Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ஆட்சியில் இருந்தால் வைகோ- சீமான்- அமீருக்கு சிறை: ஜெயலலிதா எச்சரிக்கை

Featured Replies

நான் ஆட்சியில் இருந்தால் வைகோ- சீமான்- அமீருக்கு சிறை: ஜெயலலிதா எச்சரிக்கை

[புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 09:09 பி.ப ஈழம்] [க.நித்தியா]

தான் ஆட்சியில் இருந்தால் ஆயுதம் ஏந்துவேன் என்றும் பிரிவினைவாதம் கோருவோம் என்றும் பேசுவோரை சிறையில் அடைத்திருப்பேன் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் சென்னையில் இன்று புதன்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலே வன்முறை வெறியாட்டம், பயங்கரவாதம், தீவிரவாதம், இந்திய இறையாண்மைக்கு எதிரான போக்கு ஆகியவை தலைவிரித்து ஆடும் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அதே போன்று, தற்போதைய கருணாநிதியின் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியிலும், இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் சம்பவங்கள் அனைத்தும் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் அமைதி நிலவவும், இந்தியாவின் இறையாண்மை காக்கப்படவும், பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்று 1991 ஆம் ஆண்டு நான் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசை வற்புறுத்தினேன்.

என்னுடைய பெருமுயற்சியின் காரணமாகத் தான் விடுதலைப் புலிகள் இயக்கம் 14.5.1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அந்த இயக்கத்தின் மீதான தடை இன்று வரை தொடருகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக வி.பிரபாகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இப்படிப்பட்ட தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவான செயல்கள் தமிழ்நாட்டில் தற்போது மீண்டும் நடைபெற்று வருகின்றன.

இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கலந்துகொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான பல ஆட்சேபகரமான, தேசவிரோத கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறார்கள்.

"தனித் தமிழ்நாடு" என்ற அளவுக்குத் துணிச்சலாகப் பேசி இருக்கிறார்கள்.

இத்தகைய பேச்சுக்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

"ஆயுதம் ஏந்தவும் தயார்" என்ற அளவுக்கெல்லாம் தற்போது பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இதற்கு முன்பு காவல்துறை தலைமை இயக்குநரின் எச்சரிக்கையையும் மீறி, 25.01.2008 அன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து திருமாவளவன் பகிரங்கமாகவே பல கருத்துகளைக் கூறினார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அறிக்கைகள் மூலமாக மட்டுமன்றி, சட்டமன்றத்திலேயே வலியுறுத்திக் கூறினேன்.

ஆனால், இதுவரை அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரான தேசவிரோத கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மீது கருணாநிதி இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் மறைவிற்கு இரங்கற்பா தெரிவிக்கும் கருணாநிதி இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆனால், இது குறித்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை.

ஜெயின் கமிசனின் இடைக்கால அறிக்கையை காரணம் காட்டி, தி.மு.க. அங்கம் வகித்த கூட்டணி மத்திய அரசை 1997 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கவிழ்த்தது. பின்னர், அந்த ஜெயின் கமிசன் அறிக்கையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, அரசியல் ஆதாயத்திற்காக 2004 ஆம் ஆண்டு அதே தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக்கொண்டது. இது எப்படி நியாயம் என்ற கேள்வியை அன்றைக்கே நான் எழுப்பினேன். அன்று நான் கேட்ட அந்தக் கேள்வியை, இன்றைக்கு எல்லோரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரித்த போது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

உச்ச நீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு நளினியை காப்பாற்றியது ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திருமதி சோனியா காந்தி.

மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்க்கிறார். இப்படிப் போய்ப் பார்க்கலாமா?

இது அடுக்குமா?

இப்போது நளினி ஏதோ உரிமைக்காகப் போராடுவது போல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்தப் பிரச்சினை அல்ல. அவர்களுடைய குடும்பப் பிரச்சினை அல்ல. இது ஒரு நாட்டுப் பிரச்சினை. ஒரு முன்னாள் பாரதப் பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம். இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை.

தற்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.

எனது ஆட்சிக் காலத்தில் இது போன்று பேசியவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களை சிறையில் அடைத்தேன்.

தற்போது பொடா சட்டம் இரத்து செய்யப்பட்டு விட்டது என்ற அசட்டுத்தைரியத்தில் சிலர் பகிரங்கமாகவே தேசவிரோத கருத்துகளைப் பேச ஆரம்பித்துவிட்டனர்.

பொடா இல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ் நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.

இப்படிப்பட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை ஆதரிப்பது என்பது ஒரு தேசவிரோதச் செயல்.

இதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடம் கிடையாது.

தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை எதிர்ப்பது என்ற கொள்கையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து உறுதியாக உள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தாக்குதல் பட்டியலில் நான் இருக்கிறேன். அதனால் தான் எனக்கு இசட் பிளஸ பாதுகாப்பும், கமாண்டோ பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கின்ற ஒரே தலைவர் நான் தான்.

பிரபாகரனை நம்பி இலங்கைத் தமிழர்கள் இல்லை. பிரபாகரன் ஒரு அழிவுச்சக்தி.

போர் நிறுத்தம் என்று சொல்லி, ஆயுதங்களையும், தனக்குத் தேவையான பொருட்களையும் சேகரித்துக் கொள்வார். அமிர்தலிங்கம், பத்மநாபா போன்ற பல தமிழர் தலைவர்களின் கொலைக்கு யார் காரணம்? இதே பிரபாகரன் தானே?

தற்போது சில விடுதலைப் புலிகள் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இதற்கு இன்று வரையில் அரசுத் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் இல்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பை நான் தீவிரமாக எதிர்ப்பதற்கு காரணம், அந்த அமைப்பு இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது.

எல்லாவிதமான தேசவிரோத சக்திகளுக்கும் அந்த அமைப்பு ஊக்கம் அளிக்கிறது. முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை இந்திய மண்ணிலேயே, தமிழ் நாட்டு மண்ணிலேயே கொலை செய்த அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு.

விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் தமிழ்த் துரோகிகள் என்றால்,

விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் தேசத் துரோகிகள்.

பிரிவினை வாதம், தனித் தமிழ்நாடு போன்ற தேச விரோதச் செயல்களை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கும்.

இதில் எந்த விதமான சமரசத்திற்கும் இடமில்லை என்பதை நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊழல் புரிந்தமைக்காக 1976 ஆம் ஆண்டும்,

நாட்டு இரகசியங்களை விடுதலைப் புலிகளுக்குத் தெரிவித்த தேசத் துரோக குற்றத்திற்காக 1991-ஆம் ஆண்டும் கலைக்கப்பட்ட அரசு தான், கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு என்பதை அனைவரும் நன்கு அறிவர்.

இப்போது வரலாறு திரும்புகிறது. மீண்டும் தேசத்துரோக செயலில் கருணாநிதி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

மத்திய அரசு உறுதுணையாக இருந்து கொண்டு கருணாநிதியை ஊக்குவித்து வருகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்படும் மத்திய, மாநில அரசுகளுக்கு, விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகாட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வை.கோ. இனி என்ன சொல்லப்போகிறார். அவரது நிலைமை இப்பிடியாய் போச்சிது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு பிரிய வேண்டும் என்பது அவர்களுக்குள்ள பிரச்சனையால் எழ வேண்டியதே அன்றி, ஈழப்பிரச்சனையை மையப்படுத்துவதால் மத்திய அரசு வேறு கோணத்தில் நோக்கும் நிலையாகிவிடும்.

எதற்கெடுத்தாலும் தமிழகம் கஸ்மீராகும், என்ற மாதிரிக் கதைப்பது ஒரு வகைப் பாதிப்பினை ஈழப் போராட்டத்தி;றகுத் தரக் கூடியது. மறுபக்கம் சிங்களக் குள்ளநரிகள் தமிழகம் பிரியப் போகின்றது என்று மத்திய அரசுக்கு மடல் எழுதி, தமிழ்மக்கள் மீதான கொலைத் தாக்குதலை மறைக்கப் பார்க்கின்றார்கள். அதற்குத் தூபம் போடும் விதமாகத் தான் இப்படியான பேச்சுக்கள் அமைந்து விடுகின்றன.

உங்களின் அன்பும், பாசமும் நாம் அறிவோம். அதற்கு எம்மிடம் நன்றி சொல்லிட வார்த்தைகளே இல்லை. ஆனால் உணர்;சசிவசப்பட்டுப் பேசும்போது அது எவ்வித எதிர்மறை விளைவுகளைத் தரும் என்பதையும் உணர்ந்து செய்வீர்கள் என்றால் உங்களுக்கும், எங்களுக்கும் நல்லது.

குறிப்பிட்டவர்களை யாராவது தொடர்பு கொண்டு குறித்த கருத்துகளை மீளபெற்றுக்கொள்வதாக அறிக்கை விடும்படி கோர முடியாதா?

அந்த கோரிக்கைகள் அவர்களுக்கு நியாயமானவையாக இருந்த போதும், தற்போதைய எழுச்சியை முனை மழுங்கடித்து இது பயணிக்க வேண்டிய பாதையை மாற்றி விடுமல்லவா!

பின்னர் பயணம் மீண்டும் நீடிக்கும்... எங்கள் பயணம் நிறைவடைந்தால் பின்னர் நாங்களும் உங்களுக்கு உதவுவோமல்லவா?

Edited by சாணக்கியன்

பின்னர் பயணம் மீண்டும் நீடிக்கும்... எங்கள் பயணம் நிறைவடைந்தால் பின்னர் நாங்களும் உங்களுக்கு உதவுவோமல்லவா?

ஆஹா! ஆரம்பித்து விட்டீர்களா உங்கள் வேலையை???

என்ன அழகாக விசத்தை விதைக்கிறீர்கள்!!!

நீங்கள் சொல்வதைத் தான் "அகண்ட தமிழீழம்" என்று சிங்கள அரசு பெயரிட்டு இந்திய ஒருமைப்பாட்டுக்கு வினையாகிவிடும் என

ஒரு பெரும் பொய்யை சொல்லி டெல்லியை இன்றுவரை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

சுதந்திர தமிழீழத்தின் அரசியல் உறுதிப்பாட்டுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்திய ஒருமைப்பாடும் இந்தியாவுடனான நெருங்கிய நட்பும் அவசியம் என்பதில் விடுதலை புலிகள் மிக உறுதியாக இருக்கிறார்கள்.

அதனால் தான் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் நீட்டிய உதவிக்கரங்களையும் விடுதலை புலிகள் இன்று வரை உதறித்தள்ளிய வண்ணம் உள்ளார்கள்!

Edited by vettri-vel

என்ன அழகாக விசத்தை விதைக்கிறீர்கள்!!!

ஆகா தொடங்கீட்டாங்கையா தொடங்கீடாங்க.....

என்னடா வெற்றிவேல் திருந்தீடாரோ....... என்று நம்பி இருக்க அதுக்கிடையில.... !

சரி கடைசி வரியை வெட்டிப்போட்டு மிச்சத்தையாவது அனுப்பி வையுங்க....!

(ஒன்றா வடம்பிடிக்கவும் வேணும், அதுவும் தன்னை மறைக்காம பிடிக்கவும் வேணும்.... முடியலப்பா... முடியல! )

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஈழம் அமைவதுடன் விரைவில் தனித் தமிழ்நாடும் அமையும் என்று மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் கூறியுள்ளார். ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் மதிமுக சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் பேசியது:

இந்திய இறையாண்மையை பிரதமர் மன்மோகன் சிங்கும், தமிழக முதல்வர் கருணாநிதியும் காப்பாற்ற மாட்டார்கள்.

அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவின்படி எம்.பி.க்கள் யாரும் ராஜிநாமா செய்யமாட்டார்கள். பிரதமர் நடவடிக்கை எடுத்துவிட்டார். எனவே திமுக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்யத் தேவை இல்லை என்று கருணாநிதி அதற்கு விளக்கம் தருவார்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்ய வேண்டும். அகிம்சைப் போராட்டம் வெற்றி பெறாததால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தியுள்ளனர். அவர்களைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பது தவறு.

தமிழ்நாடு -தனி நாடு என்று சொல்லும் நாள் வரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடும் விரைவில் மலரும்'' என்றார் கண்ணப்பன்.

tamilwin.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஆட்சியில் இருந்தால் வைகோ- சீமான்- அமீருக்கு சிறை: ஜெயலலிதா எச்சரிக்கை

[புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 09:09 பி.ப ஈழம்] [க.நித்தியா]

தான் ஆட்சியில் இருந்தால் ஆயுதம் ஏந்துவேன் என்றும் பிரிவினைவாதம் கோருவோம் என்றும் பேசுவோரை சிறையில் அடைத்திருப்பேன் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதினம்

அவர்களுக்கு தெரியுமுங்கோ எந்த நேரம் எது கதைக்கவேண்டும் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆட்சியில் இருந்தால் வைகோ- சீமான்- அமீருக்கு சிறை: ஜெயலலிதா எச்சரிக்கை

அப்போ ........ அம்மா வாற தேர்தலிலும் எதிர்க்கட்சி தான் .

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ ........ அம்மா வாற தேர்தலிலும் எதிர்க்கட்சி தான் .

:rolleyes::o:o

வைக்கோ அவர்களும் கலைஞர் பக்கம் வரவேண்டும் என்பதே நம் ஆசை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறிப்பிட்டவர்களை யாராவது தொடர்பு கொண்டு குறித்த கருத்துகளை மீளபெற்றுக்கொள்வதாக அறிக்கை விடும்படி கோர முடியாதா?

அந்த கோரிக்கைகள் அவர்களுக்கு நியாயமானவையாக இருந்த போதும், தற்போதைய எழுச்சியை முனை மழுங்கடித்து இது பயணிக்க வேண்டிய பாதையை மாற்றி விடுமல்லவா!

பின்னர் பயணம் மீண்டும் நீடிக்கும்... எங்கள் பயணம் நிறைவடைந்தால் பின்னர் நாங்களும் உங்களுக்கு உதவுவோமல்லவா?

சாணக்கியன் உங்கள் பதிவு ஒவ்வொன்றுக்கும் கீழே இப்படி எழுதிவைப்பீர்களா தயவு செய்து.

" நான் யாழ்களத்தின் கருத்தியல் போக்கிற்க்கு எதிர்த்திசையில் செல்பவன்" இப்படி இருந்தால் உங்கள் எழுத்துக்களின் பழி யாழ்களத்தைத் தீண்டாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாடு பிரிய வேண்டும் என்பது அவர்களுக்குள்ள பிரச்சனையால் எழ வேண்டியதே அன்றி, ஈழப்பிரச்சனையை மையப்படுத்துவதால் மத்திய அரசு வேறு கோணத்தில் நோக்கும் நிலையாகிவிடும்.

எதற்கெடுத்தாலும் தமிழகம் கஸ்மீராகும், என்ற மாதிரிக் கதைப்பது ஒரு வகைப் பாதிப்பினை ஈழப் போராட்டத்தி;றகுத் தரக் கூடியது. மறுபக்கம் சிங்களக் குள்ளநரிகள் தமிழகம் பிரியப் போகின்றது என்று மத்திய அரசுக்கு மடல் எழுதி, தமிழ்மக்கள் மீதான கொலைத் தாக்குதலை மறைக்கப் பார்க்கின்றார்கள். அதற்குத் தூபம் போடும் விதமாகத் தான் இப்படியான பேச்சுக்கள் அமைந்து விடுகின்றன.

உங்களின் அன்பும், பாசமும் நாம் அறிவோம். அதற்கு எம்மிடம் நன்றி சொல்லிட வார்த்தைகளே இல்லை. ஆனால் உணர்;சசிவசப்பட்டுப் பேசும்போது அது எவ்வித எதிர்மறை விளைவுகளைத் தரும் என்பதையும் உணர்ந்து செய்வீர்கள் என்றால் உங்களுக்கும், எங்களுக்கும் நல்லது.

கதைக்கு இப்படி சொல்லுவார்களே இனி இந்தக் குழந்தை மலையில் இருந்து போட்டாலும் சாகாது என்று இதற்க்காக வழக்கு தொடுக்கவா செய்வார்கள் மலையிலிருந்து போடச் செல்லப்படுவதாக. சொல்லவரும் கருத்தை அழுத்தமாக செல்வதர்க்காக இப்படி சொல்லப்படுவது இயல்பு தமிழில்.

அதேவகையினதே சீமான் போன்றோரின் கருத்துக்களும். ஒட்டு மொத்த ஈழதவர்களின் சாவிலாவது இந்தியதேசநலம் காக்கப்படுவதே நியாயமானது என இந்திய அரசு நினைத்தால் முடிவு இதுதான் என்று செல்லுகின்றார்கள்.

முதலாவது தகவல் உண்மை என்று எடுக்கப்பட்டால்த்தான் இரண்டாவது தகவலும் உண்மையாகும்.

****

வைகோ காலத்திற்கேற்றவாறு பேசத்தவறி விட்டார்.....

தனி ஈழத்தை ஆதரிக்கும் பல தமிழர்கள் தனித்தமிழகத்தை ஆதரிக்கவில்லை... எனக்கும் தனித்தமிழ் நாடு என்ற கோட்பாடு ஏற்புடையதாக இல்லை..

காரணம் தமிழகத்தில் உள்ள சாதிப்பாகுபாடுகள் .... பல வரண்ட மாவட்டங்கள் அம்மாவட்ட மக்கள் பிழைக்க இந்தியாவில் பல மானிலங்களில் வாழும் சூழ்னிலை இப்படி ப்பல ...

மேலும் சிங்களர்கள் கொடுமை புரிந்தது போல் வெளிப்படையாக இனப்பாகுபாட்டு கொடுமை இங்கில்லை...

இப்போதைய குறிக்கோள் தனித்தமிழ் ஈழம்...மட்டுமே .

தனி ஈழத்தை ஆதரிக்கும் பல தமிழர்கள் தனித்தமிழகத்தை ஆதரிக்கவில்லை... எனக்கும் தனித்தமிழ் நாடு என்ற கோட்பாடு ஏற்புடையதாக இல்லை..

இந்த பட்டியலில் முதலில் தலைவரும் அவர் தளபதிகளும் தான் 99 % ஈழத்தமிழர்கள் தனிதமிழ்நாட்டு ஆதரவை விரும்ப்பவில்லை.

யாழ்கள குடும்பத்தில் நடுநிலையாளர்கள் என்ன நிலை எடுப்பார்கள் என்று தெரியவில்லை.....

புலம்பல்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை: விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் தமிழ் துரோகிகள் என்றால், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் தேசத் துரோகிகள் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும் வைகோவையும் அவர் மறைமுகமாக கடுமையாக கண்டித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான செயல்கள் தமிழ்நாட்டில் தற்போது மீண்டும் நடைபெற்று வருகின்றன. இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிரான பல ஆட்சேபகரமான, தேசவிரோத கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

`தனித் தமிழ்நாடு´ என்ற அளவுக்குத் துணிச்சலாகப் பேசியிருக்கிறார்கள் (மதிமுக பொருளாளர் கண்ணப்பன் பேசியது). இத்தகைய பேச்சுக்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. `ஆயுதம் ஏந்தவும் தயார்´ என்ற அளவுக்கெல்லாம் தற்போது பேச ஆரம்பித்துவிட்டார்கள் (மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியது).

இப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரான தேச விரோத கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், நளினி உள்பட சிலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி.

மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்க்கிறார். இப்படிப் போய் பார்க்கலாமா? இது அடுக்குமா?. இப்போது நளினி ஏதோ உரிமைக்காகப் போராடுவது போல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது!.

இது சோனியா காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்தப் பிரச்சினை அல்ல. அவர்களுடைய குடும்பப் பிரச்சினை அல்ல. இது ஒரு நாட்டுப் பிரச்சினை. ஒரு முன்னாள் பாரதப் பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை.

தற்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன். எனது ஆட்சிக் காலத்தில் இது போன்று பேசியவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களை சிறையில் அடைத்தேன்.

தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாகவே தேச விரோத கருத்துகளைப் பேச ஆரம்பித்துவிட்டனர். பொடா இல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை எதிர்ப்பது என்ற கொள்கையில் அதிமுக தொடர்ந்து உறுதியாக உள்ளது. தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கின்ற ஒரே தலைவர் நான் தான்.

பிரபாகரனை நம்பி இலங்கைத் தமிழர்கள் இல்லை. பிரபாகரன் ஒரு அழிவு சக்தி. போர் நிறுத்தம் என்று சொல்லி, ஆயுதங்களையும், தனக்குத் தேவையான பொருட்களையும் சேகரித்துக் கொள்வார்.

விடுதலைப் புலிகள் அமைப்பை நான் தீவிரமாக எதிர்ப்பதற்கு காரணம், அந்த அமைப்பு இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுகிறது. எல்லாவிதமான தேசவிரோத சக்திகளுக்கும் அந்த அமைப்பு ஊக்கம் அளிக்கிறது. முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை இந்திய மண்ணிலேயே, தமிழ் நாட்டு மண்ணிலேயே கொலை செய்த அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு.

இந்தியாவைத் துண்டாட நினைக்கின்ற தேச விரோத அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு, மக்கள் போர் பிரிவு, நக்சலைட், உல்பா, லஷ்கர்-ஏ-தொய்பா, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ போன்ற சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு தொடர்பு இருந்து வருகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் ஆகும். விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் தமிழ் துரோகிகள் என்றால், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் தேசத் துரோகிகள்.

பிரிவினைவாதம், தனித் தமிழ்நாடு போன்ற தேச விரோதச் செயல்களை அதிமுக கடுமையாக எதிர்க்கும். இதில் எந்த விதமான சமரசத்திற்கும் இடமில்லை என்பதை நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

http://tamizachi.com/index.php?page=echoar...amp;article=513

Edited by puspaviji

இதை யார் எழுதியிருப்பார்கள் எண்டு தெரியுது... இருந்தாலும் இதை இங்கு இணைத்தது ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.