Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எயார் திராவிடா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் குண்டும் விழுந்தால் இங்கே அசைலம் கிடைக்கும் என்பது உங்களது பாடப்புத்தக அறிவாக இருக்கலாம். ஆகக் குறைந்தது 15 ஆயிரம் யுரோவைக் கொடுத்து ஒருவன் இங்கு வருகிறான். அவனுக்கு நாட்டில் இருக்கலாமென்றால்.. அந்தப் பணத்தை ஒரு வங்கியில் இட்டுவிட்டு.. மாதாமாதம் வட்டியிலேயே குடும்பம் நடத்தி சுகபோகமாக வாழ அவனால் முடியும்.. ஆகவே, உங்க பாடப்புத்தக அறிவின்படி.. அசைலம் அடிப்பவன் 15 ஆயிரம் யூரோ கொடுத்து வந்து.. கொழும்பில் குண்டு விழாதா என ஏங்குவதாக இருக்கலாம். அது ஏட்டுச்சுரக்காய்.. கொஞ்சம் கீழே இறங்கி வந்து, அவர்களுடைய அனுபவங்களை கேட்டுப் பாருங்கள்.. சிலவேளை அவர்கள் உங்களுக்கு சண்டித்தனக்காரர்களாகவோ, பழக்கவழக்கம் தெரியாதவர்களாகவோ அல்லது குழுக்களாகவோ தெரியலாம்.. ஏனெனில் தங்கள் பார்வை அப்படியாக இருப்பின்.. தாங்கள் உண்மையிலேயே அசைலம் அடிக்கும் தமிழர்களைப்பற்றி அறிய விரும்பினால், அவர்கள் உங்கள் கண்களுக்கு நிச்சயமாகத் தெரிவார்கள்!! :lol:

தமிழனை சிங்களவன் அடிக்க வெளிக்கிட்டது 1950 களிலேயே ஆரம்பிச்சிட்டுது. அப்ப எல்லாம் ஏன் எங்கட ஆக்கள் சிங்களவனுக்குப் பயந்து அசைலம் அடிக்க வரேல்ல.

1983 திருநெல்வேலி கண்ணிவெடித் தாக்குதலும் இனக்கலவரமும் பொன்னம்மானின் தியாகமும் தான் இன்று பல்லாயிரம் தமிழர்களின் அசைல - சொகுசு வாழ்வுக்குக் காரணம். அன்று அந்தச் சம்பவங்கள் நடந்திராவிட்டால்.. 15,000 யூரோவுக்கே வழியில்லாமல்.. காடு கரம்பை என்று வடலி வளவுக்குள் நொக்கு பொறுக்கிக் கொண்டிருந்திருப்பார்கள்.. இன்று றீமோக்கேச் செய்து சாமத்திய வீடு கொண்டாடும் புலம்பெயர் தமிழர்களில்.. பலர். இல்லை என்பீர்களா..??! :lol:

நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் விட்டாலும் எம்மவர்களில் அசைலம் அடிப்பவர்களில் பாதிப்பேருக்கு மேல் உண்மையான அரசியல் அகதிகள் அல்ல. அவர்கள் பொருளாதார அகதிகள். 15,000 யூரோவை செலவு செய்வது.. ஒரு முதலீடாகவே அன்றி உயிர் அச்சம் காரணமாக என்பது பலருடைய விடயங்களில் பொய். காசைக் கொடுத்து சிங்கள இராணுவ அதிகாரிகளை விலைக்கு வாங்கி வெளிநாட்டுக்கு பத்திரமாக வர கட்டுநாயக்கா வரை பயணிக்க முடிகிறது எனில் ஏன் தான் காசைக் கொடுத்திட்டு அங்கேயே இருக்க முடியாது..??!

கொழும்பில் குண்டு வெடிப்பதும் வன்னியில் போர் நடப்பதும் தான் இவர்களின் முதலீட்டுக்கான உத்தரவாதம். போரில் பாதிக்கப்படும் தரப்பாக வறிய மக்களே எப்போதும் விளங்குகின்றனர். அவர்கள் இப்போதும் அகதிமுகாம்களில் தான் வாழ்கின்றனர். இடைத்தர.. மேல்மட்ட குடும்பங்களே சாரி சாரியாக பரம்பரை பரம்பரையாக அசைலம் அடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு போரே முதலீடு. மனித உயிர்களின் காவு கொள்ளலே எதிர்பார்ப்பு. அப்பப்பப தமிழீழம் என்று கூவிக் கொண்டு விட்டெறியும் 1000 யூரோக்களும்.. தங்களின் அடுத்த சந்ததிக்கும் அசைலம் தேடவே அன்றி.. தமிழீழம் கிடைக்க வேண்டும் என்ற அக்கறையில் அல்ல.

நான் காதால் கேட்டிருக்கிறேன்.. தம்பி உவங்கள் இஞ்சையும் (புலம்பெயர் நாடுகளுக்கும்) வந்திட்டாங்கள் காசு புடுங்க. ஊரில என்ர சொந்தங்கள் கொஞ்சம் மிச்சம் என்ற படியால் எல்லோ காசு கொடுக்கிறன். ஏதேனும் செய்துபோடுவாங்கள்.. இல்ல பாஸ் கொடுக்காங்கள் எல்லோ. இல்ல இவைக்கு யார் காசு கொடுக்கிறது.. இப்படிச் சொன்ன பலரைக் கண்டும் இருக்கிறன்..! ஆனால் அவர்கள் வாய் கிழிய தமிழீழம்.. தமிழ் தேசியம் பற்றிக் கதைக்கிறதையும் கண்டிருக்கிறன்..!

போர் நின்று தமிழீழம் கிடைத்தால் கூட 15,000 யூரோ முதலீடு இட்டு.. மேற்குலகில் அரச நிவாரணங்களில் சுரண்டி வாழப்பழகிவிட்ட எம்மவர்கள்.. மீளத் தாயகம் போவார்கள் என்றா நினைக்கிறீர்கள். நிச்சயமாக இல்லை..! அப்படி ஒரு நிலையிருக்கும் என்றால்.. இன்று தமிழீழம் கிடைத்திருக்கும்.. அவ்வளவுக்கு ஒத்துழைப்பு வழங்கி இருப்பர். ஆனால்..???! :lol::lol:

Edited by nedukkalapoovan

  • Replies 61
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நானும் ஒரு கருத்தை சொல்லியே ஆக வேண்டும் ..........

எனது உறவினர்கள் சிலரும் வெளிநாட்டிலே தங்கியிருக்கார்கள் சமாதான காலத்தில் ஊருக்கு வருமாறு அழைத்திருந்தோம் ஆனால் அவர்கள் சொன்னது இப்போது சமாதானம் தானே அங்கு வந்து என்ன செய்வது என்று இழுத்துவிட்டார்கள் ...................

