Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல்

Featured Replies

அவலத்தைத் தந்தவனுக்கு அது திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. அது சரி இந்த துரத்திச் சுடுகிற சாமான் எல்லாம் இருக்குது, ஒண்ட விழுத்திப் போட்டம், விமானிகள் கண்டவையள், இப்படியெல்லாம் சொல்லுறத்துக்கு இப்ப ஆக்களக் காணேல்ல. தாக்குதல் நடக்கேக்குள்ள நித்திரத் தூக்கத்தில இருந்திருப்பினம். அதுதான் இன்னும் அறிவிக்கச் சுணங்குது. இன்னுமொருவர் மூர்க்கமாகச் சண்டை பிடிக்கப் போறம் எண்டார் அவரின்ட சத்தத்தம் எதையும் காணேல்ல. இரண்டுநாள் கழிச்சுத்தான் யோசிச்சு உலக நாடுகள் புலிகள்தான் செய்தது எண்டு நம்பும்படியாக அறிக்கை விடுவினம்.

  • Replies 76
  • Views 16.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

களனிதிச அனல் மின் பிறப்பாக்கிக்குரிய இரண்டு பெரும் சுழலிகள் (Turbine - இவற்றை சுழலச் செய்வதனூடே மின்பிறப்பாக்கிகள் இயக்கபட்டு மின்சாரம் பிறப்பிக்கப்படுகிறது) தேசமடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதற்கிடையே காரணமறியா வகையில் களனிதிச அனல் மின்னிலையத்தில் பணியாற்றிய ஒரு தொழிலாளியும் விமானத்தாக்குதலின் போது பாதிப்புக்கு உள்ளாகி பின்னர் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

இதற்கிடையே சிறீலங்கா படையினர் விமானங்களை நோக்கி ஏவிய எறிகணை வீடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் வத்தளைப்பகுதியில் ஒரு பெண் எலும்பு முறிவுக்கு உள்ளாகி காயடமைந்துள்ளார்.

Two turbines damaged at Kelanitissa

Two turbines were damaged in the LTTE air raid at Kelanitissa power station. Power generation using the damaged turbines was suspended. However the Ceylon Electricity Board confirmed that the damage will not affect the consumers.

டெயிலிமிரர்.கொம்

அவலத்தைத் தந்தவனுக்கு அது திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. அது சரி இந்த துரத்திச் சுடுகிற சாமான் எல்லாம் இருக்குது, ஒண்ட விழுத்திப் போட்டம், விமானிகள் கண்டவையள், இப்படியெல்லாம் சொல்லுறத்துக்கு இப்ப ஆக்களக் காணேல்ல. தாக்குதல் நடக்கேக்குள்ள நித்திரத் தூக்கத்தில இருந்திருப்பினம். அதுதான் இன்னும் அறிவிக்கச் சுணங்குது. இன்னுமொருவர் மூர்க்கமாகச் சண்டை பிடிக்கப் போறம் எண்டார் அவரின்ட சத்தத்தம் எதையும் காணேல்ல. இரண்டுநாள் கழிச்சுத்தான் யோசிச்சு உலக நாடுகள் புலிகள்தான் செய்தது எண்டு நம்பும்படியாக அறிக்கை விடுவினம்.

முக்கியமாகக் கவனிக்க வேண்டியது.. தள்ளாடியில் தாக்குதல் நடத்தி கிட்டத்தட்ட 1 மணித்தியாலத்தின் பின் கொழும்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதுவும் கொழும்பை நோக்கி விமானங்கள் வருகின்றன என்ற எச்சரிக்கை அம்பாந்தோட்டையில் இருந்து வழங்கப்பட்ட பின் அனைத்து விமான எதிர்ப்பு வளங்களும் சுடுநிலைக்கு வந்த பின்னர்.. விமானங்கள் வந்து குண்டு போட்டுத் தாக்கியுள்ளன.

