Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையா காதலிக்கிறவங்க என்ன செய்வாங்க?

காதலிக்கும் ஒருவருக்கு பிரச்சனை என்றால் உண்மையாகக் காதலிக்கின்றவங்க என்ன செய்வாங்க? 28 members have voted

  1. 1. காதலிக்கும் ஒருவருக்கு பிரச்சனை என்றால் உண்மையாகக் காதலிக்கின்றவங்க என்ன செய்வாங்க?

    • ஓடி ஒளிப்பாங்க.
      1
    • பிரச்சனையை எதிர்கொள்ள கூட இருந்து உதவுவாங்க.
      21
    • இதுதான் சாட்டென்று கழற்றிவிடுவாங்க.
      6

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

loversmp3ri0.jpg

காதலிக்கிறவங்க எல்லாரும் சொல்லிக்கிறது "உண்மையாவே" காதலிக்கிறேன் என்று. ஆனால் காதலிக்கும் போது.. காதலன் அல்லது காதலிக்கு என்று பிரச்சனை உருவானால்.. உண்மையாகக் காதலிக்கிறவங்க என்ன செய்வாங்க..??!

1. ஓடி ஒளிப்பாங்க.

2. பிரச்சனையை எதிர்கொள்ள கூட இருந்து உதவுவாங்க.

3.இதுதான் சாட்டென்று கழற்றிவிடுவாங்க.

இது தொடர்பில் உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து.. உங்கள் அனுபவங்கள் அல்லது கருத்துக்கள் அல்லது இரண்டையும் பகருங்கள். எதிர்காலக் காதலர்களுக்கு எது உண்மையான காதல் எது போலிக் காதல் என்று அடையாளம் காண இது உதவுவதோடு.. இவற்றை ஆரம்பத்திலேயே இனங்கண்டு விட்டால் பிற்காலத்தில் ஏற்பட இருக்கும் ஏமாற்றங்களை தவிர்த்து அவர்கள் தம் வாழ்வை சந்தோசமாக அமைக்க உதவுவதாகவும் அமையும்.

Edited by nedukkalapoovan

அட அட நைனா விடிஞசதும் விடியாததுமா வித்தியாசமா ஏதோ திறந்து இருக்கிறீங்கள். இது பற்றி நான் ஒண்டும் சொல்ல விரும்ப இல்ல. ஆனா கருத்துக்கணிப்பில "பிரச்சனை எதிர்கொள்ள கூட இருந்து உதவுவாங்க" எண்டு தெரிவு போட்டு இருக்கிறன்.

எனக்கு எண்ட அக்கா சொன்ன ஒரு அறிவுரைய உங்கள் எல்லாருக்கும் சொல்லாம் எண்டு நினைக்கிறன். காதல் பற்றி கதைக்கேக்க எனக்கு அவ சொன்ன அறிவுரை "நல்ல ஒரு காதலனா இருக்க முன்னுக்கு நீ நல்ல ஒரு நண்பனா இருக்கப்பார்!" எண்டு சொன்னா.

  • தொடங்கியவர்

எனது நண்பனுக்கு ஒரு பிரச்சனை. ஆனால் அவனை உண்மையா காதலிக்கிறன் என்று சொன்ன ஆள் அவன்ர பிரச்சனையைக் கண்டு தலைமறைவாகிட்டுது. அவன் சொல்லி வருத்தப்பட்டான். நான் சொன்னேன்.. அந்தாள் உன்னை உண்மையாகவும் இல்ல.. போலியாகவும் இல்ல.. காதலிக்கவே இல்ல. வெறுமனவே சுத்தித் திரிந்து நோட்டம் விட்டிருக்குது. தனக்கு ஏற்ற உறுமீன் இல்லை என்ற உடன கொக்குப் பறந்திட்டுது. இதற்காக நீ காவிய நாயகன் ஆக வேண்டாம் என்று ஆறுதல் சொன்னேன். இது விடயத்தில் அனுபவமற்ற நான் அவனுக்கு சொன்னது சரியா தவறா என்ற ஒரு ஆதங்கம் இருந்தது. அதுதான் அனுபவமுள்ளவங்க கிட்ட கேட்டா.. நான் சொன்னது அவன்ர வாழ்க்கையைப் பாதிக்காத வகைக்கு இருக்க அவனுக்கு உதவுமே என்று கேட்டன். இது வேறு பலருக்கும் உதவக் கூடியதாகவும் இருக்கிறது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டாவதுக்கு வாக்களித்துள்ளேன்.