அடுத்து தற்போது அழைத்தால் அங்கு சரியான சண்டை நடக்குது எப்படி வாரது என்று கேட்கிறார்கள் பார்த்தீர்களா

இதுதான் இன்றைய நிலை

முனிவர் என்னிலை அப்பிடியென்ன கோபம் அந்தளவு நான் மோசமா???????? :lol::lol:

இல்லை சாத்திரி அண்ணே இருக்கிறத்தையும் பிச்சுக்கிறமாதிரி இருக்கு அல்லோ அதான் அந்த கிழடு என நினைத்துவிட்டேன் ச ...ச கோபம் இல்லை :lol:

அப்படியானால் படிக்கவென்று வந்தவர்கள் படிப்பு முடிந்ததும், வேலை விசா அல்லது மேலும் படிக்க விசா என்று அலைந்து ஏன் மேலை நாடுகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. இன்று எமது போராட்டத்திற்கான அடிப்படைத் தேவைகள் எங்கிருந்து வந்தன? அந்த வரண்டு போன மண்ணிலுள்ள சுரங்கங்களிலிருந்தா வருகிறது? படிக்கவென்று வந்து.. நாட்டுக்குத் திரும்ப மனமின்றி காசு கொடுத்து கள்ள விசா எடுத்து இருக்கலாம்.. அல்லது வேலை விசாவுக்காக அலைந்து அதை எடுத்து இருக்கலாம்.. அல்லத தொடாநஇத படித்துக் கொண்டே காலத்தைக் கழிக்கலாம்.. ஆனால் இன்னொரு அசைலத் தமிழனின் காசிலோ அல்லது சொத்து சுகங்களை விற்றோ அல்லது கடன் பட்டோ அசைலத்துக்கு வந்தால்.. இந்த 'எழுத்துக்களை' இனிசலோடு பிசையும் கனவான்களுக்கு தவறாகத் தெரிகிறதாம்!! :lol: இனஇறு புகலிட நாடுகளில் தமிழ் வாழ்கிறது என்றால் அதுவும் அசைலத் தமிழனால்தான்.. :lol:

ஜேஆர் காலத்தில வேணுமானால் தமிழன் பொய் சொல்லி அசைலம் கேட்டிருக்கலாம்.. ஆனால் இன்று பொய் சொல்லும் நிலையில் அசைலத் தமிழன் இல்லை.. :lol: (ஆனால் பொய்யை ஏற்றுக் கொண்ட நாடுகள் இன்று உண்மையை ஏற்றுக் கொள்ளும் நிலையும் மிக அரிதாகவே உள்ளது..)

போர் நின்று தமிழீழம் கிடைத்தால் கூட 15,000 யூரோ முதலீடு இட்டு.. மேற்குலகில் அரச நிவாரணங்களில் சுரண்டி வாழப்பழகிவிட்ட எம்மவர்கள்.. மீளத் தாயகம் போவார்கள் என்றா நினைக்கிறீர்கள். நிச்சயமாக இல்லை..! அப்படி ஒரு நிலையிருக்கும் என்றால்.. இன்று தமிழீழம் கிடைத்திருக்கும்.. அவ்வளவுக்கு ஒத்துழைப்பு வழங்கி இருப்பர். ஆனால்..???! :lol::lol:

நிச்சயமாக இல்லை. மீசை முளைத்த பிறகு மேல் படிப்புக்காக வந்தவரெல்லாம் போகத் தயாரில்லை. இங்கே வந்து இந்த மண்ணில் வாரிசுகளை உருவாக்கியவர்களால் எவ்வாறு திரும்பிச் செல்ல முடியும்.. வறுமையிலிருந்து வசதியாக முன்னேறியவனால் மீண்டும் வறுமையில் வாழ முடியும்.. ஆனால் இங்கே பிறந்தவர்களால் அங்கே வாழ முடியாது.. அதுதான் உண்மை!!

தமிழனை சிங்களவன் அடிக்க வெளிக்கிட்டது 1950 களிலேயே ஆரம்பிச்சிட்டுது. அப்ப எல்லாம் ஏன் எங்கட ஆக்கள் சிங்களவனுக்குப் பயந்து அசைலம் அடிக்க வரேல்ல.

எங்கடை தமிழ் தலைவர்கள் என்று இருந்தவையும் 83லதான் மொட்டாக்குப் போட்டுக் கொண்டு... தமக்கு வாக்குப்போட்ட சனங்களையும் மறந்து இந்தியாவுக்கு ஓடினவை.. அதுக்கு முந்தி ஓடேல்லை.. :lol: :lol:

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இல்லை. மீசை முளைத்த பிறகு மேல் படிப்புக்காக வந்தவரெல்லாம் போகத் தயாரில்லை. இங்கே வந்து இந்த மண்ணில் வாரிசுகளை உருவாக்கியவர்களால் எவ்வாறு திரும்பிச் செல்ல முடியும்.. வறுமையிலிருந்து வசதியாக முன்னேறியவனால் மீண்டும் வறுமையில் வாழ முடியும்.. ஆனால் இங்கே பிறந்தவர்களால் அங்கே வாழ முடியாது.. அதுதான் உண்மை!!

சொகுசைக் கண்டிட்டம் எப்படிப் போறது என்று கேளுங்கோ அது நியாயம். ஆனால் பிள்ளையளை இஞ்ச வந்து பெத்திட்டம்.. எப்படி அதுகளை அங்க கொண்டு போய் கஸ்டத்தில தள்ளிவிடுறது என்று மட்டும் சொல்லாதேங்கோ.

தமிழீழம் என்றால் சோமாலியா என்று தீர்மானிச்சுக் கொண்டு.. தமிழீழம்.. விடுதலை என்று கூவிறதா எல்லோ இது இருக்குது. உங்களைச் சொல்லேல்ல உங்க பல பேரின்ர நினைப்பும் இப்படித்தான் இருக்குது.

எங்க நாட்டை நாங்கள் தான் கட்டி எழுப்ப வேணும். எங்கட பிள்ளையள்.. போன இடத்தில பிறந்திட்டுதுகள் என்றதுக்காக அதுகள் வெள்ளைக்காரன் வீட்டுப் பேரப்பிள்ளைகள் என்று உரிமை கொண்டாடுறது.. ரெம்ப ரெம்ப ரெம்ப ஓவர். உங்க பல பேரின்ர பேரன்களும் பூட்டன்களும் பேத்திகளும் பூட்டிகளும்.. ஊரில உவையள் வருவினம் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கினம்.. நீங்கள் என்னட்டான்னா.. பக்கத்து அப்பாட்மெண்ட் வெள்ளைக்காரக் கிழவிதான் என்ர பிள்ளைக்கு பேத்தி என்றீங்கள்..! :lol:

உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.. ஒரு காலத்தில மலேசியா சிங்கப்பூர் என்று போன எங்கட ஆக்கள் மலேயன் பெஞ்சனியர்களா திரும்பி வந்தவை. அங்க பிறந்த பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு.

அவையெல்லாம் வர முடிஞ்சிருக்குது.. ஆனால் வெள்ளைக்காரண்ட கோடிக்க போட்ட குட்டிகளுக்கு தமிழீழம் சூடாமோ..???! தமிழீழத்துக்கு திரும்பிப் போறதற்கு. எயார் கெண்டிசன் பூட்டி.. மக்டொலாசு.. கேவ்சியும்.. கிளப்புகளும்.. பப்புகளும்.. டிஸ்னி வேல்டுகளும்.. கட்டித்தந்தா.. ஐஸ்ஸில பிறந்த.. தமிழ்.. திராவிடக் குஞ்சுகள்.. வருவினமாமோ... தமிழீழத்துக்கு..??! :lol::lol:

சேகுவரா போன்ற போராளிகள் எங்கோ பிறந்து எங்கோ போராடவில்லையா. ஏன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கூட ஜேர்மனியில் வாழ்ந்து தானாக தாயகம் திரும்பி.. போராடி வீழ்ந்த மாவீரர்களையும் தமிழீழம் கண்டுள்ளது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் படிக்கவென்று வந்தவர்கள் படிப்பு முடிந்ததும், வேலை விசா அல்லது மேலும் படிக்க விசா என்று அலைந்து ஏன் மேலை நாடுகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. இன்று எமது போராட்டத்திற்கான அடிப்படைத் தேவைகள் எங்கிருந்து வந்தன? அந்த வரண்டு போன மண்ணிலுள்ள சுரங்கங்களிலிருந்தா வருகிறது? படிக்கவென்று வந்து.. நாட்டுக்குத் திரும்ப மனமின்றி காசு கொடுத்து கள்ள விசா எடுத்து இருக்கலாம்.. அல்லது வேலை விசாவுக்காக அலைந்து அதை எடுத்து இருக்கலாம்.. அல்லத தொடாநஇத படித்துக் கொண்டே காலத்தைக் கழிக்கலாம்.. ஆனால் இன்னொரு அசைலத் தமிழனின் காசிலோ அல்லது சொத்து சுகங்களை விற்றோ அல்லது கடன் பட்டோ அசைலத்துக்கு வந்தால்.. இந்த 'எழுத்துக்களை' இனிசலோடு பிசையும் கனவான்களுக்கு தவறாகத் தெரிகிறதாம்!! :lol: இனஇறு புகலிட நாடுகளில் தமிழ் வாழ்கிறது என்றால் அதுவும் அசைலத் தமிழனால்தான்.. :lol:

ஜேஆர் காலத்தில வேணுமானால் தமிழன் பொய் சொல்லி அசைலம் கேட்டிருக்கலாம்.. ஆனால் இன்று பொய் சொல்லும் நிலையில் அசைலத் தமிழன் இல்லை.. :lol: (ஆனால் பொய்யை ஏற்றுக் கொண்ட நாடுகள் இன்று உண்மையை ஏற்றுக் கொள்ளும் நிலையும் மிக அரிதாகவே உள்ளது..)

தமிழீழத்தில இருந்து வந்து படிச்சிட்டுப் போய்த்தான் இன்று விமானப்படை அமைச்சிருக்கிறாங்க தமிழீழ மாணவர்கள். அவர்களுக்கு அசைலம் அடிக்கத் தெரியாமலோ.. போயிரிக்கினம்..!

உங்க அசைலம் அடிச்ச பல பேர் ஊரில காணியை பூமியை வித்திட்டு.. அதில வந்த காசில ஒரேயடியா ஓடிடுவம் என்று களவாய் ஓடி வந்தவை.. இல்லை என்பீங்களா..??! பயத்தில வந்தவை எத்தனை பேர்..??! :lol:

தாய் மண்ணில இவைக்கு எப்படி பற்று வரும். ஆயிரக்கணக்கான சிங்கள மாணவர்களும் வாறாங்க படிக்கிறாங்க போறாங்க. ஏன் தாயகத்தில உள்ள தமிழ் பேராசிரியர்கள் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில படிச்சுப் பட்டம் பெற்றவைதான்.

நாளைய தமிழீழத்தின் சிற்பிகளாக வேண்டிய இன்றைய புலம்பெயர் இளைய சமூகம்.. தமிழீழம் "ரூ.. கொட்" என்றதுதான்.. வேதனையாக இருக்கிறது..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரியப்பா உங்கை லண்டனிலை பொலிஸ்காரர் எங்கடை ஆக்களுக்கு காப்பு கட்டிவிடுறாங்களாம் உண்மையே :unsure:

பிள்ளையள் செய்த குற்றத்துக்கும் தாய் தேப்பன்மார்தான் காப்போடை திரியினமாம் :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரண்டு பேரும் ஏதோ மாறி மாறி வெள்ளைக்காரனிட்ட ஏதோ இல்லையென்று புலம்புறதுபோல தெரியுது.. நீங்க வீடு வாசலோடை சொகுசா இருக்குற வெள்ளையளோடை பழகேலை எண்டு நினைக்குறன்.. :o அவங்கள் ஒருவேளை தின்னுறதுக்கு செலவழிக்குற காசில நாங்கள் ஒரு கிழமைக்காவது தின்னுவம்.. இப்பிடிக் கணக்குப் பாத்தியளெண்டால்.. எப்பிடி சொந்த வீடு கார் வந்ததெண்டு கொஞ்சமாலும் புரியும்.. எடுக்குற காசில தண்ணியடிச்சுட்டு.. டிஸ்கோவில கிடந்து.. வாறவளவைக்கு ஹோட்டலில கேக்குறதுகளையெல்லாம் வாங்கிக் கொடுத்தால்.. கையில சல்லிக் காசுகூட நிக்காதுதான்.. :unsure::o

(நான் நெடுக்காலபோவனின் கருத்துக்கும் சும்மாவின் கருத்துக்கும் பதில் சொன்னனான்.. மற்றவை கண்டுகொள்ளாதீங்க!!)

சோழியன் குடும்பி சும்மா ஆடாது... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிய பல நண்பர்கள் மிகத் திறமைசாலிகளாக இருந்தும்... 200 மேற்பட்ட நேர்முகப் பரீட்சைகளுக்குப் போயும் வேலையின்றி வேறு நாடுகளுக்கு தொழில்பெறச் சென்றுள்ளனர்.

200 நேர்முக தேர்வுக்கு போயும் ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் யாரில் பிழை என்று நீங்களே தெரிந்து கொள்ள வேண்டியதானே...எத்ற்க்கும் ஒரு சாட்டு சொல்வது நமக்கு பழக்கமாகிவிட்டது... உங்கள் நண்பர்களை கிட்டத்தட்ட 200 நிறுவனங்கள் தேர்வுக்கு கூப்பிட்டு இருந்தார்கள் ஆனால் வேலை கிடைக்கவில்லை...உண்மை என்ன என்றால் உங்கள் நண்பர் நேர்முகத்தேர்வில் தன்னை நிருபிக்க தவறி விட்டார் அல்லது அவருக்கு அந்த வேலைக்குரிய தகுதி இல்லாமலிருக்கலாம்...

எனக்குத்தெரிந்த தமிழர்கள் எதிர் நோக்கும் பிரச்சனை இது தான்.... ஒரு நேருமுக தேர்வுக்கு முன்னர் ஏதாவது எழுத்து பரீட்சை இருந்தால் 100 க்கு 100 எடுத்து அடுத்த கட்டத்துக்கு போவார்கள்.. ஆனால் நேர்முக தேர்வில் தெரிவு செய்யப்பட மாட்டார்கள்... காரணம் உங்கள் விவாதத்துக்கு..

இன்னும் சிலர் வேலைகளில் இருந்து திடீர் ஆட்குறைப்புக்களால் பாதிக்கப்பட்டு வேலையிழந்துள்ளனர்.

திடீர் வேலை நிறுத்தங்களால் தமிழர்களை மட்டும் தான் நிப்பாட்டுகின்றார்களா? அவன் அவன் திடீரென்று நிப்பாட்ட மாட்டாங்களா என்று பார்க்கிறாங்கள் நீங்கள் வேற.

பிரித்தானியாவைப் பொறுத்தவரை அது மனிதர்களை ஏஊ, ஏஏஆ மற்றும் ணொநேஊ என்று வகைப்படுத்தித்தான் வேலை வழங்குகிறது. விசாக்களையும் வழங்குகிறது. அதாவது வெள்ளைத்தோலுக்கு ஒரு விதிமுறை வெள்ளைத்தோல் அல்லாதோருக்கு இன்னொரு விதிமுறை. அடிப்படையில் இதுதான் நடைமுறை யதார்த்தமாக இருக்கிறது.