மேலே இணைக்கப்பட்டுள்ள 2வது காணொளி அதற்கு சான்றாகிறது.

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வலுவுடைய விமானங்களைக் கொண்டு மிக நீண்ட பறப்பைச் செய்து.. தமிழீழ வான் படை தாக்குதல் செய்திருக்கிறது. நிச்சயம் இது பாராட்டத்தக்க ஒரு தாக்குதலே. தமிழீழ வான் படையின் வரலாற்றில் முக்கியமான ஒரு தாக்குதல் எனலாம்.

Edited by nedukkalapoovan

அவங்கள் வந்து குண்டுபோட்டால் போடட்டும், அதனால எங்களுக்கு ஒண்டும் ஆபத்தில்ல. நீங்கள் சுட வேண்டாம் அதனாலதான் எங்களுக்கு பெரிய ஆபத்து எண்டு கொழும்புச் சனங்கள் அரசாங்கத்திற்குச் சொல்லப் போகுதுகள். :D:):lol:

இவங்கள் சுட்ட குண்டு விழுந்து ஒரு மனுசிக்கு எலும்பு முறிஞ்சு போச்சாம்... நல்லவேளை மனுசி எலும்பு முறிவோட தப்பிச்சுது...

அந்தக்குண்டு வெடிச்சிருந்தா? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தியை மத்திய கிழக்கு நாடுகளில் பகுதிநேர ஒலிபரப்பாகும் சக்தி வானொலி உடனே அறிவித்தது மேலதிக செய்திகளையும் உடனுக்குடன் தந்துகொண்டிருந்தது அத்தோடு இந்த செய்தியை அறிவித்து விட்டு " விலகு விலகு வேங்கை வெளியே வருது விலகு " என்ற பாடலையும் ஒளிபரப்பி தமிழ் மக்களை உற்சாகப்படுத்தினர். அறிவிப்பாளர்களின் குரலிலும் ஒரு சந்தோசத்தை வெளிப்படையாக உணர முடிந்தது.நன்றி சக்தி வானொலிக்கு.இவர்கள் தமிழீழ செய்திகளை உடனுக்குடன் அறிவிக்கின்றனர் நேற்று குண்டு வீச்சில் கொல்லப்பட்ட மூன்று பேர் பற்றியும் சொல்லியிருந்தார்கள்.இந்த நேரம் வானொலியோடு தொடர்பு கொண்ட முஸ்லீம் பெண்மணி ஒருவர் புலிகள் செய்வது தவறு என்று சாரப்பட கதைக்க முற்பட்டபோது தகுந்த நியாயத்தை கூறி அவரின் வாயையும் அடைத்திருந்தார்கள்.

தாக்குதலில் ஈடுபட்ட வான் புலிகளுக்கு வாழ்த்துக்கள்.

Edited by suppannai

வான் புலிகளிற்கு வாழ்துக்கள்

உண்மையில் இன உணர்வுள்ள ஊடகவியலாளர்களைப் பாராட்ட வேண்டும். ஆனால் நாம் அவர்களை இவ்வாறு பகிரங்கமான செய்திகளை இட்டு பாராட்டுவதால் அவர்களுக்கு நேரக்கூடிய ஆபத்துக்களையும் கருத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும். இன உணர்வுள்ள ஊடகவியலாளர்களின் சேவை தொடர வேண்டின்.. அவர்கள் பாதுகாக்கப்படவும் வேண்டும். :)

நிச்சயமாக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எழுதிய கருத்தை முற்றாக நீக்கவேண்டிய அவசியமில்லையே? :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா என்ன போட்டுத்தாக்கிப்போட்டாங்கள

துணிவாக தாக்குதல் நடாத்தி , தளம் திரும்பிய வான் புலி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் .

