Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை புலிகள் அழிந்தால் சந்தோசமாம் ?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பத்து நாளுக்கு முதல் முஸ்லீம் நபர் ஒருவரை தற்செயலாக சந்திப்பதற்கும் உரையாடுவதற்கும் காலம் வழி செய்தது அவருடன் உரையாடியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அவர் கண்டியை சேர்ந்த முஸ்லீம் அவரும் நானும் முதல் நட்புடனேயே உரையாட தொடங்கினோம் சிறிது நேரத்தின் பின் என்னை தமிழா என்று கேட்டார் நான் சொன்னேன் நான் தமிழீழ தமிழன் என்று அதுக்கு அப்புறம் சொன்னார் புலி பயங்கரவாதிகள் மகிந்த அரசாங்கத்தால் அழிந்து கொண்டுவருகிறார்கள் என்று மிகவும் சந்தோசமாக சொன்னார் என்னால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை அதுக்கு அப்புறம் தான் எனக்கும் அவருக்கும் விவாதமே ஆரம்பித்தது சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்தது.முதல் நான் அவரிடம் கேட்டுக்கொண்டது எனக்கு முன்னால் புலிகளை பயங்கரவாதிகள் என்று அழைக்க வேண்டாம் என்று அவர்களை தமிழர் படை என்று அழைக்குமாறும் கேட்டுக்கொண்டேன் அதையே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை நான் கேட்டேன் பயங்கரவாதிகள் என்றால் என்ன என்று அதுக்கு அவரால் வழங்கப்பட்ட பதில் புலிகள் செய்வதுதான் பயங்கரவதிகளுக்கு உரிய இலக்கணம் என்றார் அதை நான் மறுத்து உரைத்தது பயங்கரவாதிகள் என்றால் சாதரண மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்ப முயற்சிப்பவர்களும் குழப்பிக்கொண்டிருப்பவர்களு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பு இரண்டு

சாதாரண சிங்கள மக்களும் எங்களுக்கு எதிரிகள் இல்லை எங்களுடைய எதிரிகள் இனவாத சிங்கள அரசும் எங்களை அழிக்க முனைபவர்களுமே.இந்த தீவில் நாம் எல்லோருடனும் நட்புடனேயே வாழ விரும்புகிறோம் நாம் யுத்தத்தை விரும்பி செய்யவில்லை யுத்தம் செய்ய இனவாத அரசாங்கத்தால் நிர்ப்பந்திக்கபட்டதன் பேரிலையே யுத்தம் செய்கிறோம் அதுவும் எமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ளவும்.அப்படி இருக்கும் போது நாம் ஏன் சாதாரண சிங்கள மக்களை கொல்லவேண்டும்? சிங்கள மக்களை கொல்பவர்கள் யார் ? சிங்கள அரசேதான்.சிங்கள அரசுக்கு அந்த தேவை இருக்கிறது ஏனேன்றால் விடுதலை புலிகளை பயங்கரவாதிகளாக வெளி உலகுக்கு காட்டவும் அனுதாபத்தை தேடவும் இப்படியான இழி செயல்களை செய்கிறார்கள் அவர்களுக்கு சில தமிழின தூரோகிகளும் ஒட்டுகுழுக்களும் உதவி செய்கிறார்கள் ஆனால் எமக்கு அந்த தேவை இல்லை.ஆனால் இப்ப என்ன சிறிலங்காவில் நடந்தாலும் அதை புலிகளின் தலையில் போடுவது இலகுவாகிவிட்டது ஆனால் மக்களாகிய நீங்களே அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்ளவேண்டும் அதைவிடுத்து இனவாத அரசுகள் சொல்வதை அப்படியே நம்பக்கூடாது.ஆனால் சில கொலைகள் நடந்திருக்கலாம் தமிழ் மக்கள் தினம் தினம் சுடப்படுகின்றபோதும் காணாமல் போகின்றபோதும் கிளைமோர் தாக்குதலின் போது கொத்து கொத்தாக பலி வாங்கப்படும் போதும் நீங்கள் யாராவது கவலைபட்டீர்களா அல்லது அவர்களுக்காக குரல் கொடுத்தீர்களா? இல்லை இல்லவே இல்லை ஆனால் சிங்கள மக்கள் கொல்லப்படுகிறார்கள் அது பயங்கரவாதம் என்று சொல்கிறீர்கள் ஏன் தமிழ் மக்களை கொன்றால் அது பயங்கரவாதம் இல்லையோ? எமது மக்கள் சில மதங்களுக்கு முன்பு வன்னியில் தொடர்ச்சியாக கிளைமோர் தாக்குதல்களினாலும் வான் தாக்குதல்களினாலும் கொத்து கொத்தாக கொல்லப்பட்டார்கள் அதுவும் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலையே இது எல்லாம் நடந்தது சிறிலங்காவில் இருக்கும் உங்களை போன்ற மனிதாபிமானிகளோ அல்லது உலகநாட்டு மனிதாபிமானிகளோ எந்த தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை ஆனால் புலிகள் பிரதேசத்தில் இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது புலிகளின் கடமை அதை அவர்கள் செய்ய முனைந்தபோது சில மிக சொற்ப சிங்கள மக்கள் பலியாகியிருக்கலாம் ஆனால் அப்படியான நடவடிக்கைகளால் தான் எமது மக்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது எமது மக்களை பாதுகாக்க முடிந்தது.எமக்கென்று யாரும் இல்லாதபோது எம்மை நாமே பாதுகாத்துக்கொண்டோம் அது தப்பாகாது.ஆனால் எல்லா கொலைகளுக்கும் விடுதலை புலிகள் பொறுப்பாளி ஆகமுடியாது.இலங்கை யுத்தத்தில் போரில் பலிகொள்ளப்படும் வீரர்களை விட அரசியல் தேவைகளுக்காகவும் சுய லாபத்துக்காகவும் பலபேருடைய உயிர்கள் பறிக்கப்படுகிறது அதை அறிய உங்களுக்கு சில காலங்கள் தேவைபடலாம் ஆனால் அதுதான் உண்மை.இப்படி நான் விவாதித்துக்கொண்டிருக்கும் போது கேட்டார் ஏன் யாழ்ப்பாணத்தில் இருந்த முஸ்லீம் மக்களை புலிகள் வெளியேற்றினார்கள் என்று? அதுக்கு நான் ......................

தொடரும் ...............

  • கருத்துக்கள உறவுகள்

1911 ஆம் ஆண்டு சிங்களவர்கள் முஸ்லீம்களின் மேலேயே ஒரு இனக்கலவரத்தையும், பின்னர்தான் தமிழரில் தொடங்கினவர்கள்,சிங்களவனுக்க

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பு இரண்டு

அதுக்கு நான் ......................

தொடரும் ...............

என்ன சுப்பண்ணை ,

பொறுத்த இடத்திலை வந்து , காக்க வைச்சுப்போட்டியள் .

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுப்பண்ண மறந்து விட்டயல் போல தொடரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை,

உந்தத் தொப்பி பிரட்டியிட்ட, பாலஸ்த்தீனத்தில நடக்கிறதும், காஷ்மீரில நடக்கிறதும், பொஸ்னியாவில நடந்ததும், கொசோவோவில நடந்ததும், செச்னியாவில நடந்ததும் அப்ப பயங்கரவாதம் தானே எண்டு கேளுங்கோ. அதுக்கு என்ன சொல்லுது எண்டு பாப்பம். உலகத்தில முஸ்லீம் சனம் எங்க பிரச்சனைப் பட்டாலும் உடனே கொழும்பிலயோ அல்லது களுத்துறையிலையோ வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த கையோடு லுங்கிய மடிச்சுக் கட்டிக்கொண்டு ஆர்ப்பாடம் செய்யிறதும், கொடும்பாவி எரிக்கிறதும் என்னத்துக்காக எண்டு கேளுங்கோ. பயங்கரவாதத்தை ஆதரிச்சுத்தானே எண்டு கேளுங்கோ.

இஸ்ரேலில ஒவ்வொரு நாளும் தற்கொலைத் தாக்குதல் எண்ட பெயரில சனத்தைச் சாக்காட்டிறதோட ஒப்பிடும்போது புலிகள் செய்வது ஒன்றுமேயில்லை. பாலஸ்த்தீனர்கள் போராடுவது இஸ்ரேல் என்ற நாட்டையே இல்லாமல் செய்வதற்கு. நாம் போராடுவது எமது நாட்டைக் காப்பதற்கு.

தருணத்துக்கு ஏற்ற மாதிரி புரட்டிப்போடும் ஆக்களோட கதைச்சு எந்தப் பயனுமில்லை. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வரலாற்றில் முதல் இனக்கலவரம்,

சிங்கள முஸ்லிம் கலவரம்.

இலங்கையில் முஸ்லிம் மக்களின் மறுக்கப்பட்ட வாழ்வு

சபேசன்.

கனடா

இலங்கையில் வடக்கு தெற்கு எங்கும் அரசினாலும் புலிகளாலும் காட்டுத்தர்பார் நடாத்தப்படுகின்றது. புலிகளால் நடத்தப்படும் கொலைகளையும் காணாமல் போதல்களையும் பெரிதாக கூறும் அரசும, அதே போன்று அரசும் அரசு சார்பு குழுக்களும் செய்யும் கொலைகளையும் காணாமற்போதல்களையும் புலிகளும் பெரிதாக்கும் பிரச்சாரங்களும் ஒன்றை மட்டும் தெளிவாக புரியவைக்கின்றன. அதாவது எத்தனை மனித உரிமை அமைப்புகள் கண்டித்தாலும் நாங்கள் இவற்றை (கொலைகளையும், காணாமல் போதல்களையும்) நிறுத்தப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்போம் என்பதையே.

இரண்டு பகுதிகளும் ஒன்றை ஒன்று விட்டுக்கொடாமல் இனவாத அரசின் இருத்தலிற்காக பௌத்த சிங்கள இனவாதமும, தனது சொந்த அதிகாரத்தை வழிசமைப்பதற்காக புலிகளும் தொடர்கின்ற சதுரங்கம். இந்த நிலையில் அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பாக முஸ்லிம் மக்களின் நிலையென்பது மிகவும் சிக்கலான வடிவத்தை அடைந்த பொழுதிலும் தொடரப் போகின்ற(?) சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் கட்சிகள் தனித்துவமாக கலந்து கொள்வதாக இருப்பது முன்னேற்றமான ஒரு விடையமாக பார்க்க முடியும்.

இலங்கை பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மேல் இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வர்த்தகம், தொழில் முன்னுரிமைக்கான போட்டியாகவும் பின்னர் காலப்போக்கில் சிங்களப் பெரும்பான்மையினரின் வாக்குச்சீட்டிற்காகவும் திட்டமிட்டு இனவாதம் தூபமிடப்பட்டது. இந்தப்பிழைப்பு வாதம் U N P , S L F P , J V P போன்ற கட்சிகளினால் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத உருவேற்றியது. இலங்கையின் வறுமை, வேலையின்மை, பற்றாக்குறை போன்றவற்றின் பிரதான காரணங்கள் நவகாலனித்துவம், காலனித்துவம், ஒவ்வொரு கட்சிகளினதும் தனிநபர்களினதும் சுயநலம் போன்றவற்றை அம்பலப்படுத்தி போராடவேண்டிய சிங்கள அரசியல் கட்சிகள் இதற்குப் பதிலாக குறுகிய அரசியல் இலாப நோக்குடன் தமிழ், முஸ்லிம், மலையக மக்களை இப்பற்றாக்குறைகளுக்கு காரணகர்த்தாக்களாக்கின. வாக்குச்சீட்டிற்காக இனவாதத்தை பயன்படுத்தியது.

இவற்றின் எதிர் மறையான விளைவுகளை தமிழ் தலமைகளின் வரலாற்றிலும் காணலாம. தமிழ் மக்களின் மேல் அழுத்தப்பட்ட இனவாதத்திற்கு சரியான காரணங்களi கண்டுகொள்ள முடியாத தமிழ்த்தலைமைகள் தமது தோல்விகளிற்கான காரணத்தை முஸலிம் மக்களின் மேல் கொட்டியதை இலங்கையின் இனக்கலவர வரலாற்றினை கூர்ந்து நோக்கினால் புரிந்து கொள்ளமுடியும்.

சிங்கள இனவாத கட்சிகள் திட்டமிட்ட முறையில் இனவாதத்தை தமிழ் மக்களின் மேல் கொட்டியது போலவே முஸ்லிம் மக்களின் மேலும் செலுத்தியது. 78ம் ஆண்டு வரையிலும் சிங்களத்தேர்தல் தொகுதிகளில் அரை அரைவாசியாக U N P யும்S L F P யும் இருக்கும் போது மூன்றாவதாக தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்யும் சிறு சிறு சமூகப் பகுதிகளாக முஸ்லிம்கள் பல தொகுதிகளில் அமைந்திருந்தனர். இந்த காரணத்தினால் இரண்டு பெரிய சிங்களக் கட்சிகளாலும் இவர்கள் விலைபேசப்படும் நிலமை உருவாகியது. இவற்றுக்கெல்வாம் காரணம் இலங்கையின் அரசியலை நிர்ணயிக்கக்கூடிய முஸ்லிம்களின் அரசியல் தலமையானது துர்ப்பாக்கிய வசமாக முஸ்லிம் பணக்காரர்களின் கைவசம் இருந்தததே ஆகும். ஆனால் இந்த நிலமை பிற்காலங்களில் மாறிவிட்டது.

1978ல் சிறு தொகுதிகள் மூலம் தேர்தலில் தெரிவு செய்யும் முறை கைவிடப்பட்டு விகிதாசார தெரிவு முறை நாடாளுமன்றத்தில் அமுல்படுத்தப்பட்டது. இது முஸ்லீம்களின் முக்கியத்துவமான தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் பலத்தை இழக்கவைத்தது.

இந்தப் புதியநிலமையானது இரத்தினக்கல் வியாபாரம் போன்ற வர்த்தகம்களை முஸ்லீம் பணக்காரர்களிடமிருந்து சிங்கள வர்த்தகர்களின் கைகளிற்கு இனவாதக்கட்சிகளால் இடம்மாற்ற உதவியது. தொடர்ச்சியாக முஸ்லீம் ஏழை மக்களின் வாழ்வில் இனரீதியாகவும், சமூக பொருளாதார ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட்டன. இவை முஸ்லீம் மக்களின் அரசியல் கொழும்புசார் பணக்கார முஸ்லீம் தலமைகளிடமிருந்து விடுபட்டு இவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலிலுள்ள முஸ்லீம்களிடமும், நடுத்தர விவசாய முஸ்லீம்களிடமும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பாராளுமன்ற உயர் பதவிகளிலிருந்து கூட முஸ்லீம்கள் தூக்கியெறியப்பட்டனர். இக்காலங்களிற்கு முன்னரே முஸ்லீம் எதிர்ப்புணர்வு, வன்முறை வடிவத்தில் சிங்கள இனவாதக்கட்சிகளால் ஏவிவிடப்பட்டன. எழுபதுகளில் நடைபெற்ற முஸ்லீம் விரோத நடவடிக்கைகளில் சிங்கள அரசுதான் பின்னின்றது.

76ம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசலும் அதன் அண்டைகிராமங்களும் தாக்கப் பட்டும் எரிக்கப்பட்டும் பல முஸ்லீம்கள் கொலலப்பட்டதிற்கும் S.L. F. P அரசு பின்னின்றது.

82ல் காலி நகரிலும் அரசபயங்கரவாதம் முஸ்லீம் மக்கள் மேல் ஏவப்பட்டது. இதற்கு U.N.P அரசாங்கம் பின்னின்றது.

இந்த நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் கொழும்பில் உருவாகிய யாழ்ப்பாண பணக்காரர்களின் கூட்டம் அங்கே வர்த்தகம், தொழில் முன்னுரிமை போன்றவற்றிற்கு போட்டி போட வேண்டி ஏற்பட்டது. இதற்காக முஸ்லீம்களையும், இந்திய வம்சாவழிகளையும் காட்டிக்கொடுத்தேனும் தமது அபிலாசைகளை நிறைவேற்றியது. ஊதாரணமாக சேர் பொன் இராமநாதன் போன்றோர் முஸ்லிம்களிற்கு எதிரான உரைகளை நிகழ்த்தியிருந்தனர். 48ல் தமிழ்க்காங்கிரஸ் கட்சி தங்கள் சொந்த நலன்களுக்காக, மலையக தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அவர்களுக்கு பச்கைத் துரோகமிழைத்ததும் குறிப்பிடப்பட வேண்டும்.

1915 ம் ஆண்டு கலவரம் சிங்கள தமிழ் கலவரமாக இல்லாமல், சிங்கள முஸ்லீம் கலவரமாக நடந்து முடிந்ததும் இந்த வரலாற்றுத் துரோகப்பின்னணிகளே ஆகும்.

இலங்கையின் வரலாற்றில் முதல் இனக்கலவரம், சிங்கள முஸ்லிம் கலவரம் ஆகும்.

தமிழரசுக் கட்சியின் தோற்றத்தின் போது கிழக்கு மாகாண முஸ்லிம்களுடன் மேலோட்டமான ஒற்றுமைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் சரிவர வெற்றிபெறவில்லை. அதன் காரணத்தினால் நூற்றுக்கணக்கான சதுரமைல் பரப்புள்ள நிலங்கள் முஸ்லிம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டதிற்கு எதிரான போராட்டம் வலுப்பெறவில்லை.

தமிழ்க்கட்சிகளுடன் பாராளுமன்றம் சென்ற பல முஸ்லிம்கள் பின்னர் சிங்கள இனவாதக்கடசிகளுடன் இணைந்து கொண்டனர். (இதனை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் செய்திருந்தார்கள்) ஆனால் அக்காலங்களில் முஸ்லிம்கள் மட்டும்தான் அரசியலில் நம்பத்தகாதவர்கள் என்ற அபிப்பிராயம் தமிழர்களிடம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. அதேசமயம் அறுபதுகளிலிருந்தே முஸ்லிம்கள் பலர் தமிழ் தேசிய விடுதலைப்போராட்டங்களிலும், சத்தியாக்கிரகமங்களிலும் பங்கு கொண்டு சிறை சென்ற வரலாறுகள் பலவுண்டு.

ஆனால் தமிழ் பிரதிநிதிகள் தங்களுடன் சேர்ந்து போராடிய முஸ்லிம் இளைஞர்களையோ ஏழை மக்களையோ முதன்மைப்படுத்தாமல் கொழும்புசார் பணக்கார முஸ்லிம்களின் தலமைத்துவத்தின் அரசியல் சூதாட்டங்களையே பெரிதுபடுத்தினார்கள்.

இதன் காரணத்தினால் முஸ்லிம்களை அரசியலில் நம்பமுடியாது என்று தமிழர்களிடையேயும் தமிழர்களை அரசியலில் நம்பமுடியாது என்று முஸலிம்களிடையேயும் கருத்துப் பரவியது. தமிழர் கூட்டணியின் வழியில் தோன்றிய இயக்கங்களும் இக்கருத்தோட்டத்தை மாற்ற பெரிய அளவில் முயற்சிக்கவில்லை.

கிழக்கு மாகாணத்தில் 33 சதவீதமும் மற்றும் அம்பாறை, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற மாவட்டங்களில் குறிப்படத்தக்க அளவு கணிசமான தொகையினரும் வாழ்ந்தனர். ஆனால் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் சிங்களப் பிரதேசங்களில் உள்ள தொகுதிகளிலேயே சிதறி வாழ்ந்தனர்.

எது எப்படியிருந்த போதும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் கிழக்கு மாகாணம் "தமிழர்கள் மாகாணம்" என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். இது யாழ்ப்பாண நோக்கில் எடுத்த மிகவும் பிழையான மனோபாவமாகும். அன்று புலிகளின் மூத்த உறுப்பினரான யோகியிலிருந்து இன்றைய தமிழ் தேசியகூட்டமைப்பானானாலும் சரி இன்றைய சு.ப தமிழ்ச்செல்வனானாலும் சரி வெளிப்படையாக வெட்கமில்லாமல் "முஸ்லிம்கள் தமிழர்களின் நலன் சார்ந்தே அரசியல் முடிவுகள் எடுக்கவேண்டும்" என்று அவர்களின் ஊடகங்களில் கூறுகிறார்கள்.

இன்று மட்டுமல்ல பழைய தமிழ் கட்சிகளான தமிழரசுக்கட்சி, கூட்டணி போன்றவற்றின் பிரதிநிதிகள் சிங்கள அரசுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளில் கூட முஸ்லிம்களின் அபிலாசைகளிற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இப்படியாக இலங்கையின் அரசியல் வரலாற்றில் இனங்களிடையே காட்டிக் கொடுப்பிற்காகவும் குறுகிய இலாபத்திற்காக சோரம் போவதும் இனங்களிடையே பரஸ்பர நம்பிக்கையின்மையையே வளர்த்துள்ளது.

தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக புறப்பட்ட பிரதான இயக்கங்கள் எல்லாம் முஸ்லிம் மக்களை ஒரே இனத்தவர்களாகவோ அல்லது சகோதர மக்களாகவோ நடத்தவில்லை. இது இவர்களின் கடந்தகால அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தப்பபட்டுள்ளது. முக்கியமாக புலிகளின் அராஜகம் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை இரத்தப்பலி எடுத்தது. இதன் விளைவாலும், இனவாத சிங்கள அரசினால் தூண்டப்பட்டும் முஸ்லிம்கள் சிலரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் பல அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தனர். இவற்றால் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே குரோத உணர்வு உக்கிர நிலமையடைந்தது.

பழைய தமிழ்த் தலைமைகள் கூட இன ஒடுக்குமுறையை "தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையாக" பேசினார்கள். ஆனால் இன்று குறிப்பாக புலிகளால் "தமிழர்களின் பிரச்சனையாகவே" பார்க்கப்படுகின்றது.

அன்று தொட்டு பிரச்சனைகளை பேசும் போதும், போராடும் போதும் "தமிழ் பேசும் மக்களின் பொதுப் பிரச்சனையாகவே" பேசப்பட்டும் போராடப்பட்டும் வந்துள்ளது. இப்போராட்டங்களில் முஸ்லிம்களும் இணைந்தே போராடிவந்துள்ளனர். ஆனால் பிரச்சனைகளுக்கான தீர்வினைத் தேடும்போது மாத்திரம் தீர்வானது "தமிழர்களுக்கு மாத்திரம்" என்று பார்க்கப்படுகின்றது.

இன்று ஏற்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் குரோதத்திற்கு புலிகளின் பங்கு என்பது பிரதான பாத்திரம் வகிக்கின்றது. சிங்கள அரசாங்கமும் இக்குரோத உணர்வினையே பாவிக்கின்றது. அன்றைய இந்திய இலங்கை அரசுகளின் ஒப்பந்தம் கூட உருப்படியான ஒரு தீர்வினை முஸ்லிம்களுக்கென முன்வைக்கவில்லை. இக்குறைபாட்டினை சில முஸ்லிம்கள் தவிர இலங்கை அரசியலில் எப்பகுதியாலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை. இந்திய அரசின் உதவியுடன் வட கிழக்கு மாகாணசபை உருவாகிய போது முஸ்லிம்களால் தெரிவு செய்யப்படாத, முஸ்லிம்களின் அபிலாசைகளை பிரதிபலிக்காத ஒரு முஸ்லிம், "அபுயூசுவ்" தெரிவுசெய்யப்பட்டார்.

இது முஸ்லிம்களின் உரிமக்கான உத்தரவாதம் உடைக்கப்பட்ட செயலாகும். அதைவிட முஸ்லிகளின் அபிலாசைகளை நிறைவேற்றியதாக போலியாக காட்டமுனைந்த செயலாகும்.

மாகாண சபையில் உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அலியது உகுமானை மாகாணசபையில் அங்கம் வகித்த E.N.D.L.F இனர் சுட்டுக்கொன்றனர்.

கிழக்கிலும் திருகோணமலையிலும் புட்டும், தேங்காய்பூவையும் போன்று அடுத்தடுத்த கிராமங்களில் வாழ்ந்த தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் தமக்கிடையே உருவாகிய சிறு பிரச்சனைகளை தம் ஊர்ப்பெரியவர்கள் மூலம் தீர்த்து முடித்தவர்களே. ஆனால் இவை அரசியலுக்காக தமிழ் சிங்கள கட்சிகளால் உருவேற்றப்பட்ட பின்னர் நிரந்தர நம்பிக்கையின்மையையே பரஸ்பரம் உருவாக்கியது. குறிப்பாக இப்பகுதி முஸ்லிம்களின் பாதுகாப்பு உத்தரவாதம் என்பது சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை விடவும் பாதகமான நிலையிலேயே உள்ளது.

சாத்வீக போராட்ட காலங்களிலும் சரி ஆயுதப் போராட்ட காலங்களிலும் சரி முஸ்லிம்கள் இணைந்தே போராடியுள்ளனர். இருந்த போதிலும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர்களது ஆயுதம் திரும்பியது வெட்கக்கேடான விடையமாகும். அதுவும் அரசியல் துரோகிகளாக,

'தொப்பி பிரட்டி" களாக தமிழ் மக்கள் மத்தியில் உருவேற்றப்பட்டு நடாத்தப்படுகின்றது.

பிற்காலங்களில் முஸ்லிம்களுக்கான ஒரு அரசியல் ஸ்திரநிலமையை உருவாக்க உணர்சிமயமாக பேசிவந்த அஸ்ரப, ஒரு தீவிரமான முஸ்லிம் தோற்றப்பாட்டை உருவாக்கினாh. ஆனாலும் தமிழ்த்தேசியத்தின் மிகைப்படுத்தப்பட்ட தீவிரமான பாசிச தோற்றத்தினை "ஜிகாத்" அடைவதற்கு முன்னர் எல்லைப்படுத்தப்பட்டது. இவர்களின் செயற்பாடுகள் அரசசார்பாகவும், தமிழ்மக்கள் விரோத செயற்பாடுகளாகவும் இருந்தன.

தமிழ் ஈழ்ப் பிரிவினை வாதம் என்பது ஒரு கனவுதான் என்பதை தன்னகத்தே கொண்டிருக்கும் "ஒடுக்கமான யாழ்ப்பாண சுயநல நோக்கத்தை" பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். இது கடைசிவரைக்கும் மத, பிரதேச ஒற்றுமைகளை வென்றெடுக்காது. ஆனால் அஸ்ரப்பினது நோக்கத்தை உற்றுப்பார்த்தால் சிறிலங்காவின் முழு முஸ்லிம்களை இணைக்க எடுத்த முயற்சியானது முற்று முழுதான பிரிவினையை நோக்காது ஒரு ஜனநாயக கோரிக்கையாக அமையவே முற்பட்டது எனலாம்.

முஸ்லிம்களுக்கான தனிமாகாணக் கோரிக்கை, முஸ்லிம்கள் மிக அதிகமாக வாழும் அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாக கொண்ட தென்கிழக்கு மாகாணக் கோரிக்கை போன்றவை ஒருவகையில் யாழ்ப்பாண முஸ்லிம்களை கருத்தில் கொள்ளவில்லை என்பதால் பரந்த வட கிழக்குக்குள் முஸ்லிம்களுக்கான சுயாட்சி அலகுகள் என்பதாகவும், அதுபோன்று பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன.

2003 தை மாதத்தில் "ஒலுவில பிரகடனம்" தென்கிழக்கு பல்கலைகழகத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் பலலாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தினார்கள்.

தமிழர்களுக்கு 'வட்டுக்கோட்டை தீர்மானம்" எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் கொண்டதே அதேயளவிற்கு "ஒலுவில பிரகடனம்" முஸ்லிம்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

"முஸ்லிகள் அரசியல் துரோகிகள்" என்பது வெறும் புனையப்பட்ட மாயை என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இனறைய நிலையில் இலங்கை முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமாக அடையாளம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பு மூன்று

அவர் கேட்டார் ஏன் முஸ்லீம் மக்களை யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் வெளியேற்றினார்கள் என்று ஆனால் அவர் மேலதிகமாக ஒன்றையும் சொன்னார் தமிழ் மக்கள் தங்களுக்கு இருக்கும் உரிமை என்று சொல்லப்படுபவை எங்களுக்கும் இருக்கு என்றார் யாழ்ப்பாணத்திலும் தங்களுக்கு உரிமை உண்டாம்.அதற்கு நான் சொன்ன பதில் இலங்கையிலே முதல் தமிழரும் அதன் பின்பு சிங்களவரும் தான் வந்தார்கள் அந்த நேரங்களில் முஸ்லிம்கள் வியாபார நோக்கங்களுக்காக இலங்கை வந்து போயிருக்கிறார்கள்.இலங்கையில

சுப்பண்ணை

தற்போது இலங்கையில் வாழும் முஸ்லீம் மக்கள் எல்லோரும் ஏதோ அராபியர்கள் என்பது போல் உங்கள் கருத்து உள்ளது. அது தவறானது. இதில் ஏற்கனவே வேறு இன, மதங்களிலிருந்து முஸ்லீமாக மாறியவர்களும் அடங்குவார்கள். அப்படியிருக்க அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று கூறும் உங்களுக்கும், தமிழனுக்கு உரிமையில்லை என்று கூறும் சிங்களவனுக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை. இது தவறான விளக்கமும் கூட. இப்படியான விளக்கங்களினால்த் தான் இன்னும் பிரைச்சினைகளும் அதிகமாகிக் கொண்டு போகின்றது. நீங்கள் கூட இலங்கையின் சரித்திரப் பின்னனியை சரியாக அறியாமலோ அல்லது கட்டுரை சுவாரசியமாக இருக்கட்டும் என்றோ தவறான கருத்துக்களை எழுத முயல்வது பாரதூரமானது. என்னைப் பொறுத்தவரை இலங்கையில் பிரஜாயுரிமையுள்ள மலையகத்தமிழர்கள் உட்பட அனைவருக்கும் சமமான உரிமை இருக்க வேண்டும். விகிதாசார அடிப்படையில் எவருக்கும் சலுகைகள் வழங்கக் கூடாது. எல்லா இன மக்களும் சமமாக பாவிக்கப்பட்டால்த் தான், இனத்துவேசங்கள் இல்லாமல் போய் எல்லோரும் புரிந்துணர்வோடு வாழும் நிலையும் ஏற்படும்.

Edited by Vasampu

என்னவொரு விளக்கம் சுப்பண்ணை சும்மா சொல்லக்கூடாது அசத்திப் போட்டியள்.

ஆனால் சுப்பண்ணை முஸ்லீம்கள் தமிழ் பேசினாலும் ஒரு தனியினம் என்றுதான் அவர்களும் எண்ணுகிறார்கள் எம்மவர்களும் எண்ணுகிறார்கள். எங்களது போராட்டத்திற்கு எதிராக அரச கைக்கூலிகளாகச் செயற்பட்டார்கள் என்பதற்காக யாழிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் எண்டால், தங்களின் சொந்த போராட்டத்திற்கு எதிராக அரசின் கைக்கூலிகளாக நிறையத் தமிழர்கள் போராட்டத்திற்கு எதிராகச் செயற்படுகிறார்கள். அதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்தோ அல்லது மட்டக்களப்பிலருந்தோ தமிழர்களை வெளியேற்றுவது சிறந்த முடிவாக இருக்குமே எண்டு அந்த முஸ்லீம் நபர் உங்களைக் கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பியள்?

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது போராட்டத்திற்கு எதிராக அரச கைக்கூலிகளாகச் செயற்பட்டார்கள் என்பதற்காக யாழிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் எண்டால், தங்களின் சொந்த போராட்டத்திற்கு எதிராக அரசின் கைக்கூலிகளாக நிறையத் தமிழர்கள் போராட்டத்திற்கு எதிராகச் செயற்படுகிறார்கள். அதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்தோ அல்லது மட்டக்களப்பிலருந்தோ தமிழர்களை வெளியேற்றுவது சிறந்த முடிவாக இருக்குமே எண்டு அந்த முஸ்லீம் நபர் உங்களைக் கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பியள்?

மின்னல்,

எண்பதுகளில் புலிகளிடமிருந்த ஆள் வளம் மற்றும் ஆயுத வளங்களை வைத்து பார்க்கும்போது, அவர்களுக்கு அந்த நேரத்தில் வேறு வழி இருக்கவில்லை. இலங்கை புலனாய்வுத்துறை முஸ்லீம்களை அதிகமாக உபயோகிக்கத் தொடங்கி விட்டிருந்தது. புலிகளுக்கு அது அப்போது அவர்களுக்கு வாழ்வா சாவா போராட்டம். முஸ்லீம்களை அந்த நேரத்தில் வெளியேற்றாது விட்டிருந்தால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பெரும் சச்சரவுகள் ஏற்படவும் வாய்ப்பிருந்தது. அன்றைய நிலையில் என்ன செய்ய முடிந்ததோ அதைப் புலிகள் செய்தார்கள். இன்றைய நிலையில் நிச்சயம் வேறு விதமாக அணுகியிருப்பார்கள். ஆனாலும் ஒன்றை இழந்துதானே இன்னொன்றைப் பெற‌ வேண்டி இருந்தது?

டங்குவார் புலிகள் செய்தததை நான் விமர்சிக்கவில்லை. தவிர்க்கவே முடியாத கட்டத்தில்தான் புலிகளின் தலைமை அந்த முடிவை எடுத்தது என்பது மின்னல் அறியாதல்ல தெரியும்.

இது தொடர்பில் போதிய தெளிவில்லாமல் நீங்கள் அரசிற்குக் கைக்கூலிகளாக இருந்தீர்கள் அதுதான் வெளியேற்றினம் எண்டு சுப்பண்ணை கொடுத்திருக்கிற அறிவியல் விளக்கத்திற்காகத்தான் எனது கருத்து அமைந்திருந்தது.

மின்னல்,

எண்பதுகளில் புலிகளிடமிருந்த ஆள் வளம் மற்றும் ஆயுத வளங்களை வைத்து பார்க்கும்போது, அவர்களுக்கு அந்த நேரத்தில் வேறு வழி இருக்கவில்லை. இலங்கை புலனாய்வுத்துறை முஸ்லீம்களை அதிகமாக உபயோகிக்கத் தொடங்கி விட்டிருந்தது. புலிகளுக்கு அது அப்போது அவர்களுக்கு வாழ்வா சாவா போராட்டம். முஸ்லீம்களை அந்த நேரத்தில் வெளியேற்றாது விட்டிருந்தால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பெரும் சச்சரவுகள் ஏற்படவும் வாய்ப்பிருந்தது. அன்றைய நிலையில் என்ன செய்ய முடிந்ததோ அதைப் புலிகள் செய்தார்கள். இன்றைய நிலையில் நிச்சயம் வேறு விதமாக அணுகியிருப்பார்கள். ஆனாலும் ஒன்றை இழந்துதானே இன்னொன்றைப் பெற‌ வேண்டி இருந்தது?

டங்குவார்

விடுதலைப்புலிகளே நடந்த தவறை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்த பின்பும், அதனை நியாயப்படுத்த நீங்கள் முயல்வது தவறானது. யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் பலர் கூட்டணி ஆதரவாளர்களாகவே இருந்தனர். மதவாதிகளாக இருந்த முஸ்லீம்கள் சிலர் தான் இப்படியான நடவடிக்கைகளுக்குத் துணை போனார்கள். அதனால் எல்லா முஸ்லீம் மக்களும் தவறானவர்கள் என்ற எண்ணம் தவறானது. கூட்டணிக்கு ஆதரவாக இருந்த பல முஸ்லீம் புத்திஜீவிகள் இந்த மதவாத முஸ்லீம்களினால் பழிவாங்கப்பட்ட சம்பவங்கள் கூட நிறைய நடந்துள்ளன.

அதுபோல் புலிகளினால் முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டது சரியென்ற உங்கள் வாதம் நியாயமானது என்றால், இன்று அரசு கொழும்பில் வாழும் தமிழ் மக்களுக்கெதிராக எடுக்கும் நடவடிக்கைகள் பிழையென்று எப்படி எம்மால் கூற முடியும்??

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் மக்கள் தானே அப்படி செய்கிறார்கள் சில கை கூலிகளால் நிர்பந்திக்கப்படுகிறார்கள் ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக வரும் போது இவர்களை திருத்திவிடலாம்

ஆனால் முஸ்லிம்களை??

உதாரணம் : அவர்களும் தமிழ்தானே பேசுகிறார்கள் ஏன் பழைய வன்செயலில் கொள கொட்டியுடன் சேர்ந்து எல்லை தமிழ் கிராமங்களில் உள்ள தமிழ்ர்களை வெட்டியது யாராவது மறுக்க முடியுமா [கிழக்கு மாகாணம்]

[எண்பத்தைந்து தொண்ணூறுகளில்]

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார்

விடுதலைப்புலிகளே நடந்த தவறை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்த பின்பும், அதனை நியாயப்படுத்த நீங்கள் முயல்வது தவறானது. யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் பலர் கூட்டணி ஆதரவாளர்களாகவே இருந்தனர். மதவாதிகளாக இருந்த முஸ்லீம்கள் சிலர் தான் இப்படியான நடவடிக்கைகளுக்குத் துணை போனார்கள். அதனால் எல்லா முஸ்லீம் மக்களும் தவறானவர்கள் என்ற எண்ணம் தவறானது. கூட்டணிக்கு ஆதரவாக இருந்த பல முஸ்லீம் புத்திஜீவிகள் இந்த மதவாத முஸ்லீம்களினால் பழிவாங்கப்பட்ட சம்பவங்கள் கூட நிறைய நடந்துள்ளன.

அதுபோல் புலிகளினால் முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டது சரியென்ற உங்கள் வாதம் நியாயமானது என்றால், இன்று அரசு கொழும்பில் வாழும் தமிழ் மக்களுக்கெதிராக எடுக்கும் நடவடிக்கைகள் பிழையென்று எப்படி எம்மால் கூற முடியும்??

வசம்பு,

முஸ்லீம்களை யாழிலிருந்து வெளியேற்றியது சரி என்பது அல்ல என் கருத்து.! குழந்தை நிலையிலிருந்த ஒரு போராட்டம் தன்னைத் தக்க வைப்பதற்கு எடுத்துக்கொண்ட இலகுவான பாதையே அந்த வெளியேற்றம். அன்றுள்ள நிலையில் சரியாக இருந்திருக்கலாம். ஆனால் இன்ரைய நிலையில் சரி ஆகாது. முஸ்லீம்களில் குறிப்பிடத்தகுந்த அளவில் போராட்டத்துடன் தங்களை இணைத்திருந்தார்கள். அவர்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் அளப்பரியது. ஆகவே அவர்களை ஒட்டுமொத்தமாகக் குறை சொல்வது பிழை. அதை நான் இங்கு செய்யவில்லை.

ஆனால் பிரச்சினை வேறு வடிவில் வந்தது. தமிழர்களில் துரோகிகள் பெரும்பாலும் தமிழர்களாலேயே புலிகளுக்கு அடையாளப்படுத்தப்பட்டார்கள். முஸ்லீம்களில் யார் எவர் என்பது அறியமுடியாத ஒரு நிலை அன்று இருந்தது. ஒரு குழந்தை நிலைப் போராட்டம் நற்பெயருடன் சாவதா அல்லது கெட்ட பெயருடன் வாழ்வதா என்கிற‌ நிலை வந்த போது இரண்டாவது முடிவு எடுக்கப்பட்டது.

கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியெற்ற நினைப்பது என்பது சர்வ பலமும் பொருந்திய ஒரு அரசுக்கு இழிவு உள்ள செயல். தற்போதைய நிலையில் புலிகளே இவ்வாறான ஒரு காரியத்தைச் செய்ய மாட்டார்கள். குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன் வரை கிழக்கைப் புலிகள் தம்வசம் வைத்திருந்தபோது அங்கே புலிகள் முஸ்லீம்களுக்கு பாதகம் உண்டாக்கியதாக நான் அறியவில்லை.

மற்றும்படி சிறீலங்கா அரசு முஸ்லீம்களை புலிகள் யாழிலிருந்து வெளியேற்றியதை தனது பெரும் பிரச்சாரமாக மாற்றி வெற்றியும் கண்டது. அதேபோல் கொழும்பிலிருந்து தமிழரை அதே அரசு வெளியேற்றும்போது அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதுதான் சரி என்பது என் கருத்து..!

மின்னல் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் மக்கள் தானே அப்படி செய்கிறார்கள் சில கை கூலிகளால் நிர்பந்திக்கப்படுகிறார்கள் ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக வரும் போது இவர்களை திருத்திவிடலாம்

ஆனால் முஸ்லிம்களை??

உதாரணம் : அவர்களும் தமிழ்தானே பேசுகிறார்கள் ஏன் பழைய வன்செயலில் கொள கொட்டியுடன் சேர்ந்து எல்லை தமிழ் கிராமங்களில் உள்ள தமிழ்ர்களை வெட்டியது யாராவது மறுக்க முடியுமா [கிழக்கு மாகாணம்]

[எண்பத்தைந்து தொண்ணூறுகளில்]

ஓ... நீங்கள் தமிழர்கள் பிழைவிட்டால் திருந்த அனுமதிப்பீர்கள். ஆனால் முஸ்லீம்களை விரட்டியடிப்பீர்களோ?

அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் மக்கள் மாத்திரமல்ல புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் மக்கள் கூட பணத்திற்காகவும் பிற அற்ப சுகங்களிற்காகவும் போராட்டத்தை காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறானவர்களிற்கு முன்னர் பகிரங்கமாகவே தண்டனையளிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய காலத்தில் அவை இரகசியமாக மேற்கொள்ளப்படுகின்றன.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சிங்கள அரசின் ஊர்காவற்படையாக கைக்கூலிகளாக இருந்து தமிழருக்கு எதிராக பல்வேறு அழிவுகளை முஸ்லீம் காடையர்கள் ஏற்படுத்தினார்கள். இதற்கு எந்தவகையிலும் குறைந்திடாத வகையில் இந்தியப் படையினர் தாயகத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் தமிழ் குழுக்கள் தமிழருக்கு எதிராக மேற்கொண்ட வன்முறைகள் அமைந்திருந்தன.

இங்கே நான் முஸ்லீம்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்தவில்லை. மாறாக யாழிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்துவதற்கு தெரிவிக்கும் காரணத்தைத்தான் பிழையென்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பிழை விட்டால் திருத்தலாம் ,திருந்துவதற்கு சந்தர்ப்பம் ஒன்றும் கொடுக்கலாம் ஆனால் முஸ்லிம்களை பொறுத்தவரை______________________ :) ?

எத்தனையோ துன்பங்கள் அனுபவித்தார்கள் கிழக்கு மக்கள் ,வடக்கு மக்கள் எவனாவது ஒரு முஸ்லீம் அரசியல் வாதி அவர்களும் எங்களை போலவே தமிழ் பேசுகிறார்கள் அவர்களை விடுங்கோ உதவி செய்யுங்கோ என்று ஆர்ப்பாட்டமோ அல்லது அரசாங்கத்துக்கு எதிராக ஏதாவது செய்திருப்பார்களா இல்லை மாறாக அவர்களுடன் சேர்ந்து நில ஆக்கிரமுப்புக்கள் ,ஆள் கடத்தல்கள் துன்புறுத்துதல் போன்றவற்றிலே அதிகம் கவனம் செலுத்தினார்கள்

யாழ்பாண்த்தில் இருந்து வெளியேற்றினார்கள் ஏன் ,எதற்க்காக தனது மொழி பேசுபவன் சொல்ல முடியாத துன்பம் அனுபவித்து கொண்டிருக்கும்போது கூட தனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லவா மாறாக என்ன செய்தார்கள்...............................................

...............................

அதனாலேயே அன்றைய முடிவு எடுக்கப்பட்டது ,அதற்கு இன்னொரு காரணமும் அத்தனை செல் அடிகள் மழை போல் பொழியும் குண்டுகள் இவற்றுக்கு தாக்கு பிடிக்காமல் கூட ஓடியிருக்கலாம் ஓடிப்போட்டு எங்களை வெளியேற்றினார்கள் புலிகள் என்றால் நீங்கள் ஒழுங்காக இருந்து இருக்கவேண்டும் அல்லவா போற இடத்திலெல்லாம் தில்லு முல்லு பண்ணினால்....................??

இன்று தமிழர்கள் இல்லயென்றால் முஸ்லீம்கள் இருந்திருப்பார்களா? :wub::wub:

அன்று சொன்னானே பிக்கு முஸ்லீம்களுக்கு இங்கு இடமில்லை சவுதிஅராபியாதான் என்று .பிறக்கென்ன பெட்டி படுக்கையுடன் நடயை கட்டவேண்டியதுதான் தமிழனைபோல சண்டை பிடிப்பார்களா??பலபேர் சிங்களவனாகதான் மாறி இருப்பர்கள் அந்த நிலமைதான் இன்று ஏற்பட்டிருக்கும் இதனை உணர்ந்து கொண்டால் சரி :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு யாழில் நடந்த சுவையான விவாதம் கீழே உள்ள இணைப்பில்

http://www.yarl.com/forum3/index.php?showt...18390&st=20

தமிழர்கள் பிழை விட்டால் திருத்தலாம் ,திருந்துவதற்கு சந்தர்ப்பம் ஒன்றும் கொடுக்கலாம் ஆனால் முஸ்லிம்களை பொறுத்தவரை______________________ :) ?

எத்தனையோ துன்பங்கள் அனுபவித்தார்கள் கிழக்கு மக்கள் ,வடக்கு மக்கள் எவனாவது ஒரு முஸ்லீம் அரசியல் வாதி அவர்களும் எங்களை போலவே தமிழ் பேசுகிறார்கள் அவர்களை விடுங்கோ உதவி செய்யுங்கோ என்று ஆர்ப்பாட்டமோ அல்லது அரசாங்கத்துக்கு எதிராக ஏதாவது செய்திருப்பார்களா இல்லை மாறாக அவர்களுடன் சேர்ந்து நில ஆக்கிரமுப்புக்கள் ,ஆள் கடத்தல்கள் துன்புறுத்துதல் போன்றவற்றிலே அதிகம் கவனம் செலுத்தினார்கள்

யாழ்பாண்த்தில் இருந்து வெளியேற்றினார்கள் ஏன் ,எதற்க்காக தனது மொழி பேசுபவன் சொல்ல முடியாத துன்பம் அனுபவித்து கொண்டிருக்கும்போது கூட தனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லவா மாறாக என்ன செய்தார்கள்...............................................

...............................

அதனாலேயே அன்றைய முடிவு எடுக்கப்பட்டது ,அதற்கு இன்னொரு காரணமும் அத்தனை செல் அடிகள் மழை போல் பொழியும் குண்டுகள் இவற்றுக்கு தாக்கு பிடிக்காமல் கூட ஓடியிருக்கலாம் ஓடிப்போட்டு எங்களை வெளியேற்றினார்கள் புலிகள் என்றால் நீங்கள் ஒழுங்காக இருந்து இருக்கவேண்டும் அல்லவா போற இடத்திலெல்லாம் தில்லு முல்லு பண்ணினால்....................??

இன்று தமிழர்கள் இல்லயென்றால் முஸ்லீம்கள் இருந்திருப்பார்களா? :lol::lol:

அன்று சொன்னானே பிக்கு முஸ்லீம்களுக்கு இங்கு இடமில்லை சவுதிஅராபியாதான் என்று .பிறக்கென்ன பெட்டி படுக்கையுடன் நடயை கட்டவேண்டியதுதான் தமிழனைபோல சண்டை பிடிப்பார்களா??பலபேர் சிங்களவனாகதான் மாறி இருப்பர்கள் அந்த நிலமைதான் இன்று ஏற்பட்டிருக்கும் இதனை உணர்ந்து கொண்டால் சரி :wub::wub:

முனி

:wub: உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்தியாக இருக்கலாம். அதற்காக இந்தப் பக்கத்தையும் நகைச்சுவையாக மாற்றுவது முறையாகுமா சுவாமி. :wub::(

சிங்களத்தின் அரசியல் வெற்றிகளும் தமிழர்களின் அரசியல் தோல்விகளும்

தமிழ் மக்களின் முரண்பாடுகளை பயன்படுத்துவதில் சிங்களம் அரசியல் ரிதியான வெற்றியை கண்டுள்ளது. அதன் முதலாவது வெற்றியாக வெலியோயா திட்டத்தை குறிப்பிட வேண்டும். தமிழர்களின் தாயக பூமியான வடகிழக்கை இணைக்கும் மணலாற்றுப்பகுதியில் தமிழர்களை விரட்டி சிங்கள மக்களை குடியேற்றியது. மணலாற்றை வெலியோயா என்று சிங்களப் பெயரிட்டு பிரதேச ரீதியாக தமிழர்களின் தாயக பூமியை பிரித்து வெற்றி கண்டது. அதன் தொடர்ச்சியாக கிழக்கு மவட்டங்களில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் சிங்கள மக்களை குடியேற்றி வருகின்றது.

சிங்ளத்தின் இரண்டாவது அரசியல் வெற்றி என்பது இந்தியாவை தமிழர்களுக்கு எதிராக திருப்பியது.

சிங்களத்தின் மூன்றாவது பாரிய அரசியல் வெற்றி என்பது தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கும் ஏனைய தமிழர்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தி தமிழீழக் கோரிக்கையில் இருந்து தமிழ் பேசும் முஸ்லீம் மக்களை பிரித்தாள்வது.

சிங்களத்தின் தொடர்ச்சியான வெற்றி என்பது வடகிழக்கு பிரதேசவாத தூண்டல். கருணா விவகாரத்துடன் ஆரம்பித்து புகைந்து கொண்டிருக்கும் இந்த பிரதேசவாத தூண்டல் சிங்களத்திற்கு பெரும் அரசியல் வெற்றியே.

தமிழ் மக்களில் மேட்டுக்குடிகளை இனம் கண்டு ஆதரிப்பது, சாதிய அடிப்படையில் விரிசல்களை ஏற்படுத்துவது, கிழக்கு பிரதேச வாத தூண்டலை தொடர்ந்த தலித் மாநாடு ஏற்பாடுகள் எல்லாம் யாவரும் அறிந்ததே. தமிழ் பேசும் மக்களின் முரண்பாடுகளில் சிங்களத்தின் கைங்காரியங்களும் அதன் பிரித்தாளும் தன்மையும் பெரும் வெற்றிகளை கண்டுள்ளது.

இவ்வாறான வெற்றிகள் எல்லாம் சிங்களத்தின் அதிபுத்திசாலித்தனமான திட்டத்தின் வெற்றிகள். மோட்டு சிங்களவன் என்ற மமதையில் இருந்த தமிழர்களின் அடி முட்டாள் தனமான தோல்விகள் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

இன்றைய சூழலில் சிங்களம் தமிழ் மக்கள் மீது என்றுமில்லாத அழிவுகளை செய்து கொண்டிருக்கையில் அவலங்கள் நிமிர்த்தமும் அழிவுகள் நிமிர்த்தமும் ஒரு தனியரசுக்கான ஆதரவு உலகளவில் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் உள்ளது. இதற்கு தடையாக முதலில் இருப்பது சிங்களத்தின் அரசியல் வெற்றிகள்.

இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் சிங்கள மக்கள் போலல்லாது சிதைவுபட்டு வாழ்கின்றனர். உளவளம் பொருளாதாரம் சீரளிந்த நிலையில் வாழ்கின்றனர். தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள், மலையக தமிழ் மக்கள், தமிழ் பேசும் இஸ்லாமிய மக்கள் என அனைத்து தமிழ் மக்களுக்கும் வடகிழக்கு இணைந்த தமிழீழத்தை பொருத்திப் பார்க்க முடியாத நிலமை யதார்த்மாக உள்ளது.

தமிழ் பேசும் மக்கள் சாதி, மத, வர்க்க, பிரதேச வேறுபாடுகள் இன்றி ஒருமிக்கும் போதே தமிழ் மக்கள் விரும்பும் சுதந்திரத்திற்கான அங்கிகாரம் சர்வதேச அளவில் சாத்தியப்படும். நாம் பழைய கசப்புணர்வுகளை மீள கிண்டி கொண்டிருப்பதும், மேலும் மேலும் முரண்பாடுகளை வளர்த்து பிளவுபட்டுப்போவது எமக்கே ஆபத்தாக முடியும். நாம் தவறுகளை திருத்தி ஐக்கியப்படுதலை நோக்கி மிக வேகமாக முன்னேற வேண்டியுள்ளது.

தமிழினத்தை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் சிங்களம் சிதைத்து விட்டுள்ளது. அதை தொடர்ந்தும் செய்கின்றது. இனம் என்ற வடிவமற்றவர்களாக நாளாந்தம் மாறிக்கொண்டிருக்கின்றோம். இது எல்லாம் தனியே சிங்களம் செய்வதென்றில்லை. எமக்குள் எரிந்து கொண்டிருந்த முரண்பாடுகளில் சிங்களம் எண்ணையை ஊற்கிக்கொண்டிருக்கின்றது,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை

தற்போது இலங்கையில் வாழும் முஸ்லீம் மக்கள் எல்லோரும் ஏதோ அராபியர்கள் என்பது போல் உங்கள் கருத்து உள்ளது. அது தவறானது. இதில் ஏற்கனவே வேறு இன, மதங்களிலிருந்து முஸ்லீமாக மாறியவர்களும் அடங்குவார்கள். அப்படியிருக்க அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று கூறும் உங்களுக்கும், தமிழனுக்கு உரிமையில்லை என்று கூறும் சிங்களவனுக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை. இது தவறான விளக்கமும் கூட. இப்படியான விளக்கங்களினால்த் தான் இன்னும் பிரைச்சினைகளும் அதிகமாகிக் கொண்டு போகின்றது. நீங்கள் கூட இலங்கையின் சரித்திரப் பின்னனியை சரியாக அறியாமலோ அல்லது கட்டுரை சுவாரசியமாக இருக்கட்டும் என்றோ தவறான கருத்துக்களை எழுத முயல்வது பாரதூரமானது. என்னைப் பொறுத்தவரை இலங்கையில் பிரஜாயுரிமையுள்ள மலையகத்தமிழர்கள் உட்பட அனைவருக்கும் சமமான உரிமை இருக்க வேண்டும். விகிதாசார அடிப்படையில் எவருக்கும் சலுகைகள் வழங்கக் கூடாது. எல்லா இன மக்களும் சமமாக பாவிக்கப்பட்டால்த் தான், இனத்துவேசங்கள் இல்லாமல் போய் எல்லோரும் புரிந்துணர்வோடு வாழும் நிலையும் ஏற்படும்.

வசம்பு முஸ்லீம் மக்கள் எல்லோரும் அராபியர் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை ஆனால் அவர்களின் தேசம் அதாவது மத்திய கிழக்கில் இருந்துதான் முஸ்லீம் மதத்தவர்கள் உலகம் முழுவதும் பரவினார்கள் என்று குறிப்பிட்டேன். தவறாக நீங்கள் புரிந்துவிட்டு அதை எனது தலையில் போடாதீர்கள்.வேறு மதங்களில் இருந்தும் முஸ்லீம் மதத்துக்கு மாறினார்கள்தான் ஆனால் முதல் முஸ்லீம் எங்கிருந்து வந்தார் ? அப்படி ஒரு சிலபேர் மதம் மாறி முஸ்லீம் ஆனதுக்காக எல்லா முஸ்லிம்களுக்கும் உரிமையை வழங்கலாமா? நிச்சயமாக முடியாது.இன்று ஈழத்தமிழர் மலையகத்தமிழர் என்று ஏன் தமிழர்களை இரு பெயர்கள் கொண்டு அரசாங்கமும் சரி நாமும் சரி அழைக்கின்றோம்? எல்லா தமிழரும் தமிழர் தானே. யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு என்ன உரிமை இருக்கு என்று கூறமுடியுமா வசம்பு? நான் வழங்கியது சரியான விளக்கமே அப்படி உங்களால் இன்னும் விளக்கம் கொடுக்கமுடியும் என்றால் உங்கள் தொலைபேசி இலக்கத்தை தாங்கோ யாராவது என்னோடு இப்படி கதைத்தால் அவர்களுக்கு உங்கள் தொலைபேசி இலக்கத்தை கொடுக்கிறேன் உங்களோடு தொடர்புகொள்ளசொல்லி.இலங்கையி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னவொரு விளக்கம் சுப்பண்ணை சும்மா சொல்லக்கூடாது அசத்திப் போட்டியள்.

ஆனால் சுப்பண்ணை முஸ்லீம்கள் தமிழ் பேசினாலும் ஒரு தனியினம் என்றுதான் அவர்களும் எண்ணுகிறார்கள் எம்மவர்களும் எண்ணுகிறார்கள். எங்களது போராட்டத்திற்கு எதிராக அரச கைக்கூலிகளாகச் செயற்பட்டார்கள் என்பதற்காக யாழிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் எண்டால், தங்களின் சொந்த போராட்டத்திற்கு எதிராக அரசின் கைக்கூலிகளாக நிறையத் தமிழர்கள் போராட்டத்திற்கு எதிராகச் செயற்படுகிறார்கள். அதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்தோ அல்லது மட்டக்களப்பிலருந்தோ தமிழர்களை வெளியேற்றுவது சிறந்த முடிவாக இருக்குமே எண்டு அந்த முஸ்லீம் நபர் உங்களைக் கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பியள்?

நல்ல கேள்வி மின்னல் அவரும் இதை கேட்டார் (அவரை பற்றி சும்மா நினைக்காதேங்கோ எல்லா விடயமும் கேட்டார் ஆனால் நான் சிலவற்றை இங்கே குறிப்பிடவில்லை சில நோக்கங்களுக்காக) ஆனால் அவர்கேட்டது உங்கள் தமிழர்களும் சிங்கள அரசாங்கத்துக்கு உதவி செய்கிறார்கள் தானே அப்ப அவர்களுக்கு என்ன செய்தீர்கள் என்று. நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்.எங்கள் இனத்தில் துரோகிகளாக ஆடையாளம் காணப்பட்டவர்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போது உச்ச தண்டனை (உச்ச தண்டனை என்னவென்று தெரியும்தானே) வழங்கலாம் இதில் பெரிய சிக்கல்கள் இல்லை ஆனால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் முஸ்லீம் மக்களில் அரசாங்கத்துக்கு உதவி செய்பவர்களை இனம்கண்டு எங்களின் உச்ச தண்டனையை வழங்கமுடியுமா? அவர்களை இனங்கான்வது முதல் கடினம் அடுத்தது இனங்கன்டாலும் தண்டனை வழங்குவது பல சிக்கல்களை தோற்றுவிக்கும். ஒரு முஸ்லீம் நபராவது விடுதலை புலிகளால் கொல்லப்பட்டால் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை அழிக்கவும் தான் போராடுகிறார்கள் முஸ்லிம்களுக்கும் எதிரனவர்கள் என்ற ஒரு தோற்றப்பாடு உருவாகியிருக்கும் அதே நேரம் ஒரு முஸ்லீம் நபராவது கொல்லப்பட்டிருந்தால் அது தமிழ் முஸ்லீம் இன கலவரமாக மாறியிருக்கும்.முஸ்லிம்களுக

விடுதலைப்புலிகள் என் வானத்தில் இருந்து குதித்தா வந்தார்கள்? அவர்களும் மனிதர்கள்தான். தவறுகள் பல செய்துள்ளார்கள்தான. முஸ்லிம்களை வெளியேறசெய்தது ஒரு தவறு என்று அண்ணையே ஒத்துக்கொண்டு வருத்தம் தெரிவித்துமுள்ளார். எதற்கு மீண்டும் மீண்டும் முஸ்லிம் உறவுகளின் மனதைநோகடிக்கவேண்டும். யாரோ ஒருவர் சொன்னாhர் என்பதற்காக எதற்கு வேற்றுமை பாராட்டவேண்டும். உண்மையில் கேடுகெட்ட இனம் தமிழினம்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் என் வானத்தில் இருந்து குதித்தா வந்தார்கள்? அவர்களும் மனிதர்கள்தான். தவறுகள் பல செய்துள்ளார்கள்தான. முஸ்லிம்களை வெளியேறசெய்தது ஒரு தவறு என்று அண்ணையே ஒத்துக்கொண்டு வருத்தம் தெரிவித்துமுள்ளார். எதற்கு மீண்டும் மீண்டும் முஸ்லிம் உறவுகளின் மனதைநோகடிக்கவேண்டும். யாரோ ஒருவர் சொன்னாhர் என்பதற்காக எதற்கு வேற்றுமை பாராட்டவேண்டும். உண்மையில் கேடுகெட்ட இனம் தமிழினம்தான்.

யாரும் இங்கு வேற்றுமை பாராட்டவில்லை நடந்ததைத்தான் கதைக்கின்றார்கள். தமிழன் தான் எல்லோரையும் நம்பி அவர்களை நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் எல்லோரும் தமிழனின் தலையில் ஏறி இருந்து தங்கள் வேலையை பார்ப்பதிலே குறியாக இருக்கிறார்கள். நீங்களும் அந்த கேடுகெட்ட தமிழினத்தில தானே இருக்கிறிங்க :lol: ? ஏன் இருக்கிறிங்க ஏதாவது நல்ல முடிவா எடுங்கோ வேளைக்கு..... உங்களை போன்றவர்கள் தமிழினத்தின் சாபக்கேடு :)

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் என் வானத்தில் இருந்து குதித்தா வந்தார்கள்? அவர்களும் மனிதர்கள்தான். தவறுகள் பல செய்துள்ளார்கள்தான. முஸ்லிம்களை வெளியேறசெய்தது ஒரு தவறு என்று அண்ணையே ஒத்துக்கொண்டு வருத்தம் தெரிவித்துமுள்ளார். எதற்கு மீண்டும் மீண்டும் முஸ்லிம் உறவுகளின் மனதைநோகடிக்கவேண்டும். யாரோ ஒருவர் சொன்னாhர் என்பதற்காக எதற்கு வேற்றுமை பாராட்டவேண்டும். உண்மையில் கேடுகெட்ட இனம் தமிழினம்தான்.

அதிபன் நீங்கள் அவர்களால் என்ன துன்பம் அடைந்திருக்கிறீர்கள் ஆனால் நாங்கள் சொல்லவே முடியாது......

அதிபன் நீங்கள் ஒருக்கா[கிழக்கு மாகாணத்திலுள்ள] முஸ்லீம்களின் தேநீர்கடைக்கு சென்று பாருங்கள் அவர்களுக்கு அதுதான் பாராழுமன்றம் தமிழர்களுக்கு என்ன சொல்லுவார்கள் என்று தெரியுமா பீ தமிழன் தான் என்று அண்ணே சொன்னாரு இல்லை என்று மறுக்கவில்லை ஆனால் பாதிப்படைந்தது யாரு?? உங்களுக்கு தெரியுமா

அதோ மேல் இறைவன் ஒரு கிழக்கு மாகாண நபரை சந்தித்த தாகவும் அவர்கள் அடைந்த துன்பம் பற்றியும் எழுதியிருக்கார் பாருங்கோ

அந்த இணைப்பு நூணாவிலன் இணைத்திருக்கார்

சும்மா வெளியேற்றினது வெளியேற்றினது தவறு சொல்லாமல் தமிழர்கள் அடைந்த துன்ப துயரத்தை நோக்குங்கள்

என்னை பொறுத்த வரைக்கும் சுப்பண்ணை சொன்னது சரியென்பேன் சும்மா அவர்களால் ஒரு எள்ளளவும் பாதிக்கப்படாமல் வெளியேற்றினது தவறு என்றால்_______________தான்

இதை பற்றி வசம்பு ,மின்னல் நீங்களும் கூறுங்களன் தெரியாத நாங்கள் தெரிந்து கொள்வோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.