Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத்தமிழரின் கொந்தழிப்பால் உண்ணாவிரதத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவித்துள்ளார் அஜித்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜீன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர்.

நேற்று தமிழ்வின் இணையதளத்தில் ஈழத்தமிழருக்காக ஆதரவு வழங்க மறுத்த அஜித் கூறிய இச்செய்தி வெளியான சில மணிநேரங்களில் உலகத்தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த்திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளில் இந்நடிகர்களுக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. "ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு வழங்க மறுத்த நடிகர் அஜீத் நடித்து வெளியாகும் ஏகன் திரைப்படத்தை திரையிட விடமாட்டோம்" என்று கொந்தளித்த ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் சிலவற்றிலும் இறங்கினர். சில இடங்களில் கல்வீச்சு, போஸ்டர் கிழிப்பு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் திட்டமிட்டபடி அக்டோபர் 25 இல் பாரீஸ் நகரில் ஏகன் திரைப்படத்தை வெளியிடமுடியாத சூழல் உண்டாகியுள்ளது.

இவ்வாறு உலகத்தமிழர் ஏகன் திரைப்படத்தை புறக்கணித்ததும் ஏகனை வெற்றிகரமாக திரையிட விரும்பிய, ஈழத்தமிழருக்கு ஆதரவு கொடுக்கமாட்டேன் என முழங்கிய நடிகர் அஜித், ஏதும் செய்ய முடியாத நிலையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்து, “ நடிகர் சங்கம் எடுத்துள்ள உண்ணாவிரத போராட்ட முடிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனவே கட்டாயம் சென்னையில் நவம்பர் 1ம் தேதி நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் நானும் கலந்துகொள்வேன். ஈழத்தில் அப்பாவித்தமிழர்கள் தாக்கப்படுவதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிப்பேன்” என ஈழத்தமிழருக்கு எதிராக பேசிய நடிகர் அஜீத் நக்கீரன் செய்தியாளார் லெனின் அவர்களுக்கு உறுதி கூறினார்.

தமது தல நடித்த ஏகன் வெற்றிகரமாக திரையிட விரும்பிய ரசிகர் மன்றத்தினர் "திரையுலகில் இருக்கும் ஒரு சில விஷமிகள்தான் இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பி உள்ளனர் " என்று கூறி வருகின்றனர்

www.tamilwin.com

Edited by kuddipaiyan26

தமிழக உறவுகளின் நடவடிக்கைகளுக்கு அனுசரனை சேர்க்காதவர்களை புறக்கணிக்க வேண்டியது புலம்பெயர் தமிழர்களின் கடமை...!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"அடடா " ஒருமாதிரி 'தல 'ஆட்டிட்டீங்கன்னு சொல்லுங்க"...

உறவுகளே ஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள் தியாகி திலீபன் அண்ணா சொன்னது போல இது மக்கள் புரட்சி ஆகினால் விடிவு மிக விரைவில்"

ஒன்றுபடுங்கள்...வெற்றி நமதே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இவராய் எடுத்த முடிவு அல்ல மாறாக மக்களின் கொந்தளிப்பால் எடுத்த முடிவு இதனால் ஒண்றுமே ஆகப்போவதில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
nak1.jpg

அண்ணைமார்,

கேட்பதாக குறை நினைக்க வேண்டாம். இன்னும் எத்தினை நாளைக்கு அஜித்தின் செய்தியை ஊர்ப்புதினத்தில நாலைஞ்சு விதமாக இணைத்து காலத்தை ஓட்டப்போறீங்கள்?

அஜித் நவம்பர ஒன்னாம் திகதி உண்ணாவிரதம் இருக்கிறது ஒருபுறம் இருக்கட்டும். நீங்கள் என்ன செய்யபோறீங்கள்? தாயக மக்களுக்காக நீங்கள் வீட்டில ஒரு நேரம் உண்ணாவிரதம் இருக்கமுடியுமா? யாழ் இணையத்தில நேசக்கரம் என்று ஒரு திட்டம் இருக்கிறது. அதற்கு நீங்கள் ஆதரவு கொடுத்து தாயக மக்களுக்கு உதவ முடியுமா?

அஜித் பிறகு உண்ணாவிரதம் இருக்கட்டும். நாங்கள் எல்லாரும் தீபாவளி அண்டைக்கு அசித்திண்ட படம் பார்த்து குசியாக இருப்பம் என?

