Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஏகன் ரிலீஸான தியேட்டரில் திரையை கிழித்து நாசம் ,சுவிஸ் நாட்டில் ஏகன் திரைப்படம் ரத்து,

Featured Replies

eekan.jpg

தீபாவளிப் படங்களில் அனைவராலும் பெரிதும் (குறிப்பாக அஜித் ரசிகர்களால்) எதிர்ப்பார்க்கப்பட்ட மிகப்பெரிய எண்டர்டெய்ன்மெண்ட் ஏகன் . இலங்கையிலும் ஏகன் கொண்கோர்ட் திரையரங்கில் 25-10-2008 காலை ரிலீஸ் செய்துள்ளார்கள்.

படம் ஓடிய அரைமணி நேரத்திற்குள் படம் பார்த்துக் கொண்டிருந்த கும்பல் ஒன்று கூச்சலிட்டு , அடிதடியில் இறங்கி திரையை நாசப்படுத்தி விட்டார்கள். பிறகு போலிஸ் வந்தவுடன் தான் நிலைமை கட்டுக்குள் வந்தது.

இலங்கையில் ஏகனை திரையிட உரிமை பெற்ற தியேட்டர் கொண்கோர்ட் தான். இச் சம்பவத்தால் தமிழ் படத்தை திரையிட அனைத்து தியேட்டர்களும் பயப்படுகின்றன.

சுவிஸ் நாட்டில் ஏகன் திரைப்படம் ரத்து

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜுன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர்.

நேற்று முந்தினம் தமிழ்வின் இணையத்தளத்தில் ஈழத் தமிழருக்காக ஆதரவு வழங்க மறுத்த அஜித் கூறிய இச்செய்தி வெளியான சிலமணி நேரங்களில் உலகத் தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனையடுத்து ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ் நாடுகளில் புலப்பெயர் தமிழ்மக்கள் 25-10-2008 சனிக்கிழமை அன்று வெளியாகவிருந்த ஏகன் திரைப்படத்தை திரயிடவிடமாட்டோம் என்று ஆர்பரித்ததுடன் நடிகர் அஜித் உண்ணாவிரதத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், சுவிஸ் வாழ் தமிழர்கள் ஏகன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்க மறுத்து கொந்தளித்தனர்.

இம்மக்களின் கொந்தளிப்பைக் கண்டு ஏகனை விநியோகம் செய்த IMV ஸ்தாபனத்தினர் இத்திரைப்படத்தை திரையிடமாட்டோம் என மக்களுக்கு உறுதிமொழி அளித்து அத்திரைப்படத்தை ரத்து செய்ததோடு மக்களின் நன்பதிப்பையும் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக சுவிஸ் திரையரங்குகளில் ஏகன் திரைப்படத்தை வெளியிட இருந்தவரான, கஜன் என்பவரை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் தமிழ்வின் இணையத்தளத்திர்கு கூறியதாவது"

"ஈழத்தமிழருக்கு ஆதரவு வழங்கி, நடிகர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உண்னாவிரத போராட்டத்தில் பங்கேற்க மறுத்த நடிகர் அஜித் நடித்த ஏகன் திரைப்படத்தை வெளியீடு செய்யகூடாது என சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் கொந்தளித்ததை அடுத்தே இவ்வாறு முடிவுசெய்துள்ளோம்" எனக் கூறினார்.

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103

இலங்கையிலும் ஏகன் கொண்கோர்ட் திரையரங்கில் 25-10-2008 காலை ரிலீஸ் செய்துள்ளார்கள்.

படம் ஓடிய அரைமணி நேரத்திற்குள் படம் பார்த்துக் கொண்டிருந்த கும்பல் ஒன்று கூச்சலிட்டு , அடிதடியில் இறங்கி திரையை நாசப்படுத்தி விட்டார்கள். பிறகு போலிஸ் வந்தவுடன் தான் நிலைமை கட்டுக்குள் வந்தது.

இலங்கையில் ஏகனை திரையிட உரிமை பெற்ற தியேட்டர் கொண்கோர்ட் தான். இச் சம்பவத்தால் தமிழ் படத்தை திரையிட அனைத்து தியேட்டர்களும் பயப்படுகின்றன.