பிரித்தானியாவில் உயர் கல்வி கற்கும் நீங்கள் இதை சொல்வதை கேட்க ஆச்சரியமாக இருக்கின்றது...தோல் நிறத்தை வைத்து எதுவும் நடப்பதில்லை...பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருக்கும் கந்தசாமியும், டங்கனும் ஒரே மாதிரி தான் நடத்தப்படுகின்றார்கள்... வகைப்படுத்தித்தான் வேலை கொடுக்கப்பட்டது காரணம் இல்லாமலா? காரணம் உங்களுக்கு தெரியாதா? Non-EU என்று சொல்லி உங்களை வீட்டுக்கா அனுப்புகின்றார்கள்...படிக்க வந்தால் படித்து முடிய மேலே படிக்கணுமா? பணம் இல்லையா? இரண்டு வருடம் வேலை செய்து விட்டு படி என்று விசா குடுக்கின்றார்கள்.. வேலை செய்ய வந்தாயா? இங்கே நிரந்தரமாக தங்கணுமா.... அதற்கும் முறைகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள்...Tier 1,2,3 (PSW, Investors, HSMP etc..) என்று இருப்பது உங்களுக்கு தெரியாதா? இதை வெள்ளைக்கு ஒரு நிலை எமக்கு ஒரு நிலை என்று எப்படி நீங்கள் சொல்லலாம்? இந்த வெள்ளை தோல் உடையவர்கள் கறுப்புத்தோல் இருக்கும் நாட்டில் சும்மா போய் குடியேற முடியாது... எமக்கு இங்கு இருக்கும் கட்டுப்பாடுகள் போல அவர்களும் கறுப்புத்தோல் நாட்டுக்கு போய் குடியேறும் போது பல விசாக்களை பெற வேண்டியே உள்ளது...

Edited by chumma....

சும்மா இவர் எதுக்கோ இங்கு சும்மா சும்மா விளக்கமளித்து கருத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார் என நினைக்கிறேன்.. :unsure: அப்பா நெடுக்ஸ்! உண்மையைச் சொன்னால் இங்கு பிறந்த பலரது கருத்து என்னவென்றால்.. தங்கள் அறிவை தாயகத்துக்கு பயன்படுத்துவது.. தமது மூலதனத்தை

தாயகத்தில் முதலிடுவது.. தாயகத்துக்கு சுற்றுலா செல்வது.. இதிலே சம்மதம்தான்.. ஆனால்.. இலையான், நுளம்பு, எறும்பு, கொசுகு இருக்குமட்டும் அங்கே போய் நிரந்தரமாக இருக்கமாட்டோம் என்பதுதான் அவர்களில் பெரும்பாலோரது கூற்று.. இந்த நிலையை மாற்றாம பெற்றோர் என்ன செய்கிறாங்கள் என்று நீங்க கேட்பது புரிகிறது.. தமிழை படிங்கப்பா.. தமிழ்ல கதையுங்கப்பா.. அதுக்கு மேலால தமிழ் விழாக்களில மேடைக்கு ஏறுங்கப்பா.. அதுக்கும் மேலால வானொலிகளில விளாசுங்கப்பான்னு அவங்க தலையை சிதைச்சே அவங்களுக்கு வெறுப்பேத்துற நாங்க.. இதுக்கு மேலையும் வெறுப்பேத்தினா.. வீட்டைவிட்டு ஓடிப் போனாலும் போயிடுவாங்க.. :o அதுக்குப் பிறகு நம்ப கெளரவம் என்னாவது??? :lol::o

உங்க அசைலம் அடிச்ச பல பேர் ஊரில காணியை பூமியை வித்திட்டு.. அதில வந்த காசில ஒரேயடியா ஓடிடுவம் என்று களவாய் ஓடி வந்தவை.. இல்லை என்பீங்களா..??! பயத்தில வந்தவை எத்தனை பேர்..??! biggrin.gif

என்னையும் நம்ப மாமா ஒருநாள் 'மருமேனே.. நான் மண்டையப்போட்டா எங்கடை சொத்தெல்லாம் பாழாப் போப்போது.. என்ன செய்ய?' எண்டு போனில கேட்டாரு.. சுத்தி மதிலைக் கட்டி.. 'சோழியான் நினைவாலயம்' என்று பெயர்ப்பலகை மாட்டச் சொல்லீட்டன்.. ^_^:D

Edited by sOliyAn

அப்போ எங்கட ஆட்கள் சாப்பிடாமல் இருந்து வீடு கார் எல்லாம் வாங்குகின்றார்களா? இது தெரியாமல் போய்விட்டது.... வீடு வாசலோட வசதியாக இருக்கின்ற அனேக மேற்கத்தியர்களின் கடன் அட்டை நிலுவையை அறிய வாய்ப்பில்லை தான்...

நாங்கள் பேச வந்த விடயம் என்னவென்றால், அகதியாக இங்கு வந்து ஒரு வருடத்தில் கடைகள் வீடுகள் சொந்தமாக எப்படி என்று....வருடம் முழுதும் உண்ணாவிரதம் இருந்தால் கூட சேமிக்க முடியாதே?

நீங்கள் இருக்கும் நாட்டில் நிலைமைகள் வேறு...

உங்க நாட்டுக்கு அகதியாக வந்தவன் இன்னொரு நாட்டில் அகதியாக இருந்து அந்நாட்டு பிரஜா உரிமை பெற்று, அந்நாட்டில் சேமித்த பணத்துடன் வந்திருப்பான்.. :unsure: யூ நோ.. நெள வீ ஆர் நொட் றிவூயீஸ்.. வீ ஆர் யூரோப்பியனாக்கும்.. :o

(ஆண்டவா.. இந்த வசனம் தப்பிப் பிழைக்க கருணைகாட்டப்பா.. :D:o )

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிய பல நண்பர்கள் மிகத் திறமைசாலிகளாக இருந்தும்... 200 மேற்பட்ட நேர்முகப் பரீட்சைகளுக்குப் போயும் வேலையின்றி வேறு நாடுகளுக்கு தொழில்பெறச் சென்றுள்ளனர்.

200 நேர்முக தேர்வுக்கு போயும் ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் யாரில் பிழை என்று நீங்களே தெரிந்து கொள்ள வேண்டியதானே...எத்ற்க்கும் ஒரு சாட்டு சொல்வது நமக்கு பழக்கமாகிவிட்டது... உங்கள் நண்பர்களை கிட்டத்தட்ட 200 நிறுவனங்கள் தேர்வுக்கு கூப்பிட்டு இருந்தார்கள் ஆனால் வேலை கிடைக்கவில்லை...உண்மை என்ன என்றால் உங்கள் நண்பர் நேர்முகத்தேர்வில் தன்னை நிருபிக்க தவறி விட்டார் அல்லது அவருக்கு அந்த வேலைக்குரிய தகுதி இல்லாமலிருக்கலாம்...

எனக்குத்தெரிந்த தமிழர்கள் எதிர் நோக்கும் பிரச்சனை இது தான்.... ஒரு நேருமுக தேர்வுக்கு முன்னர் ஏதாவது எழுத்து பரீட்சை இருந்தால் 100 க்கு 100 எடுத்து அடுத்த கட்டத்துக்கு போவார்கள்.. ஆனால் நேர்முக தேர்வில் தெரிவு செய்யப்பட மாட்டார்கள்... காரணம் உங்கள் விவாதத்துக்கு..

இன்னும் சிலர் வேலைகளில் இருந்து திடீர் ஆட்குறைப்புக்களால் பாதிக்கப்பட்டு வேலையிழந்துள்ளனர்.

திடீர் வேலை நிறுத்தங்களால் தமிழர்களை மட்டும் தான் நிப்பாட்டுகின்றார்களா? அவன் அவன் திடீரென்று நிப்பாட்ட மாட்டாங்களா என்று பார்க்கிறாங்கள் நீங்கள் வேற.

பிரித்தானியாவைப் பொறுத்தவரை அது மனிதர்களை ஏஊ, ஏஏஆ மற்றும் ணொநேஊ என்று வகைப்படுத்தித்தான் வேலை வழங்குகிறது. விசாக்களையும் வழங்குகிறது. அதாவது வெள்ளைத்தோலுக்கு ஒரு விதிமுறை வெள்ளைத்தோல் அல்லாதோருக்கு இன்னொரு விதிமுறை. அடிப்படையில் இதுதான் நடைமுறை யதார்த்தமாக இருக்கிறது.