உலகத்தமிழர் எண்டு இஞ்ச சொல்லப்படுறது யார்? தமிழ்வின் இணையமா? இல்லாட்டிக்கு இதர வெட்டி ஒட்டல் ஊடகங்களா? உங்கள் ரவுடீசத்துக்கு வெளிநாட்டில் வாழுற எத்தனை சதவீதம் தமிழ் மக்கள் ஆதரவு தந்தார்கள்? எத்தனை பேருக்கு இப்படி ஒரு செய்தியை பற்றி தெரியும்?

மூடர்கள் மாதிரி எல்லாத்துக்கும் உலகத்தமிழர் உலகத்தமிழர் எண்டுற சொற்பதத்தை பாவிச்சால் நாளைக்கு அந்த சொல்லிற்கு இருக்கிற மரியாதையே இல்லாமல் போய்விடும். வேண்டுமானால் வெளிநாட்டில வாழுகின்ற சில தமிழ் சினிமா அடிமைகள் எண்டுற சொற்பதத்தை பாவியுங்கோ.

சரி அப்ப எல்லாரும் தீபாவளிக்கு அசித்திண்ட படம் பார்த்து கறுபூரம் காட்டி பூ போட்டு கும்பிடுங்கோ என. உங்கட தலைய மறந்துபோட்டு யாருண்டையும் தலைய தலை தலை எண்டு சொல்லிகொண்டு இருங்கோ. விரைவில உங்கட தலையில காக்கா பீச்சிபோட்டு போகட்டும்.

எங்கே நாம் செல்கின்றோம்????????

துரோகிகளை, எதிரிகளை பெருக்கிச் செல்கின்றோமா?????

உறவுகளே சினிமா வெறும் பொழுது போக்கு ஊடகம் மாத்திரமல்ல. சினிமா மூலம் உங்களின் சிந்தனைகள் நம்பிக்கைகள் நடத்தைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஏனைய சினிமா உறவுகளிற்கு இருக்கும் உணர்வு இவருக்கு ஏன் இல்லாது போனது? தாயகத்தில் நடந்தேறும் அவலங்கள் பற்றிய விபரங்கள் அவை அடங்கிய இறுவெட்டு இவரிற்கும் அர்சுனுக்கும் கிடைக்கவில்லையா?

அஜித்தின் மனமாற்றத்திற்கு காரணம் உங்களிடம் இருந்து அவருக்கு லட்சகணக்கில் கிடைக்கும் பவுண்ஸ்களுக்கும் யூரோக்களுக்கும் டொலர்களுக்கும் கேள்விக்குறியாகிவும் என்ற அச்சமே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

Times of India மற்றும் Decan இல் உண்ணாவிரதம் பற்றியும் இலங்கைத்தமிழர் பற்றியும் மழுப்பலாக கொடுத்த பதில் பற்றி சிந்தியுங்கள்.

அஜித் அர்சுன் போன்றவர்கள் நடித்த படங்கள் அதன் மூலம் உங்களிற்கு சொல்லப்பட்ட செய்திகள் பற்றி சிந்தியுங்கள்.

இன்று உங்கள் பொருளாதார பலம் மூலம் அஜித்தை உண்ணாவிரதத்திற்கு பெயரளவிலேனும் பங்கு பற்ற உடன்பட வைத்திருக்கிறீர்கள்.

இது உங்களின் இன உணர்வு சுயமரியாதைக்கும் தன்மான எழுச்சிக்கும் பொருளாதார பலத்திற்கும் கிடைத்த ஆரம்ப குறியீட்டு வெற்றியாக கொள்ளுங்கள்.

உங்கள் எழுச்சியும் சிந்தனைத் தெளிவும் அடுத்த நிலைக்கு சென்று எமது பொருளாதார பலத்தை பயன்படுத்தி எமது சமூகத்திற்கு ஆரோக்கியமான தேவையான படைப்புகளை உருவாக்குவதற்குரிய அறிவியல் ரீதியான வழிகாட்டலை வழங்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

எவ்வாறு சினிமா பொழுதுபோக்கு என்ற போர்வையில் கொலிவூட் சினிமா இஸ்லாமியர்கள் அரபியர்கள் பலஸ்தீனர்கள் பற்றி தவறான கருத்தியலை விதைத்தது என்று பின்வரும் ஆவணத்தில் ஆழமாக சொல்லப்படுகிறது.

இறுதியாக இந்தச் சவாலை ஆர்பாட்டம் துண்டுபிரசுரம் ஒட்டுதல் வன்முறை என்று எதிர்கொள்ளாது எவ்வாறு அறிவியல்ரீதியில் இன்று எதிர்கொள்கிறார்கள் என்பதை கவனியுங்கள். எமது பொருளாதார பலத்தை வைத்தே எமது மனிதவளம் எதிர்காலச் சந்ததி சீரழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். இது உங்களின் எழுச்சியின் அடுத்த கட்டமாக இருக்கட்டும்.