என்னால இதை நம்ப முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு தகவலை நானும் கேள்விப்படவில்லை. கொன்கோட் என்பது சிங்கள பிரபல்ய நிறுவனமான எதிரிசிங்கவின் சொத்தாகும். அது மிகவும் அரசியல் செல்வாக்கும் மிகுந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்க்கு ஏதோ பின்னணி இருக்கிறது போல் தோன்றுகிறது தமிழகத்தில் நடைபெற இருக்கும் நடிகர்களின் போராட்டத்தை திசை திருப்ப நடப்பது போல் இருக்கிறது

கொழும்பில் அத்தனை பாதுகப்பான இடத்தில் இப்படி நடைபெறுவதற்கு சாத்தியம் இல்லை இது திட்ட மிட்ட சதி

  • தொடங்கியவர்

ஏகன் படம் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் லண்டன் வாழ் தமிழர்கள். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் நிறுவனத்தின் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இப்படி ஒரு சம்பவம் நடப்பதற்கான பின்னணி என்ன?

நடிகர்கள் அர்ஜுன், அஜீத் இருவரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்தவிருக்கும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று வெளிவந்த செய்திகள்தான். பொதுவாகவே நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளில் அதிகம் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருப்பார் அஜீத். இந்த முறையும் அப்படி இருந்துவிடுவாரோ என்று தப்பு கணக்கு போட்டார்களோ என்னவோ? இப்படி ஒரு செய்தியை கிளப்பி விட்டார்கள். ஆனால், லண்டன் சம்பவத்தை கேள்வியுற்ற அஜீத் மிகவும் வேதனையடைந்திருக்கிறார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்தவிருக்கும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதாக அறிவித்திருக்கிறாராம்.

இந்த பிரச்சினை குறித்து தமிழ்சினிமா.காம் செய்தியாளரிடம் பேசிய அர்ஜுன், தனது கவலைகளை பகிர்ந்து கொண்டார். சாப்பிடுவது தமிழ்நாட்டில். வாழ்வது தமிழர்களின் காசில். அப்படியிருக்கும்போது இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று ஒருபோதும் என்னால் சொல்ல முடியாது. அந்தளவுக்கு நன்றியில்லாதவன் அல்ல நான். அதுமட்டுமல்லாமல், ஈழத்திலிருந்து வெளியிடப்படும் புகைப்படங்களையும், போர்க்கள காட்சிகளையும் பார்க்கும் போது இன உணர்வையெல்லாம் தாண்டி, மனிதராக பிறந்த எல்லாருக்கும் கண்ணீர் வரும். சமீபத்தில் நடந்த ஒகேனக்கல் பிரச்சனையின் போதுகூட, நான் காலையில் இருந்து உண்ணாவிரதம் முடியும் நேரம் வரை மேடையில் இருந்தேன். உண்ணாவிரத தினத்தன்று எனக்கு அறுவடை படப்பிடிப்பு இருக்கிறது. இருந்தாலும், நான் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளப் போவதால் என்னால் படப்பிடிப்புக்கு வர இயலாது என்பதை முன்கூட்டியே சொல்லிவிட்டேன். உண்மை இப்படியிருக்கும் போது இந்த செய்தி எப்படி, யாரால் கிளப்பிவிடப்பட்டது என்பதே தெரியவில்லை இவ்வாறு உருக்கமாக பேசினார் அர்ஜுன்.

ஆக, உண்ணாவிரதத்தில் அர்ஜுன், அஜீத் இருவரும் கலந்து கொள்வார்கள் என்பது மட்டும் உறுதி.

-ஆர்.எஸ்.அந்தணன்

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...ober/261008.asp

ஜேர்மனி திரையரங்குகளில் ஏகன் தொடர்ந்தும் திரையிடப்படுவதை அவதானிக்க முடிகிறது. தயவுசெய்து உங்கள் எதிர்ப்பினை உரியவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்

திரையிடுபவரின் மின்னஞ்சல்

எங்கு செல்கிறோம் என்ற திசை தெரியாத பயணம்!!!!

Edited by Nellaiyan

ஜேர்மனி திரையரங்குகளில் ஏகன் தொடர்ந்தும் திரையிடப்படுவதை அவதானிக்க முடிகிறது. தயவுசெய்து உங்கள் எதிர்ப்பினை உரியவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்

திரையிடுபவரின் மின்னஞ்சல்

தேவைதானா??????????????????????????