பிரித்தானியாவில் உயர் கல்வி கற்கும் நீங்கள் இதை சொல்வதை கேட்க ஆச்சரியமாக இருக்கின்றது...தோல் நிறத்தை வைத்து எதுவும் நடப்பதில்லை...பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருக்கும் கந்தசாமியும், டங்கனும் ஒரே மாதிரி தான் நடத்தப்படுகின்றார்கள்... வகைப்படுத்தித்தான் வேலை கொடுக்கப்பட்டது காரணம் இல்லாமலா? காரணம் உங்களுக்கு தெரியாதா? Non-EU என்று சொல்லி உங்களை வீட்டுக்கா அனுப்புகின்றார்கள்...படிக்க வந்தால் படித்து முடிய மேலே படிக்கணுமா? பணம் இல்லையா? இரண்டு வருடம் வேலை செய்து விட்டு படி என்று விசா குடுக்கின்றார்கள்.. வேலை செய்ய வந்தாயா? இங்கே நிரந்தரமாக தங்கணுமா.... அதற்கும் முறைகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள்...Tier 1,2,3 (PSW, Investors, HSMP etc..) என்று இருப்பது உங்களுக்கு தெரியாதா? இதை வெள்ளைக்கு ஒரு நிலை எமக்கு ஒரு நிலை என்று எப்படி நீங்கள் சொல்லலாம்? இந்த வெள்ளை தோல் உடையவர்கள் கறுப்புத்தோல் இருக்கும் நாட்டில் சும்மா போய் குடியேற முடியாது... எமக்கு இங்கு இருக்கும் கட்டுப்பாடுகள் போல அவர்களும் கறுப்புத்தோல் நாட்டுக்கு போய் குடியேறும் போது பல விசாக்களை பெற வேண்டியே உள்ளது...

200 தடவைகள் வேலைக்கு முயற்சித்த எனது நண்பன் இலங்கையில் எல்லாப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றவன். பேராதனைப் பல்கலைக்கழக முதல் வகுப்பு பட்டதாரி. கேம்பிரிஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சி டாக்டர் பட்டம் பெற்றவன். இன்று அவன் அமெரிக்க ஜி ஆர் ஈ நுழைவுத் தேர்வில் அதிக புள்ளிகள் பெற்று அமெரிக்காவில் சிறப்பான வேலை செய்கிறான். ஆனால் அவனுக்கு.. இங்கிலாந்தில் வேலை வாய்ப்பில்லையாம்.. திறமை போதாதாம்..???! நியாயமா சும்மா இது உங்களுக்கே அடுக்குமா...??! :o

Non- EU மாணவன் என்ற வகையில் நானே இரண்டு விடயங்களில் பிந்தள்ளப்பட்டிருக்கிறேன்.

1. எனக்கு ஆராய்ச்சி டாக்டர் பட்டப்படிப்புக்கு என்று பிரேரிக்கப்பட்ட நிதி வசதி எனது Non-EU மாணவ நிலை கருதி நிராகரிக்கப்பட்டது. அதனால் அந்த அரிய வாய்ப்பை நான் இழந்தேன்.

2. அதன் பின் மருத்துவத்துறைசார் படிப்பில் எனக்குத் தரப்பட வேண்டிய Hospital Placement இல் எனது திறமையை முன்னிலைப்படுத்தாமல் எனது Non-EU மாணவ நிலையை முன்னிலைப்படுத்தி என்னை waiting list இல் கடைசியில் போட்டு வைத்திருக்கிறார்கள்..???! இதனால் எனக்கான மருத்துவ நிலைப்பயிற்சி பிந்தங்கிப் போகிறது. வேலை வாய்ப்பு பிந்தங்கிப் போகிறது.

உள்ளூர் மற்றும் EU மாணவர்களை விட பலமடங்கு பணம் செலுத்திப் படித்தும் எமக்கு இவ்வாறு செய்யப்படுவது பக்கச் சார்பான சட்டங்களின் கீழாகும். இவ்வாறு மாணவர்களை பிராந்திய ரீதியில் பிரித்து பாரபட்சமாக நடத்துவது discrimination இல்லையா..??! :o:unsure:

கறுப்பு வெள்ளை என்று வாயால் பேசினால் தான் discrimination னா..??!

இது எனக்கு தனிப்பட ஏற்பட்ட அனுபவம். இப்படிப் பலர்..! :D

Edited by nedukkalapoovan

நெடுக்கர்,

இங்க Australia இல் மருத்துவர்களுக்கு நல்ல தட்டுப்பாடு உள்ளது. தலை நகரங்களில் இருந்து சிறிது தள்ளி உள்ள Hospitals இல் வேலை இலகுவாக எடுக்கலாம். தலை நகர Hospitals இல் வேலை எடுப்பதன்றால் AMC Exams pass பண்ணி இருக்க வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை தான் இந்த Exams வரும். Post grads இருக்குமானால் இன்னும் திறம்.

அப்படித்தான் எனது அவுஸ்திரேலிய நண்பனும் சொன்னான். ஆனால் அங்கு வேலை பெற வேண்டின் குறித்த துறையில் குறைந்தது 2 வருட அனுபவம் தேவை. அதை placement இல்லாமல் பெறுவது மிகக் கடினமானது.

எனக்கு placement ஐ பின்னடிப்பதால்.. சர்வதேச அங்கீகாரமுள்ள வகைக்கு எனது துறைசார் சான்றிதழைப் பெற முடியவில்லை. இவர்களின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப இவர்கள் தான் தர வேண்டும். ஆனால் Non-EU என்று சொல்லி எனது பல்கலைக்கழகமும் (இங்கேயே வேறு சில பல்கலைக்கழகங்கள் இவ்வாறு பாரபட்சம் காட்டுவதில்லை.) இங்குள்ள சுகாதார சேவையினரோடு இணைந்து மோசமாக நடந்து கொள்கிறது. placement கொடுத்தால் ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி நிராகரிக்கிறார்கள். அரசு அதை உள்ளூர் மற்றும் EU மாணவர்களுக்கே அதிகம் வழங்கக் கோருவதாகவும் காரணம் சொல்கின்றனர். தமக்கு நிதிப்பற்றாக்குறை என்றும் சொல்கின்றனர்.

இப்படி வேறு சில பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நடந்துதான் இருக்கிறது. :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு விவாதம், நானும் இடையில புகுந்து எண்ட கருத்துகளையும் சொல்லுவமெண்டு பார்த்தன். :icon_mrgreen: அசைலம் அடிச்சு வார ஆக்களில பாதிபேருக்கு மேல பாதிக்கப்படாத ஆக்கள் தான். உதாரணத்துக்கு சுனாமியால பாதிக்கப்பட்ட ஆக்களுக்கு கனடாவும் ஆஸ்திரேலியாவும் விசா குடுத்த போது நான் அறிய பாதிக்கப்படாத கன ஆக்களும் வந்து சேந்திடினம். நான் யாரையும் குறை சொல்லயில்லை, உண்மையாதான் சொல்லுறன். எங்கட ஆக்கள் வெளியில வாறது பொருளாதார ரீதியில ஒரு பலம் தான். இப்பிடி வெளியால வராட்டி, வெள்ளவத்தயில இவ்வளவு பிளட் முளைச்சிருக்குமே? ஊரில கூட வெளிநாடுக்காசு எவ்வளவோ வேலையள செய்திருக்கு. இங்கு சிலர் சொல்லுற கருத்துக்கு நானும் உடன் படுறன். வெளிநாட்டில எவ்வளவு தான் உழைச்சாலும் காசு தங்காது எண்டு தான் நான் சொல்லுவன். பொருளாதார ரீதியில, கடின உழைப்பாலயும் நன்கு திட்டமிடுறதாலையும் முன்னேறலாம், இல்லை எண்டு சொல்லவில்லை ஆனால் கனகாலம் தேவை. ஊரில கனபேர் நினைக்கிறது வெளிநாட்டில இலகுவா உழைக்கலாம் எண்டு, ஆனால் நிஜம் என்ன எண்டு உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை. எங்கட ஆக்களில கனபேர் skilled migrationல வந்து இருக்கீனம் தான்.