செய்ய வேண்டியவை பல, பல, ..... அவற்றை நாம் செய்தோமா? பதில் இல்லை!!!

கடந்த இரு நாட்களாக இங்கு படத்தை புறக்கணிக்க சொல்லி பல தடவை TEXT MESSAGE யாரோ அனுப்புகிறார்கள். அவர்களுக்கு அடேயப்பா நான் படங்கள் பார்த்தே பல வருடங்களாகிறது என்று சொல்ல முடியாதநிலை!! இது என்ன படத்துக்கான விளம்மரமா??????? நிச்சயமாக புறக்கணிப்பாக தெரியவில்லை!!!! :D

இந்த அசித் போன்றவர்களை கட்டாயப்படுத்தி உண்ணாவிரதம் இருத்தி நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை, கடசியாக உண்ணாவிரதம் இருந்து அவன் தான் நன்மை அடய போகிறான், இந்த செய்தி தமிழ்நாட்டில் இருந்து தான் கிளம்பிருக்கு

இவர்களின் நிஜ முகம் வெளிபட்டு கொண்டிருக்கு, நல்ல ஆரம்பம் , பலர் அறியாமல் இருக்கலாம் , அவர்களிடம் எடுத்து செல்வோம்

புறக்கணிப்பு புறக்கணிப்புதான். மானம் ரோசம் உள்ள எந்த தமிழனும் அவனுயை திரைப்படத்திற்கு செல்லக்கூடாது. அப்படி செல்பவர்கள் தூய தமிழில் சொல்வதனால் ஒழுங்கான பிறப்பு பிறக்கவில்லை என்று அர்த்தம். அந்த திரைப்படத்தை வெளியிடுபவர்களும் அவ்வாறே கருத்தில் கொள்ளப்படுவர். இது எனது தனிப்பட்ட கருத்து. காரணம் யாரும் கட்டாயப்படுத்தி சுயநலத்திற்காக எமக்கு ஆதரவு வழங்க வேண்டிய தேவை இல்லை. இதை புரிந்தாவது பணத்திற்காக எதையும் துறக்கும் ஜென்மங்கள் திருந்திக்கொள்ளட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிங்கள் எல்லோரும் பணம்சேர்பதற்காகத்தானே தாய்நாட்டைவிட்டு பரதேசிகளாகஓடிவந்தநீர்கள்....ம

கதைக்கவேண்டும் என்று கதைகக்கூடாது தோழரே

அப்படி கிளப்பிவிட்டால் எத்தனை ஆயிரம் நடிகர்கள் இருக்க உப்புச்சப்பில்லாத அர்ஜுன் மற்றும் அஜித்தை மையம் வைத்து கிளப்ப வேண்டும்.

நான் ஏன் நீங்கள் கூட உழைக்கத்தான் ஓடிவந்தோம் பரதேசிகளாக ஆனாலும் எல்லோரும் இன்றுவரை பரதேசியாக இல்லை மாறி தேசத்திற்கு நிறையவே செய்கின்றார்கள் சில சினிமா பைத்திய பரதேசிகள்தான் இப்படி கதை விட்டுக்கொண்டிருக்கின்றார்

உறவுகளே சினிமா வெறும் பொழுது போக்கு ஊடகம் மாத்திரமல்ல. சினிமா மூலம் உங்களின் சிந்தனைகள் நம்பிக்கைகள் நடத்தைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஏனைய சினிமா உறவுகளிற்கு இருக்கும் உணர்வு இவருக்கு ஏன் இல்லாது போனது? தாயகத்தில் நடந்தேறும் அவலங்கள் பற்றிய விபரங்கள் அவை அடங்கிய இறுவெட்டு இவரிற்கும் அர்சுனுக்கும் கிடைக்கவில்லையா?

அஜித்தின் மனமாற்றத்திற்கு காரணம் உங்களிடம் இருந்து அவருக்கு லட்சகணக்கில் கிடைக்கும் பவுண்ஸ்களுக்கும் யூரோக்களுக்கும் டொலர்களுக்கும் கேள்விக்குறியாகிவும் என்ற அச்சமே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

Times of India மற்றும் Decan இல் உண்ணாவிரதம் பற்றியும் இலங்கைத்தமிழர் பற்றியும் மழுப்பலாக கொடுத்த பதில் பற்றி சிந்தியுங்கள்.