மன்னார், தள்ளாடி படை முகாம், கொழும்பு களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம், சப்புகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையம் என்பவற்றின் மீது வான் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மன்னாரில் பல்குழல், மற்றும் ஆட்டிலறி எறிகணைகளுடன் அமைந்துள்ள முப்படைத் தலைமை முகாம் மீது இன்றிரவு (செவ்வாய்க்கிழமை) 10:50 அளவில் வான் புலிகளது

தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது.

வான் புலிகளது வானூர்தி ஒன்று தள்ளாடி படை முகாம் மீது இரண்டு அல்லது மூன்று குண்டுகளை வீசியதாகவும், அவை தள்ளாடி முகாமிற்குள் வீழ்ந்து வெடித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து இரவு 11:30 அளவில் கொழும்பு சப்புகஸ்கந்த, மற்றும் களனிதிஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள எண்ணை சுத்திகரிப்பு நிலையம், மற்றும் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான் புலிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலால் எண்ணை சுத்திகரிப்பு நிலையம், மற்றும் மின் உற்பத்தி நிலையம் என்பன தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாகவும், அந்த இடத்தை நோக்கி தீயணைப்பு ஊர்திகள் விரைந்து கொண்டிருப்பதாகவும் ஆரம்ப தகவல்கள் கூறின.

ஏக காலத்தில் கொழும்பு துறைமுகம், மற்றும் படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இருந்து தற்காப்பு தாக்குதலாக கீழிருந்து வானத்தை நோக்கி சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதால் மக்கள் மத்தியில் மிகுந்த பதற்ற நிலை காணப்பட்டது.

வான் புலிகளது தாக்குதல்களைத் தொடர்ந்து கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் இருந்து கிபீர் மிகையொலி வானூர்திகள் வன்னி நோக்கி புறப்பட்டுள்ளதாக, கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வன்னியில் பரா வெளிச்சக்குண்டுகளை வீசி சிறீலங்கா வான் படையினர் வான் புலிகளது வானூர்திகளைத் தேடியுள்ளதாக எமது வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கொழும்பு, மன்னார் உட்பட பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வான் புலிகள் தாக்குதல் நடத்தியபோது கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்படாத போதிலும், இன்று கொழும்பிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இது களனிதிஸ்ஸ மின்னிலையம் மீது தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்பா, அல்லது அச்சத்தில் சிறீலங்கா அரசினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை.

மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கான கைத்தொலைபேசி இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிறிலங்கா தரைப்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:20 நிமிடத்துக்கு குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் தள்ளாடி தரைப்படைத்தளம் பலத்த சேதமடைந்துள்ளது. பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

அதேநேரம், சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீது நேற்று இரவு 11:45 நிமிடத்துக்கு வான்புலிகள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த இரு இடங்களிலும் தாக்குதலை நடத்தி விட்டு வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளன என்று விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பின் களனிதிச பிரதான மின்சார நிலையம் தீப்பற்றி எரிகின்றது :

கொழும்பின் களனிதிச பிரதான மின்சார நிலையத்தின் மீது விடுதலைப்புலிகளின் விமானங்கள் இரண்டு குண்டுகளை வீசி உள்ளதாகவும் மின்சார நிலையம் தொடர்ந்தும் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாகவும் எமது விசேட செய்தியாளர் கொழும்பிலிருந்து தெரிவித்துள்ளார்.

மேலும் தீயணைப்பு படையினர் களனிதிசவை நோக்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் தொடர்ந்தும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாகவும் அதற்கான காரணம் களனிதிச பிரதான மின்சார நிலையம் எரிந்து கொண்டிருப்பதா அல்லது பயம் காரணமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக எனத் தெரியவில்லை எனவும் எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு- களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் நடத்திய இரண்டாவது தாக்குதலின் போது குளிரூட்டும் இரண்டு மின் விசிறிகள் சேதமடைந்ததாகவும் வேறு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென்றும் மின்சக்தி,எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. மின் விநியோகத்திலும் தடைகள் ஏற்படவில்லையென்றும் அமைச்சு தெரிவித்தது.

களனிதிஸ்ஸ மின்சார மையத்தாக்குதலின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் மரணம்.

களனிதிஸ்ஸ மின்சார மையத்தின் மீது நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட வானூர்தி தாக்குதலை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பணியாளர் ஒருவர் இன்று காலை மரணமானார். இவரது உடலில் எவ்வித காயங்களும் ஏற்படாத நிலையில், மரணத்திற்கான காரணம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இதேவேளை ஏககாலத்தில் மன்னார் தள்ளாடியில் நடத்தப்பட்ட வானூர்தி தாக்குதலில், இராணுவ வீரர்கள் சிலர் காயமடைந்துள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களனிதிஸ்ஸ மின்சார மைத்தின் மீதான தாக்குதலின் போது, அங்குள்ள ஜெனரேட்டர் ஒன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.பதிலடித் தாக்குதல்?

முன்னதாக, நேற்று காலை கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் குமரபுரம் என்ற ஊரில் இந்து வித்தியாலயா பள்ளி அருகே மக்கள் வசிக்கும் குடியிருப்பு மீது இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

2 முறை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 3 பொது மக்கள் கொல்லப்பட்டனர். கிறிஸ்டி, கனிஸ்டன், தனுசன் ஆகிய 3 மாணவர்கள் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.

மேலும் 1,300 மாணவ-மாணவிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். பள்ளி நடந்து கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதலை இலங்கை போர் விமானங்கள் நடத்தியதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டினர்.

இந் நிலையில் தான் நேற்றிரவில் கொழும்பு மீது புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இதற்கிடையே இரு நாட்களில் கிளிநொச்சியை பிடித்து விடுவோம் என்று அறிவித்த இலங்கை ராணுவம் கடந்த 4 வார காலமாக கிளிநொச்சிக்கு வெளியிலேயே முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதில் தாக்குதலில் வத்தளையில் பெண்ணொருவர் காயம்

களனி திஸ்ஸ அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் மீது விடுதலை புலிகள் மேற்கொண்ட வான் தாக்குதலையடுத்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட வானூர்தி எதிர்ப்பு தாகுதலில் பெண்ணொருவர் காயமடந்துள்ளார்.வத்தளை ஹுணுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே கால்களில் காயமடந்த நிலையில் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த சமயம் இத் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

37102563mx6.png

47613216gk9.png

52536969og3.png

88272269cc4.png

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி நடை போடும் வான்புலிகளுக்கு வாழ்த்துக்கள்

இந்த செய்தியை மத்திய கிழக்கு நாடுகளில் பகுதிநேர ஒலிபரப்பாகும் சக்தி வானொலி உடனே அறிவித்தது மேலதிக செய்திகளையும் உடனுக்குடன் தந்துகொண்டிருந்தது அத்தோடு இந்த செய்தியை அறிவித்து விட்டு " விலகு விலகு வேங்கை வெளியே வருது விலகு " என்ற பாடலையும் ஒளிபரப்பி தமிழ் மக்களை உற்சாகப்படுத்தினர். அறிவிப்பாளர்களின் குரலிலும் ஒரு சந்தோசத்தை வெளிப்படையாக உணர முடிந்தது.நன்றி சக்தி வானொலிக்கு.இவர்கள் தமிழீழ செய்திகளை உடனுக்குடன் அறிவிக்கின்றனர் நேற்று குண்டு வீச்சில் கொல்லப்பட்ட மூன்று பேர் பற்றியும் சொல்லியிருந்தார்கள்.இந்த நேரம் வானொலியோடு தொடர்பு கொண்ட முஸ்லீம் பெண்மணி ஒருவர் புலிகள் செய்வது தவறு என்று சாரப்பட கதைக்க முற்பட்டபோது தகுந்த நியாயத்தை கூறி அவரின் வாயையும் அடைத்திருந்தார்கள்.

தாக்குதலில் ஈடுபட்ட வான் புலிகளுக்கு வாழ்த்துக்கள்.

சுப்பண்ணை இதை நீங்கள் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம் இதனால் இலங்கை அரசாங்கத்தினால் சில மிரட்டல்கள் கொடுக்கப்படலாம் அந்த நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும்

மத்திய கிழக்கில் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலி ஈழத்தில் நடைபெறும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறியத்தருகின்றது ................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றி நடை போடும் வான்புலிகளுக்கு வாழ்த்துக்கள்

சுப்பண்ணை இதை நீங்கள் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம் இதனால் இலங்கை அரசாங்கத்தினால் சில மிரட்டல்கள் கொடுக்கப்படலாம் அந்த நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும்

மத்திய கிழக்கில் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலி ஈழத்தில் நடைபெறும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறியத்தருகின்றது ................

இதை தெரிவித்ததன் நோக்கம் எமக்கு ஆதரவாக அவர்கள் ஒலிபரப்புக்களை செய்கின்றனர் இதை மற்றைய நாடுகளில் இருக்கும் எங்களின் உறவுகளும் அறிய வேண்டும் அவர்களை மேலும் உற்சாகப்படுத்தவேண்டும் என்பதற்காகவே.சில புலத்தில் உள்ள தமிழ் வானொலிகளும் இதை பார்த்தாவது திருந்தட்டும் என்று தான் இதை இணைத்தேன், இங்கு எவ்வளவோ சிங்களவர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு இந்த வானொலியை பற்றி நன்றாக தெர்யும் ஆனால் எதையும் செய்யமுடியததுக்கு காரணம் சக்தி வானொலி எல்லை மீறவும் இல்லை அத்தோடு உந்த சிங்களவர்கள் சொல்வதை எல்லாம் இந்த அரபிக்காரர் கேட்கும் நிலையிலும் இல்லை. உண்மை நிலைகளை இந்த வானொலி அறிவிப்பதன் மூலம் இங்கு இருக்கும் இந்தியாவை சேர்ந்த தமிழ் மக்களுக்கும் மலையாளிகளுக்கும் எமது உண்மை நிலை விளங்கும்.

முனிவர் ஆனால் பாருங்கள் இங்கிருக்கும் மலையாள வானொலி ஓன்று கிளிநொச்சியை அரச படைகள் பிடித்துவிட்டதாக நான்கு நாட்களுக்கு மேலாக தனது முக்கிய செய்தியில் தொடர்ந்து சொல்லிவருகிறது அவர்களோடு தொடர்பு கொள்ள முயற்ச்சித்துகொண்டிருக்கிற

முனிவர் ஆனால் பாருங்கள் இங்கிருக்கும் மலையாள வானொலி ஓன்று கிளிநொச்சியை அரச படைகள் பிடித்துவிட்டதாக நான்கு நாட்களுக்கு மேலாக தனது முக்கிய செய்தியில் தொடர்ந்து சொல்லிவருகிறது அவர்களோடு தொடர்பு கொள்ள முயற்ச்சித்துகொண்டிருக்கிற
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒ! சுப்பண்ணெக்கு மலையாளம் அறியுமோ?

சுப்பண்ணே பின்னே, தன்னோட மலபார் பிரன்ஸுக்கு நம்மோட கஸ்ட்டத்தை சொல்வாராக்கும்...

மலையாளம் குறைச்சு மனசில் வரும் ஆனால் எந்தாணு பறைஞ்சாலும் அறியும். நீங்க பறையுமோ? ஆ அவ்விட எல்லாம் பறைஞ்சு.சேட்டா சேச்சி எல்லாருக்கும் விழிச்சு பறைஞ்சு :)

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளம் குறைச்சு மனசில் வரும் ஆனால் எந்தாணு பறைஞ்சாலும் அறியும். நீங்க பறையுமோ? ஆ அவ்விட எல்லாம் பறைஞ்சு.சேட்டா சேச்சி எல்லாருக்கும் விழிச்சு பறைஞ்சு :lol:

சுப்பண்ணைக்கு சேச்சிகளோடை சகவாசம் ஜாஸ்தி போல இருக்கு..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணைக்கு சேச்சிகளோடை சகவாசம் ஜாஸ்தி போல இருக்கு..! :lol:

:) என்ட குருவாயூரப்பா ஞான் எந்தாணு செய்யும் இ சேச்சிகளும் ஞானும் ஒரு இடத்தில்தான் பணி செஞ்சு அல்லோ இ சேச்சிகள் சுப்பண்ணை சுப்பண்ணை என்று இஸ்டமாய் பறையும் போது மனசு இவ்விட இல்லா :D:D .

  • கருத்துக்கள உறவுகள்

என்ற குருவாயுரப்பா

சுப்பண்ணை எந்தபணி?? :)

ஞான் அறிஞ்சில்ல :D:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

களம் எதுவானாலும் (அரசியல்;களம்,போர்க்களம்)யாரு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லைட்டுகளை அணைச்சுப் போட்டு கொழும்பில ஆராச்சி

அட என்னப்பா கதைக்கிறாங்கள் ஒண்டும் விளங்கேல்லை

யாராவது மொழிபெயர்த்து சொல்லுங்கோவன்

  • கருத்துக்கள உறவுகள்

இதை இரண்டு நாட்களுக்கு முன்னம் 26ம் திகதி எதிர்பார்த்தனான்.

" ஒரு தலைவன் இருக்கிறான் மதி மயங்காதே கதி கலங்காதே."

வான்புலிக்கு எம் வாழ்த்துகள்"..

அண்ணை அதைப்பிடிச்சிட்டம் இதைப்பிடிச்சிட்டம் எண்டு சொன்னவையின் தலையில் ஒரு தட்டு தட்டி இருக்கீங்கள்..

வெல்க! வெல்க புலிப்படை.!

வெல்லவெல்ல இனி எதுதடை?!

அதாவது அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்.. அதை ஒளிப்பதிவு தான் செய்ய முடியும்.. ....சுட்டு வீழ்த்திறது ரொம்ப ரொம்ப கஸ்ரமாம்....விளங்கிச்சோ.....

பிறகு.. காலையில் வந்தா துல்லியமா ஒளிப்பதிவு செய்திருக்கலாம் என்று மற்றவர்கள் சொல்கிறார்கள்...

கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல் செய்தி வெளிவந்து 24 மணித்தியாலத்தில் இதனை பார்வையிட்டவார்கள் 12 687ஆகும்.

வன்னியின் மனிதாபிமான அவலங்கள் படங்களில் செய்தி இணைக்கப்பட்டு 75 நாட்களில் இதனை பார்வையிட்டவார்கள் 3926 ஆகும்.

வன்னி மக்கள் படும் அவலங்களை பற்றி அறிவதிலும் அவர்கள் குறையை தீர்க்க என்ன செய்யலாம் என ஆய்வதில் பார்க்க வெற்றி செய்தியைத்தான் பெரும்பாலனார் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள் போல உள்ளது.

எல்லோரும் ஒன்றை விளங்க வேண்டும். மக்கள் இல்லை எனில் போராட்டம் இல்லை. உங்களுக்கு நிரந்தரமாகவே வெற்றி செய்தி இல்லாமால் போய்விடும். அதற்கே சிங்கள அரசு மக்களுக்கு நெருக்கடிகளை கொடுக்கிறது.

வன்னி மக்களுக்கு சர்வதேச நிறுவனங்கள் உதவ சிங்கள அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழ் நாடு மத்திய அரசுக்கு அமுத்தம் கொடுக்க வேண்டும் என கருதும் மற்றும் கலைஞரின் நிதி சேகரிப்பை ( இது மக்களை சென்றடைவது வேறு விவாதம்) விமர்சிக்கும் நீங்கள் எல்லோரும் உங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என் உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள்.

முதலில் வாகரை பிரச்சினையிலும் இப்ப வன்னி மக்களின் தூயர் துடைப்பதற்கும் ஒரு தமிழர் தொண்டு நிறுவனத்தினுடாக புலம் பெயர்ந்த மக்களிடம் உதவி கேட்ட அனுபவம் எனக்கு உண்டு. சில கசப்பானவை. இங்கு கூறமுடியாது. எத்தனை பேர் சும்மா காரணங்கள் செல்லி தப்பித்தவர்கள் என்றும் தெரியும். நான் எல்லாரையும் குறை செல்லவில்லை. பலர் உதவி செய்தார்கள். சிலர் கேட்காமாலே உதவினார்.

எங்கள் மக்களுக்கு இன்னொருதார் கூறித்தான் உதவ வேண்டியதில்லை. இது ஒவ்வெருவாரின் கடமை. நீங்களும் இடம்பெயர்ந்த அனுபவத்தை பெற்றிருப்பீர்கள். எனவே உங்களினால் இயன்ற உதவிகளை ஈழத்தில் இப்பவும் உதவிக்கொண்டிக்கும் தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற நிறுவனங்களுக்கு கொடுத்து உதவவும். வன்னியில் உங்கள் உறவினார்கள் இருந்தால் அவர்களுக்கு நிதி வழங்கி மற்றவர்களுக்கும் உதவி செய்ய செல்லலாம்.

உங்கள் உதவியுடன் நின்றுவிடாது உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினார்கள் மற்றும் ஊர்காரர்க்கும் எடுத்து கூறி அவர்களையும் உதவி செய்ய தூண்டுங்கள்.

தொடர்ந்து வன்னி மக்களின் அவலம் பற்றிய செய்திகளை இணைத்து கொண்டிருக்கும் குருகாலபோவனுக்கு எனது நன்றி.

இரவு மச்சானைவையின்ர வான வெடிக்கையும் வெடி கொளுத்துகையையும் பாhத்திருக்க வேணும். வெறும் பைத்தியங்கள் இரவிரவாக வெடி கொழுத்திப் பொட்டு பகலில ரெலியோனில மெசேஐ; போடினம் nஐயபுரம் அக்காரயன் வெட்டி விழுத்திப் போட்டடினம் என்று இதை எங்க சொல்ல !!!

சரி சரி பாருங்கோ ! திரும்பவும் எங்கட தமிழ் ஊடகக்காரைப் பற்றித் தான் சொல்லப்பொறன் குறை நினைக்கதையுங்கோ !

கடந்த இரண்டு மாதங்களிற்கு தினக்குரலில ஓரு இராணுவ சிறப்பு ஆய்வு விஞ்ஞானி எழுதினவர் " முன்பு கட்டுநாயாக்காவிலும் கொலண்ணவையிலும் வான் புலிகளின் தாக்குதலிற்கு மன்னார் ஊடாக பயணித்து பின்பு கடலால வந்து தான் தாக்குதல் நடத்தினவை என்றும் இப்ப மன்னார் மாவட்டம் முழுவதும் இராணுவத்தினாரால கைப்பற்றபட்ட நிவையில் வான் புலிகளால் வவுனியாவை தாண்டிய வரமுடியாது என்று விஞ்ஞான விளக்கம் கொடுத்தவர் ..... இப்ப விளங்கியிருக்கும் எங்கட தமிழ் ஊடக சிறப்பு இராணுவ விஞ்ஞானியின் விளக்கங்கள் ......உப்பித் தான் எல்லாம் வெறும்;.......... விளங்கினால் சரி !

எதுவாயினும் வான்புலிகளிற்கு வாழத்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.