நான் சொல்ல விரும்பிய இன்னொரு கருத்து என்னவென்றால், தமிழீழம் கிடைச்சாலும் அநேகமான புலம்பெயர்ந்த ஆக்களும் போகவிரும்பாயினம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து முன்போருக்காலும் இந்த தலைப்பில ஒரு விவாதம் நடந்தது உங்கலேலருக்கும் நினைவிருக்கும். இதற்க்கு முக்கிய காரணம் எம்முடைய புலம்பெயர் இளைய தலை முறை வளர்க்கப்பட்ட விதமும் சூழலும். இதற்க்கு நல்ல உதாரணம் எனக்கு மிகவும் நெருக்கமான உறவினர்களுக்கு ரெண்டு பிள்ளையளும் இங்கவந்துதான் பிறந்தவங்கள். முதல் நல்லா தமிழ் கதைச்சவங்கள் இப்ப தமிழ்ல கேள்வி கேட்டாலும் ஆங்கிலத்தில்தான் திருப்பிகதைக்கிறாங்கள். இவ்வளத்துகும், அவ்வங்களிண்ட தேப்பன், தாயில இருந்து எல்லாரும் தமிழில தான் கதைக்கிறது. அவயல கேட்டால், இவங்கள் கதைக்கிறாங்கள் இல்ல தம்பி நாங்கள் என்னத்த செய்ய எண்டுவீனம். அந்த பெடியளுக்கு நான் அத்தான் முறை, அவங்களுக்கும் 8, 6 வயதுதான் ஆகுது. இப்பிடி எத்தினையோ கதை இருக்கும். இது இப்பிடியே போனால், அவங்கட தலைமுறைக்கு பிறகு, தமிழ் தெரியாத தமிழ் தலைமுறை ஒண்டு கட்டாயம் உருவாகும். அதேவேளை தமிழகத்தை சேர்ந்த எனக்கு தெரிந்த ஒரு குடும்பமும் உள்ளது. அவேயளிண்ட மகனுக்கும் எண்ட சின்ன மச்சான்ட வயதுதான். அவன் அமெரிக்கால பிறந்த பிள்ளை ஆனால் தமிழ் நல்லா கதைப்பான். தமிழகத்தை சேர்ந்தவர்களின் வெளிநாட்டு இளைய தலைமுறை எப்பவுமே தமிழ்ல பேசினதைதான் நான் பாத்திருகிறான். அவர்களால் முடியுமாயின் எங்கட இளைய தலைமுறையால ஏன் முடியாது? :D

இன்னொரு விஷயம் என்னெண்டா, இங்க பிறந்து வளந்த பெடி, பெட்டயள் இருக்கினமே, அவேலுக்கு பட்டிக்கவாற, வேலைநிமித்தம் வாற தங்கட வயது ஆக்களில ஒரு இது. அது என்னெண்டா தங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும், தாங்கள் தான் பெரிய ஸ்டைல்லான ஆக்களாம். கிட்டடியில வந்தவேல் FOBஆம் (Fresh Off the Boat). படிக்க வந்த ஆக்கள பஞ்சத்தில அடிபட்டுவந்தவெயல் மாதிரித்தான் நடத்துவீனம். :lol: உங்களில ஆருக்கும் நடந்திருந்தா சொல்லுங்கோ. எனக்கு இப்பிடி எத்தினயோதரம் நடந்திருக்கு. கண்டாலும் எதோ பாக்ககூடாத ஒண்ட பாத்தமாதிரி தலைய திருப்பிக்கொண்டு போவீனம், ஆனால் அங்கால நிக்கிற வெள்ளை பெடியள் பெட்டயளோட எண்டால் கதைப்பினம். இதால நானும் இப்பிடியான் ஆக்கள கண்டாலும் காணாதமாதிரித்தான் போறது. :D நாங்கள் ஏன் வீணா எங்கட கொவ்ரவத்த குறைப்பான்? என்னை பொறுத்தவரைக்கும் படிக்கவந்த என்னைப்போல பெடியள் எவ்வளவோ மேல். வெளிநாட்டில படிக்கிறதுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு எவ்வளவு செலவகுமேண்டு உங்களெல்லாருக்கும் தெரியும். நாங்களே ரெண்டு மூண்டு இடத்தில நித்திரைகொல்லாமல் வேலைசெய்து, படிச்சு, வாயைகட்டி வயிதைகட்டித்தான் கலாசாலை கட்டணம், வாடகை அது இது எண்டு எல்லா செலவையும் சமாளிக்கவேனும். அப்பிடி இருக்கைகுல எங்களால திறமான கார் ஓடவோ, அவயளிண்ட தரத்துக்கு உடுக்கவோ ஏலாதுதான் ஆனால் இவர்களில் பலர் பெற்றாரின் காசில சீவிக்கிறதா விட எவ்வளவோ திறம். :D

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசைலம் அடிச்சவர்கள் படிக்க வந்தவர்கள் எல்லோருக்கும் ஒரு பொதுவான நோக்கம் இருக்கின்றது...வெளி நாட்டிலே நிரந்தரமாக தங்குவது.... நாட்டில் பிரச்சனை முடியும்(?) வரையாவது... எனக்கு தெரிந்த பலர் மாணவர் விசா குடுக்க வில்லை என்று களவாக வந்து அசைலம் அடிச்சு படிச்சு முடித்தவர்களும் இருக்கின்றார்கள்...(இலவசமாக)

இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் இருந்து இங்கு வந்து பணம் கட்டி படித்து விட்டு படித்து முடித்தவுடன் ஊருக்கு திரும்பி போனவர்கள் ஒருவரையும் நான் அறியேன். இங்கு இருக்க அனுமதி மறுக்கப்பட்டால் ஊருக்கு போகின்றார்கள் ஆனாலும் உடனேயே வேறு நாட்டுக்கு போய் விடுகின்றார்கள்...

எனக்கு இங்கே பிறந்து வளர்ந்தவர்களுடனோ அல்லது இலங்கையில் இருந்து வந்த பல மாணவர்களுடனோ படித்த அனுபவம் இல்லை..

Edited by chumma....

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விஷயம் என்னெண்டா, இங்க பிறந்து வளந்த பெடி, பெட்டயள் இருக்கினமே, அவேலுக்கு பட்டிக்கவாற, வேலைநிமித்தம் வாற தங்கட வயது ஆக்களில ஒரு இது. அது என்னெண்டா தங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும், தாங்கள் தான் பெரிய ஸ்டைல்லான ஆக்களாம். கிட்டடியில வந்தவேல் FOBஆம் (Fresh On Board). படிக்க வந்த ஆக்கள பஞ்சத்தில அடிபட்டுவந்தவெயல் மாதிரித்தான் நடத்துவீனம். உங்களில ஆருக்கும் நடந்திருந்தா சொல்லுங்கோ.

அவை மட்டுமல்ல.. உங்க வந்து அப்பர்மார் அசைலம் அடிக்க பின்னால குடும்பமா வந்து குந்தினவையலும் கொஞ்சப் பேர் அப்படித்தான்.

நானும் உந்தக் கூட்டங்களோட சேர்ந்து படிக்கல்ல. காரணம்.. நான் படிச்சதுகளுக்கு உந்தக் கூட்டங்களைக் காண்பது அரிது. அதுகள் படிக்கிறதெல்லாம்.. இலகுவான (கணணி.. சமூகக்கல்வி.. உளவியல்.. தகவல்தொழில்நுட்பம்.. சட்டம்) பாடங்களா இருக்கும் அல்லது.. வழமையான தமிழ் பெற்றோருக்குத் தெரிந்த... இஞ்சினியர்.. டாக்டர்.. எக்கவுண்டனா இருக்கும்..!