அஜித் அர்சுன் போன்றவர்கள் நடித்த படங்கள் அதன் மூலம் உங்களிற்கு சொல்லப்பட்ட செய்திகள் பற்றி சிந்தியுங்கள்.

இன்று உங்கள் பொருளாதார பலம் மூலம் அஜித்தை உண்ணாவிரதத்திற்கு பெயரளவிலேனும் பங்கு பற்ற உடன்பட வைத்திருக்கிறீர்கள்.

இது உங்களின் இன உணர்வு சுயமரியாதைக்கும் தன்மான எழுச்சிக்கும் பொருளாதார பலத்திற்கும் கிடைத்த ஆரம்ப குறியீட்டு வெற்றியாக கொள்ளுங்கள்.

உங்கள் எழுச்சியும் சிந்தனைத் தெளிவும் அடுத்த நிலைக்கு சென்று எமது பொருளாதார பலத்தை பயன்படுத்தி எமது சமூகத்திற்கு ஆரோக்கியமான தேவையான படைப்புகளை உருவாக்குவதற்குரிய அறிவியல் ரீதியான வழிகாட்டலை வழங்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

எவ்வாறு சினிமா பொழுதுபோக்கு என்ற போர்வையில் கொலிவூட் சினிமா இஸ்லாமியர்கள் அரபியர்கள் பலஸ்தீனர்கள் பற்றி தவறான கருத்தியலை விதைத்தது என்று பின்வரும் ஆவணத்தில் ஆழமாக சொல்லப்படுகிறது.

இறுதியாக இந்தச் சவாலை ஆர்பாட்டம் துண்டுபிரசுரம் ஒட்டுதல் வன்முறை என்று எதிர்கொள்ளாது எவ்வாறு அறிவியல்ரீதியில் இன்று எதிர்கொள்கிறார்கள் என்பதை கவனியுங்கள். எமது பொருளாதார பலத்தை வைத்தே எமது மனிதவளம் எதிர்காலச் சந்ததி சீரழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். இது உங்களின் எழுச்சியின் அடுத்த கட்டமாக இருக்கட்டும்.

கிண்டலும் கேலியும் இல்லாமல் எழுதும் வேளைகளில் எவ்வளவு சிறப்பாக, சிந்தனையை தூண்டும் விதமாக எழுதுகிறீர்கள்.

இது போல் நிறைய தொடர்ந்தும் எழுத வாழ்த்துகள்!!!

(பி.கு.: இன்று அடித்த குளிசையையே தொடர்ந்தும் அடிக்கவும்!!! :D )

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடித்து அப்பம் தீத்த (ஊட்ட) வேண்டிய நிலை. வலிந்து இழுத்தாலும் எம் பிரச்சினை தெரியவரும் தானே! யார் குற்றியும் அரியாகட்டும். சோர்வு வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அழிவிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல் உலகத்தமிழினம் ஒன்று பட்டு ஓரணியில் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது,மக்கள் சக்தி மகத்தானது, ஒரு விடுதலைக்கு மக்கள் புரட்சி என்பது முக்கியம் அது மெல் மெல்ல உலகத்தமிழரில் கருக்கொள்கிறது விடுதலை தொலைவிலில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

<_< யாருக்கு வேண்டும் இந்தக் "கட்டாயப்படுத்தப்பட்ட " ஆதரவு ? மனதால் இல்லாமல் வெறும் பொருளாதாரக் காரணங்களால் அச்சுருத்தப்படு வரும் ஒருவனின் ஆதரவு என்பது எமக்குத் தேவைதானா? இதில் நாம் எதையுமே சாதித்து விட்டதாக நான் நினைக்கவில்லை. புறக்கணிப்பு என்று தொடங்கிய நாங்கள், பின்னர் அஜித் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடி வரும்போது எதற்காக ஏற்றுக்கொண்டோம்?

அவன் இன்று மட்டும் உங்கள் பணத்துக்காகப் பயந்து ஆதரவு தருகிறேன். எனது படத்தைத் தயவுசெய்து திரையிட அனுமதி தாருங்கள் என்று கேட்டுவிட்டு, நாளையே இன்னும் ஒருபடி மேலே போய் "ஜெயா, சோ, சாமி..." போன்றவர்களின் நிலையெடுத்தால் என்ன செய்யப்போகிறோம் ? அப்போது யாருக்கு நட்டம் ?