தற்போது தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதை பயன்படுத்தி, சில ஆட்டு மந்தைகள் தவறாக வழி நடத்த தொடங்கி விட்டன போல!!!!

வேதனை!!!

Edited by Nellaiyan

என்னால இதை நம்ப முடியவில்லை.

நீங்கள் சொல்வது சரியானது. சிலர் வேண்டுமென்று புரளிகளைக் கிளப்பிவிட்டு தமது இணையத்தளங்களை பிரபலமாக்கவே பாடுபடுகின்றார்கள்.

படம் ஓடிய அரைமணி நேரத்திற்குள் படம் பார்த்துக் கொண்டிருந்த கும்பல் ஒன்று கூச்சலிட்டு , அடிதடியில் இறங்கி திரையை நாசப்படுத்தி விட்டார்கள். பிறகு போலிஸ் வந்தவுடன் தான் நிலைமை கட்டுக்குள் வந்தது.

குறிப்பிட்ட இந்தச் செய்தி சுவிசிலுள்ள இணையத் தளங்களில் வராமல் ( ஏகன் திரைப்படம் திரையிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள்) குறிப்பிட்ட இந்த இணையத் தளத்தில் மட்டுமே வந்தது விந்தையிலும் விந்தை.

உலகத்தமிழனின் ஆதரவினால் தான் இந்திய திரையுலகத்தைச் சேர்ந்தோர் தங்கள் தயாரிப்புக்களை நல்ல இலாபமாக விற்பனை செய்து வருகின்றனர். இன்று இலங்கை தமிழனுக்கு ஓர் அவலம் நேரும் போது இந்திய திரையுலகமே ஒன்று திரண்டு நின்று அதனை எதிர்த்து குரல் கொடுக்கும் போது சிலர் அதிலிருந்து நளுவ நினைப்பது எமக்கு வேதனையை தருகின்றது. அதனால் தான் அப்படிப்பட்டவர்களின் நடிப்பில் வெளிவரும் படங்களை புறக்கணிக்க நினைக்கின்றோம். அஜித்தும் அர்ஜீனும் என்ன தான் சமரசம் கூறினாலும் சீமானுக்கும், அமீருக்கும், பாரதிராஜாவுக்கும், சேரனுக்கும் வடிவேலுவுக்கும், ரீ.ராஜேந்தருக்கும் வந்த உணர்வு ஏன் இவர்களுக்கும் முன்னர் வரவில்லை?

Edited by vidivelli

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதணாலதான் உங்களிற்கு தமிழீழம் இன்னும் கிடைக்கவில்லை.. யாரோகிளப்பிய வதந்தியைநம்பி குற்றம் செய்யதவர்களுக்கு தன்டனை கொடுப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மையா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொன்கோர்ட் திரையரங்கில் இது தமிழ் உணர்வாளர்களால் நடந்திருக்குமா என்பது சந்தேகத்துக்குரியது? இங்கு பல சிங்களவர்களும் முஸ்லீம் மக்களும் படம்பார்க்க வருவார்கள் அவர்கள் அங்கு இருக்கும் போது தமிழர்கள் ஏதாவது செய்ய முற்பட்டால் அது உடனே வெளியில் தெரிவதற்கும் சாத்தியங்கள் உள்ளன அத்தோடு அங்கு பணிபுரியும் பெரும்பாலானோர் சிங்களவர்கள் அவர்கள் படம் தொடங்கியவுடன் அரங்கத்திற்குள்ளேயே நிற்பார்கள் அதை எல்லாம் மீறி நடப்பது ????? :lol::lol:

நண்பர் ஒருவரிடம் விசாரித்தபோது அப்படியான சம்பவம் நடைபெற்றதாக தகவல் இல்லை என்றுதான் கூறினார். கொன்கோர்ட்டில் மட்டும் படம் ஓடவில்லை. சினிசிட்டியிலும் ஒடுகின்றது. இது சிங்களத்தின் விசமப்பிரச்சாரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி எல்லாம் பரப்புறாங்க புரளியை

Edited by வாசகி

melbourne நகரில் சனிக்கிழமை ரத்தாகியதாக அறிந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

கொன்கோர்ட் திரையரங்கை சேதமாக்கியதாக ஐ.பி.சி. செய்தியில் சொன்னதாக அறிந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி உண்மையாக இருந்தால்..