அதுமட்டுமன்றி.. உவையள் (பெடியள் பெட்டைகளையும் பெட்டைகள் பெடியளையும்) தங்கட கலரை விட்டு தூர வராயினம். குறிப்பாக லண்டனுக்க தான் சுத்துவினம். நாங்கள் அதைவிட்டு தூரப் போனதால.. உவையளைச் சந்திக்க முடியல்ல..! அங்கால வெள்ளையள் தானே..! லண்டனுக்குள்ள வெள்ளையள் குறைவு. வெள்ளை நிறத்தில உள்ளதுகளும் ஆங்கிலேயர்களாக இருப்பது வெகு அரிது..! மத்திய லண்டனுக்குள்ள இருக்கிறார்கள். அங்கு எங்கட கலருகள் வாறது குறைவு. ஏனெனில் போட்டி அதிகம்..! :lol::icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

200 தடவைகள் வேலைக்கு முயற்சித்த எனது நண்பன் இலங்கையில் எல்லாப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றவன். பேராதனைப் பல்கலைக்கழக முதல் வகுப்பு பட்டதாரி. கேம்பிரிஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சி டாக்டர் பட்டம் பெற்றவன். இன்று அவன் அமெரிக்க ஜி ஆர் ஈ நுழைவுத் தேர்வில் அதிக புள்ளிகள் பெற்று அமெரிக்காவில் சிறப்பான வேலை செய்கிறான். ஆனால் அவனுக்கு.. இங்கிலாந்தில் வேலை வாய்ப்பில்லையாம்.. திறமை போதாதாம்..???! நியாயமா சும்மா இது உங்களுக்கே அடுக்குமா...??!

இதற்குரிய பதிலை நான் முன்னர் எழுதிய ஒரு கருத்திலே எழுதி விட்டு பின்னர் நீக்கி விட்டேன்... நீக்க முதல் வாசித்தவர்களுக்கு தெரிந்திருக்கும்...

நான் எழுதியது "இலங்கைத்தமிழர்களிடம் எதையாவது எழுதி சித்தியடைய சொன்னால் எல்லோரை விடவும் சிறந்த முறையில் சித்திய்டைவார்கள்.. அதையே வாயால் விபரிக்க சொன்னால் தடு மாறுவார்கள்..

உங்கள் நண்பருக்கு திறமை இல்லை என்று நான் சொல்லவில்லை...பிரித்தானியாவி

Edited by chumma....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழியான் அண்ணா... நீங்கள் சொல்கின்றீர்கள்... அசைலம் அடிச்ச தமிழன் தான் தமிழை வாழ வைக்கின்றான் என்று..... ( பிரித்தானியாவில் வடக்கில் ஆஆஆஆக மேல இருக்கின்ற.... அப்போது ஒரு தமிழரும் இல்லாத இடத்திலே கூட . XXXXX பல்கலைக்கழகம் வரவேற்க்கின்றது என்று தமிழில் எழுத்தி அனுமதியோடு ஒட்டிய ஆட்கள் நானும :icon_mrgreen:

இந்த அசைலம் அடிச்சு கடை வைத்து தொழில் பண்ணிக்கொண்டு ஊரில மக்களுக்கு உதவி செய்கின்றோம் என்ற தமிழர்கள் உண்மையிலே தமிழர்கள் மேல் அக்கறையில் உதவி செய்கின்றார்களா? அந்த விழா இந்த விழா என்று தமிழை வளர்க்க்கின்றார்களே (?)..... கூட இருக்கும் தமிழனை வளர்க்கின்றார்களா? ஒரு தமிழ் கடையிலாவது ஒரு தமிழன் வேலை செய்தால் சராசரி வேலையாளாக நடத்தப்படுகின்றானா? ஒழுங்காக சம்பளம் கொடுக்கின்றார்களா? எனக்கு தெரிந்த ஒரு மாணவன் ..... படிக்கும் போது ஒரு தமிழருடைய கடையில் வேலைக்கு போனார் மிட்லன்ஸ் என்ற இடத்தில... கேட்டால் தான் தமிழை வளர்க்கின்றேன் என்பார்.. .ஆனால் அந்த மாணவன் மாதக் கடைசியில் சம்பளம் கேட்கும் போது அவர் சொன்னது உம்மடை வேலை சரியில்லை.. .கன நாள் ரில் ல காசு குறைச்சு போனது என்று மனிசி சொன்னவா.... இந்தாரும் என்று சொல்லி 500 பவுண்ஸ் குடுத்துப்போட்டு.. அடிக்கடி வீட்ட சாப்பிடுறனீர்.. சொ தட்ஸ் ஆல்... நீர் ஒரு தமிழ் பெடியன் படிக்கின்றனீர் என்ற படியா தான் நான் 500 தாரன் இல்லாட்டி 400 தான் என்று சொல்லி அனுப்பி விட்டார்... கிழமைக்கு 300 பவுண்ஸ் தாற என்று சொல்லித்தான் அவனை வேலைக்கு சேர்த்தவர்... இப்படியான் தமிழர்கள் தமிழை வளர்க்கின்றார்களா? அல்லது தமிழை காட்டி தம்மை வளர்க்கின்றார்களா?

உண்மையில் தமிழை வளர்க்க தமிழனை வளர்க்க அரவணைக்கும் தமிழர்களும் ஏராளம் உண்டு.....

கூட இருக்கும் தமிழனை அடிமையாக வைத்துக்கொண்டு சிங்களவனே அவனே இவனே என்டுறதில என்ன பிரியோசனம்?

Edited by chumma....

  • கருத்துக்கள உறவுகள்

1. எனக்கு ஆராய்ச்சி டாக்டர் பட்டப்படிப்புக்கு என்று பிரேரிக்கப்பட்ட நிதி வசதி எனது ணொநேஊ மாணவ நிலை கருதி நிராகரிக்கப்பட்டது. அதனால் அந்த அரிய வாய்ப்பை நான் இழந்தேன்.

அண்ணா நீங்கள் எதிர்பார்பது எந்த வகையில் நியாயம்? அந்த நிதி EP ஆல் ஜரோப்பியர்களுக்காக ஜரோப்பிய நலனுக்காக ஒதுக்கப்பட்டது... அதை உங்களுக்கு தர வேண்டும் என நீங்கள் எதிர் பார்ப்பது எந்த வகையில் நியாயம்? நீங்கள் இலங்கை/தமிழீழத்திற்கு உங்கள் திறமை /ஆராய்ச்சியால் இலங்கை/தமிழீழம் அடைய போகும் நன்மை என்ன என்று கூறி அவர்களை கட்ட சொல்லுங்கள். NON-EUஎன்று கூறுகின்றீர்கள்... எதற்கு அவர்கள் அப்படி பிரிக்கின்றார்கள்..... உங்களால அவர்களுக்கு ஏதாவது பிரயோசனம் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு தடையாக இருக்க மாட்டார்கள்... ஆனால் உங்களுக்கு வருடத்திற்கு 30000 பவுண்ஸ் கு மேலே செலவழித்து உங்கள ஆராய்ச்சிக்கு உதவி செய்ய.. நீங்கள் ஆராய்ச்சி முடிய உங்கள் சொந்த நாட்டுக்கு சென்றால் அவர்கள் 30000 பவுண்ஸ் படி 3 - 4 வருடங்களிற்கு செலவிட்டு என்ன பயன்? இதே நெடுக்கால போவான் ஒரு ஜரோப்பிய ஒன்றிய கடவுச்சீட்டை வைத்திருந்து ஜரோப்பாவில நிரந்தரமாக தங்கி இருந்தால்.. இப்படி செய்திருப்பார்களா? சொல்லுங்கள்? படிக்க போகின்றேன் என்று விசா அனுமதி கேட்கும் போது என்னிடம் இத்தனை இலச்சம் பணம் இருக்கின்றது.. இல்லை என்றால் மாமா கட்டணம் கட்டுவார் மாமி கட்டுவார் என்று சொல்லி தானே விசா எடுக்கின்றீர்கள்... இங்கு வந்த பின் எப்படி இப்படி சொல்லலாம்?

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்.. நாங்கள் காசு கட்டி செய்யும் ஒரு ஆராய்ச்சிப் பெறுபேறை வர்த்தக அல்லது தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பல ஆயிரம் பவுன்களுக்கு விற்று பல்கலைக்கழகங்கள் எங்களால் காசு பார்க்கின்றனவே அது நியாயமா..??! அது நியாயம் என்றால் ஏன் இது ஆகாது.

முதுமானி நிலை ஆய்வுகளை நாம் தாமே எமது பணத்தில் செய்கின்றோம். அது வெற்றியடையும் போது.. அதை அடிப்படையாக வைத்து மேலும் ஆய்வுகளை பிரேரிக்கும் போது.. வர்த்தக தொழில்நுட்ப நிறுவனங்கள்... மேலும் ஆய்வை விரும்பும் நிறுவனங்கள் காசை அள்ளி வழங்குகின்றன தானே. அதைப் பேராசிரியர்களும்.. பல்கலைக்கழகங்களும் பிரித்தானிய அரசும் சுருட்டிக் கொள்வது.. நியாயமில்லையா..??!

ஆனால் எமக்கு ஒரு ஆய்வுக்கான வாய்ப்பை அளிப்பதால் அவர்களுக்கு அதனால் பேரிழப்பு ஏற்படாது. அந்த ஆய்வு வெற்றியடையவில்லை என்றால் நாம் சித்தி பெற முடியாது. ஆய்வு சரிவர செய்யப்படவில்லை என்றால் கூட இடைநடுவில் நிதியை நிறுத்தி விடுவார்கள். அவர்கள் எல்லா விதத்திலும் தம்மை பாதுகாத்துக் கொண்டுதானே பணத்தை முதலிடுகிறார்கள்.

நான் அறிந்தேன்.. நான் செய்ய விரும்பிய ஆய்வு இன்னும் பல்கலைக்கழகத்தில் காத்திருப்பதாக. கொஞ்சம் கடினமான ஆய்வுத்தலைப்புக்களை ஐரோப்பிய மாணவர்கள் எடுப்பது குறைவு. இருந்தும்.. பல்கலைக்கழகங்கள் அரசின் கட்டாயத்துக்கு அடிபணிந்து செல்ல வேண்டி இருப்பதை.. எனது மேற்பார்வையாளரும் சுட்டிக் காட்டினார்..! பல்கலைக்கழகம் அதற்கு நிதி உதவி செய்ய முடியாத சூழலில் இருப்பதால் பல்கலைக்கழக நிதி உதவி கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவர்கள் வெளியாரிடமிருந்தான நிதி உதவியையே அவ்வாய்வுக்கு எதிர்பார்த்திருக்கின்றனர். :lol::icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதுமானி நிலை ஆய்வுகளை நாம் தாமே எமது பணத்தில் செய்கின்றோம். அது வெற்றியடையும் போது.. அதை அடிப்படையாக வைத்து மேலும் ஆய்வுகளை பிரேரிக்கும் போது.. வர்த்தக தொழில்நுட்ப நிறுவனங்கள்... மேலும் ஆய்வை விரும்பும் நிறுவனங்கள் காசை அள்ளி வழங்குகின்றன தானே. அதைப் பேராசிரியர்களும்.. பல்கலைக்கழகங்களும் பிரித்தானிய அரசும் சுருட்டிக் கொள்வது.. நியாயமில்லையா..??!

எங்க போனாலும் எங்களுக்கு பிழை பிடிக்க வேணுமப்பா... இல்லாட்டி நித்திரை வராது.... நீங்கள் ஆராய்ச்சியை காசை கட்டி முடித்து ஒரு பேராசிரியராக வந்து பின்னர் வரும் குட்டி நெடுக்குக்ளை வைத்து ஆராய்ச்சி பண்ண வைத்து நீங்களும் சுருட்டுங்களன்? யார் வேண்டாம் என்டது? விட்டால்... என்ட வருமான வரிப்பணத்தை பிரித்தானிய அரசு சுருட்டுது என்டுவீங்கள் போல இருக்கே... வீதி குப்பையாக இருந்தாலும் பிரச்சனை.... துப்புரவு செய்ய வரி கேட்டாலும் பிரச்சனை.... அவங்கள் என்னத்ததான் செய்றது?

ஆனால் இதையே அண்டை நாடான நோர்வேயில் பாருங்கள்.. வெளிநாட்டு மாணவர்களுக்கு உள்நாட்டு மாணவர்களைப் போல கடன்வசதி அளிக்கின்றனர். வேலை வாய்ப்பு அளிக்கின்றனர். கூடிய அளவுக்கு சமனான வாய்ப்பை அளிக்கின்றனர்.

அமெரிக்காவில் கூட அப்படித்தான். வெளிநாட்டு மாணவர்களை இரண்டாம் நிலையாக நோக்குவதை இயன்றளவு தவிர்க்கின்றனர்.

பிரித்தானியா.. அவுஸ்திரேலியா போன்ற நாடுகளே மாணவர்களை பிராந்திய ரீதியாக வகைப்படுத்தி.. பிரிவினை காட்டி வருகின்றனர். ஆனால் ஒன்றுக்கு 5 மடங்காக பணத்தைப் புடுங்கிக் கொள்கின்றனர்..! :icon_mrgreen:

மாணவர் கடனையும் ஓவர் டாப்ற் ம் பட்டதாரிகள் கடன்களையும் எடுத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தால் எவ்வளவு காலத்திற்கு தான் அவங்கள் தாறது...... எனக்கு தெரிந்த ஒரு இந்திய வைத்தியர் இங்கு மேற் படிப்புக்கு வந்தார்...போகும் போது கடன் அட்டை கடன் எதுவும் திரும்ப செலுத்தாமல் சென்று விட்டார்... நோர்வேயை விட அதிகமாக கடன் வசதிகளை கொடுத்தது தான் பிரித்தானியா.. கெடுத்தது நம்மாட்கள் தானே? இதுவே ஒரு 15 வருடங்களின் முன்னர் நீங்கள் படிக்க போகின்றீர்கள் என்று சொன்னால் .. வங்கிகள் குறைந்த வட்டியில் ஏன் வட்டி கூட இல்லாமல் கடன் கொடுத்திருப்பார்கள்... இப்போ??? யார் காரணம்???? எம்ம மக்களா பிரித்தானிய அரசாங்கமா? நான் அறிந்த அனைத்து இந்திய மாணவர்களும் திரும்ப போகும் போது கடன் அட்டை, கடன் எதையும் திரும்ம செலுத்தியதே இல்லை...

Edited by chumma....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5 மடங்காக புடுங்குகின்றார்கள் என்றால்...புடுங்காத இடத்திற்கு போக வேண்டியது தானே.... 5 மடங்காக புடுங்குகின்றார்கள் என்றால.. நீங்கள் 5 மடங்கு அவர்களை பாவிக்க வேண்டியது தானே...

FOB= fresh off the board அய் fresh on board எண்டு விளக்கம் கொடுக்கிற விழக்கெண்ணையளில ஒரு இது இருக்கிறதில தப்பே இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.