ரஜினி , கமல் போன்ற திரையுலக ஜாம்பவான்களின் ஆதரவு எப்போதாவது எமக்குக் கிடைத்ததுண்டா? அனால் அவர்கள் எத்தனை முறை எம்மைத் தமது படங்கள் மூலமாகவும், பேச்சுக்கள் மூலமாகவும் கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள்? எமது பண பலத்தைக்கொண்டு அவர்களை எமது வழிக்குக் கொண்டுவர இதுவரை எம்மால் முடியவில்லையே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-ஆக்ஷன் கிங் அர்ஜுன் விளக்கம்

ஏகன் படம் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் லண்டன் வாழ் தமிழர்கள். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் நிறுவனத்தின் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இப்படி ஒரு சம்பவம் நடப்பதற்கான பின்னணி என்ன?

நடிகர்கள் அர்ஜுன்இ அஜீத் இருவரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்தவிருக்கும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று வெளிவந்த செய்திகள்தான். பொதுவாகவே நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளில் அதிகம் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருப்பார் அஜீத். இந்த முறையும் அப்படி இருந்துவிடுவாரோ என்று தப்பு கணக்கு போட்டார்களோ என்னவோ? இப்படி ஒரு செய்தியை கிளப்பி விட்டார்கள். ஆனால்இ லண்டன் சம்பவத்தை கேள்வியுற்ற அஜீத் மிகவும் வேதனையடைந்திருக்கிறார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்தவிருக்கும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதாக அறிவித்திருக்கிறாராம். http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...ober/261008.asp

இந்த பிரச்சினை குறித்து தமிழ்சினிமா.காம் செய்தியாளரிடம் பேசிய அர்ஜுன்இ தனது கவலைகளை பகிர்ந்து கொண்டார். சாப்பிடுவது தமிழ்நாட்டில். வாழ்வது தமிழர்களின் காசில். அப்படியிருக்கும்போது இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று ஒருபோதும் என்னால் சொல்ல முடியாது. அந்தளவுக்கு நன்றியில்லாதவன் அல்ல நான். அதுமட்டுமல்லாமல்இ ஈழத்திலிருந்து வெளியிடப்படும் புகைப்படங்களையும்இ போர்க்கள காட்சிகளையும் பார்க்கும் போது இன உணர்வையெல்லாம் தாண்டிஇ மனிதராக பிறந்த எல்லாருக்கும் கண்ணீர் வரும். சமீபத்தில் நடந்த ஒகேனக்கல் பிரச்சனையின் போதுகூடஇ நான் காலையில் இருந்து உண்ணாவிரதம் முடியும் நேரம் வரை மேடையில் இருந்தேன். உண்ணாவிரத தினத்தன்று எனக்கு அறுவடை படப்பிடிப்பு இருக்கிறது. இருந்தாலும்இ நான் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளப் போவதால் என்னால் படப்பிடிப்புக்கு வர இயலாது என்பதை முன்கூட்டியே சொல்லிவிட்டேன். உண்மை இப்படியிருக்கும் போது இந்த செய்தி எப்படிஇ யாரால் கிளப்பிவிடப்பட்டது என்பதே தெரியவில்லை இவ்வாறு உருக்கமாக பேசினார் அர்ஜுன்.

ஆகஇ உண்ணாவிரதத்தில் அர்ஜுன்இ அஜீத் இருவரும் கலந்து கொள்வார்கள் என்பது மட்டும் உறுதி.

-ஆர்.எஸ்.அந்தணன்

நல்ல வேளை சிவாஜீ போல மீண்டும் கரி பூசப்படுமோ என்று நினைத்தேன் ஆனால் ஒரு நடிகரை வெருட்டி வரவைத்த வெற்றி சரியானதா என்று தெரியவில்லை........

நல்ல வேளை சிவாஜீ போல மீண்டும் கரி பூசப்படுமோ என்று நினைத்தேன் ஆனால் ஒரு நடிகரை வெருட்டி வரவைத்த வெற்றி சரியானதா என்று தெரியவில்லை........

உவர யார் வரச்சொன்னது?? புறக்கணிக்க தான் கோரினார்கள், யாரும் வர சொல்லவில்லை. எதிர்ப்ப பாத்திட்டு தானாக வாறானாக்கும்? சுயநலத்துக்கு.

ஒரு வருசமா பட்டிணி கிடந்து உடம்ப குறைச்சனான் எண்டு பில்டப் கொடுக்குறவர்கள் தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதணாலதான் உங்களிற்கு தமிழீழம் இன்னும் கிடைக்கவில்லை.. யாரோகிளப்பிய வதந்தியைநம்பி குற்றம் செய்யதவர்களுக்கு தன்டனை கொடுப்பது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி ரஜனி வராவிட்டால் எம்மவர்கள் எந்திரனை புறக்கணிப்பார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.