தமிழக திரைப் படைப்பாளிகளின் எழுச்சியை பிளவுபடுத்தி மட்டுப்படுத்த அரங்கேற்றப்படுகிற சதி வேலையாகக் கூட இருக்கலாம்.

கடைசியில்.. தேங்காய் உடைப்பு, எதிர்ப்பு புலி எதிர்ப்புக்குப் பயன்பட்ட மாதிரி இதுவும் ஆகிவிட்டதோ..!?? :lol:

கொன்கோர்ட் திரையரங்கை சேதமாக்கியதாக ஐ.பி.சி. செய்தியில் சொன்னதாக அறிந்தேன்

IBC காரர் செய்தி எடுக்கும் தளங்களில் முக்கிய பங்கு யாழ்களம் வகிக்கின்றது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப இஞ்சை வரவர எந்த செய்தியை நம்புறதெண்டு ஒண்டும் தெரியேல்லையப்பா?

வணக்கம் குமாரசாமி அண்ணை,

இப்ப இணைய உலகில எல்லாம் மலிஞ்சிட்டிது. ஒரு புள்ளி நிறுவனம் - டாம் காம் ஆரம்பிப்பதற்கு அமெரிக்க $1.50 மட்டும் போதுமானது ஒரு வருடத்துக்கு. நீங்கள் $1.50 க்கு ஒரு புள்ளிநிறுவனத்தை பதிவு செய்வதோடு இலவச Hosting ம் பெற முடியும்.

மிச்சம்... செய்ய வேண்டியது என்ன? கூகிழில் தேடல் செய்துவிட்டு.. வெட்டி ஒட்டவேண்டியது. பின்னர்? உங்கள் இணையத்தை ஒரு தமிழ் ஊடகமாக பிரச்சாரம் செய்து யாழில, மற்றும் இதர வலைப்பூக்களில ஒட்ட வேண்டியது.. பின்னர்? உங்கட ஊடகத்துக்கு செய்தியாளர்கள் உலகெங்கும் இருப்பதான பிரமையை ஏற்படுத்த வேண்டியது...

இப்ப இதுதான் நடக்கிது. இணையத்தில குப்பையாக தாயக போராட்டத்தை பாவிச்சு பிழைப்பு செய்யும் புள்ளிநிறுவனங்கள் ஆயிரக்கணக்கில வந்து விட்டன. முடிவு?

எல்லாம் சிதம்பர சக்கரமாகி.. தலையை கொண்டுபோய் சுவருடன் முட்டிக்கொள்ள வேண்டியதுதான்.

நான் கூட ஆறு புள்ளிநிறுவனங்கள் வைத்து இருக்கின்றேன். தமிழில் எதுவும் இல்லை. தாயகம் சம்மந்தமான விசயம் எதுவும் இல்லை. எதிர்காலத்தில வேறு ஏதாவது வியாபார தேவைக்கு பயன்படக்கூடும் என்று வைத்து இருக்கின்றேன். தவிர பரீட்சார்த்தமாக சில இணையம் சம்மந்தமான விடயங்களை பழகுவதற்காகவும் அவற்றை பயன்படுத்துகின்றேன்.

உங்களுக்கு விருப்பம் என்றால் சொல்லுங்கோ..

குமாரசாமி.காம்

குமாரசாமி.நெட்

குமாரசாமி.ரீவி

குமாரசாமி.ஆர்க்

குமாரசாமி.டீஈ

குமாரசாமி.இன்போ

எண்டு இவ்வளவத்தையும் சுமார் அமெரிக்க $65 சொச்சத்துக்கு வாங்கித்தாறன். அப்ப பிறகு நீங்களும் பண்ணிப்பாருங்கோவன்..

யாழ் நிருவாகத்துக்கு இப்ப யார் என்னத்த கொண்டுவந்து ஒட்டினாலும் கவலை இல்லை. உங்களுக்கு தெரியும்தானே.. ஊரில வெட்டி ஒட்டல் மூலம் மாமரம், பலா மரம் வளர்க்கிறது. அது மாதிரித்தான் இதுவும். வெட்டோ வெட்டு எண்டு வெட்டி ஒட்டோ ஒட்டு எண்டு ஒட்டி இப்ப இதுகள் எல்லாம் வளந்து பெரிய ஆலமரம் மாதிரி விருட்சம் விட்டு நிக்கிது.

இனி தமிழ் ஊடகங்களிண்ட நம்பகத்தன்மை.. நடுவுநிலமை... உண்மைநிலமை எல்லாம் அரோகராதான்.

உங்களுக்கு யாராவது தனிப்பட்ட எதிர்கள் இருந்தால் அவர்களை மடக்குவதற்கு இப்படியான ஒரு புள்ளிநிறுவனங்களை உருவாக்குவது உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

தவிர இப்படி பத்து இருவது புள்ளிநிறுவனங்களை சுமார் அமெரிக்க $150 பெறுமதிக்கு வாங்கிப்போட்டு உங்களை ஒரு தொழில் அதிபர் எண்டு கூட சொல்ல முடியும்.

சுயமாக சிந்திக்காதவரை இப்படி சின்னனில புலி வருகிது புலி வருகிது எண்டு படிச்ச கதைமாதிரி ஆக்களுக்கு கதை சொல்லி ஏய்ச்சுக்கொண்டு இருக்கப்போறீனம்.

எச்செய்தி யார் யார் இணையத்தில் வாசிச்சாலும் அச்செய்தி

எங்கிருந்து திருடப்பட்டது என்று ஆராய்வது அறிவு!

  • கருத்துக்கள உறவுகள்

IBC காரர் செய்தி எடுக்கும் தளங்களில் முக்கிய பங்கு யாழ்களம் வகிக்கின்றது..

ஓ..........அதுவும் அப்படியாயிற்றா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி திரையரங்குகளில் ஏகன் தொடர்ந்தும் திரையிடப்படுவதை அவதானிக்க முடிகிறது. தயவுசெய்து உங்கள் எதிர்ப்பினை உரியவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்

திரையிடுபவரின் மின்னஞ்சல்

இதிலும் பார்க்க முக்கிய விடயம் இலங்கைக்கு GSP plus சலுகை கொடுக்கக்கூடாதென்று EU விற்கு மின்னஞ்சல் அனுப்புவது.

முதலில் அஜீத், அர்ஜீன் போன்றவர்கள் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்திற்கு நாம் ஏன் குரல் கொடுக்க வேண்டுமென்று உண்மையில் சொன்னார்களா?? தாங்கள் அப்படிச் சொல்லவில்லையென்று அஜீத்தும், அர்ஜீனும் மறுத்து இருக்கின்றார்கள். அஜீத்தின் ஏகன் திரைப்படம் வெளிவரும் நேரத்தில் அதன் நாயகன் இப்படியொரு கேள்வியை தற்போதய சூழ்நிலையில் கேட்க முனைவாரா?? இது வேண்டுமென்றே சில விசமிகளால் கிளப்பி விடப்பட்ட புரளியாகவும் இருக்கலாமல்லவா?? இந்தச் செய்தி உண்மையாக இருந்திருந்தால் நடிகர் சங்கத்திற்கோ, தயாரிப்பாளர் சங்கத்திற்கோ நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படியிருந்தால் நடிகர் சங்கமோ, தயாரிப்பாளர் சங்கமோ ஏன் இது பற்றி ஒன்றும் கூறவில்லை. இனமானத் தமிழர்கள் பற்றி பேசும் பாரதிராஜா கூட இதுபற்றி ஒன்றுமே தெரிவிக்கவில்லையே?? அப்படியாயின் எம்மை யாரோ முட்டாள்கள் ஆக்குகின்றார்களா?? உண்மைகளை உணராது நாமும் அதற்கு துணை போகின்றோமா??

அவசரப்பட்டு கருத்துக்களை கொட்டுவதற்கு முன் கொஞ்சமாவது சிந்திப்போமா??

நான் முடிவு செய்திட்டேன். இனிமேல், திருட்டு வீ சி டியில் தான் படம் பார்ப்பேன்....ஏலும் என்றால் பண்ணிப் பார் தலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.