காதலிப்பவர்களில் பல வகையினர் இருக்கின்றார்கள் .

1) பணம்

2) அழகு

3) உத்தியோகம் .... இப்படி அடுக்கி கொண்டே போகலாம் .

இதனை எப்படி கண்டு பிடிப்பது .

சில பெண்கள் , ஆண் வைத்திருக்கும் காரை வைத்தும் அந்த ஆணை காதலித்துள்ளதாக கேள்விப்பட்டுளேன் .

ஏன் சிறி செயற்கையாக (ஆனால் அந்த நண்பனுக்கு பிரச்சனை உண்மையானது) ஒரு பிரச்சனையை உருவாக்கி.. சோதிச்சுப் பார்த்திட்டால் தெரிஞ்சிடும் தானே. தங்கத்தையே உரசிப் பார்த்து வாங்கிறம். வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போற ஒரு துணையை.. சோதிச்சுப் பார்த்தால்.. குற்றமா.. அன்பில்லை என்றாகிடுமா என்ன..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் மூன்றாவதுக்கு வாக்களித்துள்ளேன் நெடுக்கு சாமீ இதைதான் நடைமுறை வாழ்கையில் அதிகம் பார்த்திருக்கிறேன் :lol:

ஒரு உதாரணம் எனது நண்பன் ஒருவன் காதலித்தான் ஆனால் அவனுக்கு வேலையில்லை இந்த காதல் விசயமோ அந்த பெண் வீட்டுக்காரருக்கு தெரியவே பிள்ளைக்கு மூளை சலவை செய்யப்பட்டது அடுத்த மாதம் மலேசியா மாப்பிளைக்கு நிட்சயதார்த்தம் நடந்தேறியது

நம்ம மாப்புக்கோ ஆப்பு ஆனால் மாப்பு தற்போது நல்ல வேலையில் :D

நெடுக்கு காதலிப்பதற்க்கு முனிவருக்கு கொஞ்சம் சொல்லி தாருங்கள் :D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு காதலிப்பதற்க்கு முனிவருக்கு கொஞ்சம் சொல்லி தாருங்கள் :D:D

சா.. சா.. மேனகையையே மயங்கிய வம்சமல்லவா உங்கள் வம்சம். அப்படி இருக்க... ஒரு சூத்திரனிடம் போய்.. காதலிக்க கற்றுத் தரக் கேட்பது.. பர்ணசாலைக்கே இழுக்கு. :D:lol:

எனது நண்பனுக்கு ஒரு பிரச்சனை. ஆனால் அவனை உண்மையா காதலிக்கிறன் என்று சொன்ன ஆள் அவன்ர பிரச்சனையைக் கண்டு தலைமறைவாகிட்டுது. அவன் சொல்லி வருத்தப்பட்டான். நான் சொன்னேன்.. அந்தாள் உன்னை உண்மையாகவும் இல்ல.. போலியாகவும் இல்ல.. காதலிக்கவே இல்ல. வெறுமனவே சுத்தித் திரிந்து நோட்டம் விட்டிருக்குது. தனக்கு ஏற்ற உறுமீன் இல்லை என்ற உடன கொக்குப் பறந்திட்டுது. இதற்காக நீ காவிய நாயகன் ஆக வேண்டாம் என்று ஆறுதல் சொன்னேன். இது விடயத்தில் அனுபவமற்ற நான் அவனுக்கு சொன்னது சரியா தவறா என்ற ஒரு ஆதங்கம் இருந்தது. அதுதான் அனுபவமுள்ளவங்க கிட்ட கேட்டா.. நான் சொன்னது அவன்ர வாழ்க்கையைப் பாதிக்காத வகைக்கு இருக்க அவனுக்கு உதவுமே என்று கேட்டன். இது வேறு பலருக்கும் உதவக் கூடியதாகவும் இருக்கிறது. :lol:

நல்ல யோசனை தான்..

ஓடி போனவங்களை பற்றி சிந்திப்பதற்கு கூட இருப்பவர்களை பற்றி யோசிக்கலாம்

பிரச்சனையை எதிர்கொள்ள கூட இருந்து உதவுவாங்க. (வெ.ப.உ :lol: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான காதல் எதையும் செய்ய துணியும் அப்படி இருக்க ஒரு பிரச்சனை என்றால் அதையும் அவர்கள் கூட இருந்து எதிர்கொள்ளனும்.ஆனால் இப்பொழுது உண்மை காதல் என்பதை பார்ப்பது சற்று கடினமாகவே இருக்கின்றது.காதல் என்றாலே நிறைய எதிர்பார்புகள் இருக்கும் அவை அன்பு,சந்தோஷமான வாழ்க்கை,நிறைவான குடும்பம் எப்படி இருந்தால் அந்த காதல் ஆரோக்கியமானது அதை விடுத்து பணம்,பொருள்,செல்வாக்கு என்பவற்றை சார்ந்து காதல் இருக்குமானால் அது ஒருபொழுதும் நிலையான சந்தோசத்தை வழங்காது.

நெடுக்காலபோவான் இந்தக்கருத்தாடலின்ட ஆரம்பிச்சதின்ட உண்மையான உள்நோக்கத்தை பார்த்தால் இது அவரிண்ட நண்பனுக்கு உதவுறதுக்க்காக ஆரம்பிச்சது மாதிரி தெரிய இல்ல. இந்த ஊகம் சரியா பிழையா எண்டு நாலைஞ்சு நாளைக்கு பொறுத்து இருந்து பார்க்கவேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் இந்தக்கருத்தாடலின்ட ஆரம்பிச்சதின்ட உண்மையான உள்நோக்கத்தை பார்த்தால் இது அவரிண்ட நண்பனுக்கு உதவுறதுக்க்காக ஆரம்பிச்சது மாதிரி தெரிய இல்ல. இந்த ஊகம் சரியா பிழையா எண்டு நாலைஞ்சு நாளைக்கு பொறுத்து இருந்து பார்க்கவேணும்.

நான் காதலிச்சு அல்லது கலியாணம் கட்டி பரிசோதிச்சுப் பார்க்க முதல் முன்மாதிரி செய்து பார்க்கிறன் என்றீங்களா. எவனாவது தெரிஞ்சு கொண்டும் பாழாங்கிணற்றுக்க பாய்வானா என்ன..! :D:lol:

வாக்களிச்சதை வெளியில சொல்லக் கூடாது என்பார்கள். ஆனால் இங்க எல்லாரும் சொல்லிட்டினம் நானும் சொல்லுறேன். 3.இதுதான் சாட்டென்று கழற்றிவிடுவாங்க. இதுக்குத்தான் வாக்களிச்சனான். (ஏதாவது அன்பளிப்பு குடுக்கிறீங்களா?)

நான் காதலிச்சு அல்லது கலியாணம் கட்டி பரிசோதிச்சுப் பார்க்க முதல் முன்மாதிரி செய்து பார்க்கிறன் என்றீங்களா. எவனாவது தெரிஞ்சு கொண்டும் பாழாங்கிணற்றுக்க பாய்வானா என்ன..!

கலியாணம் கட்டி பிள்ளைகளும் இருக்கு.. இதுக்க உங்களுக்கு இன்னொரு கலியாணம் கேட்குதோ? :lol:

உண்மையான காதல் அறியாபருவத்தில் தான் வரும். அறிவு வந்தவுடன், அது தனக்கு எது நன்மை எது தீமை என்று ஆராய ஆரம்பித்துவிடும். இந்த ஆராய்ச்சி உண்மையான உணர்வுகளை மேவி முடிவெடுக்கும். கூட்டி கழித்து பார்த்தால் என் முடிவு

"நல்லவர்கள் காதலித்தால் அது உண்மையான காதல்"

என் vote: #2

Edited by esan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடு்க்ஸ் நல்ல ஆய்வு நான் 2 வது வாக்களித்துள்ளேன் இப்ப பாத்தியல் என்னடா நல்ல உயிரைக்கொடுக்கிற அளவுக்கு காதலிச்சா அதாவது அவனோ இல்ல அவயோ கடைசிவரை கூட இருப்போம் என்னு உறுதியோட காதலீச்சா என்ன பிரச்சனை வந்தாலும் கூட நிற்பினம் காதலிலும் வெற்றி கானுவினம்.

ஆனால் இப்ப அதெல்லாம் எங்க என்டு தேடவேண்டிக்கிடக்கு. காதலிக்கிறதுக்கு கனக்கா கன்டிசன் வைக்கிறினம் இப்படிப்பட்ட காதல் எல்லாம் நாசமாய்த்தான் போகும்.

இன்டைக்கு ஒருத்தன் நாளைக்கு இன்னொருத்தன் இப்படிப்போகுத கேட்டா வெள்ளக்காரன் பசனாமெல்ல.

காதலிக்க வேனும் அதுவும் உண்மையா காதலிக்க வேனும் அப்போ பிரச்சனையை எதிர் கொள்ள தைரியம் தானாத் தேடி வரும் கன்னா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நல்லவர்கள் காதலித்தால் அது உண்மையான காதல்"

என் vote: #2

அப்போ கெட்டவன் காதலிச்சா கெட்ட காதலோ கெட்டவன நல்லவனாக்குறதும் நல்லவன கெட்டவனாக்குறதும் அவ அவேன்ற காதலின் புனிதத்தில அடங்கியிருக்கிண்ணா. இப்போ உலகத்தில நல்லவன் யாரென்டு ஒருக்காச் சொல்லுவியலோ. நீங்கள் நல்லவனென்டு உறுதியா பொய் சொல்லாமல் சொல்ல முடியுமா உங்களால் ஒன்டை மட்டும் பறந்து போட்டியல் உலகில நல்லவனை கான்றதே அரிது அதுக்குப்பிறகு நல்ல காதல எங்க தேடுறது

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாக்கு இரண்டாவது ........உண்மையான காதலில்" உண்மை " இருந்தால்.

அப்போ கெட்டவன் காதலிச்சா கெட்ட காதலோ கெட்டவன நல்லவனாக்குறதும் நல்லவன கெட்டவனாக்குறதும் அவ அவேன்ற காதலின் புனிதத்தில அடங்கியிருக்கிண்ணா. இப்போ உலகத்தில நல்லவன் யாரென்டு ஒருக்காச் சொல்லுவியலோ. நீங்கள் நல்லவனென்டு உறுதியா பொய் சொல்லாமல் சொல்ல முடியுமா உங்களால் ஒன்டை மட்டும் பறந்து போட்டியல் உலகில நல்லவனை கான்றதே அரிது அதுக்குப்பிறகு நல்ல காதல எங்க தேடுறது

நல்லவன், நல்லவள் என்று சொல்லபடுகிற ஆட்கள் செயல்கள் எப்படியோ இருக்கட்டும் ஆனால் அவர்கள் மனம் அடிபடையில் நல்லதாக இருக்கும். இப்படிப்பட்ட இரு மனங்களில் தான் உண்மைக் காதல் தோன்றும். ஏனென்றால் உண்மை என்பது நல்லவர்களின் ஏகபோக சொத்து. ஒருவன் நல்லவனாக இருந்து ஒருத்தி மேல் உண்மையாக காதல் கொள்வானாய் இருந்தும், அவள் நல்லவள் இல்லையேல் அது உண்மைக் காதல் அல்ல. உண்மைக் காதல் என்பது இரண்டு மனங்களின் இடம்பெயர்வு. ஒரு நல்ல மனமும் ஒரு கெட்ட மனமும் பரஸ்பரம் இடம்பெயரா.

காதலின் புனிதத்தால் கெட்டவனை நல்லவனாக முடியுமா ? இங்கு கெட்டவன் என்பவன் ரௌடி அல்ல, நல்ல மனமற்றவனே. இவனுடைய பித்தலாட்ட மனத்தை மாற்றக்கூடிய தெய்வீகச் சக்தி காதலுக்கு இல்லை. சரி. அப்படித்தான் அவனுக்கு நல்ல மனம் வருகிறது என்று வைத்துகொள்வோம். இப்போது இங்கு இரண்டு நல்ல மனங்கள். உண்மைக்காதல் தோன்றலாம். ஆனால் நடைமுறையில் இப்படி நடப்பது குறைவு.

உண்மைக்காதலை அவ்வளவு எளிதாக உலகத்தில் பார்த்து விட முடியாது.

என்னுடைய நண்பர் ஒருவர் அவளுடைய பெயரை சந்தனக் குச்சியால் தன் கையில் சுட்டு வைத்திருந்தார். சில வருடங்களுக்கு முன் அவள் வேறு ஒருவரை மணம் முடித்திருந்தாள். திக்கொன்றாய் நாங்கள் பறந்து வந்ததால் நண்பர் தொடர்பை இழந்து விட்டோம். அவர் நிலமை என்னென்று தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய நண்பர் ஒருவர் அவளுடைய பெயரை சந்தனக் குச்சியால் தன் கையில் சுட்டு வைத்திருந்தார். சில வருடங்களுக்கு முன் அவள் வேறு ஒருவரை மணம் முடித்திருந்தாள்.

வசி இப்படிப்பட்டவர்களை என்னவன்று சொல்லுவது இப்படிமூர்க்கத்தனமான காதல்கள் தான் கடைசியில் பைத்தியமாகவோ இல்லை தற்கொலைக்கே இட்டுச் செல்லலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டி பிள்ளைகளும் இருக்கு.. இதுக்க உங்களுக்கு இன்னொரு கலியாணம் கேட்குதோ? :lol:

அன்னை மேரிக்குத்தான் கன்னியாக இருக்கும் போதே கர்ப்பம் உண்டானது என்றால் எனக்கு.. குழந்தைகள்... ம்ம்ம்...! வேற சொல்லுங்க கேட்பம்..! :D:D

நல்லவன், நல்லவள் என்று சொல்லபடுகிற ஆட்கள் செயல்கள் எப்படியோ இருக்கட்டும் ஆனால் அவர்கள் மனம் அடிபடையில் நல்லதாக இருக்கும். இப்படிப்பட்ட இரு மனங்களில் தான் உண்மைக் காதல் தோன்றும். ஏனென்றால் உண்மை என்பது நல்லவர்களின் ஏகபோக சொத்து. ஒருவன் நல்லவனாக இருந்து ஒருத்தி மேல் உண்மையாக காதல் கொள்வானாய் இருந்தும், அவள் நல்லவள் இல்லையேல் அது உண்மைக் காதல் அல்ல. உண்மைக் காதல் என்பது இரண்டு மனங்களின் இடம்பெயர்வு. ஒரு நல்ல மனமும் ஒரு கெட்ட மனமும் பரஸ்பரம் இடம்பெயரா.

உண்மை நண்பரே. உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மை. :D

எல்லாரும் வாக்குப்பதிவில மும்மரமா இருக்கிறீங்க. கருத்துப் பகிர்ந்த உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.

தொடர்ந்து.. வாக்களிக்க வேண்டிக் கொள்கிறேன்..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சா.. சா.. மேனகையையே மயங்கிய வம்சமல்லவா உங்கள் வம்சம். அப்படி இருக்க... ஒரு சூத்திரனிடம் போய்.. காதலிக்க கற்றுத் தரக் கேட்பது.. பர்ணசாலைக்கே இழுக்கு. :D:lol:

நெடுக்கு அது நமது முன்னோர்களின் கைவரிசை ஆனால் நான் கொஞ்சம் தெரியாதவன் அதனால்தான் உங்களிடம் கேட்டேன் நீங்கள் வேற சூத்திரன் என்றவுடன் நான் என்ன செய்ய :rolleyes::rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிறி செயற்கையாக (ஆனால் அந்த நண்பனுக்கு பிரச்சனை உண்மையானது) ஒரு பிரச்சனையை உருவாக்கி.. சோதிச்சுப் பார்த்திட்டால் தெரிஞ்சிடும் தானே. தங்கத்தையே உரசிப் பார்த்து வாங்கிறம். வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போற ஒரு துணையை.. சோதிச்சுப் பார்த்தால்.. குற்றமா.. அன்பில்லை என்றாகிடுமா என்ன..! :rolleyes:

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் . அநேகமான காதலர்கள் 25 வயதுக்குள் தான் இருப்பார்கள் .

காதலை சோதித்து பார்க்கக் கூடிய மனப்பக்குவத்தை எப்படி அவர்களிடம் எதிர் பார்க்கலாம் .

அந்த வயதில் காதலை விட காமத்துக்கே முதலிடம் கொடுப்பார்கள் .

நெடுக்கு காதலிப்பதற்க்கு முனிவருக்கு கொஞ்சம் சொல்லி தாருங்கள் :lol::lol:

முனிவர் , நீங்கள் பனிபிரதேசத்தில் வாழும் எஸ்கிமோவர்களுக்கே ஐஸ்பழம் விற்கிறனீங்கள் , :rolleyes:

உங்களுக்கு காதல் பாலபாடம் நடத்த யாழ். களத்தில் ஒருவருமே இல்லை என நினைக்கின்றேன் . :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அட நைனா விடிஞசதும் விடியாததுமா வித்தியாசமா ஏதோ திறந்து இருக்கிறீங்கள். இது பற்றி நான் ஒண்டும் சொல்ல விரும்ப இல்ல. ஆனா கருத்துக்கணிப்பில "பிரச்சனை எதிர்கொள்ள கூட இருந்து உதவுவாங்க" எண்டு தெரிவு போட்டு இருக்கிறன்.

எனக்கு எண்ட அக்கா சொன்ன ஒரு அறிவுரைய உங்கள் எல்லாருக்கும் சொல்லாம் எண்டு நினைக்கிறன். காதல் பற்றி கதைக்கேக்க எனக்கு அவ சொன்ன அறிவுரை "நல்ல ஒரு காதலனா இருக்க முன்னுக்கு நீ நல்ல ஒரு நண்பனா இருக்கப்பார்!" எண்டு சொன்னா.

முரளி,நல்ல நண்பனா இருக்கிறது எப்படி எண்டு சொல்லுங்கோ முதலில்; அப்பத்தான் அக்கா சொன்னதை எவ்வளவு தூரம் உள்வாங்கி இருக்கிறீங்கள் எண்டு எங்களுக்குத் தெரிய வரும் :rolleyes:

எனது நண்பனுக்கு ஒரு பிரச்சனை. ஆனால் அவனை உண்மையா காதலிக்கிறன் என்று சொன்ன ஆள் அவன்ர பிரச்சனையைக் கண்டு தலைமறைவாகிட்டுது. அவன் சொல்லி வருத்தப்பட்டான். நான் சொன்னேன்.. அந்தாள் உன்னை உண்மையாகவும் இல்ல.. போலியாகவும் இல்ல.. காதலிக்கவே இல்ல. வெறுமனவே சுத்தித் திரிந்து நோட்டம் விட்டிருக்குது. தனக்கு ஏற்ற உறுமீன் இல்லை என்ற உடன கொக்குப் பறந்திட்டுது. இதற்காக நீ காவிய நாயகன் ஆக வேண்டாம் என்று ஆறுதல் சொன்னேன். இது விடயத்தில் அனுபவமற்ற நான் அவனுக்கு சொன்னது சரியா தவறா என்ற ஒரு ஆதங்கம் இருந்தது. அதுதான் அனுபவமுள்ளவங்க கிட்ட கேட்டா.. நான் சொன்னது அவன்ர வாழ்க்கையைப் பாதிக்காத வகைக்கு இருக்க அவனுக்கு உதவுமே என்று கேட்டன். இது வேறு பலருக்கும் உதவக் கூடியதாகவும் இருக்கிறது. :rolleyes:

நெடுக்ஸ் அண்ணை, பலர் தன்னுடைய அனுபவங்களை தன் நண்பனுக்கு நிகழ்ந்தது எண்டு சொல்லித்தான் தொடங்குவினம். நீங்கள் அப்படி இல்லை எண்டு எனக்குத் தெரியும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய திறமை உங்களுக்கு இருக்குது.

'காதலில் தோல்வி எண்டதெல்லாம் சும்மா' 'ஏனெனில் காதல் தோற்காது பலர் 'அந்தப்போர்வையை வைச்சுக்கொண்டு போலியா இருக்கினம் அதைத் தொடக்கத்திலேயே கண்டுபிடிச்சிட்டால்..நல்லது:lol:

அன்னை மேரிக்குத்தான் கன்னியாக இருக்கும் போதே கர்ப்பம் உண்டானது என்றால் எனக்கு.. குழந்தைகள்... ம்ம்ம்...! வேற சொல்லுங்க கேட்பம்..! :lol::rolleyes:

சரி நம்பிட்டேன். :rolleyes:

ம்ம்..நல்லதொரு கேள்வி தாத்தா..தா..!!.. :D

உதை நாங்கள் ஆழ்ந்து யோசிக்கோணும்..ம் உடன விடை சொல்லிட ஏலாது தானே..னே அப்படி யோசித்தன் பிரகாரம் எண்ட மனசில தோன்றினதை சொல்லுறன் கேளுங்கோ..கோ.. :D

முதலில என்ன மாதிரி பிரச்சினை என்று ஆராயவேண்டும்...ஏன் எண்டா..டா எப்படிபட்ட பிரச்சினை எண்டு பார்த்து அதற்கேற்றா போல..ல தான் நடந்துகணும் தாத்தா..தா.. :D

ஏன் இப்படி சொல்லுறன்..ன் எண்டா அதிலையும் ஒரு காரணம் இருக்கு..கு..இப்ப ஒரு உதாரணதிற்கு என்னை காதலிக்கிறவா வந்து என்னட்ட இப்படி சொல்லுறா எண்டு வையுங்கோவன்..ன்.."டார்லிங்" நான் கர்பமா இருக்கிறன் எண்டு உடன நான் யோசிக்கோனும் உதுக்கு காரணம் நானோ எண்டு..டு..அப்படி நானா இருந்தா பிரச்சினையை எதிர்கொள்ள உதவி செய்வன்..ன்.. :D

ஒரு வேள நானா இல்லாட்டிக்கு..கு..!! :)

உண்மையா அவாவை நான் காதலிச்சனான் எண்டு..டு நானே எண்ட தலையில மண்ணை வாறி போட ஏலாது அல்லோ தாத்தா..தா..(விளங்கிச்சே..சே).. :D ஏன் எண்டா லோகம் சரியா கெட்டு கெடக்குது அதனால ஒண்டுக்கு பத்து தரம் எந்த விசயத்திலையும் யோசிகோணும்..ம்..

இது தான் எண்ட கருத்து..து..அதனாடி எதுக்கு வாக்கு போடுறது எண்டு ஒரே கொழப்பமா இருக்கு..கு அது இருகட்டும் உங்களிட்டன் ஒரு கேள்வி அது என்ன உண்மையான காதல்..ல்..??. :lol:

பாவம் தாத்தா..தா இன்னும் லோகத்தை சரியா புரிஞ்சுக்கவே இல்ல..ல நான் புரிஞ்ச அளவிற்கும்..ம்.. :D

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா பசித்தா மக்டோனால்ஸ் போற மாதிரி தான் இப்ப காதலும்.." :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.