் பயங்கரவாதமாக தனித்து நிற்பது யாரால்?

இந்த அவலத்தை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்ல ஆளில்லாமல் இருப்பது யாரால்?

முப்படைகள், நிழல் நிர்வாகம் என்று மக்களை பப்பாவில் ஏற்றி இன்று நடுக்கடலில் தவிக்க விட்டது யாரால்?

சாணக்கியன் அண்ணாச்சி சாணக்கியத்தனமா கேள்வி கேட்கிறதா நினைக்காதீங்க. இதே கேள்வியை தான் துரோகிகளும் கேட்கின்றனர்.

உங்கள் போன்றவர்களுக்கு சிலவற்றை தெளிவாகச் சுட்டிக்காட்ட வேண்டும்..

சிறீலங்காவில் இனப்பிரச்சனை.. பிரிட்டிசாரிடம் இரு-ந்து சுதந்திரம் பெற்றதில் இருந்தே நிலவி வருகிறது.. என்பது வரலாற்றை ஆராய்ந்து நோக்கும் போது புலப்படும்.

எமக்கு அது தேவையில்லை..

ஆயுதப் போராட்டமும் தமிழீழக் கோரிக்கையும்.. இங்கிருந்துதான்.. உங்களின் கேள்வி எழுகிறது. ஆனால் தமிழன் அகதியாவது அதற்கு முன்னாலேயே ஆரம்பமாகிவிட்டது..! அதற்கு காலத்தால் முந்திய இனக்கலவரங்கள் சாட்சி..!

ஆயுதப் போராட்டம் என்று வந்தால்.. அன்றைய சோவியத் - அமெரிக்க பனிப்போர் காலத்தில்.. இந்தியா சோவியத் சார்பு நாடாகவும் பாகிஸ்தான் அமெரிக்க சார்பு நாடாகவும் இருந்த காலம். அமெரிக்க இஸ்ரேல் பாகிஸ்தான் ஆதிக்கம்.. ஜே ஆர் அரசில் செல்வாக்குச் செய்த காலம்..!

ஆயுதப் போராட்டத்தை இந்தியா வளர்த்தது என்பது உண்மை. ஆனால் தமிழீழம் அமைக்கவோ.. ஈழத்தில் தமிழர்கள் விடிவைப் பெறவோ அதை அது வளர்க்கவில்லை.

அப்படி ஒரு நிலையை இந்தியா எடுத்திருப்பின்.. பலவீனமான ஒரு சிறுபான்மைச் சமூகத்துள் 10 ஆயுதக்குழுக்களை ஒரே கொள்கைக்காக உருவாக்க வேண்டிய அவசியம் அதற்கு இருந்திருக்காது..! ஒரே குழுவை உருவாக்கி பல நிலைகளில் அல்லது பல வடிவங்களில் போராட அனுமதித்திருக்கலாம். அதுதான் சிறுபான்மை சமூகம் ஒன்றின் போராட்ட பலத்தை ஒருமுகப் படுத்த உதவக் கூடிய செயற்பாடு.

இன்றைய தேசிய தலைவர் அன்றே.. இதை உணர்ந்திருந்தார். அதனால் தான் அவர் எல்லா இயக்கங்களையும் ஒருங்கிணைக்க சமாதான வழியில் இந்திய உளவு அமைப்புக்களுக்கும் தெரியாத வகையில் எல்லாம் முயன்றார். வேறு சில தமிழக தமிழீழம் விரும்பி தலைவர்களும் குறிப்பாக எம் ஜி ஆர் அவர்களும் இதில் ஈடுபாடு காட்டி இருக்கிறார். குறிப்பாக எம் ஜி ஆர் அன்றைய இந்திரா காந்தி அரசையே முழுமையாக நம்பாமல் போராளிகளுக்கு குறிப்பாக கொள்கைப் பற்றுறுதி மிக்க போராளிகளுக்கு இலக்கை அடைய உதவினார்.

இறுதியில் தேசிய தலைவர் எண்ணியது போலவே இந்திய உளவு அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு அது பலம் பெறுவதற்கு எதிராக செயற்பட ஆரம்பித்தன. வளர்த்த இயக்கங்களை ஆளுக்கு ஒன்றுடன் ஒன்று மோதவிட தயார் செய்தன.

பொதுவான சிங்களப் பேரினவாத எதிரிக்கு எதிராக போராட வேண்டிய இளைஞர்கள் தமக்குள் அடிபட ஆரம்பித்தனர். இந்த நிலை ஆயுதப் போராட்டத்துக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்த தேசிய தலைவர் ஆயுத ரீதியில் இதர குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி பிற நாடுகள் தமிழீழப் போராட்டத்தை தமது நலன் வேண்டி பாவிப்பதை தடுக்க முயன்றார். அதற்கு முன்னர் அவர் பல ஆயுதக் குழுக்களுடன் சேர்ந்து பொதுத் தலைமையின் கீழ் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை பலப்படுத்த முயன்றிருக்கிறார். தலைவரின் பிரதான எதிர்பார்ப்பு.. இலட்சிய உறுதி என்பதுதான்.

ஆனால் துரதிஸ்டவசமாக அந்நிய சக்திகளின் பேச்சில் மயங்கிய சில ஆயுதக்குழுக்களின் தலைவர்களும் சிரேஷ்ட உறுப்பினர்களும் தலைவரின் நோக்கத்தை பாசிசமாகச் சித்தரித்து தமிழ் மக்களின் சிறுபான்மைப் பலத்தை உடைத்துச் சின்னாபின்னமாக்க வெளிக்கிட்டனர். அதன் பின்னர் தான் ஆயுத ரீதியில்... இதர ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்தி.. தமிழ் மக்களை ஒரே தேசிய தலைமையின் கீழ் இணைத்து பலப்படுத்திக் கொண்டு போராட்டத்தை முன்னெடுக்க தலைவர் தீர்மானித்தார்.

அந்த வகையில்.. அப்போதே அவரின் உயரிய இலட்சிய உறுதிமிக்க செயற்பாட்டை புரிந்து கொண்டு அவருடன் 100% ஒத்துழைத்திருப்பின்.. இன்று.. இந்தத் துரோகிகளும் போராளிகளாக போராடிக் கொண்டிருப்பர். அது தமிழ் மக்களுக்கு பலமான சக்தியை வழங்கி இருக்கும். கேள்வி கேட்டுக் கொண்டு கொழும்பு அரசின் பாதுகாப்பில் கொட்டிக் கொண்டிருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.

ஆனால் சுயநலத்துக்கும்.. தனிப்பட்ட புகழுக்கும்.. பழிவாங்கலுக்கும்.. அந்நிய சக்திகளின் விருப்புக்கும் இடமளிக்க தயாரான இலட்சிய உறுதியற்ற துரோகிகள்.. தமிழீழ விடுதலையை மறந்தே போயினர். இறுதியில் எதிரியின் காலடியில் சரணடையும் தம் இலட்சியத்தை வெளிக்காட்டி மக்களை ஏமாற்றினர். இதுதான் துரோகிகளின் ஆரம்ப வரலாறு.

இன்னொரு முக்கிய விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பின் கீழ் தேசிய தலைமை உருவாக முதல்.. பல குழுக்கள் இயங்கிய காலக்கட்டத்தில்.. கூட எமது போராட்டம்... குறிப்பாக ஆயுதப் போராட்டம்.. அங்கீகரிக்கப் பட்டிருக்கவில்லை. அப்போதும் அது பயங்கரவாதமாகவே சித்தரிக்கப்பட்டது.

ஆயுதப் போராட்டத்தை இந்தியா வளர்த்தது. ஆனால்.. அதை விடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கமாக அது எப்போதும் அங்கீகரிக்கவில்லை. தனது தேவைகளுக்காக.. அது குறிப்பிட்ட அளவு ஆயுத வளத்தோடு இக்குழுக்களைக் கொண்டு பிராந்தியத்தில் தனது நலனை தக்க வைக்கவே முயன்றது.

அதற்கு சாட்சியாக இந்திய மத்திய அரசுடன் நெருங்கி உறவாடிய புளொட் அமைப்பின் ஆயுதக் கப்பலை இந்திரா காந்தி அரசு கைப்பற்றி ஏவுகணைகள் உட்பட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தது.

அதுமட்டுமன்றி அன்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரோறல்ட் ரேகன்.. ஜே ஆர் அரசுக்கு பகிரங்கமாக அறிவுறுத்தினார்.. தமிழர்களை அழிக்காமல்.. பயங்கரவாததை அழிக்க முடியாது என்று. அதற்கு இந்தியா மறுவார்த்தை சொல்லவில்லை.

அதை அடுத்து அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி ஜே ஆர் சொன்னார்.. "பயங்கரவாதத்தைப் பூண்டோடு அழிப்பேன்" என்று இராணுவத்தை தமிழர் தாயகம் எங்கும் ஏவிவிட்டார். அப்போது எங்கே போயினர் இந்தத் துரோகிகள். சக்கை அடிப்பததோடு.. இராணுவத்தை முன்னேற விட்டு ஓடியவர்கள் தான்.. இன்று கொழும்பில் இரு-ந்து கொண்டு அமைச்சர் பதவிகளை அலங்கரிக்கின்றனர்.

அப்போது.. இன்று அரசின் காலடியில் அமைச்சர் பதவிகளை அனுபவிக்கும் டக்கிளஸ் தேவானந்தா உள்ளிட்ட துரோகிகள்.. எங்கே போயினர். எமது விடுதலைப் போராட்டத்தை.. பயங்கரவாதமாக இனங்காட்டாதிருக்க என்ன செய்தனர். சக்கை அடித்ததும்.. கோவிலில் கொள்ளை அடித்ததையும் விட என்னத்தை வெட்டிப் புடுங்கினர்...!

எமது போராட்டம் சர்வதேச மயப்படுத்தல் இன்றி அன்றிருந்த காலத்திலையே எதனையும் உருப்படியாகச் செய்ய முடியாத இந்த சுயநலத் துரோகிகள்.. இன்று கொழும்பில் இருந்து கொண்டு இந்த நிலைக்கு யார் காரணம் என்று கேள்வி கேட்கின்றனர். (சாணக்கியனைச் சொல்லவில்லை. சாணக்கியன் கேட்பதுபோல துரோகிகளும் கேட்கின்றனர். வெற்றித் திலகமிட்டு.. தமிழீழ கோரிக்கையை பிரகடனம் செய்த மிதவாதக் கட்சியைச் சேர்ந்த ஆனந்த சங்கரியும் கேட்கிறான். அவர்கள் தமிழீழத்தை கனவில் பெற்றிடலாம் என்று எண்ணினர் போலும்..!)

இன்றைய இந்த நிலைக்கு யார் காரணம். துரோகிகள் தமது ஆரம்ப கால இலட்சியத்தில் உறுதியின்மையோடு இயக்கங்களை ஆரம்பித்ததுதான்.. காரணம். அதை மக்களும் அனுமதித்ததுதான் காரணம்.

இலட்சிய உறுதிமிக்க தமிழீழ விடுதலைப்புலிகள் தான்.. தமிழருக்கு இனப்பிரச்சனை என்ற ஒன்றிருக்கிறது.. தமிழருக்கு சிறீலங்காவில் பாதுகாப்பில்லை என்பதை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளச் செய்திருக்கின்றனர். அதனூடு.. பல்லாயிரக் கணக்கில் மேற்குலகில் அகதி அந்தஸ்தும் வளமான வாழ்வும் கிடைத்திருக்கிறது பல தமிழர்களுக்கு. துரோகிகளுக்கு கொழும்பில் கூடாமரடிச்சு.. அரசியல் செய்ய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆயுதப் போராட்டம் என்றால் என்னென்று கூடத் தெரியாதவர்கள் கூட அரசியல் அகதியாகி இருக்கின்றனர். பல துரோகிகளும்.. இந்தக் அகதிக் கூட்டத்துள் அடங்குவர்.

எமது விடுதலைப் போராட்டம் சரி... எல்லா ஆயுத வழி விடுதலைப் போராட்டங்களும் அரசுகளின் எதிர்ப்புக்கள்.. பயங்கரவாத முலாம்கள் காணாது வெற்றி பெற்றதாக வரலாறில்லை.

ஆயுதப் போராட்டம் என்பது வெற்றி தோல்விகளை காணாதிருக்க முடியாது. கள மாற்றங்களை.. போராட்ட வடிவ மாற்றங்களை.. உலக ஒழுங்குக்கு ஏற்ப..நாடுகளின் தந்திரோபாயங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டால் மட்டுமே அந்தப் போராட்டம் வெற்றி பெறும். பலமான அரசுகளின் சவால்களை சந்தித்து நிமிர்ந்து நின்றாலே இலட்சியத்தை அடையும்.

அரசுகளின் அடக்குமுறைக்குப் பயந்து அடங்கின போராட்டங்கள் வெற்றி பெற்ற வரலாறில்லை. அடக்க அடங்க தயாராகும் போராளிகள்.. இலட்சியப் பற்றுள்ள போராளிகளும் அல்ல. அவர்களே இலகுவில் துரோகிகள் ஆகின்றனர்.

எமது போராட்டம் ஆரம்பித்தது முதல் இன்று வளர்ந்தது வரை.. எமது தேசிய தலைவர் ஒருவரால் தான் அது இலட்சிய உறுதியோடு எடுத்து வரப்பட்டிருக்கிறது. இழப்புக்கள்.. தியாகங்கள்.. துயர்கள்.. என்று இன்னோரென்ன.. கஸ்டங்கள் மத்தியில். உலகத்தைப் பொறுத்தவரை.. சிறீலங்காவை பொறுத்தவரை.. அன்று தொடக்கம் இன்று வரை எமது போராட்டத்தை பயங்கரவாதமாகவே உச்சரித்து வருகிறது. அது பத்மநாபாவின் ஈ பி ஆர் எல் எவ் ஆகட்டும் (அமெரிக்கப் பிரஜைகளை (அலன் தம்பதிகளை) கடத்தி அமெரிக்காவின் எதிர்ப்பை சந்திக்க தூண்டிய இயக்கம். அக்கடத்தலில் டக்கிளஸ் தேவானந்தா என்ற துரோகிக்கு முக்கிய பங்கிருந்தது..!) உமாமகேஸ்வரன் தலைமையிலான புளொட் ஆகட்டும்.. சிறீசபாரண்டம் தலைமையிலான ரெலோ ஆகட்டும்.. எவருமே.. விடுதலைப் போராளிகளாக உலகால்.. ஏன் அவர்களை உருவாக்கிய இந்தியாவால் கூட இனங்காணப்படவும் இல்லை.. காட்டப்படவும் இல்லை.

ஆனால்.. ஐநா அமைப்பு தனக்கு பாதுகாப்பான வழித்துணை செய்து தாருங்கள் என்று சிறீலங்காப் படையினருக்கு நிகரா வைத்து கேட்கும் அளவுக்கு தமிழ் மக்களின் இராணுவமாக இன்று தமிழீழ விடுதலைப் புலிகளே விளங்குகின்றனர். அவர்களே தமிழீழத்தின் தேசிய முப்படையாகவும் வளர்ந்து நிற்கின்றனர்.

இது இறந்த காலத்தை மீட்கும் நேரமல்ல. எமது தமிழீழ தேசத்தின் முப்படைகளையும் பலப்படுத்தி.. தமிழீழ மக்களை சர்வதேச சதி வலைக்குள் இருந்து மீட்க பாடுபடும் நேரம் என்பதை எனியாவது துரோகிகள் உணர்ந்து தமிழ் மக்களின் தேசிய தலைமையோடு ஒருங்கிணைந்து அல்லது உபத்திரபம் அளிக்காமல் செயற்பட முன் வரட்டும். அதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் கூட.

இழப்புக்களுக்காக ஒப்பாரி வைக்க தேவையில்லை. இனியும் இழப்புக்கள் நிகழாதிருக்க.. எமது படைப்பலத்தை பலப்படுத்துவதே முக்கியம்.

வள்ளுவன் குறளில் சொன்னது போல.. படைப்பலமில்லாத அரசும்.. தேசமும்.. மக்களைப் பாதுகாப்பதில் இடர்படும்..! அந்த நிலைக்கு தலைவர் அல்ல காரணம். அவர் களத்தில் தான் நிற்கிறார். களத்தை விட்டு அகன்ற நாம் தான்.. காரணம்..! அதை நினைவில் இருத்தி களத்துக்கு வெளியில் இருந்தேனும் எமது தமிழீழப் படைப்பலத்தையும் மக்களையும் பலப்படுத்தும் துரித நடவடிக்கையை செய்வதே அரசுகள் முன் வைக்கும் சவால்களை முறியடித்து எமது தேசத்தை விடுவிக்கும்..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாட்டு"

காற்றுப்புகாத இடத்தினுள்ளும் புகுந்து முட்டைக்குள்ளால் வெளிவரும் தலைவருக்கு, இந்த அற்பமனிதர்கள் தடைக்கற்களா?

(தலைவர் ஒன்றும் அவர்களை இரக்கப்பட்டு விட்டுவைக்கவில்லை, டக்கிளசை கொல்ல 7 தடவை முயன்று பார்த்தார் சரிவரவில்லை)

தமிழர் போராட்டம், இன்று உலக அரங்கில் பயங்கரவாதமாக தனித்து நிற்பது யாரால்?

இந்த அவலத்தை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்ல ஆளில்லாமல் இருப்பது யாரால்?

முப்படைகள், நிழல் நிர்வாகம் என்று மக்களை பப்பாவில் ஏற்றி இன்று நடுக்கடலில் தவிக்க விட்டது யாரால்?

:D சாணக்கியன் இப்போதாவது உங்கள் உண்மையான முகத்தைக் காட்டியதற்கு நன்றிகள்.

உங்களைப் பொறுத்தவரை புலிகள் போராடாது இருந்திருந்தால் எல்லாம் சரியாக நடந்திருக்கும், அப்படித்தானே? இவ்வளவு காலமும் வடக்குக் கிழக்கில் நடந்த இன அழிப்பிற்கு தமிழர் அவ்வப்போது பதில் அளிக்காது இருந்திருந்தால் தனி ஈழம் கிடைத்திருக்கும், அப்படித்தானே?

ஆகப் புலிகள் இவ்வளவு காலமும், இன்றும் நடத்திவரும் தனியரசு என்பது மாயை என்கிறீர்கள். சனம் பப்பாவில ஏறினதுதான் மிச்சம் என்கிறீர்கள்! ஆக டக்கிளசும், கருணாவும், பிள்ளையானும் தங்களது திறமையினால்த்தான் திறமையற்ற பிரபாகரனின் கொலைத் திட்டங்களில் இருந்து தப்பி வருகிறார்கள் என்கிறீர்கள்?

ஆக எங்களால் இனி ஏலாது எண்டு முடிவுக்கு வந்து விட்டீர்கள். நல்லது.

ஆனால் எமது போராட்டம் என்பது உங்கள் போன்ற சுயநலவாதிகளின் கைய்யில் இல்லாமல் தலைவரினால் வழிநடத்தப்படுகிறது.

இப்ப என்ன ? ரசயாண ஆயுதம் பாவிக்கப் போறாங்கள், ஆனால் நாங்கள் இதை வெளியில் சொல்ல இயலாது? அதுதானே உங்கள் கவலை? ஆனால் நீங்கள் மட்டும், கொழும்பில 100 கிராம் குண்டு வெடிச்சாலும் உடனேயே அதைத் தூக்கிக் கொண்டு,"குய்யோ, முறையோ, கொழும்பில சிங்களச்சனம் எல்லோ காயப்படப் போகுது?" எண்டு கொண்டு இதுக்குள்ள ஓடி வாங்கோ .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகு இப்ப கனபேரின் எண்ணம் புலிகள் அழிந்தார்கள் அழியப்போகிறார்கள் மகிந்த புடுங்கிறார் என்பதுதான் ஆனால் இவர்கள் இப்படி சொல்பவர்கள் யார் தெரியுமா? தமிழர் போராட்டத்தின் நெளிவு சுளிவுகளையும் கடந்தகால வரலாறையும் தற்போது நடக்கும் போரின் உண்மை நிலையையும் அறியாதவர்கள்.புலிகள் அழியவேனும் என்று நினைப்பவன் மகிந்தவின் உளறல்களை கேட்டு சந்தோசப்படலாம் ஆனால் எல்லாம் தெரிந்தவன் அமைதியாக இருப்பான்.இவர்கள் கத்துவதால் புலிகளுக்கோ அல்லது அவர்கள் ஆதரவாளர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. புலிகளும் தமிழ் தேசிய ஆதரவாளர்களும் சேர்ந்து தமிழீழத்தை நிச்சயம் வென்று எடுப்பார்கள் அன்று தான் இவர்களை போன்றவர்களின் முகத்தில் சாணி பூசும் நாள். :D

ஏன் இஞ்ச ஓடிவரவேணும் ? எங்கையாது பாவடைக்குள்ள போய் கிடக்கிறது?

விடுங்கப்பா ஏதோ எதுவும் தெரியாதவர்களுக்கு சொல்வது போல் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்?

காசுக்கும் சிங்களவன் கொடுக்கும் சிகரட் பக்கட்டுக்கும் தண்ணிக்கும் தமிழனையே காட்டி கொடுக்கின்றார்கள் மீதி பேர் கருத்தெழுதுகின்றார்கள்.

ஆனால் அமெரிக்காவோ இங்கிலாந்தோ பின்லாடனுடனோ அல்லது சங்கறியுடனோ கருநாயுடனோ டுக்கிளஸ்னுடனோ பேச்சு நடத்த சொல்லவில்லை புலிகளுடன் தான் பேச்சு நடத்த சொல்கின்றார்கள் ஈழத்தமிழரின் இனப்பிரச்சனைக்கு

நெடுக்கின் கருத்து

ஐநா அமைப்பு தனக்கு பாதுகாப்பான வழித்துணை செய்து தாருங்கள் என்று சிறீலங்காப் படையினருக்கு நிகராக வைத்து கேட்கும் அளவுக்கு தமிழ் மக்களின் இராணுவமாக இன்று தமிழீழ விடுதலைப் புலிகளே விளங்குகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விசவாயுக் குண்டுகளை தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே வழங்குகிறோம் என்ற போர்வைக்குக் கீழ் இந்தியாதான் இலங்கை ராணுவத்துக்கு வழங்கி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உண்மையா? எந்த செய்திகள் என்று சொல்லமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
:D ராடர் வழங்கியதாக எந்தச் செய்திகள் சொன்னதோ அதே செய்திகள்தான் இந்த ரசாயண ஆயுதங்களை கொடுத்தது பற்றியும் சொல்லியிருக்கின்றன.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப ஒராள் என்ன செய்வர் தெரியுமா? கதிரையில இருந்துகொண்டு தலையையும் பிடிச்சுக்கொண்டு ஆகா எல்லாரும் ஓன்று சேர்ந்துட்டாங்கப்பா இனிமல் வேற திரியை பார்க்கவேண்டியதுதான் சபா இப்பவே கண்ணைகட்டுதே உஸ் .......... :unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்த நிலமைக்கு காரணம் என்ன?

அடச் சை... நான்கூட ஈழச் சுதந்திரப்போருக்கு அடிப்படை சிங்களப் பேரினவாதம்தானெண்டு இவ்வளவு காலமும் நினைச்சுக்கொண்டிருந்தனப்பா..! இப்பத்தானே விளங்குது, சிங்களவன் அண்டைக்கு 83 கலவரத்தில ஒரு பாசத்திலதான் எங்களை எல்லாரும் உள்ள வச்சு வீட்டையும் கொளுத்தி விட்டவனெண்டு..! இதை விளங்கிக் கொள்ளாமல் புலியும் போராடப் புறப்பட்டுட்டுது..! அதால இப்ப சாண‌க்கியனுக்கு கொழும்பில பிரச்சினை...! :unsure:

புலி போராடாம விட்டிருந்தா இப்ப சாணக்கியனும் அந்த சிங்களப் பாசத்தை அநுபவிச்சிருக்கலாம்தானே..! சே.. கெடுத்துட்டாய்ங்களே..! :unsure:

வன்னியில் விச வாயுவை பயன்படுத்த அரசு திட்டம்!

ஆனால் ஒரு விச வாயு யாழ்களத்தை பயன்படுத்த சாணக்கியமாக திட்டமிடுகிறது!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் விச வாயுவை பயன்படுத்த அரசு திட்டம்!

ஆனால் ஒரு விச வாயு யாழ்களத்தை பயன்படுத்த சாணக்கியமாக திட்டமிடுகிறது!!

விச வாயு = Hot Air ??